• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
32
பாலைவனத்து முல்லை❣️

பகுதி-12(1)

இதே தருணம் மறுநாள் காலை தன் பிள்ளைகளுக்கு நடக்க இருக்கும் நிச்சியத்தை நினைத்து பாண்டியன் மகிழ்ச்சியாக படுத்து இருக்க,
'நடக்காது...நீ ஆசைப்பட்ட நல்ல காரியம் இந்த வீட்டில் நடக்காது.
நடக்கும்... நீ எதிர்பார்க்காத இழப்பு ஒன்று இந்த வீட்டில் நடந்தே தீரும்'
என்று திடீரென கேட்ட குரலில் பாண்டியன் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவரின் கண் முன்னே அஃரோஷமாக தலைவிரி கோலமாக நின்று இருந்தாள் ரோஜா.
ரோஜாவை பார்த்த பாண்டியனுக்கு ஒரு கணம் மூச்சே நின்று போனது.
கட்டிலில் இருந்து இறங்கிய பாண்டியன், 'தாயி...'என்று கைகள் கூப்பி ரோஜாவின் முன்னே கண்கள் கலங்கி நின்றார்.
'என்னதான் நீ கண்ணீர் சிந்தினாலும் இந்த குடும்பத்துக்கு வரபோற கஷ்டத்தை உன்னால மாற்றவே முடியாது' என்ற ரோஜாவின் அழுத்தமான வார்த்தையைக் கேட்டு பாண்டியனுக்கு ஈர குலை நடுங்கியது.
ரோஜாவின் மாற்றமான குரலை கேட்டு ஜீவானந்தம்,'ரோஜா...' என்று அழைத்துக்கொண்டே உள்ளே வர, தன்னிலை உணர்ந்த ரோஜா, கையில் இருந்த பால் குவளையை பார்த்தப்படி கண்கள் சுருக்கினாள்.
'ரோஜா... என்னமா ஆச்சு?' என்று ஜீவானந்தம் கேட்க,'ஐயனுக்கு பால் கொண்டு வந்தேன்' என்றவள், மேசை மேல் குவளையை வைத்தவளின் முகம் முழுதும் வியர்வை துளிகள் துளிர்த்தது.
தன் தங்கையின் மாற்றத்தை கண்டு,'அப்பா... என்னாச்சு' என ஜீவானந்தம் கேட்டதும்,தன் முகத்தில் இருந்த உப்பு நீரை துடைத்துக்கொண்ட பாண்டியன்,'ஓ... ஒண்ணுமில்ல ஜீவா' என்றவாறு படுக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டார் பாண்டியன்.
தன் தந்தையை புருவ முடிச்சுடன் பார்த்துக்கொண்டே ரோஜா அவள் அறைக்கு செல்ல,'அப்பா என்னாச்சு?' என்று மீண்டும் கேட்டார் ஜீவானந்தம்.
'ஒன்னும் இல்ல ஜீவா, நீ நேரத்தோட போய் படு, நாளைக்கு சீக்கிரம் கோவிலுக்கு கிளம்பனும்' என்ற பாண்டியனின் மனதில் எப்பாடு பட்டாவது நாளை நடக்க இருக்கும் நல்ல காரியம் செவ்வன முடிய வேண்டும் என்று எண்ணம் மட்டுமே இருந்தது.
ரோஜா தன் அறைக்குள் வந்தவள் அதிகப்படியான தலைவலியில் நெற்றியை வருடியப்படி அமர்ந்து இருக்க,
'என்னாச்சி ரோஜா? ஏன் தலையை பிடிச்சுகிட்டு உக்காந்துகிட்டு இருக்க' என்று நலம் விசாரித்தாள் முல்லை.
'ஒன்னும்... இல்ல லைட்டா தல வலிக்கிற மாதிரி இருக்கு' என்ற ரோஜா மேற்கொண்டு எதுவும் பேசாமல் தன் படுக்கையில் படுத்துக்கொண்டாள்.
நாளை தனக்கு நிச்சயம் நடக்கப் போகிறது என்ற சந்தோஷமே இல்லாமல் முல்லை பல சிந்தனைகளில் தனித்துப் படுத்து இருக்க,
இதே சமயம் மீனாவின் மனதில் எல்லை இல்லாத மகிழ்ச்சி நிலவியது.
ஆம்! எப்படியாவது கதிர்வேலனை மணமுடிக்க வேண்டும் என்ற மீனாவின் மூன்று வருட கனவு நாளை நிஜமாக போகிறது என்ற எதிர்பார்ப்பில் மீனா உறக்கத்தை தழுவி இருந்தாள்.
***************************
மறுநாள் காலை இனிதாக விடிந்தது.
சந்தன நிற பட்டு வேஷ்டியில் புது மாப்பிளை கணக்காக தயாராகி, தன் அன்னையின் புகைப்படத்தின் முன்னே கண்கள் மூடி வேண்டிக்கொண்டு இருந்தார் ஜீவானந்தம்.
'ஆனந்த்... இந்தாப்பா, இந்த செயின்னை நீ போட்டுக்கோ, இந்தா இதை கதிருக்கு கொடுத்துடு' என்ற பாண்டியன் MJ.... MK... என்று இரண்டு ஐந்து பவுன் சங்கிலியை ஜீவானந்தமிடம் கொடுத்தார்.
'கதிர் எங்க அப்பா இதெல்லாம் போட போறான் ' என்ற ஜீவானந்தம் MK என்ற செயின்னை வாங்கிக்கொண்டு கதிரின் வருகைக்காக காத்து இருக்க,
''ஏன் மச்சான்... இன்னைக்கு மோதிரம் மாத்துன கையோட நம்ம பசங்களுக்கு கல்யாண தேதியை குறிச்சிடுவீங்களா' என கேட்டார் மீனாவின் அப்பா ஜெகதீஸ்.
'ஏன்... கல்யாண தேதியை குறிச்சா, அப்படியே சீர் செய்து இந்த ஊரையே என் பொண்ணு பேர்ல எழுதி வைக்க போறியா' என தன் கணவனை எப்போதும் போலவே ஏளனமாக பேசிய கஸ்தூரி, பட்டுபுடவையில் இவர்கள் முன்னே வந்து நின்றார்.
'ஏன் டி, என் மவளுக்கு என்னால கண்ணாலம் பண்ணி வைக்க முடியாதா என்ன!' என்று ஜெகதீஸ் கேட்டதும்,
'ஆங் கிழிப்ப...
அவன் கெடக்குறான் குடிகாரப்பய,
எனக்கு கொஞ்சம் இருத்தாப்புல ஊத்துன்னானாம்...(பழமொழி)
அந்த மாதிரி ஆளு தானேயா நீ' என்று தன் கணவனை கடிந்துக் கொண்டாள் கஸ்தூரி.
'இங்க பாரு கஸ்தூரி... என்னதான் இருந்தாலும் ஜெகா உன் புருஷன், அவருக்கு மரியாதை கொடுத்து பேச பழகிக்கோ' என்று பாண்டியன் தன் தங்கையிடம் கோவம் கொள்ள,
'ஆறில் வலையாததா அறுபதில் வலைய போகுது' என்று சொல்லிக்கொண்டே கையில் மல்லி பூ சரத்தோடு வந்தாள் ரோஜா.
'அப்படி சொல்லு மருமகளே! இனி எங்கே இருந்து இவ திருந்த போறா, ஆமா எங்க கதிர் மாப்பிளையை ஆளை காணோம்' என்ற ஜெகா கேட்டதும்,
'அவன் நேத்து அடிச்ச போதை தெளியாம, இப்போ வரைக்கும் எங்க படுத்து தூங்கிகிட்டு இருக்கானோ' என்று இழுவையாக ஜாடை பேசினாள் கஸ்தூரி.
'அம்மா... நீ சும்மாவே இருக்க மாட்டியா, ஏன் எப்போ பாரு கதிர் மாமாவை குத்தி பேசிக்கிட்டே இருக்க' என தன் அன்னையை கடிந்தப்படி ரோஜாவின் அறையில் இருந்து வெளியே வந்த மீனா,
சந்தன நிற பட்டில் அரக்கு நிற பார்டர் வைத்து விலை உயர்ந்த புடவையை அணிந்துகொண்டு கழுத்து தொங்க நகைகளை போட்டு இருந்தாள்.
தன் மகளின் அழகையும் அவள் அணிந்து இருக்கும் ஆபரணங்களையும் பார்த்து மகிழ்ச்சியில் வாயடைத்து போனார் கஸ்தூரி.
'மாமா... நான் எப்படி இருக்கேன்' என்று மீனா பாண்டியன் முன்னே ஒரு சுத்து சுற்றி நிற்க,'உனக்கு என்ன மீனா... நீ மதுரை மீனாட்சி மாதிரியே இருக்குற' என்ற தன் தாய்மாமனின் வார்த்தையில் உள்ளம் மகிழ்ந்தாள் மீனா.
ரோஜா, மீனா என்று இருவருமே இங்கே இருக்க, முல்லை எங்கே என்று ஜீவானந்தத்தின் விழிகள் அவர் காதலியை தேட,' ரோஜா...முல்லை எங்கடா?' என்று கேட்டார் பாண்டியன்.
'நானும் ரோஜாவும் முல்லைக்கு அலங்காரம் பண்ணி விடுறோமுன்னு சொன்னோம் மாமா... ஆனா அவ தான் எங்கள வெளிய போங்க, நானே கிளம்பி வரேன்னு சொல்லிட்டா ' என்று மீனா சொல்ல, அதே தருணம் கதிர்வேலனின் நண்பன் நாகராஜன் வீட்டுக்குள் நுழைந்தார்.
நாகராஜனை பார்த்து கஸ்தூரி முகம் மாறியவர்,'இந்தாப்பா இந்த வீட்டு அடுத்த எஜமான், எங்க உன் நண்பன்' என்று குத்தலாக கேட்க,
'அத்த... நல்ல காரியத்துக்கு போகும் போது பிரச்சனை பண்ணாதீங்க' என்ற ரோஜா, கோவிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க பூஜை அறைக்கு சென்றாள்.
'நாகா... கதிர் எங்கே?' என்று பாண்டியன் கேட்க,'கதிர் வேன்ல இருக்கான் ஐயா... நான் கோவிலுக்கு எடுத்துட்டு போக வேண்டிய சாமான்களை எல்லாம் எடுத்துட்டு போக வந்தேன்' என்ற நாகராஜன் பூஜை பொருட்களை எல்லாம் வேனில் எடுத்து வைக்க,
'நாகா... நான் கதிரை வர சொன்னேன்னு சொல்லு' என்றார் பாண்டியன்.
கதிரை பார்க்க போகிறோம் என்ற ஆவளில் மீனா வாசலை பார்த்து இருக்க, கருப்பு சட்டையும் கருப்பு வேஷ்டியையும் அணிந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்த கதிர்வேலனை பார்த்து முகம் மாறினாள் மீனா.
'மாமா... என்ன மாமா நீங்க! இன்னைக்கு நமக்கு நிச்சயம் நடக்க போகுது, நீங்க என்ன இந்த டிரஸ்ல வந்து நிக்குறீங்க' என்ற மீனா வேகமாக கதிர்வேலன் அருகே சென்று, அவரை ஒட்டி நின்று கேள்வி கேட்டாள்.
'எனக்கு என்ன பிடிக்குமோ அதை தான் என்னால போட முடியும்' என்ற கதிர்வேலனிடம் தன் கையில் இருந்த தங்க சங்கிலியை ஜீவானந்தம் கொடுக்க,
'எனக்கு நகையெல்லாம் பிடிக்காது' என்ற கதிர்வேலனை பார்த்து தலையில் அடித்துக்கொண்டார் கஸ்தூரி.
'டேய்... ஒரு நல்லதுக்கு நகை போட்டா ஒரு தப்பும் இல்லை, இந்தா போட்டுக்கோ' என்ற ஜீவானந்தம் தன் கையால் அவர் தம்பிக்கு சங்கிலியை அணிவிக்க போக,'நான் தான் வேணான்னு சொல்லுறேனே' என்று பிடிவாதமாக நகையை மறுத்து இருந்தார் கதிர்வேலன்.
தன் மகனின் செயலை பார்த்து பாண்டியன் கோவம் கொள்ள, அதே நேரம் ரோஜாவின் அறையில் இருந்து வெளியே வந்தாள் முல்லை.
தங்கம் ஒளிரும் பட்டில், செப்புப் பளபளப்போடும் அன்னப்பச்சி சரிகையுடன், நுண்ணிய வேலைப்பாடுகளால் செழித்து நெய்யப்பட்ட ஓர் உயர்தர புடவையில்,
கழுத்தில் இதய வடிவலான சங்கிலியுடன் ஒரே ஒரு டாலர் செயின்னுடன்,
கையில் இரண்டே தங்க வளைவிக்கு நடுவே கண்ணாடி வளைவி அணிந்து,
வட்ட பொட்டிட்டு, விழிகளில் அஞ்சனம் தீட்டி,அளவான ஒப்பனையில் இருந்த முல்லையின் அழகினை,
ஜீவானந்தம் கதிர்வேலன் மட்டும் இல்லாமல் இவர்களுடன் சேர்ந்து பாண்டியணுமே தன் தங்கையின் மகளை கண்ணார ரசித்துக்கொண்டு இருந்தார்.
'என்னமா முல்லை, ஏன் எல்லா நகையும் போடல' என்று பாண்டியன் கேட்க,
'எங்க அப்பா... இந்த நகையே நாங்க திட்டியதால தான் போட்டு இருக்கா' என்று ரோஜா சொல்ல,
'சரி சரி அப்போ இந்தா,கதிர் செயின்னையாவது நீ போட்டுக்கோ' என்ற பாண்டியன் ஜீவானந்தத்தின் கையில் இருந்த MK என்ற எழுத்துடைய சங்கிலியை வாங்கி முல்லையிடம் கொடுத்தார்.
'ஐயோ வேணா மாமா... இந்த நகையே போதும்' என்று முல்லை சொன்னதும்,
'அப்பா தான் சொல்லுறாரே, போட்டுக்கோ முல்லை' என்று ரோஜா சொல்ல,
சிறு தயக்கத்துடனே முல்லை கதிரின் சங்கிலியை தன் கழுத்தில் அணிந்துகொண்டாள்.
நேற்றைய தினம் கடையையே கடைந்து எடுத்து விலை உயர்ந்த சேலையை தன் மகளுக்காக கஸ்தூரி தேர்ந்து எடுத்து இருக்க, ரோஜாவோ முல்லைக்கு மீனாவை விடவே அதிகமான விலையில் சேலையை வாங்கி இருந்தாள்.
எல்லா நேரத்திலும் முல்லையை தன் மகளுக்கு போட்டியாக நினைக்கும் கஸ்தூரிக்கு, தனக்கு மாப்பிளையாக வரப்போகும் கதிர்வேலனின் தங்க சங்கிலி முல்லையின் கழுத்தில் மிண்ணுவது கோவத்தை உண்டாக்கியது.
'என்னடி, ஏன் இப்போ முல்லையை முறைச்சுகிட்டே இருக்க' என்று ஜெகதீஷ் கேட்டதும்,
'சுத்த விவரம் இல்லாத ஒருவனை என் மகள் கல்யாணம் பண்ணிகிட்டு என்ன கஷ்டமெல்லாம் அனுபவிக்க போறாளோ தெரியல'என்று கஸ்தூரி புலம்பியவளை யாரும் கண்டுகொள்ளாமல் வேனில் ஏறி அமர்ந்தார்கள்.
**************************
தெய்வத்தை வணங்கியப்படி நாகராஜன் வேனை பாண்டி முனிஸ்வரன் கோவிலை நோக்கி விரட்ட, கதிர்வேலனும் ஜீவானந்தமும் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள்.

மீனா, ஜெகதீஷ், கஸ்தூரி என்று மூவரும் ஒரு இருக்கையில் அமர்ந்து இருக்க, முல்லை, ரோஜா, பாண்டியன் ஆகிய மூவரும் இன்னோரு இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top