• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
8


நாள்கள் ஓட கல்லூரி ஆரம்பிக்க பத்து நாள்களே இருந்த வேளையில், பாகீரதியின் அலைபேசி தன் தோழியின் அழைப்பைத் தாங்கி வர, “ஓய் தர்ணி எப்படியிருக்க? ரெண்டு நாளா போனே பண்ணல. நான் பண்ணினாலும் எடுக்கல? என்ன பேபி ஓவரா பிஸியா இருக்க போலவே. எங்களையும் நியாபகம் வச்சி போன் பண்ணினதுக்கு நன்றி” என்றாள்.

“பாக்கி” என்ற தாரிணியின் குரல் கலங்கி பிசிறடிக்க, தன் விளையாட்டைக் கைவிட்டு, “என்ன தர்ணி குரல் ஒரு மாதிரியா இருக்கு? எதாவது பிரச்சனையா?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.

ஒரே முறை அவளின் பெயரை மட்டுமே தான் உச்சரித்த விதத்தை வைத்து, பிரச்சனை என்பதை கண்டு கொண்ட தோழியை எண்ணி மனம் மகிழ்ந்தாலும் சொல்ல வேண்டிய விஷயம் இருப்பதால் தன்னைத் தேற்றி, “பாக்கி எனக்கு இன்னும் இரண்டு நாள்ல கல்யாணம்” என்றவள் குரலில் மருந்துக்கும் சந்தோஷம் இருக்கவில்லை.

“என்ன? என்ன சொன்ன தர்ணி?” என்றாள் தன் நம்பகமின்மையை குரலில் காட்டி.

“எனக்கு கல்யாணம் பாக்கி. அதுவும் இன்னும் இரண்டு நாள்ல” என்பதை அழுத்திச் சொல்லி ‘ப”ரியுதா?” என்றாள்.

“என்ன திடீர்னு?” என்றவள் குரல் இறங்க கேட்டவளிடம்,

“ப்ச்... காரணம் என்னவோ பழைய டைப் ஆஃப் மாடல்தான். அத்தைக்கு தெரிஞ்ச பையன்போல. அவனோட போட்டோவைக் கொடுத்து பையன் வெளிநாட்டுல இருக்கான். இன்னும் ஒன் மன்த்ல திரும்பப் போயிருவான். ரொம்ப நல்லவன் வல்லவன்னு அப்பாகிட்ட ஆசை காண்பிச்சி, அதுக்குள்ள அவனுக்கு மேரேஜ் பண்ண பொண்ணு பார்க்கிறாங்க. தெரிஞ்ச பையன்றதால நம்ம பொண்ணைச் சொன்னேன்னு, பேசி கரைச்சி அப்பாவைச் சம்மதிக்க வச்சிட்டாங்க பாக்கி. இன்னும் டூ மன்த்ல நானும் போகணுமாம். என்னோட படிப்பு...” முடிக்க முடியாமல் அழுதவள், “படிச்சது போதும். வேணும்னா யு.எஸ் போயி படிச்சிக்கோ சொல்றாங்க பாக்கி. எனக்கு அழுகை அழுகையா வருது” என்று கண்ணீர்விட்ட தோழியின் கதறல் தன்னையும் தாக்க, அவளை சமாதானப்படுத்துவது தன்னுடைய கடமை என்று உணர்ந்தாள் பாகீரதி.

“தர்ணி அழாத ப்ளீஸ். மாப்பிள்ளை பையன் நல்லவனா இருந்தா நீ அங்க போயி கூட படிக்கலாம். இந்த கோர்ஸையே அங்க கண்டினியூ பண்ணு.”

“ம்ம்”

“நாளைக்கு நான் அம்மாவோட வர்றேன். இல்லன்னா மேரேஜ் அன்னைக்கு காலையிலேயே வர்றேன்.”

“ம்” என முனக..

“என்ன ம்ம்? சரின்னு வாயைத்திறந்து சொல்லு. அப்படியே கல்யாணக் கனவு காண ஆரம்பி.”

“ப்ச்... போ பாக்கி. இதுலல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல. அதுவும் அவசரக் கல்யாணம். ஐ ஹேட் ஆல் அரேஞ்ச்மெண்ட்ஸ்” என்றாள் கோவமாய்.

“சரிமா புரியுது. மனசைத் தேத்திட்டு மேரேஜ்கு தயாராகு.”

“ம்ம்.”

“தர்ணி!” என்று குரலில் அழுத்தம் கொடுத்தாள்.

“சர்ர்ரி தயாராகுறேன். உன்னை வரவேற்கிறதுக்கு மட்டும்” என்றாள் ‘தோழிக்காகவே தயாராகிறேன்’ என்பதை அழுத்தி.

“ஏதோ ஒண்ணு. என்னை வரவேற்கவாவது தயாராகு” என்று போனை வைத்தவளுக்கு, ‘என்ன ப்ரசன்ட் வாங்குவது?’ என்று நினைத்தவள் தாய்க்கு போன் செய்து சொல்லி அருகிலுள்ள ஒரு பெரிய நகைக்கடைக்குள் சென்று வந்தாள்.

தாரிணியின் திருமணத்தன்று தாய்க்கும் ஒரு முக்கியமான விசேஷத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், மாலைக்குள் வந்துவிடலாம் என்று தன் அண்ணனை அழைத்துச் சென்றாள்.

செல்லும் வழியெல்லாம் தோழியின் புகழ்பாட, அவளை முறைத்தபடி வந்தவன் ஒரு எல்லைக்கு மேல் பொறுக்க மாட்டாமல், “அம்மு போதும் உன்னோட தண்ணி ப்ராப்ளம்.” ‘இருக்கிற தண்ணி பிரச்சனை பத்தாது. இதுல இவ புராணம் வேறயா.’ முன்னதை வெளியில் சொல்லி, பின்னதை கடுப்புடன் மனதினுள் நினைத்தான்.

“தண்ணி இல்லண்ணா தர்ணி. சாரி தாரிணி” என்று அண்ணன் தவறாக சொல்லிவிட்டான் என்று திருத்தினாள்.

‘ஆமா. பேரு பெத்த பேரு. அது வெறும் தண்ணிதான். சரியான பச்சைத்தண்ணி’ என தான் நினைத்ததை வெளியில் சொல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

அவனை சரிசெய்வதற்காக, “சரிண்ணா தண்ணி பற்றி பேச வேண்டாம், ஆனா, அண்ணி பத்தி பேசலாம்ல?” என்றதும் அவன் முகம் யோசனையாய் இருக்க, “என்னண்ணா அண்ணி பற்றியும் பேசக்கூடாதா?” என்றாள்.

“பேசலாம்மா. உங்க அண்ணி எப்படியிருப்பாங்க?” என தயங்கி, “இல்ல அப்பா பெயரும், எங்க வேலை செய்றாங்கன்னு மட்டும் சொன்னாங்க. நேர்ல பார்த்ததில்லையா? அதான்” என்றபடி இழுத்தான்.

“ஓஹோ! அதான் மேட்டரா. இப்ப என்ன அண்ணி பத்தி வர்ணிக்கனும் அவ்வளவுதான?”

‘ம்...’ என ப்ரவீண் தலையசைத்தான்.

“பார்க்கிறதுக்கு மாநிறத்துல...” என பாகீரதி ஆரம்பிக்க, ‘என்னை மாதிரியா?” என ப்ரவீண் குறுக்கிட்டான்.

“ப்ச் இல்லண்ணா. குறுக்க பேசாதீங்க. நீங்க அப்பா மாதிரி நல்ல கலர் அன்ட் ஹைட். அவங்க மாநிறத்துல ரொம்ப உயரமாகவும் இல்லாம, ரொம்பவும் குள்ளமாகவும் இல்லாத சராசரி உயரம். பொறுப்பானவங்க! பொறுமையானவங்க! பாசமானவங்க. ஜாலியானவங்க. அதைவிட நல்ல குணமானவங்க. மொத்தத்துல ஹோம்லி லுக்ல இருப்பாங்கண்ணா. உங்களுக்கு செம மேட்ச் தெரியுமா.”

“உனக்கு பிடிச்சிருக்குல்ல. எனக்கு இது போதும் அம்மு” என்று சாலையில் கவனமானான்.

அவசர திருமணம் என்பதால் மண்டபம் கிடைக்காமல் வீட்டிலேயே திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். தாரிணியின் அப்பாவிற்கு மத்திய அரசில் வேலை என்பதால், ஓரளவு நல்ல சம்பளமும் நடுத்தரவர்க்கத்தைத் தாண்டிய வசதியும் இருந்தது. வீடும் ஒரு க்ரௌண்டில் ஓரளவு பெரிய வீடாகவே கட்டியிருந்தார்கள்.

முகூர்த்தத்திற்கு ஒரு மணிநேரம் முன்பே ப்ரவீண், பாகீரதி காஞ்சிபுரம் வர, வீட்டினுள் நுழைந்தவளை தாரிணியின் அப்பா ஜெயராமனும், அம்மா ஜானகியும் வரவேற்று அவளை தோழியிடம் அனுப்ப, தாரிணியை பார்க்கும் ஆர்வத்தில் தன் அண்ணனை மறந்திருந்தாள் பாகீரதி.

காரை ஓரம் நிறுத்தி வந்தவன், தங்கையைக் காணாமல் திண்டாடி, யாரிடமும் எதையும் கேட்கத் தோன்றாமல் விழித்துக்கொண்டு நின்றிருக்க, பின் இது சரியில்லையென்று நினைத்து முகத்தை சாதாரணமாக வைத்து வீட்டினுள் நடந்தவன், ஒரு அறையில் தங்கையை அணைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த தாரிணியைப் பார்த்ததும் ஒருகணம் அசையாமல் அப்படியே நின்றான்.

“எனக்கு இந்த கல்யாணமே பிடிக்கல பாக்கி. எனக்கென்ன வயசுன்னு படிப்பை முடிக்கிறதுக்கு முன்னாடியே அவசரப்படுறாங்க. கோவம் கோவமா வருது தெரியுமா?”

“சரி அதை விடு தர்ணி. மாப்பிள்ளையைப் பார்த்தியா?”

“ம்கூம். பார்த்துதான் என்னாகப்போகுது. ஒருவேளை கல்யாணம் முடிச்சாலும், இங்கேயே படிப்பை கன்டினியூ பண்ணச் சொல்லியிருந்தா பார்த்திருப்பேனோ என்னவோ! ப்ச்...”

“என்ன ப்ச்? அதான் யு.எஸ் போயி படிக்கலாம் சொல்றாங்கள்ல அப்புறமென்ன?”

“அதெல்லாம் சும்மா சொல்வாங்க பாக்கி. இது கூட அவனோட அப்பா சொன்னதுதானாம். கல்யாணத்துக்கு பிறகு படிப்புன்றதை பத்துல ரெண்டு பெர்சன்டேஜ் ஆண்கள் தான் ஒத்துப்பாங்க. இவன் அந்த ரெண்டா இருந்தா ஓகே. மீதி எட்டுல ஒண்ணாகிட்டா, என்னால தாங்க முடியாது பாக்கி. மனசு நொந்தே செத்திருவேன்” என தன் அழுகையைத் தொடர்ந்தாள்.

“தர்ணீஈஈ... கல்யாணத்தன்னைக்கு சாவைப்பற்றி பேசுற? முதல்ல கண்ணைத் துடை” என அதட்டல் போட்டு, “எனக்கு ஒரு பிரச்சனைன்னா ஆயிரத்தெட்டு அட்வைஸ் பண்ணி கடைசிவரை திருத்த முயற்சிப்ப. உனக்குன்னு வந்ததும் அதை கடைபிடிக்கமாட்டே. எல்லாமே மறந்திடும். அப்படித்தான?” என தன் அதட்டலைத் தொடர்ந்தாள்.

“சாரிடி. எனக்கு தெரியுது. இருந்தாலும் முடியல அதான். இனிமேல் அழமாட்டேன்” என்றவள் அழுகை குறைந்திருக்க,

“ம்...குட். அப்படியே நல்ல பிள்ளையா ரெடியாகு” என்று தோழியைக் கிளப்பினாள்.

ப்ரவீணுக்கோ எதாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது. இதில் நாம் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தாலும், மனதின் ஓரம் ஏதோ ஒரு அவஸ்தை வந்து சென்றது. அதை ஏனென்று அவனால் அறிய முடியாமல் போக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அதே நேரம் உள்ளே நுழைந்த ஸ்ரீனிவாசன் தன் முறைப்பெண்ணைத் தேட, தர்ஷன் பிரவீணைத் தேடினான். திருமணத்திற்காக குறிப்பிட்ட சிலரிடமே போன் மூலம் சொல்லியிருந்ததில், தாரிணி பாகீரதிக்கும், நிதிஷ் குழுவினருக்கும் அழைப்பு விடுத்திருந்தாள். திருப்பதி நிகழ்ச்சிக்குப் பின் நிதிஷ் குழுவினர் நல்ல தோழமைகளாக பழகியதன் பொருட்டே இவ்வழைப்பு. முந்தின தினம் இரவு ஸ்ரீனிவாசன், தர்ஷனுக்கு போன் செய்திருந்த பொழுது தானாகவே வந்து போனை வாங்கிய மதன், “அண்ணா” என்று பவ்யமாக ஆரம்பித்தான்.

“என்னடா நீயா வர்ற? எதாவது, இல்ல யாருக்காவது பிரச்சனையா?” என்றான் பாகீரதிக்கு என்னவோவென்று. ஏனெனில் அவர்கள் இருவரும் பேச அவள் மட்டும்தானே காரணம்.

“நாளைக்கு காலையில தாரிணிக்கு கல்யாணம் காஞ்சிபுரத்துல. நாங்க அதான்ணா, நிதிஷ், உஸ்மான், ராஜேஷ் எல்லாரும் போறோம். பாகீரதி தாரிணி பெஸ்ட் ப்ரண்ட். ஸோ, கண்டிப்பா வருவா” என்று தகவல் கொடுத்தான்.

“அவ ஏன்டா அவ்வளவு தூரம் வர்றா?”

“அதான் சொன்னேனே அண்ணா, பெஸ்ட் ப்ரண்ட்னு.”

“சரி. அதை ஏன்டா என்கிட்ட சொல்லிட்டிருக்க?” என்றான் அவள்மேல் ஆர்வம் இருப்பதை மதன் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக.

“இல்லண்ணா. பாகீரதி சம்பந்தப்பட்ட எதுனாலும் சொல்லச் சொன்னீங்கள்ல. அதான் சொல்லிட்டேன். இப்ப வச்சிருறேன்” என்று போனை வைத்து முடித்ததும் குத்தாட்டம் போட்டான் மதன். ‘எத்தனை நாள்தான் என்னையே ப்ளாக்மெய்ல் பண்ணுவீங்க. அதான் சின்ன பதிலடி. அத்தை பொண்ணுக்கு ஒண்ணுன்னா அங்க துடிக்குது. ஆனா, லவ் இல்லையா? நான் காலேஜ் ஸ்டூடண்ட்ணா என்கிட்டயேவா. இன்னைக்கு நைட்குள்ள உருண்டு புரண்டு, நாளைக்கு எதாவது மொக்கை காரணம் கண்டுபிடிச்சி நீங்க வர்றீங்களா, இல்லையா பாருங்க’ என்றான் மனதினுள்.

மதன் நினைத்ததைத்தான் ஸ்ரீயும் செய்திருந்தான். தனியாக போனால் மதனிடம் மாட்டிவிடும் நிலை வரும் பட்சத்தில் அதைத் தவிர்ப்பதற்கு, சுதர்ஷனிடம் ப்ரவீணைக் காரணம் சொல்ல, ‘ஏன்டா?’ என கேட்டவனிடம், “தங்கையை குடுக்கப்போற பையன்டா. அவரைப்பற்றி எதுவுமே தெரியாது. டிடெக்டிவ் பண்ண வேண்டியதை நாம பண்ணிரலாம். உனக்கு நாளைக்கு லீவ்தான? ப்ளீஸ் வாடா” என்று இழுத்து வந்திருந்தான்.

அவர்கள் வந்திருந்ததைக் கவனித்த மதன், ‘வார்றே வா! அண்ணா கொஞ்சம் ஸ்பீடு ஜாஸ்திதான்’ என மனதினுள் நினைத்து, “வாங்க அண்ணாஸ். என்ன இவ்வளவு தூரம்?” என்றான் இருவருக்கும் பொதுவாக.

“டேய் நீ இங்க எப்படி? இந்த கல்யாணத்துக்குதான் வீட்ல பெர்மிஷன் கேட்டியா?”

“ஆமாண்ணா. மாப்பிள்ளை உங்க ஃப்ரண்டா” என்றான் அப்பாவி தோரணையில்.

“இல்லடா. இங்க ப்ரவீண்னு ஒருத்தரைப் பார்க்க வந்திருக்கோம்.”

“ஓ..அவர் பாகீரதி அண்ணாதான். அதோ உட்கார்ந்திருக்காரு பாருங்க” என்று காண்பித்தான்.

“சரிடா நாங்க பார்த்துக்கறோம். நீ உன் ப்ரண்ட்ஸோட சேர்ந்து நில்லு” என்றனுப்ப, சரியென தலையாட்டி ஸ்ரீநிவாசனை நக்கலாக ஒரு பார்வை பார்த்துச் செல்ல, அதை உணர்ந்தவனுக்கு, ‘உன்னை!’ என்று பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது.

“போங்க ப்ரதர்! எங்களை ஓவரா மிரட்ட முடியாதாக்கும்” என்பது போல் அதற்கும் பதில் பார்வை வீசிச் சென்றான். அவனை முறைத்தபடியே நின்றிருந்த ஸ்ரீனிவாசனின் பார்வை அப்படியே மாறியது அவளைக் கண்டதும்.

தாரிணி, “தனியாவா வந்த?” என்று கேட்ட பிறகே அண்ணனின் நினைவு வர, வேகமாக அறையைவிட்டு வெளியே வந்தவள் சுற்றிலும் பார்வையிட, அவளின் பார்வை வட்டத்தில் ஸ்ரீனிவாசன் விழ, தெரிந்தவன் என்ற முறையில் ஒரு சின்ன மென்னகையை அவனுக்களித்து, அண்ணனைக் கண்டு அவனருகில் சென்றமர்ந்தாள்.

அவளின் சின்ன தலையசைப்புடனான புன்னகையை ஸ்ரீயிடம் செலுத்தியதைக் கண்ட மதனுக்கு, ‘அப்ப நிஜமாகவே அத்தை பொண்ணுதானா? லவ் இல்லையா?’ என்று மண்டை காய்ந்தது. ‘ஹேய் நீயும் ஐ லவ் யூ. நானும் ஐ லவ் யூ’ என்பது போலான பப்பி லவ்வையே பார்த்திருந்த மதனுக்கு, ஸ்ரீனிவாசனின் மனதோடான காதல் புரியவில்லை.

ஸ்ரீனிவாசனுக்கோ அவள் தன்னை அடையாளம் கண்டு சிரித்ததை எண்ணி மனம் கொண்டாட்டம் போட்டது. அவனுக்குத் தெரியும் தங்களின் கடை விஷேசத்தில் பார்த்தது மட்டும்தான் அவளின் நினைவில் இருக்குமென்று. இருப்பினும் தன்னை நினைவு வைத்திருக்கிறாள் என்பதே சந்தோஷத்தைக் கொடுத்தது.

வெளியே பந்தலில் நிறைய பேர் அமர்ந்திருக்க, உள்ளே வரவேற்பறையில் சின்னதாக மணப்பந்தல் போட்டு, ஐயர் வைக்காமல் பெரியவர்கள் முன்னிலையில் நடக்கவிருக்கும் திருமணமாகையால், மணமகன் அங்கிருந்த அலங்கார சேரில் அமர்ந்திருக்க, பெண்ணை அழைக்கச் சொன்னதும் பாகீரதி அண்ணனிடம் சொல்லி தோழிக்குத் துணை சென்றாள்.

மணமகன் அருகில் தாரிணியை அமரவைக்க, மணமகனோ இருக்கையில் இருந்து எழுந்தான். என்னவென்று பார்த்தவளிடம், “சாரி இந்த கல்யாணம் நடக்காது” என்றான் அவளின் அதிர்வை பொருட்படுத்தாது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
Why any affir for him where he can’t tell his parents when they are at home
சரியான நேரத்தில் திருமணத்தை மறுத்தால் அவன் நினைச்சதை சாதிக்கலாம் எண்ணம் போல.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top