• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
42
19.2

எந்த உயிரினத்தையும் அடிப்பது தவறு.
அதுவும் பெண்களை அடிப்பது மகா பாவம்.
அதுவும் ஒரு ஆணாக இருந்து ஒரு பெண்ணை அடிப்பது கேவலம்,
இந்த கேவலம் தான் இன்று முருகனின் இல்லத்தில் நடந்தது.

ஆனால். பெற்ற மகளை அடித்தது முருகன் இல்லை, முல்லையை அடித்தது கேசவன் தான்.

தன் மகளை ஒருவன் அடித்தத்தை கூட கண்டிக்காமல், ஏன்! சின்ன முக சுழிப்பு கூட இல்லாமல் மரம் போல் நின்று இருந்தார் முருகன்.

கேசவன் அடித்த அடியில் வலியால் முல்லையின் கன்னம் சிவந்து, கண்களில் கண்ணீர் வடிந்தது.

'என்னடி. விட்டா ரொம்ப பேசுற. போ! போய் வண்டியில ஏறு' என்று கேசவன் முல்லைக்கு கட்டளையிட்டான்.

அவன் தன்னை மிரட்டியதையோ அடித்ததையோ பெரிதாக எடுத்துகொள்ளாத முல்லைக்கு தன் தந்தை மீது வருத்தம் ஏற்பட்டது.

மிருங்கங்கள் கூட தன் பிள்ளையை எவரேனும் தாக்கினால் அவர்கள் உயிரை எடுக்க எதிர்த்து நிற்கும், ஆனால் இங்கே கேசவன் முல்லையை அடித்ததை பார்த்து முருகனுக்கு எந்த வித கவலையும் ஏற்படவில்லை.

'என்ன உன் அப்பாவை பார்த்துகிட்டு நிக்குற. போ. போய் கிளம்பு' என்று மீண்டும் கேசவன் முல்லையை அடிக்க ஓங்கியவனை பார்த்து முல்லை இரண்டடி பின்னே நகர்ந்து செல்ல,' ம். பயம் இருக்கு தானே! போ போய் கார்ல உக்காரு' என்றான் கேசவன்.

'நான் வர மாட்டேன். இப்போ ஏன் சம்மந்தமே இல்லாம பாண்டியன் மாமாவை அசிங்க படுத்த பாக்குறீங்க' என்று முல்லை கண்கள் கலங்கிய நிலையில் கேட்க,

'நான் தான் எப்பவோ அதற்கு உண்டான காரணத்தை சொல்லிட்டேனே! ம். போய் காருல உக்காரு' என்று முருகனும் பாண்டியணை பழி தீர்க்க எண்ணியவரின் மனதில் முல்லை மீது இம்மி அளவும் அன்பு இல்லாமல் போனது.

'நீங்க என்ன சொன்னாலும் நான் வர மாட்டேன்' என்று முல்லை அடம் பிடித்தவளின் கையை பிடித்து வலுகட்டாயமாக கேசவன் காரில் ஏற்றியவன் இன்று எப்படியாவது ஊருக்கு மத்தியில் வைத்து பாண்டியன் குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் முருகன் மற்றும் பார்வதியை அழைத்துக் கொண்டு முல்லையுடன் குன்னக்குடியை நோக்கி காரை விரட்டினான்.

வழியெல்லாம் அழுதுக்கொண்டே இருந்த முல்லைக்கு அடுத்த நொடி தன் வாழ்வில் என்ன நடக்க போகிறது என்ற பயம் எழுந்தது.

'ஏன் டா தம்பி. நம்ம சொந்தங்களை எல்லாம் பாண்டியன் வீட்டுக்கு வர சொல்லிட்டியா' என்று பார்வதி கேட்க,
'ஆமா அக்கா.பஞ்சாயத்து நடக்குற இடத்துக்கே எல்லோரையும் வர சொல்லி இருக்கேன்' என்றான் கேசவன்.

'நல்ல காரியம் பண்ணீங்க மாப்புள. அந்த பாண்டியனுக்கு நம்ம யாருன்னு காட்டணும், இனி அவன் அந்த ஊருல தலை நிமிர்ந்து நடக்கவேக் கூடாது' என்ற முருகனின் வன்மத்தை பார்த்து முல்லைக்கு மேலும் தன் தந்தை மீது அவமரியாதை ஏற்பட்டது.

'எல்லாம் நல்லப்படியா முடிந்ததும், அடுத்த முகூர்த்ததில் நம்ம கேசவனுக்கு முல்லையை கல்யாணம் பண்ணி வைக்கணும்' என்று பார்வதி சொல்ல,
'எல்லாம் இனி நமக்கு நல்லதாகவே நடக்கும்' என்றார் முருகன்.

****************************

இதே தருணம். பாண்டியன் இல்லத்தில், தன் தந்தைக்கு காலை உணவை கொடுத்து, மாத்திரையை எடுத்துக்கொடுத்த ரோஜா,'அப்பா. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்' என்று சொல்ல,

'அந்த நம்பிக்கை துரோகிகளை பற்றி மட்டும் பேசாத' என்று ரோஜா சொல்ல வந்ததை சொல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார் பாண்டியன்.

'அண்ணன் தரப்பு நியாயம் என்னனு கேக்காம நீங்க அவர் மேல கோவப்படுறது தப்பு ப்பா ' என்று ரோஜா சொல்ல,

'யார் தப்பு!?
நானா தப்பு??
எப்படி மா நீ என்னை தப்புனு சொல்லுற, கதிரும் முல்லையும் பாவம் ரோஜா,
அவங்க ரெண்டு பேருக்கும் துரோகம் பண்ணிட்டு இதுங்க ரெண்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்குதுங்களே, அத எப்படி ரோஜா என்னால ஏத்துக்க முடியும்' என்ற பாண்டியனின் சத்தமான குரலைக் கேட்டு கதிர்வேலன் இவர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

'அப்பா. நீங்க ஏன் இப்படி உணர்ச்சி வாசப்படுறீங்க,அண்ணன் முல்லையை எந்த அளவுக்கு விரும்புச்சுனு எனக்கு நல்லாவே தெரியும், ஆனா இப்போ மீனாவை அண்ணன் கல்யாணம் பண்ணிருக்குன்னா! கண்டிப்பா இதுக்கு பின்னாடி எதாவது ஒரு காரணம் இருக்கு' என்று கதிர்வேலன் சொல்ல,

'அப்படியென்ன பொல்லாத காரணம். என்னவா இருந்தாலும் அவன் என்கிட்ட தானே சொல்லி இருக்கனும்' என்று பாண்டியன் கோவமாக கேட்க,

'அதான் அப்பா நானும் சொல்லுறேன். அண்ணனோட இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணமுன்னு அண்ணனை கேட்டா தானே தெரியும்' என்றார் கதிர்வேலன்.

'எனக்கு அவனை பார்க்கவே பிடிக்கல கதிர்.என் முன்னாடி அவன் வந்தா எனக்கு இருக்குற கோவத்துல கண்டிப்பா அவனை நான் கொன்னே போட்டுடுவேன்' என்ற பாண்டியனின் கோவத்தை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் கதிர்வேலனும் ரோஜாவும் குழம்பி போனார்கள்.

இவர்கள் மூவரும் ஒன்றாக ஒரே அறையில் இருக்கும் தருணம்,'நண்பா.' என்ற நாகராஜனின் அழைப்பில் கதிர்வேலன் வெளியே வந்ததும்,'நண்பா.வாசல்ல உங்க முருகன் மாமா ஊர்க் காரங்க எல்லாம் வந்து இருக்காங்க' என்றான் நாகராஜன்.

'என்ன ஊர் காரங்களா.' என்ற கேள்வியோடு கதிர்வேலன் வாசலை நோக்கி நடக்க,
அங்கே வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் நான்கு ஐந்து பெரியவர்கள் நின்று இருந்தார்கள்.

'வாங்க. உள்ள வாங்க' என்று கதிர்வேலன் அவர்களை வீட்டுக்குள் அழைக்க,'தம்பி. நாங்க இங்க நலம் விசாரிக்க வரல, உங்க அப்பா பாண்டியனை பஞ்சாயத்துக்கு வர சொல்லி தகவல் சொல்லிட்டு போக தான் வந்தோம்' என்று ஒருவர் சொல்ல,

'அப்பாவுக்கு உடல் நலம் சரியில்ல, அவர் தீர்ப்பு சொல்ல எல்லாம் இப்போதைக்கு வர முடியாது' என்றான் கதிர்வேலன்.

'தம்பி. உங்க அப்பாவை தீர்ப்பு சொல்ல நாங்க அழைக்க வரல, உங்க அப்பா பேர்ல ப்ராது கொடுத்து இருக்காங்க, அதுக்காக தான் அவரை பஞ்சாயத்துக்கு வர சொன்னோம், இன்னும் அரைமணி நேரத்துல பஞ்சாயத்து கூடிடும். உங்க அப்பாவையும் உங்க பெரிய அண்ணனையும் அங்க வர சொல்லிடுங்க' என்றார் இன்னோருவர்.

'என்ன உளறுறீங்க, என் அப்பா மேல யார் ப்ராது கொடுத்தாங்க' என்று கதிர்வேலன் கேட்க,'எல்லாம் உன் அத்த புருஷன் முருகன் தான்' என அவர்கள் சொன்னதும், கதிர்வேலனுக்கு எல்லையில்லாத கோவம் எழுந்தது.

'சீக்கிரம் வர சொல்லு ப்பா.' என்ற பெரிய மனிதர்கள், பாண்டியனின் வீட்டில் இருந்து பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு சென்று இருக்க, அதித கோவத்தோடு உள்ளே நுழைந்த கதிர்வேலனோ இந்த செய்தியை தன் தந்தையிடம் தெரியப் படுத்தினார்

தகவலை கேட்ட பாண்டியன் விரக்தியாக சிரித்தவாரு,'உப்பு தின்றவன் தண்ணி குடிச்சு தானே ஆகணும்' என்றப்படி பஞ்சாயத்துக்கு கிளம்ப,
'அப்பா நானும் வரேன்' என்று ரோஜாவும் தன் தந்தையிடன் கிளம்ப,
'வீட்டுல இருக்குற ரெண்டு துரோகிகளையும் பஞ்சாயத்துக்கு வர சொல்லிடு கதிர்' என்றப்படி பாண்டியன் காரில் ஏறி அமர,
அடுத்த பத்தே நிமிடத்தில் குன்னக்குடி பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகே உள்ள சின்ன கட்டிடத்தில் பெரியவர்களின் முன்னிலையில் பாண்டியனின் குடும்பமும் முருகனின் குடும்பமும் நேருக்கு நேர் நின்று இருந்தார்கள்.

****************************

மீனாவும் ஜீவானந்தமும் ஜோடியாக நின்று இருக்க, கன்னம் சிவந்த நிலையில் கண்களில் கண்ணீருடன் நின்று இருந்த முல்லையை பார்த்து காதல் தோல்வியால் தான் வருந்துகிறாள் என்று தப்பு கணக்கு போட்டான் கதிர்வேலன்.

மாமன் மச்சான் தகராரை தீர்த்து வைக்க இரு வீட்டின் சொந்தங்களும் ஒன்று கூடி இருக்க,இவர்களுடன் கஸ்துரியும் கெத்தாக வந்து நின்றவளின் திமிரான பார்வை முல்லையை ஏளனமாக உள் வாங்கி இருந்தது.

'என்னப்பா பாண்டியா இது. இந்த ஊருக்கே நீ தான் பஞ்சாயத்து தலைவர். ஆனா உன் குடும்பத்துலயே இப்படி ஒரு பிரச்சனை வந்து இருக்கே. இதுக்கு நீ என்ன முடிவு சொல்ல போற' என ஒருவர் சபையில் முதலில் பேச தொடங்கினார்.

'இருங்க இருங்க. இப்போ இங்க என்ன நடந்துச்சுனு என் அப்பாவை பஞ்சாயத்துல நிக்க வச்சி நீங்க எல்லாம் கேள்வி கேக்குறீங்க' என்ற கதிர்வேலனின் பார்வை முருகனின் அருகே நின்று இருந்த கேசவன் மற்றும் பார்வதி மீது படிந்தது.

'தம்பி நீ சத்த சும்மா இரு ப்பா. பெரியவுங்க பேசிகிட்டு இருக்கோம் தானே.' என்ற ஒருவர்,'முருகா. எதுக்காக இந்த பஞ்சாயத்தை ஏற்பாடு பண்ணினன்னு நீயே சபையில சொல்லு பா' என்று சொல்ல,

'என்னத்த சொல்ல சொல்லுறீங்க, என் மகளை இந்த பாண்டியன் அவர் வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போக போறேன்னு வாக்கு கொடுத்துட்டு, இன்னைக்கு வேற ஒரு பொண்ணை அந்த ஆளோட பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு, இது தான் இந்த பெரிய மனுசனோட நியாயம் தர்மமா' என்று முருகன் கேட்க, ஜீவா குனிந்த தலை நிமிறாமல் சிலையென அத்தனை பேர் எதிரிலும் சூழ்நிலை கைதியாக நின்று இருந்தார்.

'ஏன் பா பாண்டியா. முருகனோட பொண்ணை நீ உன் பையனுக்கு கட்டி வைக்க போறதா வாக்கு கொடுத்த விஷயம் எங்க எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனா இப்போ இந்த பொண்ணு மனசுல ஆசையை வளர்த்துட்டு, இப்படி திடிர்னு உன் பையனுக்கு வேற பொண்ணை கட்டி வச்சது என்ன நியாயம் பாண்டியா' என ஒருவர் கேட்க,

'நீங்க எதிர்பார்க்குற நியாயம் தர்மம் எல்லாம் இந்த ஆளுகிட்ட கிடைக்காது. இந்த ஆளு முல்லையை அவங்க வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போக நினைத்ததுக்கு காரணமே எங்களோட சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டு தான். ஆனா இந்த வீட்டுக்கு முல்லை மருமகளா போனா எங்க சொத்துல இருந்து ஒத்த பைசா தர மாட்டோம்னு சொன்னதால விவரமா எங்க பொண்ணை ஏமாத்திட்டு இப்போ அவங்க பையனுக்கு வேற பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க' என்ற பார்வதியின் பேச்சை கேட்டு கதிர்வேலன் கைகளை மடக்கிக்கொண்டு சண்டைக்கு சென்றவரின் கரங்களை பற்றி இருந்தாள் ரோஜா.

'என்ன பாண்டியா. இவங்க உன் மேல சொல்லுற குற்றத்துக்கு உன்னோட பதில் என்ன. பாவம்பா அந்த முல்ல பொண்ணு. அந்த பொண்ண, உங்க வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போறேன்னு சொல்லி மனசுல ஆசையை வளர்த்துட்டு இப்போ உன் பையனுக்கு வேற பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருக்கியே, இதெல்லாம் நல்லவா இருக்கு' என்ற பெரியவர்களின் குற்றசாட்டில் பாண்டியன் கூனி குறுகி போனார்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top