New member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 23
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
பகுதி-11
நீண்ட நேரம் கடந்தும் முல்லை சமையலறையில் கண்களில் கண்ணீருடன் நின்று இருந்தவள், சற்று முன்பு கஸ்தூரி மீனாவிடம் பேசிய உரையாடல்கள் அணைத்தையும் கேட்க நேர்ந்தது.
'உண்மையில் நம்ம ராசி இல்லாத பொண்ணு தானா!? அதனால தான் நம்ம முதலில் அவர் கூட வாழணும்னு ஆசைப்பட்ட அந்த வாழ்கை நமக்கு கிடைக்காமல் போச்சா!' என்று முல்லை ஆதங்கத்தில் வாய்விட்டு புலம்ப...
'என்ன சொல்லுற நீ! அப்படி யார்கூட நீ முதல்ல வாழ ஆசைப்பட்ட வாழ்கை உனக்கு கிடைக்காமல் போச்சு?' என்ற குரலில், முல்லை திடுக்கிட்டு திரும்பியவளின் முன்னே புருவம் இடுங்க
குடிப்போதையில் நின்று இருந்தது கதிர்வேலன் தான்.
தான் பேசியதை கதிர்வேலன் கேட்டு இருக்க கூடுமோ என்று பயத்தில் முல்லையின் அஞ்சன விழிகள் நாலா பக்கமும் சுழண்டு இருக்க,
'கேக்குறேனே... அப்படி யார் கூட நீ வாழ ஆசைப்பட்டு அது நட... நடக்காமல் போச்சு' என்று மது போதையில் திக்கி திணறி கேட்டார் கதிர்வேலன்.
'இ... இல்ல மாமா சார்... நா... நான் ஏதோ சும்மா தான் சொன்னேன்' என்று முல்லை சமாளித்தவள்,
'நீங்க ஏன் தூங்காம இங்க வந்து இருக்கீங்க?' என்று பேச்சை மாற்றினாள்.
'ம்... ஆமா நான் ஏன் இங்க வந்தேன்' என்று கதிர்வேலன் தன்னை தானே கேள்வி கேட்டுக்கொள்ள,
'நீங்க போய் தூங்குங்க மாமா சார்' என்ற முல்லை தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அடுப்பணையில் இருந்து வெளியேறியவளை கதிர்வேலன் மையலாக பார்த்து இருந்தார்.
'ஐயோ இவரு ஏன் இப்படி பாக்குறாரு, மறுபடியும் நம்ம நமக்குள்ள பேசுனதை என்னன்னு கேப்பாரா' என்று முல்லை தனக்குள் நினைத்து இருக்க,
'அடியே ரவா லட்டு, என்னமோ ஒரு திருட்டு தனம் பண்ற டி நீ' என்று புலம்பும் கதிர்வேலனின் பேச்சை காதில் வாங்காமல் முல்லை அங்கிருந்து வேகமாக சென்று இருந்தாள்.
அடுப்பணையில் இருந்து முல்லை ரோஜாவின் அறைக்கு செல்வதை பார்த்த ஜீவானந்தம்,'டேய் கதிரு... இங்க என்ன பண்ற நீ" என்று கேட்க,
'நீ என்ன பண்ற அண்ணா' என்று அதே கேள்வியை கேட்டார் கதிர்வேலன்.
'என்னடா இது மறுபடியும் குடிச்சு இருக்கியா'என்று ஜீவானந்தம் கோவமாக கேட்க, கதிர்வேலன் நிற்கவே முடியாமல் தள்ளாடிக்கொண்டு இருந்தவரை கைத்தாங்களாக அவர் அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தார் ஜீவானந்தம்.
என்னதான் அண்ணன் தம்பியாக இருந்தாலும் ஒருவர் அறைனுள் மற்றொருவர் அனுமதியின்றி செல்லும் பழக்கம் இல்லாததால், மூன்று வருடத்திற்கு பிறகு தன் தம்பியின் அறைக்குள் நுழைந்து இருந்தார் ஜீவானந்தம்.
போதையில் இருக்கும் கதிர்வேலனை கட்டிலில் படுக்க வைத்த ஜீவானந்தம் அந்த அறையை சுற்றி பார்க்க. அங்கே மேசை மேல் கதிர்வேலன் அவர் கைப்பட எழுதிய கைக்குறிப்பு புத்தம் இருந்தது.
'இன்னும் இவன் டைரி எழுதுற பழக்கத்தை விடவே இல்லையா' என்ற ஜீவானந்தம் தன் தம்பியின் டைரியை கையில் எடுத்து முதல் பக்கத்தை பார்த்தவரின் கண்கள் ஆச்சிரியத்தில் மிளிர்ந்தது.
KM என்ற எழுத்தை இதய வடிவிலான ஓவியத்தின் மத்தியில் வரைந்து.
'சொல்லாத காதலுக்கு தான் ஆயுள் அதிகம்.
ஆனால் நான் என் காதலை சொல்லாமலேயே என் இதயத்தில் உன்னை ஆயுள் கைதியாக்கி,தண்டனையை நானே அனுபவித்துக்கொண்டு இருக்கின்றேன்' என்ற எழுத்தை வாசித்த ஜீவானந்ததின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது.
'ம்... என் தம்பிக்கு மீனா மேல இவ்ளோ காதல் இருக்கா!' என்று ஜீவானந்தம் ஆச்சிரியத்துடன் அடுத்த பக்கத்தை திருப்ப எண்ணியவரின் மனதிரிக்குள், 'ச்சீ...இன்னோரு ஆளோட டைரியை படிக்கிறது அவங்க பெட் ரூமை எட்டிப் பார்க்கறதுக்கு சமம்' என்று தனக்கு தானே புத்தி சொல்லிக்கொண்டு கைக்குறிப்பு புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்த ஜீவானந்தம்,தன் தம்பிக்கு போர்வையை போர்த்தியப்படி அவர் அறையில் இருந்து வெளியே சென்று இருந்தார்.
ஒரு வேளை இன்று கத்திரிவேலனின் கைக்குறிப்பு புத்தகத்தை ஜீவானந்தம் முழுதாக வாசிக்க நேர்ந்து இருந்தால், KM என்ற எழுத்துக்கு ஒரே அர்த்தம் கதிர்வேலன் முல்லை என்று அறிந்துக்கொண்டு இருப்பாரோ என்னவோ, கடைசி வரை அவருக்கு அந்த உண்மை தெரியாமல் போக, அவரும் KM என்ற எழுத்துக்கு அர்த்தம் கதிர் மீனா என்று எண்ணி இருந்தார்.
இரவு நேரம் அனைவரும் உறங்கி இருக்க, மறுநாள் காலை பாண்டியனும் ஜீவானந்தமும் காலை ஐந்து மணிக்கே பஞ்சாயத்து விஷயமாக வெளியே சென்று இருந்தார்கள்.
*****************
காலை நேரம் ரோஜாவும் முல்லையும் சமையல் வேலைகளை செய்துக்கொண்டு இருக்க, 'ரோஜா... மதியம் என்ன சாப்பாடு பண்ணலாம்' என்று கேட்டாள் முல்லை.
'வேண்டா முல்ல... நம்ம தான் ஷாப்பிங் போறோமே, அப்போ வரும் போது வெளியே சாப்பிட்டுட்டு வந்துடலாம்' என்று ரோஜா சொல்ல,' வெளியே எல்லாம் வேண்டாம் ரோஜா. நீங்க போயிட்டு வரதுக்குள்ள நான் மதிய சாப்பாட்டை முடிச்சுடுவேன்' என்றாள் முல்லை.
'என்ன நாங்க போயிட்டு வரதுக்குள்ளவா!!... ஏன் அப்போ நீ எங்ககூட ஷாப்பிங் வரலையா' என்று ரோஜா கேட்க,' நான் வரல ரோஜா... நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க' என்றாள் முல்லை.
'என்ன முல்லை விளையாடுறியா? நாளைக்கு ஐயன் உனக்கும் மீனாவுக்கும் பாண்டி கோவில்ல நிச்சயம் ஏற்பாடு பண்ணி இருக்காரு. அதுக்கு டிரஸ் வாங்க தான் நம்ம இப்போ கிளம்ப போறோம்' என்று ரோஜா சொல்ல,
'அதெல்லாம் சரி தான் ரோஜா... ஆனா நீயே எனக்கு தேவையான புடவையை வாங்கிட்டு வந்துடு' என்ற முல்லையின் முகம் எதையோ பறிகொடுத்த உணர்வை வெளிப்படுத்தியது.
'என்ன முல்ல...உன்னை யாராவது எதாவது சொன்னாங்களா' என்று ரோஜா சரியாக கேட்க,
'அதெல்லாம் இல்லையே... எனக்கு ஷாப்பிங் மேல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை ரோஜா' என்ற முல்லையின் மனதில் நேற்று இரவு கஸ்தூரி தன்னை ராசியில்லாத பெண் என்று சொன்ன சொற்கள் தான் நினைவுக்கு வந்தப்படியே இருந்தது.
முல்லையின் வாடிய முகத்தை பார்த்த ரோஜாவும் மேலும் அவளை தொல்லை தராமல் மீனா கஸ்தூரியுடன் கடைக்கு செல்ல முடிவு எடுத்து இருந்தாள்.
'இந்தா ரோஜா... உன் அண்ணன் எங்க? கடைக்கு நேரமாகுது பாரு' என்று கஸ்தூரி கடைக்கு முதல் ஆளாக கிளம்பி இருக்க,'ரோஜா போகலாமா?' என்ற மீனாவின் பார்வை கதிர்வேலனின் அறையை கண்காணித்தது.
'ம்... போகலாம் மீனா, நீ போய் வாத்தியை வர சொல்லு' என்று ரோஜா சொல்லும் போதே, கதிர்வேலன் கருப்பு சட்டை கருப்பு பேண்டில் கார் சாவியோடு தன் அறையில் இருந்து வெளியே வந்தார்.
'கதிர் மாமா... என்ன நீங்க!? நம்ம நிச்சியத்துக்கு துணி எடுக்க போகும் போது யாராவது இப்படி கருப்பு துணி போட்டுட்டு வருவாங்கள' என்ற மீனாவின் கேள்விக்கு பதில் தராமல் கதிர்வேலன் நேராக காரில் ஏறி அமர்ந்து விடாமல் ஹாரன் சத்தத்தை எழுப்பினார்.
கதிர்வேலனின் செயலில் மீனாவின் முகம் வாடி போக,' இந்த திமிர் பிடிச்சவனை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறியாக்கும்' என்று தன் தலையில் அடித்துக்கொண்டார் கஸ்தூரி.
'அம்மா... கதிர் மாமாகிட்ட எனக்கு பிடித்ததே அந்த திமிர் தான் அம்மா' என்ற மீனா வேகமாக சென்று காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருக்க,'ஏய் இந்தா... போய் பின்னாடி உக்காரு' என்ற கதிர்வேலனின் குரலில் மீனாவுக்கு கோவம் வந்தது.
'சொல்லுறேன் தானே! போய் பின்னாடி உக்காரு'என்று மீண்டும் கதிர்வேலன் அழுத்தமாக சொன்னதும்,
'மீனா... கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி ஒண்ணா உக்கார வேணான்னு தான் உன்னை பின்னாடி உக்கார சொல்லுறாங்க' என்ற ரோஜா பின் இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.
யார் பேச்சையும் கேட்டிடாத கதிர்வேலன் தினமும் குடிக்கும் காரணத்தால் கடந்த இரண்டு நாட்களாக ரோஜா தன் அண்ணனிடம் பேச மறுத்தவள், இன்றும் கதிர்வேலனிடம் பேசாமல் அவரை தவிர்க்க தொடங்கினாள்.
தன் தங்கையின் கோவத்தில் உள்ள அர்த்தத்தை அறிந்துக்கொண்ட கதிர்வேலனும் ரோஜாவை சமாதானம் செய்ய முயற்சிக்காமல் இருக்க, மீனா முன் இருக்கையில் இருந்து இறங்கி பின் இருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.
வீட்டில் இருந்து சின்ன பையுடன் வெளியே வந்த கஸ்தூரியும் கதிர்வேலனின் அருகே இருக்க பிடிக்காமல் பின் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள, 'ம்... போகலாம் மாமா' என்றாள் மீனா.
'என்ன போகலாமா!?ஏன் ரவா லட்டு வரலையா?'என்று கதிர்வேலன் கேட்க,
'இந்தாப்பா கதிரு... ரவா லட்டு கடலை மிட்டாய் எல்லாம் வரல. நீ முதல்ல வண்டியை எடு' என்றார் கஸ்தூரி.
கஸ்தூரியின் இழுவையான பேச்சில் கதிர்வேலனின் முகத்தில் கோவம் தெரிய,
'மாமா... முல்லை கடைக்கு வர இன்ட்ரெஸ்ட் இல்லைனு சொல்லிட்டாள். அவளுக்கும் சேர்த்து எங்களையே செலக்ட் பண்ண சொல்லி இருக்கா' என்று மீனா சொல்ல,
'நேரமாகுது கதிரு. வண்டியை எடு' என்ற கஸ்தூரி தான், இவை அனைத்துக்கும் காரணம் என்று அறிந்து தான் இருந்தார் கதிர்வேலன்.
'மாமா நேரமாகுது கிளம்பலாம்' என்று மீனா சொல்ல, கதிர்வேலன் வேகமாக காரில் இருந்து கீழே இறங்கினார்.
'என்னாச்சு? ஏன் காருல இருந்து கீழே இறங்கினீங்க' என்று மீனா கேட்க,
'Card எடுக்க மறந்துட்டேன்' என்ற கதிர்வேலன் வேகமாக வீட்டுக்குள் நுழைந்தவரை மீனா இயல்பாக பார்த்து இருக்க, ரோஜாவிற்கு மட்டும் தன் அண்ணன் உள்ளே சென்ற காரணம் தெளிவாக தெரிந்து இருந்தது.
வீட்டுக்குள் சென்ற கதிர்வேலனின் கண்கள் முல்லையை தேடி அலைய, அவளோ சமையலறையில் நின்று மதிய உணவிற்கான பதார்த்தங்களை தயார் செய்துக்கொண்டு இருந்தாள்.
ஒரு கணம் முல்லையை அழுத்தமாக பார்த்து இருந்த கதிர்வேலன், 'ஏய்... நீ ஏன் கடைக்கு வரல?'என்று கேட்க,அவர் குரலில் திடுக்கிட்டு திரும்பிய முல்லையின் முகம் குப்பேன்று வியர்த்து போனது.
'கேக்குறேனே! ஏன் கடைக்கு வரல' என்று மீண்டும் கோவமாக கதிர்வேலன் கேட்க,
'அது...அதான் நான் ரோஜாகிட்ட சொன்னேனே'என்று திக்கி திணறினாள் முல்லை.
'என்ன சொன்ன?'என்று புருவம் உயர்த்தி மீண்டும் அதே கேள்வியை கதிர்வேலன் கேட்க,
'எனக்கு ஷாப்பிங் பண்ண அவ்வளவா இன்ட்ரெஸ்ட் இல்லை மாமா சார்' என்று பொய் உரைத்தாள் முல்லை.
'நாளைக்கு உனக்கும் அண்ணனுக்கும் நிச்சயம் நடக்கப்போகுது. அதுக்கு கூட ஷாப்பிங் பண்ண மாட்டியா?' என்று கதிர்வேலன் கேட்டதும்
'அதான் நீங்க எல்லாம் போறிங்களே. நீங்க பார்த்து வாங்கிட்டு வாங்க, நான் அதையே போட்டுக்குறேன்' என்ற முல்லையின் வார்த்தையில் எந்த ஒரு உணர்வுமே இல்லாமல் இருந்தது.
'நாங்க எங்களுக்கு வாங்கிப்போம், உனக்கு தேவையானது என்னனு நீ தானே செலக்ட் பண்ணனும்' என்று கதிர்வேலன் சொல்ல,
'ம்... அப்படியெல்லாம் இல்ல மாமா சார், நான் செலக்ட் பண்ணுறது ஒரு நேரம் எனக்கு கிடைக்காமல் கூட போகலாம். அதனால எனக்கு என்ன கிடைக்குதோ அதை அந்த கடவுள் எனக்காக படைத்ததா ஏத்துப்பேன்' என்ற முல்லையின் பதிலை கேட்டு,
'என்ன சொல்லுற நீ?' என்று புரியாமல் கேட்டார் கதிர்வேலன்.