• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
❤ஓவியம்..5

“என்ன மேடம் சொல்றீங்க? உங்களுடைய கணவர் ஒரு திருடனா?
“ஏய் அவங்க மனசை கொள்ளை அடித்த திருடன் என்று சொல்றாங்க. அப்படி தான மேடம்?” என்று ஒருவர் சொல்ல,
“ம்... அப்படித்தான்”🌹🌹என்று சொன்னபடி முல்லை அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். 🌹🌹
“முல்லை வா போகலாம். நேரமாகுது. நம்ப ரொம்ப நேரம் வெளியே இருக்க வேண்டாம்.” என்றாள் ஷாமிலி.
“ஏன் வெளியே இருந்தால் என்ன? இனி இந்த ஊர்ல எந்த ஒரு பயமும் இல்ல. நீ, நான் என்று இல்ல, எல்லாருமே நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம். அப்படி யாரு ரூபத்திலாவது இந்த ஊருக்கு பிரச்சனை வரணும்னு இருந்ததுனா, அது என்னை தாண்டி தான் வரணும்.”
“ம்... இவ்வளவு தைரியமா பேசுறவ எதுக்குடி போயும் போயும் ஒரு திருடன் கையால் தாலியை கட்டிக்கிட்ட. அதை கட்டிக்கிட்டதும் இல்லாமல், அத பகிரங்கமாக வேற பேட்டி கொடுக்கிற?” என்றாள் கோவத்தில்.
“அக்கா சும்மா இரு. உனக்கு தெரியல அவரு யாருன்னு.”
“யாருடி இவ. திருடனுக்கு அவரு இவருன்னு வேற மரியாதையை தர”
“ஐயோ அக்கா. அவரு நம்ப ஓவியம்...”
“ஓவியம்னா, யாரு அது?
“அக்கா நம்ப கதிரோவியம்.”
“என்னடி சொல்ற? நம்ப லட்சுமி அத்தையோட பையனா?
“ஆமாக்கா. நம்ப பாண்டியன் மாமா, லட்சுமி அத்தையுடைய பையன் தான் அவர்.”
“உனக்கு எப்படிடி தெரியும்?”
“அன்னைக்கு நான் ரோட்டில் மயங்கி விழுந்து இருக்கும்போது, என்னை அவர் வீட்டுக்கு தூக்கிட்டு போனார் இல்ல. அப்போ அங்க போட்டோவை பார்த்தேன். அங்கு நம்ப ஓவியகீது அத்தை போட்டோவும் இருந்தச்சு. அவங்க கூட நம்ப கதிரோவியமும் இருந்தாங்க. அப்ப தான் தெரிஞ்சுகிட்டேன், அது நம்ம மாமா பையன்னு.”
“ஆனா, நீ அந்த இடத்திலேயே நீ தான் ஓவியா என்று அவர்கிட்ட சொல்லி இருந்திருக்கலாமே. அப்படி சொல்லி இருந்தா இத்தனை வருடம் பிரிந்திருந்த நம்ம குடும்பம் ஒன்று சேர்ந்து இருக்குமே?” என்று கேட்டாள் ஷாமிலி.
“பைத்தியமா நீ. அப்படி மட்டும் நான் சொல்லி இருந்தா, கதிர் மாமா அந்த இடத்திலேயே என் கழுத்தை நெரித்து சாகடித்து இருப்பார். இல்லையா என்னை அந்த வீட்டை விட்டு துரத்தி இருப்பாரு.”
“ஏதோ சின்ன வயசுல நடந்த சம்பவம் இன்னுமா கதிர் மாமா அதை ஞாபகம் வைத்திருப்பான்?”
“என்ன அக்கா சொல்ற? அவர் வாழ்க்கை இந்த மாதிரி போனதற்குக் காரணமே, ஒருவேளை நான் தானா, என்று அவரை பார்த்ததில் இருந்து நான் யோசிச்சு யோசிச்சு எவ்வளவு கவலைப்படுறேன்னு எனக்குதான் தெரியும்.”
“நீ என்ன பண்ண கவலைப்படுரதுக்கு?”
“நீ வேற அக்கா. சின்ன வயசுல நான் தெரியாமல் சொன்ன ஒரு வார்த்தை அவருடைய வாழ்க்கையை மாற்றி இருக்கு. எனக்கு அத இப்பதான் உணர முடியுது” என்றாள் வருத்தமாக.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவரு அந்த கீதா அத்தை கூட சேர்ந்து வாழ்க்கையை அழித்துக் கொண்டாரு. அதுக்கு நீ என்ன பண்ணுவ?”
“உனக்கு அங்க நடந்த விஷயம் தெரியாது அக்கா. இதுவரை நான் அதை யாருகிட்டயும் சொன்னது இல்ல.”
“என்னடி சொல்ற? அப்படி என்னதான் நடந்துச்சு?” என்று ஷாமிளின் கேட்க,
முல்லை 20 வருடத்திற்கு முன்பு தன் அத்தை மகன் கதிரோவியத்திற்கும், தனக்கும் நடந்த சம்பவத்தைப் பற்றி தன் அக்கா ஷாமிலியிடம் சொன்னாள்.🌹🌹
“என்னடி இது? அய்யோ அத நீ அன்னைக்கே சபையில் சொல்லியிருக்கலாமே?”
“ம்... சொல்லியிருக்கலாம் அக்கா. ஆனா, அம்மாவுக்கு பயந்து கொண்டுதான் நான் சொல்லல. இந்த ஒரு விஷயம் இன்னைக்கு பாரு நம்ம குடும்பத்தையும் பிரிச்சு, அவரையும் ஒரு திருடன் ஆக்கி, இதோ கீதாத்தை இன்னும் யாரையும் கல்யாணம் பண்ணாம தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. எனக்கு அந்த குடும்பத்தை பார்க்கும்போது ரொம்ப மனசு கஷ்டமா ஆயிருச்சு. நீ என்னை என்ன நெனச்ச. ரோட்ல போற எவனோ ஒருத்தன் என் கழுத்துல தாலியை கட்டி விட்டால் அதை ஏற்றுக்கொண்டு வாழ்வேன்னு நினைச்சியா?”
“இல்ல அக்கா. அவரு நம்முடைய தாய் மாமன் மகன் கதிரோவியம் என்று தெரிந்துதான், அவர் என் கழுத்தில் கட்டிய தாலியை நான் அக்செப்ட் பண்ணிக்கிட்டேன். இதோ பார், நான் என்னைக்கும் கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் அவரால் ஏற்பட்ட இந்த ரைட் சைட் புருவத்துக்கு மேலே இருக்கிற காயத்தில் நான் அவருடைய காதலை தான் உணர்வேன். உள்ளத்துல அவரை வைத்து மனசுக்குள் ரசித்த நான், அவர எப்போ அந்த வீட்டில் பார்த்தேனோ, அவர்கிட்ட போயி என் காதலை சொல்லனும்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள அவராகவே என்னை அவர் பொண்டாட்டியா ஏற்றுக்கொண்டார்.”
“ஆனா, கதிர் மாமா அதெல்லாம் மறந்து இருக்கும். நீ போயி நேரா நீதான் ஓவியா என்று சொல்லி உன்னுடைய காதலை அவனுக்கு வெளிப்படுத்து.”
“இல்ல இல்ல அக்கா. அதெல்லாம் சரிவராது. ஏற்கனவே நான் போலீஸ் என்று தெரிந்து திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி மாமா முழிச்சுக்கிட்டு தான் இருக்கும். நான் இப்போ உள்ளே போயி அவரு மனச மாத்தனும். அதுக்கப்புறமா தான் நான் யார் என்ற உண்மையை அவருக்கு சொல்லனும்.”
“எனக்கென்னவோ இதெல்லாம் சரின்னு படல. அப்புறம் அம்மாக்கு தெரிஞ்சா...”
“அட போக்கா அம்மா செஞ்ச அதிக பிரசங்கித்தனம் தான் இப்ப பிரச்சனையே. சரி எல்லாம் விதிப்படி நடக்கட்டும். எங்கேயோ இருந்த நாம் எதுக்காக இந்த ஊருக்கு வரணும்? இப்போ அவர் கையாலேயே தாலியைக் கட்டிக்கனும். இது எல்லாம் பூர்வ ஜன்மத்து பந்தம்.”
“சரி வா. நம்ப நேரத்தோட வீட்டுக்குப் போகலாம்” என்று சொன்னபடி முல்லையும் அவளின் அக்காவும் காரில் பயணிக்க, மறுபக்கம் ஓவியகீதா தலையில் துண்டை போட்டுக்கொண்டு.🌹🌹
🎶🎶காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
🎶🎶🎶கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்🎶🎶
🌹🌹என்ற பாடலை பாடிக்கொண்டு இருக்க,
கதிர்... மணியின் தோளில் மயக்கத்தில் இருந்தவன், “மச்சி எனக்கு என்னமோ தூரத்துல யாரோ சங்கு ஊதுற மாதிரியே இருக்கு” என்றான்.
“உன் சித்தி தான் பாடுதுடா.”
“ஏய் கிழவி! என்ன சிச்சுவேசன் சாங்கா?”
“அடப்பாவி. என் குலத்தைக் காக்க வந்த மவன் என்று உன்ன நெனச்சா, என்னை குழி தோண்டி புதைக்க வந்த எமனா இல்ல இருக்கிற நீ” என்றார் கதிரைப் பார்த்து.
“டேய் எந்திரிடா. ஏன்டா கொஞ்சமாவது யோசித்து எந்த காரியத்தையும் பண்ண மாட்டியா?”
“அதானே. சும்மா இருக்கிற அவ கழுத்துல எதுக்குடா தாலியை கட்டின? அவ போலீசாம்டா” என்றார் கீதா.
“இரு கிழவி. டேய் உன்னைதான்டா. ஏன் அப்படி செய்தன்னு சொல்லு?”
“எனக்கு என்னடா தெரியும் மணி? அவ என்னுடைய மனதைக் கொள்ளை அடித்த திருடி ன்னு நினைச்சேன்டா. கடைசியில இந்த திருடனை பிடிக்கும் போலிஸ்காரின்னு எனக்கு தெரியாம போயிடுச்சு.”
“சரி ஆளாளுக்கு ஒரு ஒரு பையில நமக்குத் தேவையான துணியை மட்டும் எடுத்துக்கோங்க. நம்ப நைட்டோட நைட்டா இந்த ஊரை விட்டே கிளம்பிடுவோம்.” என்றார் கீதா.
“என்ன விளையாடுறியா? யாருக்கு பயந்து யாரு ஊரைவிட்டு போவது?”
“டேய் கதிர்! நான் சொல்றதைக் கேளுங்கடா. நீ சும்மாயில்லாம அந்த பொண்ணு கழுத்துல தாலியை கட்டிட்ட. அவளும் ஊரை கூட்டி ஒரு திருடன் தான் என்னுடைய புருஷன்னு சொல்லிட்டா. அவ இதெல்லாம் சொல்றானா, இதுக்கு பின்னாடி ஏதாவது ஒரு அர்த்தம் இல்லாமல் இருக்காது. இந்த ஊர்ல இருக்கிற எல்லா கேசையும் உன் மேல போட்டு, இந்த ஊரையே கிளீன் பண்ண பார்த்திருக்கிறா. அதனால வா இந்த ஊரைவிட்டு கிளம்பிடுவோம்” என்றார்.
“சி...த்...தி...” என்ற குரலில், “யாருடா அது ,என்ன போய் சித்தின்னு கூப்பிடுறது?” என்றார் கீதா.
“சித்தி. நான் தான் சித்தி.” என்றான் கதிர்.
“எனக்கு நெஞ்சு வலியே வந்துரும்டா. இந்த மாதிரி எல்லாம் அதிர்ச்சி கொடுக்காத.”
“சித்தி என்னை காப்பாத்து. நான் தெரியாம பண்ணிட்டேன். அவள் மேல நான் காதல் கொண்டு தான் இந்த காரியத்தை பண்னேன். ஆனா, அவ போலீஸ்னு தெரிஞ்சு இருந்தா நான் அவ பக்கம்கூட போய் இருக்க மாட்டேன்.”
“டேய் மச்சான் என்ன விளையாடுறியா? நீ காதலிச்சது உண்மை தானே. அவ போலீசா இருந்தா என்ன... திருடியா இருந்தா என்ன... இனி நீ தாண்டா அவ புருஷன்.”
“அடிங் கொய்யால என்ன விளையாடுறியா? என் மவனே இப்பதான் ஒரு முடிவெடுத்து, அவன் செஞ்சது தப்புன்னு சொல்லி என்னை சித்தியின்னு எல்லாம் கூப்பிட்டு நல்ல பிள்ளையா திருந்தி இருக்கிறான். நீ இப்ப போய் அவனை புருஷன் புடலங்காய்ன்னு சொல்ற. டேய் கதிர் குட்டி நீ சொன்னதுதான் சரி அந்த பொண்ணு நம் குடும்பத்துக்கு ஒத்தே வரமாட்டா. திருடனுக்கும் போலீசுக்கும் என்னைக்குமே ஏக பொருத்தம் தான். நம்ம இந்த ஊரை விட்டே கிளம்பிடுவோம்”🌹🌹என்று சொன்னபடி இவர்களுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டு இருக்க,
மறுபக்கம் காரில் முல்லை அமர்ந்து கொண்டிருக்க. ஷாமிளின் காரை ஒட்டிக் கொண்டிருக்கும் வேளையில், கையில் தன் கழுத்தில் இருக்கும் தாலியை வைத்து பார்த்துக் கொண்டிருந்த முல்லைக்கு அந்த காரில் இசைக்கும் பாடலை ரசித்தவளுக்கு தன் மாமன் மகன் கதிரின் நியாபகம் வந்தது.
🎶🎶காட்டு பயலே…
கொஞ்சி போடா…
🎶🎶uஎன்ன ஒருக்கா நீ…
மொரட்டு முயல…
தூக்கி போக…
🎶🎶வந்த பயடா நீ…
🎶🎶🎶கரட்டு காடா
கெடந்த என்னை
திருட்டு முழிக்காரா
🎶🎶பொரட்டி போட்டு இழுகுறடா நீ
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து…
சுரட்ட பாம்பா ஆக்கிபுட்ட நீ…🎶🎶🎶
🌹🌹என்ற பாடலை ரசித்தப்படி கார் கண்ணாடியில் இருந்து வலது பக்கம் பார்க்க, அங்கே பெரிய பேனரில் கல்யாணம் ஆன தம்பதிகள் நின்று இருக்கும் போட்டோ இருக்க,🌹🌹 தனக்குள்ளே சிரித்து கொண்டாள்.
 
Joined
Feb 6, 2025
Messages
111
“அக்கா கொஞ்சம் காரை அந்த கடை பக்கத்தில நிறுத்து. அப்படியே உன்னுடைய கார்ட்டை குடு” என்றாள்.
“ஏன்? எதுக்கு? இப்பவே மணி என்ன ஆகுது தெரியுமா? 9 க்கு மேல ஆச்சு இப்போ போய் எதுக்கு கடைக்கு?”
“வந்து சொல்றேன்” என்று சொன்னவள், கடைக்குள் சென்ற அடுத்த ஒரு மணி நேரம் கழித்து சில பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வண்டியில் வந்து ஏறினாள்.
“என்னடி ஷாப்பிங்கா?”
“ஆமாம்கா. சரி வா போகலாம்.”
“ம். வா போகலாம்.”
“ஆனா, நம்ம வீட்டுக்கு இல்ல...” என்றாள் முல்லை.
“வேற எங்க?” என்று புரியாது கேட்டாள்.
“என் மாமியார் வீட்டுக்கு.”
“புரியலையே?”
“வண்டிய என் புருஷன் வீட்டுக்கு விடுக்கா.”
“என்ன நம்ப ஓவியம் மாமா வீட்டுக்கா?”
“ஆமா ஆமா அவர் வீட்டுக்கே தான்.”
“எதுக்குடி இந்த தேவையில்லாத பிரச்சனை?”
“நான் சொல்வதைக் நீ கேள். நீ முதல்ல அவரு வீட்டுக்கு போ.”
என்று முல்லைச் சொல்ல, இவர்களின் கார் கதிரின் வீட்டு வாசலில் போய் நிற்கவும், தனக்குத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கதிரும், மணியும், கீதாவும் ஊரை விட்டு ஓடி விடுவதற்காக கதவை திறக்கவும் சரியாக இருந்தது.
“அத்தை” என்று கீதாவை முல்லை அழைக்க,
“நான் செத்...தேன்” என்றார் கீதா.
“மணி மாமா” என்று அவனை அழைக்க,
“ஏம்மா” என்றான் அவன்.
“கணவ...ரே. கள்வ...ரே எங்க போறீங்க?” என்று அவள் இழுத்ததில்,
“நீ... நீ...நீ...எப்படி வந்த” என்று கதிர் அலறினான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top