• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

உனக்காய் காத்திருந்தேன்

Active member
Joined
Jun 3, 2025
Messages
485
அன்பான வாசகர்களுக்கு, ஏற்றுக்கொள்வாயா கண்மணியின் இரண்டாவது பாகம் இந்த கதை.

அதை படித்தவர்களுக்கு தெரியும், இல்லை என்றாலும் பரவாயில்லை, தொடர்ந்து வாசித்தால் கதையின் ஓட்டத்தில் உங்களுக்கு புரிந்துவிடும்🤗🤗🤗🤗🤗

போன கதையில் கண்மணி வருவாளா? என்ற எதிர்பார்ப்போடும், நிச்சயமாய் வருவாள் என்ற கதிரின் நம்பிக்கையோடும் முடித்திருப்பேன்.

அதன் தொடர்ச்சியே இந்த கதை.....

முதல்ல கதையில் யார் இருக்காங்கனு கொஞ்சம் பார்த்துக்கலாம்...

ஏனென்றால் கதை முடிந்து ரொம்ப நாள் ஆகுதா,யார் யார்னு நானே மறந்து போய் விட்டேன்..

கதிர்❤தாமரை🥰🥰🥰🥰 நம்ம ஹீரோவும், ஹீரோயினியும்.

பிரகாசம் வள்ளி தம்பதியரின் வாரிசுகள். பெருமாள், முத்து, சிந்து கவிதா.

பெருமாள் சீதா பசங்க கதிர், செல்வி.

முத்து, ராதா- வேதவல்லி பசங்க, வளவன், நிலவன்.

சிவசாமி-கலா= அன்பழகன்(அன்பு), வேதவல்லி.

அன்பு கவிதா= தாமரை, சிவா, அல்லி.

லாரன்ஸ் தியோல் ஜூலி= ஜான் தியோல்.

செல்வம் பார்வதி= சிவா.. .. இவங்க தான் கதைமாந்தர்கள்😁😁😁😁

இனி கதைக்குள் செல்லலாம்...


இரண்டு வருடங்களுக்கு பிறகு...

சிங்கப்பூர்- டம்பைன்ஸ்:

"வி.வி.டவர்ஸின் முன்பு வந்து நின்ற காரிலிருந்து கீழே இறங்கியவள், லிப்டில் ஏறி பதினைந்தாவது ஃப்ளோருக்கான பட்டனை அழுத்த, தானாக மூடிய லிப்டும், சில நொடியில் மேலே போய் நின்றது".

" கதவு திறந்ததும் அதில் இருந்து வெளியேறியவள், இடது பக்கமிருக்கும் கேபினை நோக்கி செல்ல, அங்கே தங்க எழுத்தில் தாமரை கதிர் ஜூனியர் மேனேஜிங் டைரக்டர் என்ற போர்டு கதவின் மேலே பள பளவென்று மின்னி வரவேற்றது".

"கதவை திறந்து உள்ளே சென்றவள், அங்கிருந்த சேரில் உட்கார, கதவை தட்டும் சத்தம் கேட்டு, எஸ் என்று குரல் கொடுக்க, குட்மார்னிங் தாமரை என்று சொல்லி லீலா உள்ளே வந்தாள்".

" குட்மார்னிங் லீலா என்ற தாமரை, என்ன காலையிலே இங்கு விஜயமென்று கேட்க,நாளைக்கு எனக்கு ஃப்ளைட் மறந்து விட்டாயா என்று கேட்டாள்".

" ஹேய்... அது எப்படி மறப்பேனென்ற தாமரை, பேக்கிங் எல்லாம் ஓவர் தானே என்க, எல்லாம் ஓவர் தான் தாமரை".

" நீ தான் மலேஷியா மீட்டிங் முடிந்து, நேரா ஆபிஸ்கு வரேனென்று சொல்லிவிட்டாய்".

" அதான் மேம் கிட்ட சொல்லி விட்டு இங்கே வந்தேனென்று லீலா சொல்ல, ம்ம். ஆன்ட்டிகிட்ட வரும் போது தான் பேசினேன் லீலா என்றவள், மலேசியாவில் நடந்த மீட்டிங்கை பற்றி சொல்லத்தொடங்க, லீலாவும் அதை கையில் இருந்த நோட் பேடில் குறித்துக்கொண்டாள்".


சீமக்கரை…

"அடியேய் செல்வி!, நேரம் ஆகிட்டு இன்னும் உள்ள என்னத்தை தான் பண்ணிட்டு இருக்கேயென்று, வள்ளி அப்பாயி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்".

எல்லா புள்ளைங்களும் பள்ளிக்கூடத்துக்கு போயாச்சி, இந்த சீம சித்துராங்கிக்கு மட்டும், இன்னும் பொழுது ஆவல போலவென்று முணுமுணுக்க, அய்யோ அப்பாயி, இன்றைக்கு பிராக்டிகல் கிளாஸ் இருக்கு.

"நான் நோட்டை மறந்து வச்சிட்டு போய்ட்டேன்"

அல்லி கேட்ட பிறகு தான்,எனக்கு ஞாபகம் வந்துச்சி என்று சொல்லிய செல்வி, வாசலில் காத்திருந்த வளவனின் வண்டியில் ஏறி உட்கார, அவனும் அங்கிருந்து வண்டியை கிளப்பினான்.

படிக்கிறவளுக்கு, என்ன புத்தகத்தை எடுத்து போவனும்னு கூட நெனவு இல்லைன்னா?,இவ என்னத்தை தான் அப்படி படிக்கிறாளோ?..

அய்யனாரே நீ தான் நல்ல புத்திய தரணும்பா என்றபடியே, மேலே கை கூப்பி வேண்டிக் கொண்டிருந்தார்.

சிவாவோடு வண்டியில் வந்த அல்லி, பஸ் ஸ்டாப்பில் செல்விக்காய் காத்திருந்தாள்.

உண்மையிலே இவ படிக்க தான் வராளா?, இல்லை பைய தூக்கிக்கிட்டு எங்க ஊட்டுக்காரனும் கட்சேரிக்கு போகுற கணக்கா, நானும் பள்ளிக்கூடம் வரேனு வாராளா? என்று செல்வியை பற்றி தங்கையிடம் சிவா கேட்க, அவள் வருவாள்.

அவகிட்டையே கேளுடா என்றாள் அல்லியும்.

ஏதேஏஏஏ அந்த வாயாடிகிட்டையா?.

அவள் கிட்டையா என்னை கோர்த்து உடுற என்றவன், இவளை கட்டிக்கிட்டு என்ணன் என்ன பாடு பட போகுதோ?.

அது அய்யனாருக்கு தான் வெளிச்சமென்று சிவா சொல்ல, அண்ணன் சொன்னதைக்கேட்டு அல்லிக்கு சிரிப்பு வந்து விட்டது .

யோவ் மாமா என்ற குரல் கேட்டு, ஆத்தாடி என்றவாறே சிவா திரும்பி பார்க்க, அங்கே தனது இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, செல்வி முறைத்து நின்றாள்.

வாடா செல்வி.

இப்போ தான் அல்லி கிட்ட சொன்னேன், இன்னும் செல்விய காணுமேயென்று.

அதற்குள்ள நீயே வந்துட்ட, வா வா என்றான்.

என்ன மாமா கிண்டலா?.

இவ்வளவு நேரம், உங்க தொங்கச்சிகாரி கிட்ட என்ன கதை படிச்சேன்னு தெரியும்யா.

சும்மா இந்த செல்வி கிட்ட படம் ஓட்டாதே என்றாள்.

தனது தங்கையிடம் மாட்டி முழிக்கும் சிவாவை பார்த்த வளவனுக்கு சிரிப்பு தாங்க வில்லை.

டேய் நேரம் ஆகிட்டுடா என்று குரல் கொடுக்க, என்னை காக்க வந்த அய்யனாரே, நீ நல்லா இரு மாமா என்றான்.

உங்க நொண்ணனுக்கு நான் போதும்.

வேற எவளும் கியூல நிக்க வில்லை என்ற செல்வி, தனது முகத்தை சுழித்து காட்டினாள்.

சரி ரெண்டு பேரும் பார்த்து போங்க என்றவாறே வளவனும், சிவாவும் தேனூரை நோக்கிச்சென்றனர்.

சிவாவிற்கு படிப்பு முடிய, வளவன் வேலை பார்க்கும் பேக்டரியிலே வேலை கிடைக்க, நண்பர்கள் இருவருக்கும் வசதியாக போய்விட்டது.

வளவன் தான் பேக்டரியில் சூப்பர்வைசர் என்றாலும், சிவாவிடம் மாமன் என்ற முறையில் எந்த சலுகையும் தரமாட்டான்.

மாமா என்று சிவா கூப்பிட, வண்டியோட்டிக் கொண்டிருந்த வளவனும், சொல்லுடா என்றான்.

ஒன்னு கேட்கணுமென்று சிவா எச்சில் விழுங்க, அந்த புள்ளைய பற்றி எதுவும் கேட்காதடா.

எனக்கு அப்படி ஒரு எண்ணம் வரலைடா. அவள் தான் புரிஞ்சிக்கலை என்றால், நீயுமாடா என்று வளவன் கேட்க, நல்ல பொண்ணு மாமா.

மூன்று வருஷமா அவளை பற்றி தெரியும். உனக்கு ஏற்றவள் தான், கொஞ்சம் யோசனை பண்ணி பாரென்று சொல்ல, வண்டியோட்டிக் கொண்டிருந்தவன், வலது பக்கமாக வரும் மாமன் மகனை முறைத்து பார்த்தான்.

ஏன்டா, இதுக்கு தான் ஆறு மாசமா நான் பதில் சொல்லிட்டு இருக்கேன். தெரிஞ்சும் இப்படி கேட்டால் என்ன தான் அர்த்தமென்றான்.


மச்சான் அந்த நெல்லு மூட்டையை இங்கே அடுக்க சொல்லுடா என்று வேலு சொல்ல, ஏன் உன் வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கென்று கதிர் சொல்ல பேரன்கள் இருவரும் பேசிக் கொண்டதை கேட்டு பாஷ் சரியான பாயிண்ட் என்றார் பிரகாசம் தாத்தா.

தாத்தாஆஆஆ என்ற வேலு தனது பல்லை கடிக்க,அடேய் எருமை மூட்டைய அனுப்புடா என்று தூரத்தில் இருந்து பெருமாள் கத்தி சொன்னார்.

ஆஆஆஆ.... இந்த குடும்பத்தில் வாக்கப்பட்டு நான் படும் பாடு இருக்கே அந்த அய்யனாருக்கே அடுக்காது என்று சொல்லிய வேலு, அங்கு நெல் மூட்டையை தூக்கிக் கொண்டிருந்தவர்களிடம்,
சுந்தரண்ணா, அதோ நம்ப அய்யனார் நிக்கிற இடத்தில் போய் அடுக்குங்களென்று,பெருமாள் நிற்கும் திசையை காட்டி சொன்னான்".

ஒரு வழியாக நெல்லு முட்டைகள் எல்லாம் அடிக்கி முடித்து அதன் மேல் படுதாயை போட்டு நன்கு இழுத்து கட்டி முடிக்கவே மேலும் 2 மணி நேரம் ஆனது.

மழை வந்தாலும் நெல்லு முட்டையை நனையாது என்பதால் அங்கிருந்து நிம்மதியாக வீட்டிற்கு கிளம்பினர்.

இரவு சாப்பாடை சாப்பிட்டு முடித்த கதிர் மேலே இருக்கும் தனது அறைக்குள் வந்தவன் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு, பால்கனி கதவை திறந்து வானத்தை பார்க்க,அங்கே நிலவின்று வெரும் கருமையாக இருந்தது

நாளைய நாள் அவன் வாழ்வில் அதி முக்கியமான நாள்...

இதோ வருடங்கள் இரண்டு முடிந்து விட்டது.

இந்த இடைப்பட்ட நாளில் ஒருமுறை கூட தாமரையிடம் கதிர் போனில் பேசவில்லை. அவளும் இவனுக்கு இதுவரை போன் பண்ண வில்லை.

தன் காதல் மனைவி எப்படி இருப்பாள்?

நாளைய நாள் எதுவென்று அவளுக்கு நினைவு இருக்குமா என்று கருமேகம் சூழ்ந்த வானத்திடம் மனதிற்குள் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான்.

நேரமும் கடந்து செல்ல...

சிறு தூறலாக ஆரம்பித்து மழை பெறும் இடி மழையாய் பொழிந்து தள்ளியது.

சாரல் அவனை தீண்ட அந்த கட்டிளங்காளையின் உடலோ கற்பாறை போல எதற்கும் அசையாமல் இருந்தது.

கால்கள் மறுத்து போய் சிறிது தள்ளாட்டம் வந்த பிறகே தனது அறைக்குள் வந்தவன் பால்கனி கதவை சாற்றி விட்டு சாரல் பட்ட ஈரமான உடம்பை துவட்டாமல் அப்படியே கட்டிலின் மேல் படுத்துவிட்டான்.

இரவெல்லாம் பொழிந்த பேய் மழையால் வீதியெல்லாம் அங்கங்கே மழை நீர் தேங்கி இருந்தது.

எது எங்கே நடந்தாலும் நான் எனது டீ கடையை திறந்தே தான் தீருவேன் என்றவாறு அந்த ஊரில் டீக்கடை வைத்திருக்கும் பஞ்சநாதனும் காலை நாலரை மணிக்கு கடையை திறந்து அவர் தொழிலை தொடங்க முதல் ஆளாக வேலு தான் கடைக்கு வந்தான்.

அவனை பார்த்தவர் எலேய் மாப்ள இந்த நேரத்தில் எங்கே என்க...

அதுவா மாமா நம்ப பூசாரி மாமா அவருடைய நாலு எருமை மாட்டை ஏரோப்பிளேன் ஓட்ட படிக்க வைக்க ஆசைப்படுறாரு.

அதுக்கு தான் சீட் வாங்க போறேன் என்றான்.

வேலுவும் ஏதோ சீரியஸா என்னமோ விஷயத்தை தான் சொல்ல வரான் என்று நினைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தவர் அவன் இப்படி சொன்னவுடன் எலேய் தண்ணீர் கொதிக்க கொதிக்க இருக்கு.

எடுத்து மூஞ்சில ஊத்துனேன் வெந்து போயிடும்.எம்மவள் செல்விக்காக பார்க்கிறேன். இல்லன்னா உனக்கு யார் வாழ்க்கை கொடுப்பா என்றார்.

ஆமா பொல்லாத வாழ்க்கை....

போய் சீமையில உம்மொவளுக்கு பொண்ணை பார்க்க வேண்டியது தானே?

யார் மாமா வேண்டாமென்று சொன்னா? என்றவனிடம், இந்தாடா குடியென்று டீ கிளாஸை நீட்ட, ஆயிரம் தான் என் மாமான் பேசுனாலும் காரியத்தில் கண்ணா இருப்பதால் தான் அத்தை உன்னை வச்சி குப்பை கொட்டுது என்றான்.

எலேய் உங்கொத்தைகாரிய வச்சிக்கிட்டு நான் குப்பை கொட்டுறேனு சொல்லுடா என்கும் போதே அவருடைய மனைவி காலையில் கடையில் போடுவதற்காக வடைக்கும் போண்டாவிற்கும் மாவை கலந்து எடுத்து வந்தவர், ஓஓ...

உன் மாமனுக்கு அப்படியே பொண்ணுங்க கியூல நின்னாளுங்க பாறேன் வேலு..

இந்த லட்சணத்தில் இந்த நொய்யா என்னை வச்சி குப்பை கொட்டுறாராம்.

இல்லாத ஊருக்கு இலுப்பை சக்கரை என்கிற கதையா ஊருக்குள்ள இடம் பார்க்க வந்தவரு உங்க பொண்ணு எனக்கு புடிச்சு போயிடுச்சுன்னு உன் தாத்தா கிட்ட வந்து கெஞ்சி கதறி பொண்ணு கேட்ட கதை எல்லாம் மறந்து போயிடுச்சு போல என்றார்.



மனைவி சொன்னதை கேட்டவர் அந்த ஒத்தக்கண்ணை மட்டும் மூடி பார்த்து தாண்டி என்ன மயக்கி வச்சு என்க...



ஆமா இந்த கொய்யாவை மயக்கினேன் போயா அங்கிட்டு என்று சொல்லும் போது அவர் முகத்தில் வெட்க சிரிப்பு வந்தது.



அத்தை பெரும் காதல் காவியம் இருக்கும் போல உனக்கு மாமாவுக்கும் என்று வேலு கேட்க அடப்போடா அண்ணன் மவனே என்று சிரித்தார். .
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
485
மழையும் லேசா தூறியபடி இருக்க ஒரு சிலரும் டீ கடைக்கு வந்து கொண்டிருந்தனர்.

அங்கே தனது அறையில் நன்கு தூங்கிக் கொண்டிருந்தவன் திரும்பி படுக்க போக, ஏதோ தன் மேல் பாரமாக இருப்பதை உணர்ந்த கதிர் அரை தூக்கத்தில் கண்ணை திறந்து பார்க்க...

அவன் மேல் யாரோ படுத்திருப்பது தெரிந்து ஏய் யாரு என்றவாறு வேகமாக பிடித்து கீழே தள்ள ஐயோ என்கும் சத்தம் கேட்டது.

அந்த குரலில் பதறி அடித்து எழுந்து போய் லைட்டை ஆன் பண்ணி திரும்ப அங்கே கீழே விழுந்த வலியோடு தன்னை முறைத்துக் கொண்டிருப்பவளை பார்த்த கதிர் அதிர்ந்து போனான்..

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top