• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 5, 2025
Messages
21
பகுதி-9

கதிர்வேலனின் அணைப்பில் இருக்கும் முல்லையின் அஞ்சன விழிகளில் KM🌹என்ற எழுத்துக்கள் தான் தெரிந்தது.
'சொல்லுடி செல்லம்! இப்போவாது உனக்கு இந்த மாமன் காதல் புரியுதா!' என்று கதிர்வேலன் கேட்க,
"டேய் டேய் கதிரு என்னடா பண்ற' என்று தலைத்தெரிக்க ஓடி வந்த நாகராஜன், தன் நண்பனை தன் வசம் இழுத்தான்.
நாகா இழுத்த வேகத்தில்,'ஏன்டா பாவிங்களா! என் காதலிக்கிட்ட இருந்து என்னை பிரிக்கறீங்க!' என்று கத்தியப்படி நிலை தடுமாறி கீழே விழ போன கதிர்வேலனை முல்லையே தாங்கி பிடித்துக்கொள்ள,
'ஐயோ முல்லை! நான்னு நினைத்து தான் மாமா உன்கிட்ட இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்காரு, நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத' என்று மீனா சொல்ல,
எப்படியோ மீனாவே தப்பாக புரிந்துகொண்டு,சரியாக சூழ்நிலையை சமாளித்தவளை பார்த்து ரோஜாவுக்கு போன உயிர் அப்போது தான் திரும்ப வந்தது.
மின்சாரம் தடைப்பட்ட காரணத்தால் தான் ஆள் மாறி மீனா என்று எண்ணி முல்லையிடம் கதிர்வேலன் காதல் வசனம் பேசினார் என்று நினைத்த முல்லையுடன் மீனாவும் இருட்டில் நின்றுக் கொண்டு இருக்க,
'மாமா... ஏன் மாமா குடிச்சு குடிச்சு உன் உடம்ப நீயே இப்படி கெடுத்துக்குற' என்று மீனா உண்மையான காதலுடன் கதிர்வேலனை பார்த்து சஞ்சலம் அடைந்தாள்.
இருளின் கருமையை அகற்ற நாகராஜன் மெழுகு வத்தியை எடுத்துக்கொண்டு இவர்கள் அருகே வர,
'ஏய் கஸு... நீ ஏன் இங்க வந்த!?' என்று மீனாவை பார்த்து குடிப்போதையில் கேட்டார் கதிர்வேலன்.
'என்ன கஸுவா!? யாரு மாமா கஸு!?' என்று மீனா கேட்க,
'நீ தானே கஸ்தூரி அத்த!... அப்போ நீ தான் கஸு' என்று மீனாவை கஸ்தூரியாக நினைத்து புலம்ப ஆரம்பித்து இருந்தார் கதிர்வேலன்.
'ஏன் கதிரு! மீனா அம்மா கஸ்தூரியை கஸுன்னு கூப்பிடுற, அப்போ முல்லை சித்தி பார்வதியை பசுன்னு கூப்பிடுவியா!?' என்று நாகராஜன் கேட்க,
'வாவ்!! வாட் a sense of humour நாகா உனக்கு' என்று கை தட்டி சிரித்த கதிர்வேலனுக்கு மற்ற நாளை விடவே இன்று போதை அதிகமாகி இருக்கிறது என்று ரோஜா அறிந்துகொண்டாள்..
'என்ன ரோஜா இது! ஏன் மாமா சார் இப்படி குடிக்கிறாரு. இவரு இப்படி எல்லாம் பண்ணா மீனாவை இவருக்கு கல்யாணம் பண்ணி தர கஸ்தூரி சித்தி எப்படி சம்மதிப்பாங்க!?' என்று முல்லை கவலையாக கேட்டதும், மீனா மேலும் கண்கள் கலங்கினாள்.
'ஹே... அவங்க யாரு எனக்கு கல்யாணம் பண்ணி தர, நான் நினைச்சா இப்போவே... இப்போ.... இப்போவே உன் கழுத்துல தாலி கட்டுறேன் பார்க்குறியா!' என்று கதிர்வேலன் முல்லையை பார்த்து கேட்கும் கேள்விகள் எல்லாம் மீனாவிடம் அவர் பேசியதாக காட்சிகள் அமைய,
'பார்த்தியா முல்ல... என் மாமாவுக்கு என் மேல உள்ளுக்குள்ள நிறைய பாசம் இருக்க தான் செய்யுது' என்ற மீனாவின் முகத்தில் அப்போது தான் புன்னகை பூத்தது.
கதிர்வேலன் இன்று அளவுக்கு அதிகமாக குடித்ததால், தன்னிலை மறந்து பிரச்சனை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணிய ரோஜா,
யாரும் தன் இளைய அண்ணனை இந்த நிலையில் காணக்கூடாது என்று நினைத்தவள், எப்படியாவது கதிர்வேலனை நாகராஜனின் வீட்டில் உறங்க வைக்க முயற்சி செய்தாள்.
ஆனால் கதிர்வேலனோ யார் பேச்சையும் கேட்கமால் மேலும் குடித்துவிட்டு பிரச்சனை செய்துக்கொண்டு இருக்க,'மாமா! ஏன் மாமா இப்படி பண்றிங்க! நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாத கவலையில தானே இப்படி குடிக்கிறிங்க! கவலை படாதீங்க மாமா, என் உயிரை கொடுத்தாவது நான் நம்ம கல்யாணத்தை நடக்க வைப்பேன்' என்றாள் மீனா.
'வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்!! நீ உயிரை கொடுத்தா உனக்கு எப்படி டி கல்யாணம் நடக்கும் மக்கு மீனா!' என்று கதிர்வேலன் மேலும் தள்ளாடிய நிலையில் கேட்க,
'ஆமா இல்ல! சாரி மாமா... நான் எப்பாடு பட்டாவது நம்ம கல்யாணத்தை நடத்த என் அம்மாவை சம்மதிக்க வைக்கிறேன்' என்று மீனா சொல்ல,
'அதெல்லாம் நீ ஒரு புண்ணாக்கும் பண்ண வேண்டாம், காலையில நீ பண்ண வேலைக்கே உன் மேல நான் கொலை கடுப்புல இருக்கேன், ஒழுங்கா இங்க இருந்து ஓடிப் போயிடு' என்று மீனா விஷம் குடித்த நிகழ்வை நினைவில் கொண்டு கதிர்வேலன் கோபத்துடன் அவளை வசைப்பாடிக்கொண்டு இருந்தார்.
கதிர்வேலன் திட்டியதும் மீனா மேலும் கண்கள் கலங்க,'அழாத மீனா! ஆனாலும் நீ பண்ண தப்புக்கு தானே மாமா சார் உன்னை திட்டுறாரு, இனிமே அப்படி பண்ண மாட்டேன்னு சொல்லி! இந்த வாழையிலை அல்வாவை அவருக்கு கொடுத்துடு' என்றாள் முல்லை.
முல்லையின் வார்த்தையை கேட்ட மீனா, தன் கண்ணீரை துடித்துக்கொண்டவள்,'சாரி மாமா! இனிமே நான் இந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன், சரி இந்தாங்க அல்வா சாப்பிடுங்க' என்று மீனா சொல்ல,'என்ன அல்வா வா!?' என்று புருவத்தை உயர்தினார் கதிர்வேலன்.
'ம்... அல்வா தான். முல்லை தான் பண்ணிக்கொடுத்தாள். சாப்பிடுங்க' என்று மீனா தன் கையில் இருந்த இனிப்பை கதிர்வேலனிடம் நீட்ட,
'அவ தான் எனக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடியே அல்வா கொடுத்துட்டாளே!' என்ற கதிர்வேலன்,
'இனி யார் கொடுக்குற அல்வாவும் எனக்கு வேணா! நீங்களே எல்லா அல்வாவையும் சாப்பிடுங்க' என்று புலம்பியாவரே, நாகராஜனின் வீட்டில் உள்ள சின்ன கட்டிலில் அபப்டியே சரிந்து விழ, அதே சமயம் மின்சாரமும் ஒளிர்ந்தது.
வெளிச்சம் வந்ததை கூட அறியாமல் கதிர்வேலன் அதித மது போதையில் மயங்கி இருக்க,
' மீனா! நீங்க ஏன் இங்க வந்திங்க? முதல்ல நீங்க வீட்டுக்கு போங்க' என்று கண்டிப்பான குரலில் சொன்ன ரோஜாவிற்கு தன் இளைய அண்ணனை இந்த நிலையில் அவர்கள் பார்ப்பது பிடிக்காமல் போனது.
'மீனா நீ வா நம்ம போகலாம்' என்ற முல்லை மயங்கி இருந்த கதிர்வேலனை கேள்வியாகவே பார்த்தப்படி அங்கிருந்து வெளியேற, முல்லையை தொடர்ந்து மீனாவும் கண்கள் கலங்கிய நிலையில் வெளியேறி இருந்தாள்.
மீனாவும் முல்லையும் சென்றதும்,'நாகா, வாத்தியை தூக்கி உக்கார வையுங்க' என்றவள், தன் அண்ணனுக்கே அவளே இரவு உணவை ஊட்டி விட,
'இவருக்கு யார் இவ்வளவு சாராயத்தை வாங்கி கொடுத்தாங்க' என்று கோவமாக கேட்டாள்.
'யார் வாங்கி தரணும்! அதான் வீரன் சூரன்னு மூலை மூலைக்கு கடையில சாராயம் விக்கறாங்களே! உங்க அண்ணனுக்கு போய் வாங்கிக்க தெரியாதாக்கும்!' என்று நாகா அலுப்பாக சொல்ல,
'இவரை குடிக்க வைத்து நீங்க வேடிக்கை பாக்குறீங்களா' என்று கோவமாக கேட்டாள் ரோஜா.
'ஹையோ சின்னமா! ஆமா ஆமா உங்க அண்ணன் குழந்தை பாருங்க நான் அவரை குடிக்க வச்சி வேடிக்கை பார்க்க' என்று நாகராஜன் கிண்டலான தோரணையில் பதில் கொடுக்க,
'விடியட்டும் உங்க நண்பனுக்கு இருக்கு கச்சேரி' என்ற ரோஜா மயக்கத்தில் உறங்கிக்கொண்டு இருக்கும் தன் அண்ணனை முறைத்த வண்ணமாக நாகராஜனின் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தாள்.
**************
ரோஜா, முல்லை, மீனா என்று மூவரும் ஒரே அறையில் ஒன்றாக படுத்து இருக்க,
'முல்ல... இன்னைக்கு கதிர் மாமா உன்கிட்ட அப்படி பேசுனதை எல்லாம் ஜீவா மாமாகிட்ட நீ சொல்லிடாத' என்று கெஞ்சும் குரலில் கேட்டுக்கொண்டாள் மீனா.
'ஏன் மீனா! இதெல்லாம் நீ எனக்கு சொல்லனுமா என்ன! நான் அதெல்லாம் ஜீவா மாமாகிட்ட சொல்ல மாட்டேன்' என்று முல்லை சொல்ல,
'நாளைக்கு வேற அம்மா வந்து என்ன லந்து பண்ண போன போகுதோ' என்று கவலையாக சொன்னாள் மீனா.
'அதெல்லாம் கவலைப்படாத மீனா! நாளைக்கு கஸ்தூரி அத்த வந்தா ஐயன் அவங்ககிட்ட நல்ல முறையில பேசி உன்னை இந்த வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு வருவாரு' என்று ரோஜா சொல்ல,
இவர்கள் பேசும் வார்த்தையில் கவனத்தை செலுத்திடாத முல்லை,கழுத்தில் இருக்கும் இதய வடிவிலான சங்கிலியை தன் கைக்கொண்டு சுற்றியப்படியே ஆழ்ந்த யோசனையில் முழுகி இருந்தாள்.
'என்ன முல்ல... என்ன யோசனை' என்று மீனா கேட்க,
'அப்பா எப்படி இருப்பாருனு தெரியல' என்று கவலையாக முல்லை சொல்ல,
'மாமாவுக்கு ஒரு நாள் அவங்களை பற்றி எல்லாம் தெரிய வரும் முல்லை. அப்போ அவரே உன்கிட்ட வந்து பேசுவாரு' என்று முல்லையை சமாதானம் செய்தாள் ரோஜா.
இவர்கள் மூவரும் ஒன்றாக பேசியப்படியே படுத்து இருக்க, 'ஆமா ரோஜா, அந்த ஒத்த செருப்பு எப்படி இருக்கான்' என்று சம்மதமே இல்லாமல் கேட்டாள் மீனா.
'என்ன ஒத்த செருப்பா! யாரு டி அது' என்று முல்லை கேட்க,'அவன் ஒரு விளங்காதவன் முல்ல, நம்ம ரோஜா கோவிலுக்கு போகும் போதும் வரும் போதும் நான் உன்னை காதலிக்கிறேன் என்னை கல்யாணம் பண்ணிக்குறியான்னு கேட்டு ரோஜாவை இம்சை பண்ணுவான்' என்றாள் மீனா.
'சரி... அது என்ன ஒத்த செருப்புனு ஒரு பேர்!?' என்று முல்லை சந்தேகமாக கேட்க,
'நம்ம ரோஜா கோவில் போகும் போது, அவ ஒரு கால் செருப்பை இவன் களவாடிக்கிட்டு போயிட்டான், அதான் அவனுக்கு அந்த பேர்' என்று சொல்லி மீனா வாய்விட்டு சிரிக்க,
'அடப்பாவி, அந்த ஒரு கால் செருப்பை வச்சி அவன் என்ன பண்ண போறான்' என்று கேட்டு முல்லையும் அழகாய் சிரித்துக்கொண்டாள்.
இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து சிரித்து இருக்க, இப்போது ரோஜா ஆழ்ந்த சிந்தனையில் முழுகி இருந்தாள்.
'என்ன ரோஜா! என்னடி ஆச்சு?!' என்று அவளின் மாற்றத்தை பார்த்த முல்லை விசாரிக்க,'என்ன ரோஜா! அந்த ஒத்த செருப்பை உனக்கு பிடித்து இருக்கா' என்று போட்டு வாங்கினாள் மீனா.
'அப்படியா ரோஜா! உனக்கு அவரை பிடித்து இருக்கா! நாங்க வேணும்னா மாமாகிட்ட பேசி உனக்கு அவர்கூட கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணவா!?' என்று முல்லை கேட்க,
'என் பிரச்சனை தெரிந்தால் ஒத்த செருப்பா இருந்தாலும் சரி,ஒத்த காது கம்மலா இருந்தாலும் சரி, யாரும் என்னை கல்யாணம் பண்ண முன் வர மாட்டாங்க' என்ற ரோஜா, வேறு பக்கம் திரும்பி படுத்துக்கொண்டவளை பாவமாக பார்த்தார்கள் மீனாவும் முல்லையும்.
'என்ன முல்ல இவ இப்படி சொல்லுறா' என்று ரோஜாவை சுட்டிகாட்டி மீனா கேட்க,
'நம்ம தான் ரொம்ப பேசிட்டோமோ? ஆமா ரோஜா இப்போ எல்லாம் கோவிலுக்கு போகிறாளா!?' என்று முல்லை கேட்க,
'பூஜை நடக்காத சமயம் மட்டும் போய் விளக்கு போட்டுட்டு வந்துடுவாள்' என்று மீனா சொன்னாள்.
மீனாவும் முல்லையும் மாறி மாறி ரோஜாவை நினைத்து வருத்தம்க் கொண்டு இருக்க,
'இங்க பாருங்க! என் பிரச்சனையை நினைத்து எனக்கு எந்த கவலையும் இல்லை, என்னை நினைத்து நீங்க கவலை படாமல்,ஒழுங்கா படுத்து தூங்குங்க.நாளைக்கு வெள்ளன எந்திரிக்கணும்' என்ற ரோஜா மீண்டும் கண்களை மூடிக்கொள்ள,
மீனாவும் முல்லையும் அவளுடனே சேர்ந்து அதே கட்டில் படுத்துக் கொண்டார்கள்.
 
New member
Joined
Dec 5, 2025
Messages
21
மறுநாள் காலை ஐந்து மணி அளவில் முல்லை முதல் ஆளாக எழுந்து தலைக்கு குளித்து, மஞ்சள் பூசி,பச்சை நிற தாவணி அணிந்து,குளியல் அறையில் இருந்து வெளியே வர,'குட் மார்னிங் முல்லை' என்றாள் ரோஜா.
'குட் மார்னிங் ரோஜா' என்று சிரித்த முகத்துடன் காலை வணக்கத்தை சொன்ன முல்லையின் முகத்தில் புன்னகை பூத்து இருக்க,'நான் போய் குளிச்சிட்டு வரேன், மீனா தூங்கட்டும்' என்றாள் ரோஜா.
இவர்கள் இருவரும் எழுந்த பிறகும் மீனா ஆழ்ந்தஉறக்கத்தில் இருக்க, பாண்டியன் வீட்டின் அடுப்பணையில் பாத்திரங்கள் உருட்டும் சத்தம் கேட்டு கூந்தலில் ஈர துணியை சுற்றிக்கொண்டே சமயமலைறையை முல்லை எட்டிப் பார்த்தாள்.
வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி அணிந்து, இடுப்பில் சிவப்பு நிற துண்டைக் கட்டிக்கொண்டு நெற்றியில் பட்டையும் கழுத்தில் கொட்டையுமாக கதிர்வேலன் அனைவருக்கும் குளம்பியை தயார் செய்துக்கொண்டு இருக்க,
நேற்று இரவு பார்த்த கதிர்வேலனுக்கும் இப்போது முல்லை கண் எதிரே பார்க்கும் கதிர்வேலனுக்கும் எத்தனை வித்தியாசம் என்று ஆச்சிரியமாக பார்த்துக்கொமண்டு இருந்தாள் முல்லை.
பத்தே நிமிடத்தில் அனைவருக்கும் குளம்பியை தயார் செய்த கதிர்வேலன் அதை சூடான குவளையில் ஊற்றிக்கொண்டு இருக்க,'என்ன முல்ல சமையலறை வாசலில் நின்னுகிட்டு என்ன பண்ணுற!?' என்று தன் ஈர கேசத்தை துடைத்துக்கொண்டே கேள்வியை எழுப்பினார் ஜீவானந்தம்.
தன் அண்ணனின் குரலைக் கேட்டு வாசலையை பார்த்த கதிர்வேலனின் முன்னே நின்று இருந்த முல்லையை! பார்த்தும் பார்க்காததை போல இருந்த கதிர்வேலன்,
'அண்ணா காபி எடுத்துக்கோ' என்றவாரு சமையலறை மேடையில் எகிறி அமர்ந்து அவரும் தன்னுடைய தேநீரை பருக ஆரம்பித்தார்.
'வா முல்லை நீயும் காபி எடுத்துக்கோ' என்று ஜீவானந்தம் சொல்ல,'அண்ணா... முல்லைக்கு காபி பிடிக்காது, அவளுக்கு டீ போட்டு இன்னொரு பிளாஸ்க்ல வச்சி இருக்கேன்' என்று கதிர்வேலன் சொன்னதும்,
'உனக்கு காபி பிடிக்காத முல்லை!' என்று ஆச்சிரியமாக கேட்டார் ஜீவானந்தம்.
'ஆமா மாமா! காபி பிடிக்காதுன்னு சொல்லுறத விட அதை குடிச்சா நெஞ்சு கரிச்சிகிட்டு வரும்' என்ற முல்லைக்கு தன்னைப் பற்றி கதிர்வேலன் அறிந்து வைத்து இருப்பது சின்ன ஆச்சிரியத்தை கொடுத்தது.
'பரவாயில்லையே! ரோஜாவுக்கு அடுத்து என் தம்பிக்கும் உனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சு இருக்கே!' என்று ஜீவானந்தம் பெருமையாக பேச,
'மாமா... அப்போ எனக்கு பிடிக்கும்னு உங்களுக்கு தெரியுமா மாமா?' என்று கேட்டுக்கொண்டே மீனா சமையலறைக்குள் வந்தாள்.
மீனா வரும் வரை இயல்பாக இருந்த கதிர்வேலனின் முகம் சட்டென்று காற்று போன பலூனை போல சுருங்கி போக,'ஏன் மாமா! என் மேல கோவமா!' என்ற மீனாவின் குரலில் கவலை நிறைந்து இருந்தது.
மீனாவின் சோகமான முகத்தை பார்த்து ஜீவாவுக்கே பாவமாக இருக்க,'டேய்... பாவம் டா மீனா, அவகூட பேசு' என்ற ஜீவானந்தம், 'முல்லை நீ வா நம்ம ஹாலுக்கு போகலாம்' என்றவாறு முல்லையின் கையை பிடித்து அங்கிருந்து அழைத்து செல்வதை பார்த்த கதிர்வேலன் பெருமூச்சை எடுத்துக்கொண்டார்.
'என்ன கதிர் மாமா! என் மேல கோவமா!?' என்று மீண்டும் மீனா கேட்க,
'பின்ன! நேத்து மட்டும் உனக்கு எதாவது ஆகியிருந்தா, குடும்பத்தோட நாங்க எல்லாம் உள்ள போய் இருப்போம்' என்று கோவமாக பேசும் கதிர்வேலனை பார்த்து மீனாவுக்கு மேலும் அழுகை வந்தது.
'தப்பு தான் மாமா! இனிமே நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன், ஆனா மறுபடியும் நீங்க எனக்கு இல்லை என்ற நிலைமை எனக்கு வந்தா கண்டிப்பா நான் என் உயிரை' என்று மீனா சொல்லி முடிக்கும் முன்னே, அருகே இருந்த கண்ணாடி குவளையை தூக்கி கீழே போட்டு உடைத்து இருந்தார் கதிர்வேலன்.
கதிர்வேலனின் செயலில் மீனா ஸ்தம்பித்து போனவள்,'மாமா...' என்று மேலும் பேசும் முன்னே,
'அடுத்து ஒரு முறை உயிரை தரேன், ஊறுகாயை தரேன்னு என் முன்னாடி பேசினேனு வையென், என்னோட இன்னோர் முகத்தை நீ பார்க்க வேண்டியது இருக்கும்' என்று ஆள் காட்டி விரலை நீட்டி மீனாவை எச்சரித்த கதிர்வேலன் அதே கோவத்தோடு அடுப்பணையில் இருந்து வெளியேறியவரை ரோஜா ஓரமாக நின்றுக் கொண்டு கவனித்து இருந்தாள்.
கதிர்வேலன் தன்னை கண்டித்து பேசிய அணைத்து வார்த்தையும், மீனா மீது உள்ள அன்பினால் மட்டுமே என்று நினைத்த மீனாவுக்கு மேலும் மேலும் கதிர்வேலனை எப்படியாவது மனம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தோன்றிய வண்ணமாகவே இருந்தது.
சமையலறையில் இருந்து கோவமாக வெளியேறிய கதிர்வேலன், வழியில் நின்று இருந்த ரோஜாவை பார்த்து, தன் மனநிலையை மாற்றிகொண்டவாறு,
'குட் மார்னிங் அம்மா' என்று சிரித்த முகத்துடன் பவ்யாமாக பேச, ரோஜாவோ தன் அண்ணன் பேசியதை காதில் வாங்காதப்படி சமையலறைக்குள் சென்று காலை உணவை தயார் செய்ய ஆரம்பித்தாள்.
நேற்றைய தினம் கதிர்வேலன் மதுப்பானத்தை குடித்ததால் தான் இன்று தன் தங்கை அவரிடம் பேச வில்லை என்று அறிந்துகொண்ட கதிர்வேலன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியே வந்தவரை,
'கதிரு... இன்னைக்கு எங்கேயும் வெளியே போகாதே. வக்கீலை வீட்டுக்கு வர சொல்லி இருக்கேன்' என்றார் பாண்டியன்.
******************
வீட்டில் உள்ள அனைவரும் காலை உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு க்கொண்டு இருக்கும் வேளையில் இயல்பாக கதிர்வேலன் தன் தங்கையான ரோஜாவிடம் பேச்சு கொடுத்தாலும் அவள் அவரிடம் பதில் பேசாமல் இருந்தாள்.
அனைவரும் காலை உணவை சாப்பிட்டு முடிக்கும் நேரம்,'மீனா...' என்று வெண்கல குரலில் தன் மகளின் பெயரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தார் கஸ்தூரி.
தன் அம்மாவை பார்த்ததும், இனி இவள் என்ன பிரச்சனை பண்ண காத்து இருக்காளோ! என்று மீனா பயந்தவளாக கதிர்வேலனை பார்க்க, அவரோ தன் அலைபேசியை தடவியப்படி எதையும் கண்டுகொள்ளாமல் நின்று இருந்தார்.
'ஏன் மீனா! உனக்கு ஒன்னும் ஆகல தானே! விஷம் எல்லாம் முரிஞ்சு போச்சு தானே!' என்று கஸ்தூரி தன் மகளை நலம் விசாரிக்க,
'என்ன மாப்புளைங்களா... ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க' என்ற விசாரிப்புடன் பாண்டியனின் வீட்டுக்குள் நுழைந்தார் மீனாவின் அப்பா ஜெகதிஷ்.
'வாங்க மச்சான், எப்படி இருக்கீங்க?' என்று பாண்டியன் குசலம் விசாரிக்க,'உங்க தங்கச்சியை கட்டிகிட்ட பின்னாடி நான் எப்படி நல்லா இருக்க முடியும்' என்று ஜெகா கேட்டதும், 'ஆமா ஆமா! நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீங்க சொல்லுங்க' என்று முகத்தை கோவமாக திருப்பிகொண்டார் கஸ்தூரி.
'சித்தப்பா... எப்படி இருக்கீங்க' என்று ஜெகாவை முல்லை நலம் விசாரிக்க,'அடடே... யார் அது முல்லையா!? எப்படி மா இருக்க?' என்று பதிலுக்கு நலம் விசாரிக்கும் ஜெகாவிற்கு முல்லை மீது அன்பும் அக்கறையும் இருக்க தான் செய்தது.
முல்லையை பார்த்ததும் கஸ்தூரியின் முகம் அஷ்ட்ட கோணலாக மாறிப்போக, அதே தருணம் வக்கீல் வாசுதேவன் இவர்கள் வீட்டுக்குள் நுழைந்தார்.
'என்னடி மீனா! ஏன் வக்கீல் வராரு!?' என்று கஸ்தூரி கேட்க,'ம்... உன்கிட்ட இருந்து எனக்கு விடுதலை வாங்கி தர தான் வராரு' என்றார் ஜெகா.
தன் கணவனை அலட்சியமாக முறைத்த கஸ்தூரி,'என்ன அண்ணா...ஏன் வக்கீல் வீட்டுக்கு வந்து இருக்காரு' என்று கேட்க,
'எல்லாம் காரணமாக தான்' என்ற பாண்டியன்,'என்ன வக்கீல் சார், நான் சொன்ன மாதிரியே எல்லா சொதத்தையும் மூன்றாக பிரித்து எழுதிட்டிங்களா?' என்று கேட்டார்.
'எல்லாமே நீங்க சொன்ன மாதிரி தான் எழுதி இருக்கு ஐயா' என்று வக்கீல் சொல்ல,
'ரோஜா இங்க வா மா ' என்று தன் செல்ல மகளை தன் அருகே அழைத்த பாண்டியன் அவரின் முழு சொத்தையும் மூன்றாக பிரித்து எழுதியவர், அதில் ஒரு பங்கை ரோஜாவின் கையில் ஒப்படைக்க, மீதம் இரண்டு பாகத்தையும் ஜீவானந்தம் மற்றும் கதிர்வேலனின் கைகளில் ஒப்படைத்தார்.
'அப்பா... எனக்கு இந்த சொத்து சுகமெல்லாம் வேண்டாம், இதையும் நீங்க அம்மா பேர்லயே எழுதிக்கொடுங்க' என்று கதிர்வேலன் சொல்ல,
'ஆமா அப்பா! எனக்கும் இந்த சொத்து எல்லாம் வேண்டாம், இதையும் ரோஜா பேர்லயே எழுதி வச்சிடுங்க' என்ற ஜீவானந்தம் தன் கையில் இருந்த பத்திரத்தை அவர் தந்தையிடமே திருப்பிக் கொடுத்தார்.
தன் மகன்கள் இருவரும் அவர்களின் தங்கை மீது வைத்துள்ள பாசத்தை எண்ணி பாண்டியன் மனதிற்குள் பெருமிதம் கொள்ள,'என்ன இது யாருமே சொத்து வேண்டாமுன்னு சொல்லுறீங்க! பரவாயில்லையே! என் மச்சான் உங்கள நல்லா தான் வளர்த்து இருக்காரு' என்று ஜெகா பாண்டியனின் மகன்களை பார்ட்டினார்.
கதிர்வேலன் சொன்னது போலவே, ஜீவானந்தனும் சொத்து சுகமெல்லாம் வேண்டாம் என்று சொன்னதை நினைத்து முல்லையும் மகிழ்ச்சி அடைய,
'ஏன் பா கதிரு...ஜீவா சொத்து வேண்டாமுன்னு சொன்னால் கூட அவரு அடுத்த பஞ்சாயத்து தலைவராகி, டாப்புக்கு வந்துடுவாரு,
ஆனா நீ சொத்து வேண்டாமுன்னு சொல்லுறியே! அப்புறம் சோத்துக்கு என்ன கம்பு சுத்தி நடு ரோட்டுல பிச்சை எடுக்க போறியா!' என்று கஸ்தூரி இழுவையாக பேசி கதிர்வேலனை சபையில் அசிங்கப்படுத்தி கழகத்தை ஆரம்பிக்க அஸ்திவாரம் போட்டார்.
தன் தம்பியை பற்றி தலைக்குறவாக பேசும் கஸ்தூரியை பார்த்து ஜீவானந்தம் முறைக்க, தன் இளைய அண்ணனை அசிங்க படுத்தும் அத்தையை திட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ரோஜா பேசும் முன்னே,
'உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதமே இல்லையா சித்தி! இப்படியா சபையில மாமா சாரை அசிங்கப்படுத்துற மாதிரி பேசுவீங்க' என்று முல்லை முதல் ஆளாக கதிர்வேலனுக்காக பரிந்து பேசுவதை பார்த்து ஜீவானந்தம், பாண்டியன், ரோஜா ஏன் மீனா முதற்கொண்டு சரி என்ற ரீதியில் பார்த்து இருக்க,கதிர்வேலனோ முல்லையை ஆச்சிரியமாக பார்த்தார்.
'நீ என்னடி என்கிட்ட எகிறிக்கிட்டு வர! அப்படி என்னத்த நான் தப்பா சொல்லிட்டேன், இந்த கதிரு தான் மூக்கு முட்ட குடிச்சிட்டு வேலை வெட்டிக்கு போகாம கம்ப தூக்கிட்டு சுத்திகிட்டு இருக்கானே' என்று கஸ்தூரி சொல்ல,
'அதெல்லாம் கல்யாணம் முடிந்தா மாமா சார் சரியாகிடிவாரு' என்றாள் முல்லை.
'ஆமா... உனக்கும் ஜீவாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறதா சொல்லி தான் என் அண்ணன் ஜீவாவுக்கு மீனாவை வேணான்னு சொன்னாரு,
ஆனா நீ என்னமோ ஜீவாவை விட்டுட்டு இந்த வெட்டி பையன் கதிருக்கு சப்போர்ட் பண்ணி எங்கிட்ட சண்டைக்கு வரியே! என்ன டி? என்ன விஷயம்!' என்று கஸ்தூரி கேட்க,
'இதுல என்ன விஷயம் இருக்கு, ஏன் மாமா சாரை நீங்க தப்பா பேசினால் எனக்கு கேட்க உரிமை இல்லையா?' என்று தைரியமாக கேட்டாள் முல்லை.
சபைக்கு நடுவே கஸ்தூரியை எதிர்த்து பேசிய முல்லையை பார்த்து அலட்சியமாக சிரித்த கஸ்தூரி,'ஓ... அண்ணன் தம்பின்னு இவங்க ரெண்டு பேரையும் கரெக்ட் பண்ணி, ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்க பாக்குறியா!' என்று நாராசமாக பேச,
முல்லையின் கண்கள் சட்டென்று கலங்கியது. முல்லையின் கண்ணீரை பார்த்து கதிர்வேலன் கைகளை மடக்கிக்கொண்டு,'ஏய்... யாரை பார்த்து என்ன பேசுற!' என்று ஒருமையில் கேட்டப்படி கஸ்தூரியின் அருகே செல்ல, அதே நேரம், கஸ்தூரியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை
விழுந்திருந்தது.

🫶என் கதையை படித்து கருத்து தெரிவிக்கும் வாசகர்களுக்கு நன்றி.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top