• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 22, 2024
Messages
40

தொடராமல்.. தொடருவேன்..

சமையல் அறையிலிருந்து கடுகு உளுத்தம் பருப்புடன் வேர்க்கடலையும், கறிவேப்பிலையும் நல்லெண்ணையில் வறுபடும் மணம் வீடு எங்கும் நிறைந்து இருந்தது. வரவேற்பறை சோபாவில் தன் இரண்டு வயது மகனை மடியில் அமர்த்திக் கொண்டு சமையலறைக்கும் வரவேற்பறைக்கும் நடந்து ஒவ்வொரு பொருட்களாக வீட்டின் நடுவே வைத்துக் கொண்டிருந்த தாயை பார்த்துக்கொண்டிருந்தாள் மதுமதி.

"ஏன்டி மது.? பையன மடியில வச்சுக்கிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கியே வந்து கூட மாட ஒத்தாசை பண்றியா.?" என மகளைக் கேட்டபடியே சமையல் அறைக்கு மீண்டும் சென்றார் கோமதி.

"இப்போ எதுக்குமா திடீர்னு குலதெய்வ கோயிலுக்குப் போகணும்னு அடம் பிடிக்கிற.?" "என்ன திடீர்னு சொல்றனா.? ரொம்ப நாளா போகணும் தான் சொல்லிட்டு இருக்கேன். உனக்குக் கல்யாணம் ஆன புதுசுல போனது. குழந்தை பிறந்ததுக்கும் போகல. இப்போ குழந்தைக்கு ரெண்டு வயசு முடிய போகுது. என்னவோ தட்டிக்கிட்டே போகுது.? போக முடியாம. அது தான் இந்த முறை கண்டிப்பா போயிறணும்னு முடிவு பண்ணிட்டேன்."

"சரி, அதுக்கு எதுக்கு இவ்வளவு சமைச்சுக்கிட்டு இருக்கீங்க.?"

"அப்ப, சாப்பாட்டுக்கு என்ன செய்றது.? உங்க அக்கா, உங்க அத்தான் அவளோட ரெண்டு பொண்ணுங்க அவங்க மாமனார், மாமியார் வராங்க. அதோட என் தம்பி வரான் அவன் குடும்பத்தில் மூணு பேரு. இத்தனை பேருக்குச் சாப்பாடு வேணும்ல."

"அதுக்கு அவங்க எல்லாருக்கும் நீதான் செய்யணுமா.? அவங்க யாரும் செஞ்சு கொண்டு வரமாட்டாங்களா.?"

"என் தம்பி கேட்கத் தான்டி செஞ்சான். நான்தான் சமையல் நான் பாத்துக்கிறேன். தின்பண்டம் மட்டும் நீ வாங்கிட்டு வா என்று சொல்லி இருக்கேன். அந்தக் காட்டுக்குள்ள போனா கடை எதுவும் இருக்காது. அதனால் தேவையானது எல்லாம் அவன் வாங்கிட்டு வருவான். நீ வீணா வாய் பேசி அரட்டை அடிக்காம எந்திரிச்சு வந்து இதெல்லாம் கொஞ்சம் எடுத்து வைப்பதற்கு உதவி செய். உங்க அப்பா வந்தவுடனே எல்லாத்தையும் கார்ல ஏத்த சொல்லலாம்…"

"ஏன் அத்தை மாமா வர வரைக்கும் வெயிட் பண்றீங்க.? நம்ம மதுவே எல்லாத்தையும் தூக்கிடுவாளே. அவ கிட்டயே சொல்லுங்க."

"என்னது அவளே தூக்குவாளா? இவ்வளவு வெயிட்ட...?"

"அட! ஆமா அத்தை. சிலிண்டரையே தனியா தூக்கிடுவா. தண்ணி கேன அசால்டா தூக்கிடுவா."

"என்ன மாப்பிள்ளை சொல்றீங்க.? இரண்டு தண்ணி பாட்டிலை சேர்ந்த போலத் தூக்கினாலே கை வலிக்குதுன்னு சொல்றவ. அஞ்சு லிட்டர் தண்ணிக் கேனை தூக்குறாளா.? அதிசயமா தான் இருக்கு." என்று நாடியில் கை வைத்து மகளை ஆச்சரியமாகப் பார்த்தபடி கேட்க.

"முழு சிலிண்டர் மறந்துட்டீங்களே." "என்னடி சொல்றாரு மாப்பிள.?"

"அம்மா அவர் ஏதாவது உளறிட்டு இருப்பாரு. நீங்கப் போய் வேலையைப் பாருங்க." என்றபடி கணவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவளை பார்த்தவன்,

"உண்மைய தானடி சொன்னேன். நல்லதுக்கே காலம் இல்லை. உன்ன பத்தி பெருமையா தானே சொன்னேன்." என்றப்படி அவள் மடியில் இருந்த மகனைத் தூக்கிக் கொண்டு

"நீ வாச்செல்லம் நம்ம வெளியில போலாம்." என்ற படியே மாமியார் அடுக்கி வைத்திருந்த உணவு பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு வெளியேறினான் காரில் வைப்பதற்காக.

போகிற வழியில் இவர்களோடு இணைந்து கொண்டார்கள் மதுமதியின் அக்கா குடும்பத்தினரும் மாமா குடும்பத்தினரும். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியின் நடுவில் இருந்தது இவர்களின் குலதெய்வ கோயில்.

அடர்ந்த காட்டுக்கு நடுவே மூன்று கார்களின் அணிவகுத்து சென்று கொண்டிருக்க.

"இப்படி நடு காட்டுல தான் குலதெய்வ கோயிலைக் கொண்டு வந்து வைக்கணுமா.?" எனப் புலம்பிக்கொண்டே வந்தாள் மதுமிதா.

"அமைதியா தான் வாயேன்டி." என்ற அன்னையின் அதட்டலில் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.அவரை எதிர்த்து எதுவும் பேசாமல். ஆனால் வாய்க்குள் ஏதோ முனங்கியவளாக.

இவர்கள் சென்று இறங்கிய நேரம் கோமதி கொடுத்த தகவலின் படி அங்கு வந்திருந்த பூசாரி ஏற்கனவே அனைத்தையும் ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைத்திருந்தார்.

வந்தவர்கள் அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓரமாக வைத்துவிட்டு பூஜைக்குத் தயாராக, சிறுமண்டபம் போல அமைந்திருந்த கோயிலின் முன் பயபக்தியுடன் நிற்க. கற்பூரத்தை ஏற்றித் தீபாராதனை காட்டியப்படியே மந்திரங்களைக் கூற ஆரம்பித்தார் பூசாரி. மகனைக் கையில் வைத்தபடி கணவனோடு நின்றிருந்த மதுமதி உடலை ஒருவாரு குலுக்கியபடி,

"இஇஇயியியியியி." என்றவாறு தொண்டை அடைக்க ஒரு விதமான உறுமல் குரல் எழுப்பி, கண்கள் இரண்டும் மேலே சொருக வானத்தை நிமிர்ந்து பார்த்தபடி உடலை முறுக்கிக் கொண்டு போக. அவளின் அருகில் நின்றிருந்த அவள் கணவன் பரத், திடீரென்று அவளின் செயலில் அதிர்ந்து நடுங்கியவனாக அவள் கையில் இருந்த குழந்தையை வேகமாக வாங்கிக் கொண்டான்.

அன்னையின் திடீர் உச்சஸ்தான குரலில் குழந்தையும் பயந்து வீறிட்டு அழுக ஆரம்பித்தது. அனைவரும் ஒன்றும் புரியாமல் பயந்தபடி அவளை விட்டுத் தள்ளி நின்று அவளையே பார்க்க. தன் இரு கைக்கொண்டு தன் கழுத்தை தானே நெரித்தவள் "ஹக், ஹக்." என்று இருமியப்படியே தன் கழுத்தை பலம் கொண்ட வரை நெரித்தாள். மகள் செய்யும் விபரீதம் உணர்ந்தவராக வேகமாக அவளின் அருகில் வந்த மதுமதியின் தந்தை அவள் கைகளைக் கழுத்தை வீட்டு நகர்த்த முயற்சிக்கும்போதே சூழ்நிலை புரிந்து தன் கையில் இருந்த குழந்தையை அருகில் நின்றிருந்த தன் அண்ணியிடம் கொடுத்துவிட்டு வேகமாக மனைவியின் அருகில் வந்தவன் அவள் கைகளைக் கழுத்திலிருந்து எடுக்க மாமனாருடன் சேர்ந்து முயற்சித்தான் பரத்.

இருவரையும் ஒரே உதராக உதறித் தள்ளியவள். அவர்களைப் பார்த்துச் செய்கையால் தன் கைகளைக் கொண்டு கழுத்தை தானே அழுத்திக்கொண்டு ஏதோ உத்திரத்தை பார்த்துக் கூற முயன்றாள். அவள் கூறுவது யாருக்கும் புரியவே இல்லை. அனைவரையும் விரல் விட்டுக் காட்டியவள் பின் தன் உடலைத் தானே தொட்டு காட்டி மறுப்பாகத் தலை அசைத்து இரு கைகளையும் ஆட்டி ஆட்டி ஏதோ கூறினாள். பின்பு அவள் தலை முடியை யாரோ பிடித்து இழப்பது போல இங்கும் அங்கும் சுழன்று நகர்ந்தவள், பின் கர்ப்பகிரகத்தை உற்று நோக்கியவள். ஷாக் அடித்தது போல உடல் தூக்கி போட, வேகமாகத் திரும்பி ஓட ஆரம்பித்தாள். அவளின் செய்கையில் பதறிப் பூசாரியைப் பார்த்த பரத்திடம் அவளைப் பின்பற்றிச் செல்லுமாறு கூறினார் பூசாரி.

அவளோடு மதுமதியின் தந்தையும் கூடவே அக்காள் கணவரும் செல்லச் சிறிது தூரம் வேகமாக ஒரு ஆண் மகனைப் போல் ஓடிச் சென்றவள். அங்கிருந்த பெரிய ஆலமரத்தின் முன்பு சென்று நின்றவள் "ஹீ..ஹா...ஹக்." என்று விசித்திர குரல் எழுப்பியவள். பின், மயங்கிச் சரி ஆரம்பித்தாள். அவள் கீழே விழாமல் கையில் ஏந்தி கொண்டான் பரத்.

சில நொடிகள் கண்மூடி இருந்தவள் டக் என்ற கண்ணைத் திறந்து பார்க்க ஒரு நிமிடம் பக் என்ற ஆனது பரத்திற்கு.

"என்னங்க பண்றீங்க.? கோயிலுக்கு வந்த நேரத்துல. எல்லாரும் இருக்காங்க. நீங்கப் பாட்டுக்கு என்னைத் தூக்கி வச்சு ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க." என்று கோபத்துடன் கேட்ட மனைவியை அதிர்வோடு பார்த்தவனுக்கு

"எனக்கு இது தேவை தான்டி." என்ற சொல் தான் வாயில் இருந்து வந்தது.

"ச்சே எல்லாரும் இருக்கும்போது என்னை மட்டும் எப்படி தனியா தள்ளிட்டு வந்தீங்க.?" என்று கேட்டபடி அவனை நீங்கி நின்றவள். சற்று தொலைவில் தந்தையும் அத்தானும் இருப்பதை பார்த்துவிட்டு,

"பாருங்க நம்மள தேடி அவங்களே வந்துட்டாங்க." என்றபடி

"ஒன்னும் இல்லப்பா, சும்மா காத்து வாங்க இந்தப் பக்கம் வந்தோம்." என்று தந்தையை பார்த்துக் கூறியபடியே அனைவரும் நின்றிருந்த இடத்திற்கு சென்றாள் வேகமான எட்டுக்களை வைத்த படி.

அதிர்வோடு அவனைப் பார்த்து "என்ன மாப்ள இது.?" என்று கேட்ட மாமனாரிடம்,

"அவளுக்கு எதுவுமே தெரியல மாமா.?" என்று கூறிவிட்டு அவளைப் பின்தொடர்ந்து சென்றார்கள் மூவரும். அனைவரோடும் சென்று நின்றவளை சற்று பயத்துடனே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அனைவரும்.

அவளிடம் எதுவும் கேட்க வேண்டாமெனச் செய்கையில் கூறிய பூசாரி தன் பூஜைகளை முடித்துவிட்டு அனைவருக்கும் பிரசாதத்தை கொடுத்து முடித்தவர்.

"குழந்தை ரொம்ப நேரமா அழுதுட்டு இருக்கான் அவனைச் சமாதானம் செய்யுமா." என்ற பூசாரியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவளாகத் தன் குழந்தையை வாங்கியவள் தன் அக்காள் மகள் இருவரையும் உடன் அழைக்க முதலில் பயந்து இவளோடு வர மறுத்தவர்களை கேள்வியாகப் பார்த்தவள்

"என்ன ஆச்சு.? உங்க ரெண்டு பேருக்கும். வாங்க நம்ம அந்தப் பக்கமா போலாம். அங்க நிறைய மாங்கா மரம் இருந்தது. போய்ப் பறிக்கலாம்." என ஆசை காட்ட. அவர்களும் தாயின் கண் அசைவுக்குக் கட்டுப்பட்டு அவள் கூடச் சென்றார்கள் சிறிது பயத்துடன்.

 
Joined
Nov 22, 2024
Messages
40

என்ன ஆச்சு சாமி.? ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்கிட்டா.? எங்க பொண்ணு." எனக் கோமதி பயந்து கொண்டே கேட்க.

"நீங்கத் தான் சொல்லணும்.அவங்க உங்க கூடத் தானே இருக்காங்க. இந்த மாதிரிச் செயல்களை எதுவும் நீங்கப் பாக்கலையா.?" என்ற பூசாரியின் கேள்விக்கு

"இல்ல சாமி. அவ எங்க கூட இல்ல. சென்னையில தான் மாப்பிள்ளைக்கு வேலை. அவங்க ரெண்டு பேரும் அங்க தான் இருக்காங்க."

"அப்ப நீங்கத் தான் சொல்லணும். அவங்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தது சமீபமா.?" எனப் பரத்தை பார்த்துக் கேட்க.

"சமீபமா எனக்கு எதுவும் வித்தியாசம் தெரியல. ஆனா எங்களுக்குத் திருமணம் முடிந்து ஆறு மாசம் கழிச்சு, எல்லாத்துக்கும் பயந்துட்டு இருந்தவ. ரொம்ப தைரியமா இருக்க ஆரம்பிச்சா. வேலையிலிருந்து நான் வரத் தாமதமான கூட "எப்ப வருவீங்கன்னு.?" பத்து போன் பண்றவ அதுக்கப்புறம் ரொம்ப தைரியமா வீட்ல இருக்க ஆரம்பிச்சா. வேற பெருசா அவகிட்ட எந்த மாற்றமும் இல்லை." என்று கூறிக் கொண்டிருந்தவனை இடைமறித்த கோமதி,


மாப்பிள்ளை, நீங்கக் காலைல சிலிண்டர், தண்ணி கேன்னு ஏதோ சொன்னீங்களே."
"ஹான், ஆமா எப்பவுமே சிலிண்டர் மாத்தணும்னா தண்ணி கேன் கவுக்கணும்னா என்னைத் தான் கூப்பிடவா. கொஞ்ச நாளா என்னை எதுக்குமே கூப்பிடல அப்போ ஒரு நாள் டிவி பாத்துட்டு இருந்தேன். பின்னாடி ஏதோ சத்தம் கேட்டது என்று திரும்பிப் பார்த்தேன். அப்பத் தண்ணி கேனை அசால்டா தூக்கி தோள் மேல வெச்சிகிட்டு நடந்து போனா.
"ஹேய் என்ன பண்றன்னு." நான் அதிர்ச்சியாகக் கேட்டேன்.
"தண்ணி காலி ஆயிடுச்சு அதான் கேன் எடுத்துட்டு போறேன்." என்று அசால்டா சொல்லிட்டு போனா. எனக்கே ஒரு நிமிஷம் ஒன்னும் புரியல சரி நம்ம வீட்ல நல்ல சாப்பிட்டு அவளுக்குத் தெம்பு வந்திருச்சு போலன்னு நினைத்தேன்." என்று தங்கள் வீட்டில் நடந்தேறிய செயல்களைக் கூறிக் கொண்டிருந்தான் பரத்.
"உங்களுக்குள்ள தாம்பத்திய உறவுலாம் எப்படி இருக்கு.?" என்ற பூசாரியின் கேள்விக்குச் சங்கடமாக அனைவரையும் ஒரு முறை பார்த்தவன்
"அதுல எல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா சில நேரம் ரொம்ப அழுத்தமா இறுக்கி அவ என்னைப் பிடிக்கும்போது, எனக்கே ரொம்ப வலிச்சிருக்கு. ஏதோ ஆசையில அப்படி பிடிக்கிறாள் போலன்னு நான் நெனச்சிகிட்டேன்." எனக் கூற

"அப்படி பிடிச்சது அவங்க இல்ல. அவங்களுக்குள்ள இருந்த ஒரு ஆண் ஆத்மா." என்ற பூசாரியின் பதிலில் அரண்டு போனவன்
"ஐயையோ.! அப்போ இதுவரைக்கும் நான் ஒரு பேய் கூடவா குடும்பம் நடத்தி இருக்கேன்." என்று கேட்க அருகில் நின்றிருந்த அவனின் சகலைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
"நீதான் யா நெஜமாவே பேய் கூடக் குடித்தனம் பண்ணிருக்கே." என்று தன்னை மீறிக் கூறியவன் சிரித்து விடப் பயந்திருந்தவர்கள் அவனை முறைக்க. ஒருவாறு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

"முதல் ஆறு மாசம் அவங்க நல்லா தான் இருந்திருக்காங்க அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு நீங்க வேற எங்கேயாவது போனீங்களா.?" என்ற பூசாரியின் கேள்விக்குச் சிறிது நேரம் யோசித்த பரத்.

"எங்களுக்குத் திருமணமாகி ஆறு மாதம் கழித்து பிரண்ட்ஸோட காந்தநல்லூர்க்கு டூர் போனோம். அப்போ ஒரு முறை இந்த மாதிரி அடர்ந்த காட்டில் பயணம் பண்ணும்போது நாங்க போன வேன் சகதில மாட்டிக்கிச்சு. அப்போ அந்த வேனை சேற்றிலிருந்து எடுப்பதற்காக எல்லாரையும் கீழ இறங்க சொன்னாரு டிரைவர். நாங்க எல்லாம் சேர்ந்து தான் அந்தச் சகதியிலிருந்து வேனை வெளியில் எடுத்தோம். அதுக்கப்புறம் உடனே அங்கிருந்து கிளம்பிட்டோம்."என்றான் அன்று நடந்தவைகளை நினைவு கூர்ந்தவனாக.
"அந்த நேரத்துல மதுமதியோட செயல்பாடுகள் எப்படி இருந்துச்சு.? அவ என்ன பண்ணிட்டு இருந்தா.?" "வேனை எடுக்கிற பரபரப்புல நான் அவளைக் கவனிக்கல. ஆனா கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு பழைய இடிஞ்ச வீட்டுக்கு முன்னாடி இவ நின்னுட்டு இருக்குறத பாத்து என் நண்பனோட மனைவி சப்தமிட்டு அழைத்தும் வராமல் இருப்பதை பார்த்து, அவளின் அருகில் சென்று கையைப் பிடித்து இழுத்து கூட்டிட்டு வந்தாங்க. ஏன் நீங்க மட்டும் அங்க தனியா போனீங்க.? என அவங்க இவளைப் பார்த்துக் கேட்டது அப்போ எனக்கு வித்தியாசமா தெரியல. இப்ப யோசிச்சா அது தான் காரணமா இருக்கும்னு தோணுது." என்று யோசனையாகக் கூற
"ஆமாம் அதுதான் காரணம். அங்குப் பிடித்தது தான் இது." என்றார் பூசாரியும்.
"அந்த வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஒரு ஆணின் ஆன்மா இவளோடு வந்திருக்கிறது." எனக் கூற அனைவருமே பயந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"வேறு எதுவும் வித்தியாசமா அவள் நடந்து நீங்கப் பார்த்து இருக்கீங்களா."என்ற பூசாரியின் கேள்விக்குச் சிறிது நேரம் யோசித்தவன்.

"சில நேரம் அவள் தும்பும்போது ஒரு ஆண் தும்புவது போலக் கேட்டு இருக்கு. அப்போ எல்லாம் நான் பக்கத்து வீட்டுல இருந்து அந்தச் சத்தம் வருதுன்னு நினைச்சு இருக்கேன். அதுபோலச் சில நேரம் கால்மேல் கால் போட்டு ஒரு ஆணை போலத் தூங்குவாள். அவ்வப்போது
ஹக், ஹக் என்ற சத்தம் கேட்டிருக்கு. அசந்து தூங்குவதால் தொண்டை காய்ந்து இந்த மாதிரிச் சத்தம் வருவதாக நினைச்சு இருக்கேன்."
"இல்ல. அது தொண்டை காய்ந்து வந்த சத்தம் இல்லை. தொண்டையை இறுக்கி தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டதால அவரால பேசப் புரியாமல் பேச முற்பட்டபோது உண்டான சத்தம் அது."

"என்ன சாமி.? என்னென்னமோ சொல்றீங்க. ரொம்ப பயமா இருக்கு.இப்போ உங்ககிட்ட சைகையில் என்னமோ சொன்னாளே என்ன சொன்னா.?" என்று கோமதி கேட்க, அனைவரையும் ஒரு முறை பார்த்தவர்.
"தான், தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும். நிறைய நாட்கள் வாழ ஆசைப்பட்ட தனக்கு அந்தக் கொடுப்பினை கிடைக்கவில்லை என்றும் வாழ வேண்டும் என்ற ஆசையில் இவள் உடலைப் பிடித்துக் கொண்டதாகவும் கூறியது அந்த ஆன்மா." என்று கூற "எங்க எல்லாரையும் சுட்டி காட்டினாளே அது எதுக்கு சாமி.?" என மதுமிதாவின் அக்கா கேட்க. "நீங்க யாரு தடுத்தாலும் இந்த உடம்புக்கு சொந்தக்காரன் தான் மட்டும் தான்னும் அவளுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்வதாகவும் சொல்லுது அந்த ஆத்மா." என்ற பூசாரியின் பதிலில்

"ஐயோ.!" என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தார்கள் அனைவரும்.
"மற்றபடி வேறு எதுவும் தொந்தரவு உங்களுக்கு ஏற்பட்டிருக்கா.?" எனப் பரத்தை பார்த்துக் கேட்க
"இல்லையே சாமி. ரொம்ப பாசமா அன்பா என்னைப் பார்த்துப்பா. குழந்தையையும் அவ்வளவு கவனமா பார்த்துப்பா." என்றவனுக்கு தன்னையும் மீறிக் கண்கள் கலங்கியது. அவனைப் பார்த்திருந்தவர்களுக்கும் மனம் கணக்க. கண்ணீர் சுரந்தது.

"இத்தனை நாள் அவளிடம் இந்த ஆக்ரோஷத்தை நான் பார்த்ததில்லை. ஆனா இனி எப்படி.?" என்று கேள்வியாக முடிக்க. பார்த்தவர்களுக்கும் அவன் மனநிலை புரிந்தே இருந்தது.
"அதுதான் நானும் கேட்கணும்னு நினைச்சேன் இவ்வளவு நாள் இல்லாம இப்போ ஏன் இப்படி ஆச்சு அவளுக்கு.?" என்று கேட்ட கோமதியை பார்த்த பூசாரி
"நீங்க இப்பதானே உங்களுடைய குலதெய்வ கோயிலுக்கு வந்திருக்கீங்க. அவ இடத்துக்கு வந்ததும் அவ குழந்தையைக் காப்பது அவளுடைய கடமையை ஆயிடுச்சு." என்று கோயிலின் கர்ப்ப கிரகத்தைப் பார்த்துக் கூறிய பூசாரி.
"நீயே துணை தாயே.." என்று கும்பிட்டு விட்டு.

"இனி பயப்படறதுக்கு எதுவுமே இல்லை. அவளைப் பிடித்த ஆன்மா அவளை விட்டு நீங்கிச் சென்று விட்டது. தன் குழந்தையைக் காக்கும் கடமை இங்கு உள்ளவளுக்கு இருப்பதால் நீங்கள் இங்கே வந்ததும் அது நடந்தேறி இருக்கிறது."
"ஆனா அவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே சாமி." எனக் கேட்ட பரத்திடம்.
"ஆமா, அவங்களுக்கு நடந்தவைகள் எதுவும் ஞாபகம் இருக்காது. நீங்களும் எதையும் அவங்களுக்கு ஞாபகப்படுத்த முயலாதீங்க. ஏன் இப்படி நடந்து கொண்ட.? என்று கேட்காதீங்க. எல்லாம் நல்லபடியா முடிந்தது. இனி வருடத்திற்கு ஒரு முறை உங்களின் குலதெய்வ கோயிலுக்கு வர வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…."
"கட்டாயமா, கட்டாயமா." என்றார்கள் அனைவரும் கோரசாக.
கற்சிலை உருவத்தில் சாந்த சொரூபியாக இருந்த தங்களின் குலதெய்வமான வனபத்ர காளியை பார்த்தபடி.

தன் மகன் மற்றும் அக்கா மகள்களுடன் சென்றிருந்த மதுமதி கை நிறைய மாங்காய்களை பறித்துக் கொண்டு இவர்களை நோக்கி வந்தாள் புன்னகை முகமாக. சிலருக்கு அவளைப் பார்க்க அதிர்வும், பயமும் இருந்தாலும் பாவமாகவும் இருந்தது. ஆனாலும் அவளைப் பிடித்திருந்தது இன்றோடு அவளை விட்டு விலகியது என்பதை நினைத்து மகிழ்ந்தவர்கள். கொண்டு வந்த உணவை உண்டு விட்டுக் கிளம்பினார்கள் மனம் நிறைந்த மகிழ்வுடன்.
மனைவியின் அருகில் அமர்ந்திருந்த பரத்திற்கு இவ்வளவு நாள் இவை எதுவும் தெரியாமல் அவளோடு வாழ்ந்ததை நினைத்துச் சற்று பயம் இருந்தாலும் அவளின் மேல் இருந்த காதல் இவை அனைத்தையும் தவிடு பொடி ஆக்கி இருந்தது. அவள் தோள்களில் கையிட்டு அவளைத் தன்னோடு இருக்க அனைத்துக் கொண்டு மகனையும் அவள் மடியிலிருந்து தன் மடிக்கு மாற்றிக் கொண்டான்.

இரண்டு நாள் மாமனார் வீட்டிலிருந்து அவள் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் எப்போதும் போல இயல்பாக இருப்பதில் நிம்மதி உற்றவன். கிளம்பி சென்றான் சென்னைக்கு மனைவி குழந்தையோடு.

சென்னைக்கு வந்த அன்று சோர்வாக இருக்க அலுவலகத்திற்கு விடுமுறை கூறிவிட்டு வீட்டிலிருந்தவன் எதேர்ச்சையாகத் தண்ணீர் கேனை பார்க்க அது காலியாக இருந்தது. மனைவியை எட்டிப் பார்க்க அவள் மும்முறமாகச் சமையல் செய்துகொண்டிருந்தாள் என்ன நடக்குமோ.? எனச் சற்று பயத்துடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் பரத். சமையல் செய்து கொண்டிருந்தவள் தண்ணீர் பிடிப்பதற்காகக் கேன் அருகில் வந்தவள் காலியானதை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு முழுவதாக இருந்த கேனின் அருகில் செல்லப் பகீர் என்றது இவனுக்கு.
சட்டென்று இவனைத் திரும்பிப் பார்க்க. அவள் பார்வையில் அதிர்ந்தவன் தொலைக்காட்சியைப் பார்ப்பது போலப் பார்வையை மாற்றித் திரும்பி அமர்ந்து கொண்டான் அவன்.

"என்னங்க." என்றவளின் குரலுக்கு "என்னம்மா.?" என்ற படியே இவன் எழுந்து வர
"இந்தத் தண்ணி கேனை கொஞ்சம் கவிழ்த்து விடுங்க." என்றவளின் பேச்சில் ஆனந்தம் அடைந்தவன் அவள் சொன்னதை செய்து விட்டு அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமும் கொடுத்துவிட்டு நகர்ந்து சென்றான். மனதில் நிம்மதியுடன். கணவனின் திடீர் முத்தத்தில் அதிர்ந்தவள் பின் புன்னகையுடன் தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

இரவு உணவிற்கு பின்பு சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்த்தபடி வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தான் பரத். மகனைத் தூங்க வைப்பதற்காக அறைக்குள் சென்றிருந்தாள் மதுமதி. சற்று நேரத்தில் "ஹச்." என்ற ஆணின் தும்மல் சத்தம் கேட்டது பரத்திற்கு. தூக்கி வாரிப் போட,

"எங்க இருந்துடா வந்தது இப்போ இந்தச் சத்தம்.?" என்று அரண்டு போய் அமர்ந்திருந்தான் பரத்.

சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்து காதைக் கூர்மையாக்கி வைத்து அறையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, வாசல் கதவின் பக்கத்தில் இருந்த ஜன்னலிலிருந்து மறுமுறையும் அதே தும்மல் சத்தம் சற்று பலமாகத் தொடர்ந்து கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பியவன் ஜன்னலை லேசாகத் திறந்து பார்க்க. எதிர் வீட்டு தாத்தா இரவு உணவை முடித்துவிட்டு அது ஜீரணமாக நடை பயின்ற கொண்டிருந்தவர் மறுபடியும் ஒரு தும்மலை போட்டுவிட்டு,
"ச்ச இந்த ஜலதோஷம் போகவே மாட்டேங்குது." என்ற படியே மூக்கை அழுந்தத் தேய்த்து விட்டு, நடையை தொடர்ந்தார்

"ஹப்பாடா..." என்று நெஞ்சில் கை வைத்துச் சோபாவில் சாய்ந்தவனுக்கு போன உயிர் திரும்ப வந்ததை போன்ற நிலை தான்.

'குலதெய்வம் எப்பவும் கைவிடாது.' என்ற நிம்மதியுடன் தங்களின் அறையை நோக்கிச் சென்றான். மனைவியை அள்ளிக் கொள்ளும் ஆவலுடன் விசில் அடித்தபடி.

நிறைந்தது.
 
Joined
Nov 22, 2024
Messages
40
Sahira அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்

Mohanraj உங்க விமர்சனம் பார்த்து தான் படிச்சேன்

Zeenath Sabeeha 🤣🤣🤣🤣 என்ன சொல்றதுன்னே தெரியல கடைசிவரை காமெடி ய விடாம புடிச்சி வெச்சு இருந்தீங்க

இது எல்லாருக்கும் நல்லா பாடம் தான் பேய் ன்னு இல்லாம எல்லா விஷயத்துலயும நம்ம கூட இருக்கவங்கள எப்பயும் போல கவனிக்கணும் எவ்ளோ விஷயங்கள் நமக்கே தெரியாம நடந்ததுக்கு அப்புறம் ஏன் இப்டி எதுக்கு இப்டி ன்னு புலம்பரத விட நல்லது இல்லையா

ஆனாலும் ஆம்பள பேய் அ கொண்டு வந்து இருக்கீங்க பார்த்தீங்களா அதுக்கே உங்களுக்கு 👏🏽👏🏽👏🏽👏🏽 🤣🤣🤣🤣

நல்லா entertainm ent 🥰🥰🥰
 
Joined
Nov 22, 2024
Messages
40
உமா கார்த்திக் அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்

தொடராமல் தொடருவேன்.
#கதை_விமர்சனம்

சிறுகதைகள் அதிகமாக படிச்சதில்லை.. பேய் கதை அதுவும் சிறுகதையா படிக்க எப்படி இருக்கும்.. அதுக்காக தான் இந்த கதையை படிச்சேன்..

நம்ம கூட இருக்க உறவுகள் நம்ம கவனிக்க தவறிடுறோம்.. அதனால உண்டாக்குற பிரச்சனை.. குலதெய்வ கோயிலுக்கு போகும்போது ஏற்படற பல திகிலான சம்பவங்கள்.. அழகா தொகுத்து எழுதி இருக்காங்க.. சிறுகதை எழுத நிறைய திறமை வேணும்.. அது Zeenath Sabeeha அவங்க கிட்ட நிறைய இருக்கு.. கதைல நிறைய இடத்தில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.. குலதெய்வ வழிபாட்டோடு முக்கியத்துவம்.. அதனால ஏற்படும் நன்மைகள்.. நம்ம வாழ்றதுக்கு தெய்வத்தோட அருள் ரொம்ப முக்கியம் அப்படின்னு மையப்படுத்தின மாதிரி ஒரு கதை..!! தண்ணி கேன் பார்த்தா இந்த கதை தான் ஞாபகம் வரும் போல..!!

வெறும் பேய் கதை மட்டும் இல்லங்க..இது. அடுத்தவங்க வாழ்க்கையை பத்தி கவனிக்கிற அளவு கூட நம்ம கூட இருக்குறவங்கள நாம கவனிக்க மாட்டோம்..உடல் நலம், மனம் சார்ந்து ஏற்படும் மாற்றத்துக்கு உதாசினமும் அலட்சியமும் தான் பதிலா கிடைக்கும். (சரியான நேரத்தில் கிடைக்காத ஆறுதல்கள் தான்.. பல மன நோயாளிகள் உருவாகுவதற்கு காரணம். ) கதை ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.. வெற்றி பெற வாழ்த்துக்கள். 🎉♥️♥️♥️🥰🥰🥰🥳🥳👏👏👏

♥️ நன்றிகள்🙏கோடி ♥️

உமா கா
ர்த்திக்
 
Joined
Nov 22, 2024
Messages
40
மோகன்ராஜ் அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்

தொடராமல் தொடருவேன்
எழுத்தாளர் ~ ஜீனத் சபீஹா.

இதுவரை படித்த சிறுகதைகளில் மிகவும் பிடித்த சிறுகதை என்றால் அது இதுதான். இது ஒரு பேய்க்கதைதான்.பேயோட சக்தியால தண்ணி கேன் போட்டுக்கலாம்,
சிலிண்டரை தூக்கிக்கலாம் என்ன வேணா பண்ணிக்கலாம் 🤣🤣.

பெண் உடம்புல ஆம்பள பேய் புகுந்து, இன்னொரு ஆம்பள கூட கட்டிப்பிடிச்சி அவன் முதுகுத்தண்டை அழுத்தலாம்🤣🤣.

இதுபோல பேயால் அட்டகாசம் எவ்ளோ வந்தாலும் கெட்டதுன்னு ஒன்னு இருந்தா நல்லதுன்னு ஒன்னு இருக்கும்.அந்த நல்ல சக்திதான் குலதெய்வம் 🙏.

குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை எழுத்தாளர் உணரும்படி சொல்லி இருக்காங்க.எத்தனையோ தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் போல வருமா என்றால் சந்தேகம்தான்.எக்காரணம் கொண்டும் குலதெய்வ வழிபாட்டை தவிர்க்காதீர்கள்.ஒருவேளை தவிர்த்திருந்தால் தயவுசெய்து அடிக்கடி போய் தரிசனம் செய்யுங்கள்.இது இச்சிறுகதையின் மூலமாக வைக்கப்படும் வேண்டுகோள்.

இப்படி ஒரு கதையை எழுத்தாளர் எழுதியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.நீண்ட நாட்களுக்கு பின் ஒரு மன நிறைவான கதையை படித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

இக்கதையானது பிரம்மாண்டமான வெற்றி பெற எழுத்தாளர் அக்காவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் 💐💐
 
Joined
Nov 22, 2024
Messages
40
Moses அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்

வாசிச்சுட்டேன்....அப்ப உங்களுக்கே தெரியுது ...திருமணம் ஆன ஆண்கள் எல்லாம் யாரு கூட குடும்பம் நடத்துராங்கனு.....🤣🤣🤣

நீங்க கதை சொல்லுற விதம் சுப்பரா இருக்கு ..
 
Joined
Nov 22, 2024
Messages
40
Nalini Ragavan அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்

Zeenath Sabeeha thank you. I finished reading. I was not expecting a short story. Short and crisp good story about kuladeivam
 
Joined
Nov 22, 2024
Messages
40
தூரிகா சரவணன் அவர்களின் முகநூல் விமர்சனம்

தொடராமல் தொடருவேன்...

Zeenath Sabeeha

வித்தியாசமான பேய் கதை... குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் குடும்பம்...அங்கே தெரிய வரும் பகீர் உண்மை... குடும்பம் அதை எப்படி எதிர்கொண்டது...கதையின் முடிவு என்ன? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Nice story sis...எதையும் படிக்க நேரம் இல்லை...ஆனாலும் சிறுகதை என்பதால் சட்டென படித்து விட்டேன். எழுத்து நடை அருமை. மென்மேலும் படைப்புக்களை படைத்து சிறக்க வாழ்த்துகள்💐💐💐
 
Joined
Nov 22, 2024
Messages
40
விழியோரம் விழுந்தவன் அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்
Wowwww வேற லெவல்ங்க அக்காங் செம்மமம 👏👏👏👏👏👏👏 உன் துன்பத்திலும் துணை நிற்பவர் குலதெய்வம் மட்டுமே .... அதை எவ்ளோ தெளிவா சொல்லிட்டிங்க ....அருமையான கதைங்க அக்கா .....ஹாஹா Mohanraj கமெண்ட்ஸ் பார்த்து தான் படிக்க போனேன் அப்படியே கண்முன்னாடி கொண்டு வந்துட்டிங்க பேயை 😁☺️ நகைச்சுவையோடு நல்ல கருத்தும் கணவன் மனைவியோட பாசத்தையும் (பயத்தையும்தான் 😜) சொல்லிட்டிங்க 😍😍😍😍😍😍😍சூப்பருங்க அக்கோவ் 🥰🥰🥰🥰🥰
 
Joined
Nov 22, 2024
Messages
40
வெற்றி வேந்தன் அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்
திக் திக் சிறுகதைப் போட்டி

தொடராமல் தொடருவேன்

Zeenath Sabeeha

சிறு நிகழ்வில் நடக்கும் பெரு உண்மையை அழகாக காட்சிப் படுத்திய விதம் அருமை.

திகில் கலந்து தீடிரென்று பரவசமடையச் செய்யும் படியான காட்சியமைப்பு சிறப்பு.

சிறுது நீட்டித்து எழுதி இருக்கலாம் என்ற உணர்வை தந்ததோடு,

இறுதியாக தொடராமல் தொடருவேன் என்று

ரம்ஜானுக்கு பிரியாணிக்கு பதிலாக பிரியமான சிறுகதையை தந்தமைக்கு பாராட்டுக்கள்.
 
Joined
Nov 22, 2024
Messages
40
Sugamathi Novels அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்

நானும் உங்க சிறுகதை படிச்சிட்டேன். ரொம்ப அருமையா இருந்ததுக்கா. நல்லா எழுதறீங்க. கதையின் தொடர்ச்சி எங்கேயும் நழுவலை. அழகா பயணிச்சது.

Zeenath Sabeeha
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top