• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
87
பகுதி - 10

யுவனின் அழைப்பு என்று தெரிந்த பிறகு மதுராவிற்கு சற்று நடுக்கம் தான். இருப்பினும் எதுவாயினும் சந்தித்து தானே ஆகவேண்டுமென அழைப்பை ஏற்க, எதிர்முனையில் சில நொடிகள் மௌனம்.

பிறகு,"ஸாரி மதுரா மேடம். என்னோட சிஸ்டரை தடுக்க நான் ட்ரை பண்ணுனேன். பட் அவள் எப்படியோ அங்க வந்து உங்க கல்யாணத்தை நிறுத்திட்டாங்க." யுவனின் குத்தலானப் பேச்சில் அவளது விழிகளில் முணுக்கென்று கண்ணீர் உற்பத்தி.

" ப்ளீஸ் யுவன்." அதற்கு மேல் அவளால் பேச முடியாமல் விசும்பத் தொடங்கி விட்டாள். அவனுக்கும் அவளது அழுகை வேதனையளிக்க,

சில நொடிகள் மௌனமாக இருந்தவன், அவளது அழுகையை தாங்க முடியாமல், "எங்கிட்ட உண்மைய சொல்லி இருக்கலாமே ஹனி?." வருத்தமாகக் கேட்டான்.

மது கண்ணீரைத் துடைத்தபடியே, "நான் சொல்லி இருந்தா நீங்க என்ன செய்திருப்பீங்க யுவன்? " எனக் கேட்க, அவளது வீட்டில் வந்து தங்களது காதலைப் பற்றிச் சொல்லி அதை தடுத்திருக்கலாம் என்று சொன்னான் அவன்.

"அதனாலதான் நான் உண்மைய சொல்லலை. உங்ககிட்ட என் அண்ணனைப் பற்றி முதல்லயே சொல்லி இருக்கேன் தானே." என்ற மது,

"சரியானநேரம் வரும்போது வீட்ல பெரியவங்க கிட்ட மெதுவாகப் பேசி, அப்றம் அவங்க மூலமா அண்ணனை கன்வின்ஸ் பண்ணலாம்னு ப்ளான்ல இருந்தேன்."

" ஆனா அண்ணனோட காதல் விசயத்தை நான் எதிர்பார்க்கல. அண்ணாவோட சந்தோஷத்தை இக்னோர் பண்ணிட்டு என்னால சுயநலமா யோசிக்க முடியல." என அவள் முடிக்கவும், அந்த விசயத்தில் யுவனியின் யூகத்தைப் பற்றிக் கூறினான்.

"எனக்கு அது இப்பதான் புரியுது." பெரியப்பாவின் வேலை என்பதை விளக்கிய மதுரா தயக்கத்துடன், "ஐம் ஸாரி யுவன். நான் உங்ககிட்ட ஹார்ஷ்ஆ பேசி இருக்கக்கூடாது." மன்னிப்பு வேண்டினாள்.

அவள் மீது கொண்ட கோபத்தை அப்போதுதான் நினைவு கூர்ந்தவன், "நீ பேசுனதுக்காக எல்லாம் உன்னை நான் வெறுத்துடுவேன்னு எப்படி உன்னால யோசிக்க முடிஞ்சது ஹனி?"

"இத்தனை வருசத்துல நீ என்னை புரிஞ்சு வைச்சிருக்கறது அவ்வளவு தானா!? அதை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு."

வேதனையுடன் கூறியவனின் கோபத்தை உணர்ந்த மதுரா, மெல்லிய குரலில் பேசியபடி யுவனை சமாதானம் செய்து கொண்டிருக்க,

அதேவேளையில் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த ரகுவைக் கண்டு ஒரு நிமிடம் உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் பட்டென்று கைபேசியை மறைக்காமல் இயல்பாகவே இருந்தாள்.

அவளருகே வந்தவன் அவள் கையில் அலைபேசியை பார்த்து, 'ஃபோன் பேசுகிறாயா? ' என்று சைகையில் கேட்க,

"மேரேஜ் நின்னு போனதை பற்றி கேட்டாங்கண்ணா." ரகுவிடம் கூறியவள், "நான் அப்றம் பேசுறேன்." என்றபடி நிதானமாகவே அழைப்பை துண்டித்ததைப் போல பாவனை செய்தாள்.

அலைபேசியை கீழே வைத்த தங்கையின் அருகே மெல்ல வந்து அமர்ந்தவன் அவளது தலையை பாசமாகத் தடவி, " ஸாரிடா குட்டிமா. உனக்கு இந்த மேரேஜ் கால் ஆஃப்ல ஏமாற்றமாத் தான் இருக்கும்." என்று வருந்தினான்.

அவனைப் பொறுத்தவரை அவளாக வந்து தானே அந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறாள். அதனால் வருத்தம் இருக்குமல்லவா!

திடுமென திருமணம் நின்றதில் அவள் மனவருத்தத்துடன் இருப்பாள் என்று தானாகவே கற்பனை செய்து கொண்டவன் அவளிடமும் அதை வெளிப்படுத்தினான்.

" அதெல்லாம் ஒன்னுமில்லண்ணா. உங்களுக்கு இந்த கல்யாணத்துல சந்தோஷம்னு நினைச்சுட்டு, நானும் சம்மதம் சொன்னேன்." தேவநாதன் செய்த குளறுபடியை கூறி அவர்மீது அவனது கோபத்தை திருப்பாமல் பொதுவாகக் கூறினாள்.

தன்மீதான தங்கையின் அன்பை உணர்ந்து நெகிழ்ச்சியுடன் புன்னகைத்தவன், "பெரியப்பா என்னை ரொம்ப இன்ஸிஸ்ட் செய்ததால்தான் 'நீ ஓகே சொன்னா, எனக்கும் ஓகே'னு தட்டிக் கழிக்க நினைச்சேன்டா." என்ற ரகு,

"உங்கிட்ட பேசி எப்படியாவது இதை நிறுத்திடலாம்னு ப்ளான் பண்ணி இருந்தேன்." என்று கண்கள் சிமிட்டி சிரித்தவன்,

"ஆனா நீ பட்டுன்னு வந்து ஓகே சொல்லவும் என்னால எதுவும் செய்ய முடியாமப் போச்சு. ரொம்ப மறுத்துப் பேசுனா பெரியப்பாவை நாம மதிக்காத மாதிரி ஆகிடுமேனு சரி சொல்லிட்டேன். "

"என்ன இருந்தாலும் இத்தனை வருசமா நமக்கு தாயும் தகப்பனுமா இருந்து வளர்த்துனவங்க, அவங்க மனசை நோகச் செய்யக்கூடாதுல." விளக்கிக் கொண்டிருந்தான் ரகு.

இவள் ஓகே சொன்னதாக தமையன் சொன்னதை, லைனில் இருந்தபடி கேட்ட யுவன் அங்கு புசுபுசுவென கோபத்தில் இருந்தான். இனி அதற்கு வேறு அவள் சிறிது நேரம் அவனிடம் விளக்கம் சொல்ல வேண்டும்.

ம்ஹ்ம்ம்! மனதிற்குள் சலித்துக் கொண்டாள். இந்த பெரியப்பாவால் எத்தனை பிரச்சனை என்று அவரை நினைத்து கடுப்பாக இருந்தது மதுராவிற்கு.

சிறிது நேரம் தங்கையிடம் பேச, அவள் இயல்பாக இருப்பதை உணர்ந்த ரகு, " சரி நீ கொஞ்சம் ஓய்வெடுடா. அப்பதான் இதெல்லாம் மைன்டல இருந்து போய் ஃப்ரெஷ்ஆ ஃபீலாகும்." அவளது தோளில் தட்டிவிட்டு வெளியேறினான்.

ரகு சென்றபின் மேலும் சிறிது நேரம் யுவனிடம் பேசி, அதாவது அவனிடம் கெஞ்சிப்பேச அவன் மிஞ்சிப்போக, இவள் முறுக்கிக் கொள்ள அவன் இறங்கிவர என்று ஒருவழியாக சமாதானம் செய்து முடிப்பதற்குள் அவளுக்கு அப்பாடா என்றிருந்தது.

°°°°°°°°°°°°
அதன்பிறகு வந்த நாட்கள் இறக்கை இல்லாமல் பறக்க, மதுராவின் இறுதித் தேர்வுகள் முடிவுற்றது. மூன்றாம் வருடமே கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட்டானவள், பணிக்குச் செல்லத் தயாரானாள்.

யுவ்ராஜ் புதிதாக ஐடி கம்பெனி தொடங்கி ஓரிரு ப்ராஜெக்ட்ஸ் கிடைக்கப் பெற்று, அதில் பிஸியாகி இருப்பதைக் கண்ட பெற்றோருக்கு பெருத்த நிம்மதி.

அவன் எதற்காக அப்படி ஒரு செயலை செய்யத் துணிந்தான் என்பதை ராஜலட்சுமி சமயசந்தர்ப்பம் பார்த்து அவனிடம் விசாரித்தார்.

உண்மையான காரணத்தைக் கூறினால் யுவனி சொன்னதைப் போல தாயும் வேதனையடைவார் என்றெண்ணி அவன் பதில் சொல்லாமல் தட்டிக்கழித்து வர,

" இப்ப அதை தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?. அவன்தான் நார்மலாகிட்டான்ல. அவனுக்கு திரும்பத் திரும்ப அதையே ஞாபகப்படுத்தாதீங்க." என தாயை அதட்டி யுவனியும் சிலசமயம் அதற்கு துணையாக இருந்தாள்.

ஆதிகேசவனுக்கு மகள் அவனுடன் இருப்பதே மிகுந்த நம்பிக்கையாக இருக்க, அதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை. தற்போது இயல்பாக இருப்பவனிடம் அதைக்கேட்டு பழையதை கிளற வேண்டாம் என அமைதியாக இருந்தார்.

மகன் இயல்பாக இருக்கும் போதே அவனுக்கும் யுவனிக்கும் உடனே வரன் பார்த்து திருமணத்தை முடிக்க வேண்டும் என்று ராஜலட்சுமி கணவனிடம் நச்சரிக்கத் தொடங்கி விட்டார்.

அதன் விளைவாக மேட்ரிமோனியல் சைட்டில் அவர்களின் விபரங்கள் அனைத்தும் பதிந்து விட்டதாக சொல்லி மனைவிக்கு சமாதானம் கூறினார் ஆதிகேசவன்.

ஆனால் மனைவியின் தொடர் தூண்டுதலில் தீவிர அலசல் நடத்த, இருவருக்கும் ஒருசேர நல்ல வரன்கள் அமைந்து விட, ஓர்நாள் இரவு குடும்பமாக அமர்ந்திருந்த வேளையில் கல்யாணப் பேச்சை தொடங்கினார் தந்தை.

" உங்க ரெண்டு பேருக்கும் அலையன்ஸ் பார்த்திருக்கேன். உங்க மெய்ல்க்கு அதைப்பற்றிய டீடெய்ல் அனுப்பறேன். சீக்கிரமே பார்த்துட்டு நல்ல பதிலா சொல்லுங்க பிள்ளைகளா." என்றதும் யுவா அதிர்ச்சியுடன் சகோதரியை பார்க்க,

'இது நீயேப் பேசி சமாளிக்க வேண்டிய விசயம். நான் எதுவும் ஹெல்ப் பண்ண மாட்டேன்.' உறுதியுடன் தோள்களை குலுக்கி இயல்பாக இருந்தாள் யுவர்ணிதா.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top