• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
தீமையே🔱வெ(கொ)ல்லும்

✨படலம் -3

கதிர் சுயநினைவு இல்லாமல் செட்டியார் வீட்டின் முற்றத்தில் மயங்கி இருக்க,'அம்மா... இவங்க குடும்பத்துல இருக்குற ஆளுங்க எல்லாம் கொலைகார பாவிங்க. நீங்க வேற இந்த பையனை இப்படி பண்ணத அவங்க கேள்விப்பட்டா உங்களுக்கு அவங்கன்னால எதாவது பிரச்சனை வரும்' என்றார் செட்டியார்.

அவரின் வார்த்தையை கேட்டு சித்ரா மேலும் கதிரை முறைத்தவள்,'பிரச்சனை வரணும்... இனி இவங்க எல்லாம் பிரச்சனையை மட்டும் தான் சந்திக்கணும்' என்ற சித்ரா,

'இவன் எழுந்ததும் இங்க இருந்து அவனாக போகட்டும். நீ வா ஈஷா நம்ம கிளம்பலாம்' என்ற சித்ரா செட்டியாரின் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தாள்.

சித்ராவின் பேச்சும் நடவடிக்கையும் செட்டியாருக்கு புரியாத புதிராக இருக்க.
'தம்பி... தம்பி' என்று அவர் கதிரை எழுப்பினார்.

வாய் வார்த்தையை கேட்டு கதிர் எழாமல் இருக்க... அருகே இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் செட்டியார் தெளித்ததும் கதிர் மயக்கத்தில் இருந்து கண் விழித்தவனுக்கு தலை வலி உயிர் போனது.

'தம்பி...' என்று மீண்டும் செட்டியார் கதிரை அழைக்க...'எங்க அவ' என்று கரிஜனையுடன் எழுந்தான் கதிர்.

சித்ராவை தான் அவன் கேட்டிக்கிறான் என்று செட்டியார் அறிந்து இருந்தாலும்.
'தம்பி... யாரப்பா கேக்குற' என்று அவர் அறியாத வண்ணம் கேட்க... சட்டென்று அவரின் கழுத்தை பிடித்து நெரித்து இருந்தான் கதிர்.

'தம்பி விடுப்பா வலிக்குது' என்று கதிரின் உடும்பு பிடியை தாங்க முடியாமல் செட்டியார் கண்கள் கலங்க,
'கேக்குறனே... எங்க அவ' என்று மீண்டும் அழுத்தமாக கேட்டான் கதிர்.

'தெ... தெரியல தம்பி' என்று செட்டியார் பொய் சொல்ல...
'அவளை நான் என்ன பண்ணுறேன்னு
பாரு ' என்று கோவமாக அருகே இருந்த ஜாடியை எட்டி உதைத்துக்கொண்டு வெளியே போனான் கதிர்.

பெண்கள் என்றாலே இப்படி தான் இருக்க வேண்டும் என கதிர் அவனுக்கேன்று ஒரு வர முறை வைத்து இருந்தவனுக்கு தன் மீது கை வைத்த சித்ரா மீது எல்லை இல்லாத கோவம் எழுந்தது.

எப்படியாவது சித்ராவை பழி வாங்க வேண்டும் என்று செட்டியாரின் வீட்டில் இருந்து கதிர் கிளம்பியவன் நேரே சென்றது என்னவோ அவனின் நண்பர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு தான்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே தருணம்.
செட்டியார் வீட்டில் இருந்து வெளியேறிய சித்ராவை அழைத்துக்கொண்டு ஈஷா காரை புது பங்களா இருக்கும் முகவரிக்கு விரட்டினாள்.

சித்ராவின் முகம் இயல்புக்கு மாறாக அதீத கோபத்துடன் இருக்க,' ஆர் யூ ஓகே மேடம்?' என்று கேட்டாள் ஈஷா.

'நான் ஓகே ஆகணும்னா ரெண்டு பேர் உயிரை என் கையால பழி கொடுக்கணும்' என்ற சித்ராவை பார்த்து ஈஷாவிற்கு உள்ளுற நடுக்கம் எழுந்தது.

'மேடம்... நம்ம செட்டியாரோட ப்ரொபேர்ட்டியை வாங்க மட்டும் தானே இந்த ஊருக்கு வந்தோம்' என்று ஈஷா கேட்க,' இல்ல...அந்த (கதிரின் பாட்டி) சித்ராதேவி பேர்ல இருக்குற சொத்து முழுக்க எனக்கு வேண்டும்' என்றாள் சித்ரா.

'எந்த சித்ரா தேவி' என்று ஈஷா புரியாமல் கேட்க,' அதெல்லாம் நீ போக போக தெரிஞ்சுக்கலாம் ... சரி முருகன் அங்கிள்கிட்ட பேசிட்டியா?' என்று கேட்டாள் சித்ரா.

'அவருக்கு call பண்ணேன். ஆனா அவரு போனை எடுக்கல' என்று ஈஷா சொல்ல,

'என்ன... போனை எடுக்கலையா... அவர் என் காலுக்கு responds பண்ணாம இருக்க மாட்டாரே...வேற எதாவது பிரச்சனையா?' என்று யோசித்த சித்ரா சற்றும் தாமதிக்கலாம் பார்வதியின் கைபேசிக்கு தொடர்புகொண்டாள்.

நீண்ட நிமிடங்கள் பார்வதியும் இவள் அழைப்புக்கு பதில் தராமல் இருக்க...
'ஈஷா... புது வீட்டுக்கு அப்புறம் போகலாம், நீ first முருகன் அங்கிள் வீட்டுக்கு கிளம்பு' என்றாள் சித்ரா.

முருகனின் வீடு. இவர்கள் இருக்கும் ஊரில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேர தொலைவில் இருக்க,
ஈஷா GPS மூலம் முகவரியை கண்டறிந்து காரை வேகமாக விரட்டினாள்.

வழியெல்லாம் சில நொடிகள் கூட ஓய்வு கொடுக்காமல் சித்ரா மடி கணினியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்தில் ஈஷா விரட்டிய கார் முருகனின் இல்லத்தை அடைந்து இருக்க...
அந்த வீட்டை பார்த்ததும் சித்ராவின் கண்களில் சொல்ல முடியாத அளவுக்கு சோகம் தெரிந்தது.

'மேடம்... நீங்க காருல இருங்க. நான் உள்ள போய் முருகன் சாரை வர சொல்லுறேன்' என்று ஈஷா சொல்ல..
'இல்ல... நானே உள்ள போறேன்' என்ற சித்ரா சற்று தடுமாற்றதுடன் காரில் இருந்து இறங்கி முருகனின் வீட்டு வாசல் கதவை தட்டினாள்.

லேடி suit போட்டுக்கொண்டு எப்போதும் சிடு சிடுவென இருக்கும் சித்ராவிற்கு பார்வதி என்றால் பிரியம் கலந்த மரியாதை இருக்க தான் செய்தது.

கதவை தட்டும் சத்தம் கேட்டு சிறுவன் கந்தன் வாசல் கதவை திறந்தவன்,
'யார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?' என்று வாசலை மறைத்துக்கொண்டு கேள்விகளை எழுப்பினான்.

'பார்வதி ஆன்ட்டி இல்லையா?' என்ற சித்ராவின் கண்கள் முருகனை தேட...
'அம்மா... உங்கள பார்க்க யாரோ வந்து இருக்காங்க' என்று கத்தினான் கந்தன்.

'என்ன பார்க்கவா... யார் அது?' என்று கேட்டுக்கொண்டே பார்வதி வாசலுக்கு வந்து பார்க்க,'நீ... நீங்க?' என்று பார்வதி யோசிக்கும் முன்னே,

'பெரியபாப்பா... நீ எங்கம்மா இங்க?' என்று முடியாத உடல் நிலையில் ஆட்டோவில் இருந்து பதறி அடித்தப்படி கீழே இறங்கி வந்தார் முருகன்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

உடல் நிலை சரியில்லாத முருகன் சித்ராவை பார்த்ததும் தலை கால் புரியாமல் நடந்துக்கொண்டதை பார்த்து...
'அப்பா அப்பா பொறுமையா நடங்க' என்று பயத்துடன் ஓடி வந்த முல்லை முருகனை தாங்கி பிடித்தாள்.

'என்ன அங்கிள், போன் பண்ணா ஏன் போனை எடுக்கல...எதாவது பிரச்சனையா?' என்று சித்ரா முருகனை விசாரிக்க..
'அ... அதெல்லாம் இல்ல பெரிய பாப்பா' என்றார் முருகன்.

'யார் இது சித்ராவா' என்ற பார்வதி... பல வருடங்கள் கடந்து சித்ரராங்கியை பார்த்தவள்..'என்னமா எப்படி இருக்க' என்று நலம் விசாரிக்க..
'உள்ள வந்து பேசாம என்ன வாசல்ல நிக்க வச்சி நலம் விசாரிக்கிறீங்க?' என்று கேட்டான் சிறுவன் கந்தன்.

'அப்பா... யாரு இவங்க?' என்று கேட்டுக்கொண்டே ஆட்டோவிற்கு பணம் கொடுத்தப்படி வெற்றி மாறன் அங்கே வர...

'டேய் இவங்க தான் பெரிய பாப்பா டா... அம்மாடி முல்ல... என்ன அப்படி பாக்குற.. போ போ உள்ள போய் பாப்பாவுக்கு Chair எடுத்து போடு' என்றார் முருகன்.

வாசலில் நின்றப்படியே இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்க....முல்லை சித்ராவை முறைத்து பார்த்தப்படி வீட்டுக்குள் சென்றவளுக்கு சித்ரா என்றாலே சின்ன கடுப்பு இருக்க தான் செய்தது.

ஆம் இருக்காதா பின்ன... வீட்டில் முருகன் பேசும் பாதி வார்த்தை சித்ராவை பற்றி
மட்டுமே இருக்க... நம்மை விட நம் அப்பாவுக்கு சித்ரா மீது தான் பாசம் அதிகம் இருக்கிறது என்ற சிறுபிள்ளை தனமான எண்ணம் முல்லைக்கு இருந்தது.

அது மட்டுமின்றி, வருடம் ஒரு முறை விடுதியில் இருந்து வெற்றி மாறனும் ரத்தின முல்லையும் தன் வீட்டுக்கு வரும் நேரத்தில் கூட சித்ராவிர்க்காக வெளியூரில் தங்கி இருக்கும் முருகன் இவர்களை பார்க்க வராதது முல்லைக்கு வருத்தத்தை கொடுத்தது.

சின்ன விஷயங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து சித்ராவை பற்றிய பேச்சு எடுத்தாலே முல்லைக்கு பிடிக்காமல் போய் இருந்தது.

பெயரை கேட்கக்கூட விருப்பம் இல்லாத பெண்ணை இன்று நேரில் பார்த்ததும் முல்லைக்கு மேலும் கோவம் எழுந்து இருக்க...தன் தங்கையின் மனதை அறிந்து இருந்த மாறனோ,'என்ன முல்ல... உன் தலைவி வந்து இருக்காங்க போல' என்று கிண்டலாக கேட்டான்.

'லூசு மாதிரி பேசாத. அவங்க ஒன்னும் எனக்கு தலைவி இல்ல... அவங்க நம்ம குடும்பத்துக்கு பிடித்த தலைவலி' என்ற முல்லை அவள் அறைக்குள் சென்று அமர்ந்துக்கொண்டாள்.

'என்ன பாப்பா... நீங்க இந்நேரம் மலேசியா கிளம்பி இருப்பிங்கனு நினைச்சேன்' என்று முருகன் சித்ராவை பார்த்து கேட்டதும்.
'இனி கொஞ்ச நாள் பக்கத்து ஊருல தான் தங்கபோறேன் அங்கிள்.' என்றாள் சித்ரா.

'என்ன பக்கத்து ஊருளையா!?.
ஏன் பாப்பா... எதாவது பிரச்சனையா!?' என்று பதற்றமாக கேட்டார் முருகன்.

'பிரச்சனை இதுவர இல்ல... இனி தான் ஆரம்பிக்கணும்' என்று சித்ரா சொல்ல...'இந்தா பாப்பா காபி எடுத்துக்கோ' என்று டம்பரை நீட்டினார் பார்வதி.

'No thanks ஆன்ட்டி' என்ற சித்ராவின் குரல் அறையினுள் அமர்ந்து இருந்த முல்லையின் காதில் விழ,'பெரிய கோடிஸ்வரி இல்ல... அதான் நம்ம வீட்டுல எல்லாம் காபி குடிக்க மாட்டாங்க போல' என்று மாறனிடம் புலம்பினாள் முல்லை.

'பார்வதி. பாப்பா இந்த நேரத்துல ஜூஸ் தான் குடிக்கும். இரு நான் போய் பழம் வாங்கிட்டு வரேன்' என்று முருகன் இருக்கையில் இருந்து எழ முயற்சித்ததும்,

'அங்கிள்... அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்ல. நம்ம கிளம்பலாமா' என்று கேட்டாள் சித்ரா.

அவள் தன்னை அழைத்ததும் சற்றும் மறுத்து சொல்லாமல்,'இதோ இரு மா சட்ட மாத்திட்டு வரேன்' என்று தன் அறைக்குள் ஓடினார் முருகன்.

தன் கணவனின் உடல் நிலை சரியில்லை என்று பார்வதி சித்ராவிடம் சொல்ல எண்ணியவளுக்கு முருகனை மீறி சொல்ல தைரியம் இல்லாமல் போனது.

'அண்ணா... அப்பா எங்க கிளம்புறாரு' என்று முல்லை சித்ரா பேசினதை காதில் வாங்கியப்படி மாறனிடம் கேட்க.
'தெரியலையே... வா கேப்போம்' என்றான் மாறன்.

'குட்டி பையா உன் பேர் என்ன?' என்று ஈஷா கந்தனிடம் பேச்சு கொடுக்க..சிறுவனும் சகஜமாக ஈஷாவிடம் பேசிக்கொண்டு இருந்தவன் அவ்வப்போது திரும்பி திரும்பி சித்ராவை முறைத்து பார்த்து இருந்தான்.

யாரை பற்றியும் கண்டுகொள்ளாத சித்ரா அவள் கைபேசியில் எதையோ கிறுக்கிக்கொண்டு இருக்க..
'அப்பா... எங்க கிளம்புறீங்க' என்று முல்லை முருகனிடம் கேட்கும் கேள்வியை காதில் வாங்கிக்கொண்டே தான் அவள் வேலை மீது கவனத்தை செலுத்தி இருந்தாள் சித்ரா.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top