New member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
பகுதி-10 - 1
கஸ்தூரியின் நாராசாரமான வார்த்தைக்கு அவர் கன்னத்தில் அறைந்தது அவரது கணவன் ஜெகதீஷ் தான்.
அனைவரின் எதிரிலும் தன்னை அடித்த தன் கணவனை எரித்து விடும் பார்வை பார்த்தார் கஸ்தூரி.
“என்னடி அப்படி பாக்குற? இன்னோரு பக்க கன்னமும் சிவக்கணுமா? முல்லையும் நம்ம மீனா மாதிரி தானே! அந்த பொண்ணை பற்றி இவ்ளோ கேவலமா பேச உனக்கு எப்படி மனசு வருது” என்று பொறிந்து தள்ளினார் ஜெகதீஷேன்.
கஸ்தூரி பேசிய பேச்சை கேட்டு முல்லை மேலும் அழுதவளை ஜீவானந்தம் சமாதானம் செய்துக்கொண்டு இருக்க, தனக்கு பரிந்து பேசியதால் தான் முல்லைக்கு இந்த நிலை என்று எண்ணிய கதிர்வேலன் உள்ளுக்குள் புழுங்கி போனார்.
“ஏன் கஸ்தூரி! உனக்கு ஆண்டவன் நாவை தான் படைத்து இருக்கானா!? இல்லை விஷத்தை மட்டுமே கக்கும் பாம்பின் நாக்கை வச்சி அனுப்பிருக்கானா!? ஏன் எப்போ பாரு முல்லையை இப்படி கரித்து கொட்டிக்கிற” என்ற பாண்டியனும் தன் பங்குக்கு அவரின் தங்கையை கடிந்துகொண்டார்.
“அம்மா... நீ சும்மாவே இருக்க மாட்டியா, இனி நீ முல்லையை பற்றி எதுவும் பேசக்கூடாது சொல்லிட்டேன்” என்று மீனா தன் அன்னையை கண்டிக்க,
“சரி டி... இனி இவளை பற்றி நான் பேசவே மாட்டேன்” என வெடுகென்று முகத்தை தன் தோளில் இடித்து வெட்டிகொண்டார் கஸ்தூரி.
“அத்த... இனி நீங்க முல்லையை பற்றி தவறா பேசாமல் இருப்பதெல்லாம் இருக்கட்டும், முதலில் இப்போ நீங்க என் அண்ணன்களையும் முல்லையை பற்றி ரொம்ப கேவலமா கமெண்ட் பண்ணதுக்கு இவங்க மூணு பேர்கிட்டயும் மன்னிப்பு கேளுங்க” என்று ரோஜா சொல்ல, கஸ்தூரியின் முகம் அதித சூட்டில் கருகி போன கடுகை போல கறுத்து விட்டது.
“என்ன... நான் இவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணுமா!? இவங்க வயசு என்ன என் வயசு என்ன?” என்று கஸ்தூரி விதண்டாவாதம் செய்ய,”வயசுக்கு ஏற்ற பேச்சை பேசலைனா இப்படி தான் சின்ன பசங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்” என்றாள் ரோஜா.
“ரோஜா... மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம், அவ ஏதோ கூறுக்கெட்டு பேசிட்டா, நீ இதை பெருசாக்காத” என்று பாண்டியன் சொல்ல,
“சரி... நம்ம வீட்டு ஆம்பளைங்ககிட்ட அத்த மன்னிப்பு கேட்க வேண்டாம், ஆனா அவங்க முல்லைகிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும்” என்று ரோஜா தீர்க்கமாக சொன்னாள்.
“ஹ்ம் ஹ்ம்... வேண்டாம் ரோஜா, சித்தி தானே! இருக்கட்டும்” என்று தொண்டை குழியில் இருந்து வார்த்தை வராத நிலையில் கண்ணீருடன் முல்லை கஸ்தூரியை பார்க்க, “இப்படி அழுது அழுதே இந்த வீட்டுக்கு மூத்த மருமகளாக வர போறாள்” என்று மீண்டும் முல்லையை சீண்டி பார்த்தார் கஸ்தூரி.
யார் என்ன சொன்னாலும், கஸ்தூரிக்கு மட்டும் முல்லையை பிடிக்காமல் போக, பொறுத்து பொறுத்து பார்த்த கதிர்வேலன், “அத்த... இது தான் உங்க லிமிட், இதுக்கு மேல நீங்க முல்லையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது” என்றவர், மீனாவை பார்த்து அவள் கண் முன்னே விரல்களை சுண்டி, “ஏய் இந்தா... உன் அம்மாவை அழைச்சிக்கிட்டு ஒழுங்கா இங்க இருந்து ஓடிடு” என்று கர்ஜித்தார் கதிர்வேலன்.
முல்லைக்காக தன்னை மேலும் அவமானப்படுத்தும் ரோஜா மற்றும் கதிர்வேலனை பார்த்து கஸ்தூரி மேலும் கோவம்க்கொள்ள,
“ப்ச்... கதிரு நீ கொஞ்சம் அமைதியா இரு, நான் பேசிக்கிறேன்” என்று அனைவரையும் சமாதானம் செய்தார் பாண்டியன்.
வக்கிலை அழைத்து சொத்தை சமமாக பிரித்த பாண்டியன், கையோடு தன் மகன்கள் இருவருக்கும் அடுத்த முகூர்த்ததில் திருமணத்தை ஏற்பாடு செய்ய முடிவெடுத்து இருக்க, அந்த நல்ல காரியத்துக்கு கஸ்தூரி முட்டுக்கட்டையாக வந்து நின்றார்.
இருந்தும் பாண்டியன் தன் தங்கை கஸ்தூரியை சமாதானம் செய்தவர், ஜெகதீஷ் மற்றும் கஸ்தூரியை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தார்.
“முல்ல... நீ போய் முகம் அலம்பிட்டு வா” என்று ரோஜா சொல்ல, அன்னம் அவள் அழுத விழிகளை பார்த்து, ஆதவன் கதிர்வேலனின் அகம் கொதித்தது.
கஸ்தூரி வந்தாலே கலகம் வரும் தான் என்று அறிந்து இருந்த ஜீவானந்தம் பொறுமையை கடைபிடிக்க, ஒரு வழியாக கஸ்தூரியின் திருவாய் சற்று ஓய்ந்து இருந்தது.
“இங்க பாரு கஸ்தூரி! ஜீவா முல்லைக்கு நான் கல்யாணம் ஏற்பாடு பண்ண போறேன், இப்போ நீ சம்மதம் சொன்னால், இவங்க கல்யாணம் நடக்கும் போதே,நம்ம மீனா கதிர் கல்யாணத்தையும் அதே மேடையில பண்ணிடுவேன்” என்று பாண்டியன் கல்யாண பேச்சுக்கு பிள்ளையார் சுழி போட்டார்.
தன் தந்தையின் வார்த்தையை கேட்ட கதிர்வேலன், ரோஜாவின் அருகே நின்று இருந்த முல்லையை பார்க்க, அவளோ எந்த ஒரு உணர்வும் இல்லாமல் சிலையென தான் நின்று இருந்தாள்.
முல்லையை பார்த்த கையோடு தன் பார்வையை ஜீவானந்தம் பக்கம் கதிர்வேலன் திருப்ப, அவரோ சிரித்த முகத்துடன் நின்று இருக்க,
“அப்பா... முதல்ல அண்ணன் கல்யாணம் நடக்கட்டும்” என்றார் கதிர்வேலன்.
“யார் என்ன சொன்னாலும் உன் அண்ணன் கல்யாணம் நடக்க தான் போகுது, ஆனா நான் இப்போ பேசறது உன் கல்யாணத்தையும் சேர்த்து தான்” என்று பாண்டியன் சொல்ல,
“நம்ம வீட்டுல கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கும் போது, எனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்” என்று கேட்டார் கதிர்வேலன்.
“இல்ல கதிரு... ரோஜாவுக்கு நான் இப்போ கல்யாணம் பண்ணுறதா இல்ல. அதுவும் இல்லாம முல்லையை நம்ம வீட்டுல ரொம்ப நாள் வச்சிருக்க முடியாது, நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க, நாக்குல நரம்பு இல்லாத ஜென்மங்கள்” என்று பாண்டியன் சொல்ல,
“உன் அண்ணன் உன் முகத்துல துப்பாமல் துப்பி காட்டுறாரு” என்று கஸ்தூரியை பார்த்து கேலி செய்தார் ஜெகதீஷ்.
“இல்ல அப்பா... நான் என்ன சொல்ல வறேனா?” என்று கதிர்வேலன் சொல்லும் முன்னே,
“நீ எதுவும் சொல்ல வேண்டாம், நாளைய மறுநாள் நம்ம பாண்டி கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு அங்கேயே உங்க நாலு பேருக்கும் மோதிரம் மாற்றி நிச்சியத்தை முடிச்சிடலாம்” என்றார் பாண்டியன்.
“என்ன அண்ணா சொல்லுறீங்க, எந்த நாலு பேருக்கு நிச்சியம் பண்ண போறீங்க” என்று கஸ்தூரி தெரியாததை போல கேட்க,
“இங்க பாரு கஸ்தூரி, உன் பொண்ணை நீ கதிருக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க சம்மதம் சொன்னா அவன் பேர்ல இருக்குற சொத்து எல்லாம் உன் பொண்ணுக்கும் தான் வந்து சேரும். இல்ல நீ உன் மகள் விருப்பத்தை மீறி வெளிய எங்கவாது மாப்பிளையை பார்க்க போறினா சொல்லுடு, ஒரு தாய்மாமானா நான் என்ன பண்ணணுமோ அதை பண்ணிடுறேன்” என்று பாண்டியன் சொல்ல, கஸ்தூரி தீவரமாக யோசனையில் முழுகி இருந்தார்.
“அம்மா... எனக்கு எப்படியாவது கதிர் மாமாவை கல்யாணம் பண்ணி வையுங்க அம்மா” என்று மீனா தன் தாயிடம் கெஞ்சி கேட்க, நினைவு தெரிந்ததில் இருந்து தன்னை பெற்ற அன்னை வள்ளியின் அருகே கூட நிற்க தனக்கு குடுப்பணை இல்லையே என்ற ஏக்கம் முல்லையின் விழிகளில் வலியை கொடுத்தது.
“இந்தாடி ரொம்ப யோசிக்காத. என் மாப்பிள கதிருக்கு என்ன குறைச்சல். அதான் உன் எண்ணம் படியே உன் அண்ணனுக்கு சம்மந்தியாக போறியே, அது போதாதா”என்று ஜெகதீஷ் கேட்க,
“சரி அண்ணா... என் மகளை நான் கதிருக்கு கட்டிக்கொடுக்க சம்மதிக்கிறேன்” என்று தன் சம்மததை சொன்னார் கஸ்தூரி.
தன் அன்னையின் வாய்வழியே வந்த நல்ல வார்த்தையை கேட்டு மீனாவின் வாடிய முகம் பொலிவு பெற,கதிர்வேல்னோ மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் சூழ்நிலை கைதியாக நின்று இருந்தார்.
“ஜீவா... நாளைய மறுநாள் கோவிலுக்கு போக வேண்டிய ஏற்பாட்டை எல்லாம் பார்த்து பண்ணிடு, அப்படியே நாளைக்கு நம்ம வீட்டு பொண்ணுங்கள அழைச்சிட்டு போய் புடவை நகையெல்லாம் வாங்கி கொடுத்துடு” என்று பாண்டியன் சொல்ல,
“அப்பா... நாளைக்கு மீட்டிங் விஷயமா நம்ம ரெண்டு பேரும் பொன்னமராவதி போகணுமே மறந்துட்டீங்களா!?” என்று கேட்டார் ஜீவானந்தம்.
“அட ஆமா... நான் மறந்தே போயிட்டேன்.
சரி கதிரு... நீ இவங்கள எல்லாம் கடைக்கு அழைச்சிட்டுபோய்ட்டு வந்துடு. கஸ்தூரி நீயும் வேணா இவங்ககூட போயிட்டு வா” என்று பாண்டியன் சொல்ல,
“பின்ன நான் போகாம எப்படி!?” என்று இழுவையாக பதில் கொடுத்தார் கஸ்தூரி.
“சார்... நான் வந்த வேலை முடிஞ்சிடிது, அப்போ நான் கிளம்பவா” என்று வக்கீல் கேட்க,
“இருங்க இருங்க... அடுத்து வரும் போது முல்லை அப்பா முருகனோட சொத்துக்கும் என் மருமகளுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லைனு பத்திரம் தயார் செய்துக்கொண்டு வாங்க” என்றார் பாண்டியன்.
“சரிங்க ஐயா. அடுத்த சந்திப்பில் எடுத்து வரேன்” என்ற வக்கீல் பாண்டியன் வீட்டில் இருந்து வெளியேற,
“சரி சரி எல்லோரும் போய் வேலையை பாருங்க” என்ற பாண்டியன் தன் அறைக்குள் சென்று இருந்தார்.
“இந்தாடி. வா வீட்டுக்கு போகலாம்” என்று கஸ்தூரியை ஜெகதீஷ் அழைக்க,
“அதான் நாளைக்கு கடைக்கு போக போறாங்களே! நான் இங்கேனேயே இன்னைக்கு தங்கிக்கிறேன்” என்ற கஸ்தூரி நேரே சமையலறைக்குள் புகுந்து பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்து இருந்தார்.
“சரி மாப்பிள்ளைங்களா. இன்னைக்கு ஒரு நாள் உங்க அத்த தொல்லை இல்லாம நான் நிம்மதியா இருக்கேன்” என்ற ஜெகதீஷ் சோகமாக நின்று இருந்த முல்லையின் அருகே சென்று வாஞ்சையாக அவள் தலையை வருடிக்கொடுத்தார்.
“உன் சித்தி ஒரு பைத்தியக்காரி முல்ல... நீ அவ பேசுனதை எல்லாம் எண்ணி கவலைப்படாத” என்று ஜெகதீஷ் சொல்ல,
“ம்...” என்று வலி நிறைந்த புன்னகையுடன் ஜெகதீஷை வழி அனுப்பி வைத்தாள் முல்லை.
“கதிரு இந்தாடா கார்ட், நாளைக்கு இவங்கள அழைச்சிட்டு போய் என்ன தேவையோ அதெல்லாம் வாங்கிக்கொடுத்துடு” என்று ஜீவானந்தம் கார்டய் கதிர்வேலனிடம் நீட்ட,
“அம்மாகிட்ட கொடுங்க, அவங்களே அத வச்சிக்கிட்டோம்” என்ற கதிர்வேலன், ரோஜாவை பார்த்து சிரித்த வண்ணமாக வேகமாக பாண்டியன் வீட்டில் இருந்து நாகராஜனின் வீட்டை நோக்கி சென்று இருந்தார்.
சில நிமிடத்தில் கஸ்தூரி செய்த ஆர்ப்பாட்டத்தில் முல்லைக்கு தலைவலி அதிகரிக்க,” ரோஜா... எனக்கு பெயின் கில்லர் தரியா” என்று முல்லை கேட்டதும்,
“என்ன முல்ல... கஸ்தூரி அத்த பேசினதுல உனக்கு தலைவலியே வந்துடுதா” என்று கேட்ட ஜீவானந்தம் முல்லையை அவரால் முடிந்தவரை சமாதானம் செய்துகொண்டு இருந்தார்.