New member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 6
- Thread Author
- #1
ரகசி[யா]ய
காதல்
-------------------------------------------------
"அம்மா!
சொன்னா கேளுங்க, எனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்?
நான் இப்போ தானே படிச்சு முடிச்சேன்.அப்பாகிட்ட எனக்காக
சொல்லுங்களேன் " என நேற்றைய தினத்தில் இருந்து பல நூறு முறை தன் அம்மாவின் காதில் ரகசிய ராகம் பாடிக்கொண்டு இருந்தாள் "ரகசியா ".
"என்ன?உன் அப்பாவை நான் எதிர்த்து பேசணுமா?என்னால முடியாது மா. ஒழுங்கா போய் குளிச்சிட்டு ரெடியா இரு.அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு"என பெண்ணவள் எதிர்பார்த்த அதே பதிலை தன் அன்னை சொல்லும் தருணம், வீட்டுக்குள் நுழைந்தார் பெண்ணவளின் தந்தை.
ரகசியாவிற்க்கு நான்கு மூத்த சகோதரிகள்.
ஐந்து பெற்றால் அரசணும் ஆண்டியாக போவான் என்ற சொல்லுக்கு
உண்மையில் “ஐந்து பெற்றால்” என்ற சொற்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை சீரழிக்கக் கூடிய ஐந்து வகையான மனிதர்களைக் குறிக்கிறது.
அதாவது
ஆடம்பரமாக வாழும் தாய்
பொறுப்பில்லாத தந்தை
ஒழுக்கம் இல்லாத மனைவி
உண்மையும் அன்பும் இல்லாத உடன் பிறந்தோர் சொல்லுக்கு அடங்காத பிள்ளைகள்
இவை ஐந்தும் ஒரு மனிதனின் வாழ்வில் அமையும் என்றால் அரசனைப் போன்று பெயரும் புகழும் செல்வமும் நிறைந்த வாழ்க்கை அமைந்திருந்தால் கூட அவன் தன் வாழ்க்கையை வெறுத்து ஒதுங்கிப் போவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று பொருளாகும்.
இந்த கூற்றை உணர்ந்த ரகசியாவின் தந்தை அவருக்கு பிறந்த ஐந்து பெண் பிள்ளைகளையும் வரமாக நினைத்து தான் அவளர்களை காதலுடன் வளர்த்து வந்தார்.
பெண் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்த்த தாய் தந்தைக்கு,காலகாலத்தில் அவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கடமையும் இருந்ததால் மூன்று பெண்களின் திருமணத்தை ஒரே குடும்பத்தில் ஒரே முகூர்த்ததில் முடித்து வைத்தவர் அடுத்த வருடமே நான்காவது பெண்ணுக்கும் நல்ல முறையில் திருமணத்தை முடிக்க,இன்று கடைக்குட்டி பெண் சிங்கம் ரகசியாவுக்கு அவருடைய நான்காவது மருமகனின் தம்பி மாறனை திருமணம் பேசி முடிக்க ஆசைக்கொண்டு அவர்களை எதிர்பார்த்து இன்றே பெண் பார்க்கும் படலத்துக்கு ஏற்பாடும் செய்து இருந்தார்.
என்னதான் ரகசியா கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாலும் அவளுடைய சொல் சபை ஏறாமல் போக.
"அம்மு!இதுல உன் வாழ்கை மட்டும் இல்ல டா.உன்னோட அக்கா வாழ்க்கையும் அடங்கி இருக்கு" என்ற தன் அம்மாவின் பயத்துக்கு காரணம் ரகசியாவின் நான்காவது அக்காவிற்க்கு திருமணம் முடிந்து 4வருடங்கள் கடந்தும் இன்றும் ஒரு பிள்ளை இல்லாத சோகம் தான்.
இருப்பினும் புகுந்த வீட்டில் அப்பெண்ணை யாரும் இன்று வரை ஒரு வார்த்தை கூட தவறாக சொல்லாமல் இருக்க காரணம்.
"அது என்ன? என் மருமகளுக்கு குழந்தை இல்லைனு சொல்றிங்க,அப்படின்னு பார்த்தா ஏன் என் மகனுக்கும் தானே குழந்தை இல்ல? அதனால யாரும் என் மருமகளை ஒரு வார்த்தை தவறாக பேசக்கூடாது"
என்று கண்டிப்புடன் நியாயத்தை பேசும் அந்த வீட்டின் குடும்ப தலைவி கீதா தான் காரணம்.
அந்த குடும்பத்தில் யார் நல்லவனாக இருந்தால் எனக்கென்ன,எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று ரகசியா என்னதான் அழுது உருண்டாலும் இதோ வாசலில் மாப்பிளை வீட்டார் வந்த மகிழுந்தின் சத்தம் கேட்டு ரகசியாவிற்கு சொல்ல முடியாத அளவுக்கு கோவம் எழுந்தது.
"வாங்க மாப்புள,வா மா அக்ஷயா" என்று மரியாதையுடன் தன் மகள் மருமகனை உள்ளே அழைத்தவர்கள்
இவர்களுக்கு அடுத்தப்படியாக வந்த சம்மந்தியையும் உள்ளே அழைக்க,ரகசியாவை பெண் பார்க்க வந்த மாறனும் நீல நிற சட்டைக்கு சந்தன நிற பேண்ட் அணிந்து கையில் ஐம்பொன் காப்பு காது வரை கேசம் வளர்த்து நீல நிற கல் வைத்த ஒற்றை காது கம்மளில் பார்க்க புது மாப்பிளை மிடுக்கில் வந்து இவர்கள் முன் அமர்ந்தவன் இயல்பாக அனைவரிடத்திலும் பேச ஆரம்பித்து இருந்தான்.
"ரகசியா! எப்படி டி இருக்க?மத்த அக்காங்கக்கிட்ட எல்லாம் போன்ல பேசுற தானே,ஏன் என்கூட மட்டும் பேச மாட்டுற?"என்று உரிமையாக சண்டையிடும் தன் சகோதரியை கட்டி அணைத்தாள் .
"அக்கா ப்ளீஸ் நீயாவது அப்பாக்கிட்ட சொல்லேன் எனக்கு இப்போ கல்யாணம் வேணா" என்று ரகசியா சொன்னதும்.
"ஐயோ என்னால முடியாது அதுவும் இல்லாம என் கொழுந்தன் எந்த பொண்னோட போட்டோ காட்டினாலும் வேணா வேணான்னு சொல்லுற ஆளு,என் மாமியார் ஒரு பேச்சுக்கு உன்னை பெண்ணு கேக்கலாமான்னு கேட்டதும் உடனே சரின்னு சொல்லிட்டாரு.
அதனால இந்த கல்யாண விஷயத்துல நான் தலையிட முடியாது.
அப்பாவும் சீக்கிரமா இந்த கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.
அதனால தான் இந்த பெண் பார்க்குற விஷயமே நம்ம அக்காங்க கூட இல்லாம நடக்குது" என்ற அக்ஷயாவோ, தன் தங்கைக்கு எந்த விதத்திலும் தன்னால் உதவ முடியாது என்று கை விரித்தாள்.
"அக்ஷயா!ரகசியாவை அழைச்சிட்டு வா மா" என்ற தன் அன்னை சுஜிதாவின் குரலை கேட்டு
"வா வா போகலாம்,இரு இரு,என்னடி நீ?
பூவைக்கூட ஒழுங்கா வைக்க மாட்டியா?"என கடிந்துகொண்டே தன் தங்கையின் கூந்தலில் பூச்சரத்தை அழகாக சூடி,அவளை சபைக்கு அழைத்து வந்தாள் அகஷ்யா.
மாறனை போலவே ரகசியாவும் நீல நிற மைசூர் சில்க் புடவையில்,கருநீல நிற பார்டரில் புடவைகடை பொம்மையை போலவே அவர்கள் முன் வந்து நின்றவள் கூடி இருக்கும் அனைவருக்கும் வேண்டா வெறுப்பாக வணக்கத்தை வைத்தாள்.
"பரவாயில்லயே! ரகசியா ஆளே மாறிட்டா.
எங்க நம்மளும் இவளை பார்த்து ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு.எப்படி மா இருக்க?" என்ற தன் வருங்கால மாமியாரின் கேள்விக்கு
"ம் நல்லா இருக்கேன் அத்த" என்று கடமைக்கென்று பதில் சொன்ன பெண்ணவள் மறந்தும் மாறனின் பக்கம் தன் பார்வையை திருப்பமால் இருந்தாள்.
பெரியவர்கள் அவர்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு இருக்க
"வேணும்னா மாறனும் ரகசியாவும் தனியா பேசிட்டு வரட்டுமே" என்ற கீதாவின் குரலில் துள்ளி குதித்து எழுந்துக்கொண்டாள் ரகசியா.
"அம்மு!மாப்பிளையை உன் ரூமுக்கு அழைச்சிட்டு போய் பேசு மா" என்ற தன் அன்னையை எரித்து விடுவது போல முறைத்த ரகசியாவின் பார்வையை பார்த்து மாறனுக்கு நிலைமை புரிந்தது.
"ரூம்ல எல்லாம் வேணா அத்த,நாங்க இங்கேயே பேசிக்கிறோம்" என்ற மாறனை முதல் முறையாக தலையை திருப்பி பார்த்த ரகசியாவுக்கு அவனை நான்கு வருடத்திற்கு முன்னே தன் சகோதரியின் திருமணத்தில் பார்த்த நினைவு,அதன் பிறகு எப்போதாவது தன் அக்கா அவன் வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கின்றான் என்று போனில் சொன்ன நியாபகம், அவ்வளவு தான் இவள் அவனை பற்றி அறிந்து இருந்தது.
ஆனாலும் இப்போதும் கூட ரகசியாவுக்கு அவனை பற்றி அறிந்துக்கொள்ள எந்த ஆர்வமும் இல்லை, மாறாக அவனே இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணியவள்,அவனிடம் தனியாக பேச வேண்டும் என்று காத்து இருக்க, அவனோ சபைக்கு நடுவே அமர்ந்துக்கொண்டு
"இங்கேய பேசலாம்" என்று சொன்னதும் ரகசியாவின் முகம் காற்று போன பலூனை போல ஆனது.
"மாறா!இங்க நாங்க பேசிகிட்டு இருக்கோம்,அம்மாடி ரகசியா நீ மாறனை தோட்டத்துக்கு அழைச்சிட்டு போ மா,அங்க போய் பேசிட்டு வாங்க" என்று மாறனின் அம்மா கீதா சொன்னதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல சீரி பாய்ந்து சென்று இருந்தாள் ரகசியா.
சில நொடிகள் அமைதி இருவர் இடத்திலும் நிலவியது .
"க்கும்" என்று குரலை செருமி
"என்ன பேசணும் பேசு" என்ற மாறனை முறைத்து பார்த்தவள்
"எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல" என சட்டென்று சொன்னாள்.
"ஓ" என்றவன்,தன் கரங்களை பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டு
"கல்யாணத்துல விருப்பம் இல்லையா?இல்ல,என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லையா?" என்று மாறன் கேட்டான்.
"ரெண்டுமே தான்"என்று பதில் சொன்னவள், அவள் கையில் அணிந்து இருந்த வளைவியை கோவத்தில் சுற்றிக்கொண்டே இருந்தாள்.
"என்ன காரணம்?" என்று மாறன் கேட்க.
"அதெல்லாம் சொல்றதுக்கு இல்ல,எனக்கு இந்த கல்யாணம் வேணா.
ப்ளீஸ்.. நீங்க போய் என்னை பிடிக்கலைன்னு சொல்லிடுங்க" என்றவளை அழுத்தமாக பார்த்தான் .
"காரணம் தெரிந்தால் கண்டிப்பா நானே இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்" என்ற மாறனை ஒருகனம் பார்த்தவள்
"நா,நான் வேற ஒருத்தரை காதலிக்கிறேன்" என்று ரகசியா உண்மையை சொன்னாள் .
தோட்டத்தில் இருந்த கிணற்றின் அருகே நின்று இருந்த மாறனோ அவளை நெருங்கி வந்தவன்
"ம்..இந்த விஷயம் உங்க அம்மா அப்பாவுக்கு தெரியுமா?" என்று கேட்டதும்.
"ஐயோ என்னை கொன்னே போட்டுடுவாங்க,என் அப்பாக்கு தெரிந்தா அவருக்கு ஹார்ட் அட்டாக் வர கூட வாய்ப்பு இருக்கு.
இந்த குடும்பத்துல காதல் என்ற பேச்சுக்கே இடமில்ல" என்று பதறியவள்
"ப்ளீஸ் நீங்க எதையாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க" என்று கெஞ்சி கேட்டாள் ரகசியா.
"ம், ஓகே,ஆனா நீ காதலிக்கிற ஆள் யாரு? உன் காதலை நீ அவர்கிட்ட சொல்லிட்டியா!? அவங்க குடும்பத்துல உன்னை ஏத்துப்பாங்களா?அதுவும் இல்லாம இப்போ நான் உன்னை வேணான்னு சொன்னாலும் உன் காதலை எப்படி உன் அப்பா அக்ஸப்ட் பண்ணிப்பாரு!?" என்று அடுத்தடுத்து தன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான் மாறன்.
"உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்.
நான் என் காதலை அன்புகிட்ட சொல்லிட்டேன். அவரு கண்டிப்பா என்னை கல்யாணம் பண்ணிப்பாரு.இப்போ என்னோட பிரச்சனை நீங்க தான்.
அதனால நீங்க முதல்ல என் வாழ்கைக்குள்ள வராமல் இருந்தா நான் எப்படியாவது என் அப்பாகிட்ட என் காதல் விவகாரத்தை சொல்லிடுவேன்" என்று ரகசியா சொன்னதும்.
"சரி" என்ற மாறன் அங்கிருந்து வீட்டுக்குள் சென்றவனை பார்த்து
"என்ன மாறா! எல்லாம் ஓகே தானே?" என்று கீதா கேட்டதும்
ஒருகனம் தன்னை தொடர்ந்து வந்த ரகசியாவை பார்த்த மாறனோ
"ம்,ஓகே தான் அம்மா" என்றவனின் பதிலில் ரகசியாவின் கண்களில் வெளிவர காத்து இருந்த கண்ணீரை இழுத்து பிடித்துக்கொண்டாள் பெண்ணவள்.
"அப்புறம் என்ன? வர முகூர்த்ததுலேயே கல்யாணத்த வச்சிக்கலாம்.
பையனுக்கு இனி வெளிநாட்டுல தான் வேல. ரகசியாவுக்கு ஊருக்கு போக விருப்பம் இருந்தா அவன்கூட போகட்டும். இல்லைனா நம்ம வீட்டுல அவங்க அக்காக்கூட இருக்கட்டும்,இல்லையா சின்ன பெண்ணை கட்டிக்கொடுத்துட்டு நீங்க தனியா இருப்பிங்கனு பீல் பண்ணா ரகசியா இங்க கூட இருக்கட்டும்" என்ற கீதாவின் அனுசரணையான குணம் தான் ரகசியாவின் தந்தைக்கு அந்த குடும்பத்தை பிடித்து போக காரணமாக இருந்தது.
"அம்மா! அடுத்த மாசம் 14ஆம் தேதி ஒரு முகூர்த்தம் இருக்கு.அப்போவே கல்யாணம் வச்சிக்கலாம்" என்று மாறனின் அண்ணன் சொன்னதும்.
"ஓ!சம்மந்திக்கு சரினா அப்போவே வச்சிக்கலாம்.கல்யாணம் ரொம்ப சிம்பிளா பண்ணிப்போம் சம்மந்தி.ஆடம்பரமா வேணா, என் மருமகளும்,உங்க மருமகனும் சந்தோசமா வாழ என்ன தேவையோ அத மட்டும் பண்ணிடுவோம்"
என வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசும் கீதாவின் சொல்லுக்கு இணங்கி அன்றைய தினமே ரகசியா மாறனின் திருமண ஏற்பாடு ஆரம்பித்து இருந்தது.

Last edited: