• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
591
கனியூர்:

தனது இரண்டு வருட காதல் இப்படி பொய்த்து விட்டதே என்று பார்வதியோ பாத்ரூமிற்குள் உட்கார்ந்து கதறி அழுதாள்...வேறு வழி இல்லை பெற்றோர்கள் இஷ்டம் போல் வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டியது தான்.

நிச்சயமாக இது தனது தாய்க்கு தெரிந்தால் தன்னை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவாள் என்று தெரிந்தவளுக்கு அம்மா என்றால் கொஞ்சம் பயம் அதிகம் தான். ..

அப்பொழுது பாரு பாரு என்று மலர் கூப்பிடும் குரல் கேட்டது.அழுது கொண்டிருந்தவள் கண்ணை துடைத்து விட்டு பாத்ரூம் கதவை திறந்து எட்டிப் பார்க்க அங்கே மலரும் பார்வதியின் அம்மாவும் நின்று கொண்டிருந்தனர்.

இன்னும் குளிக்காம என்னதான் பண்ணிட்டு இருக்க நீ என்று அவள் அம்மா கொஞ்சம் கடுமையாக கேட்க இதோ குளிச்சிட்டு வரேன் என்று சொல்லியவள் மீண்டும் கதவை சாத்தி விட்டு வேக வேகமாக குளித்து வெளியே வர அங்க கட்டில் மேல் மக்களுக்கான புடவையும் நகையும் அவர் எடுத்து வைத்திருந்தார்.

பார்வதியோ தனது தோழியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னைக்கு தான் உனக்கு என்கிட்ட பேசணும்னு தோணிச்சா மலர் என்று கேட்கவும் உன்கிட்ட பேசவே கூடாதுன்னு இருந்தேன் மாமா தான் எனனை வர சொன்னாங்க வேற ஒன்றும் இல்லை என்றாள்...

இத்தனை வருடமாக கூட இருந்த தனது தோழியே இந்த விஷயம் தெரிந்த பிறகு இப்படி வெறுத்து விட்டாளே அப்போது தனது தாய்க்கும் தெரிந்தால் தன்னை ஒரு செருப்பாக கூட மதிக்க மாட்டார்கள் என்கும் உண்மையை புரிந்த பார்வதி நிதர்சனத்தை ஏத்துக்கொண்டு தயாராகினாள்...

கால் மணி நேரம் சென்றிருக்க வரிசையாக மூன்று பெரிய கார்கள் அந்த வீட்டின் முன்பு வந்து நிற்க 10 பேர் கொண்ட ஆணும் பெண்ணும் இறங்கி வர பார்வதியின் அப்பா அம்மாவும் வர்ஷன் ஷாலினியும் அவர்களை வாங்கள் என்று வரவேற்து வீட்டிற்குள் அழைத்து வந்தனர்...

பரஸ்பரம் பொதுவாக நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்கும்போது மாப்பிள்ளை பையன் ரவீந்திரன் அங்கு சுவற்றில் மாட்டி இருக்கும் பார்வதியின் போட்டோவை தான் பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்.

அவன் பார்வையை புரிந்து கொண்டு பாருவை வர சொல்லுங்கள் என்றார் ரத்தினம்...

இதோங்க மாமா என்றவாறு உள்ளே போன பார்வதி அம்மா அங்கே தயாராக வைத்திருந்த காபி டிரேவை மகளிடம் கொடுத்து ஷாலினியோடு அனுப்பி வைத்தார்..

வந்தவர்களுக்கெல்லாம் காபியை கொடுத்துவிட்டு அவள் கையில் இருந்த ட்ரேவை ஷாலினி வாங்கிக் கொள்ள மரியாதை நிமித்தமாக பார்வதி வணக்கம் சொல்லவும் பொண்ணு நல்லா பார்க்க லட்சனமாக தான் இருக்கு நம்ப ரவீந்திரனுக்கு ஏற்ற பொண்ணா தான் இருக்கு என்றார் அவனின் சித்தியும் அத்தைகளும்.

பின்னர் அவர்கள் வாங்கிட்டு வந்த பூவை எடுத்து ரவீந்திரனின் அம்மாவே தனது வீட்டுக்கு வரப்போற மருமகளின் தலையில் வைக்க அப்புறம் என்னவாம் இன்றைக்கே எல்லாரும் பேசி முடிச்சிடலாம் அதான் ஜாதகம் பொருத்தம் ரெண்டு பேருக்கும் சரியாக இருக்கே என்கவும் இவ்வளவு அதிரடியாக நடக்கும் என்று பார்வதி சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ..

அதற்கு என்ன கையோட தட்டையே மாற்றிக் கொள்ளலாமே இதுல என்ன இருக்கு என்று ரத்தினம் சிரிக்க... நீங்க என்ன சொல்றீங்க என்று பார்வதியின் அப்பாவை பார்த்து கேட்க எங்க குடும்பத்திலே பெரியவர் எங்க அண்ணன் தான்.அவங்க சொல்லிட்டாங்களே அப்புறம் அந்த வார்த்தைக்கு மறுப்பு கிடையாது என்று சிரித்தார். ..

பின்னர் இரண்டு குடும்பமும் அவர்கள் வாங்கிட்டு வந்த பண்டங்களை வைத்து பரஸ்பரமாக தட்டை மாற்றிக் கொள்ள இவ்வளவு தூரம் வந்தாச்சு மதிய சாப்பாடு கை நனைத்திட்டு போய்விடலாம் என்றனர்..

அப்போ எல்லாத்துக்கும் தயாராக தான் இருக்கிறீர்களே என்கவும்,சின்ன தம்பி சொன்னார்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று வர்ஷனை காட்டி சொன்னார்கள். ..

வர்ஷனும் ஏற்கனவே ஆட்களை வைத்து சமைக்க ஏற்பாடு பண்ணி இருந்தால் மதிய உணவும் தயாராக வந்தது பின்னர் பொண்ணு மாப்பிள்ளை இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து பெரியவர்கள் சந்தனம் தடவி பொட்டு வைத்து ஆசிர்வாதம் பண்ணினார்கள். ..

சீமக்கரை...

அடிப்பாவி வலிக்குதுடி விடுடி என்று கதிர் கத்த...ஏன்யா உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா கட்டின பொண்டாட்டி குத்து கல்லு போல நான் நிற்கிறேன் இன்னும் கொஞ்ச நாள்ல உன் வாரிசு வரப்போகுது ...

இப்ப வந்து காதலிய பொண்ணு பார்க்க வராங்க அவ கவலையாக இருப்பான்னு உனக்கு ரொம்ப கவலையா இருக்கா என்று கேட்டுக் கொண்டு இன்னும் வேகமாக கொட்டிக் கொண்டிருந்தாள்...

ஐயோ செல்லம் உன் மாமனுக்கு பரந்த மனசுடி...அதனால தாண்டி எல்லாரையும் பத்தி கவலைப்பட்டுறேன் என்கவும் மானங்கெட்டவனே அப்ப உன்ன போல நானும் கண்டவன்ல நினைச்சு வருத்தப்படட்டுமா என்றாள்...

ஏய்ய்ய்ய்....உன் மனசுல என்ன பத்தி கவலை மட்டும் தான் இருக்கணும் வேறு ஒரு பயலை பத்தியும் வரக்கூடாதுன்னு சொல்லிட்டேன்...
திரும்பத் திரும்ப என்ன சொல்ல வைக்காதே என்று கோபமாக சொன்னான்.

அது எப்படி உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம் இப்ப நானும் என்னை ஒரு தலை காதலித்தவனை நினைத்து வருத்தப்படுகிறேன்...

அடியேய் அவன் இன்னொருத்தியோட புருஷன் அவனை எல்லாம் நினைக்க கூடாது நம்ம தமிழ் பண்பாட்டில் அப்படி ஒரு இடமே கிடையாது என்று சொல்லிக் கொண்டே இருந்தவன் அப்பா முட்டி ரொம்ப வலிக்குதுடி என்றான்..

உன்னை யார் காதல் மன்னன் போல முட்டியெல்லாம் போட்டுவிட்டு நிக்க சொன்னா?.

ஹி ஹி ஒரு விளம்பரம் தான் என்று சிரித்தான். ..

மாமா ஒரு முக்கியமான விஷயம் என்று சொல்ல, செல்லம் என்ன வேணும் முத்தம் வேணுமா கிள்ளு வேணுமா கட்டி பிடிக்கணுமா இல்ல உன்னை தூக்கி சுத்தணுமா?.

யோவ்....24 மணி நேரம் உனக்கு இந்த ஞாபகம் தானா வேற ஞாபகம் இல்லை என்கவும், ஏண்டி பொண்டாட்டி பக்கத்துல இருக்கும்போது வேற என்ன தெரியும்....அதுவும் அழகான கியூட்டான்னு கொஞ்சம் ஹாட்டான கொஞ்சம் திமிரு புடிச்ச கொஞ்சம் சண்டிராணி போல எனக்கு பொண்டாட்டி கிடைச்சிருக்கா என்று சொல்லிக் கொண்டு மனைவியை தன்னோடு அணைத்தவன் அவள் காது மடல்கலை செல்லக் கடித்துக்கொண்டு சிறு சிறு முத்தங்கள் கொடுக்க....ஏ மாமா இப்படி பண்ற?.

எத்தனை வாட்டி சொல்லி இருக்கிறேன் தறி மெஷின் இருக்கும் இடத்தில் இப்படி பண்ணாதன்னு என்றவாறு கணவனின் கையில் கிள்ள...

அடியேயா இதுவும் நம்ம வீடு தாண்டி...மெஷின் அந்த திரும்பி பக்கம் இருக்குடி. நம்மள ஒன்னும் பாக்கவே இல்லையே...பாரு ஸ்கிரீன் கூட இழுத்து விட்டுட்டேனே என்று சொன்னான். ..

மாப்பி மாபி அடே மாப்பி எங்க தான்டா இருக்கிற எரும மாடு என்றவாறு ஷெட்டின் கதவை தட்டிட்டு உள்ளே வந்து வேலு அங்கிருந்த தனது மச்சானை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்...

ஏன்டா உனக்கு கொஞ்சமாவது மண்டைல இருக்கா இல்லையா?.அறிவு கெட்டவனே வயல்ல உரம் போடணும்னு மூட்டை எடுத்துட்டு வர சொன்னாக்க, இங்க என்னடா பண்ணிட்டு இருக்க என்று திட்டவும் அப்பொழுதுதான் கதிருக்கு காலையில் அவனது அப்பா சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது.

ஐயோ மறந்துட்டேன் மாப்பு என்க..விளங்காத பயலே உன்னால அங்கு அந்த வீச்சருவா கிட்ட நான் வாங்கி கட்டிட்டு இருக்கேன்...
வீட்டுக்கு வர போற மருமகன்னு கொஞ்சமாவது மரியாதை கொடுக்குறீங்களாடா என்று திட்டியவன் இந்தாடா என்று கையில் இருந்த கவரை தாமரையிடம் கொடுக்க அதில் சூடான போண்டாவும் பஜ்ஜியும் இருந்தது.

என்னன்ணா இவ்வளவு சூடா இருக்கு என்கவும் இப்பதான் நம்ம சிவன் மாமா கடையில் போட்டாங்கள்.டீ குடிக்கும் போது உன் ஞாபகம் வந்துச்சு வாங்கிட்டு வந்துட்டேன் என்றான்.

ஏன்டா நான் ஒருத்தன் குத்துக்கல்லு போல தான் நிக்கிறேன் எனக்கும் சாப்பிட வாய் இருக்குடா என்று கதிர் சொல்ல..இருக்கட்டும் யாரு வேணான்னு சொன்ன அந்தா ரோட்டில் கருங்கல் இருக்கு போய் எடுத்து கடி..உனக்கு தான் வாய் இருக்கு பல்லு இருக்கே என்று முறைதான்..

என் மச்சி நம்ப என்ன அப்படியே பழகி இருக்கோம் ஆயிரம் தான் இருந்தாலும் உன் தங்கச்சி புருஷன் டா நான் என்க தங்கச்சி புருஷன் அக்கா புருஷன் யாரு புருஷன் வேணா இருந்துட்டு போடா..
யாருக்கு என்ன கேடு இப்ப வந்துச்சு.மருந்து மூட்டை எடுத்துட்டு வாடா நாயே என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியே செல்ல மாமா உன்னை சாய்ந்தரம் வந்து பார்த்துக்கிறேன் நீ சாப்பிட்டு வேலையை பாருடி என்று அவசர அவசரமாக மனைவியை அணைத்து ஒரு செல்லக்கடி கன்னத்தில் கடித்துவிட்டு கதிர் அங்கிருந்து சென்றான். .

தாமரைக்கு கணவனை நினைத்து சிரிப்பாக இருந்தது...ஐயோ மாமா உங்கள வச்சுக்கிட்டு எப்படித்தான் சமாளிக்க போறேன்னு தெரியல இதுல வயிற்றில் வேற குட்டி இருக்கிறாங்க.உங்களுக்கு மேல அவங்க இருப்பாங்க அவங்களுக்கு மேல நீங்க இருப்பீங்க.உங்க ரெண்டு பேரு கிட்டயும் நான் என்ன பாடுபட போறேனோ அது இந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் என்று சொல்லும்போது தாமரை வயிற்றில் இருக்கும் குழந்தை எட்டி உதைத்தது.

அதானே ஒன்னு சொல்லிட கூடாது உன்னையும் உங்க அப்பாவையும் உடனே ரெண்டு பேரும் வரிஞ்சு கட்டிட்டு வந்துருவீங்களே என்று செல்லமாக தனது வயிற்றின் மேல் லேசாக தட்டியவள் தறியை நிறுத்திவிட்டு அண்ணன் வாங்கிட்டு வந்து கவரை எடுத்துக் கொண்டு ஷெட்டின் கதவை சாற்றிவிட்டு வீட்டிற்குள் போனாள்..

அங்கே சீதாவோ மதிய உணவுக்காக கீரை ஆய்ந்து கொண்டு இருக்க, கவரோடு வரும் மருமகளை பார்த்தவர் என்னடா ம்மா என்க...அண்ணன் கொடுத்தது அத்தை என்று சொல்லி நீட்டினாள்.

வா வா நானும் வயலுக்கு கொடுத்து அனுப்ப தான் டீ அடுப்புல வச்சிருக்கேன் உனக்கு தனியா பால் வச்சிருக்கேன் இரு எடுத்துட்டு வரேன் என்று சொல்ல இருங்க, நானே போய் எடுத்துக்கிறேன் என்றவள் சூடாக இருந்த பாலில் சிறிது நாட்டு சர்க்கரையை கலந்து எடுத்துட்டு வந்து டீ இன்னும் கொதிக்கவில்லையே என்கவும் நான் தான் பொறுமையாக வச்சேன் என்றார்.

பின்னர் இருவரும் பேசிக்கொண்டே சூடாக இருந்ததை சாப்பிடும் போது படித்துக் கொண்டிருந்த செல்வியும் கதவை திறந்துவிட்டு வெளியே வந்தவள் மாமியாருக்கும் மருமகளுக்கும் எதுக்கு இந்த ஓரவஞ்சனை?. நானும் ஒருத்தி இந்த வீட்ல இருக்கிறேனே என்னையும் கூப்பிடலாம் இல்லையா என்கவும், அதான் இவ்வளவு இருக்கே எடுத்து சாப்பிடு உன்னை யாரும் வேண்டாம்னா சொன்னாங்க என்று மகளை முறைத்துப் பார்த்தார்.

ஏம்மா இப்ப நான் கதவை திறந்துவிட்டு வெளியே வந்தது பிறகு தானே இல்லன்னா மாமியார் மருமகளுமே அமுக்கி இருப்பீங்களே என்று செல்வி முறைத்துக் கொண்டு அதிலிருந்து அவளுக்கு பிடித்த பஜ்ஜி எடுத்து சாப்பிட, ஆஹா சூடான பஜ்ஜி கூட ஒரு டம்ளர் டீ குடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும் என்கவும் 24 மணி நேரமும் சாப்பிடுற ஞாபகம் தான் அடுத்த வாரம் பரீட்சை அந்த எண்ணம் கொஞ்சமாவது இருக்கா..

அத்தை அதுக்குன்னு எப்ப பார்த்தாலும் படிச்சு கிட்டேவா இருப்பாங்க கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்கட்டும் விடுங்க என்ற தாமரை,செல்வி டீ கொதிச்சிட்டு தான்மா இருக்கு இன்னும் தயாராகவில்லை என்கவும் சும்மா உங்க மாமியாரை கிண்டல் பண்ணுனேன் அண்ணி..உடனே சப்போட்டுக்கு வந்துட்டீங்களா நீங்களும் என்று சிரித்தாள்...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
591
அப்பொழுது சீதா சீதா என்று வீட்டிற்குள் வந்த பெருமாள் எங்க தாண்டி போனான் உன் பெரிய மவன்?உரம் போட ஆள் வர வச்சிட்டேன். காலையில போனவன் தேனூருக்கு போனானா இல்ல நேரா தென்காசிக்கு போயிட்டானா வாங்குவதற்கு என்று சத்தம் போட தாமரைக்கு கணவனை நினைத்து கொஞ்சம் கோபமும் சிரிப்பும் கலந்து வந்தது.

ஏங்க போன் பண்ணி கேட்டதுக்கு வண்டி லோடு இன்னும் வரலன்னு அங்க மருந்து கடையில் சொல்லி இருக்கிறாங்க என்கவும் அது போன் பண்ணி சொல்லனுமா இல்லையா உன் பையன் வாயில என்ன முத்தா இருந்தது..

வந்ததும் நீங்களே கேளுங்க எதுக்கு இப்படி சத்தம் போடுறீங்க உட்காருங்க நான் உங்களுக்கு குடிக்க மோர் எடுத்துட்டு வரேன் என்க...ஒரு மாதிரியா இருக்கு என்று சொல்லி அங்கிருந்த சேரில் உட்கார்ந்தவர் மருமகளும் மகளும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து என்ன சாப்பிடுறீங்க மா?.

அண்ணன் தான் வாங்கிட்டு வந்து கொடுத்துச்சு மாமா என்று சொல்லியவள் செல்வி அப்பாவுக்கு இரண்டு எடுத்து கொடு என்றாள். அதேபோல் செல்வியும் சூடாக இருந்த வடையை ஒரு பிளேட்டில் வைத்து பெருமாளிடம் கொண்டு போய் கொடுக்க வெயிலில் வந்ததே ஒரு மாதிரியாக இருக்கவும் அவரும் அதை வேக வேகமாக எடுத்து சாப்பிட்டார்...

அடுப்பில் இருந்த டீயும் நன்கு கொதித்து விட முதலில் வடிகட்டியவர் கணவருக்கு எடுத்து வந்து கொடுக்க அதை வாங்கி குடித்த பிறகுதான் பெருமாளுக்கு இயல்பாக இருப்பது போல் இருந்தது.வெயில் ரொம்ப கொளுத்துது சீதா ரொம்ப சூடான பொருள் எல்லாம் தாமரைக்கு செல்விக்குலாம் கொடுக்காதே...
நல்லவனை விட்டு குமட்டி பழம் கிர்ணி பழம் எல்லாம் வந்து இருக்கும் வீட்டுக்கு வாங்கிட்டு வந்து போட சொல்லு அவ்வப்போது போது ஆளுக்கு ஒரு கிளாஸ் அடிச்சு குடு...நீயும் குடி..
சரி நான் வயலுக்கு கிளம்புறேன் என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றார்...

வேலு மட்டும் வந்ததை பார்த்த பிரகாசம் ஏன் தடிமாடு அந்த எருமை மாடு எங்க நீ மட்டும் வர என்கவும் இந்தா இடுப்புல அறைஞான் கயிறுல தான் முடிஞ்சு வச்சிருக்கேன் அவுத்து விடுகிறேன் என்று சொல்லவும் தாத்தாவோ வேலுவை பாத்து முறைத்தார்..

ஏண்டா மருந்து போடுறதுக்கு நேரம் காலம் இல்லைய?.

உச்சில வெயில் இருக்குது இந்த நேரத்துல எவனாச்சும் போடுவானா கொஞ்சமாது அறிவு இருக்கா இல்லையா?.

ம்ம் உன் பேரன் கிட்ட கேளு அறிவு இருக்கா இல்லையா என்று..எங்களுக்கெல்லாம் ஏகப்பட்ட அறிவு இருக்கு என்ற முறைத்துக் கொண்ட வேலுவோ தாத்தாவின் பக்கத்தில் போய் வரப்பில் சாய்ந்து படுத்தான்..

ஏன்டா நான் இங்க என்ன புலம்பி கிட்டு இருக்கேன் நீ படுத்து இப்பதான் கனவு காண்கிற என்ற தாத்தாவை பார்த்தவன் சகல பாடி வேண்டாம் வாய மூடு கோபத்தை கிளறாத...அந்த எருமை மாடு அங்க வீட்டுல தான் இருக்கான்...எதேஏஏஏ வீட்ல இருக்கிறானா ஏன்டா காலையிலேயே சொல்லிட்டுதானே வந்தேன் டா...

இதே பாட்டு என்கிட்ட படிச்ச வரைக்கும் போதும் அவன் வருவான் எல்லாம் அங்கு கேளு இப்பதான் போயிருக்கிறான் என்று சொல்லும்போது டெம்போ வந்து அந்த ரோட்டில் நிற்பது தெரிந்தது.

அதிலிருந்து மூன்று ஆட்கள் மருந்து மூட்டையை தூக்கிட்டு வர அவர்கள் பின்னாடி கதிரும் ஒரு மூட்டையை தூக்கிட்டு வந்தான்.

பேரனை முறைத்தவர் பின்னர் எல்லா மருந்துகளையும் கலந்து நடவு வயலில் தெளிக்க உச்சி வெயில் மண்டையை பிளக்க கொஞ்சம் வெயில் குறையட்டும் என்று சொல்லி அங்கு வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் கை கால்களை நன்கு சுத்தமாக மருந்து போக கழுவி விட்டு வரப்பில் இருந்த மரத்தின் நிழலில் படுத்துவிட்டனர்...

வேலுவோ தனது போனில் படம் பார்க்க என்னடா பாக்குற என்றார் பிரகாசம் தாத்தா..

இப்போ உனக்கு என்ன வேணும் என்றான்...

அது வந்துடா தொண்டலாம் காஞ்சி போய் கிடக்கு என்கவும் அதுக்கு என்ன பண்ணனும் வேணும்னா கொஞ்சம் யூரியா திங்குறியா என்று வேலு சொல்லு மற்றவர்களோ அவன் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்து விட்டனர்..

சற்றுத் தள்ளி படுத்திருந்த பெருமாளும் தனது தங்கை மகன் சொன்னதை கேட்டு சிரித்துவிட்டார். அவர் சிரிப்பதை பார்த்து அட கடவுளே இந்த வெட்டருவாங்க இருக்குன்னு தெரியாம நம்ப வேற வாயை கொடுத்துட்டோமே என்றான்...

அப்பொழுது தூரத்தில் செல்வியும் வள்ளி அப்பாயியும் இரண்டு கூடைகளோடு வருவது தெரிய... ரெண்டு பேரும் எதுக்கு இந்த வெயில்ல வராங்க என்று கதிர் சொல்லும் போது படுத்திருந்த வேலுவோ எழுந்திருந்து பார்த்தவன் வேகமாக அவர்களை நோக்கி போனவன், எதுக்கு செல்லம் இந்த வெயில் அலைஞ்சிட்டு கிடக்கிற என்கவும். ..இல்லை யா வெயில் அதிகமாக இருக்கு...

அதான் உன் அத்தை கிட்ட சொல்லி கூழ் கரைத்து எடுத்துட்டு வரேன் என்று சொல்லவும் ஆஹ..உன் பாசத்துக்கு அப்படியே எனக்கு புல்லரிக்குது என்று சொல்ல...அது ஒன்னும் இல்ல சொரி சிரங்கா இருக்கும் என்று செல்வி சொல்லவும் ஆமாடி நீ தாண்டி எனக்கு சொரி சிரங்குன்னு வந்து பார்த்த என்று பல்லை கடித்தான்...

ஆமா இப்ப நான்தான் அரிக்குதுன்னு சொன்னேன் என்றாள்...அடியே புடிச்சு வயல்ல தள்ளிடுவேன் சும்மா வாயை மூடிக்கிட்டு வா...

நீ குடு செல்லம் என்று பாட்டி கையில் இருந்த கூடயை வாங்கிக் கொண்டு முன்னே நடந்து போனான் இருவரும் வந்தவர்கள் அங்கிருந்த ஆட்களுக்கு கேழ்வரகு கூழையும் அதற்கு தொட்டுக்கொள்ள மற்ற பொருள்களையும் கொடுக்க இந்த வெயிலுக்கு அது தேவாமிர்தம் போல இருந்தது. ..

அதான் இங்க ரெண்டு எருமைமாடு இருக்கு இல்ல போன் பண்ணி சொன்னாக்க வந்து எடுத்துட்டு போய் இருக்காதா உங்களை யார் இந்த வெயில்ல வர சொல்லுது என்று தாத்தா சத்தம் போட, சகலப்பாடி புருஷன் வயிறு காயுதுன்னு பார்த்துகிட்டு என் செல்லம் எப்படி இருக்கும் சொல்லு என்கவும் உன் பாட்டிக்கு எப்பவுமே என் மேல பாசம் என்று சிரித்தார் பிரகாசம் தாத்தா...

ஹலோ சகலப்பாடி புருஷன் தான் சொன்னேன் தவிர அது ஒன்னும் உன்னை சொல்லல என்னை சொன்னேன் ...

அடேய் எடுபட்ட பயலே எந்திரிச்சேன் மூஞ்சி மொகரையெல்லாம் பேந்துரும் என்கவும் என்ன சகல....செல்லம் உனக்கு மட்டுமா பொண்டாட்டி ஏன் எனக்கு தான் பொண்டாட்டி ஏன் இங்க....

அடேய் வாய மூடுடா என்று தாத்தா கத்தவும் நம்ம ரெண்டு பேருக்கும் பொண்டாட்டின்னு சொல்ல வந்தேன் என்கவும் மற்றவர்களும் அவர்கள் இருவரையும் பேசுவதை கேட்டு சத்தம் போட்டு சிரித்து விட்டனர்.பெருமாள் அந்த இடத்தில் இல்லை என்பதால் தான் வேலு வும் இவ்வளவு தூரம் வாய் கொடுத்தது. ..

வீட்ல தெண்டமா தானே இருக்கீங்க கலை எல்லாம் கொஞ்சம் புடிங்கி போட்டுட்டு போ என்று செல்வியை சொல்ல எனக்கு என்ன தலை எழுத்தா?
நான் ஏன் பண்ணனும் நீயே பண்ணு என்கவும் இங்க பாருடி எதுக்கு எடுத்தாலும் இப்படி எழுத்து எழுத்து பேசுற வேலை வெச்சுட்ட வாய் இருக்காது டி என்று சொன்னான்...ஏன் என் வாய நீங்க எடுத்துக்க போறீங்களா என்க...

நீயே முழுசா எனக்கு தானடி சொந்தம் என்று அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்..மற்றவர்கள் எல்லாரும் போரில் ஓடும் தண்ணீர்ல போய் கொஞ்சம் உடம்பை நனைச்சுட்டு வரோம் என்று சென்றுவிட வேலுவும் செல்வியும் மட்டும் தான் அங்கு இருந்தனர் வள்ளி அப்பாயியும் கதிரும் மற்ற வயல்களை பார்த்து வரோம் என்று சென்று விட்டனர்...

இப்ப எதுக்கு எரிஞ்சி எரிஞ்சு விழுறீங்க?.

ஏய் நான் எங்கடி எரிஞ்சு எரிஞ்சு விழுந்தேன் நல்லா தானே இருக்கேன்..உங்கள பத்தி எனக்கு தெரியாதா என்றாள்..

பின்னர் என்னடி உன்னை வரத்தானே சொன்னேன் நீ ஏன் வரலைடி?.

ஏன் மாமா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா இல்லையா என்றாள்...என்னடி பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டு வருங்கால புருஷன்டி...

வருங்கால புருஷனோ புண்ணாக்கோ அடுத்த விஷயம் தான். ..

அந்த நேரத்தில் வர சொன்னா யாராவது பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்களே என்று முறைத்தாள்.
ஏன்டி நமக்கு தான் கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு ஊர் உலத்தில் அவன் அவன் காதலிக்கலையா நான் என்னடி கல்யாணம் பண்ணிக்க போறவளே தானடி காதலிக்கு கூப்பிடுறேன்...

ஆமா உன்ன பத்தி எனக்கு தெரியாதா என்று வேறு பக்கம் திரும்பி கொண்டு சிரித்தாள்...ஏய் உன் மாமன் சுத்தமானவன் டி கல்யாணத்துக்கு முன்னாடி கண்டிப்பா உன்ன தொட மாட்டேன் நம்பி வரலாம் டி என்று தனது நெஞ்சை தொட்டு சொல்ல ஓஓஓஓ என்றாள்...

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top