• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
149
தீமையே 🔱 வெ[கொ]ல்லும்.
✨படலம் - 14

இடம் : கதிரின் வீடு
தன் அறையின் மூலையில், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி அமர்ந்திருந்தான் கதிர்.

“டேய். வீணா போன மாமா. இந்தாடா ஜூஸ்,”
என்று சொல்லிக்கொண்டே, கையில் இருந்த கிளாஸை அவன் பக்கம் நீட்டினாள் மீனா.

“ஏய் மீனு. கதவை சாத்திட்டு இங்க வந்து உக்காரு,”
என்றான் கதிர், சற்றே குரலை தாழ்த்தி.

“என்ன. கதவை சாத்தணுமா?!”
என்று கண்களை பெரிதாக்கினாள் மீனா.

“போடா வெண்ண. ஏன் உன் அம்மா வந்து, நான் உன்னை வளைச்சு போட்டேன்ன்னு சொல்லவா?”என கேட்டாள்.

“ஏய். ச்சி. வாயை மூடிட்டு கதவ சாத்து,”
என்று சலிப்புடன் சொன்னான் கதிர்.

‘என்னாச்சு இவனுக்கு?’
என்ற எண்ணத்தோடு,
கதவுக்கு தாழ் போட்டு, அவன் அருகில் வந்து அமர்ந்தாள் மீனா.

“சொல்லு டா. என்ன விஷயம்? சீக்கிரமா சொல்லு,”
என்று நேரடியாகக் கேட்டாள்.

“நீ பத்திரிகை பக்கம் இருக்கல்ல .அங்க இருந்து
எனக்கு ஒரு விஷயம் விசாரிச்சு சொல்லு"
என்றான் கதிர்.

“என்ன விசாரிக்கணும்?”என்று அவள் கேட்க
“இப்போ. நம்ம ஊரைச் சுற்றி, ஏதாவது கொலை நடந்துச்சா?”என்று கேட்டான்

“என்னடா. லூசு மாதிரி கேக்குற?”
என்று முகம் சுளித்த மீனா.
“இந்த நாட்டுல கொலைக்கா பஞ்சம்?”என்று கேட்க,
அவளின் தலையில் லேசாக ஒரு குட்டு வைத்தான் கதிர்.

“ஆ. வலிக்குதா டா கருவாயா,”
என்று தன் தலையைத் தடவிக்கொண்டே,
“இப்போ உனக்கு என்ன தெரியணும்?”
என்று சீரியஸாகக் கேட்டாள்.

மீனாவுக்கு பத்திரிகை துறையில் ஓரளவு பரிச்சயம் இருந்தது.
அதனால், இன்று காலை முல்லை தன்னிடம் சொன்ன விஷயத்தை,
அப்படியே அவளிடம் சொல்லி வைத்தான் கதிர்.

“என்னடா சொல்ற?”
என்று பீதியுடன் கேட்டாள் மீனா.
“ஆமா டி.
யாரோ ஒரு பொண்ணை சுட்டதோடு நிற்கல.
அவளை தூக்கி, செங்கல் சூளையில வீசி இருக்காங்க,”
என்றான் கதிர்.

குரல் கனத்துச
“யாருடா அவ?”என்று மீனா கேட்க,

“அவ பேரு. CR னு சொல்லறாங்க,”
என்ற கதிர், வெறுப்பும் எரிச்சலும் கலந்த முகத்தோடு,
“சரியான ராங்கி.
பாக்கத்தான் பொம்பள.
ஆனா யாருக்கும் அடங்காத வீரமும்,
திமிரும் மொத்தமா குத்தகை எடுத்த மாதிரி இருப்பா. எங்க இருந்தோ வந்து, என் மேலேயே கை வச்சிட்டா' என்றான் ஆதங்கத்துடன்.

“என்ன இது?”
என்று குழப்பமாய் கேட்ட மீனா.
“நீ அந்த பொண்ணை திட்டுறியா.
இல்ல பாராட்டுறியா?” என்றாள்

“ஏய்... நீ வேற எரிச்சலை கொட்டிக்காத,”
என்ற கதிர்.
“அதெல்லாம் விடு.
அப்போ அந்த மாதிரி ஒரு கொலை நடந்தது உண்மைதானா?”என்று கேட்டான்

“நான் நேத்து கேள்விப்பட்ட செய்தி நீ சொல்றதுக்கு ஒத்துதான் இருக்கு,”
என்று சொன்ன மீனா,
“ஆனா அந்த கொலைக்கு காரணம் என்னன்னு,
இன்னும் தீவிரமா விசாரிச்சுக்கிட்டுதான் இருக்காங்க.
இன்னைக்கு காலையில கூட,
நம்ம ஊர் பக்கத்துக் காட்டுல,
ஒரு சடலம் கிடைத்ததா பேசிக்கிட்டாங்க.”என்றாள்.

"என்ன இன்னோரு கொலையா...ஏய், அப்போ சீக்கிரமா அந்த முதல் கொலையை பற்றி முதல்ல விசாரிச்சு சொல்லு' என்று அவன் சொல்ல...'சரி.. ரெண்டு நாள் டைம் கொடு' என்றாள்.

“ரெண்டு நாள்னா அதிகம்,”
என்ற கதிர் உடனே.
“சீக்கிரமா.
அவளைப் பற்றிய முழு விவரத்தையும் சொல்லு.”என்றான்

“ஆமா.
நீ ஏன் டா இதெல்லாம் விசாரிக்கிற?”
என்று மீனா கேட்க,
“எல்லாத்துக்கும் காரணம் இருக்குடி,”
என்றான் கதிர்.

“அதான். என்ன காரணம்?”
என்று அவள் விடாமல் துருவ,
“ம்...என் முல்ல கிட்ட பேசுறதுக்கு,
இந்த ராங்கி எனக்கு தடையா இருக்கா,”
என்றான் கதிர்.

“நீ எதுக்காக முல்லை கிட்ட பேசப் போற?”
என்று மீனா கேட்க.
“அவ என்ன காதலிக்கிறா,”
என்றான் கதிர்.

“உன்ன அவ காதலிக்கிறானு,
எனக்கு அன்னைக்கே தெரியும்.”
“ஆனா நீ ?”
என்று மீனா சற்றே குரலை தாழ்த்தி,
“நீயும் அவளை காதலிக்கிறாயா?”
என்று கேட்டாள்..

அவன் சட்டென்று மௌனமாக இருக்க..
“இங்க பாரு கதிர்,”
என்று மென்மையாக ஆரம்பித்த மீனா,
“நான் ஒரு ஃப்ரெண்டா சொல்றேன்.
காதல் கத்திரிக்காய்னு,
அந்த பொண்ணு மனசுல ஆசைய வளர்த்து,
இந்த குடும்பத்துக்குள்ள அவளை இழுத்து,
அவ வாழ்க்கையே கெடுத்துறாத.
இந்த குடும்பத்துல இருக்கிறவங்க.
எல்லாம் கொலைகார பாவிங்க.”என்றாள்.

“போதும் மீனா,”
என்ற கதிர்.
“எனக்கும் எல்லாம் தெரியும்.
நீ அந்த CR பத்தி விசாரிச்சு சொல்லு.
அது போதும்.”என்றான்.

“சரி அது இருக்கட்டும்,”
என்று சற்றே நக்கலாகச் சொன்ன மீனா.
“உனக்கு ரம்யா கூட நிச்சயம் பண்ண,
உங்க அம்மாவும் பெரியம்மாவும்
முடிவெடுத்திருக்காங்களே உனக்கு அது தெரியுமா தெரியாதா?”என கேட்டாள்.

“வீணா உளராத,”
என்று கதிர் பதறியவன்,
“ரம்யா கூட எனக்கா?”என கேட்டான்.

“ஆமா,”
என்ற மீனா,
“உனக்கு மட்டும் இல்ல.
உன் அண்ணன் வெங்கட்டுக்கு கூட,
ரம்யாவுடைய பெரியம்மா பொண்ணை பார்த்திருக்காங்க.
எப்படியோ நல்லா இருங்க.
சரி.
நான் அந்த CR யாருன்னு விசாரிச்சு,
ரெண்டு நாளுக்குள்ள பதில் சொல்றேன்.”
என்றவள் கதிரின் அறையை விட்டு வெளியே சென்றாள்.

அந்த நொடி வரை,
முல்லையை வைத்து,
CR என்ற சித்ராங்கியை எப்படியாவது பழிவாங்க வேண்டும்
என்று எண்ணியிருந்த கதிரின் மனதில்,
“ரம்யாவிற்கு தன்னை நிச்சயம் செய்யப் போகிறார்கள்”
என்ற உண்மை,
ஒருவகையான பாரமாக வந்து இறங்கியது.

அவன் முல்லையிடம்,
தன் காதலை வெளிப்படையாக சொல்லாமல் இருந்தாலும்,
இந்த நொடி வரை.
அவள் இடத்தை மீறி,
வேறொரு பெண்
அவன் மனதில் வரவே முடியாது என்பதே
நிதர்சனமான உண்மை என்று அவனும் அறிந்து தான் இருந்தான்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

மாலை கந்தனின் பள்ளி விடும் நேரம் வந்தது.
பள்ளி வாசலில் அவனுக்காக ஈஷா காத்திருந்தாள். ஆனால் வழக்கம்போல் சிரித்த முகமல்ல; இன்று கந்தன் சோகமாக நடந்துவந்தான்.

“என்ன கந்தா. ஏன் இப்ப ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டபடியே அவன் பையை வாங்கி காருக்குள் வைத்தாள் ஈஷா.

“எனக்கு அம்மா, அப்பா ரொம்ப நினைவா இருக்கு.” என்று குரல் உடைந்து சொல்லியபடி கந்தன் காரில் ஏறி அமர்ந்தான்.

“அதுக்கென்ன? இன்னும் பத்து நாள்ல உன் அம்மா அப்பா வந்துருவாங்க,” என்று மென்மையாக சொன்ன ஈஷா, காரை மாறன் படிக்கும் சட்டக்கல்லூரி நோக்கி செலுத்தினாள்.

கல்லூரி முடிந்ததும் மாறன் ஈஷாவுக்காக காத்திருந்தான். காரைக் கண்டதும் வேகமாக வந்து,
“Good evening, சின்ன மேடம்,” என்று சிரித்தான்.

“Good evening, மாறன்,” என்று பதிலளித்த ஈஷா, அடுத்ததாக முல்லை படிக்கும் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றாள்.
ஆனால் வழக்கமாக முல்லை நிற்கும் இடத்தில் அவளை காணவில்லை.

“என்ன அண்ணா. அக்கா எங்க?” என்று கந்தன் கேட்க,
“ஒருவேளை உள்ளே இருப்பாளோ?” என்று ஈஷா சந்தேகத்துடன் சொன்னாள்.

“நான் போய் பார்த்துட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு மாறன் கல்லூரிக்குள் சென்றான்.

அங்கே, ஒரு ஓரமாக நின்று கொண்டு, கதிர் வருவான் என்ற எதிர்பார்ப்புடன் முல்லை காத்திருந்தாள்.
மாறன் வந்ததே தெரியாமல் இருந்த அவளை,

“பாப்பா. இங்க என்ன பண்ற?” என்று புருவம் உயர்த்தி கேட்டான் மாறன்.

“அது. நான். கதிருக்காக காத்திருக்கேன்,” என்று தயக்கத்துடன் சொன்ன முல்லையை,
ஏகத்துக்கும் முறைத்த மாறன்,
“விளையாடாத. முதல்ல வா, போகலாம்,” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

“அண்ணா, கையை விடு. பாவம் கதிர். உன் மேடம் அடியாள் வச்சு—”
முல்லை சொல்லி முடிப்பதற்குள்,

“எதுவா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்கலாம். இப்ப ஒழுங்கா கார்ல ஏறு,” என்று சொல்லி, அவளை விடாப்பிடியாக காருக்குள் தள்ளி கதவைச் சாத்தினான்.

“என்னாச்சு? ஏன் மாறா, முல்லைகிட்ட இப்படி கோபப்படுறீங்க?” என்று ஈஷா கேட்டாள்.

“ஒன்னுமில்லங்க. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க,” என்றான் மாறன்.

ஆனால் காருக்குள்,
“எதுக்காக என்ன கட்டாயப்படுத்தி கார்ல ஏத்துன? கதிர் என்னக்காக வெயிட் பண்ணுவார். என்னை இறக்கிவிடு!” என்று முல்லை அலறினாள்.

அவள் கூச்சலைக் காதில் வாங்காமல், ஈஷா காரை நேராக VCR பங்களாவை நோக்கி ஓட்டினாள்.
முழு வழியிலும் முல்லை கதிரின் பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டே வந்தாள்.
யாரும் அவளைப் பொருட்படுத்தவில்லை.

பங்களாவை அடைந்ததும், கோபத்துடன் காரிலிருந்து இறங்கிய முல்லை வீட்டுக்குள் சென்று,
“ஏய். கொலைகாரி! எங்க இருக்க?” என்று கத்தினாள்.

அவளின் செயலைக் கண்டு பதறிய ஈஷா,
“ஏய். என்னம்மா இது? போ. உன் ரூமுக்குப் போ,” என்று கண்டித்தாள்.

“நீங்க சொல்றத கேக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல!” என்று சீறிய முல்லை,
“எவ்வளவு தைரியம் இருந்தா என் கதிரை அடியாள் வச்சு அடிச்சிருப்பீங்க? அவரு கையில பெரிய கட்டு இருக்குது தெரியுமா? கதிரை கண்டிக்க நீங்க எல்லாம் யாரு?” என்று ஈஷாவை எதிர்த்தாள்.

அந்த நேரம்,
மாடிப்படியிலிருந்து மெதுவாக இறங்கி வந்தாள் சித்ராங்கி.

அவள் காலடி சத்தமே இல்லாமல் இருந்தாலும், அந்த வீட்டின்னுள் இருந்த எல்லாருக்கும் நெஞ்சுக்குள் ஏதோ பயம் இறங்கியது.

முல்லையை ஒரு நொடிக்கூட பார்க்காமல், நேராக வந்து சோபாவில் அமர்ந்த சித்ரா,.
கால்களை மடித்து, கைகளைத் தாங்கி அமர்ந்த அந்த அமைதியில் கூட அதிகாரம் தெளிவாக தெரிந்தது.

சித்ராங்கியைப் பார்த்ததும், முல்லையின் கோபம் இன்னும் தீவிரமானது.

“அக்கா, எதுக்காக ஒரு ரவுடி பையனுக்காக எப்ப பாரு சண்டை போடுற?” என்று கந்தன் கேட்டான்.

“டேய். இன்னொரு முறை கதிரை ரவுடின்னு சொன்னா—”
கோபத்தில் கையை ஓங்கிய முல்லை, கந்தனின் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.
அவனின் கண்கள் உடனே கலங்கின.

“முல்ல என்ன பண்ற நீ? உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா?” என்று மாறனும் கண்டித்தான்.

அப்போது சித்ராங்கி,
“ஹே girl..what's eating you?” என்று ஒரே வார்த்தையில், கூர்மையாக கேட்டாள்.

“பிரச்சனையா? என் பிரச்சனையே நீங்கதான்!” என்று சீறிய முல்லை,
“எவ்வளவு தைரியம் இருந்தா என் கதிரை அடியாள் வச்சு அடிச்சிருப்பீங்க?” என்று கேட்டாள்.

முல்லை பேசிக்கொண்டிருந்தாலும், சித்ராங்கி அவளைப் பொருட்படுத்தாமல், தன் கைக்கடிகாரத்தில் வந்த செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அது முல்லையை இன்னும் சீற்றமடையச் செய்தது.

“உங்களைத்தான் கேட்கிறேன்!” என்று மீண்டும் கத்தினாள்.

அப்போது நிதானமாக,
“ஈ அடிக்க இரும்புக் கம்பி தேவையா?” என்று சித்ராங்கி கேட்டாள்.

“என்ன. நக்கலா?” என்று முல்லை சீற,
“நக்கல் விக்கல் எல்லாம் பண்ண எனக்கு நேரம் இல்ல. இப்ப எதுக்கு நடு வீட்டுல நின்னு கத்துற? ஷார்ட் அண்ட் ஸ்பைசியா விஷயத்துக்கு வா,” என்றாள் சித்ராங்கி.

முல்லை கண்களில் கோபம் துளும்ப,
“எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஒரே காரணத்துக்காகத்தான் நாங்க இங்க இருக்கோம். அவர் சரியானதும் உடனே போயிடுவோம்.
நான் யாரோட பேசுறேன், யாரோட பழகுறேன்னு கண்காணிக்க நீங்க யாரு?
என் கதிர் மேல இன்னொரு முறை கை வச்சீங்கனா. அப்புறம் நடக்குறது வேற!” என்று மிரட்டினாள்.

அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top