New member
- Joined
- Jul 12, 2025
- Messages
- 23
- Thread Author
- #1
பூபதி இறந்ததும், தனபால் அவன் மகன் பிரபுவை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
போலீஸின் பார்வை அவன் பக்கம் திரும்பாமல் இருக்க பிரபுவை. சுவீகாரம் எடுக்க வேண்டியதாக இருந்தது
பிரபு பங்களா விற்குள் நுழைந்தவுடனே சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் பிறந்ததிலிருந்து சாதாரண வீட்டில் தான் இருக்கிறான். பூபதிக்கு பெரிய வசதி ஒன்றும் ஒன்றும் கிடையாது. வெறும் அடிதடி. கட்டபஞ்சாயத்து. அவனுக்கு பணம் சம்பாதிக்க தெரிந்ததும் இல்லை. அதை தக்க வைத்துக் கொண்டதும் இல்லை.
இந்த அரண்மனையின் பிரம்மாண்டம் அவனை அசர அடித்தது. அரண்மனை மாதிரி இருக்கிற பெரிய வீடெல்லாம் சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கிறான் . பூபதி அவனையோ அல்லது அவனது மனைவியையோ அழைத்தது . வந்தது இல்லை.
தனபாலும் அழைத்ததும் இல்லை.
பிரபு யோசித்தான்.
‘“நம்ப நைனா பிழைக்க தெரியாதவரா இருந்து எமலோகம் போய் விட்டாரே.”
இப்படி ஒரு பணக்கார நண்பனை வைத்துக் கொண்டு இப்படி புலிகிட்ட அடி வாங்கி இறந்து விட்டாரே..
இந்த சொத்துக்களை ஆட்டைய போட்டு இருந்தால், பெரிய பெரிய நடிகைகளை விலைக்கு வாங்கி இருக்கலாம் என்று அவன் பிஞ்சில் பழுத்த மனம் கேவலமாக எண்ணியது
அப்பா அப்பா என்று கூப்பிட்டு, தனபாலிடம் மரியாதையுடனும் பவ்யத்துடனும் நடந்துக் கொண்டான்.
தக்க தருணத்தை எதிர் பார்த்து காத்து இருந்தான்.
அவன் மேஜர் ஆகும் காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தான்.
18 வயது வந்தது. அவன் முகமும் பூபதியை போல் கர்ண கொடூரமாக
சிந்தனைக்கேற்றாற் போல் மாறியது.
அவனின் நடை உடை மாறியது.
18 க்கு வளர்த்தி 25 போல் இருந்தது.
ஜமீன் சாப்பாடு வளர்த்தியை தந்தது.
தனபாலிடம் “: நான் உங்களுக்கு பாதுகாவலா இருக்கும் போது இந்த சோப்ளாங்கி பாடிகார்ட்ஸ் தேவையா “.
என்றான்:
இரு க்கட்டும். என்று தனபால் கூற,
“இல்லை அப்பா . இவர்களை அனுப்பி விடுங்கள் “என்று சற்று கோபமாகத் தான் சொன்னான்.
ஏனென்றால்,தனபாலிடம் இவர்கள் உத்திரவு இல்லாமல் பேசக் கூட முடியவில்லை. அவர்களை பார்த்தால் இவனுக்கு பிடித்ததில்லை.
அவர்களுக்கும் பிரபுவை பிடிப்பதில்லை
இவனுக்கும், அவர்களுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.
முடிவில் தனபாலிடம்,
“ஒரு போட்டி வைத்துக் கொள்ளலாம். இவர்கள் எல்லோரும் என்னுடன் மோதட்டும், நான் ஒருவனே இவர்களை வீழ்த்து கிறேன்.”
“வீழ்த்தி விட்டேன் என்றால் இவர்கள் போக வேண்டும். இவர்கள் என்னை ஜெயித்தால் இவர்கள் இங்கேயே இருக்கட்டும்.” என்று சவாலுக்கு அழைத்தான்.
“மனதிற்குள் வாங்கடா. எமலோகத்திற்கே அனுப்புகிறேன் “” என்று மனதிற்குள் கருவிக் கொண்டான்.
அவர்களை பார்த்து ‘“எல்லோரும் தயாரா என்று கேட்க . அவன் மேல் கடுப்பில் இருந்த அனைவரும் அது தான் சமயம் என்று பந்தயத்திற்கு ஒப்புக் கொண்டனர்.
தோட்டத்தின் முன்பு இருந்த மைதானத்தில் சண்டை போட்டி ஆரம்பித்தது.
அரண்மனையிலிருந்த வேலைக் காரர்கள் அனைவரும் அங்கு கூடி இருந்தார்.
சிலர் இதைக் கேள்விபட்டு எஸ்டேட்டிலிருந்தும் வந்தனர்.
தனபால் கொடி அசைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தான்.
அவர்கள் 8 பேர். இவன் ஒருவனே.
அவர்கள் 4 பேராக இவனை தாக்கினர்.
முடியவில்லை பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து தாக்கினர்.
பிரபுவின் கண்களில் கோபமும், வெறியும் இருந்தது. கைகள் முறுக்கேற. தொடையை தட்டிக் கொண்டு, அசுரத்தனமாக அனைவரையும் காட்டடி அடித்தான். சீறி எழும் வேங்கை போல் அவனின் செயல் இருந்தது.
அனைவரும் உதைபட்டு இரத்தம் ஒழுக மண்ணில் கிடந்தனர்..
தனபாலே அவன் சண்டை போடும் விதத்தை பார்த்து, இவன் மனிதனா என்று அதிசயித்து நின்றான்.
பாதுகாவலர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.
இதைப் பார்த்த மற்ற வேலையாட்.கள் பிரபுவை பார்த்து அஞ்சினர்.
அவன் சொல்லும் வேலைகளை செய்ய காத்திருந்தனர்.
அதே வேகத்தில் எல்லோரையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தான்.
ஒரு நாள், தனபால் கோயமுத்தூரில் பலான பெண்களுடன் இருந்து விட்டு
வரும் போது, கையில் ஒரு கட்டை பையை சுமந்துக் கொண்டு , சாலையை கடக்கும் நல்ல உயரத்துடன் ஒருபெண்மணியை பார்த்தான்.
அவன் தலைக்குள் பூகமபகமே வெடிப்பது போல் இருந்தது.
யாரது… அசப்பில் அண்ணி சிவகாமி போல் இருக்கிறார்களே.
அவரா ..
இருக்காது.
அய்யோ… அவர் உயிரோடு இருக்கிறாரா அவரின் மகனும்
இருக்கிறானா……………?
அப்பொழுதே சிவகாமியின் பெற்றோர் அன்பு மகளும், மருமகனும் இறந்த துக்கத்தில் ஒருவர் பின் ஒருவராக இறந்தார்கள்.
அதையெல்லாம் தெரிந்து வைத்திருந்தான்.
அவசர அவசரமாக காரை விட்டு இறங்கி, அவள் போன திசையில் ஓடிச் சென்று பார்த்தான்.
இங்கும் மங்கும் அலைந்தான்.
அந்த இடம் கல்லூரி இருக்கும் இடம். மாலை வேளையாததால் மாணவர்கள் அதிகளவில் இருந்தார்கள். அவர்கள் அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு ஒருவருக்கும் வழிவிடாமல் சிரித்து அரட்டை அடித்தபடி சென்று கொண்டு யிருந்தனர்.
எல்லோரையும் விலக்கிவிட்டு செல்வது இவனுக்கு கடினமாக இருந்தது.
அவர் எங்கு , எந்த திசையில் சென்றார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்பொழுது மட்டும் பிரபு இருந்திருந்தால், அவரை அப்படியே
தூக்கி காரில் போட்டு இருப்பான்.
அது அவ்வளவு சுலபமில்லை. என்று தனபாலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
எப்பொழுது தன் தாய் ஜமினை சேர்ந்தவர். ‘அவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்த தோ, அப்பொழுதே வேங்கையன் தன் தாயின் பாதுகாப்புக்காத வர்மக்கலையில் சிறப்பு பெற்ற நால்வரை அவரின் பாதுகாப்புக்கு அவரை தொடர வைத்திருந்தான்.
அந்த கலையில் பயிற்சி பெற்றவர்கள், எப்பேர்பட்ட பலசாலிகளையும் தன் விரல்களால் நிலைகுலைய செய்யும் திறன் பெற்றவர்கள்.
சிவகாமியை பின் தொடர்வதில் தோல்வி அடைந்து, எஸ்டேட் திரும்பினான்.
பிரபுவிடம், சிவகாமியை போல் ஒருத்தியை பார்த்தேன் என்று சொல்லாமா என்று கூட நினைத்தான்.அந்த வயதிலே பூபதி, இவனிடம் எல்லாவற்றையும் சொல்லி வைத்து இருந்தான்.
இவன் எதாவது செய்ய போக, அந்த பழியும் நம் மீது வரும். வேண்டாம். அதை நாமளே பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.
பங்களாவிற்குள் போனதும், பலகாலமாக வேலை செய்த பெரியவர் ரங்கசாமி என்பவர், தலையிலும், வாயிலும் இரத்தம் ஒழுக விழுந்துக் கிடந்தார்.
வேலைக்காரர்கள் அனைவரும் அடிவாங்கியது போல் முணறிக் கொண்டிருந்தார்கள்.
“அய்யோ.. என்னாச்சி. யார் உங்களை அடித்தது”…?
மேலே கை காண்பித்தனர்.
மேலே போய் பார்த்தால், செல்வனின் அறை திறந்து கிடந்தது.
தனபாலை பார்த்ததும், செம குஷி மூடில் ‘“. இது உன் அண்ணன் அறையாமே. அவர் இறந்தாலும் அவர் இங்கு வாழ்வதாக நம்பிக்கையாம். பூட்டை உடைக்கும் போது, அந்த கிழவன் ரங்கசாமி தடுக்க பார்த்தான்.
விட்டேன் ஒரு குத்து. படிக்கட்டில் உருண்டான்.”
வேலைக்காரர்கள் ஒன்று சேர்ந்தனர். அவர்களும் வாங்கி கட்டிக் கொண்டனர்.”” என்று சொல்லி செல்வன் படுக்கையில் படுத்துக்கொண்டு சிரித்தான்.
அந்த அறையை பார்த்து, “ உன் அண்ணன் , அந்த மனுசன் வாழ்ந்து இருக்கார்பா . எப்பேர்பட்ட அறை . செம மூடு வருதுப்பா”. என்று சொல்லி கொக்க பிக்கே என்று பல்லிளித்தான்.
அவனைப் பார்த்து தனபாலுக்கு பயமேற்பட்டது.
பயங்கரமான தன் அழிவின் ஆரம்பம் அது என்று உணர்த்துவது போலிருந்தது.
மனதளவில் பலஹீனமடைந்து தொய்வு அடைந்தான்.
எத்தனுக்கு எத்தன் பிறக்காமலா இருப்பான். அது இவன் தான். தானே தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டேனா என்று நினைக்க ஆரம்பித்தான்.
வசந்தி ரங்கசாமியை மட்டும் அறையை சுத்தம் செய்ய விடுவாள். வேறு யாருக்கும் அனுமதியில்லை.
அந்த அறை சிவகாமி செல்வன் அவர்களின் காதலின் புனிதம் என்றே நம்பிக்கை கொண்டதால் மற்றவர்கள் கண்ணால் கூட பார்க்கக் கூடாது.’” என்ற உத்தரவை எவரும் மீற வில்லை.
இந்த பிரபு யார். அவன் ஒரு அனாதை பயல். அவனை சுவீகரத்தது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று புரிந்துக் கொண்டான்.
எஸ்டேட் விஷயத்திலும் தலையிட்டான்.
‘வேலை செய்பவர்களின் குடியிருப்பை அழித்து ரிசார்ட்டாக . மாற்றினான்.
அதை தனபால் ஆதரிக்க வே செய்தான்.
பிரபு கணக்கு வழக்குகளிலும் தலையிட ஆரம்பித்தான். அவனுக்கு படிப்புத்தான் ஏறவில்லை. ஆனால், கொடுக்கல், வாங்கலில் அபரித மூளை இருந்தது.
வருடங்கள் போனது.
‘அதற்கு பிறகு தனபால் சிவகாமியை பார்க்கவில்லை. அவன் வெளியே போக இவன் அனுமதிக்க வில்லை.
தனபாலின் நிலை தாழ்ந்தது.
ஒரு கட்டத்தில் வெறுத்து போய், பிரபுவையும் தீர்த்து கட்டலாமா என்று என்று யோசித்தான்
அதற்கு செலவாகுமே .மொத்த எஸ்டேட்டும் பிரபுவின் ஆளுகைக்கு கீழ் இருந்தது.
எல்லோரையும் அதட்டி, அடித்து தன் வழிக்கு கொண்டு வந்திருந்தான்.
தன் செலவுக்கு கூட பணமில்லாமல் தனபால் ஒரு பிச்சைக்காரன் போல இருந்தான்.
பிரபுவை கெஞ்சி பார்த்தான். பிறகு மிரட்டி எதிர்த்தான்.
ஒரு சின்ன அறையில் அடைத்து வெளியே வர முயற்சி செய்தினா இங்கேயே புலி வரும். என்று மிரட்ட,
மிரண்டான்.
மனைவி வசந்தி இருந்து இருந்தால் இந்த நிலமை தனக்கு வந்து இருக்குமா . மனைவி இல்லையென்றால் என்ன. தனக்கு ஊரெல்லாம் பெண்டாட்டிகள் கிடைப்பாரகள் என்று இறுமாப்புடன் இருந்ததை எண்ணி கண்ணீர் விட்டான்.
அந்த காசுக்கு வந்த பெண்டாட்டிகள் சுகத்தை கொடுத்தார்களே ஒழிய, தூய்மையான அன்பை கொடுக்க வில்லை. இப்போது ஒருவரும் வருவதும் இல்லை.
இந்த ஜமீன் வம்சம் யாரோ ஒரு பொறுக்கி இடத்திலா போக வேண்டும். எப்பேர்பட்ட வம்சம். ,
ஐயோ… செல்வன் அண்ணா என்னை மன்னித்து விடு. பேராசை நம் ஜமீனை அழித்து விடும் போல இருக்கு. எனக்கு மன்னிப்பே கிடையாது.
காலன் கண்ணுக்கு தெரிந்ததும், பரம்ஜோதி சித்தர் நினைவுக்கு வந்தார்.
சித்தரை வழிபடும் வம்சம்.
அவரை காணும் பாக்யம் இவனுக்கு ஏற்பட்டது இல்லை.
தீய சக்தி இவன். அவன் கண்ணுக்கு புலப்படாமலே இருந்தார்..
நாடி நரம்பெல்லாம் ஆட்டம் கண்ட வேளையில் அவனால் யோசிக்க முடிந்தது. தனிமை வேறு.
சித்தரை கையெடுத்து மனதார கும்பிட்டான்.
சிவகாமி உயிருடன் இருப்பது உண்மையென்றால் செல்வனும் உயிரோடு இருக்க வேண்டும். அவர்கள் மனமொத்த தம்பதியர்: ஒருவரை ஒருவர் விட்டு விலக மாட்டார்கள்.
சித்தர் தான் அவர்களுக்கு நிழலாக இருந்து ஒளியை காண்பித்து இருக்க வேண்டும்.
அவர்கள் வருவார்கள். இந்த வம்சம் அழியாது என்று நினைத்த படியே தூங்கினான்.
சித்தரை மனதார நினைத்தவுடன் நிம்மதியாக தூக்கம் வந்தது.
தொடரும்.
.