• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 28, 2024
Messages
11
1000092522.jpg



உறக்கம் கலைந்து எழுந்து கண்ணாடி முன் வந்து தன் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை பார்த்தவளின் முகத்திலோ புதிதாக திருமணமான பெண்ணுக்கு உரிய ஆர்வம் சந்தோசம் எதுவுமே இல்லாத உணர்ச்சிகளை துடைத்த முகம் போல் வெறுமையாக காட்சி அளிக்க, மாங்கல்யத்திலிருந்த தன் பார்வை அகற்றி கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை கண்டு விரக்தி புன்னகையை வீசியவளின் எண்ணமுமோ தன் கனவுகளை எண்ணியிருக்க அந்நேரம் அவள் திறன்பேசியில் மின்னஞ்சல் வந்ததில் எழுப்பிய சத்தம் கேட்டு நிகழ் உலகத்திற்கு வந்த பாவையோ தன் திறன்பேசியில் வந்த பதிவை காண,

"உங்களுக்கு நன்றாக பாட வருமா.. திரைப்படத் துறையில் பாடகராக கால் பதிக்க வேண்டும் என்பது உங்களின் கனவா.. அப்படிப்பட்டவர்களின் கனவை நிஜமாக்கவே ஸ்டார் மியூசிக் அசோசியேஷன் மூலம் புதிய திறமையான பாடகர்களை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் நடத்தும் ஆல்பம் சாங்கிற்கான ஆடிஷன் இதோ.. அதில் மூன்று சுற்று போட்டி வைத்து இறுதியாக மூன்றாவது சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று வெற்றியாளர்களுக்கு ஸ்டார் மியூசிக் அசோசியேஷன் மூலம் பல ஆல்பம் சாங் பாடல்கள் பாட வாய்ப்பு கிடைக்கும்.. இதனால் புகழ் பெற்ற உங்கள் குரல் வளத்தால் ஒரு படி மேல் சென்று திரைப்படத்துறையில் பாடகராக மாறும் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை..


இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உங்கள் எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்றால் உங்கள் பொன்னான குரலால் பிடித்தமான பாடல் ஒன்றை தேர்ந்தெடுத்து பாடி பதிவு செய்து, எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் அப்படி அனுப்பி வைக்கப்படும் பாடல்களில் நாங்கள் தேர்ந்தெடுக்கும் 15 பாடல்களை பாடியவர்கள் மட்டுமே முதல் சுற்றில் பங்கு பெற முடியும்..


தாமதிக்காமல் நாங்கள் அளித்த இரண்டு மாத கால அவகாசத்துக்குள் உங்கள் குரலை அனுப்பி வைத்து, வருங்கால சிறந்த பாடகராகும் கோல்டன் ஆப்பச்சூனிட்டியை மிஸ் பண்ணிடாதீங்க" என்ற பதிவை முழுவதும் பார்த்தவளுக்கோ துளி துளியாக கண்களிலிருந்து நீர் வடிய, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு நிதானத்திற்கு வந்தவளோ, கண்களை அழுத்தி துடைத்து கதவை திறக்க,


"என்னமா தேவகி.. நல்லா ரெஸ்ட் எடுத்தியா.. இப்போ தல வலி எப்படி இருக்கு.."


"இப்போ பரவாயில்ல அத்தை"

"இன்னைக்கு தான கல்யாணம் முடிஞ்சு இருக்கு.. இன்னும் சம்பிரதாயம் மறுவீடுன்னு அலைச்சல் இருக்கும் எல்லாம் முடிஞ்சி ஒரு வாரத்துல உங்க ரெண்டு பேரையும் சென்னை அனுப்பி வச்சிடுவோம்.. அது வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா"

"புரியுது அத்த.. நான் பாத்துக்குறேன்"

"சரிமா.. சாப்பிட்டுட்டு ஃப்ரெஷாகி ரெடியா இரு.. 10.30க்கு மேல நல்ல நேரம் நானே உன்ன கூட்டிட்டு போய்.. அவன் ரூம்ல விடுவேன்.." என்று கூறி மருமகளுக்காக கொண்டு வந்த உணவை அவளிடம் கொடுத்துவிட்டு விடை பெற்றார்.

அவர் சென்றதும் உணவு தட்டுடன் படுக்கையில் அமர்ந்தவளுக்கோ, இன்றே வாழ்க்கையை தொடங்க வேண்டுமா என்று நினைக்கையில் உணவு தொண்டைக் கீழ் இறங்க மறுக்க, வேறு வழியின்றி சாப்பாடை முழுங்கி உள்ளே தள்ளியவளுக்கோ, அதற்கு மேல் அழுகை கட்டுப்படுத்த முடியாததால் வேகமாக குளியல் அறைக்குள் புகுந்து ஷவர் மூலம் வரும் தண்ணீரை திறந்துவிட்டு தண்ணீருடன் கண்ணீரையும் சேர்த்து கொட்டினாள்.

குளித்துவிட்டு வெளியே வந்து காட்டன் புடவையை கட்டிக்கொண்டு சிறிய ஒப்பனையில் தன்னை அலங்கரித்துவிட்டு மாமியாரின் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள்.

சரியாக நல்ல நேரம் தொடங்கவும் பால் செம்புடன் மருமகளின் அறைக்கு வந்தவரோ பால் செம்பை மருமகளின் கையில் கொடுக்க, அவளோ மாமியார் காலை தொட்டு வணங்கியதும்

"நல்லா இருமா.. ரெண்டு பேரும் இன்னையிலிருந்து திருமண வாழ்க்கைய தொடங்கி தீர்க்காயுசுடன் சந்தோஷமா வாழனும்" என்று கூறி ஆசீர்வதித்து, மருமகளுக்கு சொல்ல வேண்டிய அறிவுரை அனைத்தும் கூறி தன் மகனின் அறைக்கு வழியனுப்பிவிட்டு விடை பெற, பெண்ணவளும் படப்படப்புடனே கணவனின் அறைக்குள் நுழைந்தாள்.

தன்னை வரவேற்ற வெற்று அறையில் கண்களை சுழலவிட்டவாறு படுக்கை அருகே வந்த கணம், அவளின் கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிற்றுக்கு சொந்தக்காரனான கதிர்வேலன் குளியல் அறையிலிருந்து வெளியே வந்து மெல்ல அடி எடுத்து பெண்ணவளை நோக்கி நகர, அவன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதே இதயம் ஏறி இறங்கி துடிக்க, பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அவள் எதிரே வந்தவனோ "நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று தான் கூறியதை கேட்டு மெல்ல கண்களை திறந்தவளை கண்டு "உக்காரு" என்பது போல் படுக்கையில் கண்ணை காட்ட, அவளும் பயந்தவாறே அமர்ந்து நிமிர்ந்து அவனை நோக்க,

"ஓகே.. நான் சொல்ல வேண்டிய விஷயத்த நேரடியா சொல்லிடுறேன்.." என்று இதழ் குவித்து ஊதியவனோ "எனக்கு இப்போ வர கல்யாணத்துல கொஞ்சமும் இன்டர்ஸ்ட் இல்ல.. வீட்டுல ஃபோர்ஸ் பண்ணினதுனால தான் வேற வழியில்லாம ஓகே சொல்ல வேண்டியதா போச்சு.. இன்டரெஸ்ட் வந்தா.. நானே உன்ன தேடி வருவேன்.. அதுவர நீ உன் வேலைய பாரு.. நான் என் வேலைய பாக்குறேன்" என்று காட்டத்துடன் கூற,


அவன் குரலில் பதறியவளோ "புரியுது.." என்று திக்கி திக்கி கூற,

"குட்.. இன்னும் ஒரு வாரத்துல சென்னை கிளம்பிடலாம்.. அதுக்கு அப்புறம் நீ எப்போவும் போல காலேஜ் போகலாம்.. தென்.. நானே உன்ன காலேஜ்ல ட்ராப் பண்ணி பிக்அப் பண்ணிப்பேன்.. எனி டவுட்ஸ்"

"இல்லை" என்ற ரீதியில் தலையசைத்தவளிடம் "ம்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீ தூங்கு" என்று கூறிவிட்டு புத்தகம் மற்றும் மடிக்கணினியுடன் ஓரமாக அமர்ந்துவிட, ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டு படுக்கையில், ஒருபுறம் படுத்தவளோ திறன்பேசியை கையில் எடுத்து பாடகருக்கான வந்த பதிவின் மின்னஞ்சலையும் கணவனையும் கேட்கலாமா வேண்டாமா என்று ரீதியில் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தவளின் எண்ணமோ இதுவரை தான் பாட்டு பாடியதில் பெற்ற வெற்றி நிகழ்வுகள் அனைத்தும் கண் முன்னே தோன்றியதை நினைத்தவாறே அப்படியே உறங்கியும் போனாள்.


தேவகி லட்சியம் கனவு உயிர் அனைத்துமே பாட்டு பாடுவது தான் சிறு வயதிலே அன்னையை இழந்தவள் ஆதலால் தந்தையே தாயுமாக இருந்து அவளை வளத்தார்.

படிக்கும் வயதிலே பாட்டின் மீது ஆர்வம் வந்ததால் தந்தையின் அனுமதியோடு இசை சமந்தப்பட்ட அனைத்தையும் பள்ளி பருவத்திலே கற்று தேர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து அனைத்திலும் வெற்றி வாகை சூடினாள்.

அவள் கல்லூரியில் கால் பதித்த சமயம் பாடுவதில் ஈர்ப்பு பெருகி திரைப்படத்துறையில் பாடகராக வேண்டும் என்று ஆசை வந்து, அந்த ஆசையே கனவாக மாறி வாழ்க்கை லட்சியமாக மாறியது.

தேவகி நன்றாக படிக்கும் பெண், படித்து கொண்டே சினிமா துறையில் பாடகராக கால் பதிக்க தேவையான முயற்சிகளை செய்ய தொடங்கினாள்.

அதோடு வீட்டிற்கு ஒரே பிள்ளை தாய் வேறு இல்லாத காரணத்தினால் கல்லூரி பருவம் முடிய கண்டிப்பாக தந்தை திருமணம் செய்து வைத்துவிடுவார்,


திருமணம் வாழ்க்கைக்குள் நுழைந்தாள் அனைத்தும் தோல்வி அடைந்து விடும் ஆதலால் கல்லூரி பருவத்திலே எப்படியாவது லட்சியத்தை அடைந்து விட போராடியே ரெண்டு வருட கல்லூரி படிப்பை முடித்து மூன்றாம் வருடத்தில் அடி எடுத்து வைக்கும் போது, அவளின் ஜாதகத்தில் இந்த வருடத்தில் திருமணம் முடிக்கவில்லை என்றால் ஆறு வருடம் கழித்து தான் திருமணம் நடக்கும் என்று ஜோசியர் கூறியதை கேட்டு மகளுக்கு வரன் பார்த்ததில் மகளின் ஜாதகத்திற்கு கதிர் வேலனின் ஜாதகம் பொருந்தியதில், மகளை வற்புறுத்த அவளோ படித்து முடிக்கும் வரையாவது திருமணத்தை தள்ளி வைக்க கோரி கெஞ்ச, அவர் முடிவில் மாற்றம் இல்லாததால்,

இப்போது திருமணம் செய்து கொண்டு லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் கவலையுடனே கல்யாண மறுவீடு எல்லாம் முடித்துவிட்டு குடும்பத்தினரிடம் விடை பெற்று கணவனுடன் சென்னை வந்து சேர்ந்தாள்.

மறுநாள் கணவனின் காரில் கல்லூரி வந்தடைந்தவள் முதல் வகுப்பிற்கு நேரமானததால் கணவனிடம் கூட கூறாமல் வேகமாக அவளின் வகுப்பை நோக்கி சென்று அமர்ந்த, சிறிது நிமிடத்தில் தன் வகுப்பிற்கு பேராசிரியராக வந்த கணவனை கண்டு விழிகள் விரித்து உறைந்து விட, மனைவின் செயலை கண்டு இதழ் கடித்து சிரிப்பை கட்டுப்படுத்திவிட்டு, தன் வேலையில் கவனத்தை செலுத்தினான்.

கல்லூரி நேரம் முடியவும் மனைவியுடன் காரில் வீட்டை நோக்கி அமைதியாகவே பயணித்து கொண்டிருந்தவனோ
"என்னப்பத்தி.. உன் அப்பா எதுவுமே சொல்லலையா" என்று சாலையில் கவனத்தை பதித்த கணவனை கண்டு ஒரு நொடி புரியாமல் விழித்தவள், பின் அவன் எதை கேட்கிறான் என்பதை உணர்ந்து இரு பக்கமும் தலையாட்ட,

அதில் மெல்ல புன்னகைத்தவனோ "என் பெயராவது தெரிஞ்சி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா" என்று நக்கலாக கேட்டதில் தலை குனிந்தவளை கண்டு முகம் இறுகியதில் அமைதியாக, பின்


"ஐ அம் கதிர்வேலன்.. நான் உன் காலேஜ்ல புரோபோஸரா ஒன் இயரா வொர்க் பண்றேன்.. என்னோட கிளாஸ் அதிகமா ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ்க்கு மட்டும் தான்.. அதுனால நீ அதிகமா என்ன பாத்துருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்" என்று கூற, அவன் கூறியதை அமைதியாக பெண்ணவளும் கேட்டுக் கொண்டாள்.

இப்படியே இருவரும் அதிகம் பேசிக்கொள்ளமல் கல்லூரி சென்று வருவது வீட்டியிலுள்ள வேலைகளை சமமாக பிரித்து இருவரும் செய்வது என்று நாட்கள் நகர நகர பெண்ணவளுக்கோ கணவனின் மேல் நல்ல அபிப்ராயம் வர, பெண்ணவள் அவனுடன் நட்பாக பேசினாலும், அளவாக பேசியே நிறுத்தி விடுவான்.

அதோடு மனைவின் மாதவிடாய் காலங்களில் அவளுக்கு தேவையானதை கண்ணும் கருத்துமாக செய்து தாய் குழந்தையை அரவணைப்பது போல் அரவணைத்து கொண்டான்.

இப்படியே மூன்று மாதங்கள் கழிந்திருக்க, கணவனின் செயலிலும் பேசிலும் பண்பிலும் கவரப்பட்டு அவளை அறியாமலே ஈர்ப்பு ஏற்பட்டது

வழக்கம் போல் விடுமுறை நாளில் கணவனுடன் பகிர்ந்து செய்யும் வேலையெல்லாம் செய்துவிட்டு கல்லூரி பாடங்களை படிக்க அமர்ந்த சமயத்தில் தன்னிடம் சிறிய பார்சலை நீட்டிய கணவனை என்ன என்று நிமிர்ந்து பார்க்க,

"பிரிச்சி பாரு"

அவளும், அதை வாங்கி பிரித்ததுமே அதிர்ந்து விழித்தவளின் கண்களில் துளி துளியாக விழுந்த கண்ணீருடனே


"வாழ்த்துக்கள் திருமதி தேவகி கதிர்வேலன் ஸ்டார் மியூசிக் அசோசியேஷன் ஆல்பம் பாடலுக்கான போட்டியில் தேர்ந்ததெடுத்த 15 பாடல்களை பாடியவரில், நீங்களும் ஒருவர் என்று மகிழ்ச்சியுடன் கூறி கொள்கிறேன்.

போட்டிக்கான முதல் சுற்றிற்கு ரெண்டு மாதமே கால அவகாசம் அதோடு நாங்கள் கீழே குறிப்பிட்டிருக்கும் போட்டிக்கான இடம் நேரம் அனைத்தையும் நினைவில் கொண்டு வருகை தந்து, அடுத்த சுற்றிலும் வெற்றி பெற எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இப்படிக்கு ஸ்டார் மியூசிக் அசோசியேஷன்" என்று வாசித்து முடித்த நொடி கணவனை இறுக்கி அணைத்து அழுதே விட்டாள்.
 
Last edited:
Joined
Nov 28, 2024
Messages
11
சிறிது நேரம் அழுக விட்டவனோ, அவள் கன்னம் ஏந்தி கண்ணீரை துடைத்துவிட்டு "என்கிட்ட சொல்ல உனக்கு இஷ்டமில்லன்னு தெரியும்.. ஆனாலும், உண்மை தெரிஞ்சி என்னால சும்மா வேடிக்கைப் பாக்க முடியல"

"சாரி.. சொல்ல கூடாதுன்னு நினைக்கல ரெண்டு மூணு தடவ சொல்ல டிரை பண்ணேன்.. அதுக்கு, அப்புறம் இப்படி ஒரு போட்டி பத்தியே மறந்துட்டேன்" என்று கூறிவிட்டு, அவள் ஏதோ கேட்க வருவதை உணர்ந்தவனோ


"ஓகே பைன்.. நல்லா பண்ணு ஆல் த பெஸ்ட்" என்று கூறி சென்றான்.

ஒருவழியாக, ஒரு மாதம் கழிந்து முதல் சுற்றிற்கான நாளும் வந்து விட, பதற்றத்துடனே கணவனுடன் காரில் பயணிக்க, அதை கண்டு கொண்டவனோ அவளின் கரத்தை இறுக பற்றி "எதுக்கு இப்படி டென்ஷனாகுற.. கண்டிப்பா நெக்ஸ்ட் ரவுண்ட் செலக்ட் ஆகிடுவ.. ரிலாக்ஸ்"

கணவன் தொடுதலில் பதற்றம் குறைந்து அவனை கட்டியணைக்க கைகள் பரபரக்க, முதல் முறை உணர்ச்சிவசத்தில் தன்னவனை கட்டியணைத்த நினைவுகள் வேறு வந்து பெண்ணவளை வெட்கப்பட வைத்து கன்னத்தை சிவக்க செய்ய, அதை ஆடவனும் கவனித்தவாறே, விட வேண்டிய இடத்தில் இறக்கி விட, அவளும் கூறிவிட்டு கணவனிடமிருந்து விடை பெற்றாள்.

வெற்றிக்கரமாக முதல் சுற்றியில் கலந்து அங்கிருந்த நடுவர்களால் ரசிக்க பெற்ற தன் குரல் வளத்தால் வெற்றி பெற்று அடுத்த மாதம் நடந்த ரெண்டாவது
சுற்றிலும் வெற்றி பெற்று, அதுக்கு அடுத்த மாதம் நடக்கயிருக்கும் மூன்றாவது சுற்றுக்காக ஆவலுடன் காத்திருந்தாள்.

போட்டியில் கவனத்தை செலுத்தினாலும் படிப்பில் கவனத்தை சிதற விடாமல் அதிலும் கெட்டிக்காரியாகவே திகழ்ந்தாள்.


இந்த முறை விடுமுறைக்கு மதுரைக்கு சென்று அவரவர் பெற்றோரை பார்க்கலாம் என்று முடிவெடுத்து, முதலில் மனைவியின் வீட்டியில் ஒருநாள் தங்கிவிட்டு மறுநாள் தன் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

இருவரும் வீட்டிற்கு வந்ததில் குஷியான அவனின் தாயோ வாயுக்கு ருசியாக சமைத்து தன் ஆசை தீர அவர்களுக்கு பரிமாறி சாப்பிட வைத்தார்.

சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்று கணவனுடன் ஓய்வெடுத்தவளோ உறக்கம் கலைந்து மாலை நேரம் வெளியே வந்தத்தில் வீட்டிற்கு விருந்தாளி வந்திருப்பதை கவனித்து மரியாதையாக அவர்களிடம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்க,

"என்னம்மா வீட்டுல எதுவும் விசேஷம் உண்டா" என்று கேட்க,

அவள் பதில் கூற திணறுவதை கண்ட மாமியாரோ "தேவகி.. நைட் டிராவல் இருக்கு தான.. நீ போய் ரெஸ்ட் எடு" கூறிவிட்டு வந்திருந்தவர்களின் புறம் திரும்பியவரோ "சின்ன பொண்ணு தான படிச்சி முடிச்சிட்டு மெதுவா குழந்தை பெத்துக்கட்டும்.. அது அவங்க தனிப்பட்ட விஷயம் நம்ம தேவையில்லாம தலையிட வேண்டாம்.." என்று கூற, அதற்கு மேல் அவர்களும் எதுவும் பேசாமல் கிளம்பி விட, மாமியார் தனக்காக பேசியதை கேட்டு வருத்ததுடன் அறைக்கு வந்தவளிடம் கதிரோ "என்னாச்சி.."

அவளும் நடந்ததை கூறிவிட்டு "அத்தைக்கு.. அவங்க கேட்கும் போது வருத்தமா இருந்திருக்கும் தான" என்று இதழ் பிதுக்கி கேட்கும் மனைவியை கண்டு, கரம் பற்றி மெல்ல புன்னகைத்தவனோ

"நான் அம்மாகிட்ட ஏற்கனவே பேசிட்டேன்.. எனக்கு அவ மேல லவ் வருகிறவவர குழந்தை பெத்துக்க ஐடியா இல்ல.. அட்லீஸ்ட் அவ படிச்சி முடிக்கிற வர வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன்.. அம்மாவும் என் இஷ்டம்ன்னு விட்டுட்டாங்க.. சோ எதையும் நினைச்சி வொர்ரி பண்ணாம பாட்டுல கன்சென்றேட் பண்ணு"

"நான் படிச்சி முடிக்கிறதுக்குள்ள உங்களுக்கு.. என்மேல லவ் வந்துருமா என்ன"

"வரலாம்.. வரலாமலயும் போகலாம்" என்று நக்கலாக கூற, அவ்வார்த்தை பெண்ணவளின் மனதை வாட்டியது

அன்று இரவே சென்னை திரும்பி வழக்கம் போல் நாட்கள் நகர ஆரம்பிக்க கணவன் மீது உள்ள காதலையும் உணர ஆரம்பித்த பெண்ணவளோ விருப்பத்தை கூற நேரம் பார்த்து காத்திருக்க, மூன்றாம் சுற்றிற்கான நாளும் வந்து விட, அதில் பாடி முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றவளை பாராட்டி பரிசு வழங்கியதோடு ஸ்டார் மூசிக் அசோசியேஷன் மூலம் ஆல்பம் சாங் பாடும் வாய்ப்பும் கிடைக்க, அன்றைய நாள் வெற்றியை கணவனுடன் கழித்து மகிழ்ந்தாள்.

அந்த ஆல்பம் சாங் பாடி மக்களின் மத்தியில் தன் குரல் வளத்தால் அவர்களை கவர செய்து மேலும் பல பல ஆல்பம் பாடல்கள் பாடி வெற்றி கண்டு, அதன் மூலம் திரைபடத்துறையிலும் பாட வாய்ப்பு கிடைக்க, பாடி அவளின் வாழ்க்கை லட்சியத்தையும் அடைந்தவளோ, அடுத்த ஐந்து மாதத்தில் கல்லூரி படிப்பையும் முடித்து தேர்ச்சி பெற்றவளுக்கு அனைத்து வெற்றிக்கும் காரணமான கணவன் மேல் காதல் பன்மடங்கு பெருகியது.

புது படத்திற்கான பாடல் பதிவு முடிந்து பாடல் வெளியீட்டிருக்கான விழா மூன்று நாட்களில் அரங்கேற இருப்பதால் கணவனிடம் பகிர்ந்து அவனை வருமாறு அழைத்தவள், மாலையே அதற்கான ஷாப்பிங்கையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவளோ கணவனின் வரவுக்காக காத்திருந்தாள்.


இன்றே தன் காதலை வெளிப்படுத்தி விடலாம் என்று எண்ணி நீல நிற புடவை உடுத்தி சிறிய ஒப்பனையில் தன்னை அலங்கரித்துவிட்டு, அவனுக்கு பிடித்த மாதிரி இருக்கிறோமா என்று கண்ணாடியில் சரி பார்த்தவாறே "அவருக்கு என்மேல காதல் வந்துருக்குமா?.. அவருக்கு என்ன பிடிக்குமா?.. ஒருவேளை நான் காதல் சொல்லி மறுத்தட்டா?.. பிடிக்காமலா எனக்கு பாத்து பாத்து பன்றாரு.. அப்போ பிடிக்கும் தான?" என்று தனக்கு தானே கேள்வி எழுப்பியவளோ "என்ன ஆனாலும் சரி.. இன்னைக்கு என் காதல சொல்லியே தீருவேன்" கூறி முடிக்கவும் உள்ளே வந்தவனோ,

மனைவியின் அழகை கண்டு விழிகள் பிதுங்கி "அய்யோ.. இவ ஏதோ பிளானோட இருக்கா.. அடியே மூணு நாள் கன்ட்ரோல் பண்ணிட்டு பங்ஷன் முடிஞ்சி மொத்த வித்தையும் கட்டலாம் இருந்தா.. மனுஷன படுத்துறீயேடி.. டேய் கதிர்வேலா கன்ட்ரோல் இழக்காத போய், அப்படியே சமத்தா படுத்து தூங்கிடு" என்று நினைத்தவாறே தலை குனிந்து படுக்கை அருகில் வந்தவனிடம் "நான் உங்ககிட்ட பேசணும்"

"செம டையடா இருக்கு.. நாளைக்கு பேசிக்கலாம்" என்று அவளை பாராமல் கூறிவிட்டு படுக்கையில் படுத்து உறங்கிவிட, அவளும் ஏம்மாற்றம் மற்றும் கோபத்துடன் மறுபுறம் படுத்து உறங்கி விட்டாள்.

இரண்டு நாட்கள் பேசாமலே கழிய, அதற்கு மேல் முடியாதவனாய் விழாவிற்கு தயாராகி கொண்டிருந்த மனைவியின் அருகில் சென்று குரலை செருமியவனோ "இப்போ.. நான் என்ன பண்ணிட்டேன்னு என்கிட்ட பேசாம இருக்குற"

"வேண்டுதல்.." என்று கூறி முகத்தை சுளித்த மனைவியை கண்டு புன்னகைத்தவனோ, அவளை மெல்ல தன் புறம் திருப்பி "தேவ்.." என்று உருக்கமாக அழைக்க,

கணவன் அழைப்பில் மொத்த கோவமும் பறந்து விட, அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

அவனோ "இன்னைக்கு நைட்டு.. நீ ரெண்டு நாள் முன்ன என்கிட்ட சொல்ல நினைச்சதுக்கு பதில் பிரட்டிகலா கொடுக்கிறேன்.. உனக்கு ஓகே வா" என்று கேட்க, தோன்றிய வெட்கத்தை மறைத்துவிட்டு பதில் கூறாமல் அவனை முறைத்து சென்றாள்.

மாலை இசை வெளியீட்டு விழாவிற்கு மனைவி கட்டிருக்கும் கருப்பு நிற புடவைக்கு பொருத்தமாக உடை அணிந்தவனோ மனைவி மேடையில் பேசும் அழகையும் அவளையும் ரசித்தபடி அமர்ந்திருக்க, அப்போது விழா தொகுப்பாளினியோ பாட சொல்லி வற்புறத்த, பெண்ணவளோ கணவனின் கேள்விக்கு பாடல் வழியாக பதில் கூற தொடங்கி,

"லல்லாஹி லைரே லைரே....
காட்டு பயலே கொஞ்சி போடா
என்ன ஒருக்கா நீ........."


என்று முழு பாடலையும் பாடி முடித்து கணவனை பார்த்து கண்ணடிக்க, அவளை இறுக்கி அணைத்து முத்தமிட பரபரத்த மனதை அரும்பாடுப்பட்டு அடக்கியவனோ விழா முடிந்து வீட்டிற்கு வந்து நொடி, அவளை கையில் அள்ளிக்கொண்டு அறைக்கு சென்று அவளுடன் மஞ்சத்தில் சரிந்தவனோ


"ரெண்டு வருஷமா..
உனக்காக வெயிட் பண்ண வச்சிட்டியேடி" என்று கூற, அவளோ விழி விரித்து "ரெண்டு வருஷமா.." என்று கேட்பதற்குள் பாதி வார்த்தையை இதழ் வழியே, அவன் வாங்கி கொண்டான்.

அவளை மொத்தமாக களவாடிவிட்டு
காதருகில் "ஹேப்பி அணிவர்சரி
சிங்கர் தேவகி கதிர்வேலன்" என்று கூற பதிலுக்கு வாழ்த்து கூறியவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்ற கணவன் மார்பில் தஞ்சம் புகுந்தவளோ "ரெண்டு வருஷமா வெயிட் பண்ண வச்சிட்டேன்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம்"

"என் தேவ ரெண்டு வருஷமா லவ் பண்றேன்னு அர்த்தம்" என்று தான் கூறியதை கேட்டு விழிப்பவளின் கண்களில் இதழ் பதித்தவனோ "நீ செகண்ட் இயர் படிக்கும் போதே உன்மேல எனக்கு லவ் வந்துருச்சு.. சரி படிச்சி முடிச்சதும் லவ் சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு பாத்தா.. அதுக்குள்ள உங்க வீட்டுல வரன் பாக்குறாங்கன்னு நீ ப்ரெண்ட் கிட்ட பேசினது என் காதுல விழுந்துச்சு.. உன்ன விட்டு கொடுக்கிற அளவு நான் தியாகிலாம் இல்ல.. அதான் அம்மாகிட்ட எல்லாத்தையும் பேசி கல்யாணம் பண்ணிட்டேன்" என்று தான் கூறியதை கேட்டு புருவம் சுருக்கி பார்த்தவளின் எண்ணம் புரிந்து

"உனக்கு துளியும் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு தெரியும்.. அதான் எனக்கும் விருப்பமில்லன்னு பொய் சொல்லி படிச்சி முடிக்கிற வர டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு நினைச்சேன்..

அதோட அன்னைக்கு நீ மொபைல கைல வச்சிட்ட தூங்கிட்டியா நான் அத எடுத்து கீழ வைக்கும் போது தான் உன்னோட ஏக்கமும்.. அந்த போட்டி பத்தி தெரிஞ்சிது.. நீயே சொல்லுவன்னு வெயிட் பண்ணினேன்.. அதுக்கு அப்புறம் நீ காலேஜ் பங்ஷன்ல பாடின சாங் வீடியோ காலேஜ்ல கேட்டு வாங்கி.. ஆடியோவா எடிட் பண்ணி செண்ட் பண்ணிட்டேன்"

"இவ்வளவு காதல வச்சிட்டு பொய்யா நடிச்சு.. என்னவிட்டு விலகி இருக்கும் போது கஷ்டமா இல்லையா"

"இருந்துச்சு தான்.. ஆனா, உனக்காக வாழ நினைச்சேன்" என்று ஒரே வரியில் கூற,

அவ்வளவு தான் இவ்வளவு நேரம் அடக்கி வைத்த கண்ணீர் வெளியே வந்துவிட தன்னவனின் முகம் முழுவதும் இதழ் பதிக்க, அவனோ மறுபடியும் அவளை களவாட தொடங்க, அடுத்தடுத்த நாட்களில் இருவரும் காதல் மழையில் நனைந்தார்கள்.

இப்படியே இவர்கள் வாழ்வு செழிக்க வேண்டுமென்று என்று கூறி கதையை நிறைவு செய்கிறேன்.

முற்றும்.

கருத்து: கணவன் மனைவி இருவரும் ஒருத்தருக்காக ஒருத்தர் வாழ்வதால் மட்டுமே இல்லறம் இனிக்கும்.


நன்றி
*****

இப்படிக்கு,
ஆனந்த மீரா😍😍
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
814
கணவன், மனைவி ஒருவரின் மனம் ஒருவர் புரிந்து, விட்டுக்கொடுத்து வாழ்தலே காதல்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்மா 💐 💐 💐
 
Joined
Nov 28, 2024
Messages
11
கணவன், மனைவி ஒருவரின் மனம் ஒருவர் புரிந்து, விட்டுக்கொடுத்து வாழ்தலே காதல்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்மா 💐 💐 💐
நன்றி அக்கா ❤️❤️
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top