Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் – 16
“ஏற்கனவே ஹோம்ல எல்லோரும் வாழ்த்து சொல்லிட்டாங்க. இப்போ இருக்க வாழ்க்கைக்கு சாமியப் பாத்து நன்றியும் சொல்லியாச்சு. இதைவிட என்ன வேணும்? அது மட்டுமில்லாமல் பொறந்த நாளைக்கு பரிசு கொடுக்குறதுலாம் எனக்குப் புடிக்காது. ஏதோ போட்டியில ஜெயச்ச மாதிரி. அதெல்லாம் வெட்டிச் செலவுதான்.”
“அதுவும் ஒரு விதமான போட்டிதான்.”
“ம்ம்ம் நக்கல் நையாண்டி எல்லாம் உங்களுக்கு நிறையாவே இருக்கு. நான் சொல்றது வேற நீங்கள்ப் புரிஞ்சுக்குறது வேற.”
“நீங்கள் என்ன சொல்றீங்கனு எனக்கு நல்லாவே புரியுது. சரி அது இருக்கட்டும். என்கிட்ட இருந்து உங்களுக்கு என்ன வேணும்?”
“எனக்கு உங்களப் பற்றித் தெரிஞ்சுக்கனும்.”
“நேரம் ஒதுக்கி என்னைப் பற்றித் தெரிஞ்சுக்குற அளவுக்கு நான் என்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லையே.”
“கேட்டதை மட்டும் சொல்லுங்க. அதிக பிரசங்கித்தனம் பண்ண வேண்டாம்.”
“இதுல சொல்றதுக்கு என்னங்க இருக்கு? இத்தனை நாள் பேசிப் பழகுனீங்கள்ல அதை வச்சே ஓரளவுக்கு நான் யாருனு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்ல?”
“அது சரி. அது ஓரளவு கொஞ்சம் அப்படி இப்படினு ஏதோ தெரியும்.”
“சரி என்னைப் பற்றி அப்படி இப்படினு உங்களுக்குத் தெரிஞ்ச விஷயத்த நீங்க முதல்ல சொல்லுங்க. அதுக்கப்புறம் மிச்சத்தை நான் சொல்றேன்.”
“மாட்டேன்னு சொன்னா விடவா போறீங்க? சரி சொல்றேன்.”
என்னுடைய ஆர்வம் புரியாமல் அவன் விளையாடினாலும் அவனைப் பற்றி என்னிடமிருந்து தெரிந்துகொள்வதில் அவனுக்கிருக்கும் ஆசையைப் புரிந்துகொண்டு, அவனைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தேன்.
“ம்ம்ம் உங்களுடைய பெயர் கதிர். ரொம்ப நாளா ஆசைப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வச்சு பைக் வாங்கின சந்தோஷத்த மத்தவங்களோடையும் பகிர்ந்துக்கனும்னு ஆசைப்பட்டு ஹோம்க்கு கால் பண்ணீங்க. அப்போதான் நம்ம ரெண்டு பேரும் முதல் முதலா பேசிகிட்டோம். அப்போ நான்தான் உங்களோட சந்தோஷத்துக்குத் தடையா இருக்கேன்னு எங்கிட்ட கோபம். கொஞ்சம் சண்டை கூடப் போட்டீங்க. அப்புறம் உங்களுக்கு எல்லாம் ஒத்துப் போக என்னையும் புடிச்சு போச்சு. என்கிட்ட நல்லா பேசிப் பழக்கம் ஆச்சு.”
“என்னதான் பாக்க ஆள் கொஞ்சம் திமிரா தெரிஞ்சாலும் மனசென்னவோ தங்கம். அப்படியே கண்ணாடி மாதிரி உள்ளே என்னவோ அதுதான் வெளியவும். எடுத்தெரிஞ்சு பேசுனது இல்லை. ரொம்ப எதார்த்தமா நடைமுறை என்னவோ அதுக்கு ஏத்த மாதிரியான யோசனைகளோட இருக்குற ஆள்.”
“இதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியலை. ஆனால் ஒன்னு மட்டும் உறுதியாய்த் தெரியும். உங்களுக்கு உங்க பைக் ரொம்ப ரொம்ப புடிக்கும். எப்போதும் எங்கிட்ட அந்தப் பைக்கப் பத்திதான் பேசுவீங்க.”
இதை நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அமைதியான பாவத்தோடு, “இதையெல்லாம் விட வேறு ஒன்றும் எனக்குப் பிடிக்கும். அது உங்களுக்கும் தெரியும்” என்றான்.
“அப்படியா? எனக்குத் தெரியுமா? அது என்ன? எனக்கு ஒன்றும் பிடிபடவில்லையே” என்று என் கேள்விப் பட்டியல் நீண்டது. அதைத் திடீரென நிறுத்தும் விதமாய் ஒரு பதிலைச் சொல்லி அடைத்தான்.
“என்னால யோசிக்க முடியலை என்னனு. நீங்களே சொல்லுங்க.”
“அது வேற ஒன்னும் இல்லை. அது நீங்கதான். எனக்கு ரூபாவை ரொம்பப் புடிக்கும்.”
என்னை அவனுக்குத் பிடிக்கும் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறான். முகத்தைப் பார்க்காமல் செல்ஃபோனில் கதைக்கும்போதுதான் கவிஞர்களாகிவிடுகிறோமே நாம் அனைவரும். அப்போதெல்லாம் எதாவது பதிலைச் சொல்லிச் சமாளித்துவிடுவேன். முகத்திற்கு நேராக அமர்ந்துகொண்டு கண்ணைப் பார்த்துப் பேசும்போது என்னால் பதில் பேச முடியவில்லை. அதனால் அதை அப்படியே முடக்கி அவனை வேறு திசையில் திருப்பிவிட்டேன்.
“எனக்கு உங்களைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கனும். உங்களைப் பற்றித் தெரியாத விஷயங்களைச் சொன்னால் நலம்.”
“முழுசா தெரிஞ்சுக்கனும்னா எப்படி? ஆதார் கார்டு, பான் கார்டு, மார்க் ஷீட் அது மாதிரியா?”
“ஐயோ அவ்வளவு ஆழமாக இல்லை. மேலோட்டமா சொல்லுங்க.”
“மேலோட்டமானா எப்படி? என்ன சொல்லனும்?”
“உங்க குடும்பம், உங்களுக்குப் புடிச்ச விஷயம், உங்க படிப்பு, வேலை, உங்க ஆசை அந்த மாதிரி விஷயங்களைச் சொல்லுங்க?”
நான் கேள்வியைத் தெளிவாகக் கேட்டதும், அவனிடமிருந்து பதிலும் தெளிவாக வந்தது. நான் அவனிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் இதோ இப்படித்தான் இருந்தது.
“பெரிய குடும்பம் இல்லை. நான், என் தம்பி, அம்மா அவ்வளவுதான். அப்பா இல்லை. அப்பா சிறுவயதில் ஒரு விபத்தில் தவறிவிட்டார். அவர் இறப்பதற்கு முன்பிருந்த வாழ்க்கைக்கும் அதற்குப் பிறகு இருக்கும் வாழ்க்கைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். பல கவலைகள், பல பிரச்சனைகள், பல கடன்கள், வாழ்க்கையைப் பற்றிய பயம் என நான் சந்திக்காத இன்னல்களே இல்லை.”
“அப்பாவிற்குப் பிறகு குடும்பப் பொறுப்பு என் முதுகில் வேதாளம் போலத் தொற்றிக் கொண்டது. சிறுவயதிலிருந்தே குடும்ப பொறுப்புகளைக் கவனிக்கும் கடமையில் இருந்ததால் மற்றவர்களைப் போல ஆடிப் பாடி சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடிக்கும்வரை இரவு நேரங்களில் கடைகளுக்கு வேலைக்குப் போவேன். வருமானம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாவிட்டாலும், குடும்பத்தை ஓட்டுவதற்கு அத்தியாவசியமானதாக இருக்கும். அதனால் ஒருநாள் தவறவிடாமல் வேலைக்குச் சென்றுவிடுவேன்.”
“தினமும் சாப்பாட்டிற்கு வழி தேடி ஓடிக் கொண்டிருந்ததால், எனக்குக் கொண்டாட்டங்களும் ஓய்வு நாட்களும் இல்லை. இந்த வேலைதான் தெரியும். இது தெரியாது என்றெல்லாம் இல்லை. எனக்கு எல்லா வேலையும் தெரியும். காசைத் தேடி காற்றைப் போல அங்கும் இங்கும் அலைந்த நாட்களில் காசுக்காக எவ்வளவோ கடினமான வேலைகளை எல்லாம் செய்திருக்கிறேன்.”
“கடன் தொந்தரவு அதிகமாக இருந்ததால் அம்மாவிற்கு உதவ வேண்டும் என்று பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு நான் படிப்பைத் தொடரவில்லை. அதோடு நிறுத்திவிட்டு வாடகைக்கு ஒரு கடையை எடுத்துக் காய்கறி வியாபாரம் ஒன்றைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் அவ்வளவு நல்லதாகத் தோன்றாவிட்டாலும் நாட்கள் கழியக் கழிய வியாபாரம் மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஐந்து வருடங்கள் கடுமையாக உழைத்து, வருகின்ற வருமானத்தைத் தேவை இல்லாமல் செலவழிக்காமல் அப்படியே கொண்டு போய்க் கடனை அடைத்து முடித்தேன்.”
“எங்களுக்கு ஒரு சிறிய தோட்டமும் அதற்கு நடுவே ஒரு வீடும் இருக்கிறது. அம்மா தோட்ட வேலைகளைச் செய்து குடும்பத்தைக் கவனித்தாள். நான் காய்கறி கடையில் வந்த வருமானத்தில் கடனை அடைத்தேன். நான் படிக்க வேண்டும் என்று நினைத்தபோது எங்களிடம் பணமில்லை.
என் தம்பியைப் படிக்க வைக்க வேண்டும் என்று பணத்தோடு தயாரக இருந்தபோது அவனுக்குப் படிப்பு வரவில்லை. அதனாலோ என்னவோ எனக்குப் படித்தவர்களைப் பார்த்தால் மரியாதையும் கூடவே பொறாமையும் வரும்.”
“நீங்கள் சொன்னது போல எனக்கு என்னுடைய பைக் ரொம்ப புடிக்கும். நான் கைநிறைய சம்பாதித்த போதும்கூட என்னால் அதை வாங்க முடியவில்லை. கையில் காசு இருந்தால் பின்னாடி செலவுகளும் வரிசை கட்டி நிற்கும். பல வருடம் கழித்து என் ஆசையை நானே நிறைவேற்றிக் கொள்ள, நான் என் கடமைகளைச் சிறப்பாகச் செய்து வருவதைப் பாராட்டி எனக்காக நானே வாங்கிக் கொடுத்த பரிசு அது. பைக் வாங்கிய பிறகு வாழ்க்கையே மிக அழகாக மாறியிருப்பதை நானே என் கண்ணால் பார்க்கிறேன். வாழ்க்கை இப்போதுதான் அர்த்தமானதாகத் தோன்றுகிறது.”
“நீங்கள் நினைக்கும் அளவிற்கு நான் அவ்வளவு ஒன்றும் நல்லவன் கிடையாது. என்னிடமும் சில குறைகள் இருக்கிறது. எனக்குக் கோபம் அவ்வளவு எளிதாக வராது. ஆனால் கோபம் வந்தால் கட்டுபாடு இல்லாமல் வரும். எனக்குக் குடிப் பழக்கம் இருக்கிறது. அடிக்கடி அல்ல. எப்போதாவது குடிப்பதுண்டு. அப்புறம், ஆசை என்று பெரிதாய் ஒன்றும் இல்லை. இப்போது இருக்கும் வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. இது இப்படியே கடைசிவரைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்“ என்று சொல்லி முடித்துவிட்டு அமைதியானான்.
அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருந்தது. தன்னை மிகைப்படுத்திக் கூறும் ஆட்களுக்கு மத்தியில் உள்ளதை உள்ளபடி கூறும் அவனது அழகான குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதற்குமேலும் யோசிக்க வேண்டாம் இன்றே சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்தேன்.
“ம்ம்ம் உங்க மனசு மாதிரியே உங்க வாழ்க்கையும் இனிமேல் ரொம்ப அழகா இருக்கும். நீங்கள் கவலையே பட வேண்டாம்.”
“சரிங்க ரூபா.”
“உங்க வயசு என்ன?”
“இருபத்தேழு.”
“எனக்கு இருபத்தி இரண்டு. இந்த வாங்க போங்க எல்லாம் நமக்குள்ள இனி வேண்டாம். சரியா?”
“ம்ம்ம் நீ என்ன சொன்னாலும் சரி.”
“நான் என்ன சொன்னாலும் சரியா?”
“ஆமாம்.”
“இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயத்த உங்க கிட்ட சொல்லனும்னுதான் நான் உங்களை இங்கே வரச் சொன்னேன்.”
“சரி சொல்லு. என்ன விஷயம்?”
“எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு.”
“அட இவ்வளவுதானா? இதுதான் எனக்கு முன்னாடியே தெரியுமே. ஆனாலும் உன் வாய்ல இருந்து கேக்க நல்லா ஒரு மாதிரி ஜாலியாதான் இருக்கு. இதச் சொல்லவா என்னைய வரச் சொன்ன? நான் வேறுசில விஷயங்கள் எதிர்பார்த்தேன்.”
“வேறு என்ன எதிர்பார்த்தீங்க?”
“அப்படியே அந்த மூனு வார்த்தைய சொல்லிட்டு அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுவனு எதிர்பார்த்தேன்.”
“ஏய் போங்க. நீங்களும் பயங்கரமான ஆளுதான். எவ்வளவு நாசுக்கா பேசிப் பழகிருக்கீங்க. யப்பா உங்க பேச்சுத் திறமைக்கு நீங்கள் இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை. இப்படிப் பேசிப் பேசித்தான் என்னைய மயக்கிட்டீங்க.”
“அப்படியே மயக்கிட்டாலும் போமா அப்படி. புடிச்சிருக்குனு ஒத்த வார்த்தைய சொல்றதுக்கே மூனு மாசம் முடிஞ்சு போச்சு. அதுவும் உடனே சொல்லலை. என் குலம் கோத்திரம் வரலாறு எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு அப்புறம் சொல்ற. இப்போ சொல்லு நீ பயங்கரமான ஆளா? இல்லை நானா?”
“ஐயோ அப்படி இல்லை.”
“எனக்கு இந்த மாதிரி விபரமான பொண்ணுதான் வேணும். சும்மா விளையாட்டுத்தனமா இருந்துகிட்டு பொறுப்பு இல்லாமல் இருந்தால் சரிப்பட்டு வராது.”
“நான் கொஞ்சம் விபரமான பொண்ணுதான். ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி பயங்கரமான பொண்ணு இல்லை. உங்க மேல ஆசைய வச்சுகிட்டு உடனே சொல்லாமல், எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுகிட்ட பிறகு சொன்னதுக்கு எனக்குள்ள இருக்க பயம்தான் காரணம்.”
...தொடரும்...