Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 128
- Thread Author
- #1
மாலை நேரம் VCR பங்களாவின் வாசலில் வாட்ச் மேன் செல்வம் ஒரு இருக்கையில் அமர்ந்து இருக்க, மூச்சிறைக்க ஓடி வந்தாள் சிறுமி தேன்மொழி.
'தேன்னு... அன்னைக்கே நீ இங்க வர கூடாதுன்னு உன் அப்பா திட்டினாரு தானே!! மறுபடியும் ஏன் நீ இங்க வந்த' என்று செல்வம் கேட்க, அதே தருணம் கருப்பு நிற கார் வாசலின் முன்னே வந்து நின்றது.
அந்த காரின் பின் இருக்கையில் சித்ரா அமர்ந்து இருக்க, காரை பார்த்ததும் செல்வம் கேட்டை திறக்க... சிறுமி தேனோ ஓரமாக நின்று அவர்களையே பார்த்து இருந்தாள்.
காரை பங்களாவின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி,காரில் இருந்து இறங்கிய ஈஷா,'மேடம்... அந்த குழந்தை' என்று தேன்னை சுட்டிக்காட்ட,சித்ரா காரில் இருந்து இறங்கியவள் அந்த சிறுமியை கை அசைத்து தன் அருகே அழைத்தாள்.
பாவாடை சட்டை அணிந்து, இரட்டை குமுடியில், கையில் ஒரு பையுடன் சித்ராவின் அருகே தயங்கி தயங்கி வந்த சிறுமி, சட்டென்று அவள் முன்னே அந்த பையை நீட்டினாள்.
சித்ரா ஒன்றுக்கு நூறு முறை யோசிக்காமல் யாரையும் தன் அருகே சேர்த்துக்கொள்ள விரும்பாதவள் அந்த குழந்தையின் கையில் இருந்த பையை வாங்காமல் ஈஷாவை பார்க்க, சட்டென்று அந்த பையை ஈஷா சிறுமியின் கையில் வாங்கினாள்.
சிறுமி சித்ராவையும் ஈஷாவையும் மாறி மாறி பார்த்து இருக்க, ஈஷா அந்த பையை திறந்து அதில் கை விட்டவள் சில சில்லறை காசுகளை கையில் எடுத்து அதை சித்ராவிடம் காட்டினாள்.
'என்ன இது...ஏன் இவ்ளோ காசு!?' என்று சித்ரா மொத்தமாகவே பத்து ரூபாய் கூட இல்லாத சில்லரையை பற்றி சிறுமியிடம் கேள்வி எழுப்ப,'இந்த பணத்தை வாங்கிகிகிட்டு.. எ... என்... என் அம்மா அப்பா க... கல்லறையை நீங்க எனக்கே தா.. தரீங்களா?' என்று மழலை குரலில் கேட்டாள் சிறுமி தேன்மொழி.
குழந்தையின் கேள்வியில் சித்ரா ஈஷாவை பார்க்க,'பாப்பா...ஆமா நீ ஏன் தனியா இங்க வந்து இருக்க... உன்கூட இருப்பாரே அவர் எங்க' என்று கேட்டாள் ஈஷா.
'யாரு...கருப்பனை கேக்குறீங்களா? அவரு வெளிய போயிட்டாரு. அதான் நான் இந்த காசை எடுத்துக்கிட்டு இங்கன வந்தேன்' என்றாள் சிறுமி.
சிறுமி பேசிக்கொண்டு இருக்கும் நேரம் வெள்ளை நிற காரில் மாறன், கந்தன், முல்லை என்று மூவரும் VCR பங்களாவிற்கு வந்து சேர்ந்தார்கள்.
காரில் இருந்து இறங்கிய மூவரும் அந்த சிறுமியை கேள்வியாக பார்த்து இருக்க,'இந்த பணத்தை வச்சிக்கிட்டு எங்க தோப்பை எங்களுக்கே கொடுத்துடுங்க' என்றாள் சிறுமி.
மீண்டும் சித்ரா தான் தன் தோப்பை வாங்க போகிறாள் என்ற தவறான எண்ணத்தில் சிறுமி பேசிக்கொண்டு இருக்க, அதே சமயம் அங்கே வந்த பெண்ணோருத்தி,
'ஏய் சனியனே...ஒரு இடத்துல இருக்க சொன்னா அடங்கி இருக்கவே மாட்டியா' என்று தேனை பார்த்து கேட்டாள் அந்த பெண்.
சிறுமி என்று பாராமல் குழந்தையை கோவமாக பேசியவளின் செய்லில் சித்ராவின் முகம் மாறி இருக்க,'வீட்டுக்கு வா உன் காலுல சூடு வைக்கிறேன்' என்ற பெண்ணவள் சிறுமியின் காதை பிடித்து தன் வசம் இழுத்தாள்.
ஐந்து வயதே ஆன குழந்தையவள் வலி பொறுக்காமல்,' ஆ... பத்மா வலிக்குது'என்று கத்தியதும்,
'ஏய்.... எத்தனை முறை சொல்லிருக்கேன். என்னை பேர் சொல்லிக்கூப்பிட கூடாதுனு' என்ற பெண்ணவள் குழந்தையை அங்கிருந்து தர தரவென இழுத்து சென்றாள்.
சிறுமியை பத்மா துன்புருத்துவதை பார்த்த சித்ரா சட்டென்று அவளை தடுக்கும் முன்னே சித்ராவின் கைகடிகாரத்தில் ஒரு வீடியோ மெசேஜ் வந்து இருந்தது.
அந்த நிலைமையில் சித்ரா சிறுமியை கவனத்தில் கொள்ளாமல் கைகடிகாரத்தை பார்த்தப்படி வேகமாக தன் பங்களாக்குள் செல்ல... அந்த குழந்தை கொடுத்த சில்லரை காசை எடுத்துக்கொண்டு ஈஷாவும் உள்ளே சென்று இருந்தாள்.
அழுதுக்கொண்டே செல்லும் சிறுமியை பொருட்படுத்தாமல் உள்ளே சென்ற சித்ராவை முல்லை பார்த்தவள்,' ச்சி... என்ன பொண்ணு இவங்க. இப்படி தான் இவங்க அடுத்தவுங்க சொத்தை அடித்து பிடுங்கி பணம் சம்பாதிக்கிறாங்களா!?' என்று மாறனை பார்த்து கேட்டாள்.
முல்லை தன்னிடம் தான் பேசுகிறாள் என்று மாறன் அறிந்து இருந்தாலும் கதிர் மீது முல்லைக்கு இருக்கும் காதலை ஏற்றுக்கொள்ள மனமில்லாத மாறன் தன் சகோதரிரையை முறைத்து பார்த்தப்படி வீட்டுக்குள் நுழைய..'அக்கா... என்னாச்சு, ஏன் மாறன் அண்ணா உன்கிட்ட பேச மாட்டுது' என்று கேட்டான் கந்தன்.
'டேய்... அதெல்லாம் போக போக அண்ணன் என்கிட்ட பேசும். சரி நீ வா... நம்ம சீக்கிரமா படிச்சிட்டு ஜாலியா விளையாடலாம்' என்று கந்தனை அழைத்தாள் முல்லை.
கடந்த சில நாட்களாக முல்லை கவலையில் இருந்தவளின் முகம் இப்பொது பொழிவாக மாறி இருக்க,'என்ன அக்கா, என்ன விஷயம்,ரொம்ப ஹப்பியா இருக்க!!' என்று கேட்டான் கந்தன்.
'ஆமா டா... ஹாப்பி தான்,ரொம்ப ஹாப்பி' என்ற முல்லை மனமகிழிச்சியுடன் தன் அறைக்குள் நுழைந்தவளின் சிந்தையெல்லாம் கதிரின் நினைவு தான் நிறைந்து இருந்தது.

நேரம் இரவு ஏழு மணி அளவில் VCR பங்களாவில் பணிபுரியும் சமயலாளி அனைவரரையும் இரவு உணவுக்காக அழைத்து இருக்க, எப்போதும் போலவே ஈஷா, மாறன், கந்தன், முல்லை என்று நால்வரும் எதிர் எதிரே சாப்பாட்டு மேசையின் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தார்கள்.
முல்லையும் கந்தனும் சகஜமாக பேசிக்கொண்டு இருக்க,'என்ன மாறா... உடம்பு எதுவும் சரியில்லையா' என்று கேட்டாள் ஈஷா.
அவள் கேள்வியில் சட்டென்று சுதாரித்துக்கொண்டவன்,'இல்லயே... ஏன் கேக்குறிங்க' என்று கேட்க,'இல்ல... எப்பவுமே உங்க உதட்டோரத்தில் சின்ன சிரிப்பு தெரியும். ஆனா இன்னைக்கு அது மிஸ் ஆகுதே' என்றாள் ஈஷா.
தன் மனநிலையை சரியாக புரிந்துகொண்ட ஈஷாவை பார்த்து மாறன் வெறுமையாக சிரித்து,'தல வலிக்குது' என்ற தருணம் சித்ரா மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள்.
சித்ராவை பார்த்ததும் முல்லையின் முகத்தில் கோவம் தெரிய, சித்ரா யாரையும் பொருட்படுத்தாமல் சமையலறை சென்று அவளுக்கான இரவு உணவை தயார் செய்துகொண்டு வந்து அவள் இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடிக்க,'மேடம்...' என்ற அழைப்போடு வீட்டின்னுள் நுழைந்தார் வாட்ச் மேன் செல்வம்.
'மேடம் நான் கிளம்புரேங்க' என்ற செல்வம் அங்குள்ள அனைவரையும் ஒரு முறை கேள்வியாக பார்த்தவன்,'மேடம் அப்போ நைட்டுக்கு வாட்ச் மேன் வேண்டாமா!?' என்று கேட்டான்.
செல்வத்தின் கேள்வியில் மாறனும் முல்லையும் சித்ராவை பார்த்து இருக்க,'ஏன்!?... நைட்டுக்கு வாட்ச் women இருந்தா ஆகாதா!?' என்ற சித்ரா அங்குள்ள சோபாவில் அமர்ந்து தன் எதிரே நின்று இருக்கும் செல்வத்தை பார்த்து கேள்வி எழுப்பினாள்.
சித்ராவின் பேச்சை கேட்க எப்போதும் விரும்பாத முல்லை அங்கிருந்து நகர்ந்து தன் அறைக்குள் செல்ல... அவளை தொடர்ந்து கந்தனும் சென்று இருந்தான்.
'என்னதான் இருந்தாலும் நைட் ஒரு பொண்ணு...' என்று செல்வம் அவர் வார்த்தையை முடிக்கும் முன்னே,
'பொண்ணா இருந்தா என்ன... ஓ!! யாராவது மிரட்டுனா உங்கள மாதிரி எல்லா தகவலையும் சொல்லிடுவாங்கனு சொல்ல வரிங்களா Mr. செல்வம்!?' என்று கேட்டாள் சித்ரா.
சித்ராவின் கேள்வியில் வாயடைத்து போன செல்வம். இன்று மதியம் கதிர் இந்த பங்களாவிற்கு வந்து சென்ற விஷயத்தை தான் பேசுகிறாள் என்று புரிந்துகொண்டான்.
'மேடம்... அது வந்து... அது கதிர் சார்...' என்று செல்வம் மேற்கொண்டு பேசும் முன்னே...அவன் முன்னே தன் இடது கையை காட்டி அவன் வார்த்தையை தடுத்த சித்ரா,'உங்க டூட்டி டைம் ஓவர்... நீங்க கிளம்பலாம்' என்றாள்.
'மேடம்... அவர் இங்க வந்தது' என்று மேலும் செல்வா பேசும் முன்னே...'ஈஷா...' என்று சித்ராவின் அழுத்தமான குரலைக்கேட்டு,'செல்வம் நீங்க கிளம்புங்க' என்றாள் ஈஷா.
தான் சொல்ல வந்ததை கேட்கும் அவசியம் சித்ராவிற்கு இல்லை என்று உணர்ந்த செல்வம் அங்கிருந்து நகரும் தருணம்...'ஒரு நிமிஷம்' என்ற சித்ராவின் குரலை கேட்டு செல்வம் அங்கேயே நின்றான்.
சோபாவில் இருந்து எழுந்த சித்ரா, 'நாளைக்கு இங்க வேலைக்கு வரும் போது, உங்க வீட்டு தோட்டத்துல வளர்ந்து இருக்க Alo vera செடி ஒன்றை எடுத்து வந்து இந்த பங்களாகுள்ள நட்டு வையுங்க Mr. செல்வம்' என்றவளின் வார்த்தையைக் கேட்டு அவனுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.
'மேடம்...' என்ற செல்வத்தை பார்த்து..
'உங்க வீட்டுல வளர்ந்து இருக்கும் கற்றாழை செடியை பற்றியே தெரிந்து வைத்து இருக்கும் எனக்கு!! இந்த வீட்டுக்கு வந்துட்டு போன விஷ செடியை பற்றி தெரியாமல் போகுமா என்ன!?' என்று சித்ராங்கி கேட்க, செல்வத்தின் நெற்றியில் வியர்வை துளிர்த்தது.
சித்ரா மேலும் செல்வாவை அழுத்தமாக பார்த்தவள்.'அவன் இங்க வந்ததது உங்க தவறு இல்லை, ஆனா அவன் வந்ததை நீங்க என்கிட்ட சொல்லாதது உங்க தப்பு தான். தப்புக்கும் தவறுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு. ஆனா அடுத்து ஒரு முறை உங்கனால இங்க தப்பு தவறி கூட நடக்கக் கூடாது ' என்று சித்ரா சொல்ல... செல்வம் தன் தப்பை உணர்ந்து தலை கவிழ்ந்தான்.
'உங்க Mrs pregnantஆ இருக்காங்க தானே... அவங்கள ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க. இப்போ நீங்க போகலாம்' என்று சித்ரா சொல்ல...தன்னை பற்றி மட்டும் இல்லாமல் தன் குடும்பத்தை பற்றிக்கூட தெரிந்து வைத்து இருக்கும் பெண் இவளின் ஆளுமையை பார்த்து ப்ரமித்த வண்ணம் செல்வம் அங்கிருந்து சென்று இருந்தான்.
செல்வம் சென்ற பாதையை மாறன் திகைப்புடன் பார்த்து இருந்தவனின் கண் முன்னே சித்ராவின் கைகள் அசைவதை உணர்ந்தான்.
இதுநாள் வரை தூரத்தில் இருந்து பார்த்தே அஞ்சிய மாறனுக்கு சித்ராவின் அருகமையில் ஒரு நொடி அவன் இதயம் செயல் இழந்து மீண்டும் துடித்தது.
மாறனை உற்று பார்த்த சித்ரா,' என்ன... என்கிட்ட எதாவது சொல்லணுமா!?' என்று கேட்க... மாறனோ அவன் தலையை வலது இடது மேலே கீழே என்று நான்கு திசையிலும் ஆட்டினான்.
மாறனை பார்த்து சித்ரா விஷமமாக சிரித்தவள். ' Listen மாறா… a thief may escape for many days, but not forever.' என்றாள்.
அவள் வார்த்தையில் உள்ள உள்குத்தை கேட்டு மாறனுக்கு உள்ளுக்குள் பயம் எழுந்த நிலையில்.
'ஈஷா... மாறனுக்கு ரொம்ப தலை வலிக்குது போல. சட்டுன்னு போற மாதிரி, I மீன் வலி போற மாதிரி ஒரு மாத்திரையை எடுத்துக்கொடு' என்ற சித்ரா மாடியில் உள்ள தன் அறைக்கு சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.
சித்ரா சென்றதும் தன் அறையில் இருக்கும் மாத்திரையை எடுத்து வந்த ஈஷா...'இத போட்டுட்டு நிம்மதியா தூங்குங்க மாறா... மேடம் எல்லாத்தையும் பார்த்துப்பாங்க' என்றவள் மீண்டும் அவள் அறைக்குள் சென்று விட,
முல்லை கதிரின் காதல் விவகாரத்தை சித்ராவிடம் சொல்வதா இல்லையா என்ற யோசனையில் மாறனுக்கு மயக்கமே வந்தது.

இதே தருணம் மறுபக்கம் இன்று கதிரும் முல்லையும் ஜோடியாக நின்று பேசிக்கொண்டு இருந்த வீடியோவை UD பங்களாவில் வசிக்கும் ரம்யா தன் கைபேசி வாயிலாக பார்த்தவள்,அந்த போனை கீழே தூக்கி போட்டு உடைத்து இருந்தவளின் கோவம் மொத்ததும் முல்லையின் மீது திரும்பி இருக்க,
'என் கதிரை நான் யாருக்காகவும் விட்டு தர மாட்டேன்' என்று கத்தியவள் அடுத்தடுத்து செய்யப்போகும் காரியத்தால் KM காதலுக்கு என்ன பிரச்சனை வரபோகிறது என்று தெரிந்துக்கொள்ள என்னோடு எழுத்தின் வாயிலாக இணைந்து இருங்கள்.
இப்படிக்கு உங்கள் நான்

அனைவருக்கும் காதலர் தின நல் வாழ்த்துகள் 