• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
121
இதே தருணம் கதிர் அவன் நண்பன் உதயாவை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்ல. அங்கே அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்,'என்னாச்சு இவருக்கு. அடி இவ்ளோ ஆழமா பட்டு இருக்கு' என்று கேட்டார் .

'அது... அது டாக்டர்' என்று ரம்யா உண்மையை சொல்லும் முன்னே,' டாக்டர்... முதல்ல அவனுக்கு டிரீட்மென்ட் தாங்க. மீதி கதையை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்' என்றான் கதிர்.

கதிரின் பெரியப்பா சாரங்கம், அப்பா பரமன் என்று இருவரும் அந்த ஊரில் கட்டபஞ்சாயத்து செய்யும் ஆட்கள் என்று சின்ன குழந்தைகள் கூட அறிந்து இருந்த நிலையில், அந்த குடும்பத்தை சேர்ந்த கதிரிடம் ஏன் நமக்கு பிரச்சனை என்று எண்ணிய மருத்துவர் மறு கேள்வி கேட்காமல் உதயாவிற்கு சிகிச்சை கொடுத்தார்.

கதிர் அதீத கோவத்தோடு காத்து இருப்பு இருக்கையில் அமர்ந்து இருந்தவனின் காதில் சித்ராவின் குரல் ஒலிக்க,'என் அப்பா பேர் அவளுக்கு எப்படி தெரியும்' என்று குழம்பினான் கதிர்.

பல யோசனையில் அமர்ந்து இருந்த கதிரின் அருகே பேய் அரைந்ததை போல வந்து நின்ற ரம்யா,'கதிர்... யார் அந்த பொண்ணு!?' என்று கேட்க,'யாருக்கு தெரியும். இனி தான் அவளை பற்றி அக்கு வேரா ஆணி வேரா கண்டுபிடிக்கணும்' என்றான் கதிர்.

'ஐயோ கதிர்... நான் அந்த ராங்கியை பற்றி கேட்கல, நான் கேட்டது, நீ அங்க யாரையோ ஒரு பொண்ணை முல்லை முல்லைன்னு கூப்பிடியே... அந்த பொண்ணு யாருன்னு கேட்டேன்' என்றாள் ரம்யா.

'அவ... அவ பேர் முல்லை' என்ற கதிரின் இதழ் ஓரத்தில் புன்னகை மலர,'அத தெரிஞ்சிகிட்டேன், ஆனா அவ யாரு!?' என்று கேட்டாள் ரம்யா.

'அவ...' என்று கதிர் முல்லையை பற்றி சொல்லும் முன்னே கதிரின் கைபேசி ஒலி எழுப்ப...'அப்பா தான் call பண்ணுறாரு' என்ற கதிர் தன் கைபேசியுடன் அங்கிருந்து நகர்ந்து இருந்தான்.

இயல்பாகவே கதிர் மற்ற பெண்களிடம் பேசுவதை விரும்பாத ரம்யா,'யார் அவ!? அவளுக்கு ஒன்னுனா கதிர் ஏன் துடிக்கணும்' என்று குழம்பியவளின் மனதில் முல்லை மீது காரணமே இல்லாமல் கோவம் ஏற்பட்டது.

'சொல்லுங்க ப்பா' என்று கதிர் தன் அப்பாவிடம் கைபேசியில் பேசிக்கொண்டு இருக்க,'என்னடா... போன காரியம் என்னாச்சு?' என்று கேட்டார் பரந்தாமன் @பரமன்.

'அப்பா... அது... அது அந்த இடம்' என்று கதிர் மேற்கொண்டு பேசும் முன்னே,'ம்... புரியுது... உன்னால எதுவும் பண்ண முடியல. அப்படி தானே. சரி... விடு.நீ நேரத்தோடு வீட்டுக்கு வந்து சேரு' என்றார் பரந்தாமன்.

இதுநாள் வரை தன் அப்பா நினைத்த காரியத்தை கனகட்சிதமாக முடித்து கொடுத்த கதிருக்கு இந்த முறை சித்ராவால் அவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக்கொள்ளவே முடியாத நிலையில் அருகே இருந்த கண்ணாடி கதவில் தன் கையை ஓங்கி குத்தினான்.

அவன் கோவத்தின் வேகத்தை தாங்காத கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து போக,'ஐயோ கதிர்' என்று ரம்யா ஓடி வந்து கதிரின் கையில் ஏற்பட்ட சின்ன காயத்தை பார்த்து பதறினாள்.

'அவளை நான் சும்மாவே விட மாட்டேன்' என்று கதிர் மீண்டும் வீர வசனம் பேச.
'பேபி நீ tencsion ஆகாத பேபி. அப்பாகிட்ட சொல்லி அவளை நம்ம ஒரு வழி பண்ணிடலாம்' என்று ரம்யா கதிருக்கு ஆறுதல் சொல்லி அவனை மீண்டும் கட்டிக்கொண்டாள்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே தருணம் கதிரின் வீட்டில் அவன் பெரியப்பா அப்பா அம்மா பெரியம்மா என்று அனைவரும் கோவத்தில் அமர்ந்து இருக்க, கதிரின் அத்தை வள்ளியின் மகள் மீனா காலேஜில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தாள்.

'என்ன இது... ஏன் எல்லோரும் ஒரு மாதிரி இருக்கீங்க' என்ற மீனா நேரே தன் பாட்டி தேவியின் அறைக்கு செல்ல.அவரோ அவரின் மூத்த பையன் விநாயகத்தின் அறையில் இருந்தார்.

விநாயகம் மாத்திரையின் வீரியத்தால் ஒரு மூலையில் போடப்பட்டு இருந்த கட்டிலில் படுத்து இருக்க,'என்னாச்சு பாட்டி.. வீட்டுல எல்லோரும் ஏன் இவ்ளோ கோவமா இருக்காங்க' என்று கேட்டாள்.

'அது வேற ஒன்னும் இல்ல மீனா கண்ணு. எப்பவும் இந்த ஊருல உன் மாமனுங்க தானே எல்லா சொத்தையும் அவங்க பேருல வாங்கி போடுவானுங்க. ஆனா இன்னைக்கு யாரோ ஒரு பொண்ணுகிட்ட இவனுங்க வாங்க வேண்டிய இடத்தை கோட்டை விட்டுட்டு வந்து இருக்காங்க' என்றார் தேவி பாட்டி.

'ஹாங்... எப்போவுமே ஒருத்தவுங்களே வெற்றி காண முடியுமா. இதுநாள் வர உங்க பசங்க ஜெயிச்சாங்க. இப்போ யாரோ ஒரு பொண்ணு ஜெச்சிருக்கா. இதுக்கா இவங்க இவ்ளோ கோவமா இருக்காங்க' என்று மீனா கேட்க,
'அவங்க எக்கேடோ போகட்டும். சரி நான் கேட்டது என்னாச்சு' என்று பொறுமையாக கேட்டார் தேவி பாட்டி.

'பாட்டி... நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்கள பற்றி தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுறேன். ஆனா அவங்க இப்போ உயிரோட இருக்காங்களா கூட தெரியல' என்று மீனா சொல்ல...'உஷ் கத்தாத' என்ற தேவி பாட்டி மீனாவின் வாயை பொத்தி இருந்தார்.

'பாட்டி... நீங்க கவலைப்படாதீங்க. கண்டிப்பா விநாயகம் மாமா கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்த லேடியும் அவங்க கூட இருந்த சின்ன பொண்ணும் இப்போ எங்க இருக்காங்கனு நான் விசாரித்து சொல்லுறேன்' என்று மீனா சொல்ல.... தேவி பாட்டி தன் எதிரே மனநலம் பாதிக்கப்பட்டு படுத்து இருந்த விநாயகத்தை பார்த்து கண்கள் கலங்கினார்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே தருணம் VCR பங்களாவில் மாறன் முல்லை கந்தன் ஈஷா என்று நால்வரும் சாப்பிட அமர்ந்து இருக்க...சித்ரா அவளுக்கான உணவை அவளே தயார் செய்துகொண்டு வந்து டைன்னிங் டேபிளில் அமர்ந்தாள்.

'சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு' என்ற கந்தன். 'நீங்க மட்டும் ஏன் வேற சாப்பாடு சாப்பிடுறிங்க' என்று சித்ராவை கேட்க, அந்த சிறுவனை பார்த்து சிரித்தவள்,'நீ நேரத்தோடு சாப்பிட்டு போய் படு' என்றாள்.

'நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே' என்று கந்தன் மீண்டும் சித்ராவை கேள்வி கேட்க,'Good night' என்ற சித்ரா அவள் சாப்பிட்ட தட்டை அவளே கழுவி எடுத்து வைத்தவள். ஈஷாவை பார்த்து கண்களால் பேசியப்படி அங்கிருந்து அவள் அறைக்கு சென்று இருந்தாள்.

ஏற்கனவே சித்ராவால் தான் தனக்கு காயம் ஏற்பட்டது என்ற மனநிலையில் இருந்த முல்லைக்கு சித்ராவின் செயல்கள் எல்லாம் மேலும் மேலும் கோவத்தை எழுப்பி இருக்க,
'அண்ணா... அவங்கன்னால தானே எனக்கு அடிபட்டுச்சு. ஆனா பாரு! அவங்க என்கிட்ட ஒரு மன்னிப்பு கூட கேட்காம போறாங்க' என்று மாறனை முறைத்தாள் முல்லை.

இந்த நொடி வரை முல்லையிடம் பெரிதாக பேசிடாத ஈஷா அந்த இடத்தில் சற்று கோவம் கொண்டவள்,' உங்களுக்கு அடிப்பட்டதுக்கு காரணம் CR மேடம் இல்ல. இதுக்கு காரணம் அந்த ரவுடி பையன் தான்' என்றாள் ஈஷா.

கதிரை தான் அவள் சொல்கிறாள் என்று தெரிந்துகொண்ட முல்லையோ,'யார நீங்க ரவுடி பையன்னு சொல்றிங்க. அவர் யார் தெரியுமா!?' என்று ஈஷாவிடம் சண்டைக்கு போவதை போல எகுறிக்கொண்டு வந்தவள்,

'இன்னோரு முறை கதிரை பற்றி தப்பா பேசினா நான் உங்களுக்கு மரியாதையே தர மாட்டேன்' என்றவள் வேகமாக தன் அறைக்குள் சென்று கதவ அடைத்துக்கொண்டாள்.

'என்ன மாறா இது. ஏன் உங்க சிஸ்டர் இப்படி behave பண்ணுறாங்க. ஆமா யார் அந்த கதிர். அவருக்கும் முல்லைக்கும் என்ன சம்மந்தம்' என்று ஈஷா கேட்க,

'எனக்கும் தெரியல மேடம். இருங்க நான் பாப்பாக்கிட்ட கேட்டு சொல்லுறேன்' என்றான் மாறன்.

'இல்லை மாறா... நீங்க எதுவும் கேட்க வேணா... ஆனா உங்க சிஸ்டர்க்கு அடிப்பட்டதுக்கு காரணம் CR மேடம் இல்ல. அதுக்கு முழுக்க காரணம் அந்த கதிர் மட்டும் தான்' என்ற ஈஷா அங்கிருந்து சென்றதும்,'டேய் கந்தா... யாருடா அந்த கதிர் ' என்று தன் தம்பியிடம் கேட்டான் மாறன்.

'ஐயோ அண்ணா எனக்கு ஒன்னும் தெரியாது' என்று பதறிய கந்தணும் அவன் அறைக்கு செல்ல... மறுநாள் முல்லையிடம் கதிரை பற்றி விசாரித்து கேட்டுக்கொள்ள வேண்டும் என்று எண்ணிகொண்டான் மாறன்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இரவு உணவை முடித்த சித்ரா அவள் அறையில் உள்ள கட்டிலில் அமர்ந்து தன் மடி கணினியில் வேலை பார்த்துக்கொண்டு இருக்க... அவள் பங்களாவின் வாசலில் நின்றப்படி ஒரு சிறுமி வாட்ச் மேன் செல்வத்திடம் கெஞ்சும் காட்சி தெள்ளதெளிவாக தெரிந்தது.

CCTVயின் வழியே அங்கே சிறுமியை பார்த்த சித்ரா சற்றும் தாமதிக்காமல் வாட்ச் மேன் செல்வாவை அழைத்தவள்,'அங்க என்ன பிரச்சனை!?' என்று வினாவினாள்.

'மேடம்.. அது... அது வந்து இந்த சின்ன பொண்ணு அந்த பனை மர தோப்பு இருக்கே, அங்க இருந்து வந்து இருக்கா மேடம்'என்று செல்வா சொல்ல...'என்ன விஷயம்!?' என்று கேட்டாள் சித்ரா.

' மேடம்... இந்த பொண்ணு இந்த இடத்தொட சொந்தக்காரங்ககிட்ட பேசணுமா மேடம்' என்று செல்வா சொல்ல... அடுத்த ஒரு நிமிடத்தில் இரவு ஆடையின் மீது ஓவர் கோட் போட்டுக்கொண்டு வேகமாக வாசலை நோக்கி நடந்து வந்தாள் சித்ரா.

'பாப்பா... அதோ அவங்க தான் இந்த வீட்டோட முதலாளி அம்மா' என்று வாட்ச் மேன் சித்ராவை சுட்டிகாட்ட.

ஆறு வயதுகூட
முழுதாக நிரம்பிடாத குழந்தை அவள், 'மேடம் மேடம் என் அப்பா அம்மா இருக்குற இடத்தை நீங்க தான் வாங்க போறிங்களா!?' என்று கேட்டாள் சிறுமி.

அவள் என்னமோ பேச வருகிறாள் என்று சித்ரா உன்னிப்பாக அவள் வார்த்தையை கவனிக்கும் வேளையில் , ' தேனு இங்க என்ன பண்ணுற வ.. எத்தனை முறை நீ இங்க தனியா வரவே கூடாதுனு சொல்லி இருக்கேன்' என்ற ஆணின் குரல் கேட்டு சித்ரா திரும்பி பார்த்தாள்.

பார்க்க ஆறடி உயரத்தில், வைரம் பாஞ்ச தேகம் என்று சொல்லும் அளவுக்கு கட்டு மஸ்த்தான ஆள் ஒருவன் சித்ராவின் கண் எதிரே வந்து நிற்க்க,'கருப்பா' என்று ஓடிப்போய் சிறுமி அவன் கழுத்தை கட்டிக்கொள்ள... யார் இவர்கள் என்ற கேள்வி சித்ராவின் மனதில் தோன்றியது.

தொடரும் 🔱
 
New member
Joined
May 2, 2025
Messages
18

😍❤️
 
Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top