Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 46
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
முல்லை – 22.1
கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்து முருகன் இருக்கும் சிகிச்சை அறையில் இருந்து
வெளியே வந்த மருத்துவர்,
'பெரியவருக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருக்கு, அவருக்கு உடனடியா ஆப்ரேஷன் பண்ணனும், ஆனா அவர் ஹெல்த் இருக்கிற கண்டிஷனுக்கு மாத்திரை மருந்து கொடுத்து சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் எடுத்து வந்ததுக்குப் பிறகுதான் ஆபரேஷன் செய்ய முடியும்' என்று மருத்துவர் சொல்ல,
தாயை இழந்த முல்லைக்கு தன் தந்தையின் அன்பு கிடைக்கவில்லை எனினும், பேருக்காவது தந்தை என்று ஒருவர் இருக்கிறாரே என்ற நிம்மதியும் இந்த நொடி காணாமல் போனது.
'டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என் புருஷனை காப்பாத்துங்க' என்று பார்வதி அந்த இடத்தில் முருகனின் உற்ற துணைவியாக தன் கணவனுக்காக மன்றாட.
தன் வாழ்வில் என்னதான் நடக்கிறது என்று தனக்கே புரியாத நிலையில் முல்லை பிரம்மை பிடித்ததை போல உறைந்து போய் நின்று இருந்தாள்.
'டாக்டர் ஆப்ரேஷன் பண்ணா தான் மாமாவை குணப்படுத்த முடியுமா' என்று கேசவன் கேட்க,
'ஆமா சார். கண்டிப்பா ஆப்ரேஷன் பண்ணி தான் ஆகணும். அவரோட பொண்டாட்டி இவங்க தானே, இவங்ககிட்ட ஆப்ரேஷன் ஃபார்ம்ல கையெழுத்து போட சொல்லுங்க, அப்படியே அவரோட பொண்ணுகிட்டயும் கையெழுத்து வாங்குங்க' என்று செவிலியரிடம் தெரிவித்த மருத்துவர்,
'முருகனுக்கு சுகர் கொறஞ்சதும் ஆப்ரேஷன் பண்ணிடலாம். பயப்படாதீங்க, என்று பார்வதி முல்லைக்கு தைரியம் சொன்ன விதமாக அங்கிருந்து சென்றார்.
'ஐயோ. என் புருஷன் ஐயனார் மாதிரி இருந்தாரே. என் புருஷனை இப்படி பண்ணிட்டியே டா பாவி' என்று தன் தம்பியை பார்வதி கடிந்து கொள்ள,
'அக்கா. நான் ஒன்னும் மாமாவை வேணும்னே இப்படி பண்ணல. இது எதார்த்தமா நடந்தது தான், நீ இந்த பிரச்சனையை பெருசாக்காத. ஒழுங்கா அவருக்கு ஆபரேஷன் முடிஞ்சதும் அவர் கூட நிம்மதியா வாழற வழிய பாரு.அத விட்டுட்டு நாலு பேர் எதிர்ல இந்த மாதிரி கத்திக்கிட்டு இருந்தேனா இன்னைக்கு நைட்டே உன் புருஷன் கதையை முடிச்சிடுவேன்' என்ற கேசவன்,
தன்னையே மிரட்டுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் பார்வதி தன் தம்பியின் உண்மையான முகத்தை பார்த்து வாயடைத்து தான் போனார்.
தன் தந்தைக்கு இந்த அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து விட வேண்டும் என்று முல்லை அழுது அழுது ஓய்ந்தவள்,
அன்னம் தண்ணீர் ஆகாரம் இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் கடவுளின் சிலையின் முன்னே மண்டியிட்டு அமர்ந்திருக்க.
'அக்கா. மாமா ஆபரேஷன்க்கு நான் வீட்டுக்கு போய் பணம் எடுத்துட்டு வரேன், நான் வரதுக்குள்ள இவளோ, நீயோ யார்கிட்டயாவது எதாவது உளறி வச்சிங்க.. அப்புறம் இங்க நடக்குறதே வேற' என்ற கேசவன் வேகமாக மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கடந்த நிலையில். கேசவன் மீண்டும் மருத்துவ மனைக்குள் நுழைந்தவன், முருகனின் அறுவை சிகிச்சைக்காக பணத்தை கட்டியதும்,
முருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சையை ஆரம்பிக்க, முல்லையும் பார்வதியும் உலகத்தில் உள்ள எல்லா கடவுளையும் வேண்டியப்படி சிகிச்சை அறையின் வாசலில் தவிப்புடன் நின்று இருந்தார்கள்.
*****************************
இதே தருணம். குன்னக்குடியில் உள்ள பாண்டியனின் வீட்டில்.
கதிர்வேலன் மேசையில் அமர்ந்து இருந்தவன் எண்ணம் முழுதும் முல்லையை பற்றியே நினைவுகளில் நிறைந்து இருக்க..
'என்ன வாத்தி. கைக்கு வந்த வாழ்க்கையை தவற விட்டோம்ன்னு கவலையா இருக்கீங்களா' என்று கேட்டாள் ரோஜா.
'ரவா லட்டு நம்ம வீட்டுக்கு மருமகளா வரலைனா கூட. அவ கட்டிக்கிட்டு போற இடம் நல்ல இடமா இருக்கனும்' என்று கதிர்வேலன் சொல்ல,
'ஏன். அந்த கேசவனுக்கு தான் முல்லையை கல்யாணம் பண்ணி வைக்க போறாங்கன்னு உங்களுக்கு தெரியாதா' என்று கேட்டாள் ரோஜா.
'ம். தெரியும் அம்மா. ஆனா அந்த கேசவன் எல்லாம் ஒரு ஆளா.அவனை இவ கல்யாணம் பண்ணா கண்டிப்பா இவ சந்தோசமா இருக்க மாட்டா' என்று முல்லையின் எதிர் காலத்தை எண்ணி கவலைப்படும் கதிர்வேலனுக்கு தெரியவில்லை இவன் ஒருவனை தவிர முல்லையின் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வேறொருவர் காரணமாக இருக்க முடியாது என்று.
'நம்ம என்ன பண்ண முடியும் வாத்தி. எப்படியாவது முல்லையை நம்ம கூடவே வச்சிக்க ஆசைப்பட்டு தான் நான் உங்ககிட்ட அவளை கட்டிக்க சம்மதம் கேட்டேன். ஆனா நீங்க தான் காரியத்தையே கெடுத்துட்டீங்க' என்ற ரோஜாவின் வார்த்தையில் உள்ள நியாயத்தை கதிர்வேலன் இன்று நினைத்து பார்த்து தன்னை தானே நொந்து கொண்டார்.
ரோஜாவும் கதிர்வேலனும் பேசிக்கொண்டு இருக்க, தன் அறையில் இருந்து பொறுமையாக எழுந்து வந்தார் பாண்டியன்.
'என்ன ப்பா எதாவது வேணுமா' என்ற கதிர்வேலன் தன் தந்தையின் கரங்களை பற்றி இருக்க,
'நான் ரூம்லயே இருக்குறது ஒரு மாதிரி இருக்கு கதிரு. அதான் கொஞ்ச நேரம் இப்படி உக்கார வந்தேன்' என்ற பாண்டியணை ஹாலில் உள்ள சோபாவில் அமர வைத்தார் கதிர்வேலன்.
காலை பத்து மணியை கடந்தும். நேற்று அடித்த மதுவின் ஆதிகத்தில் ஜீவா கண் விழிக்காமல் நாகராஜன் வீட்டிலேயே உறங்கி இருந்தான்.
நேற்று இரவு முழுவதும் ஜீவா தங்கள் அறைக்குள் வராதவணை நினைத்து மீனா அமைதியாக இருந்தாலும், கஸ்தூரி ஏழரையை இழுக்க தயாராக இருந்த நிலையில்,'அண்ணா. இந்த அநியாயத்தை கொஞ்சம் கேளுங்க' என்று இழுவையாக ஆரம்பித்தார் கஸ்தூரி.
'அத்த. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.அத மனசுல வச்சிக்கிட்டு நீங்க எதுவா இருந்தாலும் பேசுங்க' என்று ரோஜா கஸ்தூரியை கடிந்துகொள்ள,
'என்ன கஸ்தூரி. என்ன பிரச்சனை' என்று வினாவினார் பாண்டியன்.
கஸ்துரி அடிக்கும் கூத்தை எல்லாம் வேடிக்கை பார்த்து கஸ்தூரியின் கழுத்தை பிடிக்கும் அளவுக்கு எழுந்த கோவத்தை எல்லாம் கட்டுப் படுத்திகொண்டான் கதிர்வேலன்.
'என்ன அத்த என்னதான் பிரச்சனை உங்களுக்கு' என்று ரோஜா கேட்டது தான் தாமதம்.
'அண்ணா. உங்க பெரிய பையன் ஜீவா' என்று கஸ்தூரி ஆரம்பிக்கும் முன்னே,
'ஏய் நிறுத்து. எனக்கு எந்த பெரிய பையனும் இல்லை. எனக்கு இப்போ ஒரு பொண்ணு ஒரு பையன் அவ்ளோ தான்' என்று திட்டவட்டமாக சொன்னார் பாண்டியன்.
'அண்ணா. ஜீவா நைட்ல்லாம் வீட்டுக்கு வரல, அதுவும் இல்லாம அவன் குடிச்சிட்டு வந்து அந்த முல்ல பேரை தான் சொல்லிக்கிட்டு இருக்கான். எனக்கு என்னமோ இந்த ஜீவா முல்லையை' என்று கஸ்தூரி அராம்பிக்கும் முன்னே,
'நண்பா நண்பா.' என்ற அழைப்போடு நாகராஜன் பதற்றத்துடன் வீட்டுக்குள் நுழைய,
'என்ன நாகா ஏதாவது பிரச்சனையா' என்று ஏதும் புரியாமல் கேட்டார் கதிர்வேலன்.
நாகராஜனின் முகத்தில் தெரிந்த கலவரத்தை பார்த்து,'டேய் என்னடா என்ன பிரச்சனை' என்று மீண்டும் கதிர்வேலன் கேட்க,
'நண்பா. உன் மாமா. அதான் முல்லையோட அப்பாவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க' என்றவனின் வார்த்தையை கேட்டு அனைவரின் புருவமும் கேள்வியாய் உயர்ந்தது.
'என்னடா சொல்லுற. முருகன் மாமாவையா ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்க' என்று ரோஜா கேட்க,
'ஏன். என்னவாம் அந்த ஆளுக்கு' என்று சின்ன பதற்றம் கூட இல்லாமல் விசாரித்தார் கஸ்தூரி.
'டேய். முருகன் மாமாவுக்கு என்னாச்சு' என்று கதிர்வேலன் கேட்க,
'நண்பா. இன்னைக்கு காலையில நான் முருகன் ஐயா வீட்டுல வேலை பார்க்குற இசக்கி பாட்டியை கோவில்ல பார்த்தேன், அவங்க தான் முருகன் ஐயா ஹாஸ்பிடல்ல இருக்குற விஷயத்தை சொன்னாங்க.
அது மட்டும் இல்ல. முருகன் ஐயாவை கீழ தள்ளி. இன்னைக்கு அவர் ஹாஸ்பிடல்ல இருக்க காரணம் அந்த கேசவன் தான்' என்ற நாகராஜனின் வார்த்தையை கேட்டு கதிர்வேலனுக்கு ஏதும் புரியாமல் போனது.
'என்னடா சொல்ற. கேசவன் ஏன் அவனோட அக்கா கணவனை தள்ளி விடணும்' என்று புரியாமல் கதிர் கேட்கும் வேளையில் அடுப்பணையில் இருந்து மீனா வெளியே வர. அதே தருணம் ஜீவாவும் மது மயக்கம் தெளிந்து வீட்டுக்குள் நுழைந்தார்.
'நண்பா. பாவம் டா முல்லை. நேத்து நைட் அந்த கேசவன் அந்த புள்ளைகிட்ட தப்பா நடந்துக்க பாத்து இருக்கான். அப்போ முருகன் ஐயா அந்த கேசவனை அடி வெளுத்து வாங்கி இருக்காரு,
ஆனா அதுக்கு அந்த கேசவன் முல்லைக்கு பாம்பு கடித்து ஒரு நாள் நைட் நீயும் அந்த புள்ளையும் வெளிய தங்குனத சொல்லிக்காட்டி,அந்த புள்ளையை அசிங்க படுத்தி இருக்கான்.
அதுக்கும் முருகன் ஐயா கேசவனை கண்டமேனிக்கு திட்டி வீட்ல இருந்து வெளியே அனுப்பி இருக்காரு. அப்பவும் அடங்காத அந்த கேடு கெட்டவன்,
அந்த புள்ளையை சந்தேகப்பட்டு, இன்னைக்கு காலையில ஒரு நர்ஸை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து முல்லையை பரிசோதிக்க சொல்லி இருக்கான்.
இதனால கோவம் அடைந்த முருகன் ஐயா கேசவனை அடிக்க போகும்போது கேசவன் அவரை கீழே தள்ளிவிட்டு,அவர் பின்னந்தலையில் அடிபட்டு ஆபரேஷன் பண்ற அளவுக்கு இப்போ அங்க சூழ்நிலை இருக்கு' என்று முருகனின் இல்லத்தில் பணிபுரிந்த இசக்கி. நாகராஜனிடம் சொன்ன விஷயத்தை இப்போது நாகராஜன் பாண்டியனின் வீட்டில் சொல்லிக்கொண்டு இருக்க, கதிர்வேலனின் முகம் கோபத்தில் கொந்தளித்தது.
நாகராஜன் சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்த ஜீவா,'என் முல்லையை பத்தி பேச யாருக்கும் எந்த தகுதியும் இல்ல. இப்பவே போய் அந்த கேசவனை நான் என்ன பண்றேன் பாரு' என்று கோபமாக கைகளை முறுக்கிக்கொண்டு வாசலை நோக்கி செல்ல,
'போதும் நிறுத்துப்பா! நிறுத்து. கட்டண பொண்டாட்டி வீட்ல இருக்கும்போது, வேற ஒரு பொண்ணை முல்லை மல்லினு ஏலம் போட்டுக்கிட்டு இருக்கியே,நீ எல்லாம் மனுஷனா!.ஆமா. இப்போ அந்த கேசவன் கேட்டதுல என்ன தப்பு இருக்கு. இதோ இந்த கதிரும் முல்லையும் ஒரு நாள் நைட் வெளிய தங்கிட்டு தானே வந்தாங்க'
என்று கஸ்தூரி பேசி முடித்த அடுத்த நொடி கதிர்வேலனின் கரங்கள் கஸ்தூரியின் கழுத்தை நெருக்கி பிடித்து, அவரை இரண்டு அடி தன் கரங்களைக் கொண்டு மேலே தூக்கியவாரு,
'அடுத்து ஒரு முறை முல்லையை பத்தி உன் வாயில இருந்து தப்பா ஒரு வார்த்தை வந்தா கூட இந்த கழுத்தை அப்படியே அமுக்கி சாவடிச்சு போட்டுடுவேன்' என்ற கதிர்வேலனின் கண்களில் தெரிந்த ஆவேசத்தை பார்த்து கஸ்தூரியின் சப்த நாடியும் அடங்கிப் போனது.
'ஐயோ மாமா. விடுங்க விடுங்க அம்மா தெரியாம சொல்லிட்டாங்க' என்று மீனா கதிர்வேலனின் கரங்களைப் பிடித்து தன் அம்மாவை விடிவிக்கும்படி கெஞ்ச,
'அப்படியே அந்த பொம்பள கழுத்தை புடிச்சு வெளியே தள்ளுடா கதிர்' என்று ஜீவாவும் தன் பங்குக்கு கஸ்தூரியை கடிந்து கொண்டான்.
'டேய் கதிர். அவளைக் கீழே இறக்கி விடுடா' என்று பாண்டியன் கோபமாக கத்தியவரின் வார்த்தையைக் கேட்டு கதிர் சட்டென்று தன் கரங்களில் இருந்த கஸ்தூரியின் கழுத்தை விடுவிக்க, தொப் என்று புலிமூட்டை கணக்காக கீழே விழுந்தார் கஸ்தூரி.