• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
559
சீமக்கரை:

மனைவி வீட்டில் இல்லை என்பதை கேட்டு அதிர்ந்தவன் பின்னர் சுதாரித்து எப்படி போனாளென்க,தனியா போறேனு நின்னுச்சிணா.பிறகு நான் தான் போய் விட்டு வந்தேனென்று வளவன் சொல்ல...ம்ம்..அவளோடு வரேனென்று வேகமாய் வாசலுக்கு வந்தவன் மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு அத்தை வீட்டை நோக்கி சென்றவன் சில நிமிடத்தில் வாசலில் போய் வண்டியை நிறுத்தினான்.

அங்கே கயிற்று கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவங்களோ கதிரை பார்த்து வாப்பா என்கவும்,அம்மாச்சி என் பொண்டாட்டி எங்க இருக்காள் என்றான்.

உள்ள தான் யா என்றார்.

ம்ம் என்றவன் விடுவிடுவென உள்ளே போக சமையல் கட்டில் இருந்த கவிதாவிற்கு மருமகன் வருவது தெரிந்து வாய்யா என்கவும் வரேன்த்தை என்றவன் தாமரையின் ரூம் கதவை ஓங்கி தட்டியதிலே திறந்து கொண்டது.

படாரென்ற கதவின் சத்தத்தில் படுத்திருந்தவளோ பதறி அடித்துக்கொண்டு எழ,கதிரோ உள்ளே வருவது தெரிந்தது.

அவனை பார்த்தவள் எதுவும் பேசாமல் வேறு பக்கம் திரும்பி நிற்க,இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள் ரெடியாகி நம்ப வீட்டுக்கு கிளம்பி வர நான் வெளியே நிக்கிறேன் என்று சொல்லியவன் வந்த வேகத்திலே வெளியே செல்ல...தண்ணிப்பா என்றவாறு கவிதா சொம்போடு வர இருக்கட்டும்த்தை.

சீக்கிரம் விருந்துக்கு நாள் பாரு அப்போ வயிறு நிறைய சாப்பிடுறேன் என்றவன், என் பொண்டாட்டிய கூப்பிட்டு போறேன் இதில் உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே என்று தனது தாடியை தடவியபடி கேட்க,அவரோ சாப்பிட்டு போகலாமே என்க...

அவளுக்கு புடிச்சதைதான் ஆக்கிருப்ப அதை தூக்குல போட்டு குடு. வூட்ல போய் சாப்டுக்குறோம் என்கவும்,சரிய்யா என்றவர் மகளுக்காக சமைத்த நாட்டுகோழி குழம்பையும் சூடான சாதத்தையும் தூக்கில் போட்டு வர தாமரையோ முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வெளியே வரவும் மனைவியை பார்த்தவன் சரித்தை நாங்க வாரோமென்க,மகளிடம் பையை கொடுத்தவர் பார்த்து போங்களென்றார்.

கதிரும் வெளியே வந்தவன் அங்கிருந்த கலா சிவசாமியை பார்த்து வீட்டுக்கு கிளம்புறேன் அம்மாச்சி என்க சரிய்யா என்றனர்.

தாமரையோ முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு கதிரின் பின்னாடி போய் வண்டியில் உட்கார புயல் வேகத்தில் கிளப்பியவன் சில நொடியிலே வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

கீழே இறங்கியவள் தயங்கியபடியே உள்ளே போக வண்டி சத்தம் கேட்டதிலிலுருந்து வாசலையே பார்த்துக் கொட்டிருந்த வீட்டினரும் தாமரையை பார்த்து விட்டு மனதிற்குள் சந்தோஷப்பட்டனர்.

நேராக உள்ளே வந்தவள் அங்கிருந்த ராதாவிடம் அம்மா குடுத்தாங்கத்தை என்க,ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த வளவனோ என்ன கவிதாவோட கை மணம் மூக்க தொலைக்குது...

அப்படி என்ன ஆக்கிருக்கு என் அத்தை என்றவாறு எழுந்து வந்தவன் இங்க குடுமாயென பையை வாங்கி உள்ளே இருக்கும் தூக்கு வாளிகளை வெளியே எடுத்து திறந்து பார்க்க,சூடான சாதத்தில் ஆவி பறக்க வாசனைப் பிடித்தவன் நெல்லு சோறு கட்டி இழுக்குது என்றபடி அடுத்த வாளியை திறக்க அதில் நல்லெண்ணெய் மிதக்க நாட்டுக்கோழி குழம்பின் வாசனையை முகர்ந்தவன் கவிதா சமையலுக்கு இந்த நாட்டையே எழுதி வைக்கலாம்...
என்னா கை பக்குவமென்க சீதாவும் ராதாவும் மகனை முறைத்து பார்த்தனர்.

எம்மா... நீங்களே உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க உங்க நாத்தனார் சமையல் நல்லா இல்லையா எங்க உண்மையிலேயே கவிதாவின் சமையல் நல்லா இருக்கும் என்பதை அவர்களால் மறுத்து பேச முடியவில்லை..

சரி போய் ராவுக்கு சோத்துக்கு ஏதாவது வேலையை பார்க்க போறீங்களா இல்ல அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் இப்படி மோட்டுவளையவே பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க போறீங்களா என்று முத்து கேட்க சீதாவும் ராதாவும் இரவு உணவை சமைப்பதற்காக கிச்சனுக்குள் சென்றனர்.

தாமரையும் அவர்கள் பின்னாடியே சென்றவள், அத்தை ஏதோ கோவத்துல இப்படி பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க என்று சொல்ல இருவரும் எதுவும் சொல்லாமல் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தனர்.

அனைவருக்கும் சமைத்து முடித்து டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைக்க வீட்டில் இருந்த ஆண்களும் சாப்பிட வந்து உட்கார்ந்தனர்.

அவர்களுக்கெல்லாம் ராதாவும் தாமரையும் பரிமாற வள்ளி அப்பாயிக்கு சீதா சாப்பாடா போட்டு கொண்டு போய் தட்டில் வைக்க அவரும் சாப்பிட ஆரம்பித்தார்...

சில நொடியில் சென்று தாமரை என்று பெருமாள் கூப்பிட சொல்லுங்க மாமா என்றாள்.இதுவே உனக்கு முதலும் கடைசியமாக இருக்கட்டும்.
தொட்டதுக்கெல்லாம் இப்படி அப்பா வீட்டுக்கு போகணும்னு நினைச்சாக்கு உன் அத்தைங்களும் உன் அம்மாவும் வருஷத்துல முக்காவாசி நாளு அவங்க அப்பன் வீட்ல தான் இருக்கணும்.

இதுவரைக்கும் அப்படி ஏதாவது கேள்வி பட்டாயா என்று கேட்க இல்லைங்க மாமா என்றவளிடம்,அவ்வளவு பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறியே எத்தனை பேரை சமாளிச்சிருப்ப, உன் புருஷன் ஒத்த ஆளை சமாளிக்க உன்னால முடியாதா?.வீட்டுக்கு மூத்த மருமகளா நீ வழிகாட்டுற போலதான் உனக்கு பிறகு வரும் மருமகளுங்க நடந்துப்பாங்க. அதனால பார்த்து நடந்துக்க.

முதல்ல நீ இந்த வீட்டுக்கு வந்த மருமகள். என் தங்கச்சி மகள் என்பது அடுத்துதான் புரியுதா?என கண்டிப்போடு சொல்ல கலங்கிய கண்களோடு மன்னிச்சிடுங்க மாமா என்றாள்.

சரி... வீட்டுக்கு போனியே என்ன விஷயம்னு என் அத்தை வீட்ல யாராவது உன்கிட்ட கேட்டாங்களா?.

யாரும் எதுவும் கேட்கலை மாமா…ம்ம் சரி போ என்றவர் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றார்.

ஒருவழியாக எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை கழுவிவிட்டு கிச்சன் லைட்டை ஆப் பண்ணி அவரவர் ரூமிற்கு சென்றனர்.

தாமரையும் படியில் ஏறி மேலே வந்தவள் கதவிடம் வந்து தயங்கி நிற்க பின்னர் உள்ளே போய்தான் ஆகணுமென்பதால் கதவின் பிடியில் கையை வைத்து திருக திறந்து கொண்டது.

உள்ளே வந்து கதவை தாழ் போட்டவள் மாற்றுடையை எடுத்துக்கொண்டு ரெஸ்ட்ரூமிற்குள் சென்று ப்ரஷாகி வெளியே வர கதிர் பால்கனியில் இருந்து வரவில்லை என்பது தெரிந்தது.

வீட்டிற்கு வந்ததில் இருந்து இதுவரை ஒரு வார்த்தைகூட தன்னிடம் அவன் பேசவில்லை என்பது புரிந்தது.
ஏன் இப்படி இந்த மனுஷன் பண்ணுனாரென்று யோசனையோடு இருந்தவளுக்கு கதவு தாழிடும் சத்தம் கேட்டு நினைவில் இருந்து கலைந்தாள்.

அவளை பார்த்துக்கொண்டே எதிரில் வந்து நின்றவன் ஓங்கி ஒரு அறையை விட கன்னத்தை பிடித்துக்கொண்டே தள்ளி போய் விழுந்தாள்....

ஒரு வாரம் கடந்திருந்தது..

பால்கனி கதவை திறந்து போய் தலையில் கட்டி இருந்த துண்டை அவிழ்தவள் ஈரம் போக நன்கு துவட்டி விட்டு கீழே குனிந்து முடியை அடித்து உதற முடியில் இருந்த ஈரங்கள் எல்லாம் சிதறியது...

அப்பொழுது ராதா வாசலில் சாணம் தெளிப்பது தெரிந்து அத்தை எழுந்துட்டாங்களா சரி போய் சூடா ஒரு டம்ளர் காபியை குடிக்கலாம் என்றவாறு மீண்டும் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தவள் இருபக்கமும் முடியெடுத்து கிளிப்பை போட்டவள் அடி முடியில் முடிச்சையும் போட்டாள்.

பின்னன் ரூம் கதவை சத்தம் இல்லாமல் திறந்து மீண்டும் சாத்திவிட்டு படியில் இறங்கி கீழே வந்தவள் நேராக கிச்சனுக்குள் செல்ல அங்கே சீதா கிரைண்டரில் அரிசி போடுவது தெரிந்தது...

அத்தை என்றபடியே உள்ளே வந்தவளின் குரலை கேட்டவர் அதுக்குள்ள எந்திரிச்சிட்டியா மா...

ஆமாங்கத்தை என்கும் மருமகளை திரும்பிப் பார்த்தவர் அவள் குளித்து விட்டது தெரிந்து அப்போ போயி பிரம்ம முகூர்த்தத்திலேயே சாமி ரூம்ல விளக்கேத்தி வச்சிடு தாமரை என்கவும் சரிங்கத்தை....காபி குடிச்சிட்டு போகட்டுமா என்க, அதற்கு சிரித்தவர் பிளாஸ்கிள் பால் ரெடியா தான் இருக்கு பாரு காபி கலந்து நீ குடிச்சுக்க என்றார்.

நீங்கள் அத்தை என்க...இன்னும் பல்லு விளக்கல நீ குடிமா.ராதாவும் நானும் டீ போட்டுக்குறோம் என்றவர் கிரைண்டர் பட்டனை ஆன் பண்ணி விட்டு உளுந்தை அலசினார்.

அவளுக்கு மட்டும் காப்பியை கலந்து வைத்துவிட்டு அது ஆறுவதற்குள் வீட்டை கூட்டி விடலாம் என்று துடப்பத்தால் வராண்டா முற்றத்தை கூட்டி முடிக்கவும் சூடும் ஆறியது.

பின்னர் குடித்தவள் சாமி ரூமுக்கு சென்று வாடி இருந்த பூக்களை எடுத்துவிட்டு ஃப்ரிட்ஜில் இருந்த பூக்களை கொண்டு போய் மீண்டும் சாமிக்கு வைத்து விளக்கேற்றி வெளியே வர ராதா வாசலை கூட்டி விட்டு உள்ளே வந்தார்.

அம்மாடி தாமரை ஃப்ரிட்ஜில் மல்லிகை பூ கட்டி வச்சிருக்கேன் பாரு தலையில் வை என்கவும் சரிங்கத்தை என்றவள் முதல்ல உங்க ரெண்டு பேருக்கு நான் டீ போடுகிறேன் என்று சொல்ல சரிமா.

அப்ப நான் போய் பாத்திரத்தை துலக்குகிறேன் என்றவர் முதல்நாள் இரவு சாப்பிட்ட பாத்திரத்தை எல்லாம் ராதா துலக்கப் போக இருங்கத்தை நானும் வரேன் என்று ஒரு அடுப்பில் டிகாசத்தை வைத்தவள் பாத்திரத்தை சோப்பில் தேய்த்து தர ராதாவோ கழுவி அங்கிருந்து கூடையில் வைத்தார்.

அந்த நேரம் டீ குடிக்கணும் போல இருப்பதற்காக எழுந்து வந்த பெருமாளுக்கு உள்ளே தனது வீட்டுப் பெண்கள் ஒற்றுமையாக வேலை செய்வதை பார்த்து வளவனோட. மனைவியும் இதேபோல் அவர்களோடு இணக்கமாகணும்.என் குடும்பம் என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அய்யனாரே என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவர் அம்மாடி தாமரை டீ எடுத்துருவாத்தா என்க...அவரின் குரலில் திரும்பியவள் இதோ எடுத்து வரேன் மாமா என்றாள்.

பாத்தியா அக்கா...மாமா இத்தனை வருஷமா ராதா சீதா என்று குரல் கொடுப்பவர் இன்னைக்கு மருமக வந்த உடனே அவங்க கையால டீ குடிக்க ஆசைப்படுறாரு என்று சொல்ல.

ஆயிரம் தான் இருந்தாலும் அவங்க தங்கச்சி பொண்ணு இல்லையா என்று சீதாவும் கிண்டலாக சொல்ல அத்தை என்று இருவரையும் பார்த்து செல்லமாக முறைத்தபடி தாமரை சிரிக்க போ போ மா...

மாமாவுக்கு சூடாக டீயை கொண்டுபோய் குடு இல்லைனா சத்தம் போடுவார் என்றனர். சரிங்க அத்தை என்றவள் ஒரு டம்ளரில் சூடாக டீயை வடிகட்டி எடுத்துட்டு போய் அங்கே சேரில் உட்கார்ந்திருந்த பெருமாளிடம் வந்தவள் இந்தாங்க மாமா என்க...

வாங்கி ஒரு வாய் குடித்தவர் நல்லா இருக்கே.. இது என்ன உங்க அத்தைங்க போடுற போல இல்லையே என்கவும் இன்னைக்கு நான் தான் மாமா போட்டேன் என்றாள்.

அப்படியா நல்லா இருக்குமா என்று ரசித்து குடித்தார்.முத்துவும் பிரகாசம் தாத்தா வள்ளி அப்பாயியும் எழுந்த வர அவர்களுக்கும் கொடுக்க அனைவரும் தாமரையின் டீயை பாராட்டி தள்ளினர்.
சீமக்கரை:

காலை சாப்பாடு முடித்துவிட்டு ஆளுக்கு ஒரு வேலையை பார்க்க வெளியே சென்றனர்.

நிச்சயதார்த்த விழா பொண்ணு வீட்டில் நடப்பதால் வரும் சொந்த பந்தங்களுக்காக சமையலுக்கான பொருட்களை சமையல்காரர் லிஸ்ட் எழுதி கொடுத்திருந்தார்.

அவர் போட்டுக் கொடுத்த லிஸ்ட் படி கதிர் மளிகை கடைக்கும் ஜான் காய்கறி கடைக்கும் சென்றானுங்கள்.

மற்ற வேலைகளை வளவனும் பெருமாளும் பார்த்துக் கொள்ள முத்துவோ ராதாவை அழைத்துக்கொண்டு ஊரில் இருக்கும் அனைவரையும் நாளைக்கு ஃபங்ஷனுக்கு வரும் படி அழைக்க சென்றனர்.

தாமரையும் தைத்த பிளவுஸ் எடுத்துக் கொண்டு தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றவள் பார்வதியிடம் கொடுத்துவிட்டு சிறிது நேரம் அங்கிருந்தவள் பின்னர் வீட்டிற்கு வந்து விட்டாள்.

நேரமும் வேகமாய் ஓடியது..

நாளைக்கு பங்ஷனுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் இரண்டு வீட்டினரும் வாங்கி முடித்தனர்.

இரவு உணவை சாப்பிட்டு முடித்ததும் செல்வி-அல்லி இருவருக்கும் தாமைரையே இரண்டு கைகளிலும் கோன் போட்டு முடித்து நிமிர,அம்மாடி தாமரை இந்தா என்று அம்மியில் அரைத்த மருதாணியை ராதாவும் கொண்டு வந்து மருமகளிடம் நீட்ட சிரித்தவாறு வாங்கியவள் நீங்க போட்டுக் கொள்ளவில்லையா எங்க இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் தாமரை...

உங்க மாமா இன்னும் வரல அவர் வந்த பிறகு கதவை பூட்டிட்டு நானும் அக்காவும் போட்டுக் கொள்கிறோம் என்றவர் செல்வி அல்லி வாங்க படுங்க உங்களுக்கு நான் பாய் போடுகிறேன் என்று மாடியில் இருக்கும் அறைக்கு சென்றவர் இரண்டு பேரும் இரண்டு கைகளிலும் கோன் போட்டு இருப்பதால் பெட்டில் இன்னொரு விரிப்பை விரித்தவர் இதுல படுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு இரவு விளக்கு மட்டும் ஆன் பண்ணிவிட்டு கதவை சாற்றி கீழே சென்று விட்டார்..

தாமரையும் மருதாணியோடு ரூமிற்கு வந்தவள் இரவு உடயை மாற்றிக்கொண்டு தனது இடது கையில் மருதாணி போட்டுக் கொண்டிருந்தவளுக்கு கால் வரும் சத்தம் கேட்டது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
559
பக்கத்தில் இருந்த போனை பார்த்தவள் அட்டென் பண்ணி ம்ம் என்க... என்னடி பண்ணுற?

நம்ப ரூம்கு வந்துட்டியா என்க ம்ம் என்றாள்.என்னடி வாய்ல கொழுக்கட்டடையா? ம்ம் னு சொல்லிட்டு இருக்க என்றவன் பிளைட் வர லேட் டி.எப்படியும் அத்தையை கூப்பிட்டுக் கிட்டு அங்கு வர நாலு மணியாகலாம். அதனால் நீ தூங்குடி..

மனுஷன் ஒருத்தன் வரலையேனு போன் பண்ணனுமென்ற எண்ணம்லாம் கிடையாது இல்லையா என்றான்.

ஆமா இல்லை...

நான் நல்லா நிம்மதியா தூங்குவேனே என்றவளுக்கு போய் தூங்கி தொலைடி என்று சொல்லி விட்டு கதிரும் போனை வைத்தான்.

தாமரையோ சிரித்துக்கொண்டே போனை வைத்து விட்டு மீதமிருந்த விரல்களில் மருதாணியை போட்டவள் அதையெல்லாம் எடுத்து வைத்து விட்டு கதவை தாழிட்டவள் மெத்தையில் வந்து படுக்க தன்னவனின் நினைவு வந்தது

வந்த இத்தனை நாட்களில் இன்று தான் அவள் தனியாக படுத்திருக்கின்றாள். தனது போனில் இருக்கும் கணவனின் போட்டோவை பார்த்தவள் மிஸ் யூ மாம்ஸ் லவ்யூ என்கும் போது கதிரிடமிருந்து வீடியோ கால் வந்தது.

அட்டென் பண்ணியவளுக்கு அவன் முகம் தெரிய ஏய் லைட்டை ஆன் பண்ணுடி என்கவும் ஏனாம் என்றாவளுக்கு ம்ம் என் ரெண்டாவது பொண்டாட்டி உன் பக்கத்தில் படுத்துருக்காள் அவளை கொஞ்சம் சைட் அடிக்கணும் அதான் என்றான்..

ஓஓஓ... அய்யாக்கு ரெண்டாவது பொண்டாட்டி வேற கேட்குதோ என்க... ஆமாடி.. ரெண்டு பேர் இருந்தால் போட்டி போட்டு மாமனை கவனிப்பிங்களே என்கவும் நெனப்பு தான் யா...

வீட்டிற்கு வந்து தானே ஆகணுமென்க... அங்கே கதிரோ தனது மீசையை முறுக்கி விட்டு சிரித்தவனை ரசித்து பார்த்தவள் கொஞ்சம் டிரிம் பண்ணினால் என்னவாம்?

என்னமோ தேவதாஸ் போல இருக்கிங்களே?

பார்ரா....

மேடம் இந்த காட்டானை ரசிக்கிறீங்களோயென்று தாடியை தடவியபடி சிரிக்க... அப்படிலாம் ஒன்னும் இல்லை. நாளைக்கு பங்ஷனிற்கு வரும் சின்ன புள்ளைங்க பூச்சாண்டினு பயந்திட கூடாதில்லையா அந்த நல்ல எண்ணம் மட்டுமே என்றாள்..

ஆஹான்... சரிடி நீ என்னை ரசிக்க வேண்டாம் அவள் ரசிப்பாள் அவ கண்ணுக்கு நான் ஹீரோ தான் டி என்க... எவள் அவளென்று கோவமான தாமரை... ஓஓஓஓ விஷயம் புரிஞ்சி போய்ட்டு...

உங்களையே சுத்தி சுத்தி வந்து இன்னும் கல்யாணம் பண்ணிக்காமல் இருக்கும் உங்க தேவியோ என்க ஹாஹாஹாஹா என்று சிரித்தவன் பரவாயில்லையே...

என் பொண்டாட்டிக்கு கொஞ்சம் அறிவு இருக்குதான் என்றவன் இவ வேறடி.. சும்மா கும்முனு பழுத்த நெல்லு போல இருப்பாளென்றவன் மேலும் மனைவியை வெறுப்பேத்தி விட்டே போனை வைத்தான்.


நீலகிரி:

கோழி குண்டு கண்களை வைத்து உருட்டியபடி தன்னை முறைத்து பார்ப்பவளை கண்ட மருதுக்கு மனைவியின் மீது மோகம் வர சொன்னா கேட்க மாட்டியாடி என்றவாறு பட்டென்று அவள் உதட்டோடு தனது உதட்டை பொருத்தினான். .

செல்லாவோ தனது மாமனின் அதிரடியில் ம்ம் என்றபடி தலையை அசைக்கவும் கதவு தட்டும் சத்தமும் கேட்டது.செல்லாவோ கணவனை விலக்க ப்ச் என்றவாறு மனைவியின் உதட்டை விட்டு பிரிந்தவன் என்னடி என்க...வேறு பக்கம் திரும்பி நின்றவள் கதவு தட்டும் சத்தம் காதில் விழவில்லையா என்று கேட்டாள்...

என் பொண்டாட்டிக்கு ஆசையா ஒரு முத்தம் கொடுக்க கூட விட மாட்டேன்கிறார்களே என தலையை கோதியவன் யாருனு தெரியலையே என்று சொல்லியபடி போய் கதவை திறக்க அங்கே இருப்பவளை மருதும் எதிர்பார்க்கவில்லை வெளியே நின்ற பவியும் மருது கதவை திறப்பான் என்று எதிர்பார்க்காதவள் ஒரு நொடி திக்கென்று அதிர்ந்து போனாள்.

பின்னர்...செல்லம் உன்ன பாக்க யாரோ வந்திருக்காங்க வெளியே போய் பாரென்று திரும்பி நின்று சொல்லவும் யார் என்று வந்தவள் வழியை மறைத்து நிற்பவனை பார்த்து செல்லமாக முறைக்க, உதட்டை குவித்து முத்தம் கொடுப்பது போல் சைகை செய்தான்...

மாமா என்று பல்லை கடித்தவள் கண்ணாலே விளகுங்கள் என்று சொல்ல இது எல்லாம் மருதுக்கு பின்னாடி நின்றிருந்த பவிக்கு செல்லாவின் முகத்தில் தெரியும் வெட்கமும் அவள் சைகையும் தெரியவும் பற்றிக் கொண்டு வந்தது..

வழி விடுங்க மாமா என்று சொல்ல போ என்று லேசாக விலகி நின்றான்.பெரிய மனது பண்ணி தன்னவன் விட்ட வழியில் போனால் நிச்சயமாக தனது மாமனோடு நன்கு உரசியபடி தான் செல்ல வேண்டும் என்பது செல்லாவிற்கு புரிந்து என்ன மாமா விளையாட்டு என்று சிணுங்கினாள்.

இதையெல்லாம் அங்கிருந்த பவியால் கேட்க முடியவில்லை.செல்லா நான் ஹால்ல இருக்கிறேன் நீ வா என கடுகடு என்று சொல்லிவிட்டு சென்றாள்.

ஏன் மாமா இப்படி பண்றீங்க?

வந்தவங்களை உள்ள அனுப்ப வேண்டியது தானே அதை விட்டுட்டு இப்படி வாசல்லையே நிக்க வச்சு போக வச்சுட்டீங்களே என்று செல்லா முறைக்க..

இங்க பாருடி யார் யார் ரூமுக்குள்ள வரணுமென்று ஒரு வரைமுறை இருக்கு புரியுதா. பேச்சு வார்த்தை வெளியிலயும் ஹால்லையும் இருக்கட்டும்.

அதைத் தாண்டி வீட்டுக்குள் கூப்பிடுகிற வேலை இருக்க கூடாது என்று கடுமையாக சொல்லிவிட்டு மருது அங்கிருந்து சென்று விட்டான்....!!

சோபாவில் உட்கார்ந்து இருந்த பவிக்கு வீட்டில் இருக்கும் அலங்காரத்தை பார்த்தும்,செல்லாக்கு வந்திருக்கும் சீர்வரிசை பொருட்களை பார்த்து பொறாமை தாங்க முடியவில்லை.

அவள் ஒருத்தி அங்கிருப்பதை கண்டுகாமல் மயிலாவும் வேதாவும் வந்தவர்களை கவனித்து அனுப்புவதில் மட்டுமே கவனத்தை செலுத்தினர்.

மருதுவின் கல்யாணத்திற்காக மயிலாவே நேரடியாக போய் பவியின் தாத்தா பாட்டியை கூப்பிட்டிருந்தார்.அப்பொழுது தான் கணவனோடு பைக்கில் வந்து இறங்கிய பவி குழந்தையை பாட்டியிடம் கொடுத்துவிட்டு ஸ்கூலுக்கு போக போனவளிடம் மருதுக்கு கல்யாணம் என்கவும் அப்படியா என ஆச்சர்யமாக கேட்டாள்.

முடிஞ்சா வரேன்மா என்க சரிமா என்றார்.

அதேப்போல் பவியின் தாத்தா பாட்டி இருவரும் மருதுவின் திருமணத்திற்கு வந்திருந்தனர்.கடந்த இரண்டு நாட்களாக அந்த மலைவாழ் மக்களின் பேச்சோ மயிலா தன் மருமகளுக்கு வாங்கிய நகைகளை பற்றியும் இன்று நடந்த திருமண ஆடம்பரத்தை பற்றி சொல்லியதை கேட்டவளுக்கு இந்த ஆட்டுகாரிக்கு அப்படி என்னத்தை அந்த கிழவி வாங்கியிருப்பாள்?

என்னைவிட அதிகமாக நகை போட்டுருக்காளோ? ம்கும் குடிசை வீட்ல இருப்பவளுக்கு நகைக்கு எங்க வக்கு இருக்க போகுது.

இந்த மக்களுக்கு 1 கிராம் நகையே பெருசு என்று இளக்காரமாக நினைத்தாலும் அப்படி என்ன செல்லாவுக்கு மயிலா நகை வாங்கி இருக்கிறார் என்று பார்க்கும் ஆர்வம் வர,வீட்டில் இருந்து கிப்ட் எடுத்துக்கொண்டு குழந்தையை பாட்டி இடம் விட்டு விட்டு இங்கு வந்து விட்டாள்.

அங்கு வந்த செல்லாவோ வாங்க கா என்க, ஹம்...ஹாப்பி மேரேஜ் லைப் என்று தன்னிடம் உள்ள கிஃப்டை நீட்ட தேங்க்ஸ் என்று வாங்கிக் கொண்டாள்....

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top