New member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 4
- Thread Author
- #1
பேய் விளையாட்டு
அன்று நல்ல மாலைப் பொழுது. மழை பெய்து ஓய்ந்திருந்தது. காற்றில் இருந்த ஈரப்பதம் என் உயிரை வருடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் என்னைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்த ரவி தன் மகள் ரீனாவுடன் வீட்டிற்கு வந்திருந்தார். இதற்கு முன்பு ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பலனளிக்காததால் என்னிடம் வந்ததாகச் சொன்னார். ரீனா பார்ப்பதற்கு மன நோயாளி போன்றதெல்லாம் இல்லை. அவள் பார்வையும், சிரிப்பும், பேச்சும் அவளது அப்பா என்னிடம் அவளைப் பற்றி கூறிய விஷயங்களை பொய்யாக்குவது போல் மிகவும் கூர்மையாக இருந்தது.
என்னதான் பிரச்சினை என்று கேட்டேன். அவளும் அவள் மனதில் இருந்தவற்றைப் பேச ஆரம்பித்தாள்…
டைரி எழுதும் பழக்கம் சிலருக்கு இருக்கும். எழுதும் விதம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். ஒரு சிலர் எப்போதாவது சந்தோஷமாக இருக்கும் போது அல்லது சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே எழுதுவார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட நாட்களில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளைத் திட்டமிடுவார்கள் அல்லது வெற்றிகரமாக முடித்த வேலையை எழுதிக் கொடுப்பார்கள் வைப்பார்கள். ஒருசிலர் ஒவ்வொரு நாளும் நடந்த விஷயங்களைப் பட்டியலிடுவார்கள்.
ஆனால், நான் டைரி எழுதுவதற்கான காரணம் சற்று மாறுபட்டது. எனக்கு அதிக உணர்ச்சிகரமான நிகழ்வுகள் ஒரு நாளைக்கு மேல் அதாவது இருபத்து நான்கு மணி நேரத்திற்கு மேல் நியாபகம் இருக்காது. நேரம் கழிந்ததும் அதைப் பற்றி முற்றிலுமாக மறந்துவிடுவேன். உணர்ச்சிகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் (கோபம், அன்பு, பயம், உற்சாகம்... என்று இன்னும் பல).
நிகழும் காரியங்கள் சங்கடப்படும்படி இருக்கும்போது இந்த மனநோயை நினைத்து நான் சந்தோஷப்பட்டேன். ஆனால் மகிழ்வான, வாழ்க்கைக்கு மிகவும் தேவையான விஷயங்கள் உணர்வின் எல்லையை எட்டியவுடன் அதை மறந்துவிடுகிறேன். இதனால் பல சிக்கல்களை நான் தினமும் எதிர்கொள்கிறேன்.
நானோ பள்ளி மாணவி. என் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில்தான் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். உதாரணமாக, நான் தேர்வுக்குத் தயாராகும் போது ஏதாவது ஒரு பாடம் தெளிவாகப் புரிகிறது... “ஹே சூப்பர்ப்பா... இதுல இருந்து எந்தக் கேள்வி கேட்டாலும் நான் பட்டையக் கெளப்பிருவேனு” மனசுல உற்சாகப்பட்டால் போதும் பின்பு மூளை முற்றிலும் வெற்றிடம் ஆகிவிடும். இதை என்னால் மட்டும்தான் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் கூறியிருக்கிறார்.
இது ஒன்றும் எனக்கு பிறவி நோயல்ல இடையில்தான் ஏதோ ஒரு மனக்கவலையில் சிக்கிக்கொண்டதால் இது ஏற்பட்டதாக மருத்துவர். தினமும் இரவு உறங்கச் செல்லும் முன்பு அந்த நாள் நடந்த அனைத்தையும் மனதிற்குள் படமாக ஓட்டிப் பார்த்துக் கொள்வேன். அது மட்டும் இல்லாமல் எம்மாதிரியான நிகழ்வு நேர்ந்தாலும் உணர்ச்சிவசப்படாமல் மந்தமான மனநிலையிலேயே இருக்க முயற்சி செய்வேன். அதையும் மீறி கட்டுப்பாடின்றி உணர்வு வெளிப்பட்டவுடன் என் டைரியை எடுத்து அதை வைத்துவிடுவேன்.
என்னுடைய டைரி என் மூளையின் அசிஸ்டெண்ட்டாகவே ஆகிவிட்டது. சொல்பவர் என் அன்பிற்குறியவரே ஆனாலும் அதைப்பற்றி டைரியில் என் கைப்பட எழுதியிருந்தால்தான் நம்புவேன். இந்த டைரி எழுதும் பழக்கம் என் மன நோயைத் தீர்க்கும் என்று நம்பி தொடங்கினேன். ஆனால், நாளடைவில் என்னுடனே இந்த பழக்கம் தங்கிவிட்டது.
எப்போது என் உணர்வுகள் எல்லை மீறினாலும் எந்த வித பயமும், பதற்றமும், சந்தேகமும் இன்றி எழுதிவிடுவேன். ஆனால் இன்று அப்படியில்லை.
இப்போது என் மடியில் வைத்திருக்கும் எனக்கு மிகவும் நெருங்கிய எனக்கு சொந்தமான இந்த டைரியை திறக்கத் தயங்கிக் கொண்டு அதையே வெறித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் கொண்டிருக்கிறேன். இப்போது என் மனநிலை எப்படி இருக்கிறது என்று என்னால் தெளிவாகக் கணிக்க முடியவில்லை. மிகவும் மங்கிய நிலையில் கோணல்மானலான மனவோட்டத்தில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
என் தொண்டையில் ஏதோ ஒரு உருளைவடிப் பந்து ஒன்று சிக்கிக்கொண்டு உள்ளேயும் செல்லாமல் வெளியவும் வராமல் அதே இடத்தில் அப்படியே உருண்டு கொண்ட. ஒவ்வொரு முறை எச்சில் விழுங்கும் போதும் தொண்டையை ஒரு கோடாரியால் கிழிப்பது போன்று வலிக்கிறது. உடலில் இருக்கும் நீரின் அளவெல்லாம் பல மூலங்களில் இருந்து வெளியேறுவதால் என்னால் எச்சில் விழுங்காமல் இருக்க முடியவில்லை.
என் நெற்றியில் இருந்து வியர்வை சொட்டுச் சொட்டாக வடிந்து இறங்கிக் கொண்டிருக்கிறது. அதை துடைக்கக் கூட முடியாமல் போய் அமர்ந்திருக்கிறேன். அப்படி வியர்வையைத் துடைக்க நினைத்தால் என் மடியில் இருக்கும் டைரியில் இருந்து கையை எடுக்க வேண்டியிருக்கும். அப்படி நான் எடுத்தால் டைரி காற்றின் உதவியுடன் தன்னால் திறக்கப்படும்.
திறந்தால் அதில் எழுதியிருக்கும் விஷயங்களை நான் வாசிக்க நேரிடும். வாசிக்க மறுத்தால் எனக்குப் பழக்கப்பட்ட ஒரு குரல் அதில் எழுதியிருக்கும் அச்சுருத்தலான வார்த்தைகளை நான் வாசித்துக் காட்டும். நான் எழுதியவையாக இருந்தால் அது என்னை கலங்கப்படுத்தாது. அதில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் என்னைப் போலவே கையெழுத்தில் என்னுடைய எழுத்துநடையிலே வேறுயாரோ எழுதியிருப்பார்கள். அதுவும் டைரியின் கடைசிப் பக்கத்தில் மட்டும்தான் எழுதியிருப்பார்கள்.
இதில் அதிர்ச்சியூட்டும் மற்றொரு விஷயம் என்னவென்றால், அந்த கடைசி பக்கத் தாளில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விஷயங்களை நான் படித்தேன். அந்த நாளில் இப்படி ஒரு விஷயம் நடந்ததாகவும் அதை மறக்க வேண்டாம் என்றும் நான் எழுதியதாகவும் இருக்கும்.
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் டைரியை எடுத்துப் பார்ப்பேன் கடைசிப் பக்கம் பளீச்சென்று வெள்ளையாக இருக்கும். பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் திறந்து பார்த்தால் அதில் ஏதாவது எழுதியிருக்கும். அது கூடப் பரவாயில்லை, இப்பொழுது நான் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் இருக்கிறேன். பள்ளி செல்லாத இந்நாளிலும் கூட அதே மதிய நேரத்தில் அந்த டைரியை எடுத்துப் பார்த்தால் எழுதியிருக்கும்.
எழுதியிருக்கும் விஷயங்கள் எல்லாம் என்னையும் என் குடும்பத்தையும் மையப்படுத்தியே இருக்கும். ஒருவேளை நான்தான் எழுதிவிட்டு மறந்துவிடுகிறேனோ என்கின்ற எண்ணம் கூட பல முறை தோன்றியிருக்கிறது. அதைப் பற்றி தீவிரமாக யோசித்துப் பார்த்தும் என்ன சார்ந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தும் அதை நான் எழுதவில்லை என்று நானே சமாதானப் படுத்திக்கொண்டு இருந்தாலும் இன்றுமொரு கேள்வி வந்து என்னை அச்சுறுத்துகிறது.
கடைசிப் பக்கத்தில் எழுதிய விஷயங்கள் அனைத்தும் அமானுஷ்யமாகவும் மாயையாகவும் இருக்கும். அதை வாசிக்கும் போதே... இதோ இப்போது நான் படபடத்துக் கொண்டு இருப்பது போலவேதான் இருப்பேன். அப்படி இருப்பின் எனக்கு எப்படி டைரியின் கடைசி பக்கத்தில் நான் படித்த ஒவ்வொரு விஷயமும் நியாபகம் இருக்கிறதென்ற கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது இருந்தது இருந்தது.
இந்த மனநிலை என்னை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் சிறைபிடித்தது. இதைப்பற்றி என் மருத்துவரிடம் கூறியபோது அவரே திக்குமுக்காடி சிறிது நேரம் நிசப்தமானார். நான் எல்லாவற்றையும் கூர்மையாகக் கேட்டுப் பேசிய பிறகு என்னைப் பார்த்து சில கேள்விகள் எழுப்பினார்.
1. கடைசி பக்கத் தாள் கிழித்ததற்கான தடயம் அந்த டைரியில் நீ எப்போதாவது கண்டதுண்டா?
"இல்லை டாக்டர். அப்படி எதுவும் இருந்ததே இல்லை".
2. இந்த மாதிரி நடந்த நாட்களில் நீ டைரியில் சாதாரணமாக எதைப் பற்றியாவது எழுதியிருக்கிறாயா?
“ஆமா டாக்டர் எழுதியிருக்கிறேன்”.
3.அப்படியா? சரி. உன்னைத் தவிர உன் வீட்டில் யாருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கிறதா?
“அம்மா உயிருடன் இல்லை. எனக்கு ஒரு ஐந்து வயது தம்பி இருக்கிறான். அவனும் எழுதியிருக்க வாய்ப்பில்லை".
4. சரி அதில் என்ன மாதிரியான விஷயங்கள் எழுதியிருந்தது? அதைப் பற்றித் தெளிவாகச் சொன்னால் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும்...
மருத்துவர் அந்த டைரியில் எழுதியவற்றை பற்றி கேட்ட பொழுது அதை சொல்லத் தயங்கினேன். காரணம், இதற்கு தீர்வு கிடைத்தால் எங்க அம்மா மீண்டும் வராமல் போய்விடுவாளோ என்கிற குழப்பம் எனக்கு இருந்தது. அவர் மீண்டும் அழுத்திக் கேட்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன். அந்த டைரியில் நான் எல்லாவற்றையும் படித்தேன் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தேன்...
இரவு உணவு உண்டதும் என் தம்பிக்கு படுக்கையை தயார் செய்து கொண்டிருந்தேன். அவன் வழக்கத்தை விட மிகவும் சத்தமாக ஏக்கத்துடன் அழுது கொண்டிருந்தான். அம்மா இறந்து ஒரு மாதம் கழிந்த பின்னும் கூட அவனுக்கு அம்மாவின் நினைவு துளி கூட குறையவே இல்லை. அவளின் அரவணைப்பு கிடைக்காமல் சோர்ந்து போனான். அவள் இருந்த இடத்தில் அவனைப் பாதுகாக்கும் பொறுப்பு என் தலையில் இறங்கியது. அவன் அழுகையை நிறுத்தவும், சமாதானப்படுத்தவும் பலவற்றை செய்து பார்த்தேன் எதுவும் எடுக்கவில்லை.
Last edited: