• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
172
தீமையே 🔱வெ (கொ)ல்லும்.
படலம் – 25.2


அவள் வேகமாக உள்ளே சென்றாள். நேராக தலைமை ஆசிரியரின் அறைக்கே சென்று நின்றாள்.

“மேடம், சார் இன்னைக்கு காலேஜ் வரல. அவர் வீட்டுல ஒரு டெத்,” என்று அங்கிருந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

“முல்லை எங்க?” என்ற ஈஷாவின் குரல் கட்டுப்படுத்தப்பட்ட கோபத்துடன் ஒலித்தது.
“முல்லை மதியம் சாப்பிட வீட்டுக்கு போனாளே,” என்று இன்னொரு ஆசிரியர் அலட்சியமாக பதில் சொல்ல,
“ஐயோ மேடம்.” என்று மாறன் பயந்து நின்றான்.

அப்போது கந்தன்,“அண்ணா. அக்கா கண்டிப்பா அந்த பேப்பர் ரவுடியை பார்க்க தான் போயிருப்பா. நீ வேற லூசு மாதிரி சிஆர் ஊர்ல இல்லன்னு சொல்லிட்ட. அதான் நமக்கு எல்லாம் அல்வா கொடுத்துட்டு, அந்த நடிப்பு அரக்கனை பார்க்க போயிருப்பாங்க ”என்ற
கந்தனின் கணிப்பு சூழ்நிலையை இன்னும் பதற்றமாக மாற்றியது.

“இனி இங்க நின்னு பேச நேரம் இல்ல. வாங்க. உடனே முல்லையை போய் அழைச்சிட்டு வரலாம்,” என்று ஈஷா முடிவு செய்தாள்.

அவர்கள் நேராக கதிர் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றார்கள்.

இவர்கள் சென்றபோது சிகிச்சை அறையில் கதிர் மட்டும் தான் இருந்தான்.

அமைதியாக, எந்தக் கவலையும் இல்லாதவன் போல இருந்தவனை பார்த்து,
“முல்லை எங்கே?” என்று ஈஷா கேட்க,
“எந்த முல்லை?” என்று அவன் சலிப்புடன் கேட்டான்.

“உனக்கு எத்தனை முல்லை தெரியும்னு எங்களுக்கு தெரியாது. ஆனா நாங்க கேக்குறது எங்க வீட்டு பொண்ணு முல்லை முருகேசனை" என்று கந்தன் கடுப்புடன் சொன்னான்.

வயதில் சின்னவனாக இருந்தாலும், அவன் குரலில் அதீத கோபம் வெளிப்பட்டது.

“ஏய். என்ன கிண்டலா?” என்று கதிர் கோபமாக எழ,
“என் பாப்பா எங்க? கண்டிப்பா அவ உங்களை பார்க்கத்தான் வந்திருப்பா,” என்று மாறன் கேட்டான்.

ஈஷா தன் கோபத்தை அடக்கிக்கொண்டு பதட்டமாக நின்றாள்.

“ஆமா. வந்தா,” என்று கதிர் சொல்ல,
மூவரும் அவனை உறுத்துப் பார்த்தனர்.

"அப்போ முல்லை எங்க?" என்று மாறன் கேட்க...
“வந்தா. பார்த்தா. போயிட்டா,” என்று அவன் மேலும் அலட்சியமாக சொன்னான் கதிர்.

அந்த பதில் ஈஷாவின் மனதை இன்னும் கலங்க வைத்தது. உடனே அவள் விசிஆர் பங்களா வாட்ச்மேனுக்கு போன் செய்தவள்,
“முல்லை வந்தாச்சா?”என்று வாட்ச் மேன் செல்வத்திடம் கேட்டாள்.

“இல்ல மா.” என்ற பதிலில் அழைப்பை துண்டித்தவள்,
“முல்லை எப்போ போனா?” என்று

கதிரை நோக்கி கேட்டாள்.

“மதியம் வந்தா. பார்த்தா. போயிட்டா,” என்று மீண்டும் அதே வார்த்தைகளை சிரிப்புடன் கூறியவன், சிகிச்சை அறை கட்டிலில் படுத்து, தலைக்கு மேல் கை தூக்கி,
“அல்லி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ.” என்று பாட ஆரம்பித்தான்.

அந்த நேரத்தில் கந்தன் கடுப்பானவன்
“என்ன..அல்லி ராணி உனக்கு கப்பம் கட்டணும்னா!?... ஏன் நீ என்ன துறைமுகமா நடத்திக்கிட்டு இருக்க! நாங்களே எங்க அக்காவை காணோம்னு வந்தா நீ பாட்டுப் பாடுறியா?”என்று கந்தன் கோவத்தோடு கேட்க,
“ஏய். உன் அக்காவை காணோம்னா நீ போய் தேடு டா, பொட்டு பட்டாசு!” என்று கதிர் அவனை கிண்டல் செய்தான்.

“வாங்க. நம்ம போகலாம்,” என்று ஈஷா சொன்னாலும், அவளது உள்ளத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்ற அச்சம் பெரிதாக வளர்ந்தது.

அறையின் வாசல் வரை சென்றவள் திடீரென நின்றாள். திரும்பி கதிரை பார்த்தவள்.
“நீங்க ரொம்ப பெரிய தப்பு பண்றீங்க.”என்றாள்

“நானெல்லாம்...காளை மாட்டுக்கே புல்லு கட்டு காட்டுறவன்,போயும் போயும் ஒரு பசு மாட்டுக்கா பயபுட போறேன்" என்றவன் மறைமுகமாக சித்ராங்கியை ஒரு பெண்ணுக்கு நான் பயப்புடனுமா என்ற ரீதியில் கிண்டல் செய்கிறான் என்பதை ஈஷா புரிந்துகொண்டாள்..

ஆனால் அவன் பேச்சில் கடுப்பான கந்தனோ "ஏய்... நீ காளை மாட்டுக்கு உன்கிட்ட இருக்குற புல்லு கட்ட காட்டினாலும் சரி... இல்ல உன் கிட்ட இருக்குற பு..." என்று கந்தன் தன் வார்த்தையை முடிக்கும் முன்னே...
"டேய் தம்பி..." என்று மாறன் பதறினான்.

"அட... அவரு புண்ணாக்கை காட்டினாலும் கூட நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லைனு சொல்ல வந்தேன்" என்று கந்தன் சொல்ல...
"கந்தா... வா நம்ம இங்க இருந்து போகலாம்" என்றாள் ஈஷா.

மேலும் ஒரு நொடியும் வீணாக்காமல், மாறன் மற்றும் கந்தனை அழைத்துக் கொண்டு வேகமாக இஷா வெளியேறி இருக்க,

அவர்கள் சென்றதும் கதிர் அவர்களை ஏளனமாக சிரித்தபடி பார்த்தவன்.
அடுத்த கணம், அவனும் அவசரமாக மருத்துவமனையை விட்டு கிளம்பி இருந்தான்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

முல்லை காணாமல் போன அந்த நொடியிலிருந்து ஈஷா ஓய்வின்றி ஓடியபடி இருந்தாள்.

தெருக்கள். பேருந்து நிலையம். கோவில் முன்றில். எங்கெல்லாம் நினைத்தாளோ அங்கெல்லாம் தேடியிருந்தாள்.

ஆனால். அவள் கைகளில் விழுந்தது ஏமாற்றம் மட்டும் தான். ஒரு நிமிடம் கூட மற்ற விடயங்களை சிந்திக்க முடியாத நிலை.

“பேசாம கதிர் வீட்டுக்குப் போலாம்.” என்று மனம் சொன்னதும் நேரே அவள் அங்கே சென்றாள்.

ஆனால் அவன் வீட்டு வாசலில் பெரிய வெள்ளை காகிதம் (ஒரு நோட்டீஸ்) ஒட்டப்பட்டு, கதவு பூட்டப்பட்டு, சாளரங்கள் மூடப்பட்டு,
வீடு வெறிச்சோடிக் கிடந்தது.

அந்த காட்சியே ஈஷாவுக்கு பயமாய் இருந்தது. “என்னங்க இது.?
பாப்பா எங்க தான் போயிருப்பா?” என்று மாறன் குரல் நடுங்கக் கேட்டான்.

ஈஷா ஏதோ சொல்ல நினைத்தாள். ஆனால் வார்த்தைகள் அச்சத்தில் கரைந்துவிட்டன.

அவள் உடனே தன் ஆள்களிடம் தகவல் கொடுத்தாள்.

கதிர் இருந்த மருத்துவமனையில் இருந்து முல்லை வெளியேறும் காட்சியை சிசிடிவி மூலம் எடுத்துக் கொண்டுவந்தார்கள்.

திரையில் தெளிவாக முல்லை தனியாக வெளியே நடந்து செல்வது தெரிந்தது.

ஆனால். அதற்குப் பிறகு? வெளி வீதியின் கேமரா வேலை செய்யவில்லை. அருகிலிருந்த கடைகளின் காட்சிகளும் கிடைக்கவில்லை.

ஒரு இடத்தில் தொடங்கி. இருட்டில் மறைந்துபோன நிழலாக முல்லை அங்கே மறைந்து போய் இருந்தாள்.

“கண்டிப்பா. இதெல்லாம் அந்த வீணா போனவன் வேலை தான்!” என்று கந்தன் பற்களை கடித்தான்.

அவன் குரலில் வெறுப்பும் சந்தேகமும்.கலந்திருந்தது. பொழுது இரவாகி, தேடுதல் பயனின்றி போனபோது ஈஷா இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.

இன்னொரு வழியே இல்லை என்று முடிவெடுத்து அவள் மொபைலை எடுத்தவள்,

சித்ராங்கிக்கு “முல்லையை காணோம். உடனே பேசணும்.” என்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்து இருந்தாள்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

அந்தச் செய்தி அனுப்பப்பட்ட அதே தருணத்தில் நகரத்தின் எல்லைப்பகுதியில் இருந்த ஒரு பிரமாண்ட ரிசார்ட் அது. வெளியில் அலங்கார விளக்குகள் மின்னினாலும் உள்ளே சூழல் இருண்டது.

அங்கே கதிரின் குடும்பமே கோபத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.

அனைவரின் பார்வையும் ஒரே மனிதனை நோக்கி இருக்க, “என்ன கதிர் சொல்ற?” என்று அவன் பெரியம்மா சாமுண்டி பற்களை கடித்தாள்.

“இதெல்லாம் ஒரு நாளும் நடக்காது!” என்றவளின் குரலில் கட்டளையும் குடும்பப் பெருமையும் இருந்தது.

அப்போது அவர்களுக்கிடையே அமைதியாகவும், அதேசமயம் திமிராகவும் அமர்ந்திருந்தாள் முல்லை.

“நடக்கணும். நடந்தே ஆகணும்.” என்று முல்லை தெளிவான குரலில் உரைத்தவள்,

“இல்லைனா. உங்க குடும்பத்தை நடு ரோட்டுல நிற்க வைக்க காத்திருக்கும் சித்ராங்கிக்கு எதிரா நான் சாட்சி சொல்ல மாட்டேன்.” என்றாள்.

அவள் பேச்சு முடிந்ததும், அந்த அறை முழுக்க ஒரு கனமான கோபம் நிறைந்து இருந்தது.

கதிரின் குடும்பத்தினர் அவளை வெறுப்புடன் பார்த்தனர்.

“ஏய். அந்த சித்ராங்கியை என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்.” என்று பரமேஸ்வரி கடிந்து கொள்ள,

“ஆனா அதுக்காக எல்லாம் நீ எங்க வீட்டுக்கு மருமகளா வர முடியாது. போயும் போயும் ஒரு டிரைவர் பொண்ணு நீ. எங்க வீட்டுக்கு மருமகளா ஆக ஆசைபடுறியா?”என்று கேட்டாள்.

அவமதிப்பு அவள் குரலில் வழிந்தது.
அவள் பேச்சைக் கேட்டு முல்லை சட்டென்று எழுந்தவள், அவளின் கண்களில் பயம் இல்லாமல் ஆணவம் இல்லாமல், ஒரு துளி அவமானம் கூட இல்லாமல் பெருமையாக அந்த குடும்பத்தின் நடுவே நின்றாள்.

“எங்க அப்பா டிரைவரா இருந்தாலும், அவர் உழைத்த காசுல தான் எங்களை படிக்க வச்சிருக்காரு. அவர் ஒன்னும் சொந்த அண்ணன் சொத்துல பாதி ஊரை வளைச்சி போடல.” என்ற முல்லையின் சொற்கள் அம்பாக பாய்ந்தன.

“ஏய்! யார பார்த்து என்ன பேசுற?” என்று சாமுண்டி சீறி எழுந்தாள்.


கோபத்தில் கையை ஓங்கி முல்லையை சாமுண்டி அடிக்க முனைய, அந்த நொடியில் ஒரு வலுவான கை அவள் மணிக்கட்டையைப் பிடித்து நிறுத்தியது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top