• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
46
22.2

கீழே விழுந்த கஸ்தூரியை அழுத்தமாக பார்த்த கதிர்வேலன்,'இதான் உனக்கு கடைசி தவணை. இன்னொரு முறை முல்லைப்பத்தி எங்கையாவது தப்பா மூச்சு விட்ட. அடுத்தது உனக்கு வாயில நாக்கு இருக்காது' என்று கஸ்தூரியை கண்டித்தவன்.அதிவேகமாக வீட்டில் இருந்து வெளியேற,கதிர்வேலனின் கோபத்தை நன்கு அறிந்திருந்த ரோஜாவிற்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து தான் இருந்தது.

'சந்தோஷமா. இப்ப உனக்கு சந்தோஷமா, உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டு இந்த வீட்டுக்கு வந்த பொண்ணை தவிக்க விட்டுட்டு, இதோ உன் தம்பி விரும்பியவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்க பாரு! இது எல்லாம் நீ பண்ண கேவலத்தால வந்த வினைதான். இங்க பாருடா.
முல்லை பாவம் உன்னை சும்மா விடாது' என்று தன் பங்கிற்கு பாண்டியன் ஜீவாவை வார்த்தையால் வதைக்க, அந்த இடத்தில் ஜீவாவின் சூழ்நிலை என்னவென்று கேட்பதற்கு யாரும் தயாராகவும் இல்லை, மீதி கேட்டாலும் நடந்த உண்மையை சொல்லும் திராணி ஜீவாவிற்கும் இல்லை என்பதே உண்மை.

பாண்டியனின் வீட்டிலிருந்து வெளியேறிய கதிர்வேலன் தன் பைக்கை ஸ்டார்ட் செய்ய.அவனை தொடர்ந்து வந்த நாகராஜன்,''நண்பா.எங்கடா போற' என்றவன். தன் நண்பனின் கரங்களைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.

'கையை விடுடா. அந்த கேசவனுக்கு நான் யாருன்னு புரிய வைக்கிறேன்.எவ்வளவு தைரியம் இருந்தால் என் ரவா லட்டை அவ்வளவு கேவலமா பேசி இருப்பான். என்ன மனுசன்டா அவன்' என்று கதிர்வேலன் தன் கரங்களை மடக்கி அருகில் இருந்த சுவற்றை குத்த,

'ஆனால் நண்பா. எனக்கு உன் மேல ஒரு வருத்தம் இருக்கு' என்றான் நாகராஜன்.

'என்னடா. நான் என்ன பண்ணேன்'
என்று கதிர்வேலன் கேட்க,

'ஏன் நண்பா.உன் தங்கச்சி தான் உன்கிட்ட முல்லையை கல்யாணம் பண்ணிக்க விருப்பமானு கேட்டாங்களே,
அப்பவே அந்த புள்ளையை நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு சொல்லி இருந்தா அந்த புள்ள இன்னிக்கி முருகன் ஐயா வீட்டுக்கு போக வேண்டிய அவசியமே இல்லையே' என்று நாகராஜன் சொல்ல,

'ஏன்டா நீயும் புரியாம பேசுற. முல்லை மனசுல நான் இல்லடா. என்னை விரும்பாத ஒரு பொண்ண நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்' என கேட்டான் கதிர்வேலன்.

'எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல நண்பா.ஆனா முல்லை பாவம். இன்னைக்கு முல்லை படுற கஷ்டத்துக்கு முக்கிய காரணமே உன் அண்ணன் தான். உன் அப்பா சொல்ற மாதிரி உங்க குடும்பம் முல்லைக்கு பண்ணது பெரிய துரோகம்' என்ற நாகராஜனின் சொற்கள் எதுவுமே கதிர்வேலனின் காதில் விழாத பட்சத்தில், முல்லையை அசிங்கப்படுத்திய கேசவனுக்கு தக்க பாடம் கர்ப்பிக்க வேண்டும் என்று தன் மனதிற்குள் மனக்கணக்கை வகுத்து வைத்தார் கதிர்வேலன்.

************************

மதியம் இரண்டு மணி கடந்த நிலையில், சிவகங்கை மருத்துவமனையில் முருகனின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது என்று மருத்துவர் சொல்ல,உலகில் உள்ள எல்லா கடவுளுக்கும் பார்வதியும் முல்லையும் மனதிற்குள் நன்றி தெரிவித்தார்கள்.

கேசவனுக்கும் தன் அக்கா கணவன் உயிருடன் திரும்பியது மகிழ்ச்சியை கொடுக்க,
'டாக்டர் நான் என் அப்பாவை பார்க்கலாமா?' என்று முல்லை கேட்டாள்.

'இன்னும் மூன்று மணி நேரம் கடந்து போய் பாருங்க. ஆனா அவரை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணாதீங்க' என்று மருத்துவர் சொல்ல, எப்படியோ தன் தந்தை நலமாக இருக்கிறார் என்ற செய்தி ஒன்றே முல்லைக்கு இந்த நொடி நிம்மதியை கொடுத்தது.

என்னதான் தன் தம்பியாக இருந்தாலும் தன் கணவன் விஷயத்தில் கேசவன் நடந்து கொண்டதை பார்வதியால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், கேசவனிடம் ஒரு வார்த்தை கூட பேசிடாத பார்வதி, அந்த நொடி அழுது அழுது சோர்ந்து போன முல்லை மீது பரிதாபம் கொண்டவள்,

“நீ போய் கேன்டின்ல எதாவது சாப்பிட்டு வா” என்றார்.

இது வரை பார்வதியின் அக்கறையை உணர்ந்திடாத முல்லை,'எனக்கு எதுவும் வேண்டாம். வேணும்னா நீங்க போய் சாப்பிட்டு வாங்க என்றாள்

முல்லைக்கு தன் மீது நல்ல அபிப்ராயம் இல்லையென்று அறிந்து இருந்த பார்வதி, “சரி வா நம்ப ரெண்டு பேரும் போயி காப்பி தண்ணி குடிச்சிட்டு வரலாம்' என்றபடி இந்த நொடி உண்மையான அன்போடு முல்லையின் கையைப் பிடித்து கேண்டின்கு அழைத்துச் சென்றார் பார்வதி.

முல்லையும் பார்வதியும் ஒன்றாக அங்கிருந்து நகர்ந்ததும்,
கேசவனோ முருகனுக்கு மயக்கம் தெரிந்த பிறகு முல்லையுடன் தனக்கு திருமணம் நடக்குமா இல்லையா என்ற சந்தேகத்தில் பல யோசனைகளோடு நின்று இருந்தவனுக்கு தெரியவில்லை இன்னும் சற்று நேரத்தில் அவனின் வலது கால் இடது கை இடம் மாறப்போகிறது என்று.

முல்லையும் பார்வதியும் கேண்டினில் அமர்ந்து காப்பியை பருகிக் கொண்டு இருக்க, இருவர் இடத்திலும் மௌனம் நிலவியது.

'என்னதான் இருந்தாலும் கேசவன் பண்ணது மிகப்பெரிய தப்பு.
அவனை நான் மன்னிக்க மாட்டேன்' என்று பார்வதி மௌனத்தை உடைக்க, முல்லை அவர் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாமல் அமைதியாகவே அமர்ந்து இருந்தாள்.

'அவர் கண் விழிக்கட்டும். இந்த கேசவனை நான் கண்டிக்க சொல்கிறேன்' என்று பார்வதி சொல்ல, அதற்கும் முல்லை எதிர் வார்த்தை பேசாமல் அமைதியாக இருக்க, அந்த நொடி கேண்டினில் சலசலப்பு ஏற்பட்டது.

'என்ன என்ன இங்க பிரச்சனை? என்று அங்குள்ள நபர்களை பார்வதி விசாரிக்க.

'மாடில சண்டை நடக்குதுங்க. யாரோ ஒருத்தவன், ஒரு ஆளை போட்டு அடி பின்னி எடுக்கிறான்' என்று அந்த நபர் சொன்னதும், பார்வதியும் முல்லையும் வேகமாக கேண்டின்னில் இருந்து மாடிக்கு ஓட.

அங்கே நாகராஜனுடன் வந்திருந்த கதிர்வேலனோ, முழு ஆவேசத்துடன் கேசவனின் மூஞ்சி முகரையை அடித்து உடைத்துக்கொண்டு இருந்ததை பார்த்த முல்லையின் விழிகள் அசையாமல் ஸ்தம்பித்துப் போனது.

'எவ்வளவு தைரியம் இருந்தா எங்க வீட்டு பொண்ண கேவலமா பேசி இருப்ப! அதுவும் என் மாமாவை வேற கீழே தள்ளிவிட்டு இருக்க, உன்னை கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சியா' என்ற கதிர்வேலன் ஒரே தருணத்தில் கேசவனின் முகத்திலும் நெஞ்சிலும் மாறி மாறி மிதித்துக் கொண்டிருக்க,

'அய்யோ அய்யோ என் தம்பி பண்ணது தப்புதான்.அவன் செத்துட போறான். அவனை அடிக்காத அடிக்காத' என்று பார்வதி கதிர்வேலனின் காலை பிடித்து கதறிக் கொண்டு இருந்தார்.

யார் பேசுவதையும் காதில் வாங்காத கதிர்வேலன்,''என்னடா.முல்லைக்கு ஒன்னுனா கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சியா! அவளுக்காக நாங்க இருக்கோம்.அவ எங்க வீட்டுப் பொண்ணுடா.எவ்வளவு தைரியம் இருக்கும் உனக்கு. என்ன கேடுகெட்ட எண்ணமடா உன்னோட எண்ணம். உன்னை எல்லாம் சும்மா விடவே கூடாது' என்று மேலும் கதிர்வேலன் கேசவனை நாலு காட்டுகாட்ட.
கேசவன் வலி தாங்க முடியாமல்
'என்னை விட்டுடு நான் தெரியாம தான் தள்ளி விட்டேன்' என்று கதறினான்.
என்ன? தெரியாம பண்ணியா.இருடா.உன்னை போலீஸ்ல பிடிச்சு கொடுக்கிறேன். எங்க அவ' என்ற கதிர்வேலனின் பார்வை முல்லை மீது படிய, கதிர்வேலனின் ஆவேசத்தை பார்த்தபடி உறைந்து போய் நின்று இருந்தாள் முல்லை

கதிர்வேலன் வேகமாக முல்லையின் அருகே சென்றவன்,' ஏன் டி.இவன் உன் அப்பாவ தள்ளிவிட்டு இருக்கான்!! இவனை போலீஸ்ல புடிச்சு கொடுக்காம நீ என்ன புடிச்சு வச்ச பிள்ளையார் கணக்கா நின்னுகிட்டு இருக்க.வா!!
வந்து அவன் மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடு' என்ற கதிர்வேலன் முல்லையின் கரங்களைப் பிடித்து தன் வசம் இழுக்க, முல்லையோ சற்றும் தாமதிக்காமல் கதிர்வேலனின் கரங்களை தட்டி விட்டாள்

'என்ன டி. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தா இவன் உன்னை ஏதாவது பண்ணிடுவேன்னு மிரட்டுறானா. யாரும் உன்னை ஒன்னும் பண்ண முடியாது. உனக்கு நாங்க இருக்கோம் வா'
என்ற கதிர்வேலன் மீண்டும் முல்லையின் கரங்களைப் பிடிக்க,

'என்ன!? நீங்க இருக்கீங்களா!? எப்படி? எத வச்சு என் கூட நீங்கயெல்லாம் இருப்பீங்கன்னு சொல்றீங்க? என்று கேட்டாள் முல்லை.

'என்னடி பேசுற. நான், என் அப்பா, ரோஜா, ஜீவா அண்ணா இப்படி எல்லோரும் உனக்காக இருக்கோம்' என்று கதிர்வேலன் சொல்ல,

'ம்... ஆமா. இருந்திங்க. நீங்க எல்லாம் எனக்காக அப்போ இருந்திங்க. ஆனா இப்போ நீங்க யாருமே எனக்காக இல்ல. ஏன்.இனி அந்த வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்ற முல்லையின் மனதில் கதிர்வேலன் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று சொன்ன வார்த்தைகள் தான் ஆழமாக பதிந்து இருந்தது.

ஆனால் இந்த நொடி வரை முல்லையின் மனதை அறிந்துகொள்ளாத கதிர்வேலனோ, மீண்டும் முல்லையை தவறாக எண்ணியவன், ஜீவாவை முல்லை திருமணம் செய்து கொள்ள முடியாததை எண்ணி தான் முல்லை இப்படி தன்னை எடுத்தேரிந்து பேசுகிறான் என்று நம்பினான்.

முல்லையின் உதாசீனமான வார்த்தைகள் கதிரை நோகாடிக்க,
கேசவனோ அந்த வலியிலும் கதிரை ஏளனமான தோரணையில் பார்த்து கிண்டலாக சிரித்தான்.

இன்னும் சற்று நேரம் கதிர்வேலன் அங்கு இருந்தாலும் அவனுக்கு தான் அது பிரச்சனையாக வந்து முடியும் என்று எண்ணிய முல்லை,'இனி என் வாழ்க்கையில் நீங்க யாரும் தலையிட வேண்டாம். உங்க குடும்பத்துக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. நீங்க இங்க இருந்து போங்க' என்ற முல்லையின் வார்த்தையை கேட்டு கதிர்வேலனுக்கு அதீதக் கோபம் எழ,'இப்பதான் எனக்கு குளுகுளுன்னு இருக்கு' என்ற கேசவனை அடிக்க பாய்ந்த கதிர்வேலனை தடுத்து நிறுத்தினான் நாகராஜன்.

'வேணா நண்பா. இப்போ சூழ்நிலை சரியில்ல, நீ இவனை அடிப்பதை யாராவது வீடியோ எடுத்து ரிலீஸ் பண்ணிட்டா பெரிய பிரச்சனை ஆயிடும். வா போகலாம்: என்றபடி நாகராஜன் கதிர்வேலனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல, கதிர்வேலனோ, முல்லையை முறைத்த வண்ணமாகவே மருத்துவமனையில் இருந்து வெளியேற.முல்லையின் மூளையோ கதிர்வேலனின் நிழலை கூட இனி காணக்கூடாது என்று அவள் விழிகளுக்கு கட்டளையிட்டது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top