• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
149
14.2

இதுவரை யாரும் சித்ராங்கியிடம் இப்படிப் பேசியதே இல்லை.
அதைவிட, முல்லையை அவ்வளவு பேச விட்டும், சித்ராங்கி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

முல்லை பேசி முடித்ததும்,
“முடிச்சிட்டியா?” என்று கேட்ட சித்ராங்கி,
“மறுபடியும் சொல்றேன். யாரையும் அடியாள் வச்சு அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல,and more ஓவர் நான் அடிச்சா இல்ல!! அடிக்கணும்னு நினைக்கிற ஆளுக்குக்கூட ஒரு தகுதி இருக்கணும்... வேணும்னா அந்த தகுதியை அவன வளர்த்துக்கிட்டு வந்து என் முன்னாடி நிக்க சொல்லு ” என்றாள் சித்ராங்கி.

சித்ராங்கியின் வார்த்தை முல்லையை மேலும் மேலும் கோபமடைய வைத்தது.

ஆனால் சித்ராங்கி சோபாவிலிருந்து எழுந்து முல்லையை கடந்து செல்லும்போது,
வலியால் கண்கள் கலங்கி, தலையைத் தடவிக்கொண்டிருந்த கந்தனைப் பார்த்தாள்.

அவனை கூர்ந்து பார்த்தவள்... சட்டென்று தன் பார்வையை முல்லையின் பக்கம் திருப்பி,
“இன்னொரு முறை உன் கை இவன் மேல பட்டுச்சுனா. உனக்கு சாப்பிட கை இருக்காது,” என்று முல்லையை கடுமையாக எச்சரித்தாள்.

தனக்காக பேசும் சித்ராங்கியை கந்தன் ஆச்சிரியமாக பார்த்து இருக்க,
“Stay by my side” என்று கந்தனை அழைத்தாள்.

“என் தம்பியை எங்க அழைச்சிட்டு போறீங்க?” என்று முல்லை கேட்க,

“யாரோ ஒருத்தனுக்காக இவனை நீ அடிக்கும் போது இவன் உன் தம்பின்னு உனக்கு தெரியலையா?” என்று சொல்லியபடி,
கந்தனின் கையைப் பிடித்து வேகமாக வெளியே அழைத்துச் சென்றாள்
சித்ராங்கி.

சில நொடிகளில் தன் காரை எடுத்துக் கொண்டு VCR பங்களாவை விட்டு மின்னல் வேகத்தில் வெளியேறியும் இருந்தாள்.

“ஐயோ...எங்கங்க....என் தம்பியை எங்க கூட்டிட்டுப் போறாங்க?” என்று மாறன் பதற,

“எனக்கும் தெரியல மாறா... இதுவரை மேடம் தனியா டிரைவ் பண்ணி போனதே இல்ல,” என்றாள் ஈஷா.

“பொய் சொல்லாதீங்க.உங்க மேடம் அன்னைக்கு ஒரு பொம்பளைய கொலை பண்ண..அவங்க தானே காரை ஓட்டிகிட்டு போனாங்க" என்று முல்லை கேட்க,
“என்னம்மா. சும்மா சும்மா கொலைன்னு சொல்ற?” என்று மாறன் கேட்டான்.

“இதோ நிக்கிறாங்களே உங்க சின்ன மேடம். அவங்கிட்டயே கேளு.
உங்க பெரிய மேடம் கொலை பண்ணதை நான் என் கண்ணால பார்த்தேன்.
சீக்கிரமே அவங்க வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்துல ஏத்துறேன்,” என்று சொன்னபடி,
கோபமாக முல்லை தன் அறைக்குள் சென்று கதவை ஓங்கி சாத்தினாள்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே தருணம்,
கதிர் தன் அறையின் கட்டிலில் படுத்துக்கொண்டு, ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்தான்.

“சாயங்காலம் முல்லையைப் பார்க்க வர்றதா சொல்லி இருந்தோமே. நமக்காக அவள் அங்க காத்துட்டு இருப்பாளா?”
என்ற எண்ணம் அவன் மனதில் சுழன்றுக்கொண்டிருக்க, கதவைத் தட்டாமலே அறைக்குள் நுழைந்தாள் ரம்யா.

அனுமதியின்றி வந்தவளை பார்த்ததும்,
“பீச். ஏய்! கதவைத் தட்டிட்டு வர மாட்டியா?”
என்று எரிச்சலுடன் கேட்டான் கதிர்.

அதைக் கேட்டு சிரித்தவளாய்,
“என்ன கதிர் பேபி இது. உன் ரூமுக்குள்ள வர நான் யார்கிட்ட அனுமதி கேக்கணும்?”
என்று சொல்லிக்கொண்டே, அவன் அருகில் அமர்ந்தாள் ரம்யா.

அவன் கையில் கட்டப்பட்டிருந்த பாண்டேஜை சோகமாக பார்த்தாள்.

ஆனால், காலையில் மீனாவின் பேச்சைக் கேட்டதிலிருந்து, ரம்யாவை பார்க்கவே கதிருக்கு மனசு ஒத்துழைக்கவில்லை.
ஒரு தீராத கடுப்பு அவனுள் குடிகொண்டிருந்தது.

“என்ன பேபி. கை வலி இப்போ எப்படி இருக்கு?”
என்று ரம்யா கொஞ்சிக் கொஞ்சிப் பேச,
இதற்கு முன்பும் அவள் இப்படியே அவனைத் தொட்டு பேசியிருந்தாலும், இப்பொழுது மட்டும் ஏனோ அவளின் தொடுதலே கதிருக்கு வெறுப்பாக இருந்தது.

அவள் கையிலிருந்து தன் கையை மெதுவாக விலக்கிக்கொண்டவன்,
“வலி இருக்கு. மாத்திரை போட்டுக்கிட்டு இருக்கேன்,”
என்று சுருக்கமாகச் சொன்னான்.

“சரி. ஆமா, காலையில நீ வேகமா எங்க கிளம்பிப் போன?”
என்று ரம்யா கேட்டாள்.
"என்ன புதுசா கேள்வியெல்லாம் கேக்குற"
என்று சற்றே கடுமையாகச் கேட்டான் கதிர்.

“ஐயோ, இது கேள்வி இல்ல பேபி. எப்பவும் நீ எங்க கூடத்தானே வெளியே வருவ. இப்போ ஏன் தனியா போனேன்னு கேட்டேன் அவ்வளவுதான்,”
என்று மென்மையாக்க முயன்றாள் ரம்யா.

ஆனால், கதிர் முல்லையைத்தான் பார்க்கச் சென்றான் என்ற உண்மை, அவளின் தோழிகள் மூலம் ஏற்கனவே ரம்யாவுக்குத் தெரிந்திருந்தது.

“ஒரு முக்கியமான விஷயமா வெளியே போயிருந்தேன்,”
என்று அவளைப் பார்க்காமலே பதிலளித்தான் கதிர்.

“நீ எங்க போனன்னு எனக்கு நல்லாவே தெரியும்,”
என்றாள் ரம்யா.
“என்ன தெரியும் உனக்கு?”
என்று கதிர் கேட்டான்.

“அந்த ராங்கி வீட்டுல இருக்கிற டிரைவர் பொண்ணப் பார்க்கத்தானே நீ காலேஜ்க்கு போன?”
என்று நேரடியாக கேட்டாள் ரம்யா.
அவள் சொன்னதும், கதிரின் முகம் மாறியது.

“என்ன. என்னை பாலோ பண்ண ஆளு எல்லாம் ஏற்பாடு பண்ணி இருக்கியா?”
என்று கடுப்புடன் கேட்டான்.

“அய்யய்யோ இல்ல பேபி. நீ எதுக்காக அந்தப் பொண்ணைப் போயி பார்க்குறன்னு கூட எனக்குத் தெரியும்,”
என்றாள் ரம்யா.

“நீ என்ன என்னமோ பேசுற. நான் எதுக்காக அவளைப் போய் பார்க்கணும்?”
என்று ஒன்றுமே தெரியாதவன் போல நடித்தான் கதிர்.

“அவள வைச்சு நீ அந்த ராங்கியை எப்படியாவது பழி வாங்க நினைச்சு இருக்கலாம். உன் அறிவு என்னன்னு எனக்குத் தெரியாதா பேபி?”
என்று சிரித்தாள் ரம்யா.

‘நல்லவேளை. இந்த லூசுக்கு நம்ம முல்லை மேல வச்சு இருக்குற அன்பு தெரியல. தெரிஞ்சா, பெரியம்மா பெரியப்பா கிட்ட போட்டு கொடுத்து, முல்லைக்கு தான் பெரிய பிரச்சனை ஆகிடும்,’
என்று மனதுக்குள் நினைத்த கதிர்,

“ஆமா. பரவாயில்லையே. கரெக்ட்டா தான் கண்டுபிடிச்சிருக்க,”
என்று ரம்யாவை பாராட்டினான்.

“அதானே பார்த்தேன். என் பேபி யாருன்னு எனக்குத் தெரியாதா?”
என்று பெருமையுடன் சொன்னவள்,
“சரி, ஏதாவது ஐடியா கிடைச்சுதா?”
என்று கேட்க,
“என்ன ஐடியா?”
என்று கண்களை விரித்தான் கதிர்.

“என் பக்கம் அந்த ராங்கியைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கல. அந்த டிரைவர் பொண்ணு கிட்ட விசாரிச்சியா?”
என்று ஆவலுடன் கேட்டாள் ரம்யா.

“இல்ல. அவளுக்கும் இப்போதைக்கு எதுவும் தெரியல. சாயங்காலம் எதோ ஒரு கொலையைப் பற்றி சொல்லுறேன்னு முல்லை சொன்னா. ஆனா என்னால தான் போக முடியல,”
என்று கதிர் சொன்னதும்,
“என்ன. கொலையா?”
என்று அதிர்ந்தாள் ரம்யா.

“ஆமா. கொலைதான். அந்த ராங்கி ஏதோ ஒரு கொலை பண்ணதா முல்லை சொன்னா. நான் தெளிவா கேக்குறதுக்குள்ளே காலேஜ் ப்ரொஃபஸர் வந்து என்னை வெளியே அனுப்பிட்டாங்க,”
என்று சொன்னான்.

“அய்யய்யோ. அவ பெரிய தில்லாலங்கடியா இருப்பா போலவே,”
என்று பதறினாள் ரம்யா.

“முழு விவரம் தெரியல. ஆனா சீக்கிரமா முல்லையை வைச்சு அந்த ராங்கியை நான் பழி தீர்த்தே தீருவேன்,”
என்று உறுதியாக சொன்னான் கதிர்.

அவனை காதலோடு கட்டிக்கொண்ட ரம்யா, தன் பையில் இருந்த மார்க்கரை எடுத்து,
“Get well soon, my darling”
என்று அவன் கையில் எழுதினாள்.

அதைப் பார்த்த கதிர், தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அமர்ந்திருந்தான்.

“அப்புறம் பேபி.நாளைக்கு அப்பா ஊர்ல இருந்து நேரா ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்துடுவாரு. சோ நீ, நான், உதயா மூணு பேரும் அங்க மீட் பண்ணிட்டு, அந்த பனைமர தோப்பை என் பேர்ல வாங்குனதுக்கப்புறம், நம்ம அப்பாவிடமே அந்த ராங்கி யாருன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்.”என்றாள்

“எங்கெங்கயோ விசாரிச்சாச்சு. யாருக்கும் எதுவும் தெரியல. உன் அப்பாவுக்கு மட்டும் எப்படி தெரியும்?”
என்று கதிர் கேட்டான்.

“என்ன பேபி இது. நம்ம UD பங்களாவை அந்த ராங்கிக்கு வித்ததே என் அப்பாதான். அப்புறம் அவங்களைப் பற்றி தெரியாமலா இருப்பார்?”
என்று நம்பிக்கையுடன் சொன்னாள் ரம்யா.

“சரி, காலையில பத்து மணிக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ்ல மீட் பண்ணலாம். நீ ரெடியா இரு. நாங்களே வந்து உன்னை அழைச்சிட்டு போறோம்,”
என்று சொல்லிவிட்டு,

“அந்த இடம் வாங்கினதுக்கப்புறம் தான் நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய நல்ல விஷயம் நடக்கப்போகுது,”
என்று இலை மறை காயாக தன் காதலை வெளிப்படுத்தி, சிரித்துக்கொண்டே அறையைவிட்டு வெளியேறினாள்.

அவளை பார்த்துக்கொண்டே,
“எல்லாம் என் தலையெழுத்து.”
என்று தனக்குத்தானே சபித்துக்கொண்டான் கதிர்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

அன்றைய தினம்.
இரவு மணி 8 கடந்தும்
சித்ராங்கியுடன் வெளியே சென்ற கந்தன்
இன்னும் வீடு திரும்பவில்லை.

வாசலில் நின்றபடி,
கண்ணில் கவலை சுமந்த முல்லை,
“அண்ணே. இன்னும் கந்தன் வரலையே. எங்க போயிருப்பான்?”
என்று மாறனிடம் கேட்க
“எனக்கும் ஒன்னும் புரியல மா.”
என்று சொல்லியபடியே,
அவனும் பதற்றத்தில் வாசலை வெறித்துப் பார்த்தான்.

அதே தருணம்
மெல்லிய சிரிப்புடன்,
எதுவுமே நடக்காத மாதிரி
கந்தன் வீட்டுக்குள் நுழைந்தான்.

அவனை பார்த்ததும்,
முல்லையின் குரலில் கோபம் கொதித்தது
“டேய்! எங்கடா போன?
யார் கூப்பிட்டாலும் இப்படியே வெளியே போயிடுவியா?”
என்று கேட்க,அவளை பார்த்தும் பார்க்காதபடி,
நேரே தன் அறைக்குள் நுழைந்தான்.

ஆடைகளை மாற்றிக் கொண்டு,
மேசையில் புத்தகங்களைப் பரப்பி,
வீட்டுப் பாடங்களில் மூழ்கினான்.
அவன் கண்களில்.புதிய ஒரு புத்துணர்வு.
சொல்ல முடியாத ஒரு சந்தோஷம் தெரிய..
அதை கவனித்த மாறன்,
“நீ எங்க போயிட்டு வந்த?”
என்று மெதுவாக கேட்டான்.

கந்தன்,
தலையை கூட உயர்த்தாமல்
“அதெல்லாம் சொல்றதுக்கு இல்ல.
எனக்கு படிக்க நிறைய இருக்கு.
நான் படிக்கணும்.படிப்பு தான் வாழ்க்கைக்கு முக்கியம்.” என்றான்.

அதே நேரம்.
சித்ராங்கி வீட்டுக்குள் நுழைய
“மேடம். நாளைக்கு அப்பாயின்மென்ட் எல்லாம்
மெயில் பண்ணிட்டேன்.”
என்றாள் ஈஷா.

“நான் பாத்துட்டேன்.
சரி, நீ நேரத்தோடு சாப்பிட்டு படு.
நாளைக்கு காலையில பார்ப்போம்.”
என்று சித்ராங்கி சொல்ல
“இரவு உணவு தேவையா மேடம்?”
என்று கேட்க நினைத்த ஈஷா.
அதை கேட்காமல் தயங்கியபடி நின்றாள்.

இதே சமயம் “டேய். சாப்பிட்டு படிக்கலாமே?”
என்று கந்தனை பார்த்து மாறன் சொல்ல,
அதற்கு கந்தன்,
அசால்ட்டாக
“நான் பெரிய மேடம் கூட வெளியே சாப்பிட்டேன்.
நீங்க சாப்பிடுங்க.”என்றான்.

“என்னது.
மேடம் வெளியே சாப்பிட்டாங்களா?”
என்று புரியாமல் விழித்த ஈஷாவின் கண்களில் ஆச்சிரியம் மிளிர...

இதே தருணம் இன்று ஏன் கதிர் தன்னை பார்க்க வர வில்லை என்ற கவலையில் முல்லை வருத்ததோடு அப்படியே படுத்து உறங்கியும் போனாள்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

வரும் கதைகளில் படிக்க இருப்பது..

இடம் – ரெஜிஸ்டர் ஆபீஸ்.

பத்திரம் இருக்கும் மேசை மேல்.
கையெழுத்து போட தயாராக இருந்தான் கருப்பன்.

அவன் அருகே சிறுமி தேன்மொழி கையில் சில்லறை பையுடன் இருக்க...
சுற்றிலும் கருப்பனின் உறவுகள் நின்று இருந்தது.

அங்கே வந்தது பிடிக்காமல் கதிர் எல்லாம் என் தலையெழுத்தேன்னு நின்று இருக்க,

“வா கருப்பா. உன் தோப்பை என் மகள் பேர்ல மாத்தி கொடு.”என்றார்
XMLA சம்பத்.

கனத்த இதயத்தோடு கருப்பன் பேனாவில் காகிதத்தை தொடும் அந்த நொடி

ஷ்ஷ்ஷக்! என
தூரத்திலிருந்து பறந்து வந்த கத்தி
பத்திரத்தின் நடுவில் பாய்ந்து நிற்க்க,

அங்கிருந்த அனைவரும் திரும்பி பார்த்த தருணம், அவர்கள் முன்னே வந்து நின்றது யாரென்று வரும் படலத்தில் வாசிப்போம்.

- தொடரும் 🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top