Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 147
- Thread Author
- #1
படலம் - 13
மறுநாள் காலை வரை முல்லை அவள் இருந்த அறையில் இருந்து வெளியே வரவே இல்லை.
காலை 7மணி அளவில்,'பாப்பா...' என்று மாறன் முல்லை அறையின் வாசலில் நின்று தன் சகோதரியை அழைக்க, முல்லை ஓடி வந்து கதவை திறந்தாள்.
அவள் முகத்தில் பயம் கலந்த கோபம் தெரிய... அவள் விழிகளோ வாசலில் நின்று இருந்த நாய் எங்கே என்று தேடியது.
' என்ன நீ... இன்னும் குளிச்சிட்டு கிளம்பாம இருக்க' என்று மாறன் கேட்க...
'அண்ணா அண்ணா நேத்து நைட் மறுபடியும் அந்த கொலைகாரி கொலை பண்ண காருல ஏறி போனா அண்ணா' என்று பதற்றமாக சொன்னாள் முல்லை.
தன் சகோதரியின் வார்த்தையில் மாறனின் முகம் மாறி போக...
'அக்கா... நீ யாரை பற்றி பேசுற' என்று கேட்டான் கந்தன்.
பள்ளிக்கு தயாராக கிளம்பி இருந்த கந்தனை பார்த்து,'எல்லாம் இந்த வீட்டுல இருக்குற உங்க மேடமை தான் சொல்லுறேன்' என்றாள் முல்லை.
அவள் பேச்சையும் செய்கையையும் பார்த்து மாறனும் கந்தனும் குழம்பி தான் போனார்கள்.
அந்த வீட்டில் பணி புரியும் பெண்கள் அவரவர் வேலைகளை பார்த்து இருக்க, யாருமே முல்லை பேசுவதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.
'அன்னைக்கு மாதிரியே நேத்தும் அவங்க காருல போய் நான் அவங்க என்ன பண்ணுறாங்கன்னு பார்க்க முயற்சி பண்ணேன். ஆனா அந்த நாய் தான் என்னை வெளிய போகவே விடல' என்ற முல்லையின் விழிகள் அந்த வேட்டை நாயை தேடியது.
முல்லையின் புலம்பலை கேட்டு பொறுமை இழந்த மாறன்,'போதும் நிறுத்து முல்ல... முதல்ல நீ போய் குளிச்சிட்டு கிளம்பு' என்றான்.
'அண்ணா... நான் சொல்ல வரத கேளு' என்று முல்லை மேலும் பேச வருவதற்குள்,
'முக்கிய செய்திகள்..
இன்றைய தினம் விடியல் காலை வேளையில் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத நிலையில் இளைஞனின் சடலம் சின்னாரம் காட்டு பகுதியில் கண்டெடுக்க பட்ட நிலையில், அது கொலையா இல்லை காட்டு விலங்குகள் செய்த வேலையா என்று காவலர்கள் தீவர தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளார்கள்' என்ற செய்தி அங்குள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி கொண்டு இருந்தது.
'ஐயோ ஐயோ... பார்த்தியா பார்த்தியா... கண்டிப்பா இதுவும் இங்க இருக்குற கொலைகாரி பண்ண வேலையா தான் இருக்கும்' என்ற முல்லை வேகமாக அவள் அறையில் இருந்து ஹாலுக்கு ஓடி வந்தாள்.
'முல்ல... என்ன நீ... போ...போய் குளிச்சிட்டு கிளம்பு' என்று மாறன் சத்தம் போட,
'இன்னும் நீ கிளம்பலையா முல்ல!?' என்று கேட்டாள் ஈஷா.
'எங்க அக்கா இன்னும் குளிக்கவே இல்ல' என்ற கந்தன்
டைனிங் டேபிளில் அமர்ந்து இருக்கும் ஈஷாவின் அருகே வர,
அதே சமயம் சமையல் அறையில் இருந்து தனக்கான காலை உணவை எடுத்துக்கொண்டு வந்தாள் சித்ராங்கி.
கருப்பு ஆடையில் சாப்பாட்டு தட்டை கூட துப்பாக்கியை போலவே கம்பிரமாக ஏந்திக்கொண்டு வந்த சித்ராங்கி மேசை மேல் வைத்து சாப்பிட தொடங்கியவள் ஈஷாவை ஒரு பார்வை பார்த்தாள்.
'Bon appetit மேடம்' என்று Frenchiல் நல்லா சாப்பிடுங்க என சொன்னவள்...'கந்தா, மாறா.. நீங்க வாங்க நம்மளும் சாப்பிடலாம். முல்ல சீக்கிரமா குளிச்சிட்டு வந்து எங்ககூட joint பண்ணுக்கோ' என்றாள் ஈஷா.
சித்ராவை எதிரில் பார்த்த முல்லைக்கு, இத்தனை நேரம் இவளை கொலைகாரி என்று பேசியது அவள் காதில் விழுந்து இருக்குமா என்று யோசித்தவள் அப்படியே பார்வையை தன் அண்ணன் பக்கம் திருப்ப, 'நேரம் ஆகுது போய் குளிச்சிட்டு வா' என்று பற்களை கடித்தப்படி கோபமாக சொன்னான் மாறன்.
இதற்கு மேலும் இங்கேயே நின்றிருந்தால் சரி வராது என்று எண்ணிய முல்லை சித்ராவை அழுத்தமாக முறைத்தபடி அவள் அறைக்குள் செல்ல, அலட்டலே இல்லாமல் உணவருந்திக் கொண்டு இருந்தாள் சித்ராங்கி.
'அப்புறம்...நல்லா படிக்கிறியா கந்தா' என்று ஈஷா சிறுவனிடம் பேச்சி கொடுக்க, 'எனக்கென்ன!! நான் நல்லா படிக்கிறேன். இதோ இவர் தான் ஒழுங்கா படிக்கிறதே இல்லை' என்று மாறனை கை காட்டினான் கந்தன்.
'டேய் டேய்.. இப்ப ஏண்டா என்ன வம்பு பண்ற' என்ற மாறன் ஈஷாவை வைத்து கண் எடுக்காமல் பார்த்திருப்பதை சித்ராங்கி பார்க்காமலேயே மன கண்ணில் கண்டு கொண்டாள்.
'ஆமா!! இனிமே நீங்கதான் எங்கள அழச்சிட்டு போய் அழச்சிட்டு வருவீங்களா!?' என்று கந்தன் கேட்க,' ஏன் வேண்டாமா என்றாள் ஈஷா.
'ஐயோ...யார் வேண்டாம் சொன்னது. நீங்க தாராளமா வரலாம்.ஆமா எங்களை நீங்க அழைச்சிட்டு போனா உங்க வேலையை யார் பார்க்கிறது' என்று கேட்டான் கந்தன்
'நான் என்ன ஒரு நாள் முழுக்க வா உங்க கூட இருக்க போறேன். டிராப் பண்ணிட்டு வர போறேன்' என்றாள் ஈஷா.
'அப்புறம் மாறா...முருகன் சாருக்கு இன்னும் ஒரு வாரத்துல எல்லா ஆப்ரேஷனும் நல்லபடியா முடிஞ்சிடும்.பத்து நாளுக்குள்ள உங்க அப்பா உங்க வீட்ல இருப்பார்' என்று ஈஷா சொல்ல,
'ஐ...அம்மாவும் அப்பாவும் வரப் போறாங்களா ஹாப்பி ஹாப்பி' என்று குதித்தான் கந்தன்.
தன் தாய் தந்தையர் வரப்போகிறார்கள் எனமகிழ்ச்சி அடைந்த கந்தனின் முகம் சட்டென்று மாறிப்போக,'ஆனா அவங்க வந்துட்டா நாங்க எங்க வீட்டுக்கு போயிடுவோமே... அப்போ உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோமே' என்றான் பாவமாக.
'என்ன கந்தா... என்னை நீ மிஸ் பண்ணுவியா?' என்று ஈஷா கேட்க, 'உங்களை என் அண்ணன் தான் மிஸ் பண்ணும். நான் இதோ இந்த மேடமை தான் மிஸ் பண்ணுவேன்... ஏன்னா!! எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு' என்று கந்தன் சொல்ல,'சாப்பிடும் போது என்ன பேச்சு!' என்று உறும்பினாள் சித்ராங்கி
சின்னப் பையனாக இருந்தாலும் சித்திராங்கியின் ஆளுமையில் கந்தன் அவள் மீது அதிக அன்பும் மரியாதையும் வைத்திருக்க...தன் அருகே யாரையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற மனநிலையில் இருந்த சித்ராங்கிக்கு அவன் பேசுவதை ரசிக்கும் தன்மை இல்லாமல் போனது.
இந்த நொடி வரை கந்தன் மகிழ்ச்சியாக பேசி இருந்தவன், சித்திராங்கியின் சொல்லால் பார்த்து முகம் வாடி போனான்
'தம்பி... சாப்பிடும் போது பேசாத. சாப்பிடு' என்று மாறனும் தம் தம்பி மனதை அறிந்தவனாக அவனுக்கு ஆறுதலாய் பேச,
'எனக்கு சாப்பாடு போதும்' என்று தன் தட்டை எடுத்துக்கொண்டு சமையலறை சென்றான் கந்தன்.
அதே சமயம்.. முல்லை அவள் அறையில் இருந்து கல்லூரிக்கு செல்லும் பையுடன் வெளியே வர...'வா முல்ல சாப்பிடலாம்' என்று அழைத்தாள் ஈஷா
'எனக்கு சாப்பாடும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். இந்த வீட்ல இருக்க பிடிக்கலைன்னு நானும் கோடி முறை கத்திட்டேன், தயவுசெய்து என்னை சீக்கிரம் காலேஜுக்கு அழைச்சிட்டு போய் விடுங்க' என்ற முல்லை வாசலில் நின்றிருக்கும் காரின் அருகே போய் நின்று கொண்டாள்.
'மேடம்...நான் இவங்கள போய் டிராப் பண்ணிட்டு வரேன்' என்று ஈஷா சொல்ல,
'ம்...' என்று தலை அசைத்த சித்ராங்கி அவள் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.
இதே தருணம் கதிர் கையில் கட்டுடன் தன் இடது கையால் அவன் கேசத்தை சரி செய்துக்கொண்டு இருந்தான்.
'என்ன கதிர்... இப்போ வலி எப்படி இருக்கு' என்ற மீனா, அவள் கையில் இருந்த காபியை அவனிடம் நீட்டினாள்.
'வலி ஒரு பக்கம் இருந்துட்டு போகட்டும்,
நீ வழியை விடு' என்ற கதிர், வேகமாக அவன் அறையில் இருந்து வெளியே வர,'எங்க போற கதிர' என்ற கேள்வியோடு அவன் முன்னே வந்து நின்றாள் ரம்யா.
'ஏய்... நீ என்ன காலையிலையே வந்து இருக்க' என்ற கதிர், அவளை ஒரு பொருட்டாக கருதாமல் வாசலை நோக்கி நடந்தான்.
'டேய் கதிர்... இப்போ எங்க போற நீ' என்ற கேள்வியோடு கதிரின் பெரியம்மா அங்கே வர..'நான் கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரேன்' என்றான் கதிர்.
'அதான் கேக்குறேன்... எங்க போற' என்றவரின் கேள்வி முடியும் முன்னே கதிர் அந்த வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான்.
“என்ன ஆன்ட்டி, கதிர் எங்களைத் தவிர்த்து எங்க அடிக்கடி வெளியே போறாரு?”
என்று ரம்யா கேட்டபோது,
“அதையெல்லாம் நீதானே கண்டுபிடிக்கணும்,”
என்று கதிரின் அம்மா பரமேஸ்வரி சிரித்தபடியே சொன்னார்.
அடுத்த கணமே,
“உன்னைப் பார்த்தா, கதிர்கிட்ட நீ உரிமையோட பேசுறதை பார்த்தா. அவனும் நீயும்.”
என்று சொல்லி பரமேஸ்வரி வார்த்தையை அங்கேயே நிறுத்தினார்.
அதைப் புரிந்துகொண்ட ரம்யா, சிறு தயக்கத்துடன்,
“அப்போ. உங்களுக்கு கதிர் மேல நான் வைத்திருக்கிற காதல் தெரிஞ்சிடுச்சா?”
என்று கேட்டாள்.
“அட தெரியாமலா?
என் பையனை நீ எந்த அளவுக்கு நேசிக்கிறன்னு நான் கவனிச்சுக்கிட்டே தான் இருக்கேன்.
நீங்களிருவரும் யாராவது ஒருத்தங்க பெரியவங்ககிட்ட விஷயத்தை சொல்லுவீங்கன்னு நினைச்சேன்.
ஆனா அப்படி நடக்கலை.
அதான் நானே கேட்கிறேன்.
சொல்லு, நீ என் மகனை விரும்புறையா?”
என்று பரமேஸ்வரி நேரடியாகக் கேட்டார்.
ஒரு நிமிடம் கூட தயங்காமல் ரம்யா,
“ஆமா ஆன்ட்டி.
எனக்கு கதிர் ரொம்ப பிடிக்கும்.
கதிரை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்.
எங்க கல்யாணத்துக்கு நீங்க சம்மதிப்பீங்களா?”
என்று கேட்டாள்.
அதைக் கேட்ட பரமேஸ்வரி முகத்தில் சந்தோஷம் மலர்ந்தது.
“உன்னை யாருக்கு பிடிக்காம இருக்கும்?
ஆனா இதெல்லாம் பெரியவங்க பேச வேண்டிய விஷயம்.
முதல்ல நீ உங்க அப்பா கிட்ட சொல்லி அவரோட சம்மதத்தை வாங்கு.
நாங்க முறைப்படி வந்து உன்னை பொண்ணு கேட்கிறோம்,”
என்று சாமுண்டீஸ்வரியும் உறுதியாய் சொன்னார்.
அதைத் தொடர்ந்து ரம்யா உற்சாகமாக,
“ஆன்ட்டி, நாளைக்கு என் அப்பா ஊர்ல இருந்து வராரு.
என் பேர்ல இந்த ஊர்ல இருக்கிற பனைமர தோப்பை வாங்கப் போறாரு.
அந்த இடத்தைக் கிளியர் பண்ணி பெரிய காம்ப்ளக்ஸ் கட்ட போறோம்.
அதுல ஒரு கல்யாண மண்டபமும் இருக்கும்.
யாருக்குத் தெரியும்.
அந்த இடத்துலதான் எனக்கும் கதிருக்கும் கல்யாணமே நடந்தாலும் நடக்கலாம்,”
என்று சொல்ல,
அதை கேட்ட பரமேஸ்வரியின் முகத்தில் பேரானந்தம் தெரிந்தது.
“நாம் எதிர்பார்த்ததைவிட, நம்ம மகனுக்கு இன்னும் நல்ல வாழ்க்கை அமைஞ்சிடும் போல இருக்கு,”
என்று மனதிற்குள் மகிழ்ந்தார் பரமேஸ்வரி.
அப்போது சாமுண்டீஸ்வரி சிரித்தபடியே,
“அப்படியே வெங்கட்டுக்கும் ஒரு பொண்ணு பார்த்து,
அதே மண்டபத்துல கல்யாணம் பண்ணிடலாம்,”
என்று சொன்னார்.
உடனே ரம்யா,
“ஆன்ட்டி, நீங்க ஓகே சொன்னா
என் பெரியம்மா பொண்ணையே வெங்கட்டுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமே,”
என்று கேட்டாள்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில்,
பரமேஸ்வரியும் சாமுண்டீஸ்வரியும்
மனதுக்குள் இனிய பகல் கனவுகளில் மூழ்கினார்கள்.