New member
- Joined
- Mar 30, 2025
- Messages
- 3
- Thread Author
- #1


"கெட்டி மேளம் கெட்டி மேளம்.."என்று ஐயர் சொல்ல.மங்கள வாத்தியங்கள் முழங்க. பெரியோர்களின் ஆசியோடு Dr.இதயக்கனி அவன் மாமன் மகள் இதழியின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தான்.
இந்த திருமணத்தில் இதயக்கனியின் அன்னைக்கு பேரானந்தம் என்றால், இதழியின் தந்தைக்கு கோடி கணக்கான சொத்துக்கு இனி தன் மகளும் சொந்தக்காரியாக மாற போகிறாள் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
Dr.இதயக்கனி பெயருக்கு ஏற்றது போலவே இனிமையான உள்ளம் படைத்தவன்.
இதழியும் அவள் பெயருக்கு ஏற்றது போலவே கொன்றைப் பூவின் நிறத்தழகி . கொன்றைப் பூ கேரளாவின் மாநில மலராகும். இதழியும் கேரளத்து பைங்கிளி தான்.இதழியின் அன்னை வாணியை
அவள் தந்தை Dr.அசோகன் காதலித்து திருமணம் செய்துக் கொள்ள, இவர்கள் காதலுக்கு அடையாளமாக இதழி பிறந்தாள்.
Dr.அசோகனின் அக்கா சகுந்தலா
கோடிஸ்வரன் ரகுவரணை மனமுடித்து இதயக்கனியை பெற்றெடுக்க.
ரகுவரன் தனது இளவயதிலேயே இதயக் கோளாறால் இறைவனடி சேர்ந்தார்.
கணவனை இழந்த சகுந்தலா தன் மகன் இதயக்கனிக்கு தன் தம்பி மகள் இதழியை ஊர் போற்ற இன்று திருமணம் செய்து வைத்தவர்
"தம்பி..உனக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்!! என் மகன் நிலைமை தெரிந்தும் உன் மகளை அவனுக்கு திருமணம் செய்து கொடுத்ததுக்கு உனக்கு காலமெல்லாம் நான் நன்றி கடன்ப் பட்டு இருக்கேன்."
என சகுந்தலா கண்கள் கலங்க
"அக்கா..இதயக்கனி என் மாப்புள்ள. அவருக்காக நான் இதைக் கூட பண்ண மாட்டேனா?"என்றார் அசோகன்.
"இருந்தாலும் டா தம்பி..."என்று சகுந்தலா மேற்கொண்டு பேசும் முன்னே
தன் அக்காவின் தோளை ஆறுதலாக பற்றி விடுவித்து "நீ கவலைப்படாத அக்கா.இனி என் மருமகனும் உன் மருமகளும் நிம்மதியா வாழ போறாங்க." என்ற அசோகனின் வார்த்தையை கேட்டு சகுந்தலாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது.
"என்ன Mr.இதயா தாலி கட்டியதில் இருந்து என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேச தயங்குறீங்க. என்ன வெக்கமா?" என்று இதழி தன் கணவனை சீண்டும் விதமாக கேட்டதும்,
"வெக்கம் இல்லை Mrs இதயக்கனி. எனக்கு உங்களை பார்த்தால் பயம்!!." என்று அழகாய் கண்கள் சிமிட்டி பதில் சொன்னவனை பார்த்து செல்லமான கோபத்துடன் அவனை முறைத்தாள் இதழி.
திருமணத்திற்கு வந்த அனைவரும் மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்க,
மணமக்கள் இருவரும் ஜோடியாக இதயக்கனியின் பங்களாவிற்கு சென்றவர்கள் அங்கே செய்ய வேண்டிய எல்லா சடங்குங்களையும் செய்து முடித்தனர்.
"அப்புறம் மாப்புள்ள.நீங்க ஆசைப்பட்டது போலவே உங்க கல்யாணத்தை மாமா நல்லபடியா முடிச்சி வச்சிட்டேன் பார்த்திங்களா." என்று தற்பெருமை பேசிய அசோகனை பார்த்து "ஆமா மாமா நீங்க எப்பவுமே எல்லா விஷயத்திலும் கிரேட் தான்." என்று தன்னடக்கத்துடன் சொன்னான் இதயக்கனி.
"வாணி எனக்கு சூடா ஒரு காபி எடுத்துட்டு வா. மாப்பிள்ள உங்களுக்கும் காபி வேணுமா?"என்று அசோகன் கேட்டதும்"எனக்கு வேணாம் மாமா." என்ற இதயக்கனி அவன் கவனத்தை கைபேசியில் செலுத்தி இருக்க,வாணியோ தன் கணவனை கோவமாக முறைத்தவள் பணியாளர்கள் மூலம் அசோகனுக்கு காபியை கொடுத்து அனுப்ப "இவளுக்கு திமிர் அதிகமாச்சு." என்று புலம்பியப்படி காபியை பருகினார் அசோகன்.
அன்றைய இரவு Dr.அசோகனின் வீட்டில் புதுமண ஜோடிகளுக்கு முதலிரவு ஏற்பாடு செய்து இருக்க,இதயக்கனியின் அம்மாவும் இவர்களுடன் அங்கே சென்று இருந்தார்.
இதழியின் அறையில் இதயக்கனி தன் காதல் மனைவி வருகைக்காக காத்து இருக்க.
முதலிரவு அறைக்குள் செல்லும் முன்னே
"இதழி.." என்று அழைத்த சகுந்தலா கண்கள் கலங்கி
"என் மகனை பத்திரமா பார்த்துக்கோமா." என்றதும்
"அத்த..என் மாமாவை நான் பார்த்துப்பேன். நீங்க கவலைப்படாதிங்க." என்று ஆறுதலாக சொன்னாள் இதழி.
"இதழி..பார்த்து பக்குவமா நடந்துக்கோ." என்று அசோகன் தன் மகளுக்கு அறிவுரை கொடுக்க, இதழியின் அன்னைக்கோ இந்த திருமணத்தில் ஒரு துளி கூட விருப்பமில்லை என்ற பட்சத்தில் அவர் அங்கிருந்து சென்று விட, இதழி வெள்ளி பால் சொம்புடன் அழகு பதுமையாக அறைக்குள் நுழைந்தவளின் வதனத்தில் வெக்கம் நிறைந்து இருந்தது.
இதயக்கனி காதலுடன் தன்னவளை அவன் அருகே அழைக்க, இதழி தன் கணவனின் இதயத்தோடு இணைந்தவள் கழுத்தில் வைரக்கல் பதித்த இதய வடிவலான பதக்கம் கொண்ட சங்கிலியை அணிவித்தவன் "இதழி...இந்த டாலர்ல ஒரு ரகசியம் இருக்கு.நீ எப்போ என்னை மிஸ் பண்றியோ!அப்போ நீ இந்த இதயத்தை திறந்து பாரு.என் இதயம் உன்கிட்ட பேசும்." என்று இதயக்கனி சொன்னதும்.மேலும் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்ட இதழி
"உங்களுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா?" என்று கேட்டாள்.
"என்ன இப்படி கேட்டுட்ட!? என் பிரச்சனை தெரிஞ்சும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட என் மாமன் மகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்."என்ற இதயக்கனி சற்றும் தாமதிக்காமல் இதழியின் செவ்விதழில் தன் முதல் அச்சாரத்தை பதிக்க.இமைகள் மூடி அவன் அதரங்களில் இவளும் இணைந்து இருக்க.
"என் இதயத்தை கொடு.."என்று மிக அருகே கேட்ட குரலில் சட்டென்று மோகம் களைந்து விழிகள் திறந்து பார்த்த இதயக்கனியின் கண் எதிரே ஆறடியில் ஆணின் உருவம் தெரிந்ததும் இதழியை தன் வசமிருந்து தள்ளிவிட்டபடி கட்டிலில் இருந்து எழுந்தவன்
"யா..யாரு நீ!?"என கேட்டான் இதயக்கனி.
"என்னாச்சு இதயா?யாரை பார்த்து யாருன்னு கேக்குறீங்க?"என்ற இதழியின் கண் எதிரே இதயக்கனி குழப்பத்தில் நின்று இருந்தவன் முகமெல்லாம் முத்து முத்தாக வேர்த்து இருக்க,அவன் பயத்துடன் அந்த உருவத்தை சுட்டிகாட்டிய சமயம் மின்சாரம் தடைப்பட்டது.
"இருங்க இதயா நான் மெழுகுவத்தி எடுத்துட்டு வரேன்."என்ற இதழி அறையில் இருந்து வெளியே செல்ல,அந்த இருளிலும் அவன் கண்களுக்கு மட்டும் தெரிந்த ஆணின் உருவம் இருளின் ஆழத்திலிருந்து மெதுவாக நகர்ந்து இதயக்கனியை நெருங்கி வர,அவன் உடல் சூடேறி பயம் அவனை ஆக்கிரமித்து அவன் மூளையை நிலை குலையச் செய்தது.
"என் இதயத்தை கொடு.." என்று மீண்டும் அந்த குரல் கேக்கும் திசையை இதயக்கனி உற்று பார்க்க. அதே சமயம் கையில் மெழுகுவர்த்தியுடன் இதழி உள்ளே நுழைந்தவள் "இதயா.." என்று அழைத்ததும் அறையின் மூலையில் அந்த உருவம் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்து இருப்பதை பார்த்து "இதழி..அங்க..அங்க ஒரு உருவம்." என்ற இதயக்கனியின் இதயம் இயல்புக்கு மாறாக வேகமாய் துடித்தது.
"என்ன இதயா?எந்த உருவம்?"என்ற இதழி அந்த அறையை சுற்றி பார்த்தவள்.
"இங்க யாருமே இல்ல இதயா." என்று சொல்ல"அங்க..அங்க.."என்றவனை பார்த்து அந்த உருவம்"என் இதயத்தை கொடு.." என்று மீண்டும் கேக்க. இதயக்கனி அதே இடத்தில் மயங்கி சரிந்தவனை
"இதயா..இதயா.." என்ற பெயரை சொல்லி இதழி கத்தும் சத்தம் கேட்டு இருவரின் பெற்றோரும் இவர்கள் அறைக்குள் ஓடி வந்த தருணம் மின்சாரம் ஒளிர்ந்தது.
"இதழி என்னமா?"என்று சகுந்தலா பதற "இதழி..முதல்ல ஜன்னலை திறந்து விடு."என்ற அசோகன் இதயக்கனிக்கு சிகிச்சை அளித்தவர்
"பிபி அதிகமா இருக்கு..இதயா ரெஸ்ட் எடுக்கட்டும்.இதழி நீ பக்கத்துல இருந்து இதயாவை பார்த்துக்கோ." என்று அசோகன் சொன்னதும்.
"ஐயோ தம்பி.. என் மகனுக்கு என்னாச்சு?" என்று சகுந்தலா கதறி அழுததும்
"நோயாளி மாப்பிளைக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்து என் பொண்ணு வாழ்க்கையை நாசமாகிட்டீங்க."என்ற தன் மனைவி வாணியை கையைப் பிடித்து வேகமாக வெளியே இழுத்து வந்தார் Dr.அசோகன்.
"கையை விடுங்க. சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டு இதழியை பாலுங்கிணத்துல தள்ளிட்டீங்களே நீங்க எல்லாம் ஒரு மனுஷனா?" என்று ஆதங்கத்தில் கத்திய வாணியின் கன்னத்தில் ஓங்கி அறைந்த அசோகன் "வாயை மூடு. என் அக்கா புள்ள கோடீஸ்வரன். அந்தப் பணத்துக்கு முன்னால மத்த எதுவுமே ஒரு விஷயமே இல்ல.ஏதோ போராத காலம் இந்த கொரோனா வந்த சமயத்துல இதயக்கனிக்கு தொற்று நோயால் இருதயம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையா ஆகிட்டான்.அதான் இதய அறுவை சிகிச்சை மூலமா அவன் பழைய நிலைமைக்கு வந்துட்டானே.இன்னும் உனக்கு என்ன டி பிரச்சனை?" என்று அசோகன் தன் மனைவியை கடிந்துக் கொண்டான்.
"முதல் இரவு அதுவுமா வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படி மயக்கம் போட்டு கீழ விழுந்தவரை நம்பி என் மகளுடைய வாழ்க்கை நாசமா போக போறது தான் மிச்சம்."என்று ஆதங்கத்தில் கத்திய வாணியின் கன்னத்தில் மீண்டும் அரைந்து "கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு என் மாப்பிள்ளை இதயக்கனி மட்டும் தான். நீ பயப்படற மாதிரி நாளைக்கே அவனுக்கு ஏதாவது நேர்ந்தந்தாலும் அந்த சொத்து முழுக்க அவனை கட்டிகிட்ட என் பொண்ணை தான் வந்து சேரும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் என்னென்னமோ செஞ்சு என் பொண்ண இதயக்கனிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்.
இதெல்லாம் தெரியாம நடுவுல புகுந்து நீ எதையாவது பேசி காரியத்தை சொதப்பன, பொண்டாட்டின்னு கூட பார்க்க மாட்டேன் கழுத்தை திருகி போட்டுருவேன். போ..போயி தூங்கு."என்று கத்திய அசோகன் பணத்திற்காக எதையும் செய்ய துணிந்தவன் என்ற உண்மை வாணிக்கு தெரிந்து தான் இருந்தது.
"அக்கா.. இதழி மாப்பிளையை பார்த்துக்கட்டும். நீ போய் தூங்கு."என்று அசோகன் சொன்னதும்.சகுந்தலா கண்கள் கலங்கிய நிலையில் பக்கத்து அறையில் சென்று படுத்துக் கொண்டார்.
இரவு மணி இரண்டை கடந்து இருக்கும். இதயக்கனியின் அருகே தான் இதழி அமர்ந்தப்படியே கண்கள் மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தாள்.
இதயக்கனி நன்கு உறங்கிக் கொண்டு இருந்தவன் திடீரென கேட்ட குரலில் திடுக்கிட்டு எழுந்தவன் கண் எதிரே அதே ஆணின் உருவம் நின்று இருக்க "இத... இதழி. " என்று தன் காதல் மனைவியை இதயக்கனி அழைக்க.அவனின் குரல் இதழியின் செவியை எட்டவே இல்லை.
"என் இதயத்தை கொடு.." என்று மீண்டும் அந்த உருவம் இதயக்கனியை கேக்க.
அவனோ பயத்தில் தன் இதயப்பகுதியில் கை வைத்தவனுக்கு சொல்ல முடியாத அளவுக்கு வலி அதிகரித்தது.
"ம்.. உனக்குள் இருக்குற என் இதயத்தை கொடு."என்ற உருவம் இதயக்கனியின் அருகே நெருங்கி வர."யாரு நீ..?" என்ற இதயக்கனியின் இதயபகுதியை அந்த உருவம் தொட்ட வேகத்தில் "அம்மா..." என்று பயத்தில் அலறிய இதயக்கனியின் குரலை கேட்டு இதழி பதறியடித்து எழுந்தவள் "இதயா.. இதயா என்னாச்சு.."என்றவளின் குரலை கேட்டு அசோகன் வேகமாக அறைக்குள் நுழைந்தவனை
"மாமா..அங்க..அங்க ஒருத்தன்.. அங்க ஒருத்தன் என்னை பார்த்து என் இதயத்தை கொடுன்னு கேக்குறான் மாமா." என்ற இதயக்கனி அருகே இருந்த பொருள்களை எல்லாம் தள்ளிக்கொண்டு கட்டிலின் அருகே பயந்து நடுங்கி அமர்ந்தவனை பார்த்து "என் இதயத்தை கொடு.." என்று மீண்டும் அந்த உருவம் கேட்டது.
"இதயா என்னாச்சு உங்களுக்கு?இங்க யாருமே இல்ல." என்ற இதழியை பார்த்து"ஐயோ உன் பக்கத்துல தான் டி அந்த உருவம் நிக்குது.என்னை பார்த்து அந்த உருவம் பேசுது." என்று கத்திய இதயக்கனியின் நிலையை கண்டு இதழிக்கு என்ன செய்வதேன்றே தெரியாமல் போனது.
"என் இதயத்தை கொடு.." என்று மீண்டும் கேட்ட குரலில்"இதோ இதோ இப்போ கூட அந்த குரல் கேக்குது.உனக்கு கேக்கல? உனக்கு கேக்கல?ஐயோ எனக்கு கேக்குதே." என்று கண்கள் மூடி காதை அடைத்துக்கொண்டு இதயக்கனி கத்தியதும் "இதயா..என்னாச்சு இதயா? " என்ற சகுந்தலாவின் குரல் பக்கத்து அறையில் கேட்டதும் "அம்மா.. அம்மா.." என்று அலறியடித்து தன் அன்னையை அழைத்தவன் கழுத்தை பிடித்த உருவம் "என் இதயத்தை கொடு.."என்றதும்.
"அம்மா..." என்று தன் அன்னையை தேடி ஓடிய இதயக்கனி "அம்மா..அங்க.. அங்க ஒருத்தன் என் இதயத்தை கொடு. என் இதயத்தை கொடுன்னு கேக்குறான் அம்மா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எனக்கு நெஞ்செல்லாம் வலிக்குது." என்று இதயக்கனி பயத்தில் தன் அன்னையின் மடியில் படுத்துக்கொண்டவன் உடல் பயத்தில் நடுங்கியது.
Last edited: