• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
23
அம்மாவிடம் ஈச்சனார் எஸ்டேட் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டதிலிருந்து
வீர வேங்கையனுக்கு இரத்தம் கொதித்தது. ‘அந்த எஸ்டேட் போய் தனபாலை பார்க்க வேண்டும் கர்ப்பிணி பெண்ணான அம்மாவை ஓட ஓட விரட்டியுள்ளான். ‘அப்பாவை என்ன செய்தார்களோ…


விடக்கூடாது. அநீதி இழைக்கிற வர்களுக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். அதுவும் பெண்களை துன்புறுத்து வர்களுக்கு கண்டிப்பாக கடும் தண்டனை அளிகக வேண்டும் -



ஒருநிமிடம் யோசித்தான். உண்மை தெரிந்தும், அம்மா, அப்பா என்கிறோம். என்னை மகனாக ஏற்றுக் கொள்வார்களா. இத்தனை வருடங்கள் அம்மா என்று நினைத்தவளை எப்படி விட்டுத் தருவது. முடியாது.


நான் என் அம்மாவை நெஞ்சில் சுமக்கிறேன் அது போதும். என்று நினைத்தான்.


அம்மாவிடம்,’ “ நான் வேட்டுவ மலைக்கு போய் விட்டு, இன்று மாலையே வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.



அங்கு போனதும், இருளனும், மருதனும்
அவனிடம் தயங்கி, தயங்கி எதோ பேச வந்தனர்.


வாங்க சித்தப்பாக்களே.


எதோ சொல்ல வருவதும், பேசாமல் தலைகுனிவதுமாக இருந்தார்கள்.


அதை புரிந்துக் கொண்டு சொல்லுங்க. தயங்காமல் உங்கள் பிள்ளை நான். என்னிடம் சொல்லுங்கள் என்றான்.


அவர்கள் கையில் விலையுயர்ந்த போன் இருந்தது.


அட…இது எப்படி அவர்களிடம்.


அவர்களே ஒப்புக்கொண்டனர்.


ஒருவனை சிறுத்தை அடித்து கொன்றது. அப்போது இந்த போன் எனக்கு கிடைத்தது என்று இருளன் சொல்ல,


மருதனோ ஒருவனை புலி அடித்து கொன்றது. அப்போது இது கிடைத்தது”” என்று சொல்ல


இதை ஏன் போலீஸிடம் தரவில்லை…………?

நீங்கள் ஏன் எடுத்தீர்கள்…?


போனை பார்த்தவுடன் ஆசையாக இருந்தது. எடுத்து விட்டோம்.
உடைந்து இருக்கு என்று நினைக்கிறோம். இது எங்களுக்கு வேண்டாம். உனக்கு தான் போலீசை தெரியுமே. இதை கொடுத்து விடுகிறாயா...



எங்களை போலீஸ் ஒன்றும் பண்ண வேண்டாம் என்று சொல்லு .தெரியாமல் எடுத்து விட்டோம் “என்று இருளன் சொல்ல மருதன் தலையாட்டினார்.



வேங்கையனுக்கு ஒன்றும் புரியவில்லை புலி ,சிறுத்தை அடித்தது சொல்கிறார்கள் .யாரை ஒன்றும் புரியவில்லை


அவர்கள் போகும்போது, இது எப்போது நடந்தது என்று கேட்க, பத்து வருடங்கள் முன்பு இருக்கும் என்றனர்.


“அட எப்பவோ நடந்ததா”..


ஏன் போனை போலீஸ் கண்டுபிடிக்க முடியவில்லை


சரி. இது என்னவென்று பார்ப்போம். அந்த போன் இரண்டையும் தன்னிடம் வைத்துக்கொண்டான்.


பத்மாவை வரச் சொல்லிவிட்டு, அவளையும் அழைத்துக் கொண்டு ஈச்சனார் எஸ்டேட்டுக்கு போனான்.


பரந்து விரிந்த எஸ்டேட். ‘. ரொம்ப பெரிய எஸ்டேட் .ஆனால் அவ்வளவு சுபிட்சமாக இல்லை.



அங்குள்ளவர்களிடம் விசாரிக்க , ஒருவரும் வாய்திறக்கவில்லை.



அப்போது, ஒரு சிறுவன் தலையில் அடிபட்டு ரத்தம் ஒழுக வர அவனது தாய் கத்திக்கொண்டே வந்தாள்.


இந்த அநியாயத்தை கேட்க, அந்த கடவுளுக்கு கூட காது இல்லையே.


உடனே, பத்மா தன்னிடம் இருக்கும் எமர்ஜென்ஸி மெடிக்கல் உபகரணங்களை வைத்து தலையில் ஒழுகும் இரத்தத்தை துடைத்து கட்டு போட்டு விட்டாள்.



அந்த அம்மாவிடம் என்னாச்சி என்று கேட்க, அந்த அம்மாள் அழுதுக் கொண்டே .எல்லாம் அந்த கேடு கெட்டவன் பிரபுவால் வந்தது.


பிரபுவா …அது யாரு என்று கேட்க,


வாங்க தம்பி. என் இருப்பிடத்தில் போய் பேசலாம் என்று அழைத்து போனாள்.


தகரம் வேய்ந்த குடிசை. சுகாதாரம் அற்ற இருப்பிடமாக இருந்தது.


“ஆரம்பத்திலிருந்தே இங்குதான் இருக்கிறீர்களா.”



“எங்கய்யா செல்வன் ,அவர் அப்பா காலத்திலிருந்தே. அதே தெரியுது பாருங்க| அது ஒரு ரிசார்ட் போன்று இருந்தது.
அங்கு தான் நல்ல வீடுகளை எங்களுக்கு கட்டி கொடுத்தார்..


“தனபாலும் அதில் கை வைக்கவில்லை.இந்த பிரபு வந்ததிலிருந்து எங்களை அடித்து விரட்டு விட்டு, அதையெல்லாம் இடித்து விட்டு ரிசார்ட் ஆக்கி விட்டான்.”


“இந்த எஸ்டேட்டும் ரிசார்ட்டாக மாற போகிறது -”


“யார் அவன் “என்று கேட்க, எல்லாவற்றை யும் சொன்னார்கள்.


அந்த அடிப்பட்ட மகனின் தாய், ‘“அவன் தான் என் மகனை இரத்தம் வர அடித்தது” என்றாள்.


செல்வன் ஐயா போனதிலிருந்து யார் யாரோ இந்த எஸ்டேட்டுக்கு உரிமை கொண்டாடு கிறார்கள்.”” என்றனர்.


வேங்கையன் கண்கள் சிவப்பேறியது.



முதலில் நம் அம்மாவின் மகனை கண்டுபிடிக்க வேண்டும். செல்வன் அப்பா உயிருடன் இருக்கிறாரா என்பதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.


உங்களிடம் ‘“ உங்க ஐயா புகைபடம் எதாவது இருக்கா. “


“என்னசாமி. இப்படி கேட்டுட்ட. நாங்க கும்புடுகிற தெய்வம். ஜமின் ஐயாவும் | ஜமீன் தாரணி அம்மாவும் எங்களுக்கு
குல தெய்வம் மாதிரி”.


ஜமீன் ஒழிப்பு முறை வந்தாலும் அவர்கள் கூப்பிடுவது அப்படித்தான்.


கொண்டு வந்து ஒரு பழைய புகைப்படத்தை கொடுத்தார்கள்.



அதை கண்ணீர்மல்க கை நடுங்க பார்த்தான்.


தன் தாய் மைத்ரி என்கிற சிவகாமி, நெற்றி நிறைய குங்குமமும், கழுத்து நிறைய நகைகளுடன், புன்சிரிப்புமாய் ஒரு மகாராணியை போல் இருந்தார்.

அவர் அருகில் பிரபுக்களுக்கே உரிய பிரத்யோக உடையில் மகாராஜாவை போல் கம்பீரத்துடன் செல்வன் இருந்தார்.


பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.


செல்வன் கண்களும், அதில் தெரிந்த ஒளியையும் இவனுக்கு எங்கோ புத்தியில் ஒரு மின்னல் வெட்டியது.
இந்த கண்களை எங்கோ பார்த்து இருக்கிறேன்.


“இதை எனக்கு தருவீர்களா”………?


“எடுத்துக்கங்க சாமி. டாக்டர் அம்மா மருந்து போட்டு விட்டு இருக்கிறார்களே.”


“நீங்க யாருங்க தம்பி. “


“நான் ஒரு வக்கீல். இவர் பத்மா. செவிலியர் “. என்றதும்


“நன்றாக இருங்கள்” என்று வாழ்த்தினர்.


ஜமீன் பங்களா விற்கு போகும் வழியையும் கேட்டுக் கொண்டார்கள்.


“இப்பொழுது பங்காளவிற்கு போகப்போகிறோமா….? என்று பத்மா அவனை ஆவலுடன் கேட்க,


“இப்பொழுது வேண்டாம்.
அதிவீரன், கயல் கல்லூரியில் விழா என்றானே. அம்மாவை கண்டிப்பாக அழைத்து.வரச் சொன்னான்.”


“அம்மாவுக்கும் அங்கு வர வேண்டும்
என்று விருப்பம். “



பத்மா அந்த படத்தை பார்த்தாள்.


“ஹேய்… இவர் உன் அம்மா போலவே இருக்கிறரே.”


‘அவரே தான்.’


‘அப்ப நீ ஜமீன் வம்சமா’....?


“இல்லை. நான் வளர்ப்பு மகன். “


“இவரின் மகனையும், கணவரையும் கண்டு பிடிக்க வேண்டும்.”


“அந்த கொடூரன் தனபாலை ஒழிக்க வேண்டும். புதிதாக முளைத்த காளான் அந்த பிரபுவையும் கவனிக்க வேண்டும்.”



“அவர்கள் கொடூரமானவர்கள் போல இருக்கே. ‘உன் ஒருவனால் முடியுமா………?
என்ற சந்தேகத்தை கிளப்பினாள்.


“நான் என்ன வாளெடுத்தா போரிட போகிறேன். சட்டத்தின் முன்பு அனைவரும் சமமே. பதில் சொல்லியே ஆக வேண்டும்.”



xxxxxxxx

கயல் அதிவீரனுக்கு போன் செய்தவுடன். எடுத்த எடுப்பிலே “மன்னவனே ரெடியா” என்றாள்..


“என்னடி போன் எடுத்தவுடனே ஒரு ஒரு ‘ஹலோ என்று கூட சொல்லாமல், மன்னவனே.ரெடியா என்று கேட்கிற.



“ஆம். தங்களின் இதயம் கவர்ந்த பட்டத்து ராணி பேசுகிறேன்.”


“ஏய்… மொக்க போடாத.”


“சரி. அழாத. என்னடா பண்ற.”


“இன்னிக்கு கல்லூரிக்கு கிளம்பணும்.”


“பெண்மை ஃபெஸ்ட் என்றுபெயர் வைத்து விட்டு, நாங்கள் எதற்கு ‘’



“அதற்கு அர்த்தம். நாங்கள் இல்லாமல் நீங்கள் இல்லை.” என்று கயல் சொன்னவுடன், அதி முறைக்க,


“சரி. நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. “” வாடா ரொம்பத் தான் பிகு பண்ற .

அப்புறம் ராஜா இல்லாத ராணியாகி விடுவேன். “



“நம்ப காலேஜ்ல அந்த ஹரி எனக்கு ராஜாவாக காத்து கிட்டு இருக்கான்.”


“அது நடிப்புக்கு மட்டும்.. நீ வேறு எதையும் நினைக்காத.”


“வேறு யாரையும் உனக்கு ராஜாவாக நடிக்க கூட விடமாட்டேன்.”


‘புரியுதுல்ல. ‘


‘ம்ம்ம்’


“அப்ப வாடா.”


“அப்புறம் ஒரு ஹெல்ப்”


“சொல்லுங்கள் மகாராணி.”


“என்னிடம் ராணியாக நடிக்க காஸ்ட்டியூம் இல்லை.”


“என் அம்மாவிடம் அது மாதிரி விலையுயர்ந்த புடவை இல்லை.”


“இப்ப என்னால் வாங்கவும் முடியாது.”


“நாம போய் வாங்கலாம்.”


“டைம் இல்லடா .’


“அப்பாவிடம் இதெல்லாம் வாங்க பணம் கேட்க கஷ்டமா இருக்கு.உன் அம்மாவிடம் இது மாதிரி புடவை இருந்தால் வாங்கிட்டு வா..நான் போட்டுட்டு திருப்பி கொடுத்து விடுகிறேன்.”


“இதுக்கு ஏண்டி தயங்குற. உனக்கு இல்லாத உரிமையா . நான் கண்டிப்பா எடுத்துட்டு வருகிறேன்.’” என்று சொல்லி போனை வைத்தான்.



அம்மா எங்கே தேடினான்.


போன் செய்தான்.


போனை எடுத்தவுடன், ‘“ஹலோ எங்கம்மா போய்ட்ட. உன்னை வீடு முழுக்க தேடினேன்.


“உன் அம்மாச்சி கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்.”


“சொல்லவில்லையா”


“அவர்கள் தூங்கு கிறார்கள்.”


“சரிடா நான் கோயம்புத்தூருக்கு அப்பாவுடன் விடியற்காலையிலே வந்தேன். எஸ்டேட் விஷயமா ஆடிட்டரை பார்க்க வந்தோம். நீ தூங்கிட்டு இருந்த.. உன் கல்லூரி விழாவுக்கு அப்படியே நான் மட்டும் வருவேன். அப்பா எஸ்டேட் போய் விடுவார்.”


“சரிமா . ஒரு ஹெல்ப் நம்ப கயலுக்கு டிராமாவில் நடிக்க நல்ல புடவை வேண்டுமாம். ராணி கேரக்டர். உன்னிடம் அது போல இருக்கா.”


“இருக்குடா அவளுக்காக வாங்கி வைத்திருந்தேன். பிளவுஸ்கூட தைத்து விட்டேன். அதை எடுத்துக் கொள்.””


‘தாங் யூமா. “


“சரிடா கண்ணா. என் அலமாரியில் 2வது தட்டில் இருக்கிறது. அவ கலருக்கு லைட் பேபி பிங்க் எடுப்பா இருக்கும் என்று டிசைனர் புடவை எடுத்து இருந்தேன். பாருடா.”


சரி மா என்று சொல்லி போனை
வைத்தான்.


அம்மாவின் அறைக்குள் போனான் .



நிறைய 2வது தட்டு இருந்தது. எது என்று தெரியவில்லை


பிங்க் கலரில் புது புடவை இருக்கா என்று பார்த்தான்.


அது 3வது தட்டில் இருந்தது.


அவசரமாக எடுக்கும் போது நகை பெட்டி கீழே விழுந்தது.


அதை எடுத்து பார்த்தான் -



கண்ணை பறிக்கும் அழகில் ஒரு லாக்கெட் செயின் இருந்தது.


அதன் மேலேயே புது புடவையும் இருந்தது.



செயினை கையில் எடுத்தான்.



இதைக் போட்டுக் கொண்டால் மிகவும் அழகாக இருப்பாள் என்று தன் சூட்கேஸில் வைத்துக் கொண்டான்.


குன்னூருக்கு கயல் வந்தவுடன், அவளையும் அழைத்துக் கொண்டு கோயமுத்துருக்கு புறப்பட்டான்.


கல்லூரி போனதும், நண்பர்கள் “சீக்கரம் உடை மாற்றிக் கொண்டு வாங்க.” என்றனர்.



அவசர அவரமாக ஓடினர்.



அவள் புடவையிலு,ம் அவன் இளவரசனாக உடுப்பு உடுத்திக் கொண்டு ஜொலித்தனர்.



நண்பர்கள் ‘வாவ்’ என்றனர்.



இவன் கையில் அந்த ஆன்டிக் செயின்
இருந்தது.


அவளிடம் கொடுத்து” இதை போட்டுக் கோ” என்றான்.


“இது என் உடைக்கு நல்லா இருக்காது.”



“உனக்கு பொருத்தமாக இருக்கும்” என்று சொல்லி அதிவீரனுக்கு அணிவித்தாள்.



தொடரும்…
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top