• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
32
15.2

அவனை ஒரு கணம் உற்று பார்த்தவளுக்கு அவன் விழிகளை பார்த்து அவனின் காதலை உணரும் சக்தி இல்லாமல் போக, 'இதுவரை என்னை பிடிக்கும்னுனு கூட தான் நீங்க சொன்னதே இல்லை' என்று சொன்னாள்
'ஆமா சொல்லறாங்க.. சொன்னா மட்டும் உனக்கு என்ன புரியப்போகுது, இல்ல புரிஞ்சா மட்டும் இனி என்ன மாறப்போகுது' என்று தனக்குள்ளே பிணர்த்தினான் கதிர்வேலன்.
அவன் இதழ் அசைவுகளை உன்னிப்பாக கவனித்த முல்லைக்கு ஒன்றும் புரியவில்லை என்பது தான் உண்மை.
தன்னையே குறுகுறுத்த பார்வை பார்த்து இருக்கும் முல்லையை இவனும் முறைத்து பார்த்தவன்,'ஆமா.இவ்ளோ தூரம் எதுக்கு டி வந்த?' என்று கேட்டான்.
'நீங்க தண்ணி வாங்க போனதும், என் கையில இருக்குற அரச்சனை பையை அந்த குரங்கு இங்க தூக்கிகிட்டு ஓடி வந்துடுது, அதான் அத துரத்திகிட்டு நானும் ஓடிவந்தேன்' என்ற முல்லை தன் வலது பக்க கன்னத்தை அவள் கரங்களால் தாங்கி பிடித்து கண்கள் கலங்கிய நிலையில் தான் பதில் கொடுத்தாள்.
'அப்போ அங்க கண்ணாடி வளையல் எல்லாம் உடைந்து இருந்ததே. அது எப்படி?' என்று கதிர்வேலன் கேட்க,
'எல்லாம் அந்த குரங்கு பண்ண வேலை தான் மாமா சார், என் கையில இருந்து அவ்ளோ வேகமா பிடுங்கிட்டு ஓடிடுது, சரியான வானறம்' என்று மரத்தை அண்ணாந்து பார்த்து குரங்கை திட்டிக்கொண்டு இருந்த பெண்ணை பார்த்து சிரிப்பதா முறைப்பதா என அறியாமல் கதிர்வேலன் தன் முன்னே நின்று இருக்கும் முல்லையை ரசித்து பார்த்து இருந்தான்.
தன்னையே பார்க்கும் கதிர்வேலனை இவளும் முறைத்து பார்த்தவள்,'நீங்க அந்த குரங்குகிட்ட கேட்டு என் பையை வாங்கி தாங்க' என்றாள்.
'எதே. நான் குரங்குகிட்ட பேசணுமா, என்னடி லந்தா' என்றவன் வேகமாக அங்கிருந்து கோவிலை நோக்கி நடந்தான்.
'மாமா சார் இருங்க இருங்க எங்க போறீங்க, என்னை விட்டு எங்க போறீங்க' என்று தலைத்தெரிக்க முல்லை கதிர்வேலனை பின் தொடர்ந்து ஓடி வந்தாள்.
அவள் அழைப்புக்கு செவி சாய்க்காமல் வேகமாக எத்து வைத்தவன் சில நொடிகளில் கோவிலை வந்து சேர, கதிர்வேலனுக்கு முன்னே அங்கே ஆட்டோ ஓட்டுநர் நான்கு நபர்களோடு தன் வாகனத்தில் அமர்ந்து இருந்தான்.
'டேய் டேய். அதோ அவன் தான் டா நான் சொன்ன ஆளு. எங்க இவன் மட்டும் வரான், இவன் கூட ஒரு பொண்ணு சிக்குன்னு இருந்தாளே அவ எங்க?' என்ற ஆட்டோ டிரைவரின் பார்வை கதிர்வேலனின் பின்னே ஓடி வந்த முல்லையை கண்டுக்கொண்டது.
'டேய் அந்த பொண்ணு தான் டா' என்று ஆட்டோ ஓட்டுநர் முல்லையை சுட்டிகாட்ட,
'டேய் டேய் நம்ம வாத்தியார் டா' என்ற ஆட்டோ ஓட்டுநரின் கூட்டாளிகள் தலைத்தெரிக்க ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினார்கள்.
சற்று தூரத்தில் இருந்து ஆட்டோவை நோக்கி நடந்து வந்த கதிர்வேலனின் கண்கள் இவர்களை கண்டுக்கொண்ட நிலையில்,'டேய். இங்க என்னடா பண்ணுறீங்க' என்ற கேள்வியோடு கதிர்வேலன் இவர்கள் முன்னே வந்து நிற்க, அவன் பின்னே முல்லையும் ஜோடியாக வந்து நின்றாள்.
'அது.. அது வாத்தியாரே.நாங்க. நாங்க கோவிலுக்கு வந்தோம்' என்ற நால்வரில் ஒருவன்,'வணக்கம் அண்ணி' என்று முல்லையை பார்த்து வணக்கம் வைக்க, முல்லை பின்னே திரும்பி பார்த்தவள்,
'யார அண்ணின்னு சொல்றிங்க' என்று கேட்டாள்.
'நீங்க தான் அண்ணி.
எங்க வாத்தியார் எங்களுக்கு அண்ணன் மாதிரி. அப்போ நீங்க எங்களுக்கு அண்ணி தானே' என்று இன்னோருவன் சொல்ல,
'ஹ்ம்.என் விதி. என் காதலியை எனக்கே அண்ணியாக்கி பாக்குது,
இவனுங்க அந்த உண்மை தெரியாம அண்ணி தண்ணினு மனுஷனை உசுப்பேத்தி பாக்குறானுங்க' என்று கதிர்வேலன் தன் நிலைமையை எண்ணி புலம்பினார்.
'என்ன வாத்தியாரே. அண்ணியும் நீங்களும் கோவிலுக்கு வந்திங்களா' என்று இன்னோருவர் கேட்க,
'ம். ஆமா ஆமா. சரி டா. நீங்களும் கோவிலுக்கு போங்க, நான் இன்னோரு ஆட்டோ பார்த்து கிளம்புறேன். அப்புறம் உன் கூட்டாளி இந்த ஆட்டோகாரர்கிட்ட என்னை பத்தி கொஞ்சம் சொல்லி வையு' என்ற கதிர்வேலன் தன் கை காப்பை முட்டி வரை ஏத்திக்கொண்டு,கண் அசைவில் முல்லையை அழைக்க.
அவளும் தாயின் பின்னே செல்லும் சேயை போல கதிர்வேலனை பின் தொடர்ந்து சென்றாள்.
கதிர்வேலனின் தலை மறைந்ததும்,
'டேய். நான் உங்கள எதுக்காக வர சொன்னேன் நீங்க என்ன வேலை டா பண்ணுறீங்க' என்று ஆட்டோ ஓட்டுநர் தன் நண்பர்களிடம் கோவம் கொள்ள,
'இங்க பாரு மச்சான். நீ எங்க வாத்தியார் வீட்டு பொண்ணு மேல கை வைக்க தான் எங்களை இங்க வர சொன்னன்னு தெரிந்து இருந்தால் நாங்க இங்க வந்து இருக்கவே மாட்டோம்' என்றான் ஒருவன்.
'என்ன உங்க வாத்தியாரா!?' என்று ஆட்டோ ஓட்டுநர் கேட்க,
'ஆமா டா. நாங்க எல்லாம் அவர்கிட்ட தான் சிலம்பம் கத்துக்கிட்டு இருக்கோம், அது மட்டும் இல்ல, உனக்கு ASI சுந்தரேசன் தெரியமா. அந்த ஆளோட தம்பிக்கு முக்கியமான நரம்பையே அடிச்சு நோரிக்கிட்டாரு, அதுவும் பூ கட்டுற பொண்ணு மேல கை வச்ச ஒரே காரணத்தால' என்று இன்னோருவன் சொன்னதும், ஆட்டோ ஓட்டுநரின் முகம் பயத்தில் வியர்க்க தொடங்கியது.
'நல்ல வேலை மச்சான்.ஜஸ்ட் மிஸ் டா.நாங்க எல்லாம் வாத்தியார் வீட்டுப் பெண்ணை தூக்கத்தான் இங்க வந்திருக்கோம் என்று தெரிஞ்சிருந்தா, வாத்தியாரு எங்கள நிச்சயமா கோவில்ல இருந்து உருட்டி விட்டு இருப்பாரு' என்று இன்னொருவன் சொல்ல,
'உருட்டி விட்டிருந்தா கூட பரவால்ல மச்சான், கோயில்ல புண்ணியத்துக்குன்னு உருண்டு எழுந்திருக்கலாம். ஆனா அவரு முக்கியமான நரம்பை கட் பண்ணி விட்டுட்டா நம்ம ஆம்பளையா பிறந்ததற்கே அர்த்தம் இல்லாம போயிருக்கும்,
வாங்க வாங்க நம்பல காப்பாத்தண கடவுளுக்கு ஒரு நன்றியை சொல்லிட்டு ஊரப்பக்கம் கிளம்பலாம்.கொஞ்ச நேரத்துல இந்த ஆட்டோக்காரன் நமக்கு எல்லாத்தையும் ஆட்டம் காண வைத்திருப்பான்' என்று புலம்பிய ஆட்டோ ஓட்டுனரின் நண்பர்கள்,
முல்லையை கடத்த வந்தவர்கள், கதிர்வேலனுக்கு பயந்து வந்த வழியே சென்று இருந்தார்கள்.
*************************
கோவிலிலிருந்து வெளியேறிய கதிர்வேலன் முல்லையுடன் வேறொரு ஆட்டோவிற்காக காத்திருக்க,' மாமா சார். கடைசி வரைக்கும் நீங்க எனக்கு தண்ணியே கொடுக்கல' என்று கண்ண சிவப்புடன் பாவமாக கேட்டாள் முல்லை.
'இப்போவே மணி நாளாகிடுது. இதுக்கு மேல நீ தண்ணி எல்லாம் குடிக்க வேண்டாம். வா இங்கே ஏதாவது சாப்பிட வாங்கி கொடுக்கிறேன்' என்று கதிர்வேலன் அவளை அழைக்க,
'எனக்கு அதெல்லாம் வேண்டாம், தண்ணி மட்டும் கொடுங்க. நான் நைட்டு வீட்ல போயி சாப்பிட்டுக்கிறேன்' என்றாள் முல்லை.
'சரியான பிடிவாதக்காரி டி நீ.. உன்ன தேட போய் கையில இருந்த தண்ணி பாட்டிலை நான் எங்க தூக்கி போட்டேன்னு தெரியல' என்று புலம்பிய கதிர்வேலன், அருகே இருந்த கடையில் இன்னொரு தண்ணீர் பாட்டிலை வாங்கி முல்லையிடம் கொடுக்க,

'ஆமா. நீங்களும் தானே மதியானத்தில் இருந்து சாப்பிடல, ஏன் உங்களுக்கு பசிக்கலையா' என்று கேட்டாள்.
'இப்போ எனக்கு பசிக்குதுன்னு சொன்னா மேடம் என்ன பண்ண போறீங்க?' என்று கதிர்வேலன் கேட்க,
'நான் என்ன பண்ண முடியும். இந்தாங்க வேணும்னா தண்ணி குடிங்க. ஆனா!! இந்த நேரத்துல நீங்க தண்ணி குடிக்க மாட்டீங்களே, இந்த நேரம் நீங்க தண்ணி அடிச்சு தானே உங்களுக்கு பழக்கம்' என்று முல்லை இதழ் சுழிப்புடன் சொல்ல,
'அடியே ரவா லட்டு.உனக்கு ஒரு கன்னம் இல்லடி, உன்னோட இன்னொரு கன்னத்தையும் சேர்த்து வச்சு அப்பி இருக்கணும்.
வாய் ஓவரா ஆகிடுச்சு இல்ல.' என்று முல்லையை அவன் வாய் வார்த்தையால் கடிந்து கொண்டாலும்.
அவள் பேசும் வார்த்தைகளில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் மனதார ரசித்துக்கொண்டு தான் இருந்தான்.
சில நொடிகள் கடந்து, கதிர்வேலனும் முல்லையும் மீண்டும் ஒரு ஆட்டோவில் முல்லை படித்த கல்லூரிக்கு செல்ல. 'என்ன வாட்ச் மேன் அண்ணா..உங்க மேடம் வந்துட்டாங்களா இல்லையா' என்று கதிர்வேலன் கேட்டார்.
'ஹாங் உள்ள இருக்காங்க தம்பி. இப்போ நீங்க போனீங்கன்னா
சர்டிபிகேட் வாங்கிடலாம்' என்றார் வாட்ச்மேன்.
'சூப்பர் அண்ணா. ஏய் ரவா லட்டு. போ, போய் சர்டிபிகேட் வாங்கிட்டு வா 'என்று கதிர்வேலன் சொல்ல,
'ஏன் மாமா சார். நீங்க என்கூட வர மாட்டீங்களா' என்று முல்லை அழைத்ததும்,
'என்னை பார்த்து உனக்கு சர்டிபிகேட் தர மாட்டேன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ' என்று கேட்டார் கதிர்வேலன்.
'ஏன்!! உங்கள பாத்து தர மாட்டேன்னு எதுக்காக சொல்லணும்.அதெல்லாம் அவங்க சொல்ல மாட்டாங்க.ஆனா உங்களுக்கு தான் என் கூட வர இஷ்டம் இல்லைன்னு நினைக்கிறேன்.'
என்ற முல்லை முகத்தை கோவமாக திருப்பிக்கொண்டாள்.
'என் இஷ்டம் என்னனு நீயா முடிவெடுக்காத டி, சரி வா உள்ள போய் உன் சர்டிபிகேட்டை வாங்களாம்' என்ற கதிர்வேலன், முல்லையுடன் சேர்ந்து அவள் படித்த கல்லூரிக்குள் மீண்டும் நுழைந்தான்.
கல்லுரி தலைமை நிர்வாகியின் அறையில், முல்லை தன் ஆவணங்களை சரி பார்த்து பெற்றுக்கொள்ள, மீண்டும் முல்லையை கல்லூரியில் இருந்து வெளியே அழைத்து வந்தார் கதிர்வேலன்.
'ஆமா. எல்லா பேப்பரும் சரியா இருக்கா, அண்ணா சொன்ன மாதிரி ஒழுங்கா செக் பண்ணி வாங்கினியா' என்று கதிர்வேலன் கேட்க.
'எல்லாம் வாங்கியாச்சு மாமா சார், வீட்டுக்கு போகலாம்' என்று முல்லை சொல்ல,
அதற்குள் கதிர்வேலன் நிறுத்தி வைத்திருந்த பைக்கை சுற்றி சில ஆட்கள் கையில் கத்தியும் கம்புமாக நின்று இருந்தார்கள்.

🫶என் கதையை படித்து கருத்து தெரிவிக்கும் வாசகர்களுக்கு நன்றி.


Thank you to the readers who read my story and shared their thoughts.🌹
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top