Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 632
- Thread Author
- #1
கிச்சனிற்குள் வந்த மிருதுளா மாலா அக்கா என்கவும் சொல்லு பாப்பா என்றவரிடம்,அண்ணா வந்தாச்சு அவங்க கூட விக்கியும் வந்திருக்கிறாங்க.பாட்டி எல்லாருக்கும் டீ எடுத்து வர சொன்னாங்க க்கா என்கவும் அப்படியா, சின்ன தம்பி பட்டாளத்திலிருந்து வந்தாச்சா என்றார்.
ஆமாம் என்று சிரித்தாள்.
இதோ போட்டு எடுத்து வரேன் பாப்பா விக்ரம் தம்பியை நினைத்தால் தான் பாவமாக இருக்கு என்கும்போது மிருதுளாவின் கால்களை அவளது செல்லை நாய் குட்டி வந்து சுரண்டவும் ஸ்வீட்டி என்று கீழே குனிந்து தூக்கிக்கொண்டு தனது ரூமிற்கு வந்து கதவை தாழிட்டவள் இவங்க ஏன் இப்படி இருக்காங்க என்று விக்ரமை பற்றி யோசித்துக் கொண்டிருந்தவள் பின்னர் சற்று முன்னர் நடந்ததை நினைத்துப் பார்க்க, இப்பொழுதும் அவனது தேகத்தின் வலிமையை உணரமுடிய,அவளையும் மீறி உதட்டோரம் சிரிப்பு வந்தது.
உமாவோ நேராக ஜெயிலுக்கு வந்தவர் அங்கிருந்த வார்டனிடம் ஏதோ பேசவும், கவலைப்படாதீங்க மேடம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.
ஹம்..என் மனசுக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருக்கின்றது அதானென்று உமா சொல்ல, அந்த பொண்ணை பரோலில் எடுக்க ஆக வேண்டியது பாருங்கள் என்று ஜெயிலரும் சொல்லவும் கண்டிப்பா என்றவாறு வீட்டிற்கு வந்த உமாவின் மனம் மட்டும் சஞ்சலமாகவே இருந்தது.
நண்பர்கள் இருவரும் குளித்துவிட்டு கீழே வரவும் அவர்கள் இருவருக்கும் மாலாவும் டீ கொண்டு வந்து கொடுத்துவிட்டு நலம் விசாரிக்க அவனுங்களும் அவரிடம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்கும் போது உமாவும் அங்கு வந்து விட்டார்.
ஏன் விக்கி இவ்வளவு நடந்திருக்கு அத்தைக் கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும் என்று தோணவே இல்லையா என்கவும் அவரை நிமிர்ந்து பார்த்தவன் எனக்கே தெரியாதுங்கத்தை என்கவும், என்னப்பா சொல்ற என்று எல்லாரும் அதிர்ச்சியாக ஆமாங்கத்தை.
நம்மளுடைய பக்கத்து எஸ்டேட் ஒன்னு விலைக்கு வந்து இருக்குனு தெரிஞ்சவர் மூலையமாக கேள்விப்பட்டேன். அவங்க சிங்கப்பூர்ல இருக்குறாங்க. வயதான தம்பதிகள் இவ்வளவு தூரம் வர முடியாதுன்னு அதை பேசி முடிப்பதற்காக நானும் சந்துருவும் அங்க போயிட்டோம்.
எல்லாத்தையும் முடிச்சிட்டு நான் இந்தியாவுக்கு வந்த போது தான் வக்கீல் மூலமாக இந்த விஷயமே தெரிஞ்சது அவர் என்ன காண்டாக்ட் பண்ண எவ்வளவோ முயற்சி பண்ணி இருக்கிறார்.
நம்பநேரம் அந்த ஓனருக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண வேண்டியதாக போயிடுச்சு. வயசானவங்க அவங்க பையனும் உடனடியாக வர முடியாது சூழ்நிலை நான் தான் கூட இருந்து ஹாஸ்பிடல்ல பார்க்க வேண்டியதானது, அவர் ரெக்கவர் ஆகியபின் எல்லாத்தையும் முடிச்சிட்டு இந்தியாவுக்கு வருவதற்குள் ஏதேதோ நடந்துடுச்சிங்கத்தை.
அவளை பார்க்க போனாக்க ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசவே மாட்டேங்கிறாள்.அந்த வேதனை தான் என்னால தாங்க முடியலைங்கத்தை.அவளுடைய படிப்புக்காக தான் எங்களோட கல்யாணமும் தள்ளிப்போனது. மேற்படிப்பு படிக்கணும்னு ஆசைப்பட்டாள். சரி என்று தான் நானும் அவளது ஆசைப் போல டெல்லியில் படிக்கிறதுக்கு சம்மதம் சொன்னேன்.
எனக்குன்னு இருக்கிறது அவளும் தாத்தா பாட்டி மட்டும் தானே வேற யார் இருக்கா என்று விக்ரம் கண்கலங்கவும், விஷயம் முழுதாக தெரியவில்லை என்றாலும் இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மிருதுளாவுக்கு ஏனோ அவன் கலங்குவதை மட்டும் தாங்க முடியவில்லை.
வேகமாக போய் அவன் கண்களை துடைத்து அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று அவளது மனம் பதறியது. ஏன் நமக்கு இப்படி இருக்கென யோசித்தவளுக்கு எதுவும் சரியாக புரியவில்லை.
என்ன சொல்றது னு தெரியலை விக்கி. மதி வாய் திறந்து நடந்ததை பற்றி சொன்னாதான் அடுத்ததாக இந்த கேஸ்ல இருந்து நம்ம மூவ் பண்ண முடியும் விக்கி.
ஹம்..அது எனக்கு புரியுதுங்க அத்தை. நாளைக்கு போயிட்டு அவளை பார்க்கலாம் என்கவும்,கண்டிப்பா நானும் அடுத்த கட்டத்தை மூவ் பண்ணுவதற்கு ஏற்பாடு பண்றேன் என்றார்.
சரிங்கத்தை என்கவும், நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்களென்றார்.
மாம், டாடி எப்ப கிளம்புறாங்கனு மித்ரன் கேட்கவும், இன்னும் ஒன் வீக்கில் வருவதாக சொன்னாங்க கண்ணா என்று தனது மகனிடம் சொல்லியவர், மிருது உனக்கு பேக்கிங் எல்லாம் முடிந்து விட்டதா என்கவும், ஹம் மா என்றாள்.
சரி என்னென்ன தேவையோ வாங்கிக்க அப்புறம் அது சொத்தை இது சொத்தைனு சொன்னாக்க எனக்கு கோவம் வந்துரும் என்கவும் சரி சரி என்றாள்.
ஹம் என்றவர் பின்னர் வீட்டின் மருமகளாக தனது வேலையை பார்க்கலானார்..
நன்கு தூக்கத்திலிருந்த உமாவிற்கு கால் வரும் சத்தம் கேட்க, அரை தூக்கத்தோடு கண்விழித்து எட்டி போனை எடுத்து பெயரை பார்த்தவருக்கு ஜெயில் வார்டனின் நம்பர் தெரிய, மதி என்றவாறு அட்டெண்ட் பண்ணியவர் ஹலோ மேடம் சொல்லுங்கள்?.
மதி நல்லா இருக்காளா?.
அந்த பக்கத்திலிருந்து சொல்லப்பட்ட செய்தியை கேட்டவர் என்ன என்று அதிர ஆமாம் மேடம் என்றவாறு அழைப்பு கட்டாகவும்,கேட்ட செய்தியை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
பின்னர் வேகவேகமாக தயாராகியவர் தனது கார் சாவியை எடுத்துக்கொண்டு கீழே வர இரவு விளக்குகள் எரிந்து கொண்டிருக்கவும் பொறுமையாக கதவை திறந்து பின்னர் பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் வழியாக உள்ளே தூக்கி போட்டவர் ஷெட்டிலிருக்கும் தனது காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஹாஸ்பிடலுக்கு சென்றார்.
யாருமில்லாத விடியாத நேரம் என்பதால் வேகமாக வந்தவரோ காரை நிறுத்தி விட்டு ஹாஸ்பிடலுக்குள் செல்ல, இரண்டு போலிஸ்காரர்கள் வெளியே நிற்பது தெரிந்தது.
உமாவை பார்த்தவர்கள் மேடமென்று வர, என்னாச்சுங்க சார் என்கவும், இங்கு வாங்களென்று போனவர்கள் மார்ச்சுவரியை காட்டினர்.
கண்ணா...ஏன் டா இந்த சோதனை?
வாழ்க்கையில் எல்லாத்தையும் இழந்தும் அவனுக்கென இருந்த ஒருத்திக்காக தன்னை தேற்றிக்கொண்டு இப்போது தான் முன்னேறி வந்தான் அது உனக்கு பொருக்கவில்லையா என்று முணவியவாறு போனார்.
அவரை பார்த்த அங்கிருந்த காவலாளி வாங்கம்மா. உங்களுக்கு தெரிந்த பொண்ணாமே என்கவும் ஆமாங்க ணா என்றார்.
சரி மா என்று கதவை திறந்து உள்ளே அழைத்து போனவர் அங்கே ஐஸ் பாக்ஸில் இருந்த அகல்மதியின் உடலை காட்ட, அய்யோ மதி ஏன் மா இப்படி பண்ணின? .இதை எப்படி மா விக்கி தாங்குவானென்று கதறியழுதார்.
அம்மா வெளியே போகலாம் மா டாக்டர் வருவாரென்று காவலாளி சொல்ல உமாவும் எதுவும் சொல்லாமல் வெளியே வந்தவர் நேராக டாக்டரின் ரூமிற்கு செல்ல, அங்கே ஜெயில் வார்டன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
உமாவை பார்த்த டாக்டர் வாங்க என்கவும் ஜெயிலரும் திரும்பி பார்த்தவர் சாரிங்க மேடம் இப்படி நடக்குமென்று எதிர் பார்க்கவில்லை என்றார்.
தலையை மட்டும் அசைத்தபடி அங்கிருந்த சேரில் உட்கார்ந்தவர் என்ன ஆச்சு என்கவும் நைட்டு வழக்கம் போல ரவுண்ட்ஸ் முடிச்சுட்டு தான் வந்தேன்.
மூன்றை மணி இருக்கும் போது அந்த பொண்ணு கதவு ஓரத்தில் கால் நீட்டி உட்கார்ந்து இருக்கவும் டூட்டியிலிருந்த போலிஸும் கதவை தட்டி போய் படுமானு சொல்லிருக்கிறார்.
அப்போதும் அசையாமல் இருக்கவும் திரும்ப சத்தமாக சொல்ல மற்றவர்களும் எந்திரிச்சு என்னனு செக் பண்ணும் போது தான் குளுக்கோஸ் போடுற டியூப் ல கம்பியோடு சேர்த்து தனது கழுத்தை கட்டியபடி அந்த பொண்ணு தற்கொலை பண்ணிருப்பது தெரிந்தது.
அந்த பொண்ணு கையில் இந்த லெட்டர் இருந்ததென ஜெயிலர் கொடுக்க, அதை வாங்கி பிரிக்கவும், என்னை மறந்துவிட்டு உங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் மாமாயென்று எழுதியிருந்தது.
வழக்கம் போல அதிகாலையிலே எழுந்த மித்ரன் அருகில் படுத்திருக்கும் நண்பனின் தலைமுடியை தடவி விட்டவன் யார் போனாலும் உனக்காக நான் இருப்பேன் டா என்றவாறு வொர்க்கவுட் செய்யப் போனான்.
அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கம் விக்ரமிற்கும் உண்டு. ஆனால் சில நாட்களாக அவனிருந்த மனநிலைக்கு அதை மறந்தே விட்டேன்.
பாவம் அவனது வருங்கால தூக்கம் பறிபோனது தெரியாமல், தனது ஆருயிர் நண்பனுடன் இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு பிறகு இன்று தான் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்.
சுந்தரி பாட்டியோ கண்ணா என்றவாறு கதவை திறந்து வெளியே வர வழமை போல இந்த நேரத்திற்கெல்லாம் வீட்டில் சுப்ரபாதம் ஒலிக்கும். இன்று அது இல்லாமல் இருப்பதை கண்டவர் இவ்வளவு நேரம் உமா கீழே வராமல் இருக்கமாட்டாளே?
உடம்புக்கு ஏதாவது முடியலையோ என்ற சிந்தனையோடு பூஜையறைக்கு போனவர் சில வருடங்களுக்கு பிறகு அவரே சாமியறையை துடைத்து பூ வைத்து விளக்கேற்றி விட்டு வெளியே வந்தவரோ மாலா என்றார்.
வரேங்க பெரியம்மா என்றவரோ டீ கப்போடு வந்தவர் இந்தாங்கமானு நீட்டினார்.
என்ன உமாவை காணும்?.
உடம்பு சரியில்லை போல?.
இல்லைங்க மா. உமா நாலரை மணிக்குலாம் கார் எடுத்துக்கொண்டு வெளியே போயிடுச்சுங்க மா. நம்ப சுவீட்டி கத்திட்டு இருந்ததேனு நான் பார்க்க வரும் போது தான் வேகமாக போச்சுங்கம்மா என்றார்.