Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் – 13
“இப்போது திரும்பிப் பார்க்கையில் பல விஷயங்களின் தடையங்கள் கூடத் தென்படவில்லை. காலம் பலவற்றை மறக்கச் செய்துவிட்டது. வெளியே சொல்ல முடியாத துன்பங்களையும், தாங்கிக் கொள்ள முடியாத சித்திரவதைகளையும் நான் கடந்து வந்திருக்கிறேன். அதையெல்லாம் சொல்ல ஆரம்பித்தால், வானமாய் விரியும் விவாதம்.”
“பள்ளி பருவத்தில் படிப்பின் மீது எனக்கிருந்த விடாபிடியான ஆர்வத்திற்கு தக்க சன்மானமாக அதிக மதிப்பெண்கள் கிடைத்தது. பள்ளியில் அனைவரிடமும் என் பெயர் அறிமுகமானது. வருகை பதிவேட்டைக் குறிப்பதிலிருந்து, மேடையில் முதல் மதிப்பெண் பெற்றதற்காகப் பரிசு வாங்குவது வரை எல்லா இடத்திலும் எல்லா நேரங்களிலும் ரூபா என்கிற பெயரே எதிரொலித்தது.”
“ஒரு அறக்கட்டளையிலிருந்து சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஜான் என்கின்ற நபர் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு அறிமுகமானார். இருட்டறைக்குள் மின்மினி பறந்து வந்தது போல இருந்தது அவருடைய வருகை. அவர் வந்தபிறகு என் வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைத்தது. என்னைப் பற்றி என்னுடைய ஆசிரியர்கள் அவரிடம் சொன்னபோது அவர் என்னை அழைத்துப் பேசினார்.”
“நீ பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூறு மதிப்பெண்கள் வாங்கிவிட்டால் உன்னை நான் இங்கிருந்து அழைத்துச் செல்கிறேன். அதன் பிறகு நீ விரும்பிய படிப்பை எந்தக் குறையும் இல்லாமல் படிக்கலாம். உனக்கு எந்தத் தடையும் இருக்காது. உனக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவேன். உன் கனவை மனதில் வைத்துக் கண்விழித்துப் படி உன் வாழ்க்கை இப்போது உன் கையில்தான் இருக்கிறதென்று சொல்லிவிட்டு என் வலது கையைப் பிடித்துக் குழுக்கி ஒரு உத்வேகத்தை முடுக்கிவிட்டுப் போனார். அப்போது கடவுளே வந்து வரம் தந்தது போலிருந்தது.”
“எந்த எதிர்பார்ப்புமின்றி யாரே ஒருவரின் மீது தெளிக்கப்படும் சிறு துளி நம்பிக்கைக்குச் சக்தி மிக மிக அதிகம். அந்த நம்பிக்கையின் சக்தியால்தான் அவர் போட்டுத்தந்த எல்லையை மீறி அதிக மதிப்பெண் பெற்றேன். அவர் சொன்னது நானூறு. நான் பெற்றது நானூற்று ஐம்பது. இதில் என்னைவிட அவருக்கே மகிழ்ச்சி அதிகம். அவர் கொடுத்த வாக்கைப் போலவே அங்கிருந்து என்னை இடம் பெயர்த்தினார்.”
“அந்தக் குட்டி கிரமத்தைக் கடிகார முள்ளாய் சுற்றித் திரிந்த என் கால்கள் முதன் முதலாகப் பஸ் ஏறி டவுன் தார் ரோட்டில் கால் பதித்தது. இயந்திர பொதிமாடுகள் கத்தும் சத்தம், எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் ரேடியோவின் சத்தம், பரபரப்பான நிரந்திரமில்லா ஏதோ ஒன்றிற்காக இது எனக்கு இது உனக்கென்று கூச்சல் போடும் மக்களின் சத்தம் என நகரம் இரைச்சலால் நிரம்பியிருந்தது. அப்படியான இரைச்சலில்தான் என் மனம் அமைதி கண்டது.”
“எதிர்மறைகளுக்கு கதவடைத்து நல்ல சிந்தனைகளுக்காக மட்டுமே என் மனம் திறக்கப்பட்டது. நான் அங்குச் சென்று பழகிய இரண்டு நாட்களிலேயே ஆசிர்வதிக்கப்படது போல உணர்ந்தேன். வாழ்கையை இப்படியும் வாழலாமா? என்று எனக்குள் இருந்த ஏக்கமான கேள்விக்கு, இதைவிட இன்னும் சிறப்பாக வாழலாம் என்று பதிலளித்தது அந்த இடம்.
அறக்கட்டளை என்று பெயரிடப்பட்ட ஆலயம் அது. அங்கு அன்பும் அறிவும் ஊற்றாய்க் கிளம்பியது. அத்தனையையும் வாரிக்கொண்டேன். வாழ்க்கை மாறியது.”
“பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் பிஏ இங்கிலீஷ் பட்டப்படிப்பு படித்து முடித்தேன். அதன்பிறகும் படிக்கும் பசி அடங்கவில்லை. அதேசமயம் சம்பாதிக்கும் ஆசையும் ஒட்டிக்கொண்டது. அறக்கட்டளை அலுவலகத்தில் பல மாதங்களாக வரவேற்பாளர் வேலை காலியாக இருந்தது. நான் கல்லூரி படித்து முடித்ததும் அந்த நாற்காலியில் என்னை அமரச்சொன்னார் எனக்கு எப்போதும் வரம் தரும் ஜான் ஐயா. வழக்கம்போல அவரது பேச்சைத் தட்டாத நான் கும்மாளமிட்டுக் குதுகலாமாக அந்த நாற்காலியில் அமர்ந்து அதை எனதாக்கினேன்.”
“அறக்கட்டளைக்குப் பணி செய்ய விரும்புவோரும், உதவி செய்ய விரும்புவோரும் வரவேற்பாளரான எனக்கு அழைப்பது வழக்கம். ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து அழைப்பாவது வந்துவிடும். அன்றும் அப்படித்தான் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பு என் உயிருக்கு அர்த்தமாய், என் பிறப்பின் பலனாய் இருக்குமென்று எனக்குத் தெரியாமலே சகஜமாகப் பேசினேன்.”
“எதிர்புறம் இருந்தவர் அவருடைய பெயர், விலாசம் எதுவும் சொல்லாமல்,
“மேடம் இன்னைக்கு ஹோம்க்கு வந்து நான் அங்க இருக்க எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கலாமா?”
“இன்னைக்கு முடியாது. நாளைக்கு வேண்டுமானால் பார்க்கலாம்.”
“ஏன் முடியாது. இது என்னுடைய பல நாள் கனவு. ப்ளீஸ் நான் ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டேன். ஒரு அறை மணி நேரம் மட்டும் போதும்.”
“இன்னைக்கான ப்ரோக்ராம் ஏற்கனவே பதிவு செய்தாச்சு. இன்னைக்கு ஜூன் மூனு. இந்தக் கல்வியாண்டோட முதல் நாள். தமிழ்நாட்டுலயே மிகப்பெரிய தொழிலதிபர் ஒருத்தர் வந்து குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் கொடுக்கப் போகிறார்.”
“அதுல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் என்ன வேணாலும் கொடுக்கட்டும். எனக்கு நீங்க ஒரு அறை மணி நேரம் மட்டும் கொடுங்க சட்டுபுட்டுன்னு வந்த வேலையை முடிச்சிட்டு நான் கிளம்பிருவேன்.”
“ஹலோ யார் சார் நீங்க? ஒரு தடவ சொன்னா உங்களுக்கெல்லாம் புரியவே புரியாதா? அவ்வளவு அவசியமா இருந்தால் நீங்க ஒரு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிருக்கனும். காலங்காத்தால கால் பண்ணி உயிர வாங்காம வைங்க சார் ஃபோன.”
“மேடம் கட் பண்ணிறாதீங்க. நான் நேர்ல வந்து பேசுறேன்.”
“நீங்கத் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இன்னைக்கு நீங்க நெனச்சது நடக்காது மிஸ்டர்” கோபத்தோடு அழைப்பைத் துண்டித்துவிட்டு அன்றைக்கான வேலையில் மும்முரமாக இறங்கினேன்.”
“அதே எண்ணிலிருந்து தொடர்ந்து எனக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருந்தது. ஆனால் அதை நான் கண்டும் காணாமல் விட்டுவிட்டேன். சில சமயங்களில் உதவி செய்வதாகச் சொல்லிச் சில பொய்யான அழைப்புகள் வரும். அப்படித்தான் அதை நான் நினைத்தேன்.”
“தொழிலதிபர் குழந்தைகளுக்குப் புத்தகங்களை வழங்கிக்கொண்டிருந்தார். நான் அதைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தேன். திடீரென என் கவனம் வேறு திசையில் பாய்ந்தது. யாரோ ஒரு ஆள் ஐயாவின் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருந்தார். அவர் முதுகுப்புறம் மட்டும் தெரிந்ததால், அவருடைய கருநிற சுருட்டை முடியும் நீல நிற சட்டையும்தான் அடையாளமாகக் கிடைத்தது. கிடைத்த அடையாளத்தை வைத்து அங்கிருந்து மாயமான அவரைப் பல தலைகளுக்கு நடுவே தேடிக் கொண்டிருந்தேன்.”
“அந்தச் சாயலைத் தேடி என் கண்கள் ஓடிக் கொண்டிருந்தபோது, என் நெஞ்சம் அதிர்ந்தது. மூச்சு நின்றது. கனத்த குரலில் “ஏய்“ என்கிற சத்தம் என் புரணி வழியே காதை அடைந்தது. வெடுக்கென்று திரும்பினேன். தானாகக் கால்கள் பின்னோக்கித் தவழ்ந்து. அவனது பார்வை என்னை எரித்துக் கொண்டிருந்தது. நான் பயத்தில் சுருண்டுகொண்டிருந்தேன்.
“நீதான அந்த டிசப்ஷனிஸ்ட்?” என்று கனத்த குரலில் அவன் கேட்டதும் வெடவெடத்துப் போனேன். கைகளைப் பிசைந்து கொண்டு விழி பிதுங்கத் தலையசைத்து ஆம் என்றேன்.
“நீ நினைத்திருந்தால் நான் கேட்டதை செய்திருக்கலாம். உன்னால் எனக்கு எவ்வளவு அவதி தெரியுமா? இந்த லோகத்தில் நல்லது செய்யக் கூட அடுத்தவர் கைக் காலைப் பிடிக்க வேண்டியிருக்கிறது.”
“சரி கோபம் வேண்டாம். உங்களுக்குக் குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டுமென்றுதானே ஆசை?”
“இல்லை உன் கழுத்துல தாலி கட்டனும்னு ஆசை” இதைச் சொன்னதும் கண்ணீரைச் சிந்திக்கொண்டு சினுங்க ஆரம்பித்தேன்.
“எம்மா இருமா ஏன்மா என் உயிர வாங்குற? காலையில இருந்து அதுக்குத்தானே போராடுறேன். அழுகைய நிப்பாட்டிட்டு ஆக வேண்டிய விஷயத்துக்கு ஏற்பாடு பண்ணுமா“ என்று சொல்லிவிட்டு வலது கைப்பக்க சட்டையைச் சுருட்டியும் இழுத்தும் தோரணையாய் நடந்து சென்றான்.
பார்ப்பதற்கு ரவுடிப் பயலைப் போலத் தெரிகிறான் நீ உள்ளே வா ரூபா என்று என் சகாக்கள் சொன்னபோதுதான் ஏனோ நான் அவனை ரசிக்கத் தொடங்கினேன்.”
“அன்றைக்கான ஓரிரு வேலைகளை நாளைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு அவனுக்கு வாய்ப்புக் கொடுப்பதில் தவறில்லை என்று தோன்றியது. அந்த எண்ணம் எனக்குள் எப்படி வந்ததென்று சத்தியமாகத் தெரியவில்லை. அவனை மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற ஏக்கம் எனக்குள் புகுத்துகொண்டது.”
“மாலை வேளை ஐந்து மணிக்கு அவன் எண்ணிற்கு அழைத்து, குழந்தைகளுக்கு இன்று இரவு உணவு உங்களுடையதுதான். எழு மணிவாக்கில் வந்தால் போதும் என்று சொல்லி அமைதியானேன். உற்சாகத்தில் தலைகால் புரியாமல் வாய் ஓயாமல் நன்றி நன்றியெனக் கூறி சிரிப்பில் நினையவைத்தான். அவன் செல்ஃபோனில் பேசும்போதும் நேரிலும் வெவ்வேறு ஆளைப் போலத் தெரிந்தான். எனக்கு இரண்டுமே பிடித்திருந்தது.”
“குங்கும நிற சட்டையணிந்து, படர்ந்த அந்த நெற்றியில் சிறு கோடாய் சந்தனமிட்டு, கழுத்தில் சிறு மாலையணிந்து, வளைந்த திடமான மீசையும், அளவான தாடியுமாய் கட்டுமஸ்தாக வந்திறங்கினான். இந்த முறைய ஃபேன்டிற்குப் பதிலாக வேட்டி. அவனது திராவிட நிறத்திற்கு அழகு சேர்த்தது அந்த வெந்நிற வேட்டி. சிரித்த முகமும் செல்வாக்குமாய் குழந்தைகளுக்கு உணவளித்தான். புறப்படும் முன்னே ஐயாவின் காலில் விழுந்து கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்கினான். அதுவரை தரையில் திரிந்தவன் அப்போதிருந்து வானில் உயரப்பறந்தான்.”
“அவன் அவ்விடத்தை விட்டுக் கடந்து சென்றபோதும் அவன் இருப்பு என் இதயத்தில் ஒட்டிக்கொண்டது. இதயத் துடிப்பு இடைவெளியை எல்லாம் அவன் இதழ் சிரிப்பு நிரப்பியது. அந்த நாள் இரவின் நொடியெல்லாம் அவனாகிப்போனான். அவனுடைய இனிமையான மௌன சச்சரிப்பில் உறக்கம்கெட்டுத் தவித்தேன்.”
“கொஞ்ச நேரம் அவன் செல்ஃபோனில் என்னுடன் உரையாடியதை நினைத்துச் சிரித்தேன். கொஞ்ச நேரம் அவன் அழகில் சொக்கி நின்ற நொடிகளை நினைத்து ரசித்தேன். கொஞ்ச நேரம் அவன் செய்கையை ஓட்டிப் பார்த்து மெய்மறந்தேன். கொஞ்ச நேரம் அவன் கடைசியில் என்னுடன் பேசாமல் போனதை நினைத்துக் கோபம் கொண்டேன். கொஞ்ச நேரம் அவன் என் அருகிலிருந்தால் இப்போது என்னவாகும் என்று கற்பனையில் மிதந்தேன். இப்படி நேரத்தை வகுத்து விதவிதமாய் அவனையே சுற்றி வந்தது என் யோசனை.”
“மறுநாள் அவன் அழைத்திருந்தான். அவன் அழைப்பைத் தவர விட்ட நான் மீண்டும் அழைத்தேன்.”
“குரல் என்னவோ அவனுடையதுதான். ஆனால் பேசியது யாரோ. ஒரு மெல்லிய இலைபோல அவனது வார்த்தைகள் இருந்தது. ரசனையையும் மீறி ஏதோ ஒன்றில் திளைத்தேன்.”
“மேடம். உங்க கிட்ட ஸாரி கேக்கனும்னுதான் கால் பண்ணேன்.”
“அது இருக்கட்டும் நீங்க யாரு?”
“மறந்துட்டீங்களா?”
“ஒரு நாளைக்கு ஆயிரம் கால் அட்டென்ட் பண்றேன் எல்லாரையுமா நியாபகத்துல வச்சுக்க முடியும்?”
…தொடரும்…