Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 190
- Thread Author
- #1
உன் விழியாக நானாகிறேன் - 10
இரயிலில் ஏறி அமர்ந்ததும் கைப்பேசியை எடுக்கலாம் என்று நினைக்கும் போது அவளது மேலாளர் அழைத்து இன்னொரு நிறுவனத்தின் சில கோப்புகளை தயார் செய்ய சொன்னார்.அதனால் அதிலேயே நேரம் செல்ல களைப்பில் தூங்கியும் போனாள்.
விடியற்காலையில் வீட்டிற்கு வந்தவள் மீதம் இருந்த வேலையையும் முடித்து அதை மேலாளருக்கு அனுப்பி விட்டு தன்னுடைய அறையில் படுத்தவள் தூங்கிப் போனாள்.
நல்ல தூங்கி எழுந்தவள் பல்லை மட்டும் துலக்கி விட்டு சோர்வாக சாப்பிட அமர்ந்தாள்.அப்போது வியன்கா ருத்ரன் வாங்கி கொடுத்த பொம்மையை கையில் வைத்துக் கொண்டு “அம்மா எனக்காக வாங்கிட்டு வந்தீங்களா?”
“ஆமாம் நான் வாங்கலாம்னு நினைச்சேன் ஆனால் தர்ஷன் வாங்கி கொடுத்தாரு உன்னை ஒருநாள் பார்க்க வரேன்னு சொல்லி இருக்காங்க” என்றாள்.
அஞ்சலி எல்லாம் கேட்டு விட்டு “யாரும்மா அது?”
“அம்மா சிந்தியா ஹஸ்பென்ட் இருக்காருல்ல மதன் அவரோட ப்ரெண்ட் கல்யாணத்துல வைச்சு பேசினோம் திரும்ப பெங்களூர்ல பார்த்தேன் அவர் தான் வாங்கி கொடுத்தாங்க” என்றாள்.
அவளின் அம்மா எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்.ஆதிரை “அம்மா சீக்கிரமா சாப்பாடு வைங்க ரொம்ப பசிக்குது” என்றாள்.
அவரோ சிரித்துக் கொண்டே காலை உணவையும் காபியையும் அவளுக்கு அருகில் வைத்தவர் “ஆதிரை நீ ரொம்ப அழகா இருக்கே” என்றார்.
இவளோ சாப்பாட்டை வாயில் வைத்தவள் புரியாமல் அம்மாவைப் பார்த்தாள்.உடனே விளையாடிக் கொண்டிருந்த வியன்கா “ஆமாம் அம்மா சிரிச்சிட்டே ரொம்ப அழகா இருக்கீங்கம்மா” என்றாள்.
இவளுக்கோ இவர்கள் பேசுவதை கேட்டு இருந்த சோர்வு போய் கோபம் வந்தது.
“அம்மா நானே இன்னைக்கு குளிக்காமல் வந்து சாப்பிட்டு இருக்கேன் என்னைப் போய் அழகா இருக்கேன்னு சொல்லுறீங்க நானே செம டயர்டுல இருக்கேன் நல்லா டிரஸ் பண்ணிட்டு வரும் போது ஒன்னும் சொல்ல மாட்டிங்க இப்போ என்ன?” என்றாள் கோபமாக…
அதைப் பார்த்து பாட்டியும் மகளும் சிரித்துக் கொண்டே “ஹய்யோ இப்போ யாரு சொன்னா?” என்று அஞ்சலி சொன்னதும் “இதோ உங்க போன்ல இருக்கிற போட்டோவ பார்த்து சொன்னேன்மா” என்று அவளுடைய கைப்பேசியை எடுத்து காட்டினாள்.
சிந்தியாவின் வரவேற்பு திருமண நிகழ்ச்சியில் அவளுடன் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படமாக இருந்தது.அதில் அவள் மட்டும் தான் இருந்தாள்.
அதை அனுப்பியது யார் என்று பார்த்தால் தர்ஷன் தான் அனுப்பி இருந்தான்.அதைப் பார்த்து விழிகளை விரித்தவள் “இது எப்போ வந்துச்சு?” என்றதும் வியன்கா “அம்மா உங்களோட ப்ரெண்டு அனுப்பி இருக்காங்க” என்றாள்.
இவளோ பதற்றமாய் வியன்காவின் கையில் இருந்த கைப்பேசியை வாங்கிப் பார்த்தாள்.அதில் தர்ஷனிடம் கடைசியாக பேசி விட்டு அவன் பதில் குறுஞ்செய்தியில் இவளுடைய புகைப்படத்தை அனுப்பி இருந்தான்.
அதை தான் வியன்கா பார்த்ததோடு தன் அம்மாவிடம் காட்டி இருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டாள்.அடுத்து தர்ஷன் “ஆதி எங்கே இருக்கீங்க?” என்ற குறுஞ்செய்திக்கு இவள் தூங்குவதை புகைப்படம் எடுத்து அனுப்பி இருப்பதும் அதற்கு அவனோ எந்த பதிலும் அனுப்பாமல் இருந்திருக்கிறான்.இதை அனைத்தையும் பார்த்தவள் வியன்காவை பார்த்தாள்.
“நீ தான் மெஸேஜ் அனுப்பினியா?” கொஞ்சம் கோபமும் பதற்றத்தோடும் கேட்டாள்.
“ஆமாம் அம்மா நான் தான் அனுப்பினேன் உங்க ப்ரெண்ட்னு சேவ் பண்ணி வைச்சு இருக்கீங்க சிந்தியா ஆன்ட்டினு அனுப்பினேன்” என்றாள்.
இவளால் பதில் எதுவும் பேச முடியவில்லை.இதுவரை வியன்கா இப்படி செய்ததும் இல்லை.ஒருவேளை தன் மேல் தான் தவறோ? என்று எண்ணியவள் ப்ரெண்ட் என்று இருந்த பெயரை ருத்ரன் என்று மாற்றி வைத்தாள்.
வேறு எந்த பெயராக இருந்தாலும் அவள் குறுஞ்செய்தி அனுப்பாமல் இருந்திருப்பாள் என்று புரிந்துக் கொண்டவள் வேக வேகமாக சாப்பிட்டு முடித்து விட்டு தன் அறையில் போய் படுத்துக் கொண்டவள் ருத்ரனுக்கு “நான் சென்னைக்கு வந்துட்டேன் ருத்ரன்.என் பொண்ணு சிந்தியான்னு நினைச்சு உங்களுக்கு தெரியாமல் மெஸேஜ் அனுப்பி இருக்கா சாரி அதோடு நீங்க எங்கே இருக்கீங்க?” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் “மீட்டிங்ல இருக்கேன் எனக்குத் தெரியும் பிறகு பேசுறேன்” என்று பதில் அனுப்பி இருந்தான்.
அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை திரும்ப திரும்ப படித்தாள்.ஏனோ மனம் முழுவதும் ஒருவித ஆவலையும் விருப்பத்தையும் சேர்ந்து ஒருபுது உணர்வைத் தந்தது.
அவன் அனுப்பிய குறுஞ்செய்திக்கு வேலையின் பளு காரணமாக அவள் அதற்கு பதில் அனுப்பி இருக்கவில்லை.ஆனால் ருத்ரனோ இவளை ரொம்ப முக்கியமான நபராக நினைத்து தானே அதுவும் வேலையின் இடையே அவளுக்கு பதில் அனுப்பியது அவள் இதயத்தை லேசாக அசைத்து பார்த்தது.
‘'நான் என்ன அவ்வளவு முக்கியமான நபரா?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அடுத்து ஒரு புகைப்படத்தை அனுப்பினான்.அவள் எப்படி ஒரு மேசையின் மேல் கைவைத்து புகைப்படம் அனுப்பினாளே அதே போல் அனுப்பினான்.
அதைப் பார்த்து சிரித்த இமோஜியை அனுப்பினாள்.
என் உள் நெஞ்சு
சொல்கின்றது பூவோடு பேசாத
காற்றென்ன காற்று ஒரு
பூஞ்சோலை கேட்கின்றது.
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்…
அதற்குப் பிறகு எந்த அழைப்பும் இல்லை குறுஞ்செய்தியும் இல்லை.ஆதிரை வேலையாக இருந்திருப்பான் என்று இருந்து விட்டாள்.
இரவு நேரத்தில் திரும்ப அழைத்தான்.தனியாக தன் அறைக்கு சென்று அங்குள்ள மெத்தையில் அமர்ந்தபடி மெதுவாக “ஹலோ”
“ஆதி சாரி திரும்ப பேச முடியலை வேலையா இருந்துச்சு”
“பரவாயில்லை எதுக்கு சாரி எல்லாம் கேட்குறீங்க?”
“சாப்பிட்டீங்களா”
“ம்ம்… நீங்க?”
“சாப்பிடத் தான் வந்து இருக்கேன் வீடியோ கால் பண்ணவா? இங்கே ரொம்ப அழகான இடம் இருக்கு உங்களுக்கு காட்டலாம்னு தான் கால் பண்ணேன்” என்றான்.
இவளும் “எதுக்கு?”
“நீங்க தான் நாம பேசும் போது எங்கேயும் போனதில்லைன்னு சொன்னீங்க அதான் வீடியோ கால்ல பேசினால் நீங்களும் பார்ப்பீங்களே தான் நான் கால் பண்ணுறேன்” என்று உடனே வீடியோ அழைப்பில் அழைத்தான்.
ஏதோ ஒரு தயக்கம் அவளுள் வந்தது.இருந்தாலும் பேசுவோம் என்ற ஒரு தைரியத்தில் வீடியோ அழைப்பை எடுத்தாள்.
அவனோ எதிரே இருந்த கூட்டத்தையும் அங்கே கொட்டிக் கிடந்த கடைகளையும் காட்டினான்.
அதைப் பார்த்து அவளுக்கு ஒரே வியப்பாக இருந்தது.இவ்வளவு கடைகளா? என்று இருந்தது.அப்போது வியன்கா பின்னால் நின்றுப் பார்த்து விட்டு “அம்மா அங்கே பாருங்க அந்த வளையல் கடை எவ்ளோ அழகா இருக்குல்ல” என்ற போது திரும்பிப் பார்த்தாள்.
வியன்காவின் விழிகளில் அப்படி ஒரு ஆவல் இருந்தது.அவளின் சத்தம் கேட்டதும் தர்ஷன் “ஹலோ வியன்” என்றதும் வியன் முன்னால் வந்து “நீங்க தான் என் அம்மாவோட புது ப்ரெண்ட் தர்ஷனா?”
“ஆமாம் எப்படி கண்டுபிடிச்சீங்க?”
“ரொம்ப ஈஸி அம்மா சிந்தியா ஆன்ட்டிக்கு அப்புறம் உங்ககிட்டத் தான் பேசுறாங்க என்கிட்டயும் சொன்னாங்க தாங்ஸ் தர்ஷன் ஆனால் ஒரே மாதிரி ரெண்டு பொம்மை வாங்கி இருக்கீங்க” என்றாள்.
உடனே ஆதிரை “தர்ஷன் சொல்லக் கூடாது அங்கிள் சொல்லு”
உடனே வியன்கா “உங்களுக்கு ப்ரெண்ட்டுனா எனக்கும் ப்ரெண்ட் சரிதானே” என்று குழந்தை மாறா பேச்சோடு கேட்டாள் வியன்கா.
உடனே தர்ஷன் “சரி தான் வியன் சொன்னால் சரியா இருக்கும்” என்று அவளுக்கு ஆதரவாக பேசினான்.
“நீங்க எங்கே இருக்கீங்க?”
“நான் டெல்லில இருக்கேன்”
“ஓ…வாவ் தாஜ்மஹால் போனீங்களா? அப்புறம் என்று யோசித்தவள் கோட்டை அது பெயரு” என்ற போது
“செங்கோட்டையா?”
“ஆமாம் நான் ஸ்கூல்ல படிச்சேன் டெல்லில நிறைய இடம் இருக்காமே!” என்று அவள் உலகத்தில் புதியதாக இருக்க நிறைய கேள்விகள் கேட்டாள்.
அவனோ சிரித்துக் கொண்டே “நான் அங்கே எல்லாம் போகலை நான் இப்போ கடைக்குத் தான் வந்து இருக்கேன்”என்றான்.
“ஓஓஓ…சரி சரி”
“நீங்க வந்து இருக்கீங்களா?”
“இல்லை நான் போனது இல்லை”
“அப்போ நான் வியனை அழைச்சுப் போய் சுத்திக் காட்டட்டுமா?” என்றதற்கு
யோசித்தவள் “நான் உங்களை இன்னும் பார்க்கலையே தெரியாதவங்க கூட அம்மா எங்கேயும் போகக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க”
“ம்ம்… சரி சீக்கிரமா நாம நேர்ல சந்திக்கலாம் அம்மாவும் வந்தா?”
“ஹே…ஹய்… நானும் வரேன்” என்றாள் சிரித்துக் கொண்டே…
இருவருக்குமான உரையாடலில் ஒருநொடி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள்.வியன்கா தேவையாக இருந்தால் தான் பேசுவாள்.அவள் இவ்வளவு பேசியிருப்பதை பார்க்கும் போது அவளால் நம்ப முடியவில்லை.