Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 97
- Thread Author
- #1
பகுதி - 13
ரகுவின் கேள்வியில் தேவநாதனும் ஜெயந்தியும் திகைப்புடன் அவனைப் பார்க்க, மதுரா வேகமாக தனது சகோதரன் அருகே வந்தமர்ந்து அவனை விசித்திரமாகப் பார்த்தாள்.
"அப்படினா நீங்க முழு மனசோட உங்க பொண்ணை எனக்கு கட்டிக் கொடுப்பீங்களா ஸார்?" என்ற அவனது கேள்வியில்
பெண்ணின் தாயாக ராஜலட்சுமி அதிர்ந்தாலும் அவரது மனம் அவனது தோற்றத்தையும் தோரணையையும் பார்வையால் அளவிட தவறவில்லை. அதைக்கேட்ட ஆதிகேசவன் தான் கொதிப்பில் இருந்தார்.
அதுவரை அவர் கடைபிடித்துவந்த நிதானம் எல்லாம் காற்றோடு காற்றாக, " எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ணை கேட்பீங்க?. இதென்ன பண்ட மாற்று முறையா?" குரலை உயர்த்திக் கேட்டார்.
அவரது கோபத்தைக் கண்டு நிதானமாக இதழ் வளைத்த ரகு, "இப்ப தானே ஸார் நீங்க அந்தஸ்து பேதமெல்லாம் பார்க்கறது இல்லனு பெருந்தன்மையா சொன்னீங்க. அதுக்குள்ள பேச்சு மாறுறீங்களே!" கூலாக வினவினான்.
அவனை முறைத்த கேசவன்," கூடவே என் பிள்ளைகளோட சந்தோஷம்னும் சொன்னேன் ரகு. இவ்ளோஓஓ பெரிய புத்திசாலியா இருக்கற நீங்க அதை மட்டும் கவனிக்கலையா?" மட்டந்தட்டும் விதமாக எதிர்க்கேள்வி கேட்டார்.
தற்போது அவனது புன்னகை பெரிதாக,"அதைத்தான் ஸார் நானும் கேட்கறேன். உங்க பிள்ளைங்க ஆசைப்பட்டா, எதையும் நிறைவேத்தி வைப்பேன்னு சொன்னீங்களே, "
"அதை தெளிவுபடுத்த இப்ப நான் கேட்டா நீங்க அதுக்கு இவ்ளோ கோபப்படுறீங்க. அப்றம் நான் என்னத்த சொல்றது?" தோள்களை குலுக்கி சாதாரணமாகக் கூறினான்.
அங்கிருந்த மற்றவர்கள் ஏதோ பேட்மிண்டன் விளையாட்டைப் பார்ப்பது போல அமைதியாக நடப்பதை கவனிக்க, ரகுவும் கேசவனும் மட்டுமே வார்த்தை விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
ரகுவின் பேச்சில் நிதானத்திற்கு வந்த ஆதிகேசவன், புருவங்கள் சுருங்க அவனைப் பார்த்து, " வாட் டூ யூ மீன்? சொல்ல வந்ததை தெளிவா சொல்லுங்க மிஸ்டர் ரகு." சிறு எரிச்சலுடன் கேட்டார்.
"இல்ல, உங்க பிள்ளைங்க சந்தோஷம் முக்கியம்னு சொன்ன நீங்க, உங்க பொண்ணோட ஆசைய நிறைவேத்தி வைப்பீங்களானு கேட்கறேன்." நேரடியாக ரகு கூறவும், தலைசுற்றியது அவருக்கு.
" என் பொண்ணோட ஆசையா??!" குழப்பமாக வினவிய கேசவன், "அப்படி அவள் எதையாவது ஆசைப்பட்டா அவ அதை சொல்ற முதல் ஆளு நாந்தான்.ஸோ, எனக்கு தெரிஞ்சு என்னோட பொண்ணுக்கு அப்படி எந்த ஆசையும் கிடையாது."
" அப்படியே இருந்தாலும் அவ கண்டிப்பா ஓபனா எங்கிட்ட சொல்ற அளவுக்கு தான் அவங்கள நான் வளர்த்திருக்கேன்." மகள்மீது அதீத நம்பிக்கையில் பெருமையுடன் கூறினார்.
அவரது அறியாமையை எண்ணி இடவலமாக தலையசைத்து சிரித்த ரகு,"ஸார், இந்த மாதிரி விசயத்துல என்னதான் நாம பாசத்தை கொட்டி வளர்த்தாலும், அவங்க சில விசயங்களை சொல்ல மாட்டாங்க." என்றிட மதுவிற்கு சுருக்கென்றானது.
"இப்ப ஏன் இந்த தேவையில்லாத பேச்சு ரகு. நீ என்னதான் சொல்ல வர்ற? அவங்க மதுவைத் தான் பெண் கேட்டு வந்தாங்க. நீ வேற ஏதேதோ பேசிட்டு இருக்க."
தேவையில்லாமல் எதற்கு இந்த பேச்சை வளர்க்க வேண்டும் என்று அதில் பொறுமையிழந்த ஜெயந்தி குறுக்கிட்டு அந்த வாக்குவாதத்தை நிறுத்த முயன்றார்.
" நான் சொல்றதுக்கு என்ன இருக்கு பெரியம்மா? அவங்க பொண்ணை இந்த வீட்டுக்கு கொடுக்கற மாதிரி இருந்தா, மதுவை கொடுக்க எனக்கும் சம்மதம். அவ்ளோ தான்." என்றான் சுலபமாக ஏதோ பொருளை மாற்றுவது போல.
ரகுவின் பேச்சில் சீண்டப்பட்ட ஆதிகேசவன், " லிஸன் ரகு. என் பையனுக்கு மதுவை பிடிச்சிருக்கு. அதனால தான் பெண் கேட்டு வந்தேன். "
"ஆனா என் பொண்ணோட விருப்பம் இல்லாம அவளோட லைஃப்ல நான் எப்படி டெஸிஷன் எடுக்க முடியும்?" அவனுக்கு புரிய வைக்க முயன்றார்.
"உங்க பொண்ணுக்கும் விருப்பம் தான் ஸார். நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம்." விஷமப் புன்னகையுடன் கூறியவன்,
"வேணும்னா அவங்களையே கூப்பிட்டு கேட்டுப் பாருங்க." அசால்டாக சொல்ல, நம்ப முடியாத அதிர்ச்சியில் இருந்த கேசவன் உடனே மகளுக்கு அழைத்து விட்டார்.
எந்த முகாந்திரமும் இல்லாமல், ' நீ எங்க இருந்தாலும் உடனே நான் சொல்ற இடத்துக்கு வா யுவனி' கட்டளையாகக் கூறிவிட்டு அழைப்பை வைத்து விட்டவர், ரகுவை மூக்குடைப்பு செய்யும் முனைப்பில் இருந்தார்.
தேவநாதன் இந்த சூழ்நிலையை எப்படி கையாள, என்று தெரியாமல் அவருக்கு ஏதேதோ சமாதானம் சொன்னபடி இருக்க, மற்றவர்கள் ஒருவித அசௌகர்யத்துடன் அமர்ந்திருக்க, ரகு மட்டும் வெகு சாதாரணமாக இருந்தான்.
சிறிது நேரத்தில் தந்தை சொன்ன முகவரியில் இருந்த ஓரடுக்கு தனி வீட்டிற்கு வந்த யுவனி, குழப்பத்துடன் கேட்டைத் திறந்து உள்ளே வரும் சத்தம் கேட்டு வெளியே வந்த ஆதிகேசவன், எதுவும் கூறாமல் அவளது கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.
கிட்டத்தட்ட அவளது கையைப் பிடித்து இழுத்து வந்த தந்தையின் செயலில் திகைப்பில் இருந்த யுவனி, அங்கே அமர்ந்திருந்த ரகுவையும், அருகில் மதுவையும் கண்டு ஜெர்க்கானாள்.
அவளை நடுநாயகமாக நிறுத்தி, "நான் கேட்கறதுக்கு ஹானஸ்ட்ஆ பதில் சொல்லு யுவனி. இவரை நீ விரும்பறியா?" எடுத்த எடுப்பில் ரகுவை காட்டிக் கேட்டவர்,
" இவர் சொல்றாரு நீங்க ரெண்டு பேரும் விரும்புறீங்கனு அது உண்மையா யுவனி?" தந்தை சொன்னதைக் கேட்டு அவள் குழப்பத்துடன் இல்லையென தலையசைத்தாள்.
மகளின் பதிலில் நிம்மதியானவர் ரகுவை கண்டு ஏளனமாக புன்னகைக்க, "உங்க முன்னாடி சொல்ல பயப்படறாங்க ஸார்." குறுஞ்சிரிப்புடன் கூறிய ரகு,
யுவனிமீது அசையாத பார்வையை வீசியபடி "அவங்க இந்த விசயத்தை உங்கள்ட்ட சொல்லலைனா கூட பரவால்ல ஸார்.ஆனா ஏன் அவர்கிட்ட போய் சொன்னாங்கனு தான் எனக்கு தெரியல." யோசிப்பது போல பாவனையில் சொல்ல யுவனியின் விழிகள் திகைப்பில் விரிந்தன.
அவன் யாரை குறிப்பிடுகிறான் என்பது ரகுவின் குடும்பத்தினருக்கு லேசாக ஏதோ புரிவது போலிருக்க யுவனியின் பதிலுக்காக அவளையே பார்த்தனர்.
'அப்படினா அன்னிக்கு யுவனி இதைச் சொல்லித் தான் அந்த கல்யாணத்தை நிறுத்தினாளா?' ஓரளவு புரிந்து கொண்ட மது குழப்பமாக அவளை பார்த்திருந்தாள்.
ரகுவின் கோபத்தில் திருமணம் நின்று வீடு திரும்பிய பிறகு'நீ அமைதியாக இருந்திருந்தால் அந்த குப்தா யாரு சொல்லி கல்யாணத்தை நிறுத்துனாருனு தெரிஞ்சிருக்கும்' என்று ஜெயந்தி கூறினார்.
ரகுவின் மூளைக்குள் அந்த விசயம் குடைந்து கொண்டே இருக்க, குப்தாவிடம் மீண்டும் பேசுவதற்கு அவனது மனம் ஒப்பவில்லை.
அதனால் அந்த திருமணத்திற்கு புக் செய்திருந்த வீடியோக்ராஃபரிடம் ஃபுட்டேஜ் கேட்க, அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு மெமரி கார்ட் கொடுத்து விட்டான்.
பாவம்! நடக்காத கல்யாணத்திற்கு எதற்கு செலவு என்று குப்தா அவனுக்கு பேசிய பணத்தைக் கொடுக்க இழுத்தடிக்க, ரகுவிடம் அதை கரந்துவிட்டான்.
அதை ஓடவிட்டு மணமேடை தவிர்த்து மீதி இடங்களில் கவர் செய்யப்பட்ட காட்சிகளை ரகு ஆராய, யுவனி குப்தாவுடன் மணமேடை அருகே இருந்த அறைக்குள் சென்றது தெரிந்தது.
அதன் நேரத்தை கணக்கிட்டவன், அவள் போய் பேசிய பிறகுதான் ரகு வேறொரு பெண்ணை காதலிப்பதாக குப்தா கூச்சலிட்டு திருமணம் நின்றது என்பதை உறுதியாக அறிந்து கொண்டான். அப்படி என்றால் அவர் சொன்ன பெண் அவள்தான் என்ற முடிவிற்கு வந்து விட்டான்.
அவள் யாரென்றும் கண்டுபிடித்து விட்டான். தேவையில்லாமல் அத்தனை பேர் முன்னிலையில் தனது பெயரைக் கெடுத்து விட்டாள் என்று அவள் மீது கோபம் வந்தது.
அவளுக்கு ஏதாவது செமத்தியாக செய்ய வேண்டும், அவதூறு வழக்கு எல்லாம் போட்டால் தேவையில்லாத மனவுலைச்சல் மற்றும் மீடியாவின் பேசுபொருளாகும், அதனால் சந்தர்ப்பம் எதிர்பார்த்து இருந்தான்.
தற்போது அவளது பெற்றோர் தானாக வரவும் அவளால் தான் அவர்கள் வந்திருப்பதாக நினைத்திருந்தான். ஆனால் அவர்கள் மதுவை அல்லவா பெண் கேட்டு வந்துள்ளனர்.
அப்படியிருக்க அவள் ஏன் அன்று அப்படி ஒரு பொய்யைக் கூறினாள் என்பதை அறிய அவளது பெற்றோர் முன்னிலையில் அவளை கார்னர் செய்ய நினைத்து வலையை விரித்து விட்டான்.
சில நொடிகள் திகைப்பில் உறைந்திருந்த யுவனி, " என்னை மன்னிச்சிடுங்கப்பா." என்று தொடங்கவும், அன்று செய்த செயலுக்கு அவள் விளக்கம் கூறப்போகிறாள் என்று எதிர்பார்த்திருந்தான் ரகு.
ஆனால், " அவர் சொல்றது உண்மை தான்ப்பா. நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம்." என்றிட, ஆதிகேசவன் நம்ப முடியாத அதிர்வுடன் அவளைப் பார்க்க, அதைவிட அதிகமான அதிர்ச்சியில் இருந்தான் ரகுவம்சி.