- Joined
- Aug 31, 2024
- Messages
- 834
- Thread Author
- #1
19
ராமுவுக்கு சரியாகும் முன், அந்த ஏற்றுமதி ஆர்டருக்கான ஆடையில் எம்ப்ராய்டரி பூவிற்கு நடுவில் சின்னதாக குழந்தை பொம்மை வைத்து அயனிங் செய்ய, ஏற்கனவே கொடுத்த மாடலை விட இது அற்புதமாக வர, ஆர்டர் கொடுத்த நிறுவனத்துக்கு கூட்டுத் தொலைபேசி அழைப்பு (கான்பரன்ஸ் கால்) மூலம் புது மாடல் ஆடைக்குச் சம்மதிக்க வைத்து, அதை அனுப்பி சேர்ந்த பின்னரே ஆசுவாசமூச்சி விட்டார்கள்.
அந்தத் தவறு எப்படி நடந்ததென்று தெரிய வேண்டியிருந்தது. அப்பொழுதுதான் தன் தந்தையின் தனிப்பட்ட மடிக்கணிணி நினைவு வந்து அதைச் சோதித்துப் பார்க்க, மை ஃபைல் என்ற பகுதி திறக்க முடியாதிருக்க, ஸ்ரீனிவாசன் சொன்ன, ‘அம்மு, ரதி, இல்லன்னா அம்முரதின்னு போடுங்க” என்றதும், “அம்முரதி” அழகாய் மலர்ந்து வழிவிட, அதில் அசல் ஆவணம் (ஒரிஜினல் டாக்குமென்ட்) இருந்தது. அதன்பின் கார்மெண்ட்ஸ் மேலாளர் எல்லாவற்றையும் திட்டமிட்டே அழித்திருப்பது தெரிய, சிலபல உருட்டல், மிரட்டல், அடிகளுக்குப் பிறகு தன்னுடைய தவறை மறைக்க, அனைத்தையும் அழித்து மாற்றியதை ஒத்துக்கொள்ளவும், அபராதத்துடன் வேலை நிறுத்தமும் செய்தார்கள்.
ராம் முழுமையாக கண்திறந்து பேச, முழுமையாக பனிரெண்டு நாள்களானது.
அதற்குள் அந்த வெளிநாட்டு ஏற்றுமதிக்கான ஆடையில், எம்ப்ராய்டரி பூவிற்கு நடுவில் சின்னதாக பேபி டால் வைத்து அயனிங் செய்ய, ஏற்கனவே கொடுத்த கொட்டேஷன் மாடலை விட இது அற்புதமாக வர, ஆர்டர் கொடுத்த நிறுவனம் கான்பரன்ஸ் ஹால் போட்டு புது மாடலுக்கு சம்மதிக்கவைத்து அதை அனுப்பி, சரியாக சேர்ந்த பின்னரே ஆசுவாசமூச்சி விட்டார்கள்.
அந்த தவறு எப்படி நடந்ததென்று தெரிய வேண்டியிருந்தது. அப்பொழுதுதான் தன் தந்தையின் ப்ரைவேட் லேப்டாப் நினைவு வந்து அதை சோதனை செய்தார்கள். அதில் மை ஃபைல் திறக்காமலிருக்க, ஸ்ரீனிவாசனின் அறிவுரையில், “அம்மு, ரதி இல்லன்னா, அம்முரதின்னு போடுங்க” என்றதும் “அம்முரதி” அழகாய் மலர்ந்து வழிவிட, அதில், அசல் ஆவணங்கள் (ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸ்) இருந்தது. அதன்பின் மேனேஜர் எல்லாவற்றையும் திட்டம் போட்டே அழித்திருப்பது தெரிய, சில பல உருட்டல், மிரட்டல், அடிகளுக்குப் பிறகு தன்னுடைய தவறை மறைக்க அனைத்தையும் அழித்து மாற்றியதை ஒத்துக்கொள்ள அபராதத்துடன் வேலை நிறுத்தம் செய்தார்கள்.
கண்விழித்த ராமச்சந்திரன் கண்திறந்து பார்த்த முதல் உறவே தன் மகளாயிருக்க, அவளை கைநீட்டி அழைத்ததும், ஓடி வந்து கைகளுக்குள் சரணடைந்தவள், “ஐம் சாரிப்பா. நான் உங்களைப் புரிஞ்சிக்கவே இல்லைல்ல. ஐ லவ் யூப்பா” என்றாள் கண்களில் நீரோடு.
‘அடிப்பாவி! கட்டின புருஷனுக்கு ஐ லைக் யூவைக் கூட காணோம். அப்பாவுக்கு ஐ லவ் யூவா!’ காதில் புகை வந்தது ஸ்ரீனிவாசனுக்கு.
“அதெல்லாம் கிடைக்கும் சீனு. யூ டோண்ட் ஒர்ரி” என்றார் ராம் அவனைப் புரிந்தவராய்.
“எங்க மாமா ரொம்ப கஷ்டம்போல தோணுதே!” என்று பரிதாபமாகச் சொல்ல,
“ஏன்மா அவனுக்கும்தான் சொல்லிறேன்” என்றார் ராம்.
இருவரும் என்ன பேசுகிறார்கள் என புரியாமல் விழித்தவள், “என்னத்தப்பா சொல்லணும்?” என்றாள்.
“என்கிட்ட சொன்ன ஐ லவ் யூவைத் தான்மா.”
“அப்பா” என்று பல்லைக்கடித்து, கணவன் முகம் காண, அவனோ அதே அப்பாவி பாவனையில் நின்றிருக்க, சட்டென்று முகம் திருப்பி, “அந்த வார்த்தை உங்களுக்கு மட்டும்தான்ப்பா” என்றாள் அழுத்தமாக.
“மாமாஆஆ...” என்று ஸ்ரீனிவாசன் நெஞ்சில் கைவைத்து அலற...
“என்னாச்சி? ஏன் நெஞ்சைப் பிடிக்கிறீங்க? டாக்டர்...” என்று சத்தமாக அழைத்து, படபடப்புடன் கேட்ட மனைவியை அள்ளிக்கலாம் போலிருந்த எண்ணத்தை உதறினான்.
மாமனாரின் ‘நீ நடத்துடா மருமகனே!’ பார்வையில் தைரியம் வர, “ஆஆஆ மா...மா...” என சத்தம் குறையாமல் வர, கணவனின் நெஞ்சை நீவி விட்டபடி, “என்னங்க செய்யுது? கொஞ்சம் பொறுத்துக்கோங்க. டாக்டர் கூட்டிட்டு வர்றேன்” என நகரப்போனவள் கைபிடித்து நிறுத்தி, “என் பக்கத்திலேயே இரு ரதி” என திக்கித்திக்கிப் பேசினான்.
“நெஞ்சுவலின்றீங்க. பக்கத்துல இருந்தா சரியாகிருமாங்க. நான் டாக்டர் கூட்டிட்டு வர்றேனே” என்றவாறு கணவனது மார்பை கையால் தேய்த்துவிட்டாள்.
“சரியாகிரும் ரதிமா. எனக்காக ஒரு டைம் நீ ஐ லவ் யூன்னு சொன்னேனா எல்லாமே சரியாகிரும்” என்று காதலாக வந்த வார்த்தையில், உணர்வு வந்தவள் தன்னிடமிருந்து அவனைத் தள்ளிவிட்டு, “யூ சீட்டர். உங்களை... ட்ராமாவா பண்றீங்க?” என்று விரட்ட,
“மாமா காப்பாத்துங்க. அப்படியே அந்த வார்த்தையையும் சொல்லச் சொல்லுங்க” என்றான் சத்தமாக.
“சீனு அது உன் சாமர்த்தியம். இதுல என்னை இழுக்காத” என்று சிரித்தபடி வந்த பதிலில், “கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும், ட்ரை பண்ணுடா” என தனக்குத்தானே சொல்ல, அதற்குள் மற்றவர்களும் வர, நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த இடமே கலகலப்பானது.
தம்பியின் உடல்நிலையில் தேறுதல் தெரியவுமே, மேனகா தன் குடும்பத்தினருடன் கிளம்ப, தன் அத்தையை தனியாக அழைத்த பாகீரதி, தனக்குத் தேவையான ஒருசில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முயற்சிக்க, முழுமையான தகவல் இல்லாவிட்டாலும் அதைத் தீர்த்து, இன்னும் ஒரு சிலரையும் பழி தீர்க்க எண்ணி ஒருசில முடிவுகள் எடுத்தாள். அதன் காரணமாக கணவனிடம் தொடர்ந்து தன் ஒதுக்கத்தைப் பலவகையிலும் காட்டவும் செய்தாள்.
மருத்துவமனையில் இருந்து வீடு வர, நீண்ட வருடங்களுக்குப் பின் சேர்ந்த ராம், பாரதி ஜோடிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள் பாகீரதி, தாரிணி தோழிகள்.
அப்பாவின் உடல்நிலையை காரணம் காண்பித்து பாகீரதி திருப்பூரிலேயே இருக்க, ஸ்ரீனிவாசன்தான் மனைவியின் பாராமுகம் பார்த்து ஒன்றும் புரியாமல் அவளைவிட்டு சென்னைக்குச் சென்றான்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து தந்தையிடம் வந்தவள், தான் மும்பைக்கு பிரபல மாடலிங் டிசைனரிடம் ட்ரைனிங் செல்வதாக சொல்ல, ராமகிருஷ்ணனின் அத்தனை மறுப்புகளுக்கும் அதற்கேற்ப பதிலைச் சொல்லி, மற்றவர்களை சமாளிக்க வேண்டிய பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தாள். மகள் பேச்சு மீறாத ராம் மற்றவர்களிடம் அவள் போய்வரட்டும் என்றும் சொல்லிவிட்டார்.
மீறி கேட்ட தாயிடம், “நீங்கதான மேரேஜ் பண்ணிட்டு எங்க வேணா போ சொன்னீங்க. இப்ப என்னாச்சி?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
“என் பொண்ணுமேல உள்ள நம்பிக்கையில, எந்த தப்பான முடிவும் எடுக்கமாட்டன்னு சொன்னேன். அதுவுமில்லாம சீனுவையும் புரிஞ்சிப்பன்னு நினைச்சேன்” என்றார்.
“நான் யாரையும் புரிஞ்சிக்க வேண்டியதில்லம்மா. கல்யாணம் பண்ணிக்கச் சொன்னீங்க பண்ணிக்கிட்டேன். அதுவும் ப்ளாக்மெய்ல் பண்ணி ஒத்துக்க வச்சீங்க. என்னோட வேலை முடிஞ்சதும் நான் கிளம்பிட்டேன். ஆக்சுவலா நான் ரொம்ப லேட் தெரியுமா? சோ, என்னைத் தடுக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்” என்று சற்றும் இளகாமல் பேசினாள்.
“அம்மு! இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கல” என்றவரின் குரலில் வேதனை நிரம்பியிருந்தது.
“எதிர்பார்த்திருக்கணும்மா. எதிர்பார்க்காதது உங்களோட தப்பு. எனக்கு ஃப்ளைட் டைமாகிருச்சி, நான் பேக் பண்ணனும் கிளம்புறீங்களா?” என்று எடுத்தெறிந்து பேசி ஆடை எடுத்துவைக்க ஆரம்பித்தாள்.
“என்னை வாயை மூடிட்டு போகச்சொல்றியா அம்மு?” தாயின் கண்ணீர்க் குரலில், “ம்மா... ப்ளீஸ் என்னைப் புரிஞ்சிக்கோங்க. என்னால இங்க இருக்க முடியாது. இதுல எனக்கான எதிர்கால வாழ்க்கை அடங்கியிருக்கு. இன்னும் சிக்ஸ் மன்த் தான்ம்மா. என் மனசுக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும். இந்த ஆறு மாசத்துல எல்லாத்தையும் சரி பண்ணிட்டு வர்றேன்” என முகத்திற்கு நேரே சொல்ல தைரியமில்லாமல் குனிந்தபடியே பேசினாள்.
“சரி பண்ணப்போறியா?” என்ற தாயின் கேள்வியில், சட்டென்று நாக்கு கடித்தவள், “ஸ்..அது ட்ரெயினிங்க சரியா முடிச்சிட்டு வர்றேன்னு சொல்ல வந்தேன். டங்க் ஸ்லிப்பாகிருச்சி.”
“என்னவோ பண்ணித்தொலை. டங்க் ஸ்லிப்பான பரவாயில்ல. வாழ்க்கையை ஸ்லிப்பாக விட்டுராம இருந்தா போதும். அநியாயமா சீனுவோட வாழ்க்கையை கெடுத்துட்டேனோன்னு நினைக்கத் தோணுது” என புலம்பியபடியே செல்லும் தாயை, சற்று வேதனையுடனேயே பார்த்திருந்தாள் பாகீரதி.
ஏதோ ஒரு உணர்வின் உந்துதலில் திரும்பியவள் பார்வை பார்த்தபடியே இருக்க, கதவினோரம் சாய்ந்தபடி அவளை குறுகுறுவென்று பார்த்திருந்தவனின் தோற்றமும், பிடித்திழுக்கும் அந்தப் பார்வையும் ஜில்லென்ற சாரலாய் மனதிற்குள் விழ, சட்டென்று தன் இதயத்துடிப்பு அதிகரித்தது. என்னவென்று கண்மூடியவளுக்கு, மனம் நன்றி சொன்னது. ‘என்னிடம் அனுப்பமாட்டேன் என்றவனை எனக்குள் தந்தாயே’ என்று. ‘ஹையோ! அவசரப்பட்டுட்டேனே!’ என்றெண்ணி வேகமாக கண்திறக்க கண்முன் அவள் மனக்கள்வன்.
முதன்முதலில் அவளிடம் பேசிய, ‘உன்கிட்ட நான் எதிர்பார்க்கலை’ என்ற அதே குற்றச்சாட்டும் பாவனையில் நின்றிருந்தான். “மத்தவங்ககிட்ட நீ என்ன வேணும்னா பொய்க்காரணம் சொல்லலாம் ரதி. ஆனா, என்கிட்ட முடியாது. நீ பயப்படுற ரதி. எங்க உன்னையறியாம உன் மனதை கொட்டிருவியோன்னு” என்றான்.
“அ...அப்படில்லாம் எதுவுமில்லை” என்றாள் வேகமாக.
“எப்படில்லாம் எதுவுமில்லன்ற? உன் கேரக்டருக்கு இந்த நடிப்பு செட்டாகலமா. உன்னோட இந்த பயம் அர்த்தம் இல்லாதது கூட. கொஞ்சம் டைம் எடுத்துக்கோ. ஆனா, எங்கேயும் போகக்கூடாது. ட்ரெய்னிங் எடுக்கணும்னா நம்ம கம்பெனி இருக்கு. இல்லையா, உனக்குப் பிடிச்ச ப்ரொபஷன்ல சென்னையிலயே சேர்த்துவிடுறேன். இங்கேயே இருந்துறேன். எனக்காக இல்லைன்னாலும் அத்தைக்காக” என்ற கணவனின் கெஞ்சல்கள் மனதைத் தொட்டு நேசச்சாரலில் நனைந்த போதும்,
“இல்லங்க. பலம் தெரிஞ்சவங்களோட இருக்கிறது ப்ராப்ளமில்லை. என்னோட பலகீனம் சாரி, பலகீனம்ன்றதோட நான் செஞ்ச தப்பை நேர்ல பார்த்தவங்க நீங்க. ஒருடைம் இல்ல ஒருடைம் எதாவது சொல்லிட்டா?” என்றாள் வேறுபுறம் பார்த்தபடி.