Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 60
- Thread Author
- #1
28.2
'இல்ல இல்லைங்க. இதுல வேற என்னமோ தப்பு நடந்து இருக்கு.' என்ற சுந்தரேசன் தன் தம்பியை முறைக்க.
'ஆமாடா தப்பு தான். இன்னோரு வீட்டு பொண்ணு மேல கை வச்ச உன் தம்பியை அன்னைக்கே அடிச்சி மண்டையை உடைக்காம விட்டேன் பாரு!! அது என் தப்பு தான்' என்ற கதிர்வேலன் கோபத்துடன் ஸ்ரீனிவாசனை நாலு மிதி மிததித்த வேகத்தில்.
'டேய் என் தம்பியை அடிச்சே சாகடிக்க பிளான் பண்ணிட்டியா. ஒ. அவன் செத்துட்டா உன் தங்கச்சி என் தம்பியை காதலிச்சது உண்மை இல்லாம ஆகிடுமா. ஐயோ இந்த ஊருல எங்க பக்கம் பேச யாரும் இல்லையா' என்று சுந்தரேசன் பொய்யாக பேசிக்கொண்டு இருக்க.மீண்டும் கதிர்வேலன் ஸ்ரீனிவாசன்னின் மார்பில் மித்தித்து கொண்டு இருந்தான்.
கதிரின் கோவத்தை பார்த்து கடுப்பான தனம்..'கதிர். இப்போ ஏன் அவரை அடிக்கிற. என்ன? அவர் சொல்லுற மாதிரி இவரை அடிச்சே சாகடிச்சிட்டு, உன் தங்கச்சியை நல்லவளாக்க ட்ரை பண்ணுறீயா.. ச்சி. உன் தங்கச்சி நடத்தையை பற்றி விசாரிக்காம நாங்க உன் குடும்பத்துல பொண்ணு எடுக்க சம்மதிச்சதுக்கு எங்களை நாங்களே செருப்பால அடிச்சிக்கணும்..டேய் தம்பி.யாருக்கு தெரியும். இந்த ரோஜா ஏற்கனவே இந்த ஆள் கூட ஒண்ணா சேர்ந்து குடும்பம்'
என்று தனம் தன் சொல்லை முடிக்கும் காட்டிலும். தனத்தின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்து இருந்தாள் முல்லை.
முல்லையின் செயலை கண்டு அனைவரும் அதிர்ந்து போக..'ரோஜாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்ன்னு பேசுறீங்க.. கையும் களவுமா எல்லாத்துக்கும் காரணம் இவன் தான்னு நாங்க சொல்லியும் ரோஜாவை பற்றி ஏன் இப்படி கேவலமா பேசுறீங்க' என்று முல்லை கேட்க.
அத்தனை பேர் எதிரிலும் முல்லை தனத்தை அடித்தை தாங்கிக்கொள்ள முடியாமல்,
'ஏய். என் அக்காவையே அடிச்சிட்டியா. அப்படி என்ன என் அக்கா இல்லாததை சொல்லிட்டா.'என்ற ரவியின் கன்னத்தில் கதிர்வேலனும் அவன் பங்குக்கு ஒரு அறை விட்டவன்.
'அக்காளும் தம்பியும் மூடிக்கிட்டு ஓரமா போய் நின்னுடுங்க.நான் கொலை காண்டுல இருக்கேன்' என்று ஒற்றை விரலை நீட்டி கதிர்வேலன் தனத்தையும் ரவியையும் எச்சரிக்க.
'ஐயோ.கடவுளே. ஆளாளுக்கு என் மகளை அசிங்கப்படுத்தி பாக்கறாங்களே. கடவுளே. இதெல்லாம் பார்த்துகிட்டு நீ கல்லு மாதிரி உக்காந்து இருக்கியே. எனக்கு எப்ப தான் பா நீ நிம்மதியை தர போற.'என்று பாண்டியன் கோவிலின் வலது புறத்தில் அமைந்துள்ள ஐயனாரை பார்த்து கைகள் கூப்பி கதறி வேண்டியவரின் வேண்டுதலுக்கு செவி சாய்து.
'டேய்.....
யார் இடத்துல வந்து யாரை கலங்கம் பண்ண நினைக்குற...
இது என் கோட்டை டா....
நான் காவல் தெய்வமா இருக்குற இடம்...
என் சன்னதில வந்து.
என் அருள் வாக்கை குறி சொல்லும் பொண்ணு மேலயே நீ பழி சொல்லுவியா...சொல்லு டா பழி சொல்லுவியா..' என்று ரோஜா கண்கள் உருட்டி அஃரோஷமாக கத்தியவள்... அங்கே மண்ணில் புதைத்து வைத்து இருந்த வெட்டு கத்தியை எடுத்துக்கொண்டு அருள் வந்த பெண்ணாக ஸ்ரீனிவாசனை நோக்கி ஓடியவள்.. தன் இடது கையால் அவன் சட்டையை பிடித்து வலது கையில் உள்ள அருவாவை வீசியப்படி..
'சொல்லுடா.. என்ன திட்டத்தோடு நீங்க இதெல்லாம் பண்ணீங்க,சொல்லு டா.. ம்..' என்று நாக்கை கடித்து ரோஜா அஃரோஷமாக கத்தியவளின் அவரதாரத்தை பார்த்து பயந்து போன ஸ்ரீனிவாசன். ஒன்று விடாமல் அவன் அண்ணன் செய்த அத்தனை கேவலத்தையும் சபைக்கு நடுவே சொன்னதும். அங்குள்ள அனைவரும் சுந்தரேசனின் முகத்தில் காரி உமிழாத குறையாக அவனை முறைத்தார்கள்.
'போதுமா. நான் தான் ஆரம்பத்துல இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேனே. என் பொண்ணு ஒரு பாவமும் அறியாதவள்' என்ற பாண்டியணை ஆறுதலாக முருகன் தட்டி கொடுக்க..
'இவனை சும்மா விடாதிங்க.இன்னும் கொஞ்ச நேரத்துல பாண்டியன் பிள்ளைகளுக்கு நடக்க போற கல்யாணத்தை நிறுத்த தான் இந்த போலீஸ் க்காரன் இந்த மாதிரி கேவலமான விஷயத்தை எல்லாம் செய்து இருக்கான்' என்ற ஊர் மககள். சுந்தரேசனை குற்றம் சொல்ல.
'இரு டா. உன்னை என் கையாலேயே அடிச்சி சாகடிக்குறேன் பாரு' என்ற கதிர். சுந்தரேசனின் சட்டை காலரை பிடித்த வேகத்தில்
'தம்பி தம்பி வேணாபா.சட்டப்படி இவங்கள போலீஸ்லயே பிடிச்சு கொடுத்திடலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு கல்யாணம் நடக்க போகுது. இந்த மாதிரி நேரத்துல நீ இந்த பிரச்சனைகளில் தலவிடாத' என்று ஊர் மக்கள் சொன்னதோடு நில்லாமல்.சுந்தரசனையும் ஸ்ரீனிவாசனையும் அடுத்த வாரத்தில் மீண்டும் பஞ்சாயத்திற்கு முன்பு வந்து நிற்க வேண்டும் என்று உத்தரவும்
பிறப்பித்தனர்.
**********************************
ஒரு வழியாக தன் மகள் மீது விழுந்த பழிச்சொல் நீங்கினாலும், ஒரே இரவில் தன் மகளுக்கு ஏற்பட்ட அசம்பாவிதங்களை எண்ணி பாண்டியன் கண்ணீர் மழுக குழம்பிக் கொண்டு இருக்க,
'அண்ணா.அதான் ரோஜா மேல எந்த தப்பும் இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சே!! இன்னும் ஒரு மணி நேரத்துல முகூர்த்தம். கதிரையும் ரோஜாவையும் குளிச்சிட்டு டிரஸ் மாத்தி கிளம்ப சொல்லுங்க, நம்ப நல்ல நேரத்துல திருமணத்தை முடிச்சு வச்சிடலாம்' என்றார் சரஸ்வதி.
'ஏங்க..என்ன நீங்க? கல்யாண பொண்ணுக்கு அருள் வந்து குறி சொல்லிக்கிட்டு இருக்கும் போது! கல்யாணம் அது இதுன்னு பேசிகிட்டு இருக்கீங்க,முதல்ல சாமிகிட்ட அருள் வாக்கு கேளுங்க' என்று பார்வதி சொல்ல .
அந்த நொடி வரை கையில் அருவாளுடன் ரோஜா ஆக்ரோஷமாக தான் நின்று இருந்தாள்.
'அய்யய்யோ.மறுபடியும் இவளுக்கு அருள் வந்துடுச்சா!? அப்போ இதுக்கெல்லாம் காரணம் நம்ம தான்னு தெரிஞ்சு நம்ம கழுத்துல ஒரு வெட்டு வெட்றதுக்குள்ள நம்ம போயி மறஞ்சுக்கணும்' என்று கஸ்தூரி தனக்குள் புலம்பியவள் ரோஜாவின் கண்ணில் படாமல் வேறு பக்கமாக மறைந்து நிற்க.
'அம்மா.என் குடும்பத்துல நிம்மதியே வராதா. என் பிள்ளைகளுக்கு என்னால நான் நினைத்த மாதிரி கல்யாணம் பண்ணி வைக்கவே முடியாதா' என்று பாண்டியன் கேட்டார்.
'டேய் முத்து பாண்டி.ஆசை படுவது மட்டும் தான் டா உன் பொறுப்பு, ஆனால் இன்னாருக்கு இன்னார் என்ற முடிவை நான் என்னைக்கோ எழுதி வச்சிட்டேன்'
என்று ரோஜாவிற்கு அருள் வந்து குறி சொல்லிக்கொண்டு இருக்கும் தருணம் ரோஜாவின் பார்வை அங்கே நின்றிருந்த கதிர்வேலன் மீது பதிந்து..
'டேய் கதிர்வேலா. உன்னிடம் நான் கொடுத்த மாங்கல்யம். இப்போ உரிய பொண்ணோட முந்தனையில் உறங்கிகொண்டு இருக்கு.போ. அவளை அழைச்சிட்டு போய் ரெண்டு பேரும் இதே கோவில் குளத்தில் முங்கி எழுந்து என் சன்னதியில் இப்போவே அவ கழுத்துல அந்த தாலியை கட்டு.'என்ற ரோஜாவின் அருள் வாக்கில் கூடி இருந்த அனைவரும் புரியாமல் விழித்து இருக்க.
'தனம்..ரோஜாவிற்கு அருள் வந்து என்ன சொல்றா?? உன்கிட்ட ஏதாவது மாங்கல்யம் இருக்கா?' என்று சரஸ்வதி கேட்க
'எக்ஸ்க்யூஸ் மீ சரசு மேடம்.சின்னம்மாக்கு அருள் வந்து சொன்னது உங்க பொண்ண பத்தி இல்ல' என்ற நாகராஜனை தனமும் ரவியும் முறைத்து பார்த்திருக்க.அதே சமயம்..
'அடேய் கதிர்வேலா.நான் சொல்றது உன் காதலு கேக்குதா இல்லையா. பாண்டியா.. உன் வீட்டுக்கு மருமகளா வரப்போறவகிட்ட தான் நான் ஆசீர்வாதம் பண்ணி கொடுத்த மாங்கல்யம் இருக்கு..அந்த மாங்கல்யத்தை வாங்கிட்டு போய் உன் இளைய மகனை அவன் வருங்கால மனைவி கழுத்துல கட்ட சொல்லி என்கிட்ட ஆசீர்வாதம் வாங்க சொல்லு' என்று ரோஜா அருள் இறங்கி ஆக்ரோஷமாக குறி சொல்லிக்கொண்டு இருக்க..
முல்லை தன் முந்தனையில் இருந்த மாங்கல்யத்தை எண்ணி அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனவளை பார்த்து கதிர்வேலனும் உரைந்து போய் நின்று இருந்தான்.
'தாயி. நீ என்ன சொல்லுற. யார்கிட்ட அந்த மாங்கல்யம் இருக்கு.' என்று பாண்டியன் கேட்க.ரோஜாவின் சிவந்த விழிகள் முல்லை மீது படிய.
'மாமா.. ஏ..என்கிட்ட தான் மாமா சாரோட மாங்கல்யம் இருக்கு' என்ற முல்லை அவள் முந்தனையில் இருந்த தாலி கயிறை எடுத்து பாண்டியனின் முன்னே நீட்டியதும். அதை வெடுகென்று பிடுங்கிய ரோஜா.
கண்கள் மூடி அதை அவள் நெற்றி பொட்டில் வைத்தவள்.
'இந்த மாங்கல்யத்துக்கு சொந்தக்காரி முல்லை மட்டும் தான். கதிர்வேலனுக்கும் முல்லைக்கும் திருமணம் ஆகவேண்டும் என்பதுதான் விதி.
அந்த விதியை யாரும் சதி செய்து தடுக்க முடியாது' என்ற ரோஜா அவள் கையில் இருந்த மாங்கல்யத்தை கதிர்வேலனின் கரங்களைப் பிடித்து இழுத்து அவன் உள்ளங்கையில் வைத்து அழுத்தி கொடுக்க.
பாண்டியனின் கலங்கிய விழிகள் கதிர்வேலனையும் முல்லையையும் மாறி மாறி பார்த்திருக்க. ஏனோ அவர் மனதில் முல்லை மீண்டும் தன் வீட்டுக்கே மருமகளாக வரப்போகிறார் என்று மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது.
இருப்பினும் பெண் கொடுத்து பெண் எடுக்கும் நிகழ்வில் தான் தன் மகளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமையும் என்று எண்ணிய பாண்டியன் மேலும் வருத்தம் கொண்டவராக,'தாயி.அப்போ என் மகளுடைய கல்யாணம்!!' என்று கண்கள் கலங்கினார்.
ஒரு நொடி கண்கள் மூடிய ரோஜா. மீண்டும் சிவந்த விழிகளை மலர்ந்தவள்.
'உன் இளைய மருமகள் உன் வீட்டிற்கு வரும் நேரம் அவள் தொட்டதெல்லாம் பொன்னாய் மாறும். மண் கூட வைரமாய் ஜொலிக்கும். நீ எதுக்கும் இனி கவலைப்பட தேவையில்லை.உன் இளைய மருமகளின் வருகையால் உன் குடும்பம் வாழையடி வாழையாக தலைக்கப் போகிறது. உன் மகளுடைய திருமணத்தை உன் இளைய மகனே முன் நின்று நடத்தி வைப்பான். எல்லாத்துக்கும் காவல் தெய்வமா நான் இருக்கேன்.இது என்னுடைய வாக்கு.என் வாக்கை மீறி எதையாவது செய்ய துணிந்தால் உன் குடும்பத்தில் துர்மரணம் நிகழும்' என்று எச்சரித்த ரோஜாவை அனைவரும் பார்த்து விழிகள் பிதுங்கி நின்று இருக்க..
'பாண்டியா. அந்த இறைவனே உன் பொண்ணு மேல இறங்கி குறி சொல்லும் போது, இன்னும் எதுக்காக தயங்குற.
உன் இளைய மகனுக்கு உன் தங்கச்சி மகள் தான் மனைவியாக வரவேண்டும் என்பது அந்த பாண்டி ஐயனாரின் சித்தம்.போப்பா. போய் திருமணத்தை ஏற்பாடு பண்ணு' என்று அங்குள்ள முதியவர் ஒருவர் சொல்ல..
தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட பாண்டியன் நேராக முருகனின் எதிரே சென்றவர்,' மச்சான். என் சின்ன பையனுக்கு உன் பொண்ண கல்யாணம் பண்ணி குடுப்பியா? என் முல்லையை என் வீட்டுக்கே மருமகளா அனுப்பி வைப்பியா? என்று கேட்டார்.
கண்கள் கலங்கிய முருகன், 'இந்த ஒரு வார்த்தைக்காக தான் மாமா நானும் காத்துக்கிட்டு இருந்தேன். நீங்க என் மகளை உங்க வீட்டு மருமகளா தாராளமா அழைச்சிட்டு போகலாம்' என்று இரு வீட்டார் சம்மதம் தெரிவிக்க. கதிரின் பார்வை முல்லை மீது விழுந்தது.
முல்லையோ தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாத மனநிலையில் நின்றிருந்தாள்.