- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
24
“புதுசா மேரேஜானா, அப்படி இப்படித்தான் பேசிக்கணும். இப்படிப் பேசலன்னா அவங்க அப்நார்மல் பெர்சன்ஸ்ல சேர்ந்திருவாங்க. புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேரும், அவங்க என்ன நினைப்பாங்களோன்னு பொண்ணும், அவ என்ன நினைப்பான்னு ஆணும், ஒருத்தருக்கொருத்தர் டீசன்டா நடக்கணும்னு நினைச்சி, தங்களோட உள்ளத்து உணர்வுகளை துணைகள்கிட்ட மறைச்சிப் பொய்யா வாழ்றதுக்குப் பெயர் டீசன்டானவங்க இல்ல. அப்நார்மல் பெர்சன்ஸ். கொஞ்ச நாள்ல யாருக்கும் உண்மையா இருக்க முடியாம, அந்த நடிப்பெல்லாம் வெறுத்துப்போய் சண்டையில ஆரம்பிச்சி, கடைசியில டைவர்ஸ்ல வந்து நிற்பாங்க. கல்வியை எப்படி புரிஞ்சி உணர்ந்து படிக்கணுமோ, அதுபோலத்தான் கலவியும். எப்படி என்னோட தத்துவம்? நீயும் எதுவும் சொல்றதா இருந்தா வெளிப்படையா சொல்லிரு அம்மு!” என்று கண்சிமிட்டினான்.
கணவனின் கன்னம் பிடித்து, “ஏய் முறைப்பையா! சும்மா கலக்குற போ. ஆனாலும், ஓவரா பேசுறப்பா நீ. உன்னளவுக்கு எனக்கு விவரம் பத்தாது.”
“விவரம்லாம் மச்சான் சொல்லித் தர்றேன்டா முறைப்பொண்ணு.”
“உங்களுக்கெப்படித் தெரியும்?”
“சொல்லித் தெரிவதில்லையடி மன்மதக்கலை!” என்று விளக்கமளிக்க,
“ம்... மன்மதன்தான். நான் கட்டிக்கிட்ட மன்மதன், மயக்கிவிட்டான் என்னை எனையறியாமல்.”
‘வாவ்! வாவ்! வாவ்! பாக்ஸ் செம டயலாக். கருத்தெல்லாம் களைகட்டுது’ என்று துள்ளிக்குதித்தது மனசாட்சி.
“ஸ்ஸ்... நாங்க பெர்சனலா பேசும்பொழுது வெளிய உனக்கென்ன வேலை? கெட் இன்” என்று சத்தமில்லாமல் தன் மனதைத் திட்டினாள்.
‘ஹேய் பாக்ஸ்! இந்தச் சீனுவ எனக்குள்ள முதல்ல நான்தான் கேட்டேன். எனக்கே கெட் இன்னா. எதுக்காவது என்கிட்ட ஹெல்ப்கு வருவல்ல, அப்ப இருக்குடி உனக்கு.’
“போ! போ வரும்போது பார்த்துக்கலாம்.”
“என்ன ரதி?” என்ற கணவனின் குரலில் கலைந்தவள், ‘ஹான்’ என விழிக்க, “அந்தக் கலையை நாம சேர்ந்து கத்துக்கலாம் சொன்னேன் ரதிமா. இப்ப ஒத்துக்கறேன் உனக்கு காது டமால்னு” என்றான் கேலியாய்.
“என்னது!!”
“அதான்மா. டமாலு டமாலு டும்மீலு டுமீலு. டுமீலு டுமீலு டம்மாலு டமாலு” என்றான் பாடியபடி கண்ணடித்து.
“வாவ்! டைமிங் சாங் சூப்பரா பாடுறீங்க. எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்?”
“பாடுறேன் நம்ம பர்ஸ்ட் நைட் அப்ப.”
“நோ நோ. எனக்கு இப்பவே வேணும். சும்மா ராக் மியூசிக்ல ஒரு சாங்.”
“ஏன்டி குத்து சாங் கேட்கிற நேரமா இது? இப்ப ஏழுமணி மாலை மயங்கி இருட்டு தழுவியிருக்கு. மனம் மயக்கும் பாட்டு கேட்காம குத்து சாங் கேட்கிற?”
“ப்ச்... எனக்கு தோணுறதைத்தான் கேட்க முடியும். நேரத்துக்குத் தக்க மாதிரியெல்லாம் பேசமுடியாது. ம்... பாடுங்க” என்றாள்.
சில நொடிகள் யோசித்தவன்,
1 2 3 4 கெட் ஆன் த டான்ஸ் ப்ளோர்
பூட்டிஷேக் பூட்டிஷேக் டப்பான் கூத்து கார்டு கோர்
ஷோல்டர் ஹிசக் மிசக், பாடி ஹிசக் மிசக்
ஜிம்மி ஜிம்மி ஜிம்மி ஜிம்மி ஜிம்மி ஜிம்மி சம் மோர்!”
ஒவ்வொரு வரிக்கும் அவளை இடித்தபடி கையைப் பிடித்து சுற்றுவதுபோல் செய்து பாடியபடி ஆட, அதை ரசித்தவள் நேரமாவதை உணர்ந்து, “போதும்ங்க போதும் கிளம்பலாம். நவீன் வெய்ட் பண்ணிட்டிருக்கான்.”
“அவன் வெய்ட் பண்றது இருக்கட்டும். நான் வெய்ட் பண்றேன் ரதிமா உன்னோட பதிலுக்காக?”
“எந்தப் பதில்?” என்றாள் புரியாதவளாய்.
“திரும்பவும் முதல்லயிருந்தா. நோ பேபி. நம்ம பர்ஸ்ட் நைட் சீன் இன்னும் கம்ப்ளீட்டாகல?”
“கம்ப்ளீட்டாகாததை ஏன்ங்க கட்டி இழுக்குறீங்க?”
“கேள்வி கேட்டா, பதில் பதில்னு ஒண்ணு இருக்கே அதைச் சொல்லணும். அதை விட்டுட்டு என்ன பதில் கேள்வி?”
சற்று அமைதியானவள், “அது இந்த பிரச்சனையை சால்வ் பண்ணிட்டு. அப்புறமா...” என இழுக்க,
“ஹேய்! இது செல்லாது செல்லாது. என்ன நீ ஏற்கனவே ரெ...ண்...டு... மா...ச...ம் மேலாகிருச்சி. அப்புறமும் அந்தா இந்தான்னு ஆட்டம் காட்டுற.”
‘ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோங்களேன்’ என்பதுபோல் மனைவியின் பார்வையிருக்க,
‘ம்கூம் இந்த பார்வைக்கு மயங்காதடா ஸ்ரீ. அப்புறம் உன்னை ஒரேடியா ஓரம் கட்டிருவா. மாத்தி யோசி’ என மூளை அறிவுறுத்த, “சரி நீ சொன்னதை அக்ரீ பண்ணிக்கிறேன். அதுக்கு முன்னாடி ஒரு குட்டி ஹனிமூன் பக்கத்துல இருக்கிற குற்றாலத்துல. இந்த டீல் ஓகேவா?”
“வாட்? ஹனிமூனா? இப்ப நான் தமிழ்லதான வேண்டாம்னு சொன்னேன்.”
“வாட் ஹனிமூன் இல்லமா ஹ...னி...மூ...ன். அதாவது தேன்நிலவு” என நிறுத்தி நிதானமாக சொன்னான்.
“அந்த பேச்சை விடுங்க சொன்னேன். அப்புறம் இப்படியே இறங்கி கிளம்பிடுவேன்” என மிரட்டினாள்.
“ஹ்ம்... பேசுறதுக்கு கூட தடாவா?”
“ம்... தடாதான்” என்று மனைவி சொன்னபோது, ஏனோ அவனுக்கு ஆந்திராவில் உள்ள தடா நினைவில் வந்தது. அதைக்கேட்டு அவளை நோகடிக்க மனமில்லாமல் அவளையே பார்த்திருந்தான்.
“ஏங்க குற்றாலம் இங்க இருந்து எவ்வளவு தூரம்?”
“ஃபைவ் கிலோமீட்டர்.”
“வாவ்! ஜஸ்ட் ஃபைவ் கிலோமீட்டர். ஓ மை காட்! நான் ரொம்ப தொலைவு இருக்கும்னு நினைச்சேன். அங்க நாம போகலாம்ங்க. ப்ளீஸ் ப்ளீஸ். எப்ப கூட்டிட்டுப் போறீங்க?”
மனைவியின் மகிழ்ச்சி பார்த்து, “நாளைக்கே போகலாம்” என்றான்.
திடீரென்று கணவனின் கன்னத்தில் முத்தமிட்டு, “தேங்க்யூ தேங்க்யூ. நான் இதுவரை குற்றாலம் பார்த்ததில்ல. நாளைக்கு செமயா என்ஜாய் பண்ணுவேன்” என்று குற்றாலக் கனவில் இருந்தவள் கணவன்புறம் திரும்ப, அவனின் பார்வை மாற்றம் மனதுக்குள் எதையோ உணர்த்த, அதுவரை இருந்த குதூகலம் போய், ஒருவித வெட்கம் ஆட்கொள்ள, “எ...என்ன பார்க்குறீங்க?” என தயங்கியபடி கேட்டாள்.
சட்டென்று அவளின் முகத்தை அருகே இழுத்து இதழில் முத்தமிட, முதலில் புரியாது விழித்தவள், பின் தானும் அதில் ஐக்கியமாக, உடலில் புதுவித அலைவரிசைகள் அனலடித்தது சற்று நேரத்தில் பிரித்தவன், “இன்னும் இங்க இருந்தோம். ம்கூம்... சரிவராது” என தலை உலுக்கி “போகலாம்” என்று காரை எடுத்தான் கவரை விலக்கியபடி.
மாயப்புன்னைகை ஒன்று உதடோடு நிரந்தரமாக நின்றுவிட, கணவனின் தோள் சாய்ந்தவாறு அணைத்தபடி இருக்க, அவளின் நெற்றி முடியை விரல்களால் விலக்கி மென்மையாக முத்தமிட்டு காரைக் கிளப்பினான்.
அவர்கள் அணைத்தபடி இருந்ததையும், அவன் முத்தமிட்டதையும் பார்த்திருந்த இரு விழிகள் யோசனையில் ஆழ்ந்தது.
எட்டரை மணிக்கெல்லாம் வீட்டினுள் நுழைய, அங்கே இருந்தவர்களைப் பார்த்து, “ஹேய்! என்ன இது இப்படி எல்லாரும் இங்க? பெரியவங்க மூணு பேரைத் தவிர எல்லாரும் இருக்கீங்க. மை காட்! நாங்க எதிர்பார்க்கவேயில்ல!” என்று இருவருமாக கோரஸ் குரல்களில் கேட்க,
மொத்த கூட்டமும் திரும்பியது, “யாரது?” என கேட்டபடி.
“ம்... எல்லாருக்கும் கொழுப்பு. நவீன் போன் பண்ணினப்ப கூட இதை எதிர்பார்க்கல. எங்ககிட்ட யாருமே எதுவுமே சொல்லல?” என்று குறைபட்டாள்.
“வாங்க! வாங்க! மும்பை போன பாக்கி மேடம். திருநெல்வேலி ஆலங்குளம் தான் மும்பைன்னு இதுவரை எங்களுக்குத் தெரியாம போச்சே. தெரிஞ்சிருந்தா எப்பவோ வந்திருப்போமே. அதுவுமில்லாம பெருசுங்களோட சேர்த்து, சின்ன ஜோடி ஒண்ணு இன்னும் வரல. என் கணிப்பு சரின்னா, அவங்களையும் கூடிய சீக்கிரம் இந்த மும்பையில எதிர்பார்க்கலாம்.”
“தர்ணி யூ டூ!”
“எஸ் டியர். மீ தான். அடிங்க… உன்னை” என துரத்திப் பிடித்து இரண்டு அடிகள் போட்டு, “ஏன்டி என்ன தைரியமிருந்தா, என்கிட்ட கூட சொல்லாம அப்பாவும், பொண்ணும் மட்டும் ப்ளான் பண்ணி காயை நகர்த்தியிருப்பீங்க” என்று கத்தினாள் இல்லை மொத்தினாள்.
“ஹேய் தர்ணி! எங்க ப்ளான் உனக்கெப்படித் தெரியும்?”
“ஆமா. ஊர்ல இல்லாத ப்ளான். மாமாவாலதான் கண்டுபிடிச்சதே. நீ போன பின்னாடி, அச்சோ! என் பொண்ணு மும்பை போயிட்டாளே. எப்படி இருக்காளோ தெரியலையேன்னு, உலகத்து நடிப்பெல்லாம் ஒண்ணா சேர்க்கிற மாதிரி என்ன ஆக்ட்டுன்ற. ஒரு வகையில உங்கப்பாவோட ஓவர் நடிப்புதான் காட்டிக்கொடுத்துச்சி. பாரதி அத்தைகிட்டக் கூட அவர் சொல்லல பாரேன். உன்கிட்டப் பேசவே இல்லன்னு சொல்லி, ரகசியமா பேசினதை அத்தை கண்டுபிடிச்சி கேட்ட பின்னாடி, அவங்ககிட்ட மறைக்க மனசில்லாம எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. இந்த ஸ்ரீ அண்ணா வந்தப்பவாவது எங்களுக்கு சொல்லியிருக்கலாம்ல. அவரும் சைலண்டா வந்து பொண்டாட்டியோட டூயட் பாடிட்டிருக்காரு” என்றாள்.
“ஹேய்! அது டூயட் இல்ல குத்து சாங். சூப்பரா பாடுனாங்க தெரியுமா?” என்றாள் வேகமாக.
“ஓஹ்ஹோ...” என்ற கோரஸ் குரல்களில் தான் சொன்னது புரிய, ‘அச்சோ நம்மளை கிண்டலடிச்சே காலி பண்ணிருவாங்களே!’ என்று கணவன் பின் ஒழிய,
“ஹேய் பாகீ! என்ன பாட்டு படிச்சான் என் தம்பி?” என சுகந்தியும், “அத்தை சொல்லுங்க என்ன பாட்டு?” என சுகந்தியின் பிள்ளைகள் ஒருபுறம்... “மாப்ள என்ன சாங் பாடின? நாங்களும் கேட்போம்ல” என்று ப்ரவீணும் கேட்கவும், ஸ்ரீனிவாசன் வேகமாக கைபேசியை எடுத்து யூ ட்யூப்பில் பாடலைத் தேடி போட்டுவிட்டான்.
“ஹேய்” என உற்சாகமாக குதூகலித்தாலும், “இதெல்லாம் செல்லாது மச்சான். உங்க ஒரிஜினல் வாய்ஸ்ல பாடுங்க” என்றான் நவீன்.
“இங்க என்ன காம்பெடிஷனா நடக்குது. என்னால முடியாதுப்பா. அது என் முறைப்பொண்ணுக்கான ஸ்பெஷல்” என்றான் மனைவியை பார்வையால் விழுங்கியபடி.
“டேய் மாப்ள! உன்னோட ரொமான்ஸ் ஜொள்ளுல நடுக்கூடம் நனைஞ்சிரப்போகுது” என்று தங்களின் கேலியைத் தொடர,
“அண்ணி பாருங்கண்ணி அண்ணா கிண்டலடிக்கிறாங்க.” பாகீரதி சுகந்தியிடம் புகாரளித்தாள்.
“ஏங்க புள்ளைய கிண்டலடிக்கீங்க. பாருங்க ரொம்ப வெக்கப்பட்டு ஏற்கனவே சிவந்த முகம், இன்னும் சிவக்குது” என்று அவளுக்கு ஆதரவளிப்பது போல் கால்வாரினாள்.
“அண்ணீஈஈ” என பல்லைக்கடித்து, “போங்க” என்று வேகமாக தங்கள் அறைக்குள் சென்று மறைந்தாள்.
அதைப் பார்த்திருந்த பெரியவர்களுக்கு தங்களறியாமல் சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது. மற்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்த, “இப்பத்தான் புள்ளைகளா வீடு வீடு மாதிரியிருக்கு. இத்தன காலமா யாருமில்லாம தனியா அனாதை மாதிரி இருந்துட்டோம். எங்க காலத்துக்குள்ள உங்க எல்லாரையும் இப்படிப் பாக்கமாட்டோமான்னு ஏங்கிப் போயிட்டோம். இப்ப இந்த நிமிஷத்துல எங்களுக்கு எது நடந்தாலும் நிம்மதியா போவோம்” என்றபடி கண்கலங்கினர்.
சிறியவர்களோ அவர்களின் கண்கள் துடைத்து, “இனி இது நிரந்தரம்” என்று அவர்களை சரி செய்தார்கள்.