New member
- Joined
- Dec 22, 2024
- Messages
- 4
- Thread Author
- #1
•
ஷாலினி அன்று மிக நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் அண்ணனும் மிக விரைவாக எழுந்து அவனுடைய வேலைகளை வெகுவாக முடித்தான்.
தங்கை இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதை அறிந்தவன் எழுப்ப முற்பட்டான். ஆனால், தங்கையோ எழவே இல்லை.
இதைக் கண்ட குணா சென்று தன் அன்னையிடம் கூறினான்.
"அம்மா ஷாலினி எந்திரிக்கவே மாட்றா மா .நான் ஸ்கூலுக்கு கிளம்பிட்டேன்… ஆனா அவ இன்னும் எழுந்திருக்கவே இல்லம்மா" என்று தன் அன்னை பிருந்தா விடம் கூறினான். பிருந்தாவும் தன் குழந்தையை எழுப்ப முற்பட்டாள் .
ஆனாலும் ,ஷாலினி எழுந்த பாடு இல்லை. 'குழந்தைக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லையோ' என்று அவளும் உடம்பை தொட்டுப் பார்த்தாள். ஆனால், அவள் எதற்கும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. பிருந்தா பயந்துவிட்டாள்.
தன் கணவர் சோமசுந்தரத்தை அழைத்து தன் குழந்தை எழுந்திருக்காத விஷயத்தை கூறினாள். இருவரும் மிகவும் பயந்து உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று மருத்துவமனை வாசலில் இருவரும் பயந்து போய் நின்றனர். சிறிது நேரம் கழித்து செவிலி பெண் ஒருவர் வந்து ஷாலினியின் பெற்றோரை மருத்துவர் அழைப்பதாக கூறினார். ஷாலினியின் பெற்றோர் இருவரும் மருத்துவரை சென்று சந்தித்தனர்.
பிருந்தாவும் சார் என் குழந்தைக்கு என்ன ஆச்சு ,எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவ இவ்வளவு நேரம் தூங்கினதே இல்லை…. சார் ப்ளீஸ் என்னாச்சுன்னு சொல்லுங்களேன். ப்ளீஸ்.. என்று கதறும் குரலில் கூறினாள்.
டாக்டர் பேச முற்பட்டார் .சார், நான் உங்க குழந்தையை முழுசா செக் செய்ததில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளது. நீங்க கொஞ்சம் மனசு தைரியப்படுத்திக்கோங்க நான் சொல்ல வரத நெனச்சு நீங்க ரொம்ப பயப்படாம கொஞ்சம் கேட்டீங்கன்னா நல்லா இருக்கும் என்று கூறினார் டாக்டர்.
இதைக் கேட்டவுடன் ஷாலினியின் தாய்க்கு மிகவும் பயம் வந்துவிட்டது. எதுவா இருந்தாலும் ப்ளீஸ் எங்க கிட்ட சொல்லிடுங்க சார்….. ப்ளீஸ் என்று தழுதழுத்த குரலில் கதறினாள். சார் ப்ளீஸ் மேடம கொஞ்சம் நீங்க தைரியப்படுத்திக்கோங்க.
நான் சொல்ல போற விஷயம் உங்களுக்கு பெரிய அதிர்ச்சியா தான் இருக்கும். இருந்தாலும், நீங்க இதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும் என்று டாக்டர் கூறி முடித்தார்.
சோமசுந்தரமும் டாக்டர் கூறியதை கேட்டு மனதினுள் பல எண்ணங்களுடன் 'என்னவாக இருக்கும்' என்று மிகுந்த கவலையுடன் தழுதழுத்த குரலில் என்ன என்று கேட்டான்.. டாக்டர் கூற ஆரம்பித்தார் .
சார் ,உங்க குழந்தையை யாரோ பாலியல் பலாத்காரம் பண்ணி இருக்காங்க என்று டாக்டர் மிகவும் சோர்வான குரலில் கூறினார்…. கேட்ட பிருந்தா தலை சுற்றி மயக்கம் போட்டு கீழே விழுந்தாள். சோமசுந்தரத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், மேலும் தன் மனைவி கீழே விழுந்ததால், அவளையும் தாங்கிக் கொண்டு மருத்துவமனையில் முதலில் தன் மனைவியை அட்மிட் செய்தார்.. பின்பு மயக்கத்தில் இருந்த தன் மனைவி சில மருத்துவ உதவிக்கு பின் எழுந்தாள். எ...எங்..எங்கே என் மக ஷாலினி .எ.. எ..எங்க என் மக ஷாலினி என்று மிகவும் தழுதழுத்த குரலில் அழுது கொண்டே கேட்டாள். பின்பு பச்ச பிள்ளைங்க அவ அவள போய் யாருங்க இப்படி எல்லாம் பண்ணுனது….. அவன் நல்லாவே இருக்க மாட்டான்…. அவன நான் சும்மாவே விடமாட்டேன். நான் கண்டிப்பா போலீஸ்ல புடிச்சு கொடுப்பேன். தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று மிகுந்த வேதனையுடன் தழுதழுத்த குரலில் அழுது கொண்டே கத்தினாள்..
பெட்டில் இருந்து எழுந்திருந்த தன் மகளை உடனே பார்க்க வேண்டும் என்று கணவரிடம் வற்புறுத்த. தன் கணவரும் குழந்தை உள்ள பெட்டுக்கு அழைத்துச் சென்றார். குழந்தை வலியும் வேதனையுடன் சற்று கண் திறந்து முழித்து படுத்துக் கொண்டிருந்தது… “அம்மா வந்து இருக்கேன் டா” என்னமா பண்ணுது உடம்புக்கு, யாருடா தங்கம் உன்னை என்னடா பண்ணா, அம்மா கிட்ட சொல்றா தங்கம் "என்று தழுதழுத்த குரலில் குழந்தையிடம் பிருந்தா கேட்டாள்..
குழந்தை ஷாலினியும் "அ...அ...அம்மா…. அம்மா எனக்கு வலிக்குதும்மா…. ரொம்ப வலிக்குது மா…. "என்று அழுது கொண்டே கூறினாள்…. "என்னடா தங்கம் யார் இப்படி உன்னை பண்ணது உனக்கு உடம்பு வலிக்கிற அளவுக்கு அப்படி என்னடா நடந்துச்சு"… “அம்மா கிட்ட சொல்ற தங்கம்” என்று பிருந்தா குழந்தை இடம் அன்பாக விசாரித்தாள்….
பயந்து கொண்டே ஷாலினி தன் தாயிடம் பேச ஆரம்பித்தது "அம்மா என்ன நீங்க திட்டாதீங்க ,அடிக்க கூடாது மா… என்னை ஸ்கூலுக்கு அனுப்பிச்சு விடுவீங்க இல்லமா அந்த ஆட்டோ மாமா சாக்லேட் வாங்கி தரேன்னு சொல்லி என்னை கூட்டிட்டு போனாரு மா. ஆனா ,அவரே எ...எ....என்...என்னை என்ன என்னவோ பண்ணினாரு மா… அம்மா எனக்கு ரொம்ப வலிச்சுமா…. அதுக்கு அந்த அங்கிள் ஒன்னும் இல்லம்மா அவ்ளோதான் அவ்ளோதான்னு என்னவோ பண்ணிட்டாருமா ரொம்ப வலிக்குதும்மா…. ப்ளீஸ்ம்மா என்னை அடிக்காதீங்க மா" என்று குழந்தை பயந்து போய் கூறியது. இதைக் கேட்ட பிருந்தாவால் அங்கு அழாமல் இருக்க முடியவில்லை கதறி வேகமாக வாய்விட்டு அழுதுவிட்டாள்…
"ஐயோ கடவுளே எந்த குழந்தைகிட்டயும் அம்மா இப்படி ஒரு வார்த்தையை கேட்கவே கூடாது….. என் குழந்தை எவ்வளவு கதறி இருக்கு. ஆனாலும் விடாம சீ ... சீ...அவனா...அவன்.. ஒரு ஆண் ஜென்மமா.. அவனெல்லாம் வாழவே கூடாது. இதெல்லாம் பாத்தும் கடவுளே இன்னும் ஏன் நீ வந்து கருணை காட்டம இருக்க! "என்று பிருந்தா கதறி கதறி அழுதாள்…….
குழந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கூட்டி சென்ற பிருந்தாவும் தன் கணவரும் குழந்தையை நார்மலாக கொண்டுவர மிகவும் சிரமப்பட்டனர்… அவளால் பழைய மாதிரி அனைவரிடமும் சகஜமாக விளையாடவும் ,எங்கும் செல்ல கூட பயந்தாள்…
சொல்லப்போனால் தன் சொந்த பெற்றோரிடம் கூட சகஜமாக பழக இயலவில்லை. ஷாலினி மிகவும் அழகாக பொம்மை போல இருப்பாள். மேலும் துருதுரு வென்று எப்பொழுதும் தன் அண்ணனை சீண்டிக் கொண்டும், அப்பாவை அடித்துக் கொண்டும். அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டும் இருப்பாள். அப்படிப்பட்ட தன் குழந்தை இப்படி இருப்பதை பார்த்த பெற்றோர்கள் மிகவும் வேதனையுடன் தினம் தினம் தன் நாட்களை கழித்துக் கொண்டிருந்தனர்..
இதைப்பற்றி தன் சொந்தக்காரர்களிடமோ அல்லது போலீஸ் இடமோ வேறு யாரிடமோ கூறுவதற்கு தைரியம் இல்லாத பெற்றோர்கள் தன் மகளின் எதிர்காலத்தை மனதில் எண்ணிக் கொண்டு தங்கள் மனசுக்குள்ளே புழுங்கி கொண்டிருந்தனர்..
ஷாலினி அப்போது மூன்றாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தாள்.. அவள் இந்தப் பிரச்சனைக்கு பிறகு ,பள்ளிக்கு மிக நீண்ட நாள் பள்ளிக்கு செல்லவில்லை. அப்போது ,ஷாலினியின் அம்மா பிருந்தாவிற்கு ஷாலினியின் வகுப்பு ஆசிரியை போன் செய்தார்..
"மேடம் வணக்கம். ஷாலினி ஒரு ஒன் வீக்கா ஸ்கூலுக்கு வரல ,என்னாச்சு ?மேடம் ஏதாவது ப்ராப்ளம் மா" என்று விசாரித்தார்.. பிருந்தாவிற்கோ ஆசிரியரிடம் எதைக் கூற வேண்டும் என்று புரியாமல் சிறிது திகைத்து நின்றாள்..
தன் மகளின் எதிர்காலத்தை மனதில் எண்ணி பேச ஆரம்பித்தாள்." மேடம் வணக்கம். மேடம் ஷாலினிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல .அதனால, ஒரு ரெண்டு மாசம் இல்லாட்டி மூணு மாசம் பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க டாக்டர் .மெடிக்கல் சர்டிபிகேட் உங்ககிட்ட நான் ப்ரொடியூஸ் பண்ணி விடுகிறேன்"என்று கூறினார்.
ஷாலினியின் வகுப்பு ஆசிரியை," மேடம் என்னாச்சு குழந்தைக்கு நல்லா தானே இருந்தா" என்று கேட்டார். பிருந்தாவிற்கோ உடனே என்ன பொய்யை கூறுவது என்று புரியாமல், திகைத்து ஒரு நிமிடம் அமைதி ஆகிவிட்டாள். ஆசிரியை "மேடம் லைன்ல இருக்கீங்களா ?உங்களை தான் "என்று கேட்டார். சுதாரித்து கொண்ட பிருந்தா "இருக்கேன் மேடம் என்று விட்டு பின் தொடர்ந்தால் ,மேடம் பாப்பாவுக்கு யூரின் இன்பெக்சன் ஆயிடுச்சு .அதனாலதான் "என்று முடித்தாள்.
ஆசிரியையும் "இப்போ பாப்பாக்கு எப்படி இருக்கீங்க மேடம் "என்று அக்கறையாக விசாரித்தார்.. பிருந்தாவும் வேறு வழியில்லாமல் 'தன் மகள் பழைய நிலைக்கு வரும் வரை இப்படி மறைத்து தான் ஆக வேண்டும்' என்று மனதில் நினைத்து ..மீண்டும் பொய் கூற ஆரம்பித்தாள் .
"மேடம் அவளுக்கு ரொம்ப டீப்பா இன்பக்சன் ஆனதனால டாக்டர் ஒரு 3 டு 4 மந்த் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க மேடம் " என்று கூறி முடித்தாள் .ஆசிரியையும்" பரவால்ல மேடம் பாப்பாவுடைய உடம்ப பாருங்க .இருந்தாலும் ,ஸ்கூல்ல வந்து பிரின்ஸ்பால் பார்த்து அவங்க கிட்ட பேசி லெட்டர் குடுத்துட்டு போய்டுங்க மேடம் .இல்லனா கொஞ்சம் கஷ்டம் "என்று கூறி ஆசிரியை பேச்சி முடித்தார்.
பிருந்தாவும் "சரிங்க மேடம் கண்டிப்பா வந்து நான் பார்த்து லெட்டர் கொடுகிறேன் மேடம் " என்று கூறினாள்.. 'என்னதான் குழந்தை மீதும் தங்கள் மீதும் தவறு இல்லை .என்றாலும், இந்த சமூகத்தில் அதையெல்லாம் மறைத்து மறந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது அல்லவா'…. பிருந்தாவும் மிகவும் மன வருத்தத்துடன் வீட்டில் அமர்ந்து ஆசிரியையிடம் கூறிய பொய்யை நினைத்து வருந்தி கொண்டிருந்தாள்.
பின்பு ,வேறு வழியின்றி தன் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் நினைத்தவாறு பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் தன் குழந்தையின் பள்ளி விடுப்பிற்கான மருத்துவ சான்றிதழ் ஒன்றை தயார் செய்து கொடுத்துவிட்டு வந்தாள்..
ஷாலினியின் நிலை போல் தற்பொழுது நம் நாட்டில் பல பெண் குழந்தைகளுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன் ஒரு மணி நேரத்தில் 10 அல்லது 20 பெண் குழந்தைகளுக்கு கூட இந்த நிலை ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது.. நம் அரசு இதுபோன்ற குற்றவாளிகளுக்கு மிகவும் கொடுமையான தண்டனைகளை அளித்தால் தான் குற்றங்கள் குறையும் என்று என் மனதில் எழுந்த இந்த பதிவை தங்களுக்கு பதிவிடுகின்றேன்… மேலும் அன்பார்ந்த பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களை நம் பெண் குழந்தைகளை கோழைகளாக இல்லமால், மிகவும் வீரமான பெண்களாக வளர்க்க முற்படுவோம்…. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிப்போம்….. குட் டச் பேட் டச் எது என்று புரிய வைப்போம்….. யாரேனும் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் தனியாக அழைத்து ஏதேனும் பொருள் வாங்கி தருகிறேன் என்று கூறினால் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி வளர்ப்போம்… பெண் குழந்தைகளை இதையே முன் உதாரணமாக காட்டி வீட்டுக்குள் முடக்கி வைக்காமல் நாம் வீரமங்கை வேலுநாச்சியாரை போலவோ அல்லது ஜான்சிராணி போலவோ வீரமான பெண்களாக வளர்க்க முற்படுவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.. ஒரு ஆண் படித்தால் அது அவனோடு முடிந்து விடுகிறது. ஆனால் ,ஒரு பெண் படித்தால் அந்த தலைமுறையில் உள்ள அனைத்
து குழந்தைகளையும் அனைவரையும் சாரும் என்பது என் கருத்து.