• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
42
பாலைவனத்து முல்லை

முல்லை - 19.1

அன்றைய தினம் மாலை நேரம் பாண்டியனை மருத்துவமனையில் இருந்து கதிரும் ரோஜாவும் வீட்டிற்கு அழைத்து வர.பாண்டியனைப் பார்த்ததும் மீனா ஓடி வந்தவள்,' மாமா. இப்போ உங்க உடம்பு எப்படி இருக்கு' என்று கேட்க,

'ரோஜா.என் கண் எதிரில் இந்த நம்பிக்கை துரோகியும், இவ புருஷனும் வரவே கூடாது. இவங்க இங்கே இருந்தா நான் இனி இங்கே இருக்க மாட்டேன்' என்று பாண்டியன் கோபமாக கத்த.

'இது என்ன அண்ணா நியாயம்!! என் பொண்ணு கழுத்துல உங்க பெரிய பையன் தாலி கட்டிருக்கான். அப்படின்னு பார்த்தா இந்த குடும்பத்தோட மூத்த மருமக என் பொண்ணு தான். என் பொண்ணு இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு' என்று கஸ்தூரி சம்பந்தி என்ற முறையில் வார்த்தையில் ஜாலம் காட்டி பேசிய வரை பாண்டியன் கோபமாக முறைத்தார்.

'அத்த.உங்க வயசுக்கு கொஞ்சமாவது பக்குவமா நடந்துக்கோங்க. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல இருந்து இப்பதான் அழைச்சிட்டு வந்து இருக்கோம். மேற்கொண்டு ஏதாவது பிரச்சனை பண்ணீங்கன்னா மரியாதை கெட்டும்' என்று ரோஜா கஸ்தூரியை எச்சரித்தவள்,

மீனா அண்ணி.டாக்டர் அப்பாவை ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காரு.பயப்படும்படி ஒன்னும் இல்ல. நீங்க போய் ஜீவா அண்ணன் ரூம்ல இருங்க. மத்த விவரம் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்' என்ற ரோஜா.. மீனாவை தன் அண்ணியாக ஏற்றுக் கொண்டாள்.

பாண்டியனின் கோவத்துக்கு ஆளான மீனாவின் ஓரப்பார்வை கதிர்வேலன் மீது விழ,அவனோ மீனா என்ற ஒருவள் தன் எதிரே நிற்கிறாள் என்பதை கூட கவனிக்க இஷ்டம் இல்லாமல் தன் தந்தையை அழைத்துக் கொண்டு பாண்டியனின் அறைக்குள் நுழைந்தான்.

ரோஜாவும் கதிர்வேலனும் பாண்டியனை அவர் அறைக்கு அழைத்து செல்ல,
'நீ என்னடி மீனா,சும்மா இவங்க கிட்ட எல்லாம் பம்பிகிட்டே இருக்க. நீ இந்த வீட்டோட மூத்த மருமக. இங்க உனக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு.அடுத்த முறை அண்ணன் இந்த மாதிரி பேசனா நல்லா நறுக்குன்னு கேள்வி கேட்டு விடு,புரியுதா! இல்லன்னா சொத்த பிரித்து கொடுக்க சொல்லு. நீயும் ஜீவாவும் இந்த வீட்டில ராஜா ராணி மாதிரி வாழலாம்' என்று கஸ்தூரி தூபம் போட.. மீனா தன் அன்னையின் பேச்சை கேட்டு கஸ்தூரியை கொலை காண்டில் முறைத்துக்கொண்டு இருந்தாள்.

'ம்.எப்படியோ நீ அந்த குடிகாரன் கதிர்வேலனை கல்யாணம் பண்ணாம, நல்லா படிச்சு, அடுத்த பஞ்சாயத்து தலைவரா ஆகப்போற ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணிக்கிட்ட, ம்.இப்போ நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா' என்று கஸ்தூரி சொல்லி வாயை மூடுவதற்குள்..

'முல்ல...முல்ல..' என்ற உரக்க கத்திய ஜீவானந்தத்தின் குரலில் அந்த வீடே ஆட்டம் கண்டது.

'முல்ல...முல்ல...' என்ற ஜீவானந்தத்தின் குரலில் அந்த வீடே ஆட்டம் கண்டதைப் போல உணர்ந்து கதிர்வேலன் ரோஜா ஆகிய இருவரும் பாண்டியனின் அறையில் இருந்து வெளியே ஓடி வர,

மீனா கஸ்தூரி என்று இவர்கள் இருவரும் ஒன்றாக நின்று இருக்க,
ஜீவானந்தம் மூச்சு முட்ட குடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவன்,
'கதிரு..என்னை மன்னிச்சிடு டா'
என்று கைக்கூப்பி கதிர்வேலனை பார்த்து கும்பிட்ட ஜீவானந்தம், அருகே நின்று இருந்த கஸ்தூரியின் மீது வாந்தி எடுத்து.அப்படியே அரை போதையில் மயங்கி கீழே சரிந்தார்.

தன் அண்ணனை இப்படி ஒரு நிலையில் பார்த்த கதிர்வேலன் பதறிப்போய், 'அண்ணா.' என்று தன் வசம் அனைத்துக்கொண்டு, 'இது என்ன புது பழக்கம்' என கேட்டதும்,
'என்னை மன்னிச்சுடு முல்ல' என்று வாய்விட்டு புலம்பினான் ஜீவா.

'ஐயோ ஐயோ இந்த அநியாயம் எங்க நடக்கும், காலையில என் பொண்ணு கழுத்துல தாலியை கட்டிட்டு நைட்டு குடிச்சிட்டு வந்து முல்ல மல்லின்னு உளறிக்கிட்டு இருக்கானே! இவனை நம்பியா! என் மக வாழ்கை நல்லா இருக்க போகுதுன்னு சந்தோஷப்பட்டேன்' என்று வாயில் வயிற்றில் அடித்துக்கொண்டு கஸ்தூரி கத்த ஆரம்பித்து இருந்தார்.

'ஐயோ அத்த. வாயை மூடுங்க, உள்ள அப்பா உடல் நிலை சரியில்லாம படுத்து இருக்காரு, ஏற்கனவே அவரு மனசால உடைஞ்சி போயிட்டாரு. இப்போ நீங்க வேற இப்படி கத்தி பேசி அப்பாவுக்கு மேலும் பிரச்சனையை உண்டாக்காதீங்க' என்ற ரோஜாவை பார்த்து கஸ்தூரி கடுப்புடன் முறைத்தார்.

'முல்ல.என்னை மன்னிச்சுடு. கதிரு என்னை மன்னிச்சுடு. அப்பா... அப்பா என்னை மன்னிச்சிடுங்க அப்பா' என்று புலம்பும் ஜீவானந்தத்தை பார்த்து மீனா தேம்பி அழுதவளை பார்ப்பதற்கு ரோஜாவிற்கு கஷ்டமாக இருந்தது.

'ஐயோ. என் மேலையே வாந்தி எடுத்துட்டானே. என்னதான் இந்த வீட்டுக்கு நாம் சம்மந்தயானாலும், இந்த குடிகாரன்ங்க Focus மட்டும் என் மேல தான் இருக்கும் போல' என்று புலம்பிக்கொண்டே கஸ்தூரி குளிப்பதர்க்காக தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்துக்கொண்டார்.

கஸ்தூரி போன பாதையை முறைத்து பார்த்த ரோஜா, 'வாத்தி. நீங்க ஜீவா அண்ணனை கிணத்தடிக்கு அழைச்சிட்டு போங்க' என்றவள். வீட்டை சுத்தம் செய்ய தண்ணீரைக்கொண்டு வந்தாள்.

கதிர்வேலன் ஜீவாவை தோட்டத்துக்கு அழைத்து சென்றதும், 'ரோஜா. வீட்டை நான் சுத்தம் பண்ணிக்கிறேன், நீ கதிர் மாமா கூட போய் ஜீவா மாமாவுக்கு என்ன வேணும்னு பாரு' என்ற மீனாவை ரோஜா அழுத்தமாக பார்த்தாள்.

ரோஜாவின் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று அறிந்துக்கொண்ட மீனாவோ, 'நீ ஏன் என்னை இப்படி பாக்குறன்னு எனக்கு புரியாம இல்ல ரோஜா.ஆனா உன் கேள்விக்கு என்கிட்ட இப்போதைக்கு எந்த பதிலும் இல்லை' என்ற மீனாவின் குரலில் அப்படியொரு ஒரு வலி மறைந்து இருந்தது.

இருக்க தானே செய்யும்.மீனா கடந்த மூன்று வருடங்களாக கதிர்வேலனை தான் தன் மணவாளனாக நினைத்து கற்பனையில் அவருடன் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் இரவில் இத்தனை வருட கனவு காற்றாக கரைந்ததை எண்ணி இப்போதைக்கு மீனாவால் அழ மட்டுமே முடிந்தது.

மீனாவை பார்த்து பெருமுச்சுடன் ரோஜா தோட்டத்து பக்கம் செல்ல, 'என்னை மன்னிச்சிடு முல்ல' என்ற அதே புலம்பளை பாடிக்கொண்டு இருந்தார் ஜீவா.

தன் அண்ணன் தலையில் கிணற்று தண்ணீரை இரைத்து ஊத்திய கதிர்வேலனுக்கு, தன் அண்ணன் முல்லை மீது வைத்து இருக்கும் காதலின் ஆழத்தை எண்ணி உள்ளுற ஜீவா மீது மதிப்பு ஏற்பட்டது.

முல்லை மீது ஆழமான காதலை தனக்குள் வைத்து இருக்கும் ஜீவா, ஏன் மீனாவை திடிர் திருமணம் செய்ய வேண்டும் என்று யோசனையில் கதிர்வேலன் தன் அண்ணனை குளிக்க வைத்துக்கொண்டு இருக்க, 'வாத்தி. எனக்கு என்னமோ இதுக்கெல்லாம் காரணம்' என்று ரோஜா சொல்லி முடிக்கும் முன்னே,
'கூட்டு சதி தான்' என்றார் கதிர்வேலன்.

'யார் பண்ணி இருப்பாங்க' என்று ரோஜா கேட்க, 'யாரு, ஏன், எதனால இப்படி எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியது மீனாவும் அண்ணனும் தான்' என்று கதிர்வேலன் சொல்ல,

'அதுக்கு வாய்ப்பில்ல. ரெண்டு பேரும் வாயை திறக்க மாட்டுறாங்க, அதனால நீங்களே என்ன ஏதுன்னு கண்டுப்பிடிங்க' என்றாள் ரோஜா.

'ம். நான் பார்த்துக்குறேன்' என்ற கதிர்வேலன் ஜீவாவை அவர் அறைக்கு அழைத்து செல்ல,'என்னை எல்லோரும் மன்னிச்சிடுங்க' என்ற இறுதி வார்த்தையோடு அப்படியே கட்டிலில் கவுந்து விழுந்தவரை கதிர்வேலன் ஒழுங்காக படுக்க வைத்தான்.

'ஏன் வாத்தி. அப்பா சொன்னது போல முல்லைக்கு நம்ம துரோகம் பண்ணிட்டோமோ' என்ற ரோஜாவின் கேள்விக்கு கதிர்வேலனிடம் பதில் இல்லாமல் போனது.

'நேற்று வரைக்கும் முல்லை தானே ஜீவா அண்ணனை கல்யாணம் பண்ணிக்க போறதா இருந்துச்சு, நம்ம மட்டும் முல்லையை அன்னைக்கு கோவில்ல இருந்து அழைச்சிட்டு வராமல் இருந்து இருந்தா இந்நேரம் அவளுக்கு கேசவன் கூட கல்யாணம் முடிந்து இருக்குமே, பாவம் அவ வாழ்க்கையை நம்ம எல்லாம் சேர்ந்து தான் நாசமாக்குற மாதிரி எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு' என்ற ரோஜாவின் கண்களில் முல்லையை நினைத்து கண்ணீரும் வந்தது.

'ஜீவா அண்ணன் மீனா கல்யாணம் நம்ம யாருமே எதிர் பார்க்காத ஒன்று. ஆனா நீங்க சொன்ன மாதிரி ரவா லட்டு பாவம் தான்' என்ற கதிர்வேலனுக்கோ முல்லையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

'ஏன் ம்மா. நான் வேணும்னா நாளைக்கு சிவகங்கை போய் ரவா லட்டை பார்த்துட்டு வரவா' என்று கதிர்வேலன் கேட்க,

'ம். ஆமா வாத்தி, அது தான் முறையும் கூட. பாவம் முல்லை. கண்டிப்பா அவளை அந்த வீட்டுல இந்நேரம் அந்த பார்வதி கரித்து கொட்டி வேதனை படுத்திகிட்டு இருக்கும், அதனால நீங்க எதுக்கும் நாளைக்கு போய் முல்லையை பார்த்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க' என்ற ரோஜாவின் மனதில் இனி எப்படியாவது முல்லைக்கு கதிர்வேலனை மனமுடித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

*****************************

இரவெல்லாம் உறங்காமல் தனித்து இருந்த முல்லைக்கு பாம்பு கடித்த அசதியும் சேர்ந்து இருக்க, மறுநாள் காலை அவளாகவே எழுந்து காலை கடன்களை முடித்த பிறகு தனக்கான உணவை தயார் செய்தாள்.

'என்ன மா அப்பாவுக்கு சாப்பாடு இல்லையா' என்று அலட்டிகொள்ளாமல் கேட்ட முருகன், முல்லையின் அருகே வந்து அமர்ந்ததும்,

'என் கையாள நீங்க சாப்பிட மாட்டீங்களே!' என்ற முல்லை வேகமாக சாப்பிட்டு முடித்து தட்டை எடுத்துக்கொண்டு அடுப்பணைக்குள் புகுந்தாள்.

தன் மகளை எப்படியாவது சமாதானம் செய்து பாண்டியனின் பெயரில் புகார் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த முருகன், 'முல்ல. சீக்கிரமா போய் கிளம்புமா' என்றதும், 'எங்க கிளம்பனும்' என்று கேட்டாள் முல்லை.

'என்னடி நீ இப்படி கேக்குற, அந்த பாண்டியன் உனக்கு எவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகம் பண்ணி இருக்கான், அவனை பஞ்சாயத்துல நிக்க வச்சி நாக்கை பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கேப்போம்' என்ற பார்வதியை பார்த்து ஏளனமாக சிரித்தாள் முல்லை.

தன் மகளின் செயலை பார்த்து தன் கோவத்தை கட்டுப்படுத்திகொண்ட முருகன், 'கிளம்பு முல்ல.' என்று சொல்ல, 'என்னால முடியாது' என்றவளின் கன்னத்தில் பளார் என்று அறை விழுந்து இருந்தது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top