• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
23
21. நிழலாக இருந்த ஒளி.

காரின் கதவை திறந்துவிட்டு சிவகாமி இறங்குவதற்கு வேங்கையன் உதவி புரிந்தான்.


காரை விட்டு ஒரு மென்மையான தென்றல் இறங்குவது போல் இறங்குபவளை பார்க்க அவள் முகத்தில் தெரியும் தேஜஸ், அழகு கம்பீரம் வரதனையும், பரிமளத்தையும் கையெடுத்து கும்பிட வைத்து வரவேற்க வைத்தது.


குன்னூரின் மென்மை யான குளிர், அந்த இரவின் தன்மையை இரசித்தவாறு பதிலுக்கு அவர்களை வணங்கினாள்.


அதிவீரனும் அவர்களோடு இறங்க அப்போது அவனை பார்த்தார்கள்.


ராஜ உடையில் கம்பீரத்தோடு நின்றவனை பூரிப்போடு பார்க்க, பார்வை அவன் அணிந்திருந்த அந்த மாலை மீது படிந்தது.


பரிமளமும், வரதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


இவனிடம் எப்படி .. என்ற குழப்பத்தோடு அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.


வெள்ளி டம்ளரில் நீர் கொடுத்து உபசரித்தாள்.


பரிமளத்தின் கை நடுங்குவதை சிவகாமி.பார்க்க தவறவில்லை.


அவருக்குரியதை நாம் இத்தனை காலமாக வைத்து இருக்கிறோமே என்ற மன உறுத்தல் அவளை எதிர் கொள்ள சங்கடமாக உணர்ந்தாள்.


பரிமளம் சிவகாமியிடம்”, உங்களை பல வருடங்கள் முன்பு பார்த்து இருக்கிறேன். உங்கள் பெயர் மைத்ரி என்று சொன்னதாக ஞாபகம். “என்று சொல்ல,


அப்படியா …வேட்டுவ மலைக்கு வந்து இருக்கிறீர்களா . அங்கு நான் மைதிரியாக இருந்தேன். என் பெயர் சிவகாமி. என் கணவர் பெயர் செல்வன் என்று சொல்ல இருவர் முகத்திலும் சொல்லா வண்ண அதிர்ச்சி:

அதிவீரனும் மைத்ரி என்றே நினைத்திருந்தான்.


அவன் வேங்கையனை பார்க்க ஆமாம் என்று தலையசைத்தான்.


சிவகாமி செல்வனா.. என்ற ஆச்சரியம் கலந்து.அவரிடம், ஈச்சனார் எஸ்டேட் என்று இழுக்க,


“ஆமாம்” என்று சொன்னாள்.


“கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால், பார்த்தது இல்லை. நீங்கள் உயிரோடு இருப்பது கடவுளின் சித்தம். உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இழைக்கப்பட்டது மாபெரும் துரோகம்.”



“எங்களை மன்னியுங்கள். எங்கள் பங்கிற்கு நாங்களும்” என்று இழுத்து,


அதிவீரன் கழுத்திலிருந்த மாலையை கழற்றி அவளிடம் கொடுத்தாள்.


“இந்த மாலை அந்த குழந்தையுடன் காட்டில் கிடைத்தது . என்று அதிவீரன் எப்படி.தங்களுக்கு வரமாக கிடைத்தான்” என்பதை சொல்ல அதிக்கும் பயங்கர ஷாக்காக இருந்தது.


அவனிடம், ‘“இத்தனை நாளாக உன்னிடம் ‘-உண்மையை மறைத்து விட்டோம். நாங்கள் உன்னை பெற்றவர்கள் இல்லை. வளர்ப்பு பெற்றோர்களே “ என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.



அம்மா… இதைத்தவிர அவனுக்கு அதிர்ச்சியில் பேச நா வரவில்லை.


அவனுக்கு மட்டுமா. வேங்கையனுக்கும்
அதிவீரனா நம் அம்மாவின் மகன். மகிழ்ச்சி இரட்டிப்பாக இருந்தது.



சிவகாமி அவர்களிடம், ‘“ குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது என்று தான் எனக்கு சொல்லப்பட்டது. அந்த துக்கம் வேங்கையனை காண்பித்து, இவன் என் கையில் வந்தவுடன் போய்விட்டது.”


“பிள்ளை இறந்த துக்கத்தை நான் தினம் தினம் அனுபவிக்கணும் என்ற விதி கூட இல்லாமல் பண்ணிவிட்டது.”



சமீபத்தில் தான் நான் பெற்ற குழந்தை இறக்க வில்லை என்று தெரிந்துக் கொண்டேன்.


அவன் நிச்சயம் எதோ ஒரு இடத்தில் நல்ல விதமாக வளர்கிறான் .என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.”


மேலும் அவர்களிடத்தில் அவர்களின் குற்ற உணர்வு போக்கும் விதமாக,


“உங்கள் மீது எந்த தவறும் இல்லை.
இவன் உங்களிடத்தில் வளர வேண்டும் என்பது சித்தரின் எண்ணம். அதுவே கடவுளின் எண்ணமும் கூட. அந்த நேரத்தில் உங்களை அந்த வழியாக வரவழைத்து, அவனின் அழுகுரல் உங்கள் காதில் ஒலிக்கச் செய்து, இவனை பெற்ற தாயினும் மேலாக வளர்த்தது இவன் பெற்ற வரம்.”



“அய்யோ.. அப்படி சொல்லாதீர்கள். குழந்தை பாக்யம் இல்லாமல் நரக வேதனையை அனுபவித்த எங்களுக்கு இவன் கிடைத்தது வரபிரசாதம்.”



“இவன் 5 வயதில் உங்களை தேடி அங்கு வந்த போதே சொல்லி இருக்கணும். சொல்ல முடியவில்லை. அதற்கு தண்டனையாக குற்ற உணர்ச்சியை அனுபவித்து விட்டேன்.”


அதிவீரனை முன்னிருத்தி “ இவனை உங்களிடத்தில் ஒப்படைத்து விட்டேன். ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்ல,


சிவகாமி அவளை பார்த்து,’ i’”உலகில் எந்த செயலும் காரணமின்றி நடைபெறாது .


ஒவ்வொரு நிகழ்வும் தெய்வத்தின் சித்தாந்தம் என்ற சித்தர் சொல்வது போல் ஒரு இலை கூட அசைவது விதியின் கட்டளையே..’”


“ இவன் என் கருவறையில் உதித்தவன்.
ஆனால் நீ அவனை வளர்த்த அன்னை .
அவனுக்கு தந்த அன்பு ,தெய்வம் தரும் அருளுக்கு நிகரானது .”


“இனி நாம் பிரியப் போவதில்லை ,
அதிவீரன் , வேங்கையன் இருவரும் என் கண்கள் “.
.


“இவர்களுக்காக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம். உன் பாசமும்| என் அன்பும் சேர்ந்து அவனுடைய வாழ்க்கையை ஒளி வீசும் தீபமாக்குவோம் .”

“ தெய்வம் நம்மை சந்திக்க வைத்ததற்கு பின்னால் ஓர் அர்த்தம் இருக்கிறது .”


சிவராத்திரி ஆனதால் கோவில்மணி ஓசை மெதுவாக ஒலித்தது .

தென்றல் காற்று இதமாக தழுவியது.


அருகில் கோவிலிருந்து மனம் தவழும் தூபத்தின் வாசனை பரவ அங்கு தெய்வீக அமைதி.

சித்தரின் அருள்வாக்கு.
அன்பே உயிரே மூலமாம்
அருளே வாழ்வின் ஒளியாய்
இரண்டு இதயம் இணைந்திடின்
ஒரு குழந்தை தெய்வம் தானாம்”


அதில் வந்த அந்தப் பாடல் மனதைத் கவர , சிவகாமி பரிமளத்தை அணைத்துக் கொண்டாள் .


அதிவீரனும் ,வேங்கையனும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர் .


வரதனுக்கு தன் மனைவி மனம் மாறியதைக் கண்டு மகிழ்ந்தார்.


இருவரும், பரிமளம் . வரதன் , சிவகாமி காலில் விழுந்து ஆசிர் வாதம் வாங்கிக் கொண்டனர்.



அன்றிரவு அனைவரும் நிம்மதியாக தூங்கினார்கள்


வேங்கையனுக்கு அம்மாவிற்கு அவர் மகன் கிடைத்த திருப்தி. அதுவும் அதிவீரனே மகனாக இருப்பது மிக்க மகிழ்சியாக இருந்தது.


பரிமளத்திற்கு குற்ற உணர்ச்சி சுமையை இறக்கி வைத்ததில் திருப்தி.


சிவகாமிக்கு தன் மகன் கிடைத்ததில் பரம திருப்தி. எப்படியும் தன் கணவரை கண்டு பிடித்து விடலாம்.


தனக்கு இரு மகன்கள் இருக்க எஸ்டேட்டடையும் மீட்டுவிடலாம் என்ற புதிய நம்பிக்கை ஒளி ஏற்பட்டது.



தூங்கும் போது, சித்தர் தன்னை ஆசிர்வதிப்பது போல் உணர்ந்தாள்.


அதிகாலையில் வேங்கையன் எழுந்து விட்டான்.


அடடா. மறந்தே போய் விட்டோமே.


தன் சித்தப்பாக்கள் கொடுத்த போன்களை பற்றி பார்க்கவே இல்லையே.


அதில் எதாவது விஷயம் இருக்குமோ என்று சந்தேகப்பட்டான்


தன் பையில் அடியில் நல்லவேளை அந்த போன்கள் இருந்தது.


அந்த போன் யாருடையது என்று தெரியவில்லை.


அந்த சிம்கார்டை எடுத்து வேறொரு போனில் போட்டு பார்த்தான்.


அதில் வந்த புகைப்படங்கள், வீடியோக்களை உன்னிப்பாக கவனித்தான்.


அங்கு அதிவீரன் வந்தான்.


என்ன வக்கீல். ஸார். காலையிலே கேஸா.

நீ தூங்காம எழுந்துட்டியா ..


உன் அறையில் விளக்கு எரிவதை பார்த்தேன் .


வந்தது நல்லதா போச்சு .


“ என்ன விஷயம் என்றான் .


“இந்த வீடியோவை பாரு.”


வக்கீல் ராமசுப்பு வை சிறுத்தை அடிக்கும் வீடியோ அது .


“ இவர் யாரு வயதானவர் போல இருக்கிறது .”


“ இவர் மிகப்பெரிய லாயர்..”


“ ஈச்சனார் எஸ்டேட்டுக்கு லாயர் .”


எப்படி கூண்டிலிருந்த சிறுத்தையை விட்டு, அவரை கதற வைத்து இருக்கிறார்கள்.


அடுத்துவருவது ஒரு பலான வீடியோ.
அதையும் பாரு..


“அதை பார்த்தவுடன் ,இவன் தான் தனபால் : அம்மாவையும் அப்பாவையும் சொத்திற்காக கொலை செய்ய துணிந்தவன்.”


இப்பொழுது தான் அவனைப் பற்றிய பற்றிய செய்திகளை சேகரித்து வைத்துள்ளேன் என்று அதி சொல்ல,



“டேய். மெல்ல பேசு எல்லோரும் நிம்மதியாக தூங்குகிறார்கள். “


“இதையெல்லாம் அம்மா பார்க்க வேண்டாம்: “


“ராமசுப்புவை தெரிந்து இருக்கும். அவருக்கு இந்த கதி ஏற்பட்டது என்றால் தாங்க மாட்டார்கள்.”


“இது ஜோடிக்கப்பட்ட கொலை. பூபதி என்றவனே வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறான்.”



“ரைட் அடுத்த போனை பார்க்கலாம்”.


பார்த்ததும் அதிர்ந்தாரகள்.


இருவர் முகத்திலும் ஈயாட வில்லை.


“டேய்.. என்னடா இது. !!!!”


“இப்படியெல்லாம் கொடுமை நடக்குமா . கத்தி எடுத்தவன் கத்தியில் சாவான் என்பதுபோல் இருக்கிறது.”


“சரிடா கோத்தகிரிக்கு என்னுடன் படித்த இன்ஸ்பெக்டர் நிரஞ்சனா வந்து இருக்கிறாள்.. அவளை போய் பார்த்து விட்டு வருகிறேன். “


இரு. நாம் ஒரு காபி வைத்து கொள்வோம்”” என்று அதி தன்னுடைய லேப்டாப்பி ல் அதை பதிவு செய்தான்..


நானும் வரவா என்று கேட்க ‘காலை எழுந்தவுடன் இரண்டு அம்மாக்களும் உன்னைத் தான் தேடுவார்கள்.


இப்ப தானே நீ கிடைத்து இருக்காய். அம்மாகூட சிரித்து பேசு.”என்று சொன்னவுடன்,


நீ சொல்வதும் சரிதான். என்றான்.


இந்தா சாவி. என ஜீப்பை எடுத்துக் கொண்டு போ “” என்று சாவியை தூக்கி போட அதை லாவகமாக பிடித்துக்கொண்டு அதிகாலை குளிரில், விடிந்தும் விடியாத நேரத்தில் குன்னூர் டூ கோத்தகிரி போனான்.



ஜீப் மலையேறுவதற்கு வசதியாக இருந்தது. இதில் பத்மா வுடன் பயணித்தால் நல்லா இருக்கும் என்று நினைத்தான்.



நினைத்தவுடனே அருகில் அவள் இருக்க ‘’ஏய் நீ எங்க இங்க …


“நீ என்னை நினைத்தாய் வந்து விட்டேன்.”


“நான் உன்னை நினைக்க வே இலலையே.. “


“இல்ல நீ பொய் சொல்ற. எனக்கு ஒரு வரம் இருக்கு. நீ நினைத்தால் போதும் நான் உடனே எங்கிருந்தாலும் வந்து விடுவேன்.”


‘“அப்படி ஒரு வரத்தை கொடுத்தது யாரும் …?


“அது எதுக்கு உனக்கு”


“பரவாயில்லை சொல்லு”



‘“எனக்கும் அப்படி ஒரு வரம் கேட்டுப்பேன் .”


அதற்கெல்லாம் நிறைய உழைக்க வேண்டும்.


எப்படி. ‘.......


என்ன செய்ய வேண்டும் ன்று சொல்.


சொல்லுவேன் . செய்யணும் “


சொல்லுடி….


எனக்கு ஆயிரம் முத்தம் கொடுத்தால் உனக்கு அந்த காதல் தேவதை வரம் அளிக்கும்.


ஆயிரம் என்ன.. பத்தாயிரம் தர்றேன் என்றதும்., எதிரில் வண்டியில் வந்தவர்கள் எதற்கு நம்மை பார்த்து சிரிகிறார்கள் என்று கேட்டான்.



பாரு பத்மா அவன் எப்படி சிரிக்கிறான்.


பத்மா.. பத்மா.. என்று கூப்பிட்டு பார்க்க அவள் அங்கு இல்லை


சே.. கனவா.


ஜீப்பை செலுத்திக் கொண்டே உம்மு உம்மு என்று தனியே .முத்தம் கொடுத்துக் கொண்டே போனால் சிரிக்காமல் என்ன செய்வார்கள்.


சீரியஸான விடியத்திற்கு போகிறோம். இப்போது இது தேவை தானா… என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.


நிரஞ்சனா அந்த வீடியோவை பார்த்துவிட்டு ‘“மை காட் என் சீனியர் இதைப் பற்றி என்னிடம் சொல்லி இருக்கார்.”



‘“இரண்டாவது வீடியோவில் இருப்பவன் யார் என்று எனக்குத் தெரியும். அவனுக்கு நிசசயம் தூக்கு தண்டனை ‘தான் கிடைக்கும்.”


‘“அவன் யாரென்று தெரியுமா..”


அவன் பெயர் என்ன என்று வேங்கையன் ஆவலாக கேட்க,


‘பிரபு ‘என்றாள்.


தொடரும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top