Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 147
- Thread Author
- #1
13.2
இதே தருணம் ஈஷா ஓட்டிய கார் மெதுவாக கந்தனின் பள்ளி வாசலின் முன் வந்து நின்றது.
கார் நிற்கும் சத்தம் கேட்கும் முன்பே கந்தன் கதவைத் திறந்து, தன் புத்தகப் பையைத் தோளில் போட்டுக்கொண்டு இறங்கினான். வழக்கமாய் இருக்கும் அவன் சுறுசுறுப்பு இன்று இல்லை. முகம் முழுவதும் ஏதோ ஒரு சோகத்தின் நிழல்.
அதைப் பார்த்த முல்லையின் மனம் சுளிக்க..
“டேய் வாலு. என்னடா? ஏன் இப்படியிருக்க?” என்றவளின் குரலில் கவலை வழிந்தது.
அவன் ஒரு நொடி நின்று அவளைப் பார்த்தவன்,
“தெரிஞ்சா நீ என்ன பண்ணப்போற? இப்போ எல்லாம் உனக்கு என்கிட்ட பேசக்கூட நேரமே இல்லையே,” என்று சொல்லிவிட்டு, மேலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் வேகமாக பள்ளிக்குள் நடந்து சென்றான்.
அவனைப் பார்த்துக்கொண்டே நின்ற முல்லையின் கண்கள் கலங்கின.
“ஆமா. எல்லாத்துக்கும் என்னையேயே குறை சொல்லுங்க,” என்று அவள் மெதுவாக புலம்பினாள்.
அந்த அமைதியை கலைத்தது ஈஷாவின் குரல்.
“மாறா. முதல்ல முல்லையை ட்ரோப் பண்ணிடலாம். அப்புறமா நான் உங்களை ட்ரோப் பண்றேன்.”என்றாள்.
மருத்துவக் கல்லூரியில் இருந்து சட்டக் கல்லூரிக்கு செல்ல அரை மணி நேரம் ஆகும். அந்த அரை மணி நேரம். மாறனின் மனதில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இந்த நேரத்துல, ஈஷாவுடன் கொஞ்சம் நார்மலா பேசணுமே. என்ற ஆசை அவனுக்குள் மெதுவாக தலை தூக்கியது.
ஈஷா வழக்கம்போல் நிதானமான வேகத்தில் காரை ஓட்டினாள். சாலை முழுக்க காலை நேரத்தின் பரபரப்பு. அரை மணி நேரத்தில் முல்லையின் கல்லூரி வாயில் அவர்கள் கண் முன்னே விரிந்தது.
“நான் போயிட்டு வரேன்,” என்ற முல்லையின் குரல் சாதாரணமாய் இருந்தாலும், அவள் கண்கள் அங்கே யாரையோ தேடின. கதிரின் உருவம் அவள் பார்வையில் ஒளிந்திருந்தது.
அப்போது,
“மாறா. என் கூட வாங்க நீங்க,” என்று சொல்லி, ஈஷா காரை ஓரமாக நிறுத்தினாள்.
ஈஷாவின் செயலில் அதிர்ந்த முல்லை,
“நீங்க எங்க வரீங்க?” என்று கேட்டாள்.
“உன் கல்லூரிக்குத்தான்,” என்றாள் ஈஷா, எந்த தயக்கமும் இல்லாமல்.
“இல்ல. இல்ல. நீங்க எல்லாம் உள்ள வரக்கூடாது,” என்று முல்லை அவசரமாகச் சொன்னாள்.
ஈஷாவின் புருவங்கள் சற்றே சுருங்கின.
“ஏன் வரக்கூடாது? நாங்க என்ன ரவுடிங்களா? அடுத்தவங்க ஐடி கார்டைப் பிடுங்கி கழுத்துல மாட்டிக்கிட்டு உள்ள போறதுக்கு?”
என்றவள் சொல்வதின் அர்த்தம் புரிந்த முல்லையின் முகம் சிவந்தது.
"யாரை ரவுடி சொல்றிங்க!?" என்று முல்லை கேட்க,
“நீ யாரை நினைக்கிறாயோ அவங்களைத்தான் சொல்றேன்,” என்று ஈஷா சொல்ல, மாறனை கோவமாக பார்த்தாள் முல்லை.
அவனோ, பேசத் தெரியாத பிள்ளையாய், ஈஷா பின்னால் அமைதியாக நின்றிருந்தான்.
“என்ன நீ... இவங்க என்ன எதிர்த்து பேசறாங்க? நீ சும்மா நிக்கிறே! எனக்கு நீ சப்போர்ட் பண்ண மாட்டியா?” என்று முல்லை கோபத்தோடு கேட்டாள்.
“நான் தான் உன்னைக் கேள்வி கேட்க முடியல. இவங்களாவது கேட்கட்டுமே,” என்று மாறன் மெதுவாகச் சொன்னான்.
“இவங்க யாரு என்னைக் கேள்வி கேட்க? யாருக்கும் அந்த உரிமை இல்லை!” என்று சொல்லிக்கொண்டே, முல்லை கல்லூரி வாயிலுக்குள் நுழைந்தாள்.
அவளைப் பின்தொடர்ந்து ஈஷாவும் மாறனும் கல்லூரி வளாகத்திற்குள் சென்றார்கள்.
“சின்ன மேடம். நம்ம ஏன் இப்போ இந்த கல்லூரிக்குள்ள வந்திருக்கோம்?” என்று மாறன் குழப்பத்துடன் கேட்டான்.
“எல்லாம் காரணத்தோடத்தான்,” என்றாள் ஈஷா.
அவள் நேராக தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்றாள். கதவு மூடப்பட்டது.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் பிறகு கதவு திறந்தது.
“கவலைப்படாதீங்க மேடம். CR. மேடம் கிட்ட சொல்லிடுடுங்க. இனிமே இந்த மாதிரி தவறு நடக்காது. மாணவர்கள் மீது இன்னும் கூடுதல் கவனம் வைக்க ஏற்பாடு பண்றேன்,” என்று தலைமை ஆசிரியர் உறுதியாகச் சொன்னார்.
வெளியே வந்ததும் மாறன் கேட்டான்,
“ஓ. இதுக்காகத்தான் நீங்க கல்லூரிக்கு வந்தீங்களா?”
“பின்ன?” என்றாள் ஈஷா.
“ரோட்ல போறவங்க, வரவங்க எல்லாம் இந்த காலேஜ் ஐடி கார்டு மாட்டிகிட்டு உள்ள வந்தா, யாரும் கண்டுக்காம இருப்பாங்களா?
பெற்றோர்கள் பிள்ளைகளை ஸ்கூல், கல்லூரிக்கு அனுப்புவது நல்லா படிச்சு வாழ்க்கையில் முன்னேறணும்னுதானே?
ஆனா இவங்க படிக்கிற வயசுல தேவையில்லாத விஷயங்கள்ல சிக்கி வாழ்க்கையை வீணாக்குறாங்க,” என்று ஆதங்கம் கலந்த குரலில் சொன்னாள்.
அதன்பின் காரை மாறனின் கல்லூரியை நோக்கி திருப்பினாள் ஈஷா.
வழி முழுவதும் ஈஷா அமைதியாக இருந்தாள்.
அந்த அமைதியை உடைக்க,
“உங்க அம்மா, அப்பா. கூடப் பிறந்தவங்க எல்லாம் எந்த ஊரு? நீங்க பிறந்து வளர்ந்தது மலேசியாவா?” என்று அவன் இயல்பாகக் கேட்டான்.
அந்த நொடி.
ஈஷா திடீரென காரை பிரேக் அடித்து நிறுத்தினாள்.
ஒரு நொடியில் அவள் முகம் மாறியது. கண்களில் கோபமும் மறைக்கப்பட்ட வலியும் மின்னின.
“என்னாச்சுங்க? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?” என்று மாறன் பதறினான்.
“இல்ல. ஒன்னும் இல்ல,” என்றவள் அருகிலிருந்த பாட்டிலில் தண்ணீர் குடித்த ஈஷா பிறகு, ஒன்றும் நடக்காதது போல மீண்டும் காரை ஓட்டினாள்.
அவள் கார் அடுத்து ஐந்து நிமிடங்களிளேயே மாறனின் கல்லூரி வந்தடைந்தது.
“சாரி. நான் ஏதோ அதிகப்பிரசங்கமாக கேள்வி கேட்டுட்டேன் போல,” என்றான் மாறன்.
“பரவாயில்ல,” என்ற ஈஷா,
“மதியம் சாப்பாடு பானு எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க. ஈவினிங் நானே வந்து உங்களை பிக் பண்ணிக்கிறேன்.”என்றவளின் கார் VCR பங்களாவை நோக்கி அதீத வேகத்தில் பாய்ந்தது.
'இவங்க குடும்பத்தைப் பற்றி கேட்டதால இவங்களுக்கு கோபம் வருது போல,
டேய் மாறா. உன் வாய்தான் உனக்கு என்னைக்கும் பிரச்சனை.
இனிமே அடக்கி வாசி'
என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன், மெதுவாக கல்லூரிக்குள் நுழைந்தான்.

அன்றைய தினம் மதிய நேரம் வந்தது. முல்லைக்கு VCR பங்களாவில் இருந்து பானு என்ற பெண்மணி மதிய உணவை எடுத்து வந்து கொடுத்தாள்.
பசி இருந்தாலும், ஏனோ முல்லைக்கு சாப்பிடும் எண்ணமே வரவில்லை.
“என்னாச்சு இந்த கதிருக்கு. இந்தப் பக்கம் ஆளையே காணோமே! நேத்து அவரை விட்டுட்டு நம்ம அந்த கொலைகாரி கூட போனதை நினைச்சு, அவர் நம்மள தப்பா நினைச்சிருப்பாரோ?” என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டாள் முல்லை.
கன்னத்தில் கை வைத்தபடி நீண்ட நேரமாக சாப்பாட்டு பையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது,
“என்ன Flower. இன்னும் சாப்பிடலையா?” என்ற கேள்வியோடு முல்லை முன்னே வந்து நின்றான் கதிர்.
கதிரை பார்த்ததும், முல்லையின் கண்களில் ஆயிரம் நிலவுகள் பிரதிபலித்தது போல ஒளி தெரிந்தது.
“என்ன Flower. சாப்பிடலையா?” என்று மீண்டும் கேட்டான் கதிர்.
“கதிர்.” என்று அவனை நெருங்கிய முல்லை, அவன் கையில் இருந்த பெரிய கட்டைப் பார்த்ததும் பதறி போனாள்.
“ஐயோ கதிர்! என்னாச்சு உங்களுக்கு? என்னங்க இது இவ்வளவு பெரிய கட்டு?” என்று பயந்த குரலில் கேட்டாள்.
கையில் இருந்த காயத்தை பார்த்து அவளது கண்கள் கலங்கின.
“கேக்கறேனே. சொல்லுங்க, என்னாச்சு?” என்று அவள் துடித்த குரலில் கேட்டாள்.
“பைக் accident,” என்றான் கதிர் அமைதியாக.
“என்ன? Accident-ஆ? எப்படி அடிபட்டுச்சு?” என்று அவள் அவசரமாக கேட்டாள்.
“அதான் சொன்னேனே. பைக்கிலிருந்து விழுந்துட்டேன்,” என்றான்.
“எப்படி விழுந்தீங்க?” என்று அவள் தொடர்ந்து கேட்க,
“அதுக்காக மறுபடியும் விழுந்து காட்ட முடியுமா?” என்று சிரித்தபடி, தன் பாக்கெட்டில் இருந்த ரவா லட்டு உருண்டையை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“என்ன நீங்க. எப்படி கீழ விழுந்தீங்கன்னு கேட்டா ரவா லட்டு தரிங்க!” என்று அவள் கோபம் கொண்டாள்.
“அட. உனக்கிதுதானே பிடிக்கும். இந்தா, சாப்பிடு,” என்றான் கதிர்.
“எப்படி அடிபட்டது?” என்று முல்லை மீண்டும் கேட்டாள்.
அவளைக் சித்ராங்கிக்கு எதிராக திருப்ப வேண்டும் என்று மனதில் நினைத்த கதிர், “எல்லாத்துக்கும் உன் மேடம் தான் காரணம்,” என்று அவள் மீது பழி சுமத்தும் விதமாக சொன்னான்.
“அவங்களா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் முல்லை.
“ஆமா. வீட்டில் கூட நான் பைக் accidentன்னு பொய் சொன்னேன். ஆனா என்னை ரெண்டு பேரு அடிச்சாங்க,”என்று கதிர் பொய் கூறினான்.
“என்ன சொல்றீங்க? உண்மையாவா உங்களை அடிச்சாங்களா? நீங்களே எவ்வளவு பெரிய சண்டியர். உங்களை எப்படி அவங்களால அடிக்க முடியும்?” என்று முல்லை வெகுளியாக கேட்டாள்.
சில நொடிகள் யோசித்தவன், “நானும் அவங்களை அடிச்சுட்டேன். ஆனா சண்டைனா சட்டை கிழிய தானே கூடும்,” என்று சமாளித்தான்.
“அவளுக்கு எவ்வளவு திமிர் இருந்தா உங்க மேலயே கை வைப்பா! கொலை செய்யக்கூடியவளுக்கு உங்களை அடிப்பது பெரிய விஷயமா என்ன?” என்று முல்லை கோபமாகச் சொன்னாள்.
“என்னது? கொலையா? என்ன சொல்ற?” என்று கதிர் கேட்டான்.
“ஆமா. அவ ஒரு கொலைகாரி. ஒரு பொம்பளையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, அவளை தூக்கி செங்கல் சூளையில் எறிஞ்சத என் ரெண்டு கண்ணால பார்த்தேன்,” என்றாள் முல்லை.
இதைக் கேட்ட கதிர், சித்ராங்கியை பழிவாங்க இந்த சந்தர்ப்பம் உதவுமா என்று மனதில் யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்போது,
“இங்கே என்ன நடக்குது? யாரைக் கேட்டு நீ உள்ளே வந்த?” என்று கல்லூரியின் தலைமை அதிகாரி கதிரை கண்டித்தார்.
“ஏய் கிழவா . என்ன சத்தம் போடற?” என்று தலைமை ஆசிரியருக்குக் கூட மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசினான் கதிர்.
“இங்க பாருப்பா, நீ யாரு? யோவ் வாட்ச் மேன், ஏன் காலேஜ்ல இப்படி ரவுடி பசங்கள எல்லாம் உள்ள விடுற?” என்று தலைமை ஆசிரியர் கோபமாக கேட்டார்.
“யாரை ரவுடின்னு சொன்ன? ரைட்ல விட்டனா லெப்ட்ல கவனிக்கும்,” என்று அவரையே அடிக்க முறைத்தான் கதிர்.
“ஐயோ கதிர்! வேண்டாம். பிரச்சனை வேண்டாம். நீங்க போங்க. இன்னைக்கு சாயங்காலம் நாம மீட் பண்ணலாம்,” என்று முல்லை அவனைத் தடுத்தாள்.
“அதான் உன்னை கார்ல அழைத்துட்டு வந்து கார்ல இட்டுட்டுப் போறாங்களே. அப்புறம் நம்ம எப்படி மீட் பண்றது?” என்று கேட்டான் கதிர்.
“அந்த ஈஷா தான் என்னை அழைச்சிட்டு போக வருவாங்க. அவங்க எனக்கு விஷயம் இல்ல. இன்னொருத்தவ தான் பெரிய கொலைகாரி,” என்று மீண்டும் சித்ராங்கியை குறித்தே முல்லை சொன்னாள்.
“சரி. நம்ம ஈவினிங் மீட் பண்ணலாம்,” என்ற கதிர், தலைமை ஆசிரியரை கோபமாக முறைத்தபடியும் முல்லையை காதலுடன் பார்த்தபடியும் வெளியேறினான்.
வெளியே நடந்து சென்றவனின் மனதில் ஒரு திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. ஆம் அவன் முல்லையை வைத்து சித்ராங்கியை பழிவாங்க முடியுமா என்று யோசிக்க தொடங்கினான்.
தொடரும்