• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 5, 2025
Messages
23
11.2

கதிர்வேலனின் கேள்வியில் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்ட முல்லை 'நா... நான் ஏதும் சொல்லல. ஆமா நேரமாகுதே நீங்க கடைக்கு கிளம்புல?' என்று கேட்க,
'ம்...நாங்க கிளம்பிட்டோம். சரி நீயும் வா கடைக்கு போயிட்டு வந்துடலாம்' என்று முல்லையை அழைக்க,
'ஹ்ம் ஹ்ம் வேணா மாமா சார். நான் வரல'என்று பிடிவாதமாக சொன்னாள் முல்லை.
முல்லையின் பதிலில் கோவமாக தன் பற்களை கடித்துக்கொண்டே 'ப்ச் அதான் ஏன் வரல?' என்று கதிர்வேலன் அழுத்ததுடன் கேட்க,
'அது... அது எனக்கு வர இஷ்டம் இல்ல' என்றாள் முல்லை.
'இஷ்டம் இல்லையா, இல்ல பிடிக்கலையா' என்று கதிர்வேலன் கேட்க,
'ஐயோ அப்படியெல்லாம் இல்ல மாமா சார், எனக்கு இஷ்டம் தான் இல்ல' என்று சமாளித்தாள் முல்லை.
'ம்... ஒரு வேள ஜீவா அண்ணன் உன் கூட இல்லைனு பீல் பண்ணுறியா'
என்றவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமப் முல்லை முழித்துக்கொண்டு இருக்க,
'சொல்லு... ஜீவா அண்ணன் வரலைன்னு தான் உனக்கு வர இஷ்டம் இல்லையா... இல்ல என் கூட வர இஷ்டம் இல்லையா' என்ற கதிர்வேலனின் கேள்வியில் முல்லையின் கண்கள் சட்டென்று கலங்கியது.
'இப்போ ஏன் அழற! என்ன தான்டி உனக்கு பிரச்சனை' என்ற கதிர்வேலன், கலங்கிய விழிகளுடன் நின்று இருந்த பெண்ணவளின் முகத்தை பார்த்து அவளின் தயக்கத்தை புரிந்துக்கொண்டார்.
'என்ன!? கஸ்தூரி அத்த எதாவது சொன்னாங்களா?' என சரியாக கேட்ட கதிர்வேலனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று முல்லை விழித்து இருக்க,
'அப்போ அவங்க தான் என்னமோ சொல்லி இருக்காங்க...
இரு இன்னைக்கு அந்த ரப்பர் வாயை என்ன பண்ணுறேன் பாரு' என்றவாரு தன் முழு கை சட்டையை மடித்தபடி காரை நோக்கி வேகமாக நடந்தார் கதிர்வேலன்.
தன்னால் மீண்டும் இங்கே பிரச்சனை வரபோகிறது என்று எண்ணிய முல்லை,'மாமா சார் மாமா சார்... சித்தியை ஒன்னும் சொல்லிடாதீங்க' என அச்சப்பட்டு
கதிர்வேலனின் கையை பிடித்து தடுத்தாள் முல்லை.
'எப்போ பாரு சண்டைக்காரி மாதிரி கஸ்தூரி அத்த உன்னை எதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க, நான் அதை பார்த்துகிட்டு இருக்கணுமா...இல்ல இல்ல இன்னைக்கு அவங்கள என்ன பண்ணுறேன் பாரு' என முல்லையின் கையை தட்டி விட்ட கதிர்வேலன், மீண்டும் தன் கை காப்பை முட்டி வரை ஏற்றிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தவரின் செயலில் முல்லைக்கு மேலும் பதட்டம் ஏற்பட்டது.
முல்லையை பார்த்தாலே கஸ்தூரிக்கு ஆகாது என்ற நிலையில், மீண்டும் தன்னால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்ற முடிவோடு,
'மாமா சார்...எனக்காக நீங்க யார்கிட்டயும் போய் சண்டை போட தேவையில்லை, இப்போ என்ன உங்களுக்கு, அதான் நீங்க கட்டிக்க போற பொண்ணு உங்ககூட இருக்காளே, அவளை அழைச்சிட்டு போங்க' என்று முல்லை இயல்புக்கு மாறாக கோவமாக பேசியவளின் வார்த்தையைக் கேட்டு கதிர்வேலன் அப்படியே நின்று இருந்தார்.
இதுவரை கதிர்வேலனின் எதிரே நின்று சத்தமாக கூட பேசாத முல்லை இன்று அவரை எடுத்தேரிந்து பேசியது கதிர்வேலனுக்கு வருத்தத்தை கொடுத்தது.
'மாமா சார் நான்... நான் உங்கள' என முல்லை தன் தரப்பு நியாயத்தை சொல்லும் முன்னே,
'மன்னிச்சிடு. இனி உனக்காக நான் யாரிடமும் எதுவும் பேச மாட்டேன்' என்றவாரு கதிர்வேலன் வீட்டில் இருந்து வேகமாக வெளியேறியவரை வருத்தத்துடன் பார்த்து இருந்தாள்
முல்லை.
'உனக்கு அறிவே இல்ல முல்லை, மாமா சார் உனக்காக பாவம் பார்த்து தானே உன்கிட்ட பேச வந்தாரு, ஆனா நீ அவரை இப்படி அவமானப்படுத்திட்டியே' என தனக்கு தானே முல்லை அவளை திட்டிக்கொண்டு இருக்க,
'இல்ல இல்ல... நம்ம பண்ணது தான் கரெக்ட். இப்போ நம்ம கடைக்கு போனால் கண்டிப்பா சித்தி நம்மள வச்சி பிரச்சனை பண்ணுவாங்க' என எண்ணிய முல்லை, சமையல் வேளைகளில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.
***************
முல்லை தன்னிடம் வெறுப்புடன் பேசியதாக நினைத்த கதிர்வேலன் தன் காரை அதி வேகத்தில் இயக்க,'மாமா பொறுமையா போங்க மாமா' என்று பின் இருக்கையில் இருந்தப்படி உயிர் பயத்தில் கத்தினாள் மீனா.
'இந்தாப்பா கதிரு... என்ன நேத்து அடித்த சரக்கு தெளியலையா! பார்த்து பார்த்து வண்டியை பொறுமையா ஓட்டு' என கஸ்தூரி குத்தலாக பேச,
'பொறுமையா போகணும்னுமா அம்மாவும் பொண்ணும் காருல இருந்து இறங்கி நடந்தே வாங்க' என்றார் கதிர்வேலன்.
தன் அண்ணனின் கோவமான முகத்தை வைத்தே அவரின் கோவத்துக்கு முல்லை தான் காரணம் என்று அறிந்திருந்த ரோஜாவிற்கு, கதிர்வேலன் தன் மனதில் முல்லை மேல் உள்ள காதலை மறந்து எப்படி மீனாவை திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ போகிறான் என்ற கேள்வி தான் எழுந்தது.
ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய துணி கடைக்கு, அரை மணி நேரத்திலேயே தன் காரின் வேகத்தைக் கூட்டி இவர்களை அழைத்து வந்த கதிர்வேலன்,'அம்மா... இந்தாங்க கார்டு, நான் காருல இருக்கேன், நீங்க போய் தேவையானதை வாங்கிக்கோங்க' என prepaid அட்டையை ரோஜாவிடம் நீட்டினார்.
'மாமா... நீங்க வந்து எனக்கு புடவை செலக்ட் பண்ணி தாங்க ப்ளீஸ்' என மீனா காதலுடன் கேட்க,
'நான் வந்தா ஐநூறு ரூபாய் புடவை தான் எடுத்து தருவேன், பார்வையில்லையா' என கேட்டார் கதிர்வேலன்.
'ஏய் மீனா...நீ சும்மாவே இருக்க மாட்டியா, இந்தாப்பா கதிரு... நீ ஒன்னும் வர வேண்டா, நாங்களே போய் புடவையை எடுத்துட்டு வரோம்' என்ற கஸ்தூரி தன் மகளை அழைத்துக்கொண்டு ஜவுளிக்கடைகுள் நுழைந்தார்.
இரண்டு நாட்களாக தன் தங்கை தன்னிடம் பேச வில்லை என்ற கவலையில் கதிர்வேலன் ரோஜாவை பாவமாக பார்த்து இருக்க, அவளோ தன் அண்ணன் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பாமல் கடைக்குள் சென்று இருந்தாள்.
கிட்டதட்ட மூன்று மணி நேரம் கடந்த பிறகு கஸ்தூரி,மீனா,ரோஜா என்று மூவரும் கை நிறைய கட்டை பையுடன் காரை நோக்கி நடந்து வர,'கடையையே வழித்து நக்கிட்டு வராங்க போல' என முணுமுணுத்தார் கதிர்வேலன்.
'மாமா...உங்களுக்கும் எனக்கும் ஒரே கலர்ல ட்ரெஸ் எடுத்து இருக்கேன்' என்ற மீனா கண்கள் மிளிர கதிரிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள,'எங்க மீனா... உனக்கு பிடித்த எதையும் தான் உன் அம்மா எடுக்க விடவே இல்லையே' என்றாள் ரோஜா.
'ஆமா ஆமா இவளுக்கு பிடிச்சது எல்லாம் வெறும் எட்ட ஆயிரம் பத்தாயிரமுன்னு இருக்கு, அதான் இவளுக்கு பிடிக்கலைனாலும் பார்வையில்லைனு 15 ஆயிரம் ரூபாய் புடவையை எடுக்க சொன்னேன்' என்ற கஸ்தூரியின் அல்ப புத்தி, எப்போதோ ரோஜா அறிந்து இருந்த உண்மை தான்.
'எப்படியோ நீங்க நினைச்சதை உங்க பொண்ணுக்கு வாங்கி கொடுத்துட்டிங்க தானே! இப்போ நம்ம வீட்டுக்கு போகலாமா' என்று ரோஜா கேட்க,
'ஆமா...அவளுக்கு எவ்வளவுக்கு புடவை வாங்கி இருக்க?' என்று இழுவையாக கேட்டார் கஸ்தூரி.
முல்லையை பற்றி தான் கஸ்தூரி கேட்கிறார் என்று அறிந்து இருந்த ரோஜா,'அவனா யாரு?' என்று தெரியாததை போல கேட்க,
'அதான் அந்த முல்...லை...' என்று அழுத்த திருத்தமாக சொன்னார் கஸ்தூரி.
'அத்த... உங்களுக்கு தான் முல்லையை பிடிக்கலையே, அப்புறம் ஏன் சும்மா அவளை பற்றி தெரிஞ்சிக்க ஆசைப்படுறீங்க, போங்க... போய் காருல உக்காருங்க' என்ற ரோஜா அவள் முல்லைக்காக வாங்கிய புடவை நகையை எல்லாம் பத்திரமாக காருக்குள் வைக்க,
மதியம் மூன்று மணி அளவில் மீண்டும் கதிர்வேலனின் கார் பாண்டியனின் வீட்டுக்கு திரும்பியது.
வழியெல்லாம் முல்லை மீதுள்ள கோவத்தில் கதிர்வேலனின் மண்டைக்குள் எழும் தேவையில்லாத உணர்வுகளின் பிடியில் சிக்கி தவித்து இருந்தவரை பார்த்து,'மாமா... உள்ள வந்து சாப்பிட்டு போங்க' என்று மீனா அழைக்க, அவளின் பேச்சை காதில் வாங்காமல் தன் நண்பனின் வீட்டை நோக்கி சென்றவரின் செயலில் மீனாவுக்கு மேலும் கவலை அதிகரித்தது.
*****************
அன்றைய இரவு ஒன்பது மணி அளவில் ஜீவானந்தமும் பாண்டியனும் வீடு திரும்பியவர்களிடம் புது துணி நகைகளை எல்லாம் ரோஜா காண்பிக்க,'முல்ல... உனக்கு இந்த புடவை ரொம்ப எடுப்பா இருக்கும், ரோஜா உனக்காக அழகாவே செலக்ட் பண்ணி இருக்கிறாள்' என்றார் ஜீவானந்தம்.
'என் மருமகளுக்கு எல்லா புடவையும் அழகா தான் இருக்கும். என்ன ஒன்னு முல்லையே நேரா போய் அவளுக்கு பிடித்த புடவையை எடுத்திருந்தால் இன்னும் ரொம்பவே நல்லா இருந்து இருக்கும். ஆனா நடுவுல யாரு என்ன சொன்னாங்கனு தெரியல என் மருமகள் இன்னைக்கு கடைக்கே போகாம வீட்டுல இருந்து இருக்கிறாள்'என்ற பாண்டியனின் பார்வை கஸ்துரியை தான் தொலைதேடுத்தது.
'அப்பா... விடுங்க, நீங்க சொன்ன மாதிரி முல்லைக்கு எல்லா கலர் புடவையும் நல்லா தான் இருக்கும்' என்ற ஜீவானந்தத்தை பார்த்து முல்லை மெலிதாக சிரித்தவளின் இதயத்தில் இன்று காலை கதிர்வேலனின் மனம் புண்படும்ப்படி அவள் பேசிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது.
'சரி சரி... நாளைக்கு காலையில சீக்கிரமா கோவிலுக்கு கிளம்பனும். ஏன் ஜீவா கோவில்ல பூஜைக்கு எல்லாம் சொல்லிட்ட தானே' என பாண்டியன் கேட்டதும்,
'எல்லாமே சொல்லியாச்சு அப்பா, ரோஜா நீ மோதிரத்தை மட்டும் பத்திரமா எடுத்து வச்சிக்கோ' என்றார் ஜீவானந்தம்.
'ம்... சரி அண்ணா... நான் இப்போவே மோதிரத்தை முல்லைகிட்ட கொடுத்து வைக்கிறேன்' என்று ரோஜா சொல்ல,
'வேணா ரோஜா நீயே பத்திரமா வச்சிக்கோ' என்றாள் முல்லை.
ஊரை கூட்டி தடப்புடலாக இவர்களின் நிச்சியத்தை நடத்த விரும்பாத பாண்டியன்.
தன் குலதெய்வ கோவிலில் ஆடம்பரம் இல்லாமல் மோதிரத்தை மாற்றி நிச்சியத்தை முடிக்க முடிவு செய்தவர், நாளைய தினமே தனது இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் திருமண தேதியை குறிக்கவும் முடிவு செய்திருந்தார்.
நள்ளிரவு நேரம் கடந்தும் கதிர்வேலன் வீட்டுக்கு வராமல் இருக்க, எப்போதும் போலவே தன் நண்பனின் வீட்டில் குடி போதையில் படுத்து இருந்தவர்,
'என்னை பார்த்து அவ எப்படி நாகா அப்படி கேக்கலாம்' என இதோடு ஆயிரம் முறையாவது கேட்ட கதிர்வேலனின் உடல் முழுதும் மதுவின் ஆதிக்கம் தான் ஆட்சி புரிந்தது.
தன் நண்பன் என்னதான் மது போதையில் மிதந்தாலும் மறுநாள் காலை புது ஆளாக தான் கண் விழிப்பான் என்று அறிந்து இருந்த நாகராஜன் எப்போதும் போலவே கதிர்வேலனை தன் வீட்டிலேயே தங்க வைத்துக்கொள்ள, கதிர்வேலனின் அதரங்கள் முல்லையின் பெயரை மட்டுமே நொடிக்கு இரண்டு முறை முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.
இதே தருணம் மறுநாள் காலை தன் பிள்ளைகளுக்கு நடக்க இருக்கும் நிச்சியத்தை நினைத்து பாண்டியன் மகிழ்ச்சியாக படுத்து இருக்க,
'நடக்காது...நீ ஆசைப்பட்ட எந்த நல்ல காரியமும் இந்த வீட்டில் நடக்காது.
நடக்கும்... நீ எதிர்பார்க்காத இழப்பு ஒன்று இந்த வீட்டில் நடந்தே தீரும்'
என்று திடீரென கேட்ட குரலில் பாண்டியன் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவரின் கண் முன்னே அஃரோஷமாக தலைவிரி கோலமாக நின்று இருந்தாள் அவள்.

தொடரும் 🌹
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top