New member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை.
பகுதி 2.
கதிர்வேலனை மாமா சார் என்று முல்லை அழைத்ததும் ஜீவானந்தம் சிரித்தார்.
'ஐயோ வலிக்குது கதிர்' என சரண்யா மேலும் கண்களை கசக்கியதும்,'அப்போ மரியாதையா கதிர் சாருன்னு கூப்பிடு' என்றார் கதிர்வேலன்.
'ஓகே ஓகே கதிர் சார் என்னை விட்டுடுங்க' என சரண்யா கெஞ்சியதும் தான் கதிர்வேலன் அவளை அடிப்பதை நிறுத்தினார்.
'ஜீவா மாமா! பாவம் சரண்யா அவளை அனுப்ப சொல்லிடுங்க' என முல்லை சொன்னதும், 'சரண்யா நீ கிளம்பு' என்றார் ஜீவானந்தம்.
'அடியே முல்லை... எல்லாம் உன்னால தான். இரு இரு! உனக்கு ஒரு நாள் இருக்கு' என சரண்யா தலையயை தடவிக்கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடினாள்.
'ஏன் டா இப்படி பிரச்சனை பண்ணுற,
சரி இந்தா ரவா லட்டு' என ஜீவா அவர் கையில் இருந்த இனிப்பை கதிர்வேலன் முன்னே நீட்டினார்.
'கொடு கொடு சரக்குக்கு யூஸ் ஆகும்' என இனிப்பை வாங்கி கதிர்வேலன் தன் பேண்ட்டில் வைத்து கொண்டார்.
'முல்ல உனக்கு மறுபடியும் பஸ் எத்தனை மணிக்கு' என ஜீவானந்தம் கேக்க,'4pm மணிக்கு மாமா' என்றாள்.
'அப்போ ஒன்னு பண்ணு! நீ அப்பாவை பார்த்துட்டு உன் வீட்டுக்கு கிளம்பு' என ஜீவானந்தம் சொல்ல,'வேணா மாமா, யாராவது பார்த்துட்டா பிரச்சனை ஆகிடும்' என்றாள் முல்லை.
'இதுக்கே பிரச்சனை வருமுனா அப்புறம் எப்படி நீ எங்க வீட்டுக்கு மருமகளா வர முடியும்?'என கதிர்வேலன் கேட்டதும்,
'அது... அது நான்' என தயங்கினாள் முல்லை.
'டேய் தம்பி! ஏன் டா இப்பவே அதெல்லாம் பேசி முல்லையை பயமுறுத்துற,
முல்லை நீ வா நம்ம வீட்டுக்கு போகலாம்' என அழைத்தார் ஜீவானந்தம்.
தன் மாமனின் பேச்சை மீற முடியாமல் முல்லையும் பாண்டியனின் இல்லத்திற்கு செல்ல சம்மதம் தெரிவித்தாள்.
'அண்ணா... நீ இவள வண்டியில அழைச்சிட்டு போ' என கதிர்வேலன் தன் புல்லட்டில் இருந்து இறங்கி சாவியை ஜீவானந்தத்திடம் நீட்டினார்.
'அப்போ நீ எப்படி டா வீட்டுக்கு வருவ?' என ஜீவானந்தம் கேக்க,'நான் போய் சுந்தரியை பார்த்துட்டு வரேன்' என்ற கதிர்வேலன் தன் பாக்கெட்டில் இருந்த ரவாலட்டை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே அங்கிருந்து சென்றார்.
ஜீவானந்தம் புல்லட்டை ஸ்டார்ட் செய்து தன் அருகே நின்றிருந்த முல்லையை பார்த்து, 'நம்ம வீட்டுக்கு போகலாம்… நீ வந்து உக்காரு' என்றார்.
அந்த நிமிடம், அவளுக்குள் புது ஜீவன் புகுந்தது போல உணர்ந்தவளின் கனவுகள் எல்லாம் கரை ஏற,
புன்னகையுடன் புல்லட்டின் பின்சீட்டில் காதலனின் பின்னால் அமர்ந்தாள் முல்லை.
மூன்று வருடத்திற்கு முன்னே கோவில் திருவிழாவில் முல்லையிடம் 'தவறாக நடக்க முயன்ற பார்வதியின் தம்பி கேசவனிடம் இருந்து உன்னை காப்பாற்றியது என் அண்ணன் தான்'
என்று பாண்டியனின் மகள் ரோஜா சொன்னதில் இருந்து தான் முல்லைக்கு ஜீவானந்ததம் மீது காதல் உணர்வு ஏற்பட்டது.
இது தான் காதல் என்று அறியாத வயதிலேயே முல்லை தன் மாமன் பிள்ளைகள் ஜீவானந்தம் கதிர்வேலன் என்று இருவரிடமும் அன்பாகவே பழகி வந்தாள்.
கதிர்வேலன் கோவக்காரர் என்பதால் அவரிடம் இருந்து சற்று தள்ளி நின்ற முல்லையிடம் ஜீவானந்தம் தான் சகஜமாக பேசி முல்லையை அடிக்கடி தன் வீட்டுக்கு அழைத்து வருவார்.
இரண்டு வருடங்கள் சொந்த ஊருக்கே வராத முல்லையிடம் போனில் மட்டுமே பேசும் ஜீவானந்தம், தன் எல்லை மீறாமல் அன்புடன் மட்டுமே பேசும் தன் மாமனிடம் முல்லை அவள் மனதை பறிகொடுத்து விட்டாள்.
ஜீவானந்ததுக்கும் முல்லை மீது அதிகப்படியான காதல் இருந்த நிலையில் தன் தந்தையின் சம்மததோடு முல்லையை மனமுடிக்க வேண்டும் என்று ஆசைகொண்டார்.
ஜீவானந்தமும் முல்லையும் புல்லட்டில் பாண்டியன் வீட்டுக்கு சென்று இறங்கினார்கள்.
வீட்டு வாசலில் பத்து புள்ளி கோலம் போட்டு நடுவில் சாணம் பிடித்து அதில் பூசணி பூவை வைத்து இருந்தாள் பாண்டியனின் செல்ல புதல்வி ரோஜா.
ரோஜா உள்ளுரில் படிக்கும் 19வயது பெண். படிப்பு நேரம் போக சமையலில் தான் ரோஜாவின் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
முல்லையை உறவு முறையை தாண்டி ரோஜா தன் தோழியாக தான் எண்ணுவாள்.
மொட்டை மாடியில் நின்று இருந்த ரோஜா, ஜீவானந்தம் தன் வீட்டுக்கு முல்லையை அழைத்து வருவதை பார்த்து,
'அப்பா அப்பா...பெரிய அண்ணன் உங்க மருமகளை வீட்டுக்கு அழைச்சிட்டு வராரு' என உற்சாமாக கத்திக்கொண்டே படியில் இருந்து இறங்கி கீழே ஓடி வந்தாள்.
முல்லை என்றால் பாண்டியன் அவர்களுக்கு அதிக பிரியம். அதை ஜீவானந்தமும் அறிந்திருந்தார்.
அதனால் தான் ரெண்டு வருடம் கடந்து முல்லையை தன் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
'உள்ள வா முல்லை' என ஜீவானந்தம் முல்லையின் கையை பிடித்து தான் உள்ளே அழைத்து வந்தார்.
ஜீவானந்ததின் கையை பிடித்து உள்ளே செல்லும் பேதையின் மனதில் வருங்காலத்தில் இப்படியே மருமகள் என்ற உரிமையோடு இதே இல்லத்திற்குள் நுழைய வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
'முல்ல... எப்படி இருக்க? ' என ஆத்மார்த்தமான அன்போடு முல்லையை வரவேற்றார் பாண்டியன்.
'மாமா எப்படி இருக்கீங்க?' என சிரித்த முகத்துடன் தன் தாய் மாமனை நலம் விசாரித்த முல்லையின் இதழ்களில் புன்னகை பூக்க பாண்டியனின் கால்களில் விழுந்து ஆசியை பெற்றுக்கொண்டாள்.
தன் தங்கையின் மறு உருவமான முல்லையை ஆரதழுவி கைகுழந்தையை போல அவள் நெற்றியில் முத்தமிட்டு,'நான் நல்லா இருக்கேன்' என்றார் பாண்டியன்.
'என்ன முல்ல... அப்பாவை பார்த்ததும் என்னை மறந்துட்டியா?' என ரோஜா தன் கையில் இருந்த நீர் குவளையை முல்லை முன்னே நீட்டியதும்,'ஏய் வாலு...அது என்ன முல்லையை பேர் சொல்லி கூப்பிடுற!ஒழுங்கா அண்ணின்னு கூப்பிடு' என்றார் ஜீவானந்தம்.
தன் மகனின் பேச்சில் இருந்தே முல்லையை ஜீவானந்ததுக்கு பிடித்து போன விஷயம் பாண்டியன் அறிந்துகொண்டார்.
'இருக்கட்டும் மாமா, ரோஜா எப்போதும் போலவே என்னை பேர் சொல்லியே கூப்பிடட்டும்' என முல்லை சொன்னதும்,'இப்போ என்ன சொல்ல போற பெரியவனே' என நாக்கை துத்திக்காட்டி தன் அண்ணனை ஒழுங்கு காட்டினாள் ரோஜா.
'நீ வந்து உக்காரு மா. அப்புறம் படிப்பெல்லாம் முடிஞ்சிடுதா? மேற்கொண்டு என்ன பண்ண போறதா உத்தேசம்?'என பாண்டியன் வினாவியதும்,
'வேற என்ன! உடனே உங்க பையனுக்கும் முல்லைக்கும் கல்யாணம் பண்ணி வைத்தால் இவ இப்படியே இங்கன செட்டில் ஆகிட போகிறாள்' என சிரித்தாள் ரோஜா.
தன் மனதில் எழுந்த வார்த்தைகளை ரோஜாவின் வாய்மொழியில் கேட்ட முல்லைக்கு வெட்கம் வந்தது.
முல்லையின் நாணம், அவளது மனம்கவிந்த காதலை பாண்டியனுக்கு வார்த்தைகளில்லாமல் சொல்லும் ஒரு வெளிப்படையான படம் போல இருந்தது.
'அப்போ சீக்கிரமா முறைப்படி உன் அப்பனை பார்த்து பொண்ணு கேட்கட்டுமா' என்று பாண்டியன் கேக்க,
'என்ன அண்ணா! யாரை பொண்ணு கேக்க போற? எங்க போய் பொண்ணு கேக்க போற!' என கேள்வியை எழுப்பிக் கொண்டே தன் மகள் மீனாவை அழைத்துக் கொண்டு கஸ்தூரி தன் அண்ணன் பாண்டியனின் வீட்டிற்குள் உரிமையோடு நுழைந்தார்.
'சித்தி எப்படி இருக்கீங்க?' என முல்லை தன் அம்மாவின் தங்கையை நலம் விசார்த்தவள்,'மீனா!' என்று தன் சகோதரியை அன்பாக கட்டிக்கொண்டாள்.
'முல்ல... உன்ன நான் இங்கன பாப்பேன்னு நினைக்கவே இல்ல. எப்படி முல்ல இருக்க?' என மீனா நலம் விசார்க்க,'நான் நல்லா இருக்கேன் மீனா. சித்தி நீங்க நல்லா இருக்கீகளா' என மீண்டும் முல்லை கேட்டாள்.
'ஏதோ இருக்கோம், ஆனா உன் அளவுக்கு நாங்க நல்ல இல்லை தான்' என கஸ்தூரி வார்த்தைகளின் உக்கிரத்திலும், பார்வையின் தீப்பொறியிலும், முல்லையை பார்த்தாலே கஸ்தூரியின் மனசு கொதிக்கும் என்று பாண்டியன் நன்றாகவே தெரிந்தவனாயிருந்தார்.
'அத்த... இப்போ முல்லை என்ன கேட்டுச்சுனு நீங்க இப்படி வெடிக்கிறிங்க' என ஜீவானந்தம் கேட்டதும்.'ஏன் பா ஆனந்த், பணம் இல்லாத நாங்கெல்லாம் முல்லையை பத்தி பேசவேக் கூடாதா' என விடுக்கென்று கேட்டார் கஸ்தூரி.
'கஸ்தூரி...வந்ததும் வராததுமா ஆரம்பிச்சிடாத! நீ தேவையில்லாததை எல்லாம் பேசி சின்னஞ்சிறுசுங்க மனசுல விஷத்தை விதைக்காதே' என பாண்டியன் தன் தங்கையை கண்டித்ததும்,
'ஆமா...நாங்க தான் விஷத்தை விதைக்கிறோம்' என முணுமுணுத்தப்படி தன் கையில் இருந்த கேசரி டப்பாவை மீனாவிடம் நீட்டிய கஸ்தூரி,
'இந்தாடி...உன் மாமனுக்கு இன்னைக்கு பிறந்தநாள், உன்னை கட்டிக்க போறவனுக்கு நீயே இனிப்பை கொடு' என்றாள்.
குடிகார கணவனுடன் கழித்த துயரமான நாட்கள் கஸ்தூரியின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியிருந்தன.
அந்த வேதனையை தன் மகள் மீனா அனுபவிக்கக் கூடாது என எண்ணி ஜீவானந்தனுடன் மீனாவுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் கஸ்தூரியின் மனதில் உறுதியான இலட்சியமாக மாற்றியது.