Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 168
- Thread Author
- #1
தீமையே
வெ (கொ)ல்லும்.
படலம் – 23.1
மருத்துவமனையின் வெள்ளைச் சுவர்கள் அச்சத்தையும் அமைதியையும் சேர்த்து சுமந்து நின்றன.
அதே மருத்துவமனையில் தான் கதிரின் பெரியப்பா அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த இடமே இப்போது இன்னொரு உயிர் போராட்டத்துக்குச் சாட்சியாகி இருந்தது.
முல்லை தன்னை மட்டுமே நம்ப வேண்டும் என்ற பிடிவாதத்தில், கதிர் விஷம் குடித்திருந்தான்.
ஈஷாவும் முல்லையின் கதறளை கேட்டு பயந்தவள் கதிரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது, அவசர சிகிச்சைப் பிரிவின் கதவுகள் அவனை விழுங்கியதுபோல் மூடிக் கொண்டன.
“டாக்டர். கதிருக்கு ஒன்றும் ஆகாதே.” என்று கதவின் முன் கை கூப்பி நின்ற முல்லையின் குரல் நடுங்கியது.
தன் சகோதரியின் நிலையை பார்த்து மாறனும் பதறி தான் போனான்.
"மேடம்... உடனே சிஆர்க்கு போன் பண்ணுங்க" என்று கந்தன் சொல்ல... "மேடம் கால் எடுக்கல" என்றாள் ஈஷா.
கதிருக்கு உள்ளே தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்க, வெளியே அனைவருக்கும் பதட்டம் குவிந்துகொண்டே இருந்தது.
இந்த மருத்துவமனை கதிரின் பெரியப்பா பெயரில் இயங்கிக்கொண்டு இருக்கும் காரணத்தால் கதிர் சிகிச்சை அறையில் இருக்கும் செய்தி அவன் குடும்பத்துக்கு தெரிந்து இருந்தது.
விஷயம் அறிந்து வெங்கட் ஓடி வந்தவன் பின்னால் மீனாவும், கதிரின் பெரியம்மாவும், அம்மாவும் விரைந்து வந்தார்கள்.
ஒவ்வொருவரின் முகத்திலும் பயமும் கோபமும் கலந்திருந்தது.
முல்லை ஒரு மூலையில் சுவரில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்.
அவள் கண்ணீர் துளிகள் தரையில் விழுந்து சிதறியபோதும், அவளது மனம் அந்த அறையின் உள்ளே இருந்த கதிரின் அருகேதான் சுற்றிக் கொண்டிருந்தது.
அப்போது கதிரின் பெரியம்மாவின் பார்வை முல்லையைத் துளைத்தது.
கதிர் பர்ஸில் பார்த்திருந்த அந்தப் போட்டோவும்...அதில் இருந்த பெண்ணும் இவள்தான். என்று புரிந்துக்கொண்டார்.
“இவளா அது?” என்று அவள் மெதுவாகக் கேட்டாலும், குரலில் எரிச்சல் வெளிப்பட்டது.
தன் அத்தை முல்லையை தான் முறைத்து பார்க்கிறாள் என்று அறிந்துக்கொண்ட மீனாவோ...“முல்ல... நீ ஏன் இங்க வந்த? உன்ன பத்தி தெரிஞ்சா இங்க இப்போ பிரச்சனை இன்னும் பெருசாகும்.”என்றாள்.
மீனாவை முல்லை தலை தூக்கிப் பார்க்க... முல்லையின் கண்ணீர் வழிந்த கண்களில் பயமில்லை. மாறாக அவளுள் இருந்தது காதலின் துடிப்பு மட்டுமே.
மீனா உடனே அவளிடம் வந்து கையைப் பிடித்தவள்...
“முல்லை, இப்போ இங்க நேரம் சரியில்லை. அவங்க எல்லாரும் கோபத்தில் இருக்காங்க,” என்று மெதுவாக இழுத்தவளுக்கு கதிர் விஷம் குடித்த செய்தி பொய்யா உண்மையா என்ற சந்தேகம் இருக்க தான் செய்தது.
மீனா முல்லையை தன்னோடு அழைத்து இருக்க,“இல்ல.நான் வர மாட்டேன் ” என்று முல்லை தன் கையை மீனாவின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டாள்.
“கதிரை விட்டு நான் எங்கயும் வரமாட்டேன்.”என்று
அவளின் குரல் சத்தமாகவும் உறுதியாகவும் வெளிப்பட்டது.
“கதிர் எனக்காக தான் விஷம் குடிச்சாரு. அவர் கண் திறந்தவுடனே நான் இங்க இல்லன்னா. அவர் மனசு உடைந்து போயிடும்.”
என்று அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளது இதயத்திலிருந்து நேராக வந்தது.
கதிரின் அம்மா கண்களை மூடி அழுதவளுக்கு முல்லையை பற்றிய விவரம் தெரியாமல் தான் இருந்தது.
“ஐயோ என் பையன். என் பையன் ஏன் இப்படி பண்ணனோ.” என்று அவள் நொந்த குரலில் சொல்ல, வெங்கட்டுக்கும் கதிரின் இந்த செயல் குழப்பமாக தான் இருந்தது.
கதிரின் பெரியம்மா முல்லை மீது இருந்து தன் பார்வையை மாற்றாமல்
“என்ன...உனக்காக கதிர் விஷம் குடிச்சானா" என்ற கேள்வியில் முல்லையின் கண்களில் சிறு பயம் இருக்க தான் செய்தது.
இருப்பின் தனக்கு தானே தைரியம் சொல்லிகொண்டவள்...மெதுவாக அவளிடம் திரும்பினாள்.
“ஆமா... எனக்காக தான் கதிர் விஷம் குடிச்சாரு. நான் அவருகிட்ட பேசலைன்னு தான் எனக்காக அவரு சாகுற அளவுக்கு போயிட்டாரு" என்றவளின் குரல் உடைந்தது.
"இவ என்ன பேசுறா... யார் இந்த பொண்ணு" என்று கதிரின் அம்மா கேள்வி எழுப்பும் தருணம் மருத்துவர் சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்தார்.

போலீஸ் குவாட்டர்ஸில் இருந்த கம்பீரமான சுவர்கள் கூட அவளது கோபத்தின் வெப்பத்தை தாங்க முடியாதபடி தோன்றின.
அந்த தருணத்தில், விக்ராந்த் தங்கி இருந்த வீட்டின் கதவை தள்ளிக்கொண்டு வெளியில் வந்தாள் சித்ராங்கி.
அவள் நடையின் வேகம்... அவள் மனக்குமுறலின் அளவைப் போல அதிகரித்துக் கொண்டே இருந்தது.
வாசலில் நின்று இருந்த தன் காரின் கதவை சற்றே சத்தமாக அடைத்தவள், ஸ்டியரிங்கை பிடித்தவுடன் அவள் உள்ளம் அவளையே கேள்வி கேட்டது.
“இது விக்ராந்த் மீது உள்ள கோபமா.? இல்லையென்றால் வேறொரு உணர்வா.?”
அவனின் வார்த்தைகள் காதுக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தன.
அவன் கண்களில் இருந்த அந்த கேள்வி அவளை இன்னும் அதிகமாகக் கலங்க வைத்தது.
அவன் மேல் அவளுக்கு கோபம் இருந்தது. ஆனால் அந்த கோபத்தின் அடியில் ஏதோ புரியாத பிணைப்பு இருந்தது.
“You should not be fooled by all this!” என்று சற்று சிரமமாக மூச்சை இழுத்தவள், காரை வேகமாக இயக்கினாள்.
விசிஆர்பங்களாவை நோக்கி அவள் காரை விரட்டிக் கொண்டிருக்க...அந்த நேரத்தில், அவளது கை கடிகாரத்தின் திரையில் தொடர்ந்து மின்னியது ஈஷாவின் பெயர்.
ஒரு அழைப்பு.
இரண்டு அழைப்பு.
மூன்று அழைப்பு.என்று மூன்று முறை ஈஷா சித்ராங்கியை அழைத்து இருந்தாள்.
“என்ன இது? இத்தனை தடவை கூப்பிட்டு இருக்காங்க?” என்று புருவத்தைச் சுருக்கிக்கொண்டாள் சித்ராங்கி.
காரை இன்னும் வேகமாக செலுத்தி பங்களாவை அவள் சென்றடைய,
வாசலில் பதட்டமாக நின்றிருந்த வாட்ச்மேன் செல்வம் அவளை பார்த்ததும் அவசரமாக ஓடிவந்தான்.
“மேடம் . கதிர்.. கதிர் சார்,விஷம் குடிச்சுட்டாரு!” என்ற அந்த ஒரு வாக்கியம் சித்ராங்கியின் முகத்தை இறுக்கமாக மாற்றியது.
“என்ன?” என்று அவள் குரல் திடீரென உயர...செல்வம் திணறித் திணறி
“ஈஷா மேடம் தான் , வீட்டுல இருக்குற எல்லோரையும் அழைச்சிக்கிடு கதிரை ஹாஸ்பிடலுக்கு எடுத்துட்டு போயிருக்காங்க.”என்றான் செல்வம்.
அந்த நொடியில் சித்ராங்கியின் கோபம் இரட்டிப்பானது.
“ஈஷா!” என்று அவள் குரல் கடிந்தது போல தன் மொபைலை எடுத்தாள்.
இவள் அழைத்த அழைப்பு இணைந்தவுடன், மறுபுறம் பதட்டமாகக் குலுங்கிய குரல்
“மேடம் .”என்றாள்.
“What did you do??” என்று சித்ராங்கியின் குரல் கடினமாக இருந்தது.
ஈஷா நடந்த அனைத்தையும் சொன்னவள்.. கதிரின் மனநிலை, முல்லையின் முடிவு, அவனை காப்பாற்ற இவள் ஓடிய அவசரம் என்று அனைத்தையும்
அவள் சொல்லிக் கொண்டிருக்க, சித்ராங்கியின் விரல்கள் குலுங்கின.
ஆனால் அது பயத்தால் இல்லை கட்டுப்படுத்த முடியாத கோபத்தால்.
"Where are you now?,” என்று சுருக்கமாகக் கேட்டாள்.
ஈஷா விவரத்தை சொன்னதும்...ஒரு நொடி கூட வீணாக்காமல் மீண்டும் காரில் ஏறிய சித்ராங்கி கதிர் இருக்கும்
மருத்துவமனை நோக்கி அவள் காரை பாய்ச்சிக் கொண்டிருந்தாள்.

போலீஸ் குவாட்டர்ஸின் பழைய கட்டிடத்தில் மேசையின் மேல் சிதறிக் கிடந்த கோப்புகளின் நடுவே அமர்ந்திருந்தான் விக்ராந்த்.
அவனுக்கு எதிரே உதவி அதிகாரி மணி, சில புகைப்படங்களையும், பாஸ்ட் மார்டம் ரிப்போர்ட்களையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.
அந்த அமைதியை உடைத்து விக்ராந்தின் மொபைல் ஒலித்தது.
திரையில் “மேல் அதிகாரி” என்ற பெயர் ஆங்கிலத்தில் மின்னியது.
"எஸ் சார்.” என்று அவன் அந்த அழைப்பை ஏற்றான்.
“மிஸ்டர்.விக்ராந்த், இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கலா–சுனில் கேஸ் முடிவுக்கு வரணும். மேலிருந்து ரொம்பப் பிரஷர் இருக்கு. குறிப்பா ஆதிசேஷன் தரப்புல இருந்து அழுத்தம் அதிகமா இருக்கு. நம்ம டிபார்ட்மெண்ட் மீதுள்ள நம்பிக்கையை நீங்க தான் காப்பாத்தணும்.”
என்று அவர் சொல்ல...விக்ராந்த் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“டோண்ட் வரி சார். ஒரு வாரம் அதிகம் தான். சீக்கிரமா உண்மை வெளியே வரும். நான் பார்த்துக்கறேன்.”என்றான் விக்ராந்த் உறுதியோடு.
“நம்புறேன் விக்ராந்த். வேகமா முடிச்சிடுங்க .”என்று அவர் சொல்ல..
“ஷ்யூர் சார்.”என்ற பதிலில்
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த மணி மெதுவாக “சார். இது என்ன கேஸ் சார்?”என்று கேட்டார்.
விக்ராந்த் கோப்பை மூடியப்படி அவனை நோக்கிப் பார்த்தவன். “பிரபல தயாரிப்பாளர் பையன் சுனில். அதே குடும்பத்தை சேர்ந்த கலா என்ற பெண்ணின் கொலை கேஸ்.”என்றான்.
மணி ஆச்சரியத்துடன் கண்களை பெரிதாக்கினான். “ஏன் சார்... அவங்களுக்கு என்ன சார் நடந்துச்சு?”என்று கேட்டான்.
“ரெண்டு பேரும் அடுத்தடுத்து நாள்ல. இந்த ஊர் பக்கம் இருக்குற காட்டுல. மர்மமான முறையில இறந்திருக்காங்க.”என்றான் விக்ராந்த்.
“ஓ அந்த மரணமா, அது எனக்கு தெரியும். ஆனா இதுல உங்களுக்கு என்ன சார் சந்தேகம்?” என்று மணி குழப்பமாகக் கேட்டான்.
விக்ராந்தின் பார்வை ஜன்னலுக்கு வெளியே செல்லும் இருள் பக்கம் திரும்பியது. “அதான் தெரியணும் மணி.”
என்றான்.
மணி உடனே, “அந்த பொம்பளைய யாரோ நகைக்கு ஆசைப்பட்டு சாகடிச்சு எரிச்சு போட்டு இருக்காங்க சார்.அப்புறம் அந்த சுனிலை கூட காட்டு மிருகம் அடிச்சு இருக்குன்னு சொன்னாங்க” என்றார் மணி.
அவர் பேச்சை கேட்டு விக்ராந்த் சிரித்தான். அந்த சிரிப்பில் நம்பிக்கை இல்லை, சந்தேகம் மட்டுமே இருந்தது.
“அது கட்டுக்கதை. உண்மை கண்டுபிடிக்க தான் நான் இங்கே வந்திருக்கேன். ஒரு கொலைக்குப் பிறகு இன்னொரு மரணம். அது கூட அதே மாதிரி ஒரு காட்டுல. அதுவும் அடுத்த நாள். இது சாதாரண சம்பவமா தோணுதா உங்களுக்கு?” என்று கேட்டான்.
அவன் கேள்விக்கு மணியிடம் இருந்து பதில் இல்லை.
“இன்னைக்கு நைட். அந்த கொலைகள் நடந்த இடத்துக்கு நம்ம போகணும். எல்லா ரெக்கார்ட்ஸும், டார்ச், கேமரா எல்லாம் ரெடி பண்ணி வையுங்க.and நீங்களும் தயாரா இருங்க.”என்றான்.
"ஓகே சார்" என்ற மணி அங்கிருந்து நகர்ந்ததும், விக்ராந்த் அவன் மேசையின் மேல் இருந்த புகைப்படத்தை மீண்டும் எடுத்துப் பார்த்தான்.
காட்டின் அடர்ந்த மரங்களுக்குள் கிடந்த சுனிலின் உடல். அதற்கு அருகே இரத்தக் கறைகள் என்று ஒரு படமும்.
எரிந்த கலாவின் உடல் இருக்கும் இன்னோரு புகைப்படமும் இருந்தது.
அந்த படங்களையும் பார்த்ததும்,அவனது உள்ளத்தில் ஒரு கேள்வி மட்டும் ஒலித்தது....இது உண்மையிலேயே ஒரு காட்டு மிருகத்தின் வேலை தானா என்று யோசித்தவன் தன் கைகடிகாரத்தை பார்த்தான்.
நேரம் மாலை 6 மணியை காட்டியது. விக்ராந்த் அவன் கைபேசியில் இருந்து கதிரை அழைக்க... அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக..
"ஷீட்" என்று கோவமாக தன் போனை மேசையின் மேல் தூக்கி எரிய.
விக்ராந்தின் வருகை யாருக்கு நல்லது? யாருக்கு கெட்டது?