• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
48
பாலைவனத்து முல்லை

முல்லை – 23.1

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய கதிர்வேலன் நேரே சென்றது பாண்டியனின் இல்லத்திற்கு தான்.

கதிர்வேலனை பார்த்து முல்லை பேசிய வார்த்தைகளை அச்சு பிசராமல் நாகராஜன் ரோஜாவிடம் சொல்லிக்கொண்டு இருக்க, தன் அறையில் அமர்ந்து இருந்த பாண்டியனும் அதை கேட்க நேர்ந்தது.

'அந்த ரவா லட்டுக்கு எவ்ளோ திமிர் பார்த்திங்களா ம்மா' என்று கதிர்வேலன் கோபத்துடன் கர்ஜிக்க,
'அதற்கு பெயர் திமிர் இல்ல வாத்தி. அது அவளோட சுயமரியாதை' என்றாள் ரோஜா.

'என்ன நீங்க. அவ நம்ம யாருமே அவளுக்கு வேணான்னு சொல்லி என்னை அந்த கேசவன் எதிர்ல கேவலடுத்தி அனுப்பி இருக்கா, நீங்க என்ன அவளுக்கு பரிந்து பேசுறீங்க' என்று கதிர்வேலன் மேலும் கோவப்பட,
'எல்லாம் என்னால தான்' என்று புல்ம்ப ஆரம்பித்தான் ஜீவா.

ஆயிரம் காரணம் சொன்னாலும், முல்லை பேசியதை கதிர்வேலனால் ஏற்று கொள்ள முடியாத நிலையில்,'இனி அந்த ரவா லட்டு முகத்தை கூட நான் பார்க்க மாட்டேன்' என்று வாய் சவடால் உதிர்த்தான்.

முல்லையின் தரப்பில் இருந்து யோசித்த பாண்டியனுக்கு. அவள் சொன்னது தான் சரி என்ற எண்ணம் தோன்ற.அதே தருணம் பாண்டியனின் கைபேசிக்கு அவர் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது.

'சொல்லு செண்முகம். ஓ. ரொம்ப நல்லது பா.இன்னும் ஒரு மணி நேரத்துல நாங்க கோவிலில் இருப்போம்' என்ற பாண்டியன் கைபேசி இணைப்பை துண்டித்தவாறு.
'கதிரு.' என்று தன் இளைய மகனை அழைத்தார்.

தன் தந்தையின் குரலை கேட்டு அறைக்குள் நுழைந்த ரோஜா 'என்னப்பா தண்ணி வேணுமா' என்று கேட்க,
'இல்லமா. மனசே சரியில்ல. வாயேன் கதிர் கூட கோவிலுக்கு போயிட்டு வரலாம்' என்று பாண்டியன் சொல்ல, ரோஜா,பாண்டியன், கதிர் ஆகிய மூவரும் நாகராஜனுடன் காரில் கோவிலுக்கு சென்றார்கள்.

இவர்கள் அனைவரும் அம்மன் கோவிலுக்குள் நுழைந்து நெய் தீபம் ஏற்றி தெய்வத்தை வழிப்பட்டுக்கொண்டு இருக்க,
'அண்ணா.' என்று அழைத்துக்கொண்டு பாண்டியனின் முன்னே நடுத்தர பெண்மணி ஒருவர் வந்து நின்றார்.

'என்னமா சரசு. நல்லா இருக்கியா' என்று பாண்டியன் விசாரிக்க.
'இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க. நம்ம பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு' என்ற சரசு என்னும் சரஸ்வதி பாண்டியன் நண்பனின் மனைவி.

'இவ.. இவ உங்க பொண்ணு ரோஜா தானே! நல்லா வளர்ந்துட்டாளே' என்ற சரஸ்வதியின் பார்வை கதிர்வேலன் மீது படர்ந்து. 'இவன் வேலன்.. கதிர் வேலன் தானே. டேய் தம்பி கதிரு!! எப்படி டா இருக்க' என்று பாண்டியனின் பிள்ளைகளை நலம் விசாரித்தார்.

'ம்மா. யார் இந்த டப்பா வாயு.' என்று கதிர்வேலன் தன் தங்கையிடம் விசாரிக்க. 'டேய் தம்பி.நான் தாண்டா சரசு அக்கா. என்ன என்னை மறந்துட்டியா' என்று கேட்க,

'இதுவரை மறந்து இருந்தா என்ன! இனி வருங்கால மாமியார் உன்னை கதிர் மறக்கவே மாட்டான்' என்று பாண்டியன் சொல்ல, 'என்ன மாமியாரா?' என்று ரோஜா புரியாமல் கதிரை பார்த்தாள்.

'ஆமா மாமியார் தான். கதிருக்கு மட்டும் இல்லை உனக்கும் நான் மாமியார் தான். ஏன்னா நாங்க பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க முடிவு பண்ணி இருக்கோம். என்ன அண்ணா! பசங்க கிட்ட எந்த விவரத்தையும் சொல்லலையா'என்று சரஸ்வதி கேட்க,

'நான் கிழித்த கோட்டை என் இரண்டு பிள்ளைகளும் தாண்ட மாட்டாங்க. சரி உன் பையனும் பொண்ணும் எங்கே' என்று பாண்டியன் கேட்க,
'லக்ஷ்மி, ரவி, இங்க பாருங்க பாண்டியன் மாமா வந்து இருக்காரு' என்றாள் சரஸ்வதி.

தன் தந்தை தங்களுக்கு தெரியாமல் என்ன செய்கிறார் என்று ரோஜாவும் கதிர்வேலனும் யூகிப்பதற்கு முன்னதாக
30 வயது மதிக்கத்தக்க இளைஞனும் 32 வயது மதிக்கத்தக்க பெண்ணும் இவர்கள் கண்ணெதிரே வந்து நிற்க,

'என்னமா லக்ஷ்மி. எப்படி இருக்க?' என்று பாண்டியன் நலம் விசாரிக்க,

'அண்ணா. எல்லாரையும் போல இவளை நீங்களும் லட்சுமின்னு கூப்பிட்டால் கதிருக்கு எப்படி இவளை அடையாளம் தெரியும்,
அதனால தனலட்சுமின்னு வாய் நிறைய கூப்பிடுங்க' என்று சரஸ்வதி சொல்ல.

“வாத்தி. என்ன இது? இந்த தனத்தையா, உங்களுக்கு அப்பா பொண்ணு பார்த்து இருக்காரு” என்ற ரோஜாவின் கேள்வியில் கதிர்வேலனின் இரண்டு கண்களும் பிதுங்கி தரையில் வந்து விழாத குறையாக இருந்தது.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கதிர்வேலன் யூகிக்கும் முன்னே தன லட்சிமி என்கிற பெண் இவர்கள் முன்னே வந்து நின்றாள்.
'என்னமா தனா எப்படி இருக்க?' என்று பாண்டியன் விசாரிக்க,
'நல்லா இருக்கேன் மாமா... நீங்க எப்படி இருக்கீங்க, ரோஜா நீ எப்படி இருக்க' என்ற பெண்ணின் பார்வை கதிர்வேலனை பார்த்து மரியாதை நியமித்தமாக புன்னகை பூத்தது.
'சரி சரி... இங்கேயே நின்னு பேச வேண்டாம்... வாங்க அப்படி ஓரமா போய் உக்காந்து பேசலாம்' என்ற பாண்டியணை தொடர்ந்து அனைவரும் கோவில் மண்டபத்தில் சென்று அமர்ந்தார்கள்.
தன் தந்தையின் செயலில் கதிர்வேலனுக்கு எரிச்சல் ஏற்பட்டாலும், அதை வெளிப்படுத்தும் விதத்தில் அவர் இல்லை என்ற காரணத்தால்,'ம்மா... இங்க என்ன நடக்குது?' என்று தன் தங்கையிடம் கேட்டார் கதிர்.
'என்ன கேட்டா... எனக்கு மட்டும் என்ன தெரியும் வாத்தி... இருங்க ஐயனே சொல்லட்டும்' என்று ரோஜா சொல்ல,
தனமும் அவரின் தம்பி ரவியும் அருகருகே அமர்ந்து இருந்தவர்களின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது.
'அப்புறம்.... மாப்புள்ள எப்ப வெளிநாட்டுக்கு போக போறாரு' என்று இவர்களின் மௌனத்தை உடைக்கும் விதமாக பாண்டியன் பேச ஆரம்பிக்க,
'கல்யாணம் முடிந்த கையோட ரோஜாவை அழைச்சிட்டு கிளம்பிடுவான்' என்றார் சரஸ்வதி.
'ம்மா... அந்த லேப்டாப் வாயி என்ன பேசுது! யாருக்கு யாரோட கல்யாணம்' என்று கதிர்வேலன் மேலும் கோவம் கொள்ள,
'கதிரு....நம்ம ரோஜாவை நான் ரவிக்கு தான் கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணி இருக்கேன்' என்றார் பாண்டியன்.
'என்ன ப்பா நீங்க...திடுதிப்புனு கல்யாணம் அது இதுன்னு சொல்றிங்க' என்று கதிர் கேட்க,
'நான் உசுரோட இருக்கும் போது என் பொண்ணு பையன் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசை படுறேன்' என்றார் பாண்டியன்..
தன் தந்தையின் பயத்தை அறிந்து இருந்த கதிர்,'அப்பா... நீங்க சொல்லுறது எனக்கு புரியுது. ஆனா...' என்று கதிர் பேசும் முன்னே,
'இங்க பாரு கதிர்... அப்பா எது பண்ணாலும் அது உங்க நல்லதுக்கா தான் இருக்கும். அதனால தான் சரஸ்வதி வீட்டுல நான் உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம் பேசி இருக்கேன்' என்றார் பாண்டியன்.
ஒரு நொடி கதிர் தன் எதிரே அமர்ந்து இருக்கும் தனாவை அழுத்தமாக பார்த்தவன், அப்படியே தன் பார்வையை சரஸ்வதி பக்கம் திருப்ப...
'என்னடா தம்பி... என் பொண்ணை சைட் அடிக்கிறியா' என்று வாயெல்லாம் பல்லாக கேட்டு சிரித்தார் சரஸ்வதி.
'ஐயோ... சும்மாவே இந்த சரசு என்கிட்ட சரசம் பண்ணும்... இப்போ அப்பா வேற மொத்தமா என்கிட்ட இத கோத்து விட பாக்குறாரே' என்று கதிர்வேலன் தனக்குள் முணங்கி இருக்க,
'அண்ணா...ரவியும் ரோஜாவும் தனியா பேசிட்டு வரட்டுமே' என்றார் சரிஸ்வதி.
'ஹாங்... தாராளமா... ஏன்!! தனா கூட போய் கதிரோட பேசிட்டு வரட்டும்' என்று பாண்டியன் சொல்ல,
வேறு வழியே இல்லாமல்
கதிர் தனாவோடும்,
ரோஜா ரவியோடும் தனியே சென்று
பேச ஆரம்பித்தார்கள்.
கோவிலின் வில்வ மரத்தின் கீழே ரோஜா நின்று இருக்க,'எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம். உனக்கு என்னை பிடித்து இருக்கா' என்று வினாவினான் ரவி.
'என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியுமுன்னு நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்றிங்க' என்று ரோஜா கேட்க,
'அதெல்லாம் எனக்கு தெரிய தேவை இல்லை, எனக்கு என் அக்கானா உயிர்... அவருக்கு கல்யாணம் ஆகணும்னா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்' என்று ரவி சொல்ல... மேலும் குழம்பி போன ரோஜா,
'என்ன சொல்றிங்க... தெளிவா பேசுங்க...உங்க அக்கா கல்யாணத்துக்கும் என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பதருக்கும் என்ன சம்மந்தம்?'என்று ரோஜா கேட்டாள்.
'உன்னை மாதிரி தான் என் அக்காவும்'என்ற ரவியை புரியாமல் ரோஜா பார்க்க,
'என்ன புரியலையா... என் அக்காவுக்கும் சாமி வரும்.
அதனால என் அக்காவுக்கு இது நாள் வரை கல்யாணம் தள்ளி போய்கிட்டே இருந்துச்சு, ஆனா பாண்டியன் மாமாவோட நண்பன் சண்முகம் தான் உன்னை பற்றி அம்மாகிட்ட சொன்னாங்க. அதனால தான் அம்மாவும் உங்க பையனுக்கு என் மகளை கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொன்னா... என் பையன் உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டுவான்னு பாண்டியன் மாமா வாக்குறுதி கொடுத்து இருக்காரு' என்றான் ரவி.
முழுவதுமாக ரவி பேசிய வார்த்தையை கேட்ட ரோஜாவிற்க்கு தனக்காக தன் அண்ணனின் வாழ்க்கையை அப்பா பணயம் வைக்க நினைக்கிறார் என்பதை புரிந்துகொண்டாள்.
'என்ன... உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் தானே' என்ற ரவியை அழுத்தமாக பார்த்த ரோஜா,
'உடனே எல்லாம் சொல்ல முடியாது... நான் வீட்டுக்கு போய் யோசிச்சு அப்பாகிட்ட என் பதிலை சொல்லுறேன்' என்ற ரோஜா வேகமாக அங்கிருந்து கதிர் வேலன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.
கோவிலின் படிக்கட்டில் கதிர்வேலன் அமைதியாக அமர்ந்து இருக்க,
'நான் உன்ன விட முணு வயசு பெரிய பொண்ணு கதிர்' என்று தன் மௌனத்தை உடைத்தார் தனம்..
'அப்போ இனி நான் உன்னை அக்கானு கூப்பிடவா!?'என சட்டென்று கதிர்வேலன் கேட்டதும் தனா சத்தமாக சிரித்தாள்.
*****************************
'இப்போ எதுக்கு சிரிக்கிற' என்று கதிர் கடுப்புடன் கேட்க,
'நமக்குள்ள வயசு வித்தியாசம் இருக்கு, இந்த கல்யாணம் வேணாமுன்னு நான் என் அம்மாகிட்ட எவ்வளவோ போராடி பார்த்துட்டேன் கதிர், ஆனா எப்போதும் போலவே அவங்க நினைக்கிறத நடத்தி தீரணும்னு முடிவோடு இருக்காங்க' என்று தனா சொன்னாள்.
'அப்போ எதுக்காக இந்த ஏற்பாடு' என்று கதிர்வேலன் கேட்க,'வாத்தி... வாங்க நம்ம கிளம்பலாம்' என்றாள் ரோஜா.
தன் தங்கையின் கோவமான முகத்தை பார்த்து ஏதும் புரியாமல்,'என்னாச்சு ம்மா...' என்று கதிர்வேலன் கேட்க,
'நீங்க வாங்க நம்ம கிளம்பலாம், தனா... எங்க ஐயன் உங்க அம்மாவுக்கு போன் பண்ணி பேசுவாரு, இப்போ நாங்க கிளம்புறோம்' என்ற ரோஜா தன் அண்ணனின் கையை பிடித்து அங்கிருந்து அழைத்து செல்ல, தனத்துக்கோ ரோஜாவின் நடவடிக்கையில் அவளின் முகம் இறுக்கமாக மாறியது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top