• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
23
22. நிழலாக இருந்த ஒளி.


வேங்கையன் கொடுத்த வீடியோவை பார்த்தலிருந்து நிரஞ்சனா குதுகலித்தாள்.


“என் சீனியர் எனக்கு அப்பா மாதிரி. இந்த கேஸை ஒன்றும் பண்ணமுடியவில்லை என்று கவலைபட்டு கொண்டியிருந்தார்.
இந்த ஆதாரம் அவருக்கு அல்வா சாப்பிடற மாதிரி . பிரமோஷன் வாங்கி ரிட்டரையர்டு ஆவார்.”

அப்படியே எனக்கும் பிரமோஷன்
கிடைக்கும்.”


“தாங்க்ஸ்டா: என்னிடம் கொடுத்தற்கு.”என்று சொல்லி அவன் கையை பிடித்து குலுக்கினாள்.


“சரி. பார்த்து பண்ணு. உங்க டிபார்ட் மெண்டில் சில கருப்பு ஆடுகள் இருக்கும். “


நான் பார்த்துக் கொள்கிறேன். என்று மகிழ்ச்சியாக அவனை அனுப்பி வைத்தாள்.


வீட்டிற்கு போனான்.


சிவகாமி,’ “ என்னப்பா எங்கே இவ்ளோ காலையில் போய்ட்ட…”


‘“ஊர் சுற்றி பார்த்தேன். என்ன அழகு. அதுவும் அதிகாலை பனியில் பார்ப்பது கொள்ளை அழகு. ‘“ என்றான்.


அப்போது யாரோ காரிலிருந்து இறங்கும் சத்தம் கேட்டது.


அம்மா என்று கதறிக் கொண்டு ஓடிவரும் சத்தம்.


என்னவென்று பார்க்க.


கயலின் பெற்றோர் பாக்யம், காத்தமுத்து . ஓடி வந்து சிவகாமியின் காலில் விழுந்தனர்.



“அம்மா.. நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா. தெய்வமே எங்கள் வயிற்றில் பாலை வார்த்தீர்கள்.
ஜமீன் வம்சம் இனி தழைக்கும்.”


தன் மகள் கயல்விழியை அறிமுகப்படுத்தினாள்.


தெரியும். இவளிடம் தானே சிவகாமி
என்ற பெயரை சொல்லி . இங்கு அழைத்து வா என்றாள்.


பாக்யம் தயங்கிக் கொண்டே , அம்மா.. உங்கள் மகன் என்று கேட்டதும்,


வேங்கையன், அதிவீரனையும் அழைத்தார்.


இவர்கள் இருவரும் என் மகன்கள் என்றதும், அவளுக்கு புரிந்தது.


இதைக் கேட்டதும், கயலுக்கு பூமியே காலிருந்து நழுவது போல் இருந்தது.


வரதன், பரிமளம் கயலை ஏற்றுக் கொண்டதே பெரிய விசயம். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் . சிவகாமியோ அவர்களை விட பல மடங்கு அந்தஸ்தில் உயர்நதவர். ஜமீன் பரம்பரை வேறு. எப்படி என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று யோசித்ததில் மயக்கமே வந்து விட்டது.


‘மயங்கி விழுபவளை அதியின் கரங்கள் தாங்கி பிடித்தது.


கயலுக்கு மயக்கம் எதனால் வந்தது என்று சிவகாமியால் புரிந்து கொள்ள முடிந்தது.


மூர்ச்சை தெளிவித்த பின்பு, சிவகாமி சிரித்துக் கொண்டே அவள் கையையும், அதிவீரன் கையையும் பிடித்து ஒன்று சேர்த்தாள்.
அவளை அவனிடத்தில் ஒப்படைத்து பரிமளத்தை பார்க்க அவளும்
சிரித்துக் கொண்டே “,, நடக்கட்டும் நடக்கட்டும் என்றாள்.


இதை பார்த்துக் கொண்டியிருந்த பாக்யத்திற்கும் காத்த முத்துவிற்கும் ஒன்றுமே புரியவில்லை.


அம்மா என்ன செய்கிறார்.

எதற்கு தன் மகள் கையை எடுத்து, அவர் மகன் கையில் ஒப்படைக்கிறார் என்று புரியாமல் விழித்தார்கள்.


தன் மகளின் முகம் நாணத்தில் சிவப்பதை பார்த்து,


“அம்மா என்ன காரியம் செய்கிறீர்கள். உங்கள் வம்சம் எங்கே. நாங்கள் எங்கே. உங்கள் மகனுக்கு எங்கள் மகளா.. .இதை எப்படி ஊர் உலகம் ஏற்கும். எங்களை விட்டு விடுங்கள். நாங்கள் உங்கள் விசுவாசியாகவே காலம் முழுக்க இருக்கிறோம். அந்த கெளரவம் போதும் எங்களுக்கு “
என்று பதற.



“பேசாமல் இரு. “


“என் மகன் என்று எனக்கு இப்போது தான் தெரியும். ‘’ஆனால், அதற்கு முன்பே கயல் அவனை காதலித்து விட்டாள். அதை பரிமளமும் ஏற்றுக் கொண்டார்கள். இடையில் நான் என்ன சொல்ல, எனக்கும் உன் மகளை ரொம்ப பிடித்து இருக்கிறது.
அவனுக்கு ஏற்றவள் அவளே”…i


மறுபடியும் காலில் விழுந்து கும்பிட்டார்கள்.


இதை எதிர் பாராத சிவகாமி கோபித்து கொண்டாள்.



“இனிமேல் காலில் விழக்கூடாது. இதுவே கடைசியாக இருக்கட்டும்.”


“அம்மா…உங்களை பார்த்த மகிழ்ச்சியில் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.”


“என்னது”…?




அப்போது பத்மாவிடமிருந்து போன் வந்தது.


அது கதறலாக வந்தது.


வேங்கையன் பதறினான்.


பாக்யம் என்ன சொல்ல வருகிறார் என்று அவர்கள் கேட்க வில்லை.


என்னவென்று அதிவீரன் கேட்க . பத்மா எதோ ஆபத்தில் இருக்கிறாள்.


“நான் உடனே போக வேண்டும். “


‘இரு நானும் வருகிறேன் “.


சிவகாமி என்னவென்று கேட்க,


இருவரும் ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.


அப்போது மறுபடியும் அவள் போனிலிருந்து வந்தது.


பேசியது. ஈச்சனார் எஸ்டேட்லிருந்து.

“தம்பி .அன்று என் மகனுக்கு அடிப்பட்டது என்று கட்டு போட்டீர்களே. அவனின் அம்மா பேசுகிறேன்.
பத்மா .அம்மாவை அந்த படுபாவி பிரபு துரத்து கிறான்: தடுத்த எங்களையும்
அடித்து விட்டான். உடனே வாங்க தம்பி.” என்று சொல்லி வைத்து விட்டாள்.


“இது தான் அவன் செய்யற கடைசி தப்பு. இதற்கு பிறகு தப்பு செய்ய உயிரோடு இருக்க மாட்டான்.”” என்று கொதித்து பேசினான்.


நிரஞ்சனாவிடமும் இச்செய்தியை சொல்லி, அங்கு வரச் சொன்னான்.


இவர்கள் எஸ்டேட்டிற்கு போய் சேர்ந்தார்கள்.


அவர்கள் சொன்னது.


பத்மா ஆஸ்பிட்டலிருந்து ஒரு மெடிக்கல் கேம்ப்பிற்காக டாக்டர்களும், செவிலியர்களும் வந்து இருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டை செய்தது பத்மா.


அவளுக்கு அவன் செய்த கேடு கெட்ட தனம் எதோ ஒன்று தெரிந்து இருக்கிறது.


அதை தெரிந்துக் கொண்ட அவன் அவளை துரத்தினான்.


இப்போது அனைவரையும் பிடித்துக் கொண்டு, அரண்மனைக்கு போய் இருக்கிறான்.


அங்கு ஓடினார்கள்.


அனைவரையும் அடித்து கட்டி போட்டு இருந்தான்.



வேங்கையன். அதிவீரனையும் பார்த்து, வாங்கடா. உங்களுக்கு காகத் காத்து இருந்தேன்.


“எதோ பெரிய பயில்வான் மாதிரி பேசினா. நீங்க என்னடா வென்றால் புல் தடுக்கி பயில்வான் மாதிரி இருக்கிறீர்கள். என்று சொல்லி, பத்மாவை பார்த்து, இன்னா நர்ஸம்மா. இவர்களை த் தான் அப்படி , இப்படி என்று சொன்னியா……?



“மரியாதையா உன்னிடம் இருக்கிற ஆதாரத்தை கொடுத்தினா உயிர் பிழைக்கலாம். முதலில் இவர்கள் இருவரும் சாவார்கள் . அடுத்து நீ.. அப்ப உன் ஆதாரமும் உன்னுடனே போய் விடும். எப்படி வசதி” என்றான்.


இவர்கள் இருவரும் பேசாமல் அவனையே முறைத்துக் கொண்டு இருக்க | என்னடா முறைக்கிறீர்கள். என்று தன் புஜபலத்தை காண்பித்தான்.

எதிரிகளை அழிப்பதற்கு அவனுக்கு பயன்படும் உத்தி, சண்டைக்கு வரவழைப்பது.


“நீங்கள் இருவரும் சண்டை என்னுடன் போட்டு ஜெயித்தீர்கள் என்றால், நான் அவர்களை விட்டு விடுகிறேன்.”

“இல்லை யென்றால் நீங்களும் செத்து, அவளும் செத்து போய் விடுவாள்.


எப்படி வசதி.”


இருவரும் சண்டைக்கு தயார் என்றார்கள்.


அதற்குள் சின்னமலை கிராமத்து ஆட்கள் வந்து விட்டனர்.


“ஐயா.. நீங்கள் போங்கள். நாங்கள் .
இத்தனை பேர் இருக்கிறோம். அவன் ஆணவத்திற்கு முடிவு கட்டறோம் என்று சொல்ல,’’

“வேண்டாம் “ என்றார்கள்.


அப்பொழுது தான் தனபாலை அறையை விட்டு வெளியே வரவழைத்து, சண்டையை கொடி அசைத்து ஆரம்பிக்க சொன்னான்.


அவரும் சொல்லி பார்த்தார். அட்டுழியம் செய்யாத அழிந்து விடுவாய்.


“ஏய் அப்பா. நீ செய்யாததா”


இவனிடம் பேசி பலனில்லை.


கொடியசைத்தார்.


மக்கள் ஆரவாரம் செய்யாமல் பேசாமல் இருந்தர்கள்.


அனைவருமே சித்தரை மனதார வேண்டிக் கொண்டனர்.


இந்த கொடுங்கோலன் அழிய வேண்டும்.


சித்தர் வாழ்க. சித்தர் வாழ்க என்ற கோஷம் ஏற்பட்டது.


இவர்கள் இருவரும் மைதானத்தின் நடுவில் நின்றார்கள்.


பிரபு வேங்கை போல் பாய,. அவனை தடுத்து, தாங்கள் கற்றுக் கொண்ட வர்மக் கலையை பிரயோகித்து, அவன் கை நரம்பை வேங்கை யன் முறுக்க .
காலில் தன் விரல்களால் அதிவீரன் காலை முடக்க அப்படியே சரிந்தான்.


மக்களிடமிருந்து சித்தர் வாழ்க. சித்தர் வாழ்க என்ற கோஷம் எதிரொலித்தது.


அப்படியே கழுத்தில் அதிவீரன் தன் விரல்களைக் கொண்டு நரம்பை சுண்டி விட , மண்ணில் குப்புற விழுந்தான்.


தனபாலை பார்த்ததும் அதிவீரனுக்கு அவனையும் இந்த உலகத்தை விட்டு அனுப்ப வேண்டும் போல் இருக்க அவருகில் போவதற்குள் வேங்கையன் தடுத்தான்.


“அவனுக்கு தண்டனை கிடைத்து விட்டது. எந்த சொத்திற்கு படுபாதகம் செய்ய துணிந்தானோ அதுவே அவனுக்கு கீழ்நிலையை காண்பித்து விட்டது. ஒரு பிச்சை காரனை போல் இந்த அரண்மனையில் எந்த வசதியும் இல்லாத ஒரு சிறு அறையில் தன் பெரும்பாலான ஆயுளை கழித்துவிட்டான்.

விட்டு விடலாம். அவனுக்கு மிச்சம் எதாவது தண்டனை இருக்குமென்றால், அதை அந்த கடவுள் கொடுத்து விடுவார். “”என்றான்.


இருவரும் பத்மாவையும், மற்றவர்களையும் விடுவித்தனர்.


பத்மாவிடம் என்ன நடந்தது என்று கேட்க, அவள் சொன்ன விஷயம் அதிர்வை தந்தது. அப்படியா ..
எப்படி கண்டு பிடிச்ச .


சொன்னாள்.


அதே நேரத்தில் போலீஸும் புழுதியை கிளப்பிக் கொண்டு, சர்ரென்று வர .நிரஞ்சனா மிடுக்காக இறங்கினாள்.


சுற்றும் முற்றும் பார்த்தாள்.


ஒருவன் தரையில், அந்த மண் புழுதியில் ஒரு காட்டெருமை போல் குப்புற படுத்துக் கொண்டு இருந்தான்.

அவளுக்கு அவன் யார் என்று புரிந்தது.


இவன் தான் அந்த கேடுகெட்ட பிரபுவாக இருக்க முடியும்.


பஞ்சத்தில் அடிப்பட்ட பரதேசி போல் அந்த கம்பீரமான நாற்காலியில் ஒடுங்கி உட்கார்ந்து இருப்பது தனபாலாகத்தான் இருக்க வேண்டும்.” என்று நினைத்தாள்.


என்ன நடந்து இருக்கும் என்று அவளால் ஊகிக்க முடிந்தது.


வேங்கையனிடம், ‘“ஸாரிடா.
இவன் ஆட்கள் எங்களை வரவிடாமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் செய்து விட்டான். அதை யெல்லாம் சமாளித்து வருவதற்கு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.”


அங்கு சுருண்டு படுத்துகிடந்தவனை எழுப்பி உட்கார வைத்தார்கள்.


நிரஞ்சனா அவன் கன்னத்தில் பளார் என்று அறை விட்டாள்


வேங்கையன் அவளிடத்தில் பத்மா சொன்னதை சொல்ல,

‘“ மை காட் அது வேறயா.’”


ஆமாம்.


பத்மாவை கூப்பிட்டாள்.


‘எங்கே ‘..? என்றாள்


ஒரு சிறுவனை அழைத்தாள்.


அக்கா என்று ஓடோடி வந்தான்.


அவன் அரை ஞாண் கயிறில் கட்டப்பட்டு இருந்த பென்டிரைவை எடுத்து கொடுத்தாள்.


அதை பத்திர படுத்திக் கொண்டாள்.


அவனிடம் பத்மா சொன்னது.


இவன் கஞ்சா பயிரிட்டு, தொழிற்சாலை வைத்திருந்தான்.


தொழிலாளர்களை கொத்தடிமைகளாக அங்கேயே இருக்க அவர்களுக்கு சாப்பாட்டில் அபின் கலந்து கொடுக்க அவர்கள் தன்னிலை மறந்து எதிர்க்காமல் வேலை செய்தார்கள்.


ஒரு தொழிலாளி மிஷினில் கை மாட்டி இரத்ததோடு எங்கள் ஆஸ்பத்திரிக்கு வர , அவன் இரத்தத்தில் போதை பொருள் கலந்து இருப்பதை கண்டேன்.


அவனிடம் கேட்க முதலில் மறுத்தவன்.
பிறகு உண்மையை சொல்லிவிட்டு செத்து விட்டான்.


அந்த வீடியோ இருக்கிறது.


இங்கு மெடிக்கல் கேம்ப் நடக்கும் போது, நான் ஒருவருக்கும் தெரியாமல் அந்த பேக்டரி போய் வீடியோ எடுத்து, ஒரு பென்டிரைவில் போட்டு எடுத்து வந்தேன்.


அதை இவன் பார்த்து விட்டு துரத்தினான்.


நான் எப்படியோ தப்பித்து பென்டிரைவை இந்த சிறுவனின் அரைஞான் கயிற்றில் கட்டி விட்டேன்.


நிரஞ்சனா போலீஸ் போர்ஸை வரவழைத்தாள்.


அவர்களை அந்த தொழிற்சாலைக்கு அனுப்பிவைத்தாள்.


பிரபுவிடம், ம்ம்ம் எழுந்திரி.
உன் அப்பா பூபதியை கொன்னதற்காக உன்னை கைது பண்ணுகிறேன் “” என்றாள்.


தொடரும்..
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top