• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
30
பாகம் - 14.2

குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பயணத்தில் முல்லையின் காலேஜ் வாசலை சென்றடைந்தது கதிர்வேலனின் இருசக்கர வாகனம்.
'காலேஜ் வந்துடுது இறங்குறியா' என்ற கதிர்வேலனின் குரலில் விழிகளை மலர்ந்து பார்த்த முல்லை, 'நான் உயிரோட தானே இருக்கேன்' என்று வாய்விட்டு கேட்டதும்.
கதிர்வேலன் அதித கோபத்துடன் முல்லையை முறைத்து வைத்தார்.
''ஐயோ முல்லை. ஏன் தான் இப்படி அவர்கிட்ட வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கிறன்னு தெரியல' என்று தன்னைத்தானே திட்டிக்கொண்ட முல்லை காலேஜ்க்குள் நுழைய எத்தணிக்க .
'ஏய்.' என்ற கதிர்வேலன் குரலில்.
'என்ன மாமா சார்' என்று பயந்தபடி கேட்டாள் முல்லை
'ரொம்ப நடிக்காத.ஆமா நீ வர எவ்வளவு நேரம் ஆகும்'
'நான் உள்ள போயி சர்டிபிகேட் வாங்கிட்டு ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவேன்'
'சரி. வந்ததும் எனக்கு போன் பண்ணு நான் வந்து உன்ன அழைச்சிட்டு போறேன்'
'ஆனா மாமா சார்.என்கிட்ட தான் போன் இல்லையே'
'ஓ..சரி அரை மணி நேரம் தானே ஆகும்.நீ எனக்கு முன்னதாக வந்துட்டா நீ இங்கேயே நில்லு. நான் வந்து உன்ன அழைச்சிட்டு போறேன்'
'ஆமா.அதுக்குள்ள நீங்க எங்க போறீங்க'
'ம். உன் அக்கா அந்த தெருமுனையில் நிக்கிறேன்னு சொன்னாள்! அவளை போயி பார்க்க போறேன்'
'யாரு மீனா வா வந்துருக்காள்.எங்க மீனா?'
'ஏய். இங்க பாரு. அடி வாங்கிட்டு போய்டாத,ஒழுங்கா போய் சர்டிபிகேட் வாங்கிட்டு வா.'
என்று சம்பந்தமே இல்லாமல் முல்லையை கடிந்தப்படி கதிர்வேலன் அங்கிருந்து தன் பைக்கை எடுக்க.
'எப்ப பாரு என்ன திட்றதே இவருக்கு வேலையா போச்சு' என்றபடி முல்லை தன் காலேஜிற்குள் நுழைந்தாள்.
அரை மணி நேரம் கடந்த பிறகு கதிர்வேலன் மீண்டும் காலேஜ் வாசலுக்கு வர. அங்கே முல்லை இல்லாமல் இருக்க.
'வாட்ச்மேன் அண்ணா. இங்க ஒரு பொண்ண இறக்கி விட்டேனே! அந்த பொண்ணு திரும்ப வந்தாச்சா?' என்று கேட்க,
'இல்லையே தம்பி. உள்ள போன பொண்ணு இன்னும் வரல' என்றார் வாட்ச்மேன்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்த நிலையிலும் முல்லை வெளியே வராமல் இருக்க,
'என்ன உள்ள போய் தூங்கிட்டாளா' என்ற கேள்வியோடு கதிர்வேலன் காலேஜ்க்குள் நுழைய, தலைமை நிர்வாகி அறையின் வெளியே இருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தாள் முல்லை
'ஏய் ரவா லட்டு. மணி என்ன ஆச்சு, நான் உன்னை வெளியே தேடிக்கிட்டு இருக்கேன், இங்க என்ன பண்ற' என்று கதிர்வேலன் கேட்க,
'இல்ல மாமா சார்,மேடம் வெளியே போயிருக்காங்களாம்.
அதான் இங்கேயே உட்கார்ந்துகிட்டு இருக்கேன்'என்று முல்லை சொல்ல,
'சரி..நான் வெளியே அரை மணி நேரத்துல வருவேன்னு சொன்னேனே, என்கிட்ட வந்து சொல்லணும்னு உனக்கு புத்தி இல்லையா?' என்று கோவமாக கத்தினான் கதிர்வேலன்
'இப்ப ஏன் என்னை திட்டுறீங்க, நான் உங்ககிட்ட வந்து சொல்ற நேரத்துல மேடம் வந்துட்டா,அப்புறம் யாரும் இல்லைன்னு போயிடு வாங்க, அதனால தான் வரல' என்று முல்லை சொல்ல,
'ஆமாமா. எல்லாத்துக்கும் ஒரு பதில் சொல்லிரு. ஆமா ஏன் இன்னும் மேடம் வரல, அவங்க நம்பர் இருந்தா குடு. நான் போன் பண்ணி கேக்குறேன் 'என்று கதிர்வேலன் கோபத்துடன் கேட்க,
'வேண்டாம் வேண்டாம் மாமா சார்.நீங்க ஏதாவது சண்டை போட்டு வைக்காதீங்க. மேடம் வரும்போது வரட்டும்.
நீங்க வேணும்னான்னும்னா இன்னும் ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க' என்றாள் முல்லை.
'ஐயோ. இவ வேற ரவுண்டு பத்தி எல்லாம் பேசுறாளே. இப்போ கை நடுங்குமே. பேசாம போய் ஒரு கட்டிங் அடிப்போமா ' என்று கதிர்வேலன் யோசிக்கும் முன்னே
'யார் நீங்க.' என்று கேள்வியோடு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கே வந்தார்.
'சார். நான் சர்டிபிகேட்ஸ் வாங்க வந்தேன்' என்று முல்லை சொன்னதும், அந்த நபர் கதிர்வேலனை ஒரு மார்க்கமாக பார்த்தார்.
'என்ன லுக்கு.உங்க மேடம் எங்க' என்று கதிர்வேலன் கேட்க,
'அவங்க 5pm மணிக்கு தான் வருவாங்க' என்றார் அந்த நபர்.
'என்ன சாய்ங்காலம் ஆகிடுமா' என்ற கதிர்வேலனை பார்த்து மேலும் முறைத்தப்படியே அந்த நபர்அங்கிருந்து சென்று இருந்தார்.
'நோ நோ நோ.அவ்ளோ நேரமெல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது, ஏய் ரவா லட்டு,நீ வா நம்ம போகலாம்' என்ற கதிர்வேலனுக்கு மாலை நேரம் வந்தால் கால்கள் தானாக மது கடையை தேடி செல்ல துடிக்கும் என்பதே அவரின் அவசரத்திற்கு பின்னே ஒளிந்திருக்கும் காரணமாக அமைந்திருந்தது.
'இல்ல இல்ல.எவ்ளோ நேரம் கடந்தாலும் சர்டிபிகேட் வாங்காம நான் வர மாட்டேன்' என்ற முல்லையை கோவமாக முறைத்த கதிர்வேலன்,
'அப்போ நீ இருந்து, பொறுமையா வாங்கிட்டு, பஸ்ல ஏறி வீட்டுக்கு வந்துடு' என்று சொல்ல,
'சரி. நான் என்னை பார்த்துக்குறேன்' என்ற முல்லை கோவமாக முகத்தை திருப்பிக்கொண்டு இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.
முல்லையை கடிந்தப்படி காலேஜில் இருந்து வெளியயே வந்த கதிர்வேலன்,
'இப்ப தான் மணி ஒன்னு ஆகுது. இன்னும் நாலு மணி நேரம் இங்க தனியா ஒரு மனுஷனால காத்து இருக்க முடியும் ' என்று புலம்பும் கதிரின் மூளைக்கு இந்த தருணத்தில் முல்லையிடம் தன் மனதில் உள்ள உணர்வுகளை தெரியப்படுத்தலாம் என்ற எண்ணம் கூட இல்லாமல் போனது.
என்னதான் முல்லையிடம் கோவப்பட்டாலும்,கிட்டத்தட்ட அரைமணி நேரம் கடந்து கதிர்வேலன் மீண்டும் காலேஜ்க்குள் செல்ல, அங்கே தனியாக கன்னத்தில் கை வைத்தப்படி முல்லை கண்கள் மூடி அமர்ந்து இருந்தாள்.
'ம். ரொம்ப பிடிவாதம் தான்' என்று தனக்குள் எண்ணியபடி அவள் காதின் அருகே கை விரலை சுண்டும் வேளையில் முல்லை கண்கள் விழிக்க,
'பசிக்குதா.' என்று கேட்டார் கதிர்வேலன்.
'ஆமா மாமா சார். ரொம்ப பசிக்குது' என்று வயிற்றை தடவி சிறு பிள்ளையை போல பேசும் பெண்ணை இமைக்காமல் பார்த்தவன்,'பசிச்சா சொல்ல மாட்டியா' என்று கேட்க,
'ஹ்ம் ஹ்ம். நான் சொல்லி நீங்க என் மனசு கஷ்டப்படுத்துற மாதிரி பதில் சொன்னா எனக்கு அப்புறம் சாப்பிடவே பிடிக்காது' என்றாள் முல்லை.
அவள் பசியை அவளின் விழிகளின் வழியே அறிந்துக்கொண்டவனுக்கு, அதே கண்ணில் இவன் மேல் முல்லைக்கு மறைந்து இருக்கும் சில உணர்வுகள் மட்டும் புரியாமல் இருந்தது.
மதியம் 1.30 மணி அளவில் முல்லையை அழைத்துக்கொண்டு கதிர்வேலன் ஹோட்டலுக்கு நடந்தே வந்தவன்,
'என்ன சாப்பிடுற' என்று கேட்டார்.
'எனக்கு ஜூஸ் மட்டும் போதும் மாமா சார்' என்று முல்லை சொன்னதும்,
'இன்னும் உனக்கு ஹோட்டல் சாப்பாடு பிடிக்காமல் தான் இருக்கா' என்று கதிர் வேலன் கேட்க..
'உங்களுக்கு எப்படி தெரியும்' என்று ஆச்சிரியமாக கேட்ட முல்லை, அதோடு நில்லாமல்,'யார் சொன்னது. ஓ!. ஜீவா மாமா சொன்னாரா' என்று அவள் கேட்டதும், கதிர்வேலனின் முகம் இறுகியது.
அவள் கேள்விக்கு பதில் தராமல் 'நான் போய் ஜூஸ் வாங்கிட்டு வரேன்' என்று கதிர்வேலன் சொல்ல..
தன் கையில் போட்டு இருந்த உடைந்த கண்ணாடி வளைவியை கழட்டி குப்பையில் போட்டாள் முல்லை.
'கண்ணாடி வளையல் போட்டாலே இப்படி தான் ஆகும்' என்று புலம்பியவளின் முன்னே,கதிர்வேலன் சப்போட்டா ஜூசை கொடுக்க,
'ஐ. எனக்கு சப்போட்டா ஜூஸ் பிடிக்கும்ன்னு உங்களுக்கு தெரியுமா மாமா சார்' என்றப்படி அவர் வாங்கி வந்த பழச்சாற்றை குடிக்க ஆரம்பித்தாள் முல்லை.
அவளின் சிறுபிள்ளை தனமான பேச்சும்,அர்த்தமே இல்லாத கோவமும் இந்த நொடி வரையில் கதிர்வேலன் கள்ளத்தனமாக ரசித்து இருக்க..
'வெயிலுக்கு ஜூஸ் நல்லா இருக்கு மாமா சார்.. ஆமா நீங்க குடிக்கலையா?' என்று முல்லை கேட்க்கும் தருணம்,அவள் தொண்டை குழியில் நின்று இருந்த பழ சாறு அழகாய் அவளுள் இறங்குவதை ரசித்து இருந்தான் அவன்.
'மாமா சார் உங்களை தான்' என்று தன்னை அவன் ரசிப்பதை கூட கண்டுப்பிடிக்க தெரியாத முல்லைக்கு, அவன் முன்னே கையை அசைத்து,'உங்கள தான். நீங்க ஜூஸ் குடிக்கலைலையா' என்று கேட்க,
'எனக்கு இதெல்லாம் பிடிக்காது' என்றவனை பார்த்து,
'ஓ!..ஆமா.. நீங்க இதெல்லாம் குடிக்க மாட்டீங்க, நீங்க எப்பவும் வேற ஒன்றை தானே குடிப்பிங்க' என்று மீண்டும் முல்லை மதுவை பற்றி பேசி வைத்தாள்.
தன்னை கடுப்பேற்றும் விதமாக பேசும் முல்லையை பார்த்து,'உனக்கு என்னன்னு தெரியல டி.. ரொம்ப ஓவராத்தான் போற'
என்றபடி கதிர்வேலன் தன் பாக்கெட்டில் இருந்து பீடியை எடுத்துக்கொண்டு ஓரமாகச் செல்ல.
'எங்கிருந்துதான் இதெல்லாம் இவரு கத்துக்கிட்டாருன்னு தெரியலையே. எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்த மனுஷன்! இப்போ தண்ணி அடிக்கிறது, பீடி பிடிக்கிறதுன்னு.ஏன் இப்படி மாறி போயிட்டாரு' என்ற யோசனையில் முல்லை தன் கையில் இருந்த பழ சாற்றை குடித்து முடித்து இருந்தாள்.
***********************
சில நொடிகளில் முல்லையின் அருகே வந்த கதிர்வேலன்,'டைம் இப்போ தான் 2pm ஆகுது, உன் மேடம் வர 5pm ஆகும். இன்னும் மூணு மணி நேரம் உன் காலேஜ்க்குள்ள என்னால இருக்க முடியாது' என கதிர்வேலன் சொல்லிக்கொண்டு இருக்கும் நொடியே,
'நம்ம பேசாம திருச்சி மலைக்கோவில் போகலாமா' என்று கண் இமைகள் படபடக்க கேட்டு இருந்தாள் முல்லை.
'என்ன உச்சி பிள்ளையார் கோவிலுக்கா, ஏன் என்னை மேல இருந்து கீழ உருட்டி விட போறியா' என்று கதிர் கேட்க,
'நீங்க என்னை உருட்டாமல் இருந்தால் போதாதா மாமா சார்' என்று பதில் கொடுத்தாள் முல்லை.
'பார்க்க தஞ்சாவூர் பொம்மை மாதிரி இருந்துகிட்டு என்கிட்ட மட்டும் பதிலுக்கு பதில் பேசுறா' என்று முணங்கிய கதிர்வேலன்,
'இப்போ என்ன!? கோவிலுக்கு போகணும் அவ்வளவு தானே! சரி வா' என்று முல்லையை அழைத்தவாரு வேகமாக நடந்து சென்றார் கதிர்வேலன்.
'பைக் காலேஜ்ல இருக்கே.நம்ம எப்படி போக போறோம்' என்று கேட்டுக்கொண்டே முல்லை வேக நடையோடு கதிர்வேலன் பின்னே ஓட.
'அண்ணா.' என்று கைகள் அசைத்து ஒரு ஆட்டோவை அழைத்தார் கதிர்வேலன்.
'ஓ. ஆட்டோல போக போறோமா' என்று கேட்டுக்கொண்டே முல்லை கதிர் அருகே வந்து நின்றதும், ஆட்டோ ஓட்டுநர் முல்லையை ஒரு மார்க்கமாக பார்த்து இருந்தவர் முன்னே விரல்களை சுண்டி தன் பக்கம் அவர் கவனத்தை திருப்பினார் கதிர்வேலன்.
'ஆங் சொல்லுங்க சார் எங்க போகணும்' என்று ஆட்டோ டிரைவர் கேட்க,'மலை கோவிலுக்கு' என்றவன், கண் அசைவில் முல்லையை பின் இருக்கையில் அமர சொன்ன கதிர்வேலன், ஓட்டுநரின் பாதி இருக்கையை இவர் கைப்பற்றி இருந்தார்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top