• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
147
12.2

“நான் ரத்தின முல்லை. முல்லைனு கூப்பிடுவாங்க. எங்க அப்பா முருகன், அம்மா பார்வதி. நானும் வெற்றிமாறனும் ட்வின்ஸ். எனக்கு கந்தன்னு ஒரு தம்பி இருக்கான். அம்மா ஹோம்மேக்கர். அப்பா மலேசியால பெரிய கம்பெனில டிரைவரா இருக்காரு. நான் டாக்டர் படிக்கிறேன். இப்போ ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன். சீக்கிரமா வீட்டுக்குப் போயிடுவேன். டான்ஸ் ஆட ரொம்ப பிடிக்கும். இந்த திவாகர் தண்டத்தை என் ஃப்ரெண்ட் தான் இண்ட்ரோ பண்ணி வச்சா. ஆனா இவன் சரியான பொறுக்கின்னு இப்போ தான் புரிஞ்சுது.” என்று முல்லை சொல்ல, அவள் சொற்களை தாண்டி, அவள் முக பாவனையை ரசித்து இருந்தான் கதிர்.

கதிர், முல்லையை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த வெங்கட்,
“சரி. நேரமாகுது. போகலாமா?”
என்று கேட்டான்.

“ம். போகலாம்,”
என்று சொன்ன கதிர் இருக்கையிலிருந்து எழுந்தான்.

அனைவரும் குடித்த தேநீருக்கான பணத்தை மேசையின் மேல் வைத்து வெங்கட் வைக்க.,

“அங்கிள். எனக்கும் கதிருக்கும் நானே பணம் கொடுக்குறேன்,”
என்று சொல்லிய முல்லை, சரியான சில்லறையை மேசையில் வைத்தவள்,
சிறிது தயக்கத்துடன்
“மறுபடியும் உங்கள நான் எப்படி மீட் பண்ணுறது?” என்று கேட்டாள்.

“நீ ஏன் அவனை மீட் பண்ணனும்?”
என்று வெங்கட் கேட்க,
“ஏன். மீட் பண்ணக்கூடாதா?”
என்று முல்லையும் எதிர் கேள்வி போட்டாள்.

அப்போது கதிர் அமைதியாக,
“மீட் பண்ணனும்னு விதி இருந்தா. மீண்டும் சந்திக்கலாம்,”
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.

அவன் ஊர்.
அவன் படிப்பு.
அவன் வயது.
எதுவுமே தெரியாத நிலையிலேயே,
அவன் அவள் மனதில் ஒரு சின்ன சுமையாக ஒட்டிக் கொண்டான்.

“அப்புறம் என்ன. அதான் அவன் போயிட்டானே. நீயும் கிளம்பு,”
என்று வெங்கட் சொல்ல,

“ம். இனி கிளம்பணும் தான் போல.
அதான். என்கூட இப்போ ஆட யாருமே இல்லையே,”
என்று சற்றே வருத்தமாக சொன்னாள் முல்லை.

“அட ஆமா இல்ல.
நீ அந்த திவாகர் கூட ஆட வேண்டிய பொண்ணு தானே?”
என்று வெங்கட் கேட்க,
முல்லை அமைதியாக தலையாட்டினாள்.

“இப்போ உனக்கு ஜோடி இல்லாம நீ ஆட முடியாதா?”
என்று மீனா கேட்க,
“ஹ்ம். ஹ்ம். முடியாது,”
என்று கவலையோடு சொன்னாள் முல்லை.

“நான் வேணும்னா உன் கூட ஆட ஒரு ஆளை ரெடி பண்ணவா?”
என்று வெங்கட் கேட்க,

“என்ன அங்கிள் சொல்றீங்க?
என்கூட டான்ஸ் ஆட நீங்க ஆள் ஏற்பாடு பண்ணுறீங்களா?”
என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் முல்லை.

“அத தானே சொல்றேன்.
சரி. நீ இப்போ என்ன பண்ணு.
நேரா பார்க்கிங் ஏரியாவுக்கு போ.
அங்க 222 நம்பர் நீல கார்ல கதிர் உட்காந்திருப்பான்.
அவனை போய் உன்கூட டான்ஸ் ஆட வர சொல்லு,”
என்று வெங்கட் சீரியஸாகச் சொன்னான்.

“என்ன!? கதிர் டான்ஸ் ஆடுவாரா!?”
என்று முல்லை இன்னும் ஆச்சரியப்பட,
“அவன் டான்ஸர் மா,”
என்று சொன்னான் வெங்கட்.

“அப்படியா!!
அப்போ இதோ. இப்போவே போறேன்,”
என்று சொல்லியபடி,
துள்ளிக் குதித்துக்கொண்டே கதிரைத் தேடி முல்லை அங்கிருந்து ஓடினாள்.

அவளைப் பார்த்து மிரண்ட மீனா,
“டேய் மாமா. என்னடா பண்ற நீ?”
என்று புரியாமல் கேட்டாள்.

“பின்ன என்ன.
என்னை பார்த்து அந்த முந்திரி கொட்டை
‘அங்கிள். அங்கிள்’ன்னு எத்தனை தடவை கிண்டல் பண்ணுது!
அதான் கதிர் கிட்ட கோத்து விட்டேன்,”
என்று வெங்கட் சொல்ல,

“டேய். கதிரே சரியான சிடுமூஞ்சி.
இவ பாட்டுக்கு எதாவது அவன்கிட்ட விளையாட்டா பேசி
வாங்கிக்க போறா டா,”
என்று கவலையுடன் சொன்னாள் மீனா.

“ஹாங். நல்லா வாங்கட்டும்.
அங்கிளாம் நான் அவளுக்கு.
இப்போ பாரு.
இந்த அங்கிள் பண்ண வேலையால
அவளோட கதிரு
இவளை மண்டையில குட்டி அனுப்பப் போறான்,”
என்று சொன்ன வெங்கட்டை,
மீனா ஏகத்துக்கும் முறைத்தாள்.

கதிருக்கு நடனமாடத் தெரியும் என்று வெங்கட் சொன்னதை கேட்ட கணம்,
முல்லையின் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி அலையெழுந்தது.

“எப்படியாவது இன்னைக்கு சாயங்காலம் கதிரை நம்ம கூட டான்ஸ் ஆட வைத்தே ஆகணும்.”
என்ற முடிவோடு,
கதிரைத் தேடி பார்க்கிங் ஏரியாவை நோக்கி நடந்தாள்.

“222. நம்பர் எங்க இருக்கு?”
என்று தேடியபடியே அவள் கண்கள் சுற்றிப் பார்த்தன.

அப்போது
நீல நிற காரில் சாய்ந்தபடி,
எப்போதும் போலவே விரல்களில் சிகரெட்டை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான் கதிர்.

“கதிர்.”
என்ற அழைப்போடு அவன் அருகே சென்ற முல்லை,
சற்று தயக்கத்துடன்,
“நீங்க. டான்சரா?”
என்று கேட்டாள்.

அவள் கேள்வியின் அர்த்தம் அவனுக்குப் புரியாமல்,
“என்ன?”
என்று கதிர் திரும்பிக் கேட்க,

“இன்னைக்கு சாயங்காலம் நீங்க என் கூட டான்ஸ் ஆடுறிங்களா?
நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து. ஒண்ணா டான்ஸ் ஆடலாமா?”
என்று ஒரே மூச்சில் கேட்டாள் முல்லை.

அவள் வார்த்தைகள் முடிவதற்குள்,
கதிரின் முகம் சட்டென்று மாறியது.

“எனக்கு வேற வேலை இல்லன்னு நினைச்சியா?
அதெல்லாம் என்னால முடியாது,”
என்று கடுமையாக சொன்னான்.

“Please கதிர்.
என்கூட ஆட ஓகே சொல்லுங்க,”
என்று கெஞ்சும் குரலில் முல்லை கேட்டாள்.

“இல்ல. என்னால முடியாது,”
என்று கதிர் திட்டவட்டமாக மறுத்தான்.

“இல்ல. நீங்க என்கூட ஆடி தான் ஆகணும்.
வாங்க. நம்ம போய் practise பண்ணலாம்,”
என்று சொல்லியபடி,
அவன் கையைப் பிடித்தாள் முல்லை.

அடுத்த நொடி,“ஏய்.
ஒரு முறை சொன்னா புரியாதா?
எனக்கு டான்ஸ் எல்லாம் ஆட வராது.
முதல்ல. என் மேல இருந்து கையை எடு,”
என்று கத்திய கதிர்,
முல்லையின் கையை தட்டிவிட்டான்.

“சரியான இம்சை போல நீ,”
என்றவனின் வார்த்தைகள்,
அவளின் நெஞ்சுக்குள் ஊசியாய் குத்தின.

இதுவரை கதிரின் கோபத்தையே ரசித்துக் கொண்டிருந்த முல்லைக்கு,
அவன் வீசிய அருவருப்பான பார்வை
சகிக்க முடியாத வேதனையைத் தந்தது.

அடுத்த கணமே,
அவளின் விழிகள் ஈரமடைந்தன.

கதிர் கோபமாக கத்திய சத்தம்,
அங்கே இருந்த சிலரின் காதுகளில் விழுந்தது.
அவர்கள் அனைவரும் முல்லையை
ஒரு காட்சி பொருளைப் போலவே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைவரின் முன்னிலையிலும்
கண்ணீரை துடைத்துக் கொண்ட முல்லை,

“சாரி.”
என்று மட்டும் சொல்லி,
அங்கிருந்து நடந்து சென்ற மலரும் நினைவுகளை இன்று
VCR பங்களாவின் கட்டிலில் படுத்திருந்தபடி
வேதனையோடு நினைத்துப் பார்த்தாள் முல்லை.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

✨நிகழ் காலம் ✨

அந்த நினைவு இன்னும் ஆழமாகச் செல்லும் முன்,
அவள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியே
ஏதோ ஒரு சத்தம் கேட்டது.

“என்ன சத்தம் இது?”
என்று மனதுக்குள் நினைத்தபடி,
ஜன்னல் வழியே கவனத்தைச் செலுத்தினாள்.

டங். டங். டங்.
சுவரில் மாட்டியிருந்த கடிகாரம்
பதினொன்று முறை ஒலித்தது.

ஒரு நொடி,
முல்லையின் மூச்சே நின்று போனது.

“ச்சி.
வால் கிளாக் சத்தமா,”
என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொள்ள,
அதே சமயம்
அந்த பங்களாவிலிருந்து
ஒரு கருப்பு நிற கார் வெளியேறியது.

ஜன்னல் வழியே அந்த காரை பார்த்தவள்,
வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தாள்.

முல்லை தன் அண்ணனை எழுப்ப வந்தவள் அறையின் வாசலில்
நாக்கை தொங்கப் போட்டபடி
சித்ரா வளர்க்கும் வேட்டை நாய் நின்றிருந்தது.

நாயை பார்த்தவுடன்
பயத்தில் உறைந்து நின்றாள் முல்லை.

அந்த நாய்,
அவளின் கண்களை நேராக முறைத்துப் பார்த்தது.

நாயை பார்த்தவள்,“அண்ணா.”
என்று நடுங்கும் குரலில்
மாறனை அழைத்தாள் முல்லை.

அதே நொடியில்
கீழே அமர்ந்திருந்த நாய்
முல்லையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தது.

முல்லைக்கு பயம் உச்சம் தொட,
வந்த வழியே ஓடி,
கதவை சத்தமாக பூட்டிக்கொண்டாள்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே நேரம்
ஈஷாவும் சித்ராவும்
கருப்பு நிற காரில்
அந்த ஊரின் எல்லையைத் தாண்டிக் கொண்டிருந்தனர்.

“மேடம்.
அந்த ஆதிசேஷனுக்கு
உங்க மேல சந்தேகம் வந்திருக்குமா?”
என்று ஈஷா கேட்டாள்.

அவள் கேள்வியைக் கேட்ட சித்ரா,
மெலிதாகச் சிரித்தாள்.

“இந்த மாதிரி அயோக்கியங்களை படைத்த ஆண்டவனுக்கே
இதுவரை நம்ம மேல சந்தேகம் வராத அளவுக்கு
நம்ம சம்பவம் எப்போதும் perfect-ஆ தான் இருந்திருக்கு.
So. யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்ல,”
என்றாள் சித்ரா.

“ஆனா மேடம்.
நேத்து நைட் நடந்த சம்பவத்தை
முல்லை பார்த்ததால
எதாவது பிரச்சனை வருமா?”
என்று ஈஷா கேட்க,
சித்ரா சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

அந்த அமைதியின் அர்த்தம் புரியாமல்,
“வேணும்னா முல்லையை"
என்று ஈஷா சொல்ல தொடங்க,
“அவசியம் இல்லை,”
என்று சித்ரா தட்டிக் கழித்தாள்.

“இல்ல மேடம்.
எதையும் நான் சொல்ல வேண்டியதில்ல.
ஆனா அந்த முல்லையால
நமக்கு பிரச்சனை வரும்னு
எனக்கு தோணுது,”
என்று ஈஷா சொன்னாள்.

சிறிது நேரம் யோசித்த சித்ரா,

“முருகன் அங்கிள் வந்ததும்
அவங்க இங்க இருந்து போயிட போறாங்க.
அவ போனதும்
நமக்கும் அவங்களுக்கும்
எந்த சம்பந்தமும் இருக்கப் போறதில்லை.
அதனால இந்த விஷயத்தை பெருசாக்காம
நம்ம வேற சம்பவத்தை பார்க்கலாம்,”
என்றாள்.

அவள் கையில் இருந்த கடிகாரத்தில்
“Sunil”
என்று இருந்த பெயரை
delete செய்தாள் சித்ரா.

நேற்றைப் போலவே
இன்றும் கார்
இன்னொரு காட்டு பகுதியை அடைந்தது.

அதே சிவப்பு நிற காரில் வந்த
நான்கு பெண்கள்,
இந்த முறை
சுமார் 25 வயது மதிக்கத்தக்க
ஒரு இளைஞனை
தூக்கி வந்து
சித்ரா முன்னே நிறுத்தினர்.

நேற்றைப் போலவே
இன்றும்,
“ஈஷா.”
என்ற சித்ராவின் குரலில்,
அவள் கையில் துப்பாக்கி வந்து சேர்ந்தது.

துப்பாக்கியை வாங்கிய சித்ராங்கி,
முன்னே நின்றிருந்தவனைப் பார்த்து
இதழ்களை வளைத்து சிரித்தாள்.

“ஏய் ஏய்.
என்னை விடு டி.
யாருடி நீ?”
என்று இளைஞன் கத்த,

அவனின் நெற்றி பொட்டில்
துப்பாக்கியை வைத்தாள் சித்ராங்கி.

“ஏய்.
என்னை ஒன்னும் பண்ணிடாத.
நீ யாரு. யாரு நீ?”
என்று மரண பயத்தில்
சுனில் கதற,

“நான் யாருன்னு
என் கையால செத்த
உன் அத்த கலாக்கிட்ட
கேட்டு தெரிஞ்சிக்கோ Man,”
என்றாள் சித்ராங்கி.

“அத்த.
அப்போ என் அத்தையை
நீ தான் கொலை பண்ணியா?”
என்று சுனில் கேட்க,
புருவம் உயர்த்திய சித்ராங்கி,
“Yes. it’s me,”
என்றாள்.

“ஏய்.
உன்ன என் அப்பா சும்மா விட மாட்டாரு.
ஏன் என் அத்தையை கொலை பண்ண?”
என்று அவன் கேட்க,

“உன் அத்தையை மட்டும் இல்ல கண்ணா..
உன்னையும் நான் தான்
கொலை பண்ண போறேன்,”
என்று சொன்ன சித்ராங்கி,
நெற்றியில் இருந்த துப்பாக்கியை
மெல்ல மெல்ல
அவனின் இடுப்புக்கு கீழே இறக்கினாள்.

சித்ராங்கியின் செயலில் “NO....." என்று சுனில் கத்த.....

"🅡︎🅔︎🅢︎🅣︎🄸🄽🅟︎🅔︎🅐︎🅒︎🅔︎"
என்று சொன்னவள்
trigger-ஐ அழுத்திய
அடுத்த நொடி, குண்டடிப்பட்டு
சுனில் சுருண்டு
கீழே விழுந்து மடிந்தான்.

ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுனிலை பார்த்துக் கொண்டிருந்த
சித்ராங்கியுடன் சேர்ந்து
அங்கிருந்த மற்ற ஐந்து பெண்களின் கண்களிலும்
ஒரு வித நிம்மதி மின்னியது.

— தொடரும் 🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top