• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

பாகம் - 24(2)

Member
Joined
Dec 5, 2025
Messages
50
முல்லை - 24.2

'அப்புறம் மச்சான்... இப்போ உடம்பு எப்படி இருக்கு, மருந்தெல்லாம் தவறாமல் எடுக்குறீங்கள?' என்று அனைவரின் மௌனத்தையும் உடைக்கும் விதமாக பாண்டியன் பேச்சை ஆரம்பிக்க,
'மரண வாசலை நெருங்கி மீண்டும் திரும்பி வந்த பிறகுதான் என் வாழ்க்கையில நிறைய நல்லது கெட்டதை உணர்ந்து இருக்கிறேன்' என்ற முருகன்,
'நான் நல்லா இருக்கேன் மாமா...உங்க உடம்பு எப்படி இருக்கு' என்று மரியாதையுடன் பாண்டியனை நலம் விசாரித்ததை பார்த்து கூறியிருக்கும் அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
வீட்டிற்கு வந்தவர்களை உபசரிக்கும் விதமாக,முல்லை அனைவருக்கும் தேநீரை கொடுக்க...
'முல்ல... எப்படி மா இருக்க?'என்று பாண்டியன் கேட்க,
'இருக்கேன் மாமா' என்ற முல்லை தேநீரை ஜீவாவிடம் நீட்டினாள்.
ஜீவானந்தம் முல்லையின் முகத்தை பார்க்க முடியாமல் தேநீரை கையில் எடுக்க,
'எப்படி மீனா இருக்க?' என்று முல்லை பொதுவாக மீனாவை நலம் விசாரித்தாள்.
'என் பொண்ணுக்கு என்ன குறைச்சல்! பாண்டியன் வீட்டோட மூத்த மருமக என் பொண்ணு, அவளுக்கென்ன! அவ நல்லாதான் இருப்பாள்' என்று கூத்தல் பேச்சுடன் இன்னொரு தேநீரை எடுத்துக் கொண்டார் கஸ்தூரி.
'அத்த...ஆரம்பிக்காதீங்க, கொஞ்சம் அமைதியா உட்காருங்க' என்ற ரோஜா....
'முல்லை நீ எப்படி இருக்க' என்று நலம் விசாரிக்க....
'அவளுக்கு என்ன...அவ நல்லாதான் இருப்பாள்... அதான் அவளை பார்த்துக்க இனி கேசவன் இருக்கானே' என்று தனக்குள் முணங்கியபடி அமர்ந்திருந்தான் கதிர்வேலன்.
அனைவருக்கும் தேநீரை கொடுத்த முல்லை...கதிர்வேலனிடம் தேனீர் குவளையை நீட்ட,
'மச்சான்...அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரே கோவில்ல ஒரே முகூர்த்ததில் என் ரெண்டு பிள்ளைகளுக்கும் நிச்சயதார்த்தம் வச்சி இருக்கேன், நீங்க குடும்பத்தோட வந்து நிச்சயத்தை சீரும் சிறப்புமாக முடித்து கொடுக்கணும்' என்று பாண்டியன் சொல்ல,
'என்ன மாமா சொல்றீங்க!
ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கும் வரன் பாத்திருக்கீங்களா?' என்று முருகன் மகிழ்ச்சியுடனே கேட்க...
'ஆமா மச்சான்...பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுக்கலாமுன்னு இந்த சம்பந்தத்தை பேசி முடிச்சு இருக்கேன்' என்றார் பாண்டியன்.
பாண்டியனின் வார்த்தையை காதில் வாங்கிய முல்லை, ஒரு கணம் கதிர்வேலனின் விழிகளை பார்க்க... முல்லையின் விழிகளில் தெரிந்த ஆதங்கம், கேள்வி, பரிதவிப்பு, கோவம், அன்பு என்று இவை அனைத்திற்கும் அர்த்தம் என்ன என்று கதிர்வேலன் யூகிக்கும் முன்னே...
'ஞாயிற்றுக்கிழமை தானே உங்க பசங்களுக்கு நிச்சயதார்த்தம்! ஆனா வெள்ளிக்கிழமையே எனக்கும் முல்லைக்கும் இதே வீட்ல நிச்சயதார்த்தம் நடக்கப் போகுது... அதனால நீங்களும் குடும்பத்தோட வந்து இந்த நல்ல காரியத்தை முடித்து வையுங்கள்'
என்ற செய்தியோடு கேசவன் இவர்கள் அனைவரின் முன்னிலையிலும் வந்து நின்றவனை முறைத்துப் பார்த்த கதிர்வேலனுக்கு...
முல்லையின் விழிகளில் வழிந்தோடிய காதல் உணர்வை இந்த நொடி கூட உணர முடியாமல் போனது.
கேசவனின் வார்த்தையை கேட்டு கஸ்தூரியின் முகம் மகிழ்ச்சியில் மிளிர...
மீதம் இருக்கும் அனைவரின் முகத்திலும் வெறுப்பு தான் தெரிந்தது.
கேசவனின் கிண்டலான செய்கையில் கதிர்வேலனுக்கு கோவம் எழுந்திட...
அவன் கையை பிடித்து தன் அருகே அமர்த்தி இருந்தாள் ரோஜா.
'என்ன மச்சான்... கேசவன் என்ன சொல்லுறப்புல!' என்று பாண்டியன் கேட்க,
'அவன் பேச்சை அப்புறம் பேசிக்கலாம். நீங்க சொல்லுங்க. நிச்சயம் எந்த மண்டபத்துல நடத்த போறீங்க' என்று கேட்டார் முருகன்.
'நிச்சியம் தாலி காத்த அம்மன் கோவில்ல பண்ண போறோம்' என்று பாண்டியன் சொல்ல,
முல்லை சமையலறையில் நின்றப்படி இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு தான் இருந்தாள்.
'மாப்புள்ள என்ன பண்ணுறாரு' என்று முருகன் விசாரிக்க,
பாண்டியனும் சரஸ்வதி வீட்டின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டு இருக்க,கதிர்வேலனுக்கோ முள்ளின் மேல் நின்று இருப்பதை போல உணர்ந்தவன்,
'அம்மா... வீட்டுக்கு போகலாமா' என்று தன் தங்கையை கேட்டான்.
'இருங்க வாத்தி நான் முல்லையை போய் பார்த்து பேசிட்டு வரேன்' என்ற ரோஜா... சமையலறைக்குள் நுழைய,
'வா ரோஜா...கூடிய சீக்கிரம் திருமதி ரோஜாவாக போற... வாழ்த்துகள் டி' என்று நட்புடன் அவளை கட்டி அனைத்தாள் முல்லை.
'எனக்கு வாழ்த்து சொல்றதை விடு... நீ எப்படி டி இருக்க, ஏன் அந்த கேசவன் மேல இன்னும் போலீஸ் கம்பளைண்ட் தராம இருக்க, ஆமா அவன் சொல்லுற மாதிரி அவன்கூட உனக்கு நிச்சயம் நடக்கப்போகுதா' என்று ரோஜா கேட்க,
அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா இனி என் அப்பா என்ன சொல்லுறாரோ அதன் படி தான் என் வாழ்கை' என்றாள் முல்லை.
'என்ன முல்லை நீ... அந்த கேசவன் உன் அப்பாவை கொலை பண்ண முயற்சி பண்ணிருக்கான். போதாக்குறைக்கு உன் நடத்தையை சந்தேகப்பட்டு இருக்கான். என்னை கேட்டா நீ அவனை இந்நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல பிடிச்சி கொடுத்து இருக்கனும்' என்று ரோஜா சொல்ல... முல்லையின் இதழ் ஓரத்தில் விரக்தியான புன்னகை பூத்தது.
'என்னடி நீ.. நான் என்ன சொல்லுறேன் நீ என்ன கிண்டலா சிரிக்கிற' என்று ரோஜா கேட்க,'அப்புறம்... உன்னை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிளை பேர் என்ன... என்ன வேலை... எந்த ஊர்' என்று பேச்சை மாற்றும் விதமாக பேசும் முல்லையின் கேள்விக்கு பதில் தராமல் ரோஜா அங்கிருந்து வெளியேறினாள்.
ஹாலில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த வேளையில், மீனாவும் ஜீவாவும் ஒன்றாக அமர்ந்து இருந்தாலும் அவர்களுக்குள் இருந்த விலகளை பார்த்து பார்வதியின் மனதில் குற்ற உணர்வு ஏற்பட்ட நிலையில்,
'முல்ல... பூஜையறையில் மஞ்சள் குங்குமம் இருக்கும் எடுத்துட்டு வா' என்ற பார்வதி, தன் அறையில் இருந்து புதுமண ஜோடிகளுக்கு புது துணியை எடுத்து வந்து சபைக்கு நடுவே வைத்தார்.
பார்வதியின் மாற்றத்தை பார்த்த கஸ்தூரி,'இது என்ன இவ... வச்சா குடுமி அடிச்சா மொட்டை போல சட்டுனு இப்படி நல்லவளா மாறிட்டாளே' என்று எண்ணிய கஸ்துரிக்கு,
ஜீவா மீனா கல்யாணம் நடக்க காரணமாக இருந்தது இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தான் என்ற உண்மையை பார்வதி சபையில் போட்டு உடைத்து விடுவாரா என்ற அச்சம் இருக்க தான் செய்தது.
இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டு இருக்க, இதே சமயம்... கதிர்வேலனின் கைபேசிக்கு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
'யாரு நம்பர் இது' என்ற எண்ணத்தோடு கைபேசியுடன் கதிர் முருகனின் வீட்டில் இருந்து வெளியேறி, தோட்டத்து பக்கம் சென்றவன்,'ஹலோ... யாரு பேசுறத' என்று தனக்கு வந்த அழைப்பிற்கு பதில் கொடுத்தார்.
'நா...நான் தனா பேசுறேன், நீங்க கதிர்வேலன் தானே' என்று மறுமுனையில் இருந்து வந்த கேள்விக்கு,'ஆமா... நான் தான். சொல்லு என்ன விஷயம்' என்று கதிர் ஒருமையில் பேசியதும்,
'So...உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே' என்று கேட்டாள் தனா.
ஒரு கணம் அவள் கேள்விக்கு பதில் தராமல் தன் தந்தை சொன்ன விஷயத்தை யோசித்து பார்த்த கதிர்வேலன்,'ஆமா... உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்'என்று சொல்ல... மறுமுனையில் தனாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
'அம்மாவே உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமுன்னு சொல்லிட்டாங்க. ஆனாலும் உன்கிட்ட வெளிப்படையா பேசிட்டா நல்லதுன்னு தான் நான் கால் பண்ணேன்' என்று தனா சொல்ல...'ம்...'என்றார் கதிர்.
'அப்போ என் வயசு உனக்கு ஒரு பிரச்சனை இல்லை அப்படித்தானே' என்று தனா கேட்க,
'அதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனை இல்லை' என்றார் கதிர்.
'இன்னைக்கு என்னை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டு!நாளைக்கு என் தங்கைக்காக தந்தைக்காக தான் உன்னை கட்டிகிட்டேன்னு சொல்ல மாட்டீங்க தானே' என்று தனா கேட்க,
ஒரு நொடி கடுப்பான கதிர்,'இங்க பாரு... நான் சொல்லுறத நல்லா கேட்டுக்கோ... எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க முழு சம்மதம். போதுமா... இல்ல வேற எதாவது கேள்வி இருக்கா' என்று கதிர் சற்று அழுத்தமாக கேட்டதும்,
'இது போதும் கதிர்... புடவை எடுக்குற கடையில மீட் பண்ணலாம்' என்ற தனா கைபேசி இணைப்பை துண்டித்தாள்.
'நான் ஆசைப்பட்ட வாழ்கை தான் எனக்கு கிடைக்காம போச்சு... இனி என் அம்மா(ரோஜா) வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும்' என்று தன் தங்கையின் வாழ்க்கையயை எண்ணி கதிர் தனாவை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் தெரிவித்ததை... சமையலறை ஜன்னல் அருகே நின்று இருந்த முல்லையின் காதில் தெளிவாக கேட்டது.
'என்னதான் மாமா சார் மீனாவை விரும்பி இருந்தாலும். ரோஜாவிற்காக வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தெரிவித்து இருக்காரு போல' என்று தனக்குள் எண்ணிய முல்லை,
'என்னைக்குமே அவர் மனசுல கடுகளவு கூட என் மேல பிரியம் இல்லைனு நினைக்கிறேன்' என்ற முல்லை, இனி கதிர்வேலனை மனதளவில் நினைக்கவே கூடாது என்று முடிவெடுத்து இருந்தாள்.
பாண்டியன் குடும்பத்தில் உள்ள அனைவரும் சகஜமாக முருகனிடம் பேசிக்கொண்டு இருக்க,'சரி மச்சான்... அப்போ நாங்க கிளம்புறோம்... வீட்ல எதாவது விஷேஷம்னா எனக்கு சொல்லி அனுப்புங்க' என்ற பாண்டியன்... முல்லையின் அருகே சென்று அவள் தலையில் கை வைத்து,
'உனக்கு என் பையன் பண்ண துரோகத்துக்கு அவன் சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் தாயி' என்றதும்.
'ஐயோ மாமா...' என்று முல்லை பதறி அடித்து அவர் கரங்களை பற்றி கண்கள் கலங்கினாள் முல்லை.
'அழாத தாயி... உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப' என்ற பாண்டியன்.', எல்லோருக்கும் போயிட்டு வரோம்' என்று கைகள் கூப்பி அனைவருக்கும் நன்றி தெரிவிக்க,'மீனா... ஒரு நிமிஷம்' என்ற பார்வதி புது துணிகளை எடுத்துக்கொண்டு ஜீவா மீனா தம்பதினரை நெருங்கினார்.
'என்னங்க... இப்படி வந்து நில்லுங்க...' என்று பார்வதி முருகனை அழைக்க,
மீனாவும் ஜீவாவும் ஒன்றாக சேர்ந்து முருகன் பார்வதி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டார்கள்.
பார்வதியின் மாற்றத்தை கதிர்வேலன் சந்தேகமாக பார்த்து இருக்க,
மனிதனின் மனம் தான் யாரும் கணிக்கவே முடியாத கணிதம் என்று ரோஜா உணர்ந்து இருந்தாள்.
'மாமா... சாப்பிட்டு போகலாமே' என்று முல்லை பாண்டியனிடம் கேட்க,
'அதான் உனக்கு வெள்ளிக்கிழமை நிச்சயம் நடக்கப்போகுதே... அப்போ வந்து விருந்தே சாப்பிட்டுட்டு போறோம்' என்ற கதிர்வேலனின் பதிலில் முல்லையின் இதழ்களில் வெறுமையான வெற்று புன்னகை மலர்ந்தது.
'வாத்தி... நீங்க போய் காருல உக்காருங்க. முல்லை... நாங்க போய்ட்டு வரோம். நேரம் இருக்கும் போது போன் பண்ணு' என்று ரோஜா சொல்ல...கதிர்வேலன் முல்லையை முறைத்த வண்ணமாக அங்கிருந்து வெளியேறி இருந்தார்.
'என்ன முல்ல...இந்த முறையாவது உனக்கு நிச்சயம் நடக்குமா... இல்ல இதுவும் உன் ராசிப்படி நின்னு போய்டுமா' என்று கஸ்தூரி கிண்டலுடன் கேட்க,
'என்ன அத்த... வாத்தியை உள்ள கூப்பிடவா' என்று ரோஜா கேட்டதும்,
முல்லை எப்பொதும் போலவே கஸ்தூரியின் நாகரிகம் இல்லாத பேச்சுக்கு தன் புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top