Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 593
- Thread Author
- #1
சீமக்கரை:
செல்வி உன்கிட்ட ஒன்னு கேட்கணும்டி...
ம்ம் சொல்லு மாமா என்றாள்...இல்ல மனசு விரும்பி தானே நீ என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிற? ஒருவேளை அத்தை பையன் சின்ன வயசுல பேசி முடிச்சிட்டாங்கன்னு அப்படி வேற எந்தமும் இல்லையே டி...
ஏன் கேட்கிறேன்னா, இப்ப இருக்குறவங்க மனசுல எப்போ யாரு வராங்கன்னு சொல்ல முடியாதும்மா நீயும் வெளியில போய் ஸ்கூல் எல்லாம் படிக்கிற..
யாராச்சும் அதில் புடிச்சிருக்கலாம் இல்ல ஒருவேளை அதை குடும்பத்துக்காக தூக்கி எறிஞ்சிட்டு நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்கவும் வேலுவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்க்காதவளோ ஏண்டா மானங்கெட்டவனே....
உன்னலாம் எந்த விளக்கமாற்றால் அடிக்கிறது பரதேசி பயலே. நீ அத்தை மகனாக இருந்தாலும் சின்ன வயசுல இருந்து உனக்கு நான் எனக்கு நீனு சொல்லி தானே வளர்த்தாங்க பின்ன எப்படிடா மத்தவங்க மேல ஆசை வரும் துப்பு கெட்டவனே...அப்ப உனக்கு தான் வேற எவளோ புடிச்சிருக்கு என்று வாய்க்கு வந்தபடி கன்னா பின்னா என்று செல்வி திட்ட எதேஏஏஏ...
ஏய் ஏய்...என்னடி இப்படி திட்டுற என்று வேலு பாவமாக கேட்க இனி என் முகத்துலையே முழிக்காதென்று சொல்லும்போது செல்விக்கு கண்கள் கலங்கியது...
அய்யோ செல்லமே வேற எந்த தப்பான எண்ணத்தில் கேக்கலடி?.
பின்ன வேறு எந்த எண்ணத்தில் கேட்கிற சொல்லுடா. மத்தவங்கள நினைச்சுகிட்டு அது எப்படி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பேன்?.
அவ்ளோ கேவலமானவளாகவா தெரியுறேன் என்கும் போது அவளுக்கு அழுகை வந்தது. அடியே இப்படி அழாதடி உன் குடும்பமே இங்கதான் இருக்கு அவங்க வர்ற நேரத்துல நீ இப்படி கண்ண கசிக்கிட்டு இருக்கிறத பார்த்தா என் தோலை உரிச்சிடுவாங்கடி என்று சொல்லும் போதும் கண்ணை துடைக்க வந்த வேலுவின் கையை தட்டி விட்டு செல்வி அங்கிருந்து வேகமாக சென்றாள்
அடியே செல்லம் இப்ப நான் என்னடி சொல்லிட்டேன் நீ பாட்டுல உன் பாட்டுக்கு போயிட்டே இருக்குற டேய் நில்லுடி நான் சாதாரணமா தான் டி கேட்டேன்...உன்னை தப்பா நினைச்சு கேக்கலடி என்கவும், மரியாதை கெட்டு போயிடும் என் பின்னாடியே வராதீங்க என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தவள் அங்கிருக்கும் மோட்டார் கொட்டகையை நோக்கி சென்றாள்..
அட கடவுளே இப்ப நான் என்ன கேட்டுட்ட இவ இப்படி தாம் தூம்னு குதிச்சிட்டு போற சாதாரணமா தானே கேட்டேன் இது ஒரு தெய்வ குத்தமா அய்யனாரே ஏன்பா என்னை இப்படி சோதிக்கிற?.இவதான் பொண்டாட்டின்னு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து சொல்லிட்டு இருந்தாங்க சரி எல்லா கபோதி பய போல நம்மளும் ஒரு காதலை பண்ணலான்னு கொஞ்சம் ட்ரை பண்ணுனேன்...
அதுக்கு இப்படி சந்தி சிரிக்கிற அளவுக்கு பண்ணிட்டியே ஏன் அய்யனாரே ஏன்?.உனக்கு வருஷா வருஷம் கிடா வெட்டும் போது ஒரு கரண்டி கறி எக்ஸ்ட்ரா தானே எடுத்து வைக்கிறேன் என்ன இப்படி சோதிக்கிறியே நல்லா இருக்காயா இது என்கும் போதே பின்னாடி இருந்து கதிர் அவன் தலையில் தட்ட திரும்பி பார்த்தவனோ ஏன்டா ஏன்...இந்த மொட்டை வெயில்ல ஏற்கனவே மண்டையை பொளக்குது இதுல நீ வேற அடிச்சு மண்டையை உடைக்கணுமா என்று தனது மச்சானிடம் கோவமாக கேட்க....
லூசு பயலே தானா புலம்பிட்டு கிடக்குறியே என்ன பிரச்சனை உனக்கு...
பிரச்சனையாடா மாப்பி...அது எங்கு இனி புதுசா எனக்கு வரப் போகுது அதான் வந்து சேர்ந்திருக்கிங்களே எனக்கு என்று சொல்லிக் கொண்டே தன்னவளை வேலு தேட...அவளோ பெருமாளோடு போர் கொட்டாவில் நின்று ஏதோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது...
நேரமும் கடந்து செல்ல மிதி வேலையை முடித்துவிட்டு எல்லாருமே வீட்டிற்கு ஒன்றாக தான் போனார்கள்.செல்வியோ கடைசி வரைக்கும் தனது மாமனை திரும்பியே பார்க்கவில்லை.
வீட்டிற்கு வந்த கதிர் நேராக டவலை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமுக்கு குளிக்க சென்றான்.தாமரையோ கணவனுக்கு டீ எடுத்துக் கொண்டு சிறிது நிமிடம் கழித்து மேலே வர அப்பொழுதுதான் குளித்துவிட்டு வெளியே வந்தவன் ஓய் செல்லம் என்றபடியே தலையை உதறிக்காட்ட அதிலிருந்து ஈரம் எல்லாம் அவள் முகத்தில் தெளித்துது...
என்ன மாமா பண்ற என்று பல்லை கடித்தாள்...தலையை உதறுறேன் டி இது கூட தெரியவில்லையா என்ற கதிரோ மனைவியை அணைக்க...அய்யோ மாமாஆஆஆ....மேல எல்லாம் ஈரமாகுது பாரு..
அதுலாம் தொடச்சுட்டா சரியாகிவிடும் டி... இது நல்லா தானடி இருக்கு என்ற படியே இறுக்கமாக அணைத்தான். உனக்கு நல்லா இருக்கியா இப்படியே ஈரத்துடன் நான் கீழே போனால் என்ன நினைப்பாங்க என்கவும்...என்னடி எப்ப பாத்தாலும் அவங்க என்ன நினைப்பாங்க இவங்க என்ன நினைப்பாங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்குற?.
மத்தவங்க என்ன நினைக்கிறாங்க விடு முதல்ல நீ என்ன நினைக்கிற என்று மனைவியை முறைத்தான்...
தாமரையோ நீ ஒரு விடா கண்டேன் என்று நினைக்கிறேன் என்கவும் ஆமாடி அதுல என்ன சந்தேகம்..
அப்புறம் செல்லம் நாளைக்கு மதுரையில விவசாய சங்க மீட்டிங் இருக்குடி இந்த வருஷத்துக்கான சிறந்த விவசாயிக்கான அவார்டு கொடுக்குறாங்க அதுக்கு நான் உன் அண்ணலாம் போறோம் டி...
ஆஹான்…கனியூர்ல போய் ஒருத்திய புடிச்சுட்டு வந்த இப்ப மதுரையில் போய் எவளை புடிச்சிட்டு வர போற என்று முறைத்து பார்த்தாள்.
ஏய் உன் மாமா ஏகப்பத்தினி விரதன் டி என்ன போய் இப்படி சந்தேகப்படலாமா சொல்லு.
கணவனை நிமிர்த்து பார்த்தவள் உன் ஏக பத்தினி விரத்தத்தை தான் தேவி கிட்ட பேசும் போது தெரிந்தது என்றாள்...அடியே அந்த வெள்ள பூசணிக்கா வேணும் என்று கோர்த்து விட்டு இருக்கா டி...உன்னையும் என்னையும் பிரிக்கணும்னு அதை போய் புடிச்சுட்டு இருக்கியே.இது நல்லாவா இருக்கு இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டி இதே கதையை சொல்லிக் காட்டுவ?.
ம்ம் எனக்கு தோணும் போதெல்லாம் சொல்லிக் காட்டுவ அதை நீ காதில் வாங்கித்தான் ஆகணும் வேற வழி இல்ல என்றாள்.
வருஷா வருஷம் வர்ஷன் அண்ணனுக்கு தான் இந்த பரிசு கிடைச்சுட்டு இருக்கு.இந்த வருஷமும் அவங்களுக்கு தான் கிடைக்கும்னு நினைக்கிறேன் டி...
ஓஓஓ நீ அப்போ நீ எப்போது வாங்க போற மாமா?.
அதிலெல்லாம் பெருசா எனக்கு எண்ணம் இல்லடி நம்மளோட செயல்ல மன நிம்மதியோடு செய்யணும்..அதுதான் விலை மதிக்க முடியாத பொக்கிஷம். நீயும் நம்மளோட வாரிசும் இந்த உலகத்துக்கு வரப்போகுதே இதைவிட வேற எனக்கு என்ன பெரிய அவார்ட் கிடைக்கப் போகுது சொல்லு..
ஒரு ஆண் மகனுக்கு தேவையானது நல்ல குடும்பமும் அவனை என்கரேஜ் பண்ற துணையும் தான் அந்த விதத்தில் நான் பெரிய கோடீஸ்வரன் நீ காலேஜ் போய் படிச்சவ நான் ஸ்கூலே தாண்டாதவன்...
ஆனா இதுவரைக்கும் அந்த ஏற்றத்தாழ்வு நீ என்கிட்ட காமிச்சது இல்லையேடி என்க....தாமரையோ கணவனை காதலோடு பார்த்தாள்.
மனைவியின் பார்வையை பார்த்து கதிரோ ஏய் இப்படியெல்லாம் பார்த்து மனுஷனை உசுப்பேத்தாதடி அப்புறம் நடக்கிறதே வேற என்கவும் கணவனை நிமிர்ந்து பார்த்தவள் போயா அதுக்கெல்லாம் நீ ஒன்னும் சரிப்பட்டு வர மாட்டயா என்று சிரித்தாள்...
மனைவியின் வார்த்தை கேட்டவன் எதேஏஏ சரிப்பட்டு வர மாட்டேனா அடிப்பாவி என்ன பாத்தாடி இப்படி சொல்ற?. மனுஷன் ஆசையா கிட்ட வந்தவே கை வலிக்குது கால் வலிக்குது அதை வலிக்குது இது வலிக்குதுன்னு வாந்தி வருதுனு இல்லாத கதை எல்லாம் சொல்றியேடி...இல்லன்னா மாமனோட காதலை தினமும் உனக்கு திகட்ட கொடுப்பனே நானா டி சரிப்பட்டு வர மாட்டேன் என்று அவள் இடுப்பில் கை வைத்து தன்னோடு இறுக்கமாக அணைக்க ஐயோ மாமா என்ன பண்ற...
வயிற்றில் குழந்தை இருக்கு பாரு என்று தாமரை கத்த ஓஓஓ சாரி டி சாரிடி என்று மனைவியை பின்பக்கமாய் திருப்பியவன் இப்பொழுது தனது நெஞ்சோடு அணைத்து கொண்டான்...
சரி சரி விடுங்க வேலை இருக்கு நான் கீழே போகணும்...அப்படி என்ன தாண்டி வேலை செய்ற...டிசைனிங் வேலை போதாதுன்னு வீட்லயும் செஞ்சிட்டு இருக்க..
அதான் அம்மா ரெண்டு பேரு செய்றாங்க நீ என்ன வேலை செய்ற ஒரு நாளைக்கு வீட்ல கேமரா வச்சு பாக்கணும் இல்லன்னா நான் தான் ஒளிந்து இருந்து பார்க்கணும் உண்மையிலேயே நீ வேலை செய்றியா இல்ல ஓபி அடிச்சுட்டு இருக்கியா என்று சொல்லிக்கொண்டு மனைவியின் தோள்பட்டையில் செல்லமாக கடித்து வைத்தான்.
அடப்பாவி புருஷா என்னை பாத்தா வேலை செய்யாதவன்னு சொல்ற உன்னை என்ன பண்றேன் பாரு என்று எட்டி இடது கையால் கணவனின் தாடியை பிடித்து இழுக்க ஐயோ வலிக்குதுடி விடுடி விடுடி என்று கத்தினான்..
செல்லம் நாளைக்கு செல்விக்கு பர்த்டே ஞாபகம் இருக்காடி என்க...ம்ம்ம் எங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கு செல்விக்கு நான் கூட புதுசா ஒரு டிரஸ் ரெடி பண்ணி இருக்கேன் மாமா என்கவும் அப்படியா சொல்லவே இல்லையேடி என்றான்.
ஆமாம் எல்லாத்தையும் சொல்லிட்டா செய்வாங்க அதெல்லாம் சர்ப்ரைஸ்...
ஓ சர்ப்ரைஸ் என்பது இப்படி சொல்லாம இருக்கிறதுதான் இல்லையா அட கடவுளே இது கூட உன் மாமனுக்கு தெரியல எவ்வளவு அப்பாவியா இருக்கேன் பாரு என்றபடியே விரல்களால் மனைவியின் முதுகில் கோலம் போட...அய்யோ மாமா கூசுது சும்மா இரு மாமா என்று சிணுங்கி கொண்டே இருந்தாள்..
அடியே நான் ஒண்ணுமே பண்ணல சும்மா தாண்டி இருக்கேன் கட்டிப்பிடிக்க கூட கூடாதாடி என் பொண்டாட்டிய என்க...கட்டிப்பிடிக்கலாம் ஆனா நீ அதோடையா இருக்குற என்கவும் சொல்லு மாமா என்ன பண்ணுனேன் சொல்லுடி பாக்கலாம்....
இப்படி உன்னை கிள்ளினேனா என்று கன்னத்தை கிள்ளுறேன் என்ற பெயரில் கடித்து வைத்தான். இல்ல இப்படி பண்ணுனேனா என்று காதோரம் செல்ல கடிகள் கொடுத்து முத்தம் வைக்க அய்யோ மாமா தெரியாம கேட்டுட்டேன் ப்ளீஸ் போதும் விட்டுரு...நான் வேற அத்தைக்கு டிசைனிங் அனுப்பனும் அது வேற கரெக்ஷன் பார்க்கணும் எனது கடமை அழைக்கிறது இல்லையா?.
ஏய் உடம்ப போட்டு வறுத்துக்காதடி என்று வருத்தமாக கதிர் சொல்ல, என்னை கவனிக்க தான் நீ இருக்கியே பிறகு நான் என் கவலைப்படணும் மாமா...
ம்கும் எங்கடி கவனிக்க விடுற என்று மனைவியை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே சொல்ல இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று கணவனின் முகத்தில் ஒரு பஞ்ச் பணியவள் என் பொண்டாட்டி கையால விஷம் கொடுத்தாலும் குடிப்பேன்டி...
ஓஓஓ குடுக்க மாட்டான்னு உன் இஷ்டத்துக்கு டயலாக் பேசுற அப்படித்தானே என்றாள்...
மாமா உனக்காக என்ன வேணாலும் செய்வேன் டி செல்லம்...மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது புனிதமானது என்கவும் மனசுக்குள்ள கமலஹாசன் நினைப்பாக்கம் துரைக்கு என்று சிரித்துக் கொண்டு தன்னை அணைத்திருக்கும் கணவனின் கையை விலக்கியவள் சூடு ஆறிப் போயிடுச்சு மாமா நான் போய் வேற டீ போட்டு வரேன்...
பரவால்ல செல்லம் என்றவாறு அந்த ஆறிப்போன டி தேவாமிர்தம் போல் குடித்து முடித்தவன் பசிக்குதடி சூடா சாப்பாடு எடுத்துட்டு வரியா?.
மதியமும் சாப்பிடல என்கவும் எத்தனை வாட்டி மாமா சொல்றேன் வேளா வேளைக்கு சாப்பிடுனு..சொன்னா கேட்கவே மாட்டேங்குற..
வயலுக்கு போனா உலகத்தையே மறந்துவிடு இதெல்லாம் நல்லாவே இல்ல என்று கடிந்து கொண்டாள்...
இல்ல செல்லம் மருந்து போடுவது நேரம் ஆயிடுச்சு டி உன்னை பார்த்தாலே நான் தான் உலகத்தை மறந்து விடுவேன் என்று சொல்ல,போதும் நீ விட்ட ரீல் வரைக்கும் போதும் அதை நாலு படமா எடுக்கலாம் என்றவள் சரி வா மாமா நான் போய் சாப்பாடு ரெடி பண்றேன் என்றாள்.
ஹம் நீ போடி டிரஸ் மாத்திட்டு வரேன் என்றான்.
சிரித்துக் கொண்டே கீழே வந்த தாமரை நேராக கிச்சனிற்குள் போய் என்ன ரெடியாக இருக்கிறது என்று பார்க்க ஒரு பக்கம் சாம்பார் கொதித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் செல்வி இட்லி ஊத்தி கொண்டிருக்கவும் சீதாவும் ராதாவும் கோவிலுக்கு போய் இருப்பதாக சொன்னாள்