• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
632
மறு வீடு முடிந்து வளவனும் நிலாவும் சீமகரைக்கு வந்தனர்.அன்று இரவு அவர்களுக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணிருந்தனர்.

நேரமும் கடந்து செல்ல நிலாவை அலங்கரித்து வளவனின் ரூமிற்கு அனுப்பி வைத்தனர்.

ஐந்து வருடமாக வளவன் தான் உயிர் என்று நினைத்து வாழ்ந்தவள். இந்த காதலுக்காக வளவனிடம் எத்தனையோ முறை அடிகளை வாங்கி இருக்கிறாள் இருந்தாலும் ஏனோ கணவனாக வளவனை நினைத்து விட்டதால் நிலாவின் மனம் அவனுடைய உதாசினத்தில் மாறவே இல்லை.

வெறும் 15 படிகள் தான் கீழே இருந்து மேலே இருக்கும் வளவனின் ரூமிற்கு செல்ல.ஆனால் அந்த 15 படிகளும் 15,000 படிகளைப் போல அவளுக்கு தோணவும் கால்களோ பின்னியது.

ஒரு வழியாக மேலே வந்தவள் கதவின் முன்னால் தயங்கி நின்று விட்டு பின்னர் கதவை திறந்து உள்ளே போக வளவனோ அங்கிருந்து சேரில் உட்கார்ந்து கொண்டு எழுதி கொண்டிருந்தவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அழகு பதுமை போல உள்ளே வந்தவளை பார்த்து அசந்து போனான்.

கணவனின் பார்வையோ தன்னை உச்சி முதல் பாதம் வரை ஊடுருவதை உணர்ந்தவள் திரும்பி நின்று கதவை தாழிட்டு விட்டு கதவின் மேலே சாய்ந்து நின்றிருக்க வளவனும் எதுவும் சொல்லாமல் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் நொடிகளும் நிமிடங்களாக கடந்து செல்ல...

என்னடி வாத்திச்சி...

காலில் எதாவது கம் போட்டு ஒட்டி இருக்கிறியா? ஆணி அடித்தது போல அதே இடத்தில் நின்றிருக்க உள்ள வாடி...

கணவனின் குரலைக் கேட்டவள் அன்னம் போல் நடந்து வந்து அவனின் காலை தொட்டு கும்பிட, தீர்க்க சுமங்கலியா இரு என்று சொல்லி அவள் கையில் இருந்த பால் சொம்பு வாங்கி அங்கிருந்த டேபிள் மேல் வைத்தவன் பக்கத்தில் இருந்து சேர் எடுத்து போட்டு இதுல உட்கார் நிலா என்கவும் அவளும் எதுவும் சொல்லாமல் அதில் உட்கார்ந்தாள்.

மனைவியின் கையைப் பிடித்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டவன் இதுவரைக்கும் இருந்தது வேற இனிமே உன்னோட வாழ்க்கை இருக்க போறது வேர...என்னோட இரண்டு அம்மாவும் கல்யாணம் பண்ணிட்டு வந்து கிட்டத்தட்ட 33 வருஷம் ஆகிவிட்டது.

இதுவரை அக்கா தங்கச்சிக்குள்ள ஒரு சின்ன மனஸ்தாபம் கூட வந்தது கிடையாது எந்த சூழ்நிலையும் என்னோடு இரண்டு அம்மாவும் ஒருத்தவங்களை ஒருத்தவங்களோ குடும்பத்தையோ யார்கிட்டயும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க.

தாமரை அத்தை பொண்ணு அது உனக்கு தெரியும் தாமரைக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கோ அதே உரிமை உனக்கு இருக்கு உனக்கு அடுத்தது வரப்போற மருமகளுக்கும் உரிமை இருக்கு.

அவங்க ரெண்டு பேரும் ஒற்றுமையாக எப்படி இந்த குடும்பத்தில் உள்ளவங்களையும் சொந்த பந்தங்களையும் பார்த்தார்களோ அதே போல தான் நீங்களும் இருக்கணும்.
எந்த சூழ்நிலையிலும் உன்னால ஒரு சின்ன மனஸ்தாபம் கூட நம்ம வீட்டுல இருக்கவங்களுக்கு வரக்கூடாது டி.

உனக்கு என்ன வேணுமோ என்கிட்ட கேட்கணும்னு இல்லை. உனக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வாங்க அதை நான் சொல்லித்தான் உனக்கு புரியனும்னு அவசியம் கிடையாது.

போகப் போக எல்லாரோட குணமும் உனக்கு தெரியும் சீதா-ராதா எப்படி பெயர் எடுத்தார்களோ அதைவிட ஒரு படி மேல் தான் தாமரையும் வெண்ணிலாவும் பெயர் வாங்கணும் அது மட்டும் தான் நிலா எனக்கு வேண்டுமென்கும் கணவன் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் உண்மையிலேயே அத்தைங்க இரண்டு பேரோட ஒற்றுமையை பற்றி சிவா சொன்னதுக்கு அப்புறம் மேல தான் எனக்கு உங்க மேலயே விருப்பம் வந்தது என்க...

அடிப்பாவி அப்போ உண்மையா நீ என்னை காதலிக்கவில்லை என்கவும் கணவனை முறைத்து பார்த்தாள்.

இல்லடி எங்க அம்மாக்களை பார்த்துட்டு சொன்னியே ஒருவேலை பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுத்தியோ..

யாரு பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுத்தாங்கனு எனக்கு நல்ல தெரியாதா என்று நிலா கேட்க,நான் என்னடி பண்றது..திடீர்னு நீ காதல் என்று சொன்னவுடனே எப்படி எனக்கு சம்மதம் சொல்றதுன்னு தெரியல.

இருந்தாலும் இந்த மனசுக்குள்ள நீ தானே இருக்கிற என்றவன் அங்கிருந்த டிராவை திறந்து அதில் உள்ளே இருக்கும் ஒரு கிப்ட் பாக்ஸ் எடுத்து நிலாவின் முன்பு நீட்டினான் .

என்னவாம் என்கவும் பிரிச்சி பாருடி..

அதை பிரித்து பார்க்க..ஐந்து வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக அவனிடம் காதலை சொல்லும் போது வளவனோ நிலாவை ஓங்கி அறைய அதில் அவள் தடுமாறி கீழே விழும் போது அவள் கைகளில் இருந்த வளையல்கள் உடைந்து சிதறியது அந்த சிதறல்கள் எல்லாம் தான் அந்த டப்பாவில் பொக்கிஷம் போல இருந்தது.

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

குழந்தைகள் இருவருக்கும் பால் எடுத்துக் கொண்டு ரூமிற்கு வந்தவளோ அங்கிருந்த கோலத்தை பார்த்து கொலை வெறியில் கணவனை முறைக்க...குழந்தைகளோடு சேர்ந்து கதிரும் அந்த ரூமை அலங்கோலம் பண்ணியிருந்தான்.

மாமாஆஆஆஆ....

தாமரையின் குரலை கேட்டு குட்டி வாண்டுகள் இருவரும் அய்யோ அம்மா நாங்க இல்லை அப்பா தான் என்றவாறு பெட்டில் ஏறி படுத்துக் கொண்டனர்.

அட அயோக்கிய பய பிள்ளைகளா இவள் கிட்ட இப்படி கோர்த்து விட்டுச்சிங்களே என்று முணவியவன், அது வந்து செல்லம் என் போன்ல இருந்த சிம் கார்டை காணும் டி.

அதான் தேடிட்டு இருக்கேன்.

இதோ மாமா சுத்தம் பண்ணுறேன் என்கும் போது தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் என்ற ரிங்டோன் சத்தம் கேட்டது..

எந்த கரடி இந்த நேரத்தில் கால் பண்ணி இப்படி மாட்டி விட்டுருக்குனு தெரியலையே என்று முணவியவன் மனைவியை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு டேபிளில் மேலிருக்கும் போனை எடுத்து பார்க்க,பங்கு என்று வந்தது.

நேரங்கெட்ட நேரத்தில் போனை போட்டு இவள் கிட்ட மாட்டி விட்டுட்டானே எருமை மாடு என்று திட்டிக் கொண்டே அட்டென் பண்ணியவன் சொல்லு மாடு?

அந்த பக்கம் இருந்த ஜான் டேய் பங்கு வாட்ஸ்அப்கு வாடா என்று கட் பண்ண...

தடிமாட்டு பயலால் தான் இவள் கிட்ட இருந்து இப்போது தப்பிச்சிருக்கோம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே நெட் ஆன் பண்ணவும் வீடியோ கால் வந்தது.

அட்டென் பண்ண அங்கே ஜான்-வேலு தெரிய....

ஏன் பன்னி ஏன்....

நிம்மதியாக தூங்க விடமா உங்க மொகரைய காட்டுறீங்க என்று கதிர் முறைக்க,உன் பங்காளி பய கையில் கிடைத்தான் விளக்கமாறு பிஞ்சிடும்.

எதுக்குனு சொல்லாமல் என்னமோ காதலிக்கு பேசுற போல இந்த நேரத்தில் வீடியோ கால் பண்றானேடா என்று வேலு திட்ட....

மாப்பி ரொம்ப புகழாதடா...

உங்களுக்கு ஒன்னு காட்ட தான் டா என்றவன் கேமராவை கொஞ்சம் திருப்பவும்,அங்கிருந்த உருவத்தை பார்த்த கதிரும் வேலுவும் லெட்சுமிஈஈஈஈஈ என்று கத்தினானுங்கள்....


எங்கே டி போய் தொலைஞ்ச?

கையில் கிடைச்ச உன்னை சாவடிச்சிடுவேன் டி என்று திட்டிக் கொண்டிருக்கும் கதிருடைய கண்கள் கலங்குவதை கண்டு,அந்த பக்கம் இருந்த பெண்ணவள் அழ,இதை பார்த்துக் கொண்டிருந்த தாமரையோ யார் இதுயென்ற யோசனையோடு பார்த்தாள்.

ஏய்....

முதலில் உன் நீலிக் கண்ணீரை நிறுத்து.கேட்டதுக்கு பதில் சொல்லுயென வேலு கேட்க...

அந்த பக்கம் இருப்பவளோ,உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்றாள்.

அவள் கேள்வியில் தனது நெற்றியை தடவிய வேலு,ம்ம்.. கன்சீவா இருக்காள்..

ஓஓஓ என்றவள்,செல்வி தானே என்க...

"ஆமாம் அவள் தான் என் பொண்டாட்டி".

இந்த பிறவி இல்லை எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும் செல்வி மட்டும் என் பொண்டாட்டி இதில் எந்த மாற்றமும் கிடையாது போதுமாயென கோவமாக கேட்க,என் நினைவே உங்களுக்கு வரவில்லையா என்று கதறி அழுதாள்.

தாமரைக்கு ஓரளவு விஷயம் பிடி பட்டது.

லெட்சுமி....

நீ எப்படி இருக்க?

அப்பா அம்மா நல்லாருக்காங்களா?

காயத்ரி அக்கா, சங்கரன் எப்படி இருக்காங்க?

சங்கரன் என்ன படிக்குறான் டி என்று கேள்விகளை கதிர் அடுக்க,டேய் கொஞ்சம் பொறுமை டா.

நான் அப்புறம் பேசுறேனென்று ஜான் சொல்ல,அவளை இழுத்துட்டு வாடா பங்கு.நேர்ல வாடி நீ செத்தயென்று கதிர் திட்ட சரியென்று தலையசைத்தாள்.

பங்கு நேர்ல பேசிக்கலாம்டா என்று ஜானும் லைன் கட் பண்ண.. வேகமாக எழுந்த கதிர் தனது கபோர்டை திறந்தவன் அதில் எதையோ துலாவி ஏதோ ஒன்றை தேடி எடுத்து பார்த்தான்.

என்னாது என்றவாறு தாமரை வந்து எட்டி பார்க்க பள்ளிக்கூட மாணவர்களின் குரூப் போட்டோவாக இருந்தது.

என்ன மேன் முன்னால் காதலியா என்று தாமரை கேட்க அந்த கேள்வியில் வெகுண்டெழுந்தவனோ ஓங்கி ரெண்டு அறை வைக்க கையிலிருந்த பால் சொம்பு சிதறி ஓட கீழே விழுந்தாள்.

ஏன் டி யார் கிட்ட பேசினாலும் உடனே அவள் காதலியாக தான் இருப்பாளா?
என்னை பார்த்தால் பொம்பளை பொறுக்கி போலவா இருக்கு??
எத்தனை பேர் கூட நான் அங்க இங்கனு சுத்தினேன் நீ பார்த்த?. இந்த கேள்வியை உன்னை கேட்கணும் டி..

அங்கு மருதுவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன,பிறகு நான் தாலி கட்டியதும் என்னை ஏத்துக்கிட்ட, வேலைனு ஊர் ஊரா போனியே அங்கே எவன் கூட சுத்திட்டு இருந்தனு நான் என்ன விளக்கு வச்சா பார்த்துட்டு இருந்தேன்..எப்போ பாரு சந்தேக புத்தி ச்சை... என்றவன் கோவத்தில் என்ன பேசுறோமென்று தெரியாமல் அனைத்தையும் தீயாய் கொட்டினான்.

எப்போதும் போல விளையாட்டுக்கு தான் பேசினாள்.ஆனால் கதிரின் மனதிற்குள் இப்படி ஒரு எண்ணம் இருக்கென்று எதிர் பார்க்கவில்லை.
வாங்கிய அடியே அதிர்ச்சி என்றால் அதைவிட கணவன் பேசிய வார்த்தைகளோ நெருப்பை அள்ளி வீசியது.

என் மனசுல எப்போதும் ஒருத்தி தான் டி என்க... ஷட்டப் என்ற தாமரையின் சத்தத்தில் நிகழ்விற்கு வந்தவன் கீழே கொட்டியிருந்த பாலையும் ஓரமாய் கிடக்கும் சொம்பை பார்த்தவன் என்ன டி ஆச்சு என்க...

தாமரையோ பேயறைந்த போல எழுந்தவள் எதுவும் சொல்லாமல் பெட்டில் ஏறி படுத்துக் கொண்டாள்.

கதிருக்கோ கோவத்தில் தான் என்ன செய்தோமென்று தெரியவில்லை.
அவன் சிந்தனைகள் எல்லாம் நீண்ட வருடங்களுக்கு பிறகு பார்த்த தனது பால்ய கால தோழியின் மேலே இருந்தது.

இத்தனை நாளும் படுத்திருக்கும் அதே மெத்தை இன்று முள் படுக்கை போல இருக்க,கணவன் பேசிய வார்த்தைகள் தேள் போல் கொட்டிக் கொண்டிருக்கவும் வேகமாக எழுந்தவள் எதுவும் சொல்லாமல் வெறும் தரையிலே படுத்து விட்டாள்.

கையிலிருந்த பழைய போட்டோவை மீண்டும் அதனிடத்தில் வைத்தவன் லைட்டை ஆப் பண்ணிட்டு வந்து படுக்க, தாமரை கட்டில் இல்லாததை கூட அவன் உணரவில்லை.

"உன்னை பார்த்துட்டேன் டி"

நீ உயிரோட இருக்கனு தெரிஞ்சுதே அதே போதுமென மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் கண்களை மூட சிறிது நிமிடத்திலே தூங்கி விட்டான்.

தரையில் கண் மூடி படுத்திருந்தவளின் கண்ணீரோ எல்லை இல்லாமல் வழிந்தோடியது..

எப்படியாப்பட்ட வாழ்க்கை இது ச்சை...!!

இரவெல்லாம் தூங்காமல் நன்கு யோசித்து ஒரு முடிவை எடுத்து கண் மூட விடியலுக்காய் சேவல் கூவியது.

எழுந்து போய் குளித்து உடையை மாற்றிக் கொண்டு கீழே வர வீட்டில் இருக்கும் செல் போனிற்கு கால் வரும் சத்தம் கேட்க,சீதாவோ அட்டென் பண்ணி சொல்லு சிவா என்க..

அந்த பக்கம் சொல்லப்பட்ட செய்தியில் என்னாஆஆஆ என்று அதிர்ந்து போனார்.

இதோ வரோம் பா என்று போனை வைத்தவர் அத்தை அத்தை என்று பதறி ஓடியவர் மாமியார் இருக்கும் ரூம் கதை தட்டி உள்ளே போக வள்ளி அப்பாயி அப்போது தான் தூங்கி எழுந்திருந்தார்.

மருமகளின் பதற்றத்தை பார்த்து என்னாச்சு சீதா என்க,நம்ப நம்ப என்றவர் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் கதறி அழ....ஏத்தா என்னாச்சு என்று முதியவர் பதற.. சீதாவின் அழுகுரல் கேட்டு மற்றவர்களும் ரூமிற்கு ஓடி வர அந்த நேரம் மாமா மாமா என்றவாறு வீட்டிற்குள் வந்த வேலுவோ சித்தி நம்பளை விட்டு போயிடுச்சு என்று அழுதான்...

என்னாஆஆஆ..!

கவிதாக்கு என்னடா ஆச்சு என்று பக்கத்து தெருவில் இருக்கும் தாமரையின் வீட்டை நோக்கி ஓடினர்.

அங்கே அழுகுரல் சத்தமாக கேட்க அம்மாயென்று தாமரை வீட்டிற்குள் ஓட கவிதாவை முற்றத்தில் இருக்கும் பெஞ்சில் படுக்க வைத்திருக்க அவளது அப்பாவும் பாட்டியும் அழுது கொண்டிருந்தனர்.

இது எதுவும் தெரியாமல் கதிரும் வளவனும் அவரவர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அய்யோ நான் பெத்த மவளே...இப்படி என்னை விட்டுட்டு போயிட்டியே என்று வள்ளி அப்பாயி நெஞ்சிலே அடித்துக் கொண்டு அழுதார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
632
என்ன நடந்ததென்று கேட்க,வழக்கம் போல எந்திரிச்சி வந்தவள் புடவை தடுக்கி கீழே விழும் போது அருகால் படியில் பின் பக்கம் தலை அடிபட்டு அதே இடத்தில் உயிர் போயிடுச்சென்று அழுது கொண்டே கலா பாட்டி சொல்ல. அய்யோ நான் என்ன பண்ணுவேனென்று கதறினார்.

கவிதாவின் பாடிக்கு முன்னால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அழுது கொண்டிருக்க, எங்கே இவனை காணும் என்று நினைத்த வேலு,தனது வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வர அப்போதுதான் கதிரும் தூங்கி எழுந்து தாமரை தாமரை என்று கூப்பிட்டுக் கொண்டே படியில் இறங்கி கீழே வந்தான்.

கதவு எல்லாம் திறந்தபடியே கிடக்குது ஆனா வீட்டில் யாரும் இருப்பது போல் தெரியவில்லையே.

அம்மா அப்பா என்றவாறு தோட்டத்து கதவை திறந்து பார்க்க அங்கே யாரும் இல்லை எங்க போனாங்க எல்லாரும் என்றவாறு வாசலுக்கு வர அப்போதுதான் வேலுவும் வண்டியை நிறுத்திவிட்டு வந்தவன் ஏண்டா அங்கு என்ன சூழ்நிலைனு தெரியாமல் இப்பதான் தூங்கி எந்திரிச்சு வர..
சித்தி செத்துப் போயிடுச்சுடா என்று கண்ணீருடன் வேலு சொல்ல என்னடா சொல்ற என்று கதிர் அதிர,அந்நேரம் வீட்டிற்குள்ளே குழந்தைகள் அழும் சத்தம் கேட்டது.

சரி ஆக வேண்டியை பாருங்களென்று ஊர் காரர்கள் சொல்ல, என்ன ரொம்ப நேரமா அன்பு குனிச்சிட்டே இருக்கானென்ற செல்வமோ எழுந்து வந்து அன்பு என்று தோளை தொடவும் அப்படியே கீழ சரிந்தார்.

டேய் அன்பு என்னடா ஆச்சென்று பதற அந்த சத்தத்தில் அழுது கொண்டிருந்தவர்களும் என்னாச்சென்று கத்த..தண்ணி தண்ணி என்கவும் யாரோ ஒருவர் தண்ணீர் மொண்டு வந்து கொடுக்க அதை தெளித்தும் அன்பு எழவில்லை...

அன்பு டேய் தம்பி எந்திரி டா என்று செல்வமும் மற்றவர்களும் பதறும் போது அவர்கள் ஊருக்கு வாரத்திற்கு ஒரு முறை வரும் கம்பவுண்டரும் அன்றைக்கு வர,கவிதா விஷயத்தை கேள்வி பட்டு அவரும் அங்கு வந்தார்.

அவரை பார்த்த யாரோ ஒருவர் நம்ப காசி வந்தாச்சு என்க, உள்ளே வந்தவர் அன்புவை சோதித்து பார்த்து இல்லை என்று தலையசைக்க அப்பா என்று தாமரை தனது தந்தையின் உயிரற்ற உடலை பார்த்து கத்தி கதறினாள்.

அச்சோ என்ற கதிர் வீட்டுக்குள் ஓட அவனின் மகனோ மேல் படிக்கட்டில் நின்று அழுது கொண்டிருக்க வேகமாக போய் மகனை தூக்கியவன் என்னாச்சு தங்கத்துக்கு..தூங்கி எழுந்துட்டிங்களா என்று மகனை சமாதானப்படுத்த வேலுவும் பின்னாடியே வந்தான்.

சிறிது நிமிடத்தில் அவன் பொண்ணும் அழுது கொண்டே வர பின்னர் குழந்தைகள் இருவரையும் தூக்கிக்கொண்டு கீழே வந்தவர்கள் முகத்தை மட்டும் கழுவி விட்டு வண்டியில் ஏறி தாமரை வீட்டுக்கு வர அங்கே ஒரே சத்தமாக இருந்தது..

வண்டியை நிறுத்திவிட்டு ஆளுக்கு ஒரு குழந்தை தூக்கி கொண்டுவர அய்யோ அன்பு அன்பு என்று மற்றவர்கள் அழும் சத்தம் கேட்டது.என்ன ஆச்சு சித்தப்பாவுக்கு என்று உள்ளே போய் பார்க்க கவிதாவின் உடலுக்கு பக்கத்திலே அன்புவையும் மாலை போட்டு படுக்க வைத்திருந்தனர்.
அய்யோ சித்தப்பா என்று வேகமாக வந்த வேலு நீயும் போயிட்டியா....
ஏன் இப்படி என்று கதறினான்.

குழந்தைகள் இருவரும் அங்கிருக்கும் சூழலை பார்த்து பயந்து அழ,அழுது கொண்டிருந்த பார்வதியோ குழந்தைகளை தூக்கியவர் ஒன்னும் இல்ல சாமியென்று சமாதானம் பண்ணினர்.

விஷயம் கேள்வி பட்ட லாரன்ஸ் மனைவியோடு அங்கு வந்து சேர்ந்தார்..

நன்கு தூங்கி கொண்டிருந்த ஜானுக்கு செல் போன் சத்தம் கேட்கவும் அறை பார்வையில் போனை தேடி எடுத்து அட்டென் பண்ணி காதில் வைக்க,அந்த பக்கம் லாரன்ஸ் சொன்ன செய்தியை கேட்டு பதறி அடித்து எழுந்தவன் என்னப்பா சொல்றிங்க என்க...

ம்ம்...

கிடைக்கிற ப்ளைட்டில் ஏறி வந்துடுங்க பா...

சரி பா என்று அழைப்பை துண்டித்தவன் போனில் டிக்கெட் பார்க்க மாறி போவது போலவே கிடைக்க அதில் டிக்கெட்டை புக் பண்ணியவன் அருகில் படுத்திருக்கும் மனைவியை எழுப்பினான்.

தூங்க விடுங்க என்று திரும்பி படுத்தவளை வேகமாக தட்ட...என்ன மாமா...போதும் என்க.ஏய் செல்லம் உடனே நாம ஊருக்கு கிளம்பணும் டி அப்பாக்கு உடம்பு முடியலையாம் டி...

கணவன் சொன்னதைக் கேட்டு பதறி அடித்து எழுந்தவள் அப்பவே சொன்னேன்ல வேண்டாம் எங்கு கேட்டு கேள்வி என்று சொல்லும்போது அவளுக்கு அழுகை வந்தது.

சரி சரி உடனே உன் பஞ்சாயத்தை ஆரம்பிக்காதே என்றவன் துணிகளை பேக்கிங் பண்ண ஆரம்பித்தான்.

அதற்கு முன்னால் மறக்காமல் தனது சிறு வயது தோழி லட்சுமிக்கு விஷயத்தை மெசேஜ் பண்ண அவளும் அதற்கு உடனே பதிலளித்தாள்.

புலம்பும் மனைவியை அழைத்துக்கொண்டு மதுரை ஏர்போர்ட்டிற்கு வந்து சேர நள்ளிரவு 2 ஆனது.

இவர்களுக்காக டிரைவரும் காரோடு காத்திருக்க, லக்கேஜோடு ஏர்போர்ட்டிலிருந்து மனைவியை அழைத்துக்கொண்டு வெளியே வந்த ஜான் டிரைவருக்கு கால் பண்ண சிறிது நிமிடத்தில் காரோடு அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்.

வா என்று பின் சீட்டை திறந்து விட அல்லி உட்கார்ந்ததும் கதவை சாத்தி விட்டு முன்னாடி வந்தவன் அண்ணா நீங்கள் தள்ளுங்களென்று டிரைவர் சீட்டில் உட்கார்ந்தவனோ புயல் வேகத்தில் காரை ஓட்டினான்.

அசதியின் காரணமாக அல்லி தூங்கி விட காரை ஓரமாக நிறுத்தி அவளுக்கு சீட் பெல்டை போட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தவன் 6 மணி நேரத்தில் வர வேண்டிய ஊருக்கு 3 மணி நேரத்தில் வந்து சேர்ந்தான்.

ஊருக்குள் நுழையும் போதே தப்பு சத்தம் கேட்டது.

புயலாய் வந்தவன் இரண்டு வீட்டிற்கு முன்பே வண்டியை நிறுத்த,காரை பார்த்து விட்டு கதிரும் வேலுவும் எழுந்து வந்தனர்.

பின் கதவை திறந்து அல்லி அல்லி என்று மனைவியை எழுப்ப தூக்கத்திலிருந்தவள் ம் என்றவாறு கண் விழிக்க வா என்றான்.

எங்கு வந்துருக்கோங்க என்றவாறு கீழே இறங்கியவளுக்கு தனது ஊரென்றும் வீட்டு வாசலில் பந்தல் போட்டிருப்பதை கண்டவள் என்னாச்சு என்று பதற்றமாக வந்தவளோ அங்கு சொந்தக்கார ஆண்கள் இருப்பதை பார்த்தவாறு வாசலில் கால் வைத்து முற்றத்திற்குள் வந்தவளோ தாய் தந்தையின் கோலத்தை கண்டு இல்லை என்று கத்த.கண்ணை மூடி தூணில் சாய்ந்திருந்த தாமரை, தங்கச்சியின் குரலை கேட்டு அல்லி என்று வேகமாக வந்து தனது தங்கையை கட்டிக் கொண்டு அழுதாள்.

வேதாவோ ஒரே நேரத்தில் அண்ணனையும் அண்ணியும் பறிகொடுத்த துயரத்தில் இடிந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்து விட,அவர் ஹார்ட் பேஷண்ட் என்பதால் மருதுவின் மனைவி செல்லாவோ அவ்வப்போது அவரை கவனிக்க தவறவில்லை.

நேரமும் கடந்து சென்றது.

இறந்தவர்களுக்கான சடங்கு ஆரம்பமானது.. பிறந்த கோடியை கண்ணீரோடு கவிதாவிற்கு போட்டதும் கணவன் மனைவி இருவரையும் ஒரே பாடையில் வைத்து தூக்கிட்டு போனார்கள்..

தாமரையும் அல்லி யும் தாய் தந்தையை தூக்கி போவதை பார்த்து கத்தி கதறியவளுங்கள் அப்படியே மயங்கி சரிந்தனர்.

அதோ இதோ என்று நாட்களும் ஓடியது.

இன்று ஏழாம் நாள் துக்கம் என்பதால் படையல் போடுவதற்கான சமையல் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.வேதாவோடு மயிலாவும் சீமக்கரையிலே தங்கிவிட்டார்.

தாமரையோ தங்கையை சமாதானம் பண்ணி அவள் வீட்டிற்கு அனுப்பியவள் இங்கேயே தங்கி விட மற்றவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.

கதிரோ கடந்த ஒரு வாரமாக மனைவியிடம் பேச முயல,தாமரையோ அதற்கான வாய்ப்பே தராமல் பார்த்துக் கொண்டாள்.

ஏழாம் நாள் துக்கம் முடிந்தது..

அதோடு 16 ஆம் நாள் காரியம் வைத்துக் கொள்ள முடிவு செய்தனர்.இன்னும் ஒரு வாரம் தானே மனைவி வீட்டிற்கு வந்து விடுவாளென்னு கதிர் நாட்களை கடத்த,அவன் மனைவி என்ன முடிவு எடுத்திருக்காளோ என்பது அவள் மனம் மட்டுமே அறிந்த ரகசியம்.

தொடரும்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top